துஷ்யந்தா-47
தன்வீ சிணுங்கி முறுக்கி நெளியவும் பிரகதிக்கு முன்னால் விதுரன் சென்று அவளை தட்டி கொடுத்து தூக்கினான். தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு செல்ல நடந்தான்.
பிரகதி கோபமாய் நிற்கவும் விதுரன் திரும்பி என்ன என்பதாய் பார்வை பார்க்க, இன்னமும் உச்சப்பட்ச பொய் கோபமாக முகத்தை பாவித்தாள்.
விதுரன் முத்து பல்வரிசையில் புன்னகை புரிந்து மாயக் கண்ணனாக இடது தோளில் மகளை ஏற்று வலது கையால் வா என்று அழைக்க பிரகதி மென்னடையிட்டு அவன் வலது பக்கம் சாய்ந்து கொண்டாள்.
அவளையும் அழைத்து மாடிக்கு சென்றவன் மகளின் தனிப்பட்ட மெத்தையில் கிடத்தினான்.
தன் ஷர்டை கழட்டிவிட்டு வாட்சை கழட்டவும் பிரகதி விதுரனின் மார்பில் தஞ்சமானாள்.
“நான் இங்க தூங்கணும்.” என்று அவனின் இதயத்தின் மேற்பரப்பில் சாய்ந்தாள்.
“இத்தனை நாளா இந்த இதயத்தை தேடி வருவனு காத்திருந்தேன். இந்த சத்தம் கேட்டு தான் தூக்கம் வருது இந்த ஹார்ட் பீட்டுக்கு அடிக்ட் ஆகிட்டேனு எல்லாம் சொன்ன. அதனால நான் இல்லாம கொஞ்ச நாளில் வந்திடுவேனு ரொம்ப கான்பிடன்ஸா இருந்தேன்.
உன்னை தேடி வராததற்கு அதுவும் ஒரு காரணம். என்னோட தீண்டல், சீண்டல், என் இதயத்துடிப்போட ஓசை இதெல்லாம் உன்னை திரும்ப வரவைக்கும்னு நினைத்தா, டெவில் குயினுக்கு ஸ்டமக் மூவ்ஸ், லிட்டில் டெவில்ஏஞ்சல் ஹார்ட் பீட்ல என்னை கழட்டி விட்டுட்டிங்கனு லேட்டா தான் தெரியுது.” என்றவன் இடை சங்கிலியை வருடலாய் தீண்டினான்.
“இதென்னடா கிப்ட்? சில்வர் ஹிப் செயின்.” என்று கேள்வியாய் நோக்கினாள். அவன் பேச்சை தவிர்த்து நல்ல நிலையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
“கோல்டுல போடக்கூடாதாம். அம்மாவுக்கு ஒரு முறை ஸ்டட் ஜிவல்லரி வாங்கினப்ப ‘இப்ப தான் அம்மாவுக்கு வாங்கி தருவ. ஓய்ப் வந்தப்பிறகும் அம்மாவுக்கு வாங்கி தருவியா டானு’ கேட்டாங்க.
ஏன்மா அவளுக்கு வைரத்தால தங்கத்தால இழைச்சா உனக்கு ஒன்று இரண்டு வாங்கினா வேண்டாம்னா சொல்லப் போறானு விளையாடினேன்.
‘இப்பவே ஒன்று இரண்டு தானா… பாருங்க இவனை.. பொண்டாட்டி காலுல மெட்டியா பெட்டி பாம்பா அடங்கி போயிடுவான்’னு அம்மா அப்போ என்ன கேலி செய்து அப்பாவிடம் புகாரா பேசினாங்க.
ஆமா மா வைரத்துலயே மெட்டி வாங்குவேன்னு ஜம்பமா பேசினேன். அதுக்கு அம்மா ‘டேய் என்ன தான் செல்வம் செழித்து இருந்தாலும் இடைக்கு கீழே தங்கம் வைரம் போட மாட்டாங்கடா. வெள்ளில தான் போடுவாங்கனு அம்மா சொன்னாங்க.
அப்ப நான் சும்மா இல்லாம ஒட்டியாணம் கோல்டுல போடறாங்களே அது என்ன கணக்குனு கேட்டேன்.
அம்மா தலையை தட்டி, அது என்ன தினசரி போடற ஹிப் செயினாடா. ஒட்டியாணம் கழட்டி திரும்ப பெட்டியில வச்சிடுவோம்.
