அத்தியாயம்-3
நிரஞ்சனுக்கு கடையிலிருந்து காபி கொண்டு வந்து கொடுத்த ராஜப்பன், “அப்பாவிடம் இலக்கியா இறப்பை சொல்லிட்டிங்களா? என்ன சொன்னார். உங்களை திட்டலையே?” என்றார்.
“நான் இன்னமும் அப்பாவிடம் சொல்லலை அங்கிள். இத்தனை வருடமா அம்மாவிடம் பேசவோ அவங்க நலத்தையும் நாங்க கேட்டதில்லை. அப்பா ஷோபனா அம்மாவோட ஒரு லைப்பை நல்லபடியாக வாழறப்ப, இலக்கியா அம்மாவை பத்தி சொல்லறது நல்லாயிருக்காது.
அவரோட கடமை விவாகரத்து பத்திரத்துல முடிஞ்சிடுச்சு. என்னை பெத்த கடமைக்கு கொள்ளி வச்சி நானும் அவங்களோட இருந்த பந்தபாசத்தை கடமையாவே முடிச்சிட்டேன். இதுக்கு மேல பாசம் நேசம்னு நான் வருந்தி நடிக்க முடியாது.” என்று காபியை அருந்தினான்.
“இனி சொன்னாலும் சொல்லாட்டியும் எல்லாம் வேஸ்ட் தான்” என்று கூறி அவருமே காபி பருகினார்.
‘இன்னமும் ஆனந்தஜோதி கத்தல் நிரஞ்சன் காதில் விழ, “யார் அங்கிள் அந்த பூமர்ஸ் மாதிரி கத்திட்டே இருக்காங்க. ஒரு பெரிய மாமா இறந்துட்டார் தெரியும். ஒரு சித்தி ஒரு மாமா இருக்காங்க. கத்தறது யாரு? என்னவாம்… நான் வந்து கொள்ளி வச்சதுக்கு குதிக்கறாங்களா?” என்று கேட்டான்.
நிரஞ்சனுக்கு அம்மா வீட்டு வழியில் இரண்டு மாமா, ஒரு சித்தி இருப்பது தெரியும். அவர்கள் தான் கொள்ளி வைத்ததுக்கு கத்துக்கின்றார்கள் என்று தவறாய் நினைத்தான்.
இதுவரை மகன் என்று வந்து சென்று பாராமல் இருந்தவன் கொள்ளி மட்டும் போட வருவதா? என்றதற்கு கத்துவதாக நினைத்தான்.
“அதெல்லாம் இல்லை தம்பி. என்னயிருந்தாலும் அம்மாவுக்கு கொள்ளி போட புள்ளை வந்தா யாராவது தடுக்க முடியுமா? இது உங்க அம்மாவுக்காக அழுதிச்சே அந்த பொண்ணு நைனிகாவை பேசறாங்க” என்றதும், ”அம்மான்னா அந்த பொண்ணுக்கு அவ்ளோ பிடிக்குமோ?” என்று கேட்டான்.
“உசிரு தம்பி. நைனிகாவுக்கு தாய் தகப்பனுக்கு மேலாக நேசித்தது இலக்கியாவை தான். அத்தைனு சொன்னதை விட அம்மாவா பார்த்து வளர்ந்துட்டா. இன்னிக்கு இறந்ததும் மகளா சில உரிமைகளை செய்ய நினைச்சா. மத்தவங்க அண்ணன் பொண்ணு எல்லாம் செய்ய கூடாதுன்னு தடை சொன்னாங்க. நீங்க செய்யட்டும்னு ஒரு வார்த்தை சொல்லவும், மத்தவங்க கிசுகிசுன்னு பேசிட்டாங்க.
நான் வேற சும்மாயில்லாம அந்த தம்பி இந்த பொண்ணுக்கு எல்லாம் உரிமையையும் எடுத்து செய்ய சொல்லிடுச்சுன்னு சொன்னேன். அவங்களுக்கு நீங்க அந்த பொண்ணை கட்டிக்க போறதா நினைச்சி அந்த பொண்ணு உசுரை வாங்கறாங்க.
அந்த பொண்ணு சித்தப்பா வீட்ல அவளை நிரந்தர வேலைக்காரியா மாற்ற நினைக்கறாங்க. சின்ன அத்தை வீட்ல அந்த பையன் மாதவனுக்கு கல்யாணம் கட்டி கொடுக்க பார்க்கறாங்க” என்று வருத்தமாய் உதிர்த்தார்.
“மாதவனை அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கலாமே அங்கிள்” என்று இலகுவாக கூறினான்.
