அத்தியாயம்-6
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சரவணன் காலையில் எழுந்தப்போது பக்கத்து வீட்டில் பால் காய்ச்சினாள் பாரதி.
வட்டிக்கடை ஆனந்தராஜிடம் கலா வந்து வாடகைக்கு கேட்டு நின்றார். கூடவே சரவணன் துணைக்கு வந்தான்.
வட்டிக்கடை ஆனந்தராஜ் பாரதியை மேலீருந்து கீழாக பார்வையிட்டவாறு, “யாரிது? அந்த வீட்ல குடிப்போக வந்த பொண்ணுக்கு, அந்த வீட்ல வாடகைக்கு விட சம்மந்தமே இல்லாமே இருக்கு. கழுத்துல தங்க சச்கிலி, கையில தங்க மோதிரம், காதுல தங்கத்தோடு” பாரதி அருகே சட்டென வந்து, “நம்ம இடத்துல இருக்கற புள்ளைங்களோட கலரே இல்லையே. இது ஏதோ வசதியான பொண்ணா தெரியுது” என்று குடைந்து கேட்டதற்கு, “அந்தபுள்ள ஒரு அவசரத்துக்கு தான் இங்க தங்குது. தங்கறதுக்கு வீடு தருவியா மாட்டியா? தந்தா நாளைக்கே அது பால் காய்ச்சிடும்” என்றார் கலா.
“நீ கேட்டு வீடு தராம போவேனா கலாக்கா. வீடு அந்த புள்ளையோட வசதிக்கு இருக்காதேனு பார்த்தேன்.” என்று கூற, “இல்லை சார்… எனக்கு சாதாரண வீடு போதும்.” என்றாள்.
வட்டிக்கடைக்காரனுக்கு முதல் முறை சார் என்ற அழைப்பில், வாடகை பணம், முன்பணம், இதெல்லாம் தெரிவிக்க, கழுத்தில் இருந்த செயின் மோதிரம் கழட்டி, ஆனந்தராஜிடம் நீட்டினாள்.
“செயின் மட்டும் அடமானத்துல இருக்கட்டும் சார். மோதிரத்தை உங்களிடமே வித்திடறேன்” என்று கூறிவிட, பெற்றுக்கொண்டு பணத்தை வழுங்க, சரவணன் தினகூலிக்கு சென்று விட்டான்.
கலா அவரது வீட்டில் அழைத்துக்கொண்டு வந்து, கொஞ்சம் போல சாமானை வாங்கி வந்து சேர்ந்தனர்.
அதிகாலை கலாவுடன் தனது குடிப்போகும் வீட்டிற்கு வந்தாள்.
மடமடவென கலா சுத்தம் செய்ய பால் காய்ச்சினாள்.
“பக்கத்துல தான் அந்த சரவணன் பைய கீறான் மா. பயப்பட வேண்டாம்.
ஏதாவதுன்னா இது என் போன் நம்பர் கூப்பிடு வந்துடறேன். உன்கிட்ட போன் இருக்கா?” என்று கேட்க, “இல்லைக்கா… மயங்கின அன்னைக்கு போனும் பர்ஸு எல்லாமே தொலைஞ்சிடுச்சு. வேற தான் வாங்கணும்” என்று தலைகுணிந்தாள்.
இதோ இங்க வந்து இன்று பாரதி தரிசனம்.
சரவணனை கண்டதும் அவசரமாக பாலை கொண்டு வந்து கொடுக்க, சட்டை மாட்டி கிளம்ப முற்பட்டவனுக்கு காலையில் பால் என்றதும் மறுக்க தோன்றவில்லை.
பேப்பர் கப் என்பதால் வாங்கிவிட்டான்.
பாரதி சரவணனை தாண்டி பார்வை செலுத்த, சரவணன் பின்னால் திரும்பினான்.
“எங்க அம்மா… என் கூட என் தங்கை அனிதா இருக்கா. அப்பா இறந்துட்டார்.
அம்மா… இவங்க பாரதி.” என்று மட்டும் கூறினான்.
விமலாவுக்கு பக்கத்து வீட்டில் பெண் என்றதும் பகீர் என்று தோன்றியது. இதில் சரவணனிடம் ஏதோ தெரிந்தவனாக பேச, கூடுதல் சந்தேகம்.
சரவணன் இத்தனை நாள் ஊதாரியாக திரிந்தான். பெண் விஷயம் என்று கேள்விப்பட்டதில்லை. ஏதேனும் அதிர்ச்சி செய்தி வந்திடுமோ என்று பயந்தார்.
“ஆன்ட்டி பால் காய்ச்சியது. இந்தாங்க” என்று கூற, விமலாவோ, “அப்பா அம்மா எங்கம்மா? யார் யார் இருக்கிங்க” என்று கேட்டு வாங்க, “இப்ப நான் மட்டும் தான் தங்கியிருக்கேன் ஆன்ட்டி” என்று உடனே கலாவை தேடி சென்றாள்.
‘தனியாவா..?’ என்று விமலா உறுத்தலாய் பார்வையிட,
சரவணன் சட்டை மாற்றி வேலைக்கு செல்ல, கலாவோ, “பார்த்து இரும்மா. என்னதான் சரவணன் இங்க இருந்தாலும், அவன் எந்நேரமும் இங்க இருக்க மாட்டான்.
இது களவாணிங்க இருக்கற இடம். பார்த்து பதமா இரு. எனக்கும் வேலை கீது வரட்டா” என்று கேட்க தலையாட்டினாள்.
சரவணனுடன் கலா சென்றிட, அனிதா தாமதமாக எழவும், விமலாவோ “பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு வந்திருக்கு. பார்க்க ஓரளவு வசதியா தெரியுது. அது ஏன் இங்க வந்து தங்கணும்?” என்று மனதை அரித்த கேள்வியை மகளிடம் கேட்டபடி தகவலை உரைத்தார்.
“யார் தங்கினா என்னம்மா. டீயை தா. நான் படிக்கணும்” என்று அனிதா கூறியதும், “பக்கத்து வீட்ல பால் காய்ச்சியதா பால் தந்துச்சு.” என்று கொடுக்க, அதனை பருகி புத்தகத்தை பிரித்து படிக்க அமர்ந்தாள் அனிதா.
விமலாவோ அந்த கலா இன்னாத்துக்கு சரவணன் இருப்பான்னு சொல்லுச்சு’ என்றாலும் அடுத்தடுத்த வேலையில் மூழ்கினார்.
பாரதிக்கு தனக்கென ஒரு உறைவிடம். இனி உணவு சமைத்து முடித்திடலாம். உடை… வீட்டில் அத்தனை உடையிருக்க, அப்படியே வந்ததில் சோர்ந்தாள். யாருமில்லாத இடத்தில் தனியாக அமர்ந்தவள், தந்தை சென்றப்பின் வீட்டிற்கு சென்று உடையும் இன்னபிற தேவைகளையும் கொண்டு வர வேண்டுமென முடிவெடுத்தாள்.
தான் ஒரு இரவு இல்லாமல் தன் தாய் தந்தை ஏதேனும் மனம் மாறியிருந்தால்… இந்த வீடு கூட தேவைப்படாது. கலா அக்கா சரவணனை அழைத்து சாட்சியாக புகார் தந்து விரைவாக ரஞ்சித்தை கம்பி எண்ண வைக்கலாம் என்று தோன்றியது.
பதினொன்று மணிக்கு மேலாக, வீட்டிற்கு சென்றாள். அவள் அப்பா வேலைக்கு சென்றதாக கணித்தாள்.
அம்மாவோ ஓரமாய் சுவரோடு அமர்ந்திருந்தார்.
பாரதியை பார்த்ததும் ஓடி வந்தா அணைத்தவர், “நீ வருவனு தெரியும். உங்கப்பா சொன்னார். இரண்டு நாள் பிரெண்ட்ஸ் வீட்ல இருப்பா. மூனாவது நாள் வருவானு சொன்னார். வந்துட்ட.
ஏன்டி இப்படி பண்ணிட்ட. பிரஷாந்த் போனா போகட்டும். அடுத்த வரன் பார்க்கலாம். உனக்கு நடந்ததை மட்டும் யாரிடமும் சொல்லாத” என்று கூற, பாரதி அன்னையின் கையை விடுவித்து, “நான் என் டிரஸ் எடுத்துட்டா போக வந்தேன்மா. என்னை நாசம் பண்ணியவனை கம்பி எண்ண வைக்காம விடமாட்டேன்.” என்று அவளது அறைக்கு வந்து சில உடைகளை எடுத்தா வைத்தாள்.
அவளது வேலைக்கான அடையாள அட்டை முதல் கொண்டு சில துணிமணியும் பொருட்களையும் ஒரு பெரிய பையில் அடைத்தாள்.
“நீ என்ன லூசாடி?” என்று கேட்க, “இல்லைம்மா… தெளிவா இருக்கேன்.” என்று நடையை கட்டினாள்.
“ஒரு மாசம் இரண்டு மாசம் என் பிரெண்ட்ஸ் கூட தங்க அலோவ் பண்ணலாம். ஆனா பொத்தவங்களை போல யாரும் இருக்க மாட்டாங்க” என்று கூறியபடி பாரதியை வாசல் வரை பின் தொடர நிதானமாய் திரும்பி “பெத்தவங்க போல யாரும் இருக்க மாட்டாங்கன்னு தான் ரஞ்சித் என்னை நாசம் பண்ணி எச்சியிலையா குப்பையில் தூக்கி போட்டப்பிறகும், சூசைட் பண்ணாம, மனசொடிந்து போகாம, உங்களிடம் வந்து அவனுக்கு தண்டனை வாங்கி தரலாம்னு கூப்பிட்டேன். நீங்க ஆதரவும் தரலையேம்மா.
சின்ன வயசுல உங்க கண் எதிர்ல என் மேல யாராவது தப்பான நோக்கத்தோட கை வச்சா, நீங்க யாராயிருந்தாலும் பார்க்காம இழுத்து போட்டு அடிச்சி குள்வி கேட்பிங்க தானே? இப்ப அதே போல தானே…. என்னை ஒருத்தன் மயக்கப்படுத்தி, நாசம் செய்தது. ஆனா நீங்க அதை மறந்துட்டு வேறொருத்தன் கூட வாழுன்னு சொல்லறிங்க.
நான் வேறொருத்தன் கூட வாழறேன். ஆனா.. என்னை தொட்டவனை சும்மா விடணுமா? நாளைக்கு மறுபடியும் இன்னொருத்தியை தொடுவான் தானே? ஏன் நீங்க தனியா இருக்கிங்கன்னு உங்களை வந்து…” என்று ஆரம்பித்தவள் வார்த்தையை விழுங்கினாள்.
பாரதி சொல்லாமல் விடுத்த மிச்சம் மணிமேகலைக்கு புரிய, தலைகுணிந்தார்.
பாரதி பையை எடுத்து புறப்பட்டிருந்தாள். அவள் ஏதோ ஒரு தோழி வீட்டில் இருக்க போவதாக மணிமேகலை நினைத்து கொண்டார்.
வீட்டுக்கு வந்தவளுக்கு அயர்ச்சியாக இருந்தது. அந்த வாடகை வீடு, ஒரேயொரு அறையும் கிச்சனும் அட்டாச் பாத்ரூம் என்று இருந்தது.
ஈரத்துணியால் சுவரை சுத்தம் செய்தாள்.
ஆங்காங்கே கருப்பு புகை போல இருந்தது. அதையெல்லாம் துடைத்து முடித்து, நிமிர ஓரளவு சுத்தமாக காட்சியளித்தது.
சுவரில் உள்ள கறையை துணிக்கொண்டு துடைத்திடலாம். அல்லது வர்ணம் பூசி மாற்றிடலாம். ஆனால் என் மீதுள்ள கறை? நான் அசிங்கமாகிவிட்டேனா? நான் தான் தவறா? இந்த சமூகத்தில் நான் தான் கேலிக்குள்ளாவேனா? நான் ஏன் வீட்டிற்குள் அடைப்பட்டு இருக்க வேண்டும். என்னை காயப்படுத்தி புணர்ந்த மனித மிருகம், இந்நேரம் வீதியில் நடமாடிக் கொண்டிருக்குமே. இதே தான் பாரதி மனதில் ஓடியது.
நெஞ்சு அடைக்க, மனதை வேறு பக்கம் திசைதிருப்ப முயன்றாள்.
வீட்டு சுவரில் ஒட்டுவதற்கென்று சில இயற்கை காட்சி கொண்ட ஸீட்டை வாங்கி வந்திருந்தாள். அதன்பின்பக்கம் உள்ள பசையை எடுத்துவிட்டு சுவரில் ஒட்டினாள்.
எல்லாம் எடுத்து வைத்துவிட்டு குளித்து முடித்தாள். சாதம் மட்டும் வடித்திருக்க, அதில் தயிர் தாளித்து கொட்டி, ஊறுகாய் போட்டு சாப்பிட்டாள்.