ஒரு பொண்ணுக்கு திருமணமான பிறகு கூடவே இருக்க போறது தாலி, மெட்டி தான். தாலி தங்கத்துல கயிறுல போடுவாங்க. ஆனா மெட்டி எல்லாருமே வெள்ளில போடுவாங்க. அது காலில் ஓசையெழுப்பறதே மெதுவா தான் கேட்கும். அந்த மெட்டியொலி தான் கணவன் மட்டும் இசைக்கும் ஸ்வரமாச்சே’னு சொன்னாங்க என்றதும் பிரகதி எண்ணங்கள் தன் அன்னை பத்மாவதி சிகிச்சை அறையில் இருந்த நேரம் விதுரன் அணிவித்த மெட்டிய, தான் லண்டன் செல்லும் நேரம் அவன் நெஞ்சில் வீசியெறிந்தவை கண்முன் வந்து நிற்க பிரகதி விளுக்கென்று எழுந்தாள்.
“நீ ஆசையா அணிவித்ததை தான் நான் தூக்கியெறிந்துட்டு போனேனா? எப்படி டா உன்னால பொறுமையா வேடிக்கை பார்க்க முடிந்தது.” என்றாள் பிரகதி.
இடை சங்கிலி வருடிக்கொண்டே, நான் முதல்லயிருந்தே ரொம்ப பொறுமையா தான் ஹாண்டல் பண்ணறேன். உனக்கு தான் புரியலை.
உன்னை தேடி நீ எக்ஸாம் முடிச்சி வர்ற வரை அத்தையை பொறுமையா ஒரு மாதம் பார்த்துக்கிட்டேன்.
மேரேஜ் முடிச்சி உன்னை நெருங்காம பொறுமையா பத்து மாதம் இருந்தேன்.
என் குடும்பத்துல நாலு உயிர் போனப்பவும் பொறுமையா தேவானந்த் நாக்கை தான் வெட்டி அனுப்பினேன்.
நீ தீபிகா தீபிகானு அவளோட பாயிண்ட் ஆப் வியூலயே யோசித்தப்ப, என் பாயிண்ட் ஆப் வியூல ஒரு நாள் யோசிப்பனு பொறுமையா காத்திருந்தேன்.
என்னை கத்தியால குத்தினாலும் உன்னோட அம்மாவுக்காக என்னை பழி வாங்க நினைச்சனு என்னால சந்தோஷப்பட முடிந்தது. நான் என்னோட பேரண்ட்ஸுக்காக பார்த்தது மாதிரி தானே நீயும் திங்க் பண்ணிருக்க. டெவில் கிங் டெவில் குயின் ஒரே திங்கிங் தானே.
ஆனாலும் ஒரேயறையில் நீ என் கண்ணியத்தை பார்த்தியே தவிர, என்னோட காதலும் பொறுமையும் உனக்கு புரியலை. அதனால தான் இரண்டு மாதம் என்னோட அன்பை மட்டும் புரியவைக்க அன்பையும் காமத்தையும் ஒப்பந்தமா ஆரம்பிச்சசது. மை குட் லக் நீ அப்பவே என் மனதை புரிஞ்சுக்கிட்ட. பட் உனக்கு அப்பவும் தயக்கம்.
இதோ இன்னிக்கு மடை திறந்து சொன்னியே. எனக்கு நீ மட்டும் தான்டானு. லைப்ல பிடிச்சி தான் என்னோட வாழ்ந்தேனு சொன்ன. இந்த வார்த்தை கேட்க எனக்கு.. எனக்கு ஒன்றை வருடம் ஆகியிருக்கு. அதுவரை பொறுமையா தான் இருந்தேன்.
ஏன் இப்ப கூட நீ லவ் பண்ணறேன் டா மடையானு சொல்லியும் எங்க அத்துமீறினா அது வேற இச்சைக்குண்டான லைப்பா எடுத்துப்பியோனு பொறுமையா உன்னை அணைச்சிட்டு வருடிட்டு இருக்கேன்.” என்றவனின் கடைசி பேச்சில் சத்தமில்லாமல் கண்ணீர் மடை திறந்து கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் இதழை முத்தமிட்டு கரைந்தாள்.
கண்ணீர் கன்னத்து ஈரம் அவன் முகத்தில் ஒட்டவும் அவளை தள்ளி நிறுத்தி கன்னத்தை துடைத்தான்.
“ஐ டோண்ட் லைக் திஸ். ஐ லைக் திஸ் ஒன்லி.” என்று கண்ணீரை துடைத்து இதழை பட்டும் படாமலும் ஒற்றி விலகினான்
“விதுர்… எப்படி டா இப்படி இருக்க. சான்ஸே இல்லை.” என்றவள் அணைப்பை இறுகினாள்.
“எப்படியிருக்கேன் டெவில் கிங்கா? உன் துஷ்யந்தாவா?” என்றவளை அள்ளி மெத்தையில் சாய்த்து தாடை நிமிர்த்தி கேட்டான்.
“துஷ்யந்தா… டெவில் கிங்.. இது ரெண்டுலயும் என் விதுர் விதுரனா தான் இருக்கேன். நான் தான் சகுந்தலாவா டெவில்குயின் இப்படி மாறி மாறி உன்னை புரிந்துக்க முடியாம இரண்டு மனமா மாறியிருக்கேன்.
இனி சகுந்தலானவா இருந்தாலும் டெவில் குயினா இருந்தாலும் நானும் உன்னை போலவே பிரகதியா மட்டும் முடிவெடுப்பேன். இட்ஸ் பிராமிஸ் விதுர்.” என்றாள்.
அருகே காலாட்டி கொண்டு நிசப்தமாய் வெறித்தவன் கைகள் மட்டும் பிரகதியின் கைக்குள் கட்டுண்டது.
“ஓகே குட் நைட். ஐ அம் சோ டயர்ட் பிரகதி.” என்றதும் பிரகதி “ஐ லவ் யூ விதுரா” என்றாள்.
விதுரனோ பதிலுக்கு எதையும் ஒப்புவிக்காமல் உறங்க இமை மூடினான்.
பிரகதியோ திரும்ப ஐ லவ் யூ என்ற வார்த்தையை வீசுவானென எண்ணி ஏமாந்தாள்.
அடுத்த நாள் காலை அலுவலகம் கிளம்பியவன் சாப்பிடும் நேரம் சௌமியாவுக்கு அழைப்பை தொடுத்தான்.
“சார்… நான் வேலையை ரிசைன் பண்ணிடறேன்.” என்றாள்.
விதுரனோ “உங்க மாமனார் கம்பெனியா? உன் இஷ்டத்துக்கு வரவும் வரமாட்டேனு போகவும். ஜாப்ல சேருறப்ப ஒரு பார்ம்ல சைன் வாங்கினேன் நினைவுயிருக்கா.
இப்படி பாதில போக முடியாது. மினிமம் ஒன்இயர் நீ வேலையில இருக்கணும். கவனிக்கலைனா மெயில்ல ஒரு காபி அனுப்பறேன் செக் பண்ணி பார்.எனக்கு எப்பவும் போல டைமுக்கு வேலைக்கு வந்து சேரணும்.
இதே ரூல்ஸ் உங்க நொண்ணனுக்கும் இருக்குமா. அவனையும் கொஞ்சம் மெயிலை ஓபன் பண்ணி பார்க்க சொல்லு. அப்பறம் இந்த மெயிலுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணாம வேலைக்கு வராம இருந்தா அந்த ஒரு வருட சம்பளத்தை கொடுத்துட்டு நின்றுக்கோங்க” என்றவன் கத்தரித்து, தர்மாவிடம் மற்றொரு போனில் ‘நேற்று அனுப்ப சொன்ன மெயில அட்டடைம்ல சௌமியாவுக்கும் இன்பாவுக்கும் அனுப்பு’ என்று தட்டி விட்டான்.
“என்ன விதுரா இது. மறுபடியும் போர்ஸ் பண்ணற. இது எப்படினாலும் கட்டாயம் என்ற வகையை தானே சாரும். நேத்து அவளா வருவா சம்மதிப்பானு சொன்ன” என்று பிரகதி கையை பிசைந்தாள்.
விதுரன் டவலில் கையை துடைத்து கொண்டு, “வருவானா எப்படி வருவா.? ட்ரம் கார்டு ஒன்னு நம்ம கையில இருக்குனா தானா வருவாங்க.
சும்மாவே அந்த பொண்ணை வீட்டை விட்டு அனுப்ப மாட்டாங்க. இதுல வேலை இல்லைனா வீட்டிலேயே உட்கார்ந்துக்கும். இதுல சசியை எப்படி பார்த்து பேசி லவ் டெவலப் ஆகும். இந்த மாதிரி ரூல்ஸ் எல்லாம் டிமாண்ட் பண்ணறது சாதகமா யூஸ் பண்ண தான். மேபீ இதோட துவக்கம் வேண்டுமின்னா ஹார்ஸா இருக்கலாம். முடிவு ஹாப்பி எண்டிங்கா வரும். அந்த பொண்ணு ஹார்ட் இப்ப கன்பியூஸ்ல இருக்கு.” என்றவன் எழுந்து தன்வீயை தூக்கி போட்டு பிடிக்க கிளுக்கி சிரித்தாள்.
முத்தம் வைத்து புறப்பட்டவனின் இதழ்கள் தன்னை தீண்டாமல் செல்ல பிரகதி தவித்து போனாள். முன்பு தான் இருவருக்கும் சுவர் இருந்தது. அது தான் உடைத்தாயிற்றே. இன்னும் என்ன? என்று குழம்பினாலும் கையசைத்தாள்.
அவளுக்கு தெரியவில்லை விதுரநீதியின் தண்டனை காலம் முடியவில்லை. அவன் எதிர்பார்க்கும் டெவில் கிங்கை நேசிக்காமல் தற்போது அவள் விதுர் என்று புது வித மரியாதையுடையவனை ஆச்சரியத்தில் நேசிக்கின்றாளே. அவனின் அன்புக்கு தான் குறைவென மரியாதை மதிப்பு தருபவளிடம் காதலை தேடி மரியாதை வேண்டாமென துறக்கும் துஷ்யந்தன் அவன்.
அவன் விரும்புவது அவனை போலவே உள்ளத்தில் இருந்து நடிக்காமல் இயல்பாய் பேசி முடிவெடுக்கும் பிரகதியை அல்லவா.
சசியிடம் நேராக வந்தவன், “நான் அபிஷியல் வேற பெர்சனல் வேறனு முடிவெடுப்பவன் சசி. உன் மனசுல சௌமியா இல்லைனா நீயும் அவளிடம் வேலையை ஒப்படைச்சு பழைய மாதிரி கம்பெனியை ரன் பண்ணு. இல்லை ஸ்கூல்ல ஓடி, காலேஜில் மறைந்து, திருமண பந்தத்துல தோல்வி பார்த்து ஒரு பயந்தாங் கொள்ளியாவே வாழ்வை வாழ்ந்து, உன் பையன் யுகனுக்கும் அதே பாடம் கற்று தர போறேனா பேசாம வீட்லயே இரு… அப்படியில்லை நான் கொஞ்சம் கொஞ்சமா மாற விரும்பற தைரியசாலி. என் பையனுக்கு சூப்பர் ஹீரோ என் டாட் தான் சொல்லிக்கலைனா கூட மை டாட் இஸ் மை பிரெண்ட் என்றாவது சொல்லணும்னு ஆசைப்பட்டா அதுக்கு முதல் கட்டமா சௌமியாவை ஒரு சக எம்பிளாயியா சந்திக்க செய்” என்று கூறி சசி வீட்டிலிருந்து வெளியேறினான்.
சசி மெதுவாய் எழுந்து அவனின் அலுவலகம் வந்த நேரம் விக்னேஷ் வரவேற்றான்.
“அ..அந்த பொண்..ணு வர..ல்..ல்லையா?” என்று கேட்டான்
“இப்ப தான் நானும் வந்தேன் சார்.” என்றதும் சசி ‘நல்லவேளை அவளே வரலை…. வரமாட்டா’ என்று நிம்மதியடைந்து அறைக்குள் செல்ல அங்கே சௌமியா இன்றைய பணிக்கான சார்ட்டை கோப்பையாக தயாரித்து அவன் டேபிளில் வைத்து திரும்பினாள்.
சசி சௌமியா இருவருமே கண்கள் ஒன்றை ஒன்று சந்திக்க இருவருமே தவிர்க்க முனைந்தனர்.
சில நிமிடங்களில் சௌமியா சலனமேயின்றி வெளிவர, சசியோ இழுத்து பிடித்த மூச்சை சீராக சுவாசித்தான்.
இந்த பொண்ணே அமைதியா அது வேலையை பார்க்குது. நான் ஏன் என்னோட அலுவலகத்தை இருந்து கொண்டு ஏன் பயப்படணும். சசி சியர் அப் என்று அவனுக்குள்ளே தட்டிக் கொடுத்து கொண்டான்.
இங்கு விதுரன் வரும் நேரம் இன்பாவும் அவசரகதியால் வந்து சேர்ந்தான். அவனின் டேக் அணிந்த கழுத்தை கண்டு ஒரு திமிரான முறுவல் உதிர்த்தே விதுரன் செல்ல இன்பா ஏகக் கடுப்பில் அவசரமாய் வந்ததால் வேர்த்து மூச்சு வாங்கி நின்றான்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super. Intresting
Interesting 😍😍
Super vithuran ellathukum oru reason illama pana matane . Athula pragathi utpada ena tha love u sonnalum athu devil king kaga varanumnu ethum sollama irukan kudiya sikram Ava vayalaye solla vaipan