மகா அத்தை என்று வேகமாக கத்தினால் அவரும் என்ன மகா என்று அவள் பக்கம் திரும்பினார் அத்தை நீங்கள் வேணியை பேசுவது எனக்கு பிடிக்கவில்லை நான் ஒத்துக் கொள்கிறேன் அவள் முகிலன் அண்ணனை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டால் இல்லை என்று சொல்லவில்லை ….
நான் அதற்காக நிலாவை இப்பொழுது திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூட சொல்லவில்லை ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அவளுக்கு இப்பொழுது திருமணம் செய்து வைப்பதாக வீட்டிலுள்ள யாருமே எண்ணவில்லை நீங்கள் சொல்லும் விதத்தில் பார்த்தால் வீட்டில் உள்ளவர்களுக்காவது அவளைப் இப்பொழுது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணம் இருக்க வேண்டும் ஆனால் இப்பொழுது நீங்கள் வந்து பெண் கேட்ட பிறகுதான் ஒன்று புரிகிறது …..
நிலாவிற்கு திருமண வயது வந்துவிட்டது என்று வீட்டில் உள்ளவர்கள் யாருமே நிலாவிற்கு திருமண வயது வந்து விட்டது என்று கூட உணரவில்லை அதை நீங்கள் உணர்த்தி இருக்கிறீர்கள் அவ்வளவுதான் அதற்காக அதை நான் உணரவில்லை என்று அர்த்தம் இல்லை அதைப்போல் வீட்டில் ஒரு சிலருக்கு அவளுக்கு திருமண வயது வந்துவிட்டது என்றும் தெரியும் இருந்தாலும் அவளுக்கு இப்பொழுது திருமணம் செய்து வைப்பதாக இல்லை ….
இன்னும் இரண்டு வருடங்கள் போக வேண்டும் அவள் இப்பொழுதுதான் லேப் வைப்பதற்கான அனைத்து ஏற்படும் செய்திருக்கிறாள் அதில் அவள் கொஞ்சம் முன்னேறிய பிறகுதான் அவளுக்கு திருமணம் ஏற்பாட்டை ஆரம்பிப்போம் என்றாள் மகா நான் சொல்கிறேன் என்று என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதே நான் வேணியை இழுக்கிறேன் என்றும் என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதே என்றார் …..
அத்தை நான் ஒன்று சொல்லட்டா நீங்கள் வேணியை இல்லை நானும் கூட வேணியை இழுக்க வேண்டாம் எனக்கும் கூட இப்பொழுது திருமணம் நடக்கும் என்று தெரியாமல் தான் திருமணம் நடந்தது சரியா நான் எங்கள் வீட்டில் வளர்ந்த பெண் என்பதற்காக சொல்லவில்லை என்னுடைய திருமணத்தின் போது கூட எனக்கு திருமணம் நடக்கும் என்று தெரிந்து கொள்ளமால் தான் நான் திருமணம் செய்து கொண்டேன் கொஞ்சம் நன்றாக யோசிங்கள்….
எனக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு தானே எனக்கு திருமணம் என்று தெரியும் அதற்காக நிலாவிற்கு அப்படியே நடக்கலாம் நடக்காமல் போகலாம் நான் அதைப் பற்றி பேசவில்லை ஆனால் அவர்கள் இருவரும் விருப்பம் இருந்தால் கூட பரவாயில்லை இருவருக்குமே அப்படி ஒரு எண்ணம் இல்லை முத்தவிற்கு திருமண ஏற்பாடு செய்வதில் ஒன்றும் தவறில்லை ஆனால் நிலாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை ….
நிலாவிற்கு முத்துவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை முத்துவிற்கும் நிலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை பிறகு நீங்கள் இப்படி பேசுவதால் இருவர் பக்கமும் மன கஷ்டம் தானே என்றாள் எனக்குப் புரிகிறது மகா தவறு என் மேல் தான் ஒத்துக் கொள்கிறேன் எனக்கு நிலாவை பிடித்திருந்தது….
அதுவும் உங்களது குடும்பத்தை நட்பு ரீதியாக இருக்கும் உறவை குடும்ப ரீதியாக வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன் நிலாவையும் பிடித்திருந்தால் நிலா போல் மருமகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் நான் முத்து விடவும் கேட்கவில்லை தான் என்னுடைய தவறை உணர்ந்து கொள்கிறேன் என்றார் பிறகு அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் …
அப்பொழுது சுந்தரி தான் வேகமாக வந்து என்ன பண்ற ராதா என்றார் இல்லை ஏதோ ஒரு வேகத்தில் வந்து கேட்டுட்டேன் என்றார் நீ கேட்டதில் ஒன்றும் தவறில்லை முத்துவிற்கு நல்ல இடமா நாம் அனைவரையும் பார்க்கலாம் இதுவும் உன்னுடைய குடும்பம் தான் இப்பொழுதும் எப்பொழுதுமே அதில் எந்த தவறும் இல்லை நீ பெண் கேட்டதிலும் தவறில்லை ஆனால் எங்களுக்கு விருப்பம் இல்லை நீ பெண் கேட்டு வந்திருக்கும் நிலாவிற்கும் விருப்பம் இருந்தால் பரவாயில்லை ….
யாருக்குமே விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது முத்துவிற்கு நல்ல பெண்ணாக பார்க்கலாம் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றார் பிறகு முத்துவும் அவனது பெற்றவர்களை அழைத்துக் கொண்டு அனைவரையும் பார்த்து மன்னிப்பு வேண்டுவது போல் தலையசைத்து விட்டு அவனது பெற்றவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் …
ராதா வந்து கேட்டுவிட்டு சென்ற பிறகுதான் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்று புரிந்தது தாங்கள் எடுத்து வளர்த்த நிலாவிற்கு திருமண வயது வந்துவிட்டது எங்களையே சுற்றி கொண்டு வந்த நிலாவிற்கு திருமண வயது வந்து விட்டது என்று ஆனால் யாருக்கும் நிலாவை வேறு ஒரு வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை அனைவருக்கும் சிறிது கவலையாக இருந்தது அப்பொழுது வேலு தான் கோதை மணியிடம் வந்து நின்றார் …
கோதை என்ன அண்ணா என்று கேட்டவுடன் நான் ஒன்று கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாயே என்று கேட்டார் என்ன அண்ணா இப்படி பேசுகிறீர்கள் என்றார் என்னால் என்னுடைய மருமகளை பிரிந்து இருக்க முடியாது அதனால் நான் ஒரு முடிவெடுத்து இருகிறேன் நிலாவை எழிலுக்கு கட்டி வைக்கிறாயா? அவள் என்னுடைய கடைசி காலம் வரை என்னுடன் இருப்பால் என்று கேட்டார் அவரது கண்கள் கலங்கி இருந்தது. ..
வீட்டில் உள்ள அனைவரையும் விட நிலாவின் மேல் உயிரையே வைத்து இருக்கிறார் வேலு கடைக்குட்டி என்பதலா என்று தெரியவில்லை கோதையின் கண்களும் கலங்கி தான் இருந்தது பிறகு இதில் நான் எதுவும் பேச முடியாது அண்ணா நான் சொன்னால் உங்கள் மருமகள் கேட்டுக் கொள்வாளா இல்லை நீங்கள் என்னிடம் கேட்டது போல் அவளிடம் கேட்டால் கூட அவள் ஒத்துக் கொள்வாளா அவள் பேச வேண்டியது சொல்வது ஒரே ஒரு வார்த்தை தான் என்னை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாலோ இல்லை என்னை ஒருவர் பெண் கேட்டு வந்தாலோ அதற்கு சம்மதம் தெரிவிப்பது என்னுடைய மகா தான் என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் …
அது உங்களுக்கே தெரியுமே என்றவுடன் சரி நான் மகாவிடம் கேட்கிறேன் என்றார் அப்போது காவேரி வேலுவின் கையை பிடித்தார் என்ன அக்கா என்றார் கொஞ்சம் பொறு டா நீ யோசித்தது போல் தான் வீட்டில் உள்ள நாங்கள் அனைவருமே யோசித்தோம் மகிழும் வரட்டும் மகா மகிழ் இருவரிடமும் பேசலாம் எழில் இடமும் இதைப் பற்றி பேச வேண்டும் அல்லவா என்றார் சுந்தரி அமைதியாக இருந்தார் …
காவேரி என்ன சுந்தரி உனக்கு இதில் விருப்பமில்லையா என்றார் சுந்தரி சிரித்துக் கொண்டே அண்ணி எனக்கு இதில் விருப்பமில்லை என்று நான் சொல்லவில்லை சரியா இப்பொழுது நீங்கள் சொல்லும் பொழுது வீட்டில் உள்ள அனைவருக்கும் இப்படி ஒரு எண்ணம் தானே என்று சொன்னீர்கள் எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது ஆனால் இப்போது கோதை சொன்னது போல் தான் எழிலும் மகா யாரைக் காண்பிக்கிறாளோ அவளை தானே ஒத்துக் கொள்வான் இல்லை எழில் மனதில் யாராவது இருக்கிறார்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது ….
அதேபோல் நிலா மனதில் யாராவது இருக்கிறார்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது என்றார் அவர் அவ்வாறு சொன்னவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகி சுந்தரியை பார்த்தார்கள் வேணியும் இனியும் வேகமாக எழில் மனதில் யாரும் இல்லை நிலா மனதில் யாரும் இல்லை என்று சொன்னார்கள் சிரித்துக் கொண்டே அவர்கள் இருவரும் யாரையும் விரும்பவில்லை ….
நீங்கள் நினைப்பதை போல் மகிழ் அண்ணானும் மகா அண்ணியும் வந்த பிறகு பேசலாம் என்றார்கள் பிறகு மகிழ் மகா இருவரும் வந்த பிறகு அவர்களிடம் பேசினார்கள் அவர்கள் இருவரும் ஒரே போல் சொன்னார்கள் மகிழ் மகா இருவரும் ஒரே போல் அவர்கள் இருவருக்கும் சம்மதம் என்றால் அவர்கள் இருவரிடமும் நீங்கள் முதலில் பேசுங்கள் அவர்கள் இருவருக்கும் சம்மதம் என்றால் இதில் நாங்கள் எதுவும் செய்வதற்கு இல்லை என்றார்கள் பாண்டியம்மா பாட்டி தான் இது என்னுடைய புது கதை இருவருமே நீ சொன்னால் ஒத்துக் கொள்வார்கள் தானே என்றார் …
பாட்டி நான் ஒன்று சொன்னால் நீங்கள் என்னை கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் தானே நான் சொன்னால் இருவரும் ஒத்துக்கொள்வார்கள் தான் ஆனால் இது அவர்கள் வாழ்க்கை அல்லவா அவர்களுக்கு விருப்பம் இருந்தால் தானே திருமணம் செய்ய வைக்க முடியும் இருவரும் அத்தை மகன் மாமன் மகள் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள முடியுமா? இல்லை நான் சொன்னேன் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள முடியுமா ..
அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு மூலையில் கூட தனது தோழி சொன்னதற்காகவும் தனது அக்கா சொன்னதற்காகவும் திருமண செய்து கொண்டோமே என்று எண்ணக்கூடாது அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் பெரியோர்களாக நீங்கள் இருவரிடமும் பேசுங்கள் மற்றபடி அவர்கள் இருவரும் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி நாம் நடந்து கொள்ளலாம் …
வேறு யாராவது வெளியில் இருந்து வந்து என்னிடம் நிலாவையோ எழிலையோ வந்து கேட்டால் அவர்களுக்கு நான் பதில் சொல்லி இருப்பேன் இல்லை அவர்கள் நல்ல இடமாக இருந்தால் நான் நிலாவிடமும் எழிலிடமும் பேசி இருப்பேன் ஆனால் நீங்கள் இப்பொழுது முடிவு செய்திருப்பது நம் வீட்டிற்குள்ளே அதனால் இதில் நான் எந்த முடிவும் சொல்ல விரும்பவில்லை அவர்கள் இருவருக்கும் விருப்பம் இருந்தால் நான் மேற்கொண்டு இருவரிடமும் பேசுகிறேன் இல்லை இருவரும் எதுவும் வாய் திறக்கவில்லை என்றால் கூட நான் பேசுகிறேன் ….
ஆனால் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று இல்லை வேண்டாம் என்று என்னால் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என்றால் வீட்டில் அனைவருக்குமே மகா சொல்வது சரி என்று பட்டதால் கோவிலுக்கு செல்லும் பொழுது சாமியை தரிசனம் செய்துவிட்டு அனைவரையும் வைத்துக் கொண்டு கேட்கலாம் என்று கருப்பையா தாத்தா பாண்டியம்மா பாட்டி முடிவு செய்தார்கள் …
அதுதான் இப்பொழுது எழில் நிலா இருவரையும் உட்கார வைத்துக்கொண்டு கருப்பையா தாத்தா கேட்கவும் எண்ணுகிறார் அதை இருவரையும் பார்த்து கேட்டும் விட்டார் என்னவென்றால் நிலாவிடம் நிலா நம்ப எழிலுக்கு திருமணம் வயது வந்துவிட்டது தானே என்றார் நிலாவும் சிரித்துக் கொண்டே ஆமாம் தாத்தா எழில் மாமாவிற்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து விடலாமே என்று கேட்டால்….
எழில் நிலாவை பார்த்து முறைத்தான் நிலா சிரித்தாள் நீ சொல்வது போல் தான் எழிலுக்கு ஒரு பெண் பார்த்து இருக்கிறோம் தான் அது மட்டும் இல்லை உனக்கும் வயதாகிறது உனக்கும் மாப்பிள்ளை பார்த்து இருகிறோம் என்றார் இப்பொழுது எழில் சிரித்தான் நிலா முறைத்தால் பிறகு இருவரும் தங்களைப் பார்த்து முறைத்துக் கொண்டார்கள் அப்பொழுது பாண்டியம்மா தான் இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு கத்தினார் …
நீங்கள் இருவரும் இப்படியே முட்டிக்கொண்டும் முறைத்து கொண்டும் இருக்காதீர்கள் இருவரும் சிறிய பிள்ளைகள் இல்லை நாங்கள் விளையாட்டாக பேசுகிறோமோ இல்லை உண்மையாக பேசுகிறோமா என்று கூட உணர மாட்டீர்களா என்று கேட்டார் இருவரும் பாண்டியம்மாவை பார்த்து சிரித்து விட்டு பாட்டி நீங்கள் சீரியஸாக பேசுகிறீர்களா இல்லை விளையாட்டுக்கு பேசுகிறீர்களா என்று கூடவா எங்களுக்கு தெரியாது ..
நீங்கள் சீரியஸாக பேசுகிறீர்கள் என்று எங்கள் இருவருக்குமே தெரியும் ஆனால் இவ்வளவு சீரியஸாக பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்கள் சீரியஸாக பேச வேண்டும் என்பதற்காக தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார் அப்படி என்ன விஷயம் என்று இருவரும் கேட்டார்கள் பாண்டியம்மா வீட்டில் உள்ள அனைவரும் ஒரு முறை பார்த்துவிட்டு அனைவரும் கண்மூடி திறந்தவுடன் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறோம் என்றார் …
இருவரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்கள் பிறகு நிலா தான் என்ன எழில் மாமாவிற்கு பெண் பார்த்து இருக்கிறீர்களா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறீர்களா என்ன இருவருக்கும் ஒரே மேடையில் திருமணமா என்று கேட்டால் எழில் நிலாவை பார்த்தான் பாண்டியம்மா பாட்டி நிலாவைப் பார்த்து முறைத்துவிட்டு இருவரையும் பார்த்து இருவருக்கும் ஒரே மேடையில் தான் திருமணம் ஆனால் வேறு ஒரு பெண் வேறு ஒரு மாப்பிள்ளை இல்லை ….
உங்கள் இருவருக்கும் தான் திருமணம் செய்து வைக்கலாம் என்று வீட்டில் உள்ள அனைவரும் யோசித்து இருக்கிறோம் உங்கள் இருவருக்கும் விருப்பமா என்று கேட்டார் இருவரும் ஒரே போல் என்ன எங்கள் இருவருக்கும் திருமணமா என்று அதிர்ச்சியாகி கேட்டுக் கொண்டே எழுந்து நின்றார்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்தார்கள் நிலா எழில் இருவரும் என்ன பதில் சொல்வார்கள் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
NICE
113 AND 119 EPI MISSING SISY