Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 29

பூவிதழில் பூத்த புன்னகையே 29

தேவா அரசியின் அறைக்கதவை தட்டி வரு வெளியில் வந்தவுடன் இன்னும் கிளம்பவில்லையா நீ …”வீட்டிற்கு நேரமாக செல்லமால்   இங்கே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணமா? “என்றான் வரு அவனைப் பார்த்து முறைத்து விட்டு நான் என் வீட்டில் சொல்லிவிட்டு தான் வந்தேன் என்றாள்..சொல்லிவிட்டு வந்தாலும் ஓரளவுக்கு மேல் இரவுகளில் எங்கும் செல்லக்கூடாது என்று தெரியாதா ?என்று சொல்லி அவளை முறைத்து விட்டு சமையல் அறைக்குள் புகுந்து கொண்டான்..” வரு அரசியை பார்த்தாள் அரசி லேசாக சிரித்தவுடன் இருக்கு மாமியாரே  உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் என்றாள்”. அவர் முறைத்து பார்த்தவுடன் சிரித்துவிட்டு அவரது தாடையில் லேசாக கிள்ளிவிட்டு  தாடையை தட்டி விட்டு வரட்டா மாமியாரே சென்று விட்டு வெளியில் வந்தாள்..அவரும் அவள் பின்னாடியே வெளியில் வந்தார் தீரன் அங்கு உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு சாரி அங்கிள் நீங்கள் எப்போது வந்தீர்கள் என்று கேட்டாள்..நான் வந்து ஒரு அரை மணி நேரம் இருக்குமா நீ உள்ளே இருக்கிறாய் என்று ஆது சொன்னான்” நீ அவளுடன் ஏதாவது பேச விரும்புவாய் என்று எண்ணி தான் இங்கே இருக்கிறேன் “ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார் ..சரி என்று விட்டு ஆதுவை பார்த்தாள் அவன் படித்துக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு நேராக சமையலறைக்கு சென்றாள்.அதை ஆது,அரசி ,தீரன் மூவரும் அமைதியாக பார்த்தார்கள் ..வரு அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்ற அரை மணி நேரத்தில் தேவா இவள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் வாசுவை சமாளித்துவிட்டு அவள் அம்மாவிடம் தானே பேச போகிறாள் எனக்கு வேலை இருக்கிறது …உனக்கு வேற வேலை இல்லையா வீட்டிற்கு கிளம்பு என்று வாசுவையும் அனுப்பி வைத்துவிட்டு இவனும் வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டிற்கு வந்து சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு சப்பாத்திக்கு குருமாவும் வைத்துவிட்டு அதன் பிறகு தான் நேரம் ஆகியதால் அரசியின் அறை கதவை தட்டினான் ..இப்பொழுது தேவா சமையலறையில் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தான் வரு உள்ளே வந்து சமையல் மேடை மீது ஏறி உட்கார்ந்து கொண்டு தேவா சுட்டுவைத்த ஒன்று இரண்டு சப்பாத்தியை ரோலாக எடுத்து சுற்றிக்கொண்டு தினமும் சப்பாத்தி தான..இதை தினமும் தின்னால் உடம்புக்கு நல்லதா என்று கேட்டாள் இது அப்பாவுக்கும் அம்மாவிற்கும் மட்டும்தான் எனக்கும் ஆதுவிற்க்கும் தோசை ஊற்றிக் கொள்வோம் …தினமும் யாரும் இதை சாப்பிட மாட்டார்கள் தினமும் சாப்பிட்டால் ஒன்றும் குறைந்து விடவும் மாட்டாய் என்றான் . வரு பேசிக்கொண்டே இரண்டு சப்பாத்திகளை உள்ளே தள்ளி இருந்தாள்..இது என்ன வெறும் சப்பாத்தியா இதுக்கு தொட்டுக்கு குருமா எல்லாம் எதுவும் இல்லையா ? என்று கேட்டாள் தேவா அவளை முறைத்துவிட்டு குருமா என்ன உன் கையில் வந்து உட்கார்ந்து கொள்ளுமா.