“என்ன தம்பி புரியாம பேசறிங்க. மாதவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு. உங்க சித்தி ஆனந்திக்கும் அந்த மருமகளுக்கும் ஒத்து வரலை. குழந்தை வேற பெத்துக்கலைன்னு காரணம் காட்டி இரண்டு மாசமா அவங்க அம்மா வீட்ல துரத்திட்டாங்க.
இப்ப மாதவனுக்கு இரண்டாம் கல்யாணமா பண்ணி வச்சி அவங்களுக்கு ஏத்த வேலைக்காரியா நைனிகாவை மாத்த பார்க்கறாங்க. மாதவனுக்கு கல்யாணமாகாம இருந்தா அட்லீஸ்ட் நல்லவனோ கெட்டவனோ கல்யாணம் செய்து வைப்பேன்” என்றதும் நிரஞ்சன் பதில் தரமுடியாது நின்றான்.
அம்மாவுக்கு ஒரு அண்ணன் இருந்தார், அவர் துணைவியுடன் இறந்துவிட்டது நிரஞ்சன் சிறுவயதிலேயே அறிவான். அந்த பெண்ணை தான் அம்மா கூடவே வளர்ப்பதும் அவனுக்கு தெரியும். மற்றொரு மாமா இளவரசன் அவர் மனைவி கலையரசி அவர்களுக்கு ஒரு பையன் கதிர்.
சித்தி ஆனந்தஜோதியை பற்றியும் அறிந்தவனே. ஆனால் அவர் மகன் மாதவனுக்கு திருமணம் ஆனதெல்லாம் தெரியாது.
“சாரி அங்கிள் மாதவனுக்கு மேரேஜ் ஆனது எனக்கு தெரியாது.” என்றான் நிரஞ்சன்.
“அவனுக்கு கல்யாணம் ஆனா என்ன? ஆகலைன்னா என்ன? என் கவலை இந்த பொண்ணை பத்தி தம்பி.
உங்கம்மா இருந்திருந்தா நைனிகாவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சி தந்திருப்பாங்க. இப்ப பாருங்க… இதுல அவங்க உங்களோட நைனிகாவை திரிச்சு பேசறாங்க” என்று கூறி, நிரஞ்சனை நோட்டமிட்டார். திரித்து முதலில் கூறியது அவர் தானே?!
நிரஞ்சனோ ”ஒகே அங்கிள் ஜெர்னி செய்தது டயர்ட்டா இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன். நீங்க மத்த வேலை இருந்தா பாருங்க.” என்று அனுப்பி பேசவும் ராஜப்பனும் சரியென்று வெளிவந்து விட்டார்.
‘இலக்கியா பையனை நைனிகாவுக்கு கட்டி வைக்கலாம்னு ஆசையா இருக்கு. ஆனா அந்த தம்பி அதுக்கு சம்மதிக்காது போல. ம்ம்ம் நான் முடிச்சி போட்டு என்ன மாறும். இறைவன் யாரை யாரோட முடிச்சிடறானோ?! மாதவனுக்கு இரண்டாதாரமா அமையற மாதிரி போனா இந்த பொண்ணு வாழ்க்கை இருண்டுடும்’ என்று மனதில் கவலையாக நைனிகாவை தேடி நடந்தார்.
ராஜப்பன் வரவும் ஆனந்தஜோதி சத்தம் குறைந்தது. கணவர் மூலமாக நைனிகாவை முறையாக கட்டி வைக்க முயற்சி எடுக்கலாமென்ற நல்லெண்ணம்.
எப்படியும் ராஜப்பனின் காதுக்கு மாதவனுக்கு கட்டி வைக்க கேட்பது சென்றிருக்குமே.
ராஜப்பனின் எதிர்வினை என்னவென்று பார்த்துவிட்டு முடிவெடுக்க முனைந்தார்.
இரவு ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துவிட, ஆளாளுக்கு பன்பரோட்டோ, மசாலா தோசை இட்லி என்று ஆர்டர் செய்திருக்க கூடத்தில் விழுங்கினார்கள்.
ராஜப்பன் நைனிகாவை சாப்பிட வைக்க, ‘எனக்கு பசிக்கலை மாமா.’ என்று மறுத்துவிட்டாள்.
எப்படியும் இன்று பச்சை தண்ணீரை தவிர்த்து உள்ளுக்குள் இறங்காது என்று வற்புறுத்தி இரண்டு இட்லியை விழுங்க வைத்தார்.
ராஜப்பன் அடுத்து நிரஞ்சனிடம் பன்பரோட்டா சுவைத்திட வாங்கினான்.
“என்னடா அம்மா செத்தