Skip to content
Home » மகாலட்சுமி 97

மகாலட்சுமி 97

மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வேறு எதுவும் பேசாமல் அவர்கள் அரைக்கு சென்று விட்டார்கள் மறுநாள்  காலை ஐந்து மணி போல் இனி சென்று நிலாவை எழுப்பினால் வேணி சென்று எழிலை எழுப்பினால் இப்பொழுது எதற்கு எழுப்புகிறீர்கள் என்று இருவரும் ஒரே போல் கேட்டார்கள்…

எழுந்து போய் அமைதியாக குளித்துவிட்டு ஆளுக்கு வா என்று விட்டு இருவரும் அவர்கள் அறையில் இருந்து வந்து விட்டார்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை அமைதியாக அவர்களது அரையில் இருந்து வெளியில் வந்தார்கள் அப்பொழுது மகாவிற்கு மூன்றாவது மாதம் வளையல் போடுவதற்கு தேவையான அனைத்தையும் வேணி,இனி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள் …

இருவரும் அதை பார்த்துவிட்டு இருவரும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் அறைக்கு  சென்று குளித்துவிட்டு வந்தார்கள் குளித்துவிட்டு வந்த பிறகு நிலா ஓடிச் சென்று இனியையும் எழில் ஓடிச்சென்று வேணியையும் கட்டிக் கொண்டார்கள் இனிதான் டேய் நான் அப்படியே விட்டு விடுவேன் என்று நினைக்கிறாயா என்று கேட்டால் …

இனியை பார்த்து அக்கா என்று விட்டு அமைதியாகி விட்டான்  பரவ இல்லடா அக்கா என்று கூப்பிடுவது பெரிய விஷயம் தான் நினைவு தெரிய ஆரம்பித்ததில் இருந்து இப்போதுதான் நீ என்னை அக்கா என்று கூப்பிடுகிறாய் என்று சொல்லி சிரித்தால் பிறகு எழிலை பார்த்தாள்  எழில்  தனது கண்ணீரை துடைத்துவிட்டு நிலாவின் கண்ணீரையும் துடைத்து விட்டான் பிறகு இதெல்லாம் எங்கு செய்தீர்கள் என்று கேட்டான் கோபமாக ….

வேணி சிரித்துக்கொண்டே அண்ணா அனைத்தும் இங்கு செய்தது தான் ஆனால் இந்த வீட்டில் இருந்து நாங்கள் எந்த பொருளையும் எடுக்கவில்லை என்றால் எழில் அமைதியாக இனியை பார்த்தான் வேணி சொல்வது உண்மைதான் டா மகாவிற்கு அண்ணனாக முகிலும் உதிரன் மாமாவும் செய்யப்போவது தான் இது அவர்கள் இருவரும் அவர்கள் சொந்த காசுல வாங்கிக் கொண்டு வந்த பொருட்கள் தான் பாத்திரத்தில் இருந்து அனைத்துமே இங்கிருந்து நாங்கள் எதுவும் எடுக்கவில்லை ….

இதை வெளிய வைத்து செய்திருக்கலாம் தான் ஆனால் அவளது முன்பு அவளுக்கான சாப்பாடு செய்யக்கூடாது என்பதற்காக மட்டுமே இந்த வீட்டில் வைத்துக் கொண்டோம் இந்த வீடு இந்த வீட்டில் உள்ள அனைவரின் பெயரிலும் தான் இருக்கிறது என்றால் அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை எழில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு நல்ல நேரம் பார்த்து மகா மகிழ் இருக்கும் அறைக்கு எடுத்துச் சென்றார்கள் …

அவர்கள் அங்கு செல்லும் பொழுது மகா குளித்துக் கொண்டிருந்தால் மகிழ் அனைத்தையும் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் கண்கள் கலங்கினான் எழில் மகிழை தேற்றினான் பிறகு மகா குளித்துவிட்டு தலையில் துண்டு கட்டிக் கொண்டு வெளியில் வந்தால் அனைத்தையும் பார்த்துவிட்டு அவளுக்கு கண்கள் கலங்கியது வேகமாக ஓடி வந்து எழிலை கட்டிக்கொண்டு அழுதால் பிறகு சிரித்தால் …..

அப்பொழுது இனிதான் சரி சரி நேரமாகிறது காலை 6:30 டு 7.30 தான் நல்ல நேரம் அந்த நேரத்தில் வளையல் சூட்ட வேண்டும் ஏற்கனவே நேரமாகிறது கல்லூரிக்கு செல்ல வேண்டாமா ஏற்கனவே அனைவரும் அதிக நாட்கள் லீவு போட்டு இருக்கிறீர்கள் என்றவுடன் வேணி சென்று மகாவிற்கு தலையைத் துவற்றி விட்டு வேறு ஒரு நல்ல புடவையாக கட்டிக்கொண்டு அழைத்துக் கொண்டு வந்தால் அவள் கட்டிக் கொண்டு வருவதற்கும் முத்துவின் அப்பா அம்மா முத்து மூவரும் வந்தார்கள்….


அதேபோல் வேணியின் அப்பா அம்மா இருவரும் வந்தார்கள் அதேபோல் பாண்டியம்மாவின் தோழிகள் ஒரு ஐந்து ஆறு பேர் வந்தார்கள் அனைவரும் மகாவிற்கு மூன்றாம் மாதம் வளையல் போட்டு சாதம் கொடுத்துவிட்டு செல்வதற்கு தான் வந்தார்கள் யாருக்கும் இன்னொருவர் செய்கிறார்கள் என்று தெரியாது முத்து சொல்லி முத்துவின் பெற்றவர்களும் கயல் சொல்லி வேணியின் பெற்றவர்களும் வந்தார்கள்…

பாண்டியம்மா புலம்பலால் பாண்டியம்மாவின் தோழிகள் ஐந்து ஆறு பேர் வந்தார்கள் அனைவரையும் பார்த்தவுடன் மகா மகிழ் இருவருக்கும் ஆனந்த கண்ணீர் வந்தது எழில் நிலா இருவரும் வேறு எதுவும் பேசாமல் மகா மகிழிடம் நின்றார்கள் எழில் தான் மகாவின் கண்ணீரை துடைத்து விட்டான் அண்ணி இந்த நேரத்தில் அழுவ கூடாது என்று சொல்லி வேணி இருவருக்கும் இரண்டு சேர் போட்டு உட்கார வைத்தால் உதிரன் முகில் இருவரும் சிரித்துக் கொண்டே வந்தார்கள் …..

இருவரும் மகாவைப் பார்த்து கண் சிமிட்டினார்கள் பிறகு இனி தான் பாண்டியம்மா பாட்டியின் தோழிகள் அனைவரையும் முதலில் நலங்கு வைக்க சொன்னாள் பெரியவர்கள் என்பதால் அவர்களும் நலங்கு வைத்தார்கள் பிறகு இனியை நீ நாத்தனார் நீ முதலில் வளையல் போடு என்று சொன்னவுடன் இனி  முதலில் வளையல்  போட வந்தால் அப்பொழுது  மகா எழிலையே பார்த்துக் கொண்டிருந்தவுடன் இனி பார்த்தால்….


எழில் நீ வந்து முதலில் வளையல் போடு என்று கூப்பிட்டால் இனி எழில் சிரித்துக் கொண்டே மகாவின் அருகில் வந்து நின்றான் முதலில் வேப்பிலை காப்பை பாண்டியம்மா பாட்டியின் தோழிகள் போட்டு விட்டார்கள் பிறகு எழில் முதலில் மண் வளையல் இரண்டு எடுத்து மகாவின் கையில் போட்டு விட்டு அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து இரண்டு வளையல்களை எடுத்து மகாவின் கையில் போட்டு விட்டான் ….

அப்பொழுது நிலா தான் மாமா இது எப்பொழுது வாங்கியது உனக்கு தான் இன்று சாதம் தருகிறார்கள் என்று தெரியாதே வளையல் எப்படி என்று கேட்டால் இது இப்பொழுது வாங்கியது இல்லை என்று மகா சொன்னால் பிறகு எப்போதும் மாமா வாங்கியது என்று நிலா கேட்டால் எழில் சிரித்துக் கொண்டே இது மகாவும் நானும் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் பொழுது வாங்கியது என்றான் என்ன என்று கேட்டால் …

ஆமாம் அப்பொழுது மகாவிற்கு இந்த வளையல் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருந்தால் அதனால் அப்பொழுது நான் அவளுக்காக வாங்கியது ஆனால் அதை எனக்கு இப்பொழுது கொடுக்க வேண்டாம் நீ வளையல் போடும்போது போட்டு விடு என்று சொன்னால் என்றவுடன் அப்பொழுது இதை எப்படி இன்று எடுத்துக் கொண்டு வந்தாய் என்று கேட்டாள் …

நான் இவளுக்கு மூன்றாம் மாதம் தொடங்கியதிலிருந்து இதை என்னுடைய பேன்ட் பாக்கெட்டில் தான் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றவுடன் மகா சிரித்தால் மகிழ் தனது தம்பி எழிலை பார்த்தான் பிறகு இனி மண் வளையல் போட்டுவிட்டு கைச் செயின் போட வந்தால் மகா அமைதியாக இனியை பார்த்துக் கொண்டிருந்தாள் இனி சிரித்துவிட்டு இது எதுவும் இந்த வீட்டில் இருந்து வாங்கியதில்லை….

சாதம் முதற்கொண்டு அனைத்தையும் உன் அண்ணன்கள் இருவரும் தான் செய்கிறார்கள் இது உதிரன் மாமா அவருடைய சொந்த சம்பளத்தில் வாங்கிக் கொண்டு வந்தது என்ற உடன் அமைதியாக வாங்கிக் கொண்டால் வேணியும் அதே போல் இன்னொரு கைச்செயின் தான் வாங்கிக்கொண்டு வந்தால் மகாவிற்கு கை செயின் என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால் இருவரும் அதையே தேர்வு செய்தார்கள் …

ஆனால் இருவரும் என்ன வாங்கினார்கள் என்று மற்ற ஒருவருக்கு தெரியாது இப்பொழுது நிலா தான் என்ன இரண்டு பேரும் கை செயின் போட்டு விடுகிறீர்கள் என்று கேட்டால் மகாவிற்கு பிடிக்கும் என்பதற்காக வாங்கினோம் என்று முகில் உதிரன் இருவரும் ஒரே போல் சொன்னார்கள் மகா சிரித்தால் பிறகு முத்துவின் அம்மா அப்பா இரண்டு மோதிரம் எடுத்துக் கொண்டு வந்தார்கள் அரை சவரன் இருவருக்கும் சேர்த்து இரண்டு மொத்தம் 1 சவரன்
என்று எடுத்து கொண்டு வந்தார்கள்…

மகிழ் எதற்கு வேண்டாம் என்று சொன்னான் டேய் அமைதியா இருடா முத்து தான் அனைத்தையும் எடுத்து கொண்டு வந்தான் நான் கூட சாதம் மட்டும் கொடுத்துவிட்டு வரலாம் ஏழாவது மாதம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன் இல்லை என்று இருவருக்கும் அரை பவுனில் இருவருக்கும் மோதிரம் வாங்கினான் போட்டுக்கொள் என்று முத்துவின் அம்மா போட்டுவிட்டார் பிறகு வேணியின் அம்மா மூன்று பவுனில் ஒரு நெக்லஸ் போட்டு விட்டார் …

மகா தான் அத்தை எதற்கு இவ்வளவு என்று கேட்டால் இது முழுவதையும் நான் வாங்கவில்லை முதலில் கயல் சொல்லி தான் நாங்கள் உனக்கு சாதம் கொண்டு வர முடிவு செய்தோம் கயல் தான் எங்களிடம் கேட்டுக் கொண்டால் என்றவுடன் மகிழுக்கு லேசாக கண்கள் கலங்கியது அவளால் வர முடியாது என்பதால் தான் என்னை செய்ய சொன்னாள் இதில் ஒரு பவுன் கயலும் இரண்டு பவுன் நானும் போட்டிருக்கிறேன் என்றவுடன் இருந்தாலும் என்றால்…

ஒன்றுமில்லை மகா என் மகளுக்கு நீ பார்த்து பார்த்து செய்யும்போது நான் உன்னை என்னுடைய மகளாக எண்ணி எதுவும் செய்யக்கூடாதா என்று கேட்டவுடன் அமைதியாக மகா தனது முடியை லேசாக தனது முடியை ஒதுக்கியவுடன் வேணி அம்மா அந்த நெக்லஸ்  போட்டு விட்டார்கள் பிறகு பாண்டியம்மாவின் நெருங்கி தோழிகள் சாதம் கொடுத்துவிட்டு சென்றார்கள் நேரம் ஆகுவதால் முத்துவின் பெற்றவர்களும் வேணியின் பெற்றவர்களும் கிளம்பி விட்டார்கள் …

மகா மகிழ் இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சரி கல்லூரிக்கு நேரம் ஆகிறது நீங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு மதியத்திற்கு கொஞ்சம் சாதம் எடுத்து வைத்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு மீதம் சாதத்தை எடுத்துக் கொண்டு சென்றார்கள் வேணியும் இனியும் தான் அனைத்தையும் எடுத்து ஒதுங்க வைத்துவிட்டு அவர்கள் வீட்டில் சமையல் அறைக்குள் எடுத்துக் கொண்டு சென்று வைத்தார்கள்….