அது உணவு மேசையின் மீது இருக்கு நாங்கள் அனைவரும் அங்குதான் உட்க்கார்ந்து சாப்பிடுவோம் நீ தான் குரங்கு போல் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறாய் என்றான் ஓ என்று சொல்லிவிட்டு பேசிக்கொண்டே இரண்டு சப்பாத்தி உள்ளே தள்ளி இருந்தாள்…தேவாவும் அவளுடன் பேசிக்கொண்டே அவளது அருகில் இரண்டு சப்பாத்தியை அவளுக்காக தள்ளி வைத்தான் எனக்கு போதும் எனக்கு வயிறு ஃபுல் ஆகிவிட்டது..நீங்களே இந்த சப்பாத்தி கொட்டி கோங்க அதுவும்  இல்லாமல் இதை யார் தினமும் சாப்பிடுவார்கள் என்று சொல்லிக் கொண்டே சப்பாத்தியை ஹாட் பாக்ஸில் வைத்து மூடிவிட்டு சரி நேரமாகிறது வரட்டா என்று அவனது தாடாயில் லேசாக தட்டி விட்டு அவன் கத்துவதையும் அவனது முறைப்பையும் காதில் வாங்காமல் வெளியில் வந்தாள்..ஆது ,அரசி, தீரன் மூவரையும் பார்த்து சரி நேரம்  ஆகிறது  நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றாள். போகும் “வருவை பார்த்து மூவரும் சிரித்தார்கள் இவனுக்கு இவள் தான் சரியாக இருப்பாள் என்றும் எண்ணினார்கள்”..தேவா வருவை எண்ணியும் அவளது செயலை எண்ணியும் திட்டிக்கொண்டே சப்பாத்திகளை சுட்டுக் கொண்டிருந்தான்  பிறகு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள் ..ஆது தான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் போகும் பொழுது வரு அண்ணி  என்ன அண்ணா சொல்லிவிட்டு சென்றார்கள் என்று கேட்டான்…தேவா என்ன  அண்ணியா ? என்று தனது அதிர்ச்சியை வெளிப்படையாக காண்பித்தான் ஆது அவனது அதிர்ச்சியை பார்த்துவிட்டு பிறகு அண்ணி இல்லையா என்றான்…டேய் நான் தாண்டா இந்த திருமணத்திற்கு சம்பந்தம் என்று சொல்லி இருக்கிறேன் இன்னும் அவள் அவளது விருப்பத்தை சொல்லவில்லை அப்படி சொன்னாலும் திருமணத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றான்.ஆது விடம் சொல்லிக்கொண்டே சாப்பிட்ட அனைத்து உணவு பாத்திரங்களை சமையல் அறைக்குள் எடுத்துச் சென்று கழுவுமிடத்தில் போட்டான் .ஆது தனது தாய் தந்தை இருவரையும் பார்த்தான் இருவரும் எதுவும் பேசாமல் அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள் ஆதுவும் கொஞ்சம் அமைதியாக விட்டுப் பிடிப்போம் என்று எண்ணி  விட்டு தன்னுடைய அறைக்கு சென்று படிக்க உட்கார்ந்து  விட்டான்…தேவா நினைவு முழுவதும் வருவே நிறைந்திருந்தாள் இவள் அம்மாவிடம் என்ன பேசி சென்றிருப்பாள் என்று யோசித்துக் கொண்டே தன்னுடைய வேலைகளிலும் கவனத்தை வைத்தான்…பிறகு அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு போய் படுத்தான் ஆனால் ஒழுங்காக உறக்கம் தான் வரவில்லை “இவள் என்ன பேசிச் சென்று இருப்பாள் வீட்டில் உள்ள எல்லோரும் மனதிலும் ஆசையை விதைத்து விட்டு இறுதியில் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்றெல்லாம் யோசித்தான்” …அப்பொழுது “அவனுடைய மனசாட்சி உன்னுடைய மனதில் ஆசையை வளர்த்து விட்டாளா இல்லை உன் வீட்டில் உள்ளவர்கள் மனதில் ஆசையை வளர்த்து விட்டாளா என்று கேட்டது”…தேவா தனது  மனசாட்சியை பார்த்து முறைத்துவிட்டு எனக்கு ஆசை என்று எல்லாம் இல்லை என் குடும்பத்தில் உள்ளவர்கள் மனதில் அதுவும் ஆது இப்பொழுதே அவளை அண்ணி என்று சொல்கிறான் அவனது மனதில் ஆசையை வளர்த்து விட்டு சென்று இருக்கிறாள் எண்ணி விட்டு மனசாட்சியை துரத்தி விட்டு புரண்டு புரண்டு படுத்தான்..ஆது படித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தன்னால் இவனது படிப்பு கேட்டு விடும் என்று  எண்ணி விட்டு பால்கனியில் போய் நின்று கொண்டு பால்கனி கதவை சாற்றி விட்டான்…ஆது தனது அண்ணனின் செயலை எண்ணி சிரித்துக் கொண்டான் வரு அண்ணி இவர் மனதில் இருந்து கொண்டு ஆட்டிப்படைகிறார் இருந்தாலும் வெளியே எதுவும் இல்லை என்பது போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்…இப்பொழுது கூட அம்மாவிடம் அண்ணி என்ன பேசி சென்று இருப்பாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி விட்டு தனது படிப்பில் கவனத்தை செலுத்தினான்..தேவாவும் ஒரு இரண்டு மணி நேரம் எதை எதையோ யோசித்து விட்டு அனைத்து நல்லபடியாக நடக்கும் என்று  தனக்குள் சொல்லிக்கொண்டு அவனது அறைக்குள் வந்தான் …ஆது அப்போதும் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு டேய்  காலையில் நான் எழுப்பி விடுகிறேன் 5 மணிக்கு படித்துக் கொள் இப்பொழுது வா நேரம் ஆகிறது தூங்கு என்று தனது தம்பியையும் அழைத்துக் கொண்டு வந்து இருவரும் ஒன்றாக சிறிது நேரம் பேசிவிட்டு படுத்தார்கள் …ஆது பெரிதாக வருவை பற்றி எதுவும் பேசவில்லை அண்ணன் யோசிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான் இருவரும் அப்படியே தூங்கியும் விட்டார்கள் வரு வீட்டிற்கு சென்றவுடன் கலை தனது மகளை முறைத்தார் ..எப்பொழுது டி போனாய் இப்போது வருகிறாய் என்றார் சும்மா என்று விட்டு நகர்ந்து விட்டாள் கலை வேறு எதுவும் கேட்கவில்லை இது அவள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் அவளாக முடிவெடுக்க வேண்டும் என்று அமைதி காத்தார் அதன் பிறகு வரு வீட்டிலும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தூங்கு சென்று விட்டார்கள் …வரு எதைப்பற்றியும் யோசிக்காமல் தான் இன்று தேவா வீட்டில் தேவாவிடம் உரிமையாக நடந்து கொண்டதை எண்ணி சிரித்துக் கொண்டே தூங்கி விட்டாள் மறுநாள் நன்றாக புலர்ந்தது தேவா எப்பொழுதும் போல் ஆதுவை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டு வேலைகளையும் முடித்து வைத்துவிட்டு அலுவலகம் வந்துவிட்டான் …வரு எப்பொழுதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பும் நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு எழுந்து அவசரமாக குளித்துவிட்டு உணவை உள்ளே தள்ளிவிட்டு பொறுமையாக அலுவலகத்திற்கு கிளம்பினாள் ..அவள் தினமும் நேரம் கழித்து அலுவலகத்திற்கு கிளம்புவதால் அவளுக்கு ஒன்றும் பதட்டமும் பயமும் இல்லை ஆனால் கலைக்கு தான் அத்தனை பதட்டமும் இருக்கும்…அரை மணி நேரத்திற்கு முன்பு எழுந்து வேகமாக குளித்துவிட்டு அவசரமாக ஒழுங்காக சாப்பிட மாட்டாளோ என்று எண்ணம் அவருக்கு ஆனால் அவள் எப்போதும் பொறுமையாக தான் உட்கார்ந்து சாப்பிடுவாள் ..இப்படி நேரத்திற்கு எழுந்து வேறு ஒருவர் சமைத்து வைக்கும் உணவை நிதானமாக சாப்பிடுபவள் அங்கு சென்றாள் அந்த தம்பிக்கு சமையல் கட்டில் இருந்து விடுதலை தருவாளா ?இல்லை இன்னும் அந்த தம்பிக்கு வேலை வைக்கலாம் என்று எண்ணுவாளா ? என்று அவரது யோசனை வரு பற்றி இருந்தது..அம்மா அம்மா என்று  வரு இரண்டு முறை அழைத்துவிட்டு அவர் பார்க்கவில்லை என்றவுடன் அம்மா தாயே என்று கத்தினாள் அவர் கனவில் இருந்து வெளிவந்தது போல் என்ன டி என்றார்..உன் யோசனையை கொஞ்சம் ஒதுக்கி வை அம்மா . யார் யாருக்கு என்ன வாய்க்கணுமோ அது தான் வாய்க்கும் நான் எல்லாம் போய் யாரையும் திருத்தப் போவதில்லை என்று விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள் போகும் வருவை பார்த்து முறைக்க மட்டும்  தான் அவரால் முடிந்தது …வேறென்ன செய்ய முடியும் இப்படிப்பட்ட வாயாடி ,அராத்து பிள்ளையை பெற்று வைத்துவிட்டு என்று எண்ணினார் பிறகு வருவும் அலுவலகத்திற்கு கிளம்பி சென்று தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அவள் கவனம் முழுவதும் வேலையில் மட்டும் தான் இருந்தது …தேவாவை  வரு வேலையைத் தவிர வேறு எதற்காகவும்  ஏறிட்டு பார்க்கவில்லை அவனை சீண்டவும் இல்லை இப்படியே இரண்டு நாட்கள் சென்றது இரண்டு நாட்களுக்குப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களிடம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் என்றும் சொல்லிவிட்டாள் …வரு திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட பிறகு வீட்டில் உள்ள யாருக்கும் இது பெரிதாக அதிர்ச்சி எல்லாம் இல்லை அவள் எப்படியும் ஒத்துக் கொள்வாள் ஆனால் நேரம் எடுக்கும் என்று மட்டும் தான் யோசித்தார்கள் …அவளாகவே இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய விருப்பத்தை சொன்ன பிறகு மேற்கொண்டு இரு வீட்டிலும் பேசி ஒரு வாரத்தில் நிச்சயமும் மூன்று மாதங்களுக்கு பிறகு திருமணமும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள் …தேவா தான் ஒரு மாதிரியாக என்ன இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயம் வைத்துக் கொள்ள வேண்டுமா ?ஆதுவிற்கு பரீட்சை இருக்கிறது என்றான் . நான் ஒரே ஒரு நாள் தானே நிச்சயம் என்றான்.இது உன்னுடைய வாழ்க்கை அண்ணா என்றான் . டேய் படிப்பும் உன்னுடைய வாழ்க்கை தான் என்றான் தேவா ஆனால் எனக்கு மாடல் எக்ஸாம்  நிச்சயத்திற்குள் முடிந்துவிடும் அண்ணா அதன் பிறகு பரீட்சைக்கு எனக்கு மாதங்கள் இருக்கிறது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றான்..சரி என்று விட்டு அமைதியாகி விட்டான் தேவா ஆனால் அவனுக்கு ஒரு வாரத்தில் நிச்சயம் செய்தாக வேண்டுமா என்று எண்ணம் இருந்தது அது ஏனென்று அவனுக்கு புரியாது புதிராக இருக்கிறது . தான் அவளை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டேன் தான் இருந்தாலும் என்று பலவாறு யோசித்தான்..வருவுமே ஒரு வாரத்தில் நிச்சயம் வைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை அனைத்தும் அவசரமாக செயல்படுகிறது என்று இருவரும் யோசித்தார்கள் ஆனால் பெரியவர்கள் நன்றாக முடிவு செய்துதான் திருமணம் நிச்சயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள்…இவர்கள் இருவரையும் இப்பொழுது விட்டால் இருவரும் இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி தான் அவசரமாக ஒரு வாரத்திற்குள் நிச்சய ஏற்பாடு செய்தார்கள் இப்படியே நாட்கள் சென்று நாளை நிச்சயம் என்று வந்து நின்றது …நாளை நிச்சயதார்த்தத்தில் என்னென்ன நடக்கும் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் .. நாளை அனைவரும் வந்து விடுங்கள் தேவ மித்ரன் வருணிகா நிச்சயதார்த்தம் ..அன்புடன் ❣️தனிமையும் காதலி❣️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 29”

  1. CRVS2797

    ஹலோ…! ஹலோ..! நீங்க எதுவும் நிச்சயத்துல சொதப்பாம… இருந்தா சரிதான். இப்பவே, இழுத்துக்கோ, புடிச்சுக்கோன்னு இருக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *