அத்தியாயம்-23
After Few Months….
“அத்தை இந்த சேரி அழகாயிருக்கா? இந்தர் வாங்கி தந்தார்.” என்று கேட்டு பானுமதியிடம் நின்றது சாட்சாத் ப்ரியா தான்.
“உனக்கென்னடி ராஜாத்தி அழகுசிலை” என்று நெட்டி முறித்து கண்ணில் வைத்த கண்மையை கலையாமல் எடுத்து ப்ரியா கன்னத்தில் வைத்தார்.
பானுமதி விழிகளில் லேசாக கண்ணீர் துளிர்த்தது. அதனை வழியவிடாது, “விலாசினியை ரெடி பண்ணி அழைஞ்சிண்டு வா” என்று சென்றார். இதே போல நிகழ்வுகள் போனமுறை வந்தப்போது இவளை திட்டி அனுப்பியது. இப்பொழுது சிரித்த முகத்தோடு, பழிப்போட்ட தங்களை மன்னித்து, தங்கள் வீட்டு திருமணத்தை மனதார கலந்துக்கொள்ள வந்துவிட்டாளே. இதற்கெல்லாம் பெரிய மனது நிச்சயம் வேண்டும். அது ப்ரியதர்ஷினிக்கு இருந்தது.
ஆனந்த கண்ணீரை வடித்த பானுமதியை “அத்த, இன்னிக்கு சந்தியாவுக்கும் கல்யாணம். அவளை போயும் பாருங்க” என்று விரட்டினாள்.
“அடிப்போடி என்னவோ நான் தான் இந்த உலகத்துல பேரழகி அப்படின்னு திமிரா இருக்கா. ஏதாவது பேசப்போனா என்னவோ நான் ஏதோ தப்பு செய்தவளாட்டம் என்னை ஆகாதவளா பார்க்கறா.
அதனால அவக்கூட சந்திராவை பார்த்துக்க சொல்லிட்டேன்.
கழுதைக்கு படிப்பு முடியவும் இங்கிருந்து பறக்கறதா நினைப்பு.” என்று முனங்கினார்.
ஆனாலும் மகளை காணும் ஆவல் இருந்தது. பட்டுசேலையும், நகை நட்டும் அணிந்து கல்யாண கோலத்தில் நிற்பவளை கண்ணாற நிரப்பிட பக்கத்து அறைக்கு சென்றார் பானுமதி.
விலாசினியோ “ப்ரியா இந்த மேக்கப் கரெக்டா இருக்கா? சந்தோஷுக்கு பிடிக்குமா? உன்னை மாதிரி கலர் இல்லை. அதனால சம் டைம் இன்ஃபீரியரா ஃபீல் ஆகுது ” என்று கவலையாக கண்ணாடியை பார்த்து கேட்டாள்.
அவளை மேலும் கீழும் பார்த்து, “அட கலரு கிலருனு பேசின கடிச்சிடுவேன். இந்த கலரு எல்லாம் பார்த்து காதல் வராது. மனசு மனசை பார்த்து காதல் அரும்பும். உன்னை சந்தோஷ் லவ் பண்ணி மேரேஜ் பண்ணறான். உனக்கேன் இப்படி தோணணும்.
எப்பவும் நாம அழகு, நம்ம திமிரு, நமக்கு மிஞ்சியும் யாரும் இல்லை. நமக்கு கீழேயும் யாருமில்லை. அப்படின்னு இருக்கணும். சந்தோஷ் வாங்கி தந்த சேலை மாஸா இருக்கு. உனக்கென்னடி குறைச்சல்” என்று பட்டாசு பேச்சோடு விலாசினி கன்னத்தை முத்தமிட்டு ஈரப்படுத்தினாள் ப்ரியதர்ஷினி.
“அடிப்பாவி கேட்டது குத்தமா? இந்தர் அத்தான் வருவார் அவருக்கு கொடு இந்த கன்ன முத்தத்தை” என்று விலாசினி ப்ரியாவை கடிந்தவளாக வெட்கப்பட வைத்தாள்.
‘ம்கும் அவன் முதல் முதல்ல கொடுத்ததே லிப்லாக் தான். அதோட இரண்டாவது தடவை அத்தை மாமா எதிர்ல தந்தான். அதோட நேர்ல தனியா மீட் பண்ணறப்ப எல்லாம் கிஸ்ஸடிக்கறான். அதுக்காகவே அவன் வீட்டுக்கு போகக்கூடாதுனு இருப்பேன். ஆனா அத்தை மாமா சனி, ஞாயிறு அதுவுமா என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடுவாங்க. வாரம் வாரம் அவனிடமிருந்து தப்பிக்க நான் படுற அவஸ்தையிருக்கே.’ என்று தனி உலகில் மிதந்தாள்.
கற்பகமோ ப்ரியா தோளில் இடித்து “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? அங்க உன் அக்கா வீட்டுக்காரர் அவங்க மாமனார், மாமியார் வந்திருக்காங்க. அவங்களை முதல்ல கவனி.” என்று விரட்டினார்.
“அச்சச்சோ அந்தம்மா என்னை ஆயிரத்தெட்டு கேள்வி கேட்குமே” என்று யமுனாவின் மாமியாரை நினைத்து முனங்கியபடி மண்டபத்தில் அவர்களை தேடினாள்.
கவிதாவோ தன் மகள் யமுனாவை முதலில் சேரில் அமர கூறினார்.
யமுனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. சுகப்பிரசவம் இல்லையென்பதால் இன்னமும் ஆப்ரேஷன் செய்த உடம்பிற்கு ஓய்வில் இருந்தாள். ஒரு வாரம் முன் தான் பெயர் சூட்டும் விழாவில் ஓய்ந்திருந்தாள்.
இன்று ஒரே மேடையில் இரண்டு திருமணம் என்பதால் குழந்தையை கையில் தாங்கியபடி வந்தவளுக்கு மண்டபத்தில் பாதிக்கு மேலாக யமுனாவையும் குழந்தையையும் நலம் விசாரித்தார்கள்.
சந்தடி சாக்கில் ‘ப்ரியாவுக்கு சந்தோஷை கல்யாணம் பண்ணலாயா? நாங்களெல்லாம் ப்ரியாவை கட்டிப்பான்னுல நினைச்சோம்’ என்று வினா தொடுத்தார்கள்.
இதே முன்பானால் கவிதா முகம் வாடியிருப்பார். தற்போது இந்திரஜித்தை மருமகனாக பாவித்து பழகிவிட்டதால் சிறு கவலையுமின்றி நடமாடி ‘யாருக்கு யாருனு எழுதியிருக்கோ. நம்ம கையில இல்லைங்க’ என்று அழகாய் பேசி முடித்தார்.
“ஈஸ்வர் குட்டி சித்திக்கிட்ட வர்றிங்களா?” என்று ப்ரியா துள்ளி குதித்து, அக்கா மகனை வாங்க முயல, “குழந்தையை நானே வச்சிக்கறேன். நீ கல்யாணத்துக்கு வந்தவங்களை பாரு.” என்று கவிதா கூறவும், சேலை முந்தானையை பிடித்து நடந்தாள்.
யமுனாவின் அத்தை விசாலாட்சி மாமனார் ரத்னவேலு என்று வந்தவர்களை வாய் நிறைய வரவேற்று அமர வைத்தாள். இதே மற்ற நேரமென்றால் ஏதேனும் வறுத்தெடுக்கும் வினா தொடுத்திருப்பார். ஆனால் பெயர் சூட்டும் விழாவில் குறை சொல்லாத அளவிற்கு ப்ரியா ‘செய்முறை’யை செய்திருந்தாள்.
யமுனா மாமனார் ரத்னவேலு கூட, “என்னம்மா செய்முறை எல்லாம் தடபுடலாக இருக்கு” என்று கேட்டதற்கு, “ஆமா மாமா. முன்ன ஐந்து சவரன் நகை போட தாமதப்படுத்தவும், அக்கம்பக்கம் சும்மா சும்மா கேட்க, முகம் வாடிப்போனதா சொன்னா. இந்த முறை அப்படி அக்காவை யாரும் கேட்டுட கூடாது பாருங்க.
நல்ல உத்தியோகம், நல்ல சம்பளம் அதனால் அக்காவுக்கு குறையில்லாம செய்திட முடிவு செய்தேன். கட்டி கொடுத்த இடத்துல, மத்த இடத்துல எந்த பேச்சும் வாங்க கூடாது இல்லையா?” என்று கேட்டிருந்தாள்.
அதன் காரணமாக விசாலாட்சி ரத்னவேலு அடக்கி தான் வாசித்தார்கள். அவர் தானே நித்தம் நித்தம் கேட்டது.
