தேவா மறுநாள் அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக வருவை தனது அறைக்கு வர சொன்னான் “என்னடா இது காலையிலேயே முதல் வேலையாக நம்மல கூப்பிடுறாரு அதிசயமா இருக்கே”…
இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று அவனது அறைக்குப் போகும் வழி நெடுக்க யோசித்துக் கொண்டே சென்றாள். அவன் போன் செய்து சொன்னவுடன் வருகிறேன் என்று சொல்லிவிட்டாள் ஆனால் போகும் வழி எங்கும் யோசித்துக்கொண்டே சென்று கதவை தட்டாமல் கூட அவனது அறைக்கு சென்று விட்டாள் ..
“ஒரு பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா வருவதற்கு முன்னாடி கதவு தட்டனும் என்று தெரியாதா” என்று கேட்டான் ஒரு நிமிஷம் சாரி தெரியாம தான் சார் வந்துட்டேன் என்றாள் “நினைப்பு எங்க இருக்கு என்று கேட்டான் .
உன் மேல் தான் இருக்கு என்று வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி விட்டு அவன் முகம் கடுவன் பூனை போல் இருந்தவுடன் சாரி சாரி ஏதோ ஒரு ஞாபகத்துல வந்துட்டேன் என்றாள் ..
ஆபீஸ் வந்துட்டா கவனம் கவனம் முழுவதும் வேலையில இருக்கணும் ஆனா உனக்கு கவனம் முழுவதும் ஆபீஸ் வேலையில் இல்லைல எதுக்கு தான் ஆபீஸ் வந்துட்டு இருக்கீங்க என்றான்…
“வரு அமைதியாக இருந்தாள் இவன் எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை தன்னிடம் காட்டிக் கொண்டு தன்னிடம் ஏறிக் கொண்டிருக்கிறான் போல இன்று எண்ணி விட்டு அமைதியாக இருந்தாள்”…
“ஆபீஸ் விஷயமா போன் பண்ணா ஆபீஸ் விஷயமா பேசணும் அதை விட்டுட்டு மத்தபடி பேசுற வேலை வேணாம் இன்னொரு டைம் என்னோட நம்பருக்கு அழைச்சிட்டு கேவலமா பேசினா நான் கேவலமா நடந்துக்க வேண்டி இருக்கும்” என்றான் …
அவள் கேவலமாக பேசினால் கேவலமாக நடந்து கொள்ள வேண்டிய வரும் என்றவுடன் வருவிற்கு கண்கள் குளம் காட்டி நின்றது அதை தேவாவும் பார்த்தான் இருந்தாலும் இவளிடம் இப்படி பேசினால் மட்டும்தான் வேலையாகும் என்று எண்ணி விட்டு அமைதியாக அவளை பார்த்தான் …
அவள் தன் கண்ணில் முட்டிக்கொண்டு நிற்கும் கண்ணீரை உள் இழுத்து விட்டு சாரி சார் என்று விட்டு எதற்காக கூப்பிட்டீர்கள் என்றாள் ஓ மேடமுக்கு அது கூட மறந்து போச்சா இன்னைக்கு மீட்டிங் இருக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்டான்…
அவள் அமைதியாக இருக்கு சார் என்று விட்டு ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு மீட்டிங்கிற்கு தேவையான அனைத்து பைல்களையும் கொட்டேஷன் களையும் ரெடி பண்ணி எடுத்துக் கொண்டு வந்து அவனுடைய இடத்தில் வைத்துவிட்டாள் எல்லாரையும் மீட்டிங்கில் அசெம்பிள் ஆக சொல்லுங்க என்று சொல்லிவிட்டு அவளை அனுப்பி வைத்தான்…
“வரும்போது சந்தோஷமாக துள்ளி குதித்துக் கொண்டு அவன் எதற்காக வர சொன்னான் என்று தெரியாமல் அவனது அறைக்கு வந்தவள் அவன் பேசிய பேச்சால் வாடிய கொடியாக அவளது இடத்திற்கு வந்தாள் “அப்போது அவள் உடன் வேலை செய்யும் தோழி ஒருத்தி பல்பு போல …
போகும்போது பல்ல இளிச்சிட்டு போன மூஞ்சி வரும் போது தொங்கி போய் வருது என்ன டி பெரிய அடியா என்றாள் ஒன்றுமில்லை என்றாள் என்ன டி மீட்டிங் இருக்கு ஏதாவது சொதப்பி விட்டாயா ?என்று கேட்டாள் தனது தோழியிடம் கூட தான் தேவாவை விரும்புவதை சொல்லாததால் ஆமாம் என்பது போல் தலை குனிந்து விட்டு அமைதியாகி விட்டாள்…
சரி விடு நமக்கு என்ன புதுசா நம்ம தப்பு செஞ்சா அவர் திட்றதோ அதை நாம் சமாளித்து விட்டு அடுத்த விஷயத்தை பார்க்குறதோ பழகுன விஷயம் தானே என்றவுடன் வரு தன்னைத் தேற்றி கொண்டு உள்ளே அவன் சிடு சிடு என்று இருப்பதால் தன்னை ஏன் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்…
அவன் கேட்டுவிட்டால் நம் பேசிய பேச்சு கேவலமான பேச்சு என்று ஆகிவிடுமா அப்படி என்ன நம்மை கேவலமாக அவன் கேட்டு விடுவான் என்பதையும் அதன் பிறகு பார்த்துக் கொள்கிறேன் உனக்கு இருக்கு டா என்று எண்ணினாள் …
சரி என்று விட்டு மீட்டிங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு அவனுக்கும் போன் செய்து மீட்டிங்கிற்கு தேவையான அனைத்து ஏற்படும் முடிந்துவிட்டது நீங்கள் வந்தால் மீட்டிங் ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டு மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்..
அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மீட்டிங் நடக்கும் இடத்தில் இருந்தான் தேவா அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரையும் பார்த்து மீட்டிங்கிற்கு தேவையான அனைத்தையும் சொல்லிவிட்டு இப்பொழுது நமக்கு புது ப்ராஜெக்ட் ஒன்று கிடைத்திருக்கிறது
..அதை கொஞ்சம் நேரம் காலம் பார்க்காமல் செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் உங்களிடம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான் தேவா அப்போது ஒருவன் எழுந்து சார் ஏற்கனவே நாம் நேரம் காலம் எல்லாம் பார்க்காமல் தான் இந்த கம்பெனிக்கு என்று உழைத்து கொண்டிருக்கிறோம் ..
ஆனால் எங்களுக்கு இன்கிரிமெண்ட் என்ற ஒன்று இதுவரை கிடைத்ததில்லை கிட்டத்தட்ட நாங்கள் ஐந்து வருடமாக வேலை செய்திருக்கிறோம் மற்ற கம்பெனிகளில் ஐந்து வருடங்களுக்கு மேல் வேலை செய்தால் அவர்களுக்கு இன்கிரிமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்…
போனஸ் கூட அதிகப்படியாக தருகிறார்கள் ஆனால் நம் கம்பெனியில் அப்படி ஒன்றும் இல்லையே பாராட்டும் விதமாக கூட எதையும் செய்வதில்லையே எங்களுக்கு அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது சம்பளம் தவறாமல் வந்து விடுகிறது தான் ஆனால் என்று விட்டு அமைதியானன்…
தேவா அவனை அமைதியாக அளவெடுத்தான் அவன் பேசிய பிறகு ஒரு சிலர் அவ்வாறே கூற செய்தார்கள் தேவா அனைவரும் சொல்வதையும் தன் கவனத்தில் ஏற்றுக் கொண்டு விட்டு இன்னும் யாராவது சொல்ல வேண்டியது இருக்கா என்று கேட்டான் ..
ஒரு சில நொடிகள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் பிறகு வரு எழுந்து நின்றாள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டான் தனிமையில் மட்டும் தான் வா போ என்று அவளை அழைப்பான் இப்படி அனைவரின் முன்பு அனைவரையுமே வாங்க போங்க என்று அழைப்பதால் அவளையும் அப்படியே அழைக்க செய்வான்.
அவள் எழுந்து நின்று சார் அவர்கள் சொன்னது போல் எனக்கு அந்த மாதிரியான விஷயங்கள் எதுவும் இல்லை ஆனால் அவர்கள் சொல்வதிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது சம்பளம் கரெக்டான நேரத்திற்கு வந்து விடுகிறது தான் மாதம் தவறாமல் மாதம் ஐந்தாம் தேதி ஆனால் சம்பளம் அக்கவுண்டில் கிரெடிட் ஆகிவிடுகிறது இருந்தாலும் அதையும் தாண்டிய ஒன்று இருக்கிறதே …
தாங்கள் இத்தனை வருடங்கள் வேலை செய்ததற்கான ஊதியம் இன்கிரிமெண்ட் எதிர்பார்ப்பதில் ஒன்றும் தவறு இல்லையே அது மற்ற கம்பெனிகளிலும் தருகிறார்கள் தானே என்றாள் மற்ற கம்பெனிகளில் இருக்கும் அனைத்தும் நம் கம்பெனியில் இருக்கிறதா மற்ற கம்பெனிகளில் இல்லாத அனைத்தும் நம் கம்பெனியில் இல்லாமல் இருக்கிறதா என்று கேட்டான் …
மற்ற கம்பெனிகளில் அடிக்கடி லீவ் கேட்டால் தரமாட்டார்கள் நம் கம்பெனியில் மாதத்திற்கு 5 நாட்கள் விடுமுறை தருவார்கள் அதுவும் அவசியமா என்று தெரிந்து கொண்டு அனாவசியமாக இருந்தால் தரமாட்டார்கள் ஒத்துக் கொள்கிறோம் …
மற்ற கம்பெனியை விட நமக்கு நிறைய சலுகைகளும் இருக்கிறது சம்பளம் கரெக்டான தேதியில் வந்துவிடுகிறது இருந்தாலும் இங்கு ஐந்து வருடம் 10 வருடம் என்று வேலை செய்பவர்களுக்கு என்று எந்த இன்கிரிமென்ட்டும் இல்லையே என்றாள் ..
அப்பொழுது தேவா விருப்பம் இருந்தால் இங்கு வேலை செய்யலாம் விருப்பம் இல்லை என்றால் வெளியே சென்று விடலாம் என்பது போல் கை காண்பித்தான். அப்பொழுது என்ன சத்தம் என்று கேட்டுக்கொண்டே அந்த கம்பெனியின் எம்டி 50 வயதில் தொடக்கத்தில் இருந்தவர் வந்தார் …
அவரைப் பார்த்துவிட்டு அனைவரும் எழுந்து நின்றார்கள் தங்களது மரியாதை செலுத்தினார்கள் அப்போது அனைவரையும் உட்காருமாறு சொல்லிவிட்டு என்னாச்சு தேவா என்று கேட்டார் ஒன்றும் இல்லை சார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் அப்பொழுது எழுந்து நின்று கேள்வி கேட்டவன் சார் என்ன விஷயம் என்று நாங்கள் சொல்கிறோம் என்றான் …
தேவா அவனை முறைத்தான் அவன் எம் டி இடம் பேசி செய்தான் சரிப்பா என்ன என்று சொல் என்றார் ஒன்றுமில்லை சார் இங்கு ஐந்து வருடம் 10 வருடம் என்று வேலை செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்று சம்பளம் ஊதிய உயர்வு என்று எதுவும் இல்லை.
” எங்களுக்கும் இன்கிரிமெண்ட் கொடுத்தால் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும் அல்லவா இப்போது வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும் 10 வருடமாக இங்கே வேலையில் இருப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் தான் என்னும் பொழுது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் அவர்கள் வீட்டில் உள்ளவர்களும் கேட்க செய்வார்கள் அல்லவா “..
கொஞ்சம் எங்களுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் அதை நான் கேட்டதற்கு தேவா என்னை இந்த கம்பெனியை விட்டு வெளியே செல்லுமாறு கத்தி கொண்டிருக்கிறான் இந்த கம்பெனியில் அவன் எனக்கு அடுத்தபடியாக இருக்கிறான் புரிந்துகொள்…
எனக்கு இங்கு நிறைய கிளைகள் இருக்கிறது என்னால் பார்த்துக் கொள்ளாமல் முடியாமல் தான் இங்கு தேவா பார்த்துக் கொண்டிருக்கிறான் ஆனால் அவன் அவ்வாறு பேசியதற்கு நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்…
சார் என்றான் தேவா. தேவா கொஞ்சம் பொறுமையாக இரு எதுவாக இருந்தாலும் நாம் பேசி தீர்க்க வேண்டும் நீ அவனை விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் இல்லையென்றால் வெளியே செல் என்று சொல்வது சரியா என்றார் தேவா அமைதியாக தனது தலையை கீழே குனிந்தான் ..
அதன் பிறகு வாசு என்பவனிடம் அதாவது இவ்வளவு நேரம் எம்டி இடம் பேசிக் கொண்டிருந்தவனிடம் எம்டி பேச ஆரம்பித்தார் வாசு கொஞ்சம் புரிந்துகொள் அமைதியாக இரு எனக்கு சென்னையிலே எத்தனை கிளைகள் இருக்கிறது என்று உனக்கே தெரியும் ..
இங்க இருக்கும் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் ஆனால் நான் அனைத்து கிளைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது சென்று வருகிறேன் ஆனால் உங்கள் கம்பெனிக்கு மட்டும் தான் மாதத்திற்கு ஒருமுறை வருகிறேன் அது உங்களுக்கே தெரியும் அது அனைத்திற்கும் காரணம் தேவா தான் …
தேவாவின் கீழ் இருக்கும் நீங்களும் தேவாவின் செயல்படி செல்கிறீர்கள் அனைவரும் நன்றாக செயல்படுகிறீர்கள் என்று நம்பிக்கை இருந்ததால் தான் மாதத்திற்கு ஒருமுறை வந்து கொண்டிருக்கிறேன் அதற்காக அவன் பேசியது சரி என்று நான் சொல்லி விட மாட்டேன் …
நீங்கள் கேட்பதிலும் தவறு இல்லை உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார் ஒரு இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள் அதன் பிறகு நான் இதைப் பற்றி கலந்து ஆலோசித்து விட்டு சொல்கிறேன் ஏனென்றால் எந்த ஒரு முடிவும் நான் தனியாக எடுக்க முடியாது …
அதை எல்லாத்தையும் தாண்டி ஒன்று இத்தனை கிளைகள் இருக்கிறது என்றால் உங்களுக்கு மட்டும் அதுபோல் ஒன்று செய்தால் நான் அனைத்து கிளைகளுக்கும் செய்ய வேண்டும் அதனால் எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார் வாசு என்பவனும் அதை உணர்ந்ததால் அமைதியாக இருந்தான் …
அப்போது சரி அனைவரும் அவர்களது இடத்திற்கு செல்லுங்கள் என்றார் எம் டி தேவா சார் ப்ராஜெக்ட் விஷயமாக பேச வேண்டுமே என்றான் கொஞ்சம் பொரு தேவா என்று விட்டு அனைவரும் கிளம்புங்கள் ப்ராஜெக்ட் விஷயமாக நாம் நான்கு நாட்களுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம்…
உங்கள் அனைவரையும் நானோ தேவாவோ சங்கடத்தில் ஆழ்த்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்றார் அனைவரும் இல்லை என்றார்கள் அனைவரும் சென்றவுடன் தேவாவும் எம்டி மட்டும் அங்கிருந்தார்கள் வரு வெளியே வந்தவுடன் வாசு என்பவனை கடந்து சென்று அவன் முன்பு நின்று வாசு அண்ணா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாள்…
வேற எப்படி பேச வேண்டும் உனக்கு ஒன்று வேண்டும் என்பதற்காக பேச முடியாது என்றார் அண்ணா எனக்கு புரியவில்லை என்ன எனக்கு வேண்டும் என்பதற்காக உனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு தெரியும் என்று விட்டு நகர்ந்தான் வாசு
வரு செல்லும் வாசுவை பார்த்து இவர் என்ன பூடகமாக பேசி செல்கிறார் என்று யோசித்தாள் வரு அதன் பிறகு அதைப்பற்றி யோசிக்காமல் வேலையில் மூழ்கி விட்டாள் .தேவா எம் டி இடம் ஏன் சார் என்று கேட்டான் அவர்கள் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே நம் மாதமானால் சம்பளம் சரியாக கொடுத்து விடுகிறோம் தான்..
ஆனால் “அவன் சொல்வது போல் ஐந்து வருடம் வேலை செய்பவர்களுக்கும் ஐந்து மாதம் வேலை செய்பவர்களுக்கும் 10 வருடம் வேலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் இல்லையே நாம் ஒன்றும் அவர்களிடம் பாகுபாடு காண்பிக்கப் போவதில்லை ஆனால் கேள்வி தவறில்லை என்று எனக்கு தோன்றுகிறது “…
என்ன இந்த ஒரு கம்பெனி மட்டும் என்றால் நான் உடனடியாக கூட முடிவெடுத்து விடலாம் 200 பேர் இருப்பீர்களா ஆனால் நான் மற்ற கம்பெனிகளிலும் இங்கு செய்தால் அதேபோல் அங்கும் செய்ய வேண்டும் என்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது ..
எட்டு கிளைகள் இருக்கிறது அல்லவா எட்டு கிளைகளுக்கும் என்றால் ஒரு கம்பெனிக்கு 200 பேர் என்று யோசித்தால் கூட அனைவருக்கும் என்றால் அதைப் பற்றி நான் யோசிக்க வேண்டும் வீட்டிலும் சென்று பேச வேண்டும் அதனால் இரண்டு நாட்கள் எனக்கு அவகாசம் தேவை என்றார்…
சார் இருந்தாலும் என்றான் தேவா .
வாசு பேசியதில் எனக்கு ஒன்றும் தவறாக தெரியவில்லை சரி நீ அவனிடம் மூஞ்சிய தூக்கி வைத்துக் கொண்டு இருக்காதே ஒரு வாரமாக அவன் எதற்காக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறான் என்றார் …அதன் பிறகு அப்பா என்றான் டேய் போடா அவனிடம் முதலில் பேசு இப்பொழுது வரை அவன் கேட்டதற்கு நீ அவனை வெளியே செல் என்பது போல் கைகாட்டியுடன் அவன் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறான் என்றார் அவனும் சிரித்து விட்டு சரி அப்பா நான் அவனை பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டு நகர்ந்தான் தேவா..
எம்டிக்கும் தேவாவிற்குமான உறவு அப்பா மகன் உறவு போல் இருந்தது அவன் இந்த கம்பெனிக்கு சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகிறது இந்த ஏழு வருடங்களில் அவர் அவனை மட்டும் தனது மகன் போல் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாசுவிற்க்கும் தேவாவிற்கும் என்ன உறவு ஏன் இருவரும் முட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் வரும் பதிவுகள் பார்க்கலாம்…
அன்புடன்..
❣️தனிமையின் காதலி ❣️
அதை முதல்ல சொல்லுங்க…
இந்த தேவாவுக்கும், வாசுவுக்கும் ஏன் முட்டிக்குது
என்கிற காரணம் தெரியணும்.
Puthusa ivan deva mela ivlo kovama irukan ithula varu kitta munjiya kamikiran yaru intha vasu
Interesting
Interesting epi