நாளை முதல் வேலைக்கு சென்று விட வேண்டும். சம்பள பணம் வேண்டுமே. முதலில் பேங்கில் தனது கார்டை முடக்கிவிட்டு வேளு கார்டை பெற வழி வகை செய்ய வேண்டும். முடிந்தால் சாதாரண போன் ஒன்று வாங்கி வைக்க வேண்டும் திட்டம் போட்டாள்.
தனியாக வந்ததில் பாரதிக்கு ஒரு தெம்பு உள்ளதென்றால், அதில் இந்த வேலையும் அடக்கம். ஒரு வேளை இந்த வேலை இல்லாவிட்டால் அவள் அப்பா சொல் பேச்சை கேட்டு நடக்க முடியாமல் விபரீத முடிவில் இருக்க வாய்ப்புண்டு. வீபரித முடிவு என்பது இறப்பாக தான் அமையும் என்றில்லை. பைத்தியம் பிடித்தவளாக அறைக்குள் அடைந்து கிடப்பது.
நல்லவேளை தந்தை தனக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், தனக்கான தூண் போல, படிப்பை வழங்கி சுயகாலில் நிற்க வைத்திருக்கின்றார் என்று தந்தையை நினைத்து பூரிக்க, அப்பா தானே எனக்கு இந்த நேரம் ஆதரவு தரலை. பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போவேன்னு நினைச்சிட்டாங்களே.’ என்று இரு மாதிரி எண்ணத்தில் உழன்றாள்.
சாப்பிட்ட தட்டை கழுவிவிட்டு, கதவை மூட செல்லும் பொழுது, துப்புரவாளர் உடையை கழட்டிவிட்டு, வேறொரு உடையை எடுத்து பட்டன் போட்டபடி, சரவணன் அவன் வாசலில் நிற்க, பாரதிக்கு தான் சங்கடமாய் இருந்தது.
அவள் இதுபோன்ற சங்கடமான விஷயம் சந்தித்ததே இல்லை. சரவணன் தான் தன்னை காப்பாற்றியது. அதோடு நோற்று காலை சந்தித்த மனிதன். இதே முன்பென்றால் யாரேன்று அறியாதவன் என்று முகம் சுளித்திருப்பாள்.
சரவணன் இவளது திசையை பார்க்காமல் அவன் வீட்டுக்குள் அடைந்திட பாரதி புறப்பட்டாள்.
ஆங்காங்கே இருந்த வீட்டின் கழிவு குப்பையை தாண்டி அவள் எங்கே நடக்க, சரவணனோ, ‘இந்த பொண்ணு எங்க போகுது? நல்லா படிச்சிருக்கு, முப்பதாயிரம் சம்பாதிப்பதா சொல்லுச்சு. நல்ல பேமிலியும் இருக்கும்னு தெரியுது. ஆனா எவனோ ஒருத்தன் வாழ்க்கையில் விளையாடிட்டான். அதையும் இந்த பொண்ணு போலீஸில் போய் அவனை தண்டிக்க துடிக்கறா. என்ன பொண்ணுய்யா..’ என்று தினக்கூலிக்கு புறப்பட தயாரானான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super sis nice epi 👍👌😍 bharadhi eni enna panna pora eppdi panna pora parpom 🤔
Super super super super super super super super super super interesting
So sad. But intresting sis.
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 6)
சில பேர் வாழ்க்கையில இப்படித்தான் விதி விளையாடி வைச்சிடும். நல்லா படிச்சப் பொண்ணு, ஒரு இடத்துல நல்ல வேலையிலும் இருக்கிறா,
பெத்தவங்க பார்த்து வைச்ச வரன்னு … வாழ்க்கை நல்லாவே போயிட்டிருந்தது. ஆனா, ரஞ்சித் என்கிற விபரீத புத்தி புடிச்சவனால இன்னைக்கு நடுத்தெருவுக்கு வந்ததும் இல்லாம, தனி ஒருத்தியா போராடப்போறா. இந்த உலகம் அவளுக்கு இன்னும் அனுபவ பாடத்தை பத்து தரப் போகுதோ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Barathi ava mudivu la strong ah iruku ah
Interesting. Romba thairiyamana mudivu eduthu thaniya vanthu vazhavum start panita bharathi. Amma appa support illama vera yaro oruthar intha lep pani irukanga le avaluku athuvarai
Interesting
Yethuku mela yepdi proceed panraanu paapom
Nice Parpom ranjithku epadi thandanai vangi thara nu