அதனால் நாசூக்காய் இருந்தார்.
ஏதேனும் சத்தம் போட்டு அது மகனின் காதுக்கு சென்றால் ராஜாவிற்கு பிடிக்காது. ராஜாவிற்கு இதெல்லாம் தெரியாத போது, முடிந்ததை தெரியப்படுத்துவானேன்?! என்று பெரியவர்கள் மீசையில் மண் ஒட்டாத விதமாக நடந்து கொண்டார்கள்.
அக்கா கணவர் ராஜாவோ “என்னம்மா ப்ரியா உங்க ஆளு இந்திரஜித் வரலையா?” என்று கேட்டதும் “அது வந்து மாமா அவர் அத்தை மாமாவை அழைச்சிட்டு வந்துட்டேயிருக்கார்.” என்று நாணினாள்.
போன வாரம் ஈஸ்வரன் பெயர் சூட்டும் விழாவில் இந்திரஜித்தை வரவழைத்து ராஜா மாமாவிடம் அறிமுகப்படுத்தினாள்.
யமுனாவிற்கு வளைகாப்பு வைத்து வீட்டிற்கு அழைத்து வந்த போது ப்ரியா நேரிடையாக காதலித்ததை கூறிவிட்டாள். முன்பு அன்னை கூறி போனில் கேட்டாலும் நேரில் கதை கேட்பது போலாகாகதே.
யமுனாவே ‘அடிப்பாவி காதலிக்கறியா? அம்மா எப்படி சம்மதிச்சாங்க? இதுக்கு தான் எங்க வீட்டுக்கு சந்தோஷ் கூட அவர் பிரெண்ட் வந்தாரா?’ என்று கேலி செய்து தங்கை காதலுக்கு அவளும் ஆதரவு தந்தாள்.
அதனால் ஒரளவு நெருங்கிய சொந்தங்களில் ப்ரியா இந்திரஜித் காதல் தெரிந்துவிட்டது. ஆனால் பெற்றவர்கள் சம்மதத்தோடு மணமுடிக்க காத்திருப்பதாக தகவலும் அளித்திட மற்றவர்களுக்கு ‘ஆமா ஆமா இப்ப எல்லாம் லவ் மேரேஜ் சாதாரணம்பா. கட்டிக்க போறவங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி வாழ்ந்தா போதும்.’ என்ற வசனத்தை உதிர்த்து விடுவார்கள்.
அதனால் ப்ரியா தலை தப்பியது.
அந்த வீட்டில் விலாசினிக்கு மட்டுமா திருமணம். சந்தியாவிற்கும் திருமணம் என்பதால் அவள் மற்றோரு அறையில் உடலெங்கும் நகையில் அலங்கரித்து இறுமாப்புடன் வீற்றிருந்தாள். அவளுக்கு துணையாக சந்திரா இருந்தாள்.
சந்தியா போல சந்திரா கிடையாது. அதோடு சந்தியா ப்ரியா மீது பழிப்போட்டதும் தெரிந்தும் தங்கையை திட்டி அந்த கதை நீர்த்து போனது.
இப்பொழுது தான் கல்லூரியில் இறுதி வருடம் படிக்கும் பெண் சந்தியா. அவளுக்கு என்ன அறிவிருக்கும், ஏதோ தவறு செய்துவிட்டாளென்ற விட்டு பிடித்தார்கள். அதோடு என்றாவது காலம் அவளை மாற்றும் நம்புவோமாக.
ப்ரியா முன்பு போல எல்லாரிடமும் பேசுவாள். சந்தியாவிடம் மட்டும் குறைத்து கொண்டாள். திருமணத்திற்கு கூட முன்பு போல வரவேற்பில் நிற்கவில்லை.
விலாசினியை பார்க்க வந்ததோடு சரி.
முன்பு உரிமையாக பன்னீர் தெளித்து வரவேற்று, மொய் வாங்கி, கிப்ட் ஒதுக்கி என்று சந்திரா கூடவே இருந்தாள்.
இம்முறை திருமணத்திற்கு வந்திருக்கின்றாள் அவ்வளவே. சந்தியா பக்கமெல்லாம் சென்றிடவில்லை.
அது தான் இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்ததற்கு ஏற்ப பழகும் விதமென முடிவெடுத்தாள். சந்தோஷிற்கு அவளது முடிவும் அறிந்து வற்புறுத்தவில்லை. உன் இஷ்டம் என்றான். அவளை கட்டாயப்படுத்தவில்லை.
மணமகன் அறையில் கண்ணன் சந்தோஷ் இருவருமே இருந்தார்கள்.
இதுவரை எட்டியிருந்த கண்ணன் மச்சான் முறையாகவும் சந்தோஷிடம் நன்றாகவே பேசினான்.
இந்திரஜித் வரவும் ப்ரியா துள்ளிக் குதிக்காத குறையாக வாசலுக்கு ஓடினாள்.
”வாங்கத்தை வாங்க மாமா. பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா? லாட்ஜில போய் ரெப்ரஷ் ஆகிட்டு வர்றிங்களா?” என்று கேட்டாள்.
“ஆமாடா ப்ரியா. நைட்டே டிரையின்ல வந்துட்டோம். போன வாரம் அக்கா மகனுக்கு கயிறுகட்ட வந்த அலைச்சல், இப்பவும் பிரயாணமா, கொஞ்சம் சளிப்பிடிச்சிடுச்சு” என்று சித்ரா வந்தார்.
“கசாயம் எதுவும் குடிக்கலையா அத்தை?” என்று கேட்டாள்.
“நல்லா கேளும்ம. கசாயம் எல்லாம் மத்தவங்களுக்கு தான் செய்து தருவா. அவளுக்குன்னா கசக்கும்னு அவாய்ட் பண்ணி செய்து குடிக்க மாட்டேங்கறா” என்று மோகன் மனைவியை மருமகளிடம் மாட்டி விட நினைத்தார்.
“ஏன் மாமா அத்தை கசாயம் போடலைனா என்ன? நீங்க போட்டு தரலாம்ல? நீங்க கசப்பை தந்தா கூட அத்தை குடிச்சிடுவாங்க. உடம்பு முடியலைனா அவங்களுக்கே அவங்களால செய்ய கஷ்டமாயிருக்காதா?
உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை மாமா.” என்று மாமானாரை அதட்டுப்போட்டாள்.
“அட போடக்கூடாதுனு இல்லைம்மா. அடுப்படில நுழைஞ்சி பழக்கமில்லை. இனி பாரு வீட்டுக்கு போனதும் கசாயம் போட்டு தர்றேன். அதோட குடிக்கலைனா மடில போட்டு மூக்கு பிடிச்சி குழந்தைக்கு ஊத்தறாப்ல ஊத்திடறேன்” என்று கூறினார்.
ப்ரியா, சித்ரா, மோகன் என் மூவரும் சிரிக்க கேபிற்கு பணத்தை கொடுத்துவிட்டு ப்ரியா முடியை இழுத்து சில்மிஷம் செய்த இந்திரஜித்தோ, தன்னை அவள் கண்டும் காணாமல் செல்ல, வளைவில் திரும்பும் நேரம் இடுப்பில் கிள்ளி வைத்தான்.
“அவுச்” என்று துள்ளி குதித்தவளிடம், சித்ராவோ “நீ கல்யாணத்துக்கு வந்தவங்களை கவனி. நான் சம்பந்தி அம்மாவோட உட்கார்ந்துக்கறோம்.” என்று சித்ரா நாகரிகமாய் நகர, “இங்கவொருத்தன் நீ போன் பண்ணலைனு வேற முகம் தூக்கி வச்சியிருக்கான். அதையும் சரிபண்ணுமா. ஆறடிக்கு வளர்ந்தும் குழந்தைக் கணக்கா சுத்தறான்” என்று மோகனும் சென்றார்.
ப்ரியாவிடம் இந்திரஜித் “என்ன மேடம் கண்டுக்க மாட்டிங்களா?” என்று அவளை விழுங்கும்படி பார்வையில் அனுஅனுவாய் ரசித்தான். இப்படி தானே முன்பும் அவளை ரசித்து விழுங்கினான்.
”உங்களையே பார்த்துட்டு இருந்தா கல்யாணத்துக்கு வந்தவங்களை யார் கவனிக்கறதாம்.” என்றவள் மெதுவாய் அவனை ஏறிட்டாள்.
ஆண் அழகன் என்பதெல்லாம் தாண்டி பேரழகனாக நின்றவனை காண தெவிட்டவில்லை.
கற்பகத்தின் கணவர் ஆறுமாகமோ கலைக்கும் விதமாக “என்னம்மா மாப்பிள்ளையை நிற்க வச்சி பேசற அவங்க அப்பா அம்மாவோட உட்காரவை” என்று கட்டைக்குரலில் கூறவும் நடப்புக்கு வந்து, “சரி சித்தப்பா” என்று தலையாட்டி, “சந்தோஷ் கூட இருங்க. நாம அப்பறம் பேசுவோம்.” என்று நழுவ பார்த்தாள்.
“போறேன் போறேன். ஆனா இங்கிருந்து கிளம்பறப்ப நம்ம கல்யாண தேதியை குறிச்சிட்டு தான் போவேன்.” என்று கறாராக கூறினான்.
ப்ரியாவுக்கு முகம் வாடியது. கடன் ஓரளவு முடியும் தருணம் வந்தது. ஆனால் யமுனாவிற்கு சுகப்பிரசவம் எதிர்பார்த்திருக்க, ஆப்ரேஷன் செய்து ஈஸ்வரன் பிறந்தான்.
அதனால் கூடுதலாக செலவு கை மீறியது. அதோடு வளைகாப்பு பெயர் சூட்டு விழாவிற்கு தங்கத்தில் இடுப்பு கொடி, அக்கா மாமா குழந்தைக்கு துணிமணி என வாங்கவும் செலவு பட்ஜெட்டை தாண்டியது.
எனவே தங்கள் திருமணத்தை தள்ளி வைக்க முயன்றாள். கடனை அடைக்க நேரம் எடுக்க நினைத்தாள்.
அதன் காரணமாக இந்தருக்கும் ப்ரியாவுக்கும் தற்போது பனிப்போர் நடந்துக் கொண்டிருந்தது.
அதனால் தான் அவனை காணாதது போல இந்த முகத்திருப்புதல், இந்தரை கண்டு நழுவுவது எல்லாமே.
இந்தர் ஒரு முடிவோடு தான் இங்கே வந்தது.
அதனால் ப்ரியாவை தற்போது அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்தான்.
சந்தோஷிடம் இந்திரஜித் வந்து சேர நண்பனை கட்டி பிடித்தான். அங்கே சந்திரா கணவர் மகேஸ்வரனும் இருக்க, நண்பர்களின் கிண்டல் கேலி என்று அதை மீறி பேசிக்கவில்லை.
கண்ணனுக்கும், இந்திரஜித் ப்ரியாவை மணக்க போவதை அறிந்ததால், ஓரளவு பழகி கொண்டார்கள்.
“மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க” என்றதும் மகேஸ்வரன் சந்தோஷை கைபிடிக்க, கண்ணனை சந்தோஷ் கைபிடித்து, பட்டு வேஷ்டியில் வெளிவர, இந்திரஜித்தோ சந்தோஷ் கூடவே சென்றான்.
அவரவர் இருப்பிடத்தில் அமர வைத்து ஜோதிடர் மந்திரம் ஓதவும், மணப்பெண்ணை அழைத்து வர நேரம் நெருங்கியது.
விலாசினியை ப்ரியதர்ஷினியும், சந்தியாவை அவள் அக்கா சந்திராவும் அழைத்து வந்தார்கள்.
ப்ரியாவை காணும் போது சந்தியாவுக்கு விளக்கெண்ணெய் குடித்தவளாக முகம் மாறும். சந்தியாவை வைத்து மற்ற உறவுகளின் அன்பை உதாசினம் செய்ய இயலாதே.
துரைசிங்கம் மாமா, பானுமதி அத்தை, நண்பனாய் சந்தோஷ், அவனை மணக்கும் விலாசினி, கற்பகம் சித்தி இவர்களுக்காக சந்தியாவின் முகம் காட்டும் குணத்தை மதிக்கவில்லை.
ப்ரியாவை பொறுத்தவரை அவள் சந்தோஷ் விலாசினி திருமணத்தை காண வந்திருக்கின்றாள்.
இதே சந்தியா திருமணம் தனியாக நடந்திருந்தால் ப்ரியதர்ஷினி அவள் திருமணத்திற்கு வந்திருக்கவே மாட்டாள்.
மேடையில் விலாசினியை விட்டுவிட்டு ப்ரியா யமுனாவை பார்ப்பதாக மேடையிலிருந்து இறங்கிவிட்டாள்.
இனி இந்தருக்கும் மேடையில் என்ன வேலை?! அவனும் ப்ரியாவை பின் தொடர்ந்து இறங்கிவிட்டான்.
கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, பூ மழை தூவி திருமணம் முடியவும், இந்திரஜித் ப்ரியாவை தன்னருகே அமர்த்தினான்.
“எண்ணி ஒருமாசம் கழிச்சு, உனக்கும் எனக்கும் சென்னையில மேரேஜ். அம்மா அப்பாவிடம் தெளிவா சொல்லிட்டேன். செலவு எல்லாம் நீ யோசிக்காத.
ஏதாவது ஒருசெலவு வரும் போகும். நீதான் எல்லாத்துக்கும் ரெடி செய்யணும்னு என்னை தவிக்க விடாத தர்ஷினி.
இதுவரை காதலை மனசுல வச்சிட்டு உன்னிடம் டீசென்சி மெயின்டெய்ன் பண்றது கஷ்டமாயிருக்கு. எந்த நேரம் எல்லை தாண்டிடுவேனு பயம் வருது.” என்று எமோஷனலாக பேச, ப்ரியா இடைப்புகுந்திட முயன்றாள்.
“ப்ளிஸ் அப்படி ஏதாவது ஆனப்பிறகு உன் கழுத்துல தாலி கட்டினா என்னால தாங்க முடியாது. எனக்கு நீ வேணும். சரியான முறையில வேணும். ஆல்ரெடி உன்னை ஹர்ட் பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி” என்றான்.
அவன் ஏன் இப்படி பேசுகின்றானென்று தர்ஷினி அறிந்திருக்கின்றாளே.
ஒரு வாரம் முன் சென்னையில் அவன் வீட்டிற்கு ப்ரியா சென்றிருக்க, மோகனும் சித்ராவும் சந்தோஷ் திருமணத்திற்கு பரிசு வாங்க சென்றிருந்தார்கள்.
தனிமையில் முத்தங்களை அள்ளி வழங்கும் இந்திரஜித்தை அவள் என்றும் தடுத்ததில்லை.
அன்று இந்திரஜித் கைகள் எல்லை மீற ஆரம்பித்திருக்க, ப்ரியதர்ஷினி நடக்கும் அசம்பாவிதம் புத்திக்கு உரைக்க விழித்துட்டாள்.
அவனை தள்ள, இந்தர் தேன் குடித்த மோகத்தில் திளைக்க, தர்ஷினி அவன் கன்னத்தில் அறைந்து நிதானத்திற்கு கொண்டு வந்தாள். அதன் பின் பேசாமல் வுமன்ஸ் ஹாஸ்டலுக்கு திரும்பிவிட்டாள்.
அதன் பின் இந்திரஜித் சமாதானம் செய்து இயலாது பனிப்போரோக இருந்தது, இரண்டு நாள் முன் ப்ரியதர்ஷினி திருச்சி வந்து சேர, இந்திரஜித் தங்கள் திருமணத்தை விரைவில் முடிக்கும் எண்ணத்தோடு அவன் தாய் தந்தையரான சித்ரா-மோகனிடம் ‘திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான். இனி கவிதா அத்தையிடம் பேசி முடிவெடுக்க வேண்டும். அதற்குள் ப்ரியதர்ஷனியிடம் ஒருவார்த்தை கூறிவிட்டு, அன்று நடந்ததிற்கு மன்னிப்பு வேண்டி நின்றான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
Super sis semma epi 👌👍😍 kadan erundhutey dhan erukum pa adhukaga marriage pannama eruka mudiuma indrajit nelamaium konjam yosichi parkanum Ella🙄
Yedharthamana nagarvugal arumai
superb epi. crt than inthar solrathum romba naal decency eppadi maintain panna mudium but pannanum inthar. kadan oru alavuku mudichita priya eni konjam than atha sari pannidalam mrg pannitu kuda sikram unga mrg nadakanum
அருமையான பதிவு
Super epi and interesting 😍
நீயென் காதலாயிரு…!
(அத்தியாயம் – 23)
அட.. விஷாகனாவது கல்யாணம் ஆனப் பிறகு தான் பாயுறான். ஆனா, இந்த இந்தர் கல்யாணத்துக்கு முன்னாடியே பாயுறானே. இவனுக்கு
‘அவசரம் கூடாது, அனுமதி தரும் வரை’ன்னு யாரு சொல்றது.
இந்தர், அவனுக்கு மேல இருக்கான். பாவம் ப்ரியா, இவனை கட்டிட்டு எப்படி சமாளிக்கப் போறாளோ…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super super super super super super super super super super super
Super super super super super