நிலா மகா வேனி எழில் நால்வருக்கும் கல்லூரிக்கு நேரம் ஆகிறது அனைவரும் கல்லூரிக்கு கிளம்பினார்கள் வேணி கிளம்புவதற்கு முன்பு இனிடம் அக்கா சாதம் எல்லாம் நிறையவே இருக்கிறது வேண்டும் என்பவர்கள் போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம் இவை அனைத்தும் நம் காசில் செய்ததுதான் என்று தனது அத்தையை பார்த்து சொல்லிவிட்டு கல்லூரிக்கு நேரம் ஆகுவதால் கிளம்பி விட்டால் காவேரி வேணியை பார்த்து முறைத்தார்…..

இனி சிரித்தவுடன் காவேரி தனது இரண்டு மருமகளையும் பார்த்து முறைத்துவிட்டு அமைதியாக வரவேற்பரையில் உட்கார்ந்து இருந்தார் சுந்தரி தான் செய்த காலை உணவு உடன் அந்த சாதத்தையும்  எடுத்துக் கொண்டு வைத்திருந்தார் அமைதியாக திறந்து மட்டும் வைத்தார் பாண்டிம்மா பாட்டியும் தாத்தாவும் சுந்தரியிடம் எங்களுக்கு கலவை சாதத்தையே வை சுந்தரி என்றவுடன் அமைதியாக சுந்தரி எந்த சாதனம் வேண்டும் என்று கேட்டு போட்டார் …..

வேலு கந்தன் மணி கூட கலவை சாதத்தையே சாப்பிட்டு விட்டு சென்று விட்டார்கள் சுந்தரியும் கோதையும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள் காவிரி இருவரையும்  முறைத்து பார்த்துவிட்டு ஏன் உங்களுக்கு பிடித்த கலவை சாதத்தையே போட்டு சாப்பிட வேண்டியது தானே நான் உங்களது கை பிடித்துக் கொண்டேன் என்று சொல்லிவிட்டு அவருக்கு தேவையான கலவை சாதத்தை  எடுத்துப் போட்டுக் கொண்டார் ….

அவர் போட்டுக் கொண்டதும் கலவை சாதம் தான் பிறகு கோதையும் சுந்தரியும் அவர்களுக்கு தேவையானது எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டார்கள் அன்றைய பொழுது அனைவருக்கும் சந்தோஷமாக சென்றது மாலை மகா கல்லூரி விட்டு வரும்போது கயல் மகாவிற்கு ஃபோன் செய்தால் மகிழ் மகா இருவரையும் அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு வர சொல்லி இருந்தால் இருவரும் எதற்கென்று தெரியவில்லை என்பதால் கோவிலுக்கு சென்று இருந்தார்கள்…

இருவரும் சென்றவுடன் கோவிலில் கீழே மனை போட்டு உட்கார வைத்தார்கள் மகாவிற்கு ஒன்றும் புரியவில்லை அந்த இடத்தில் கயல் இல்லை கயலின் மாமியார் அம்பிகா சிரித்துக் கொண்டே நாங்கள் தான் உனக்கு சாப்பாடு செய்ய வேண்டும் அதுவும் கோவில் வைத்து கொடுத்து விடலாம் என்று எண்ணியிருந்தோம் கயல் தான் உங்கள் இருவருக்கும் சாப்பாடு கொடுக்கும் போது வீட்டில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக வேணியின் அம்மாவிடம் சொல்லி இருந்தால் என்றவுடன் மகிழ் மகா இருவருக்கும் ஆனந்த கண்ணீராக இருந்தது…

மகாவின் வீட்டில் உள்ளவர்களுக்கு கயல் மற்றும் கயலின் மாமியார் மகாவிற்கு சாதம் கொடுத்தார்கள் என்று தெரிந்தால் வீட்டில் ஏதாவது பிரச்சனை வெடிக்குமா? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்


❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 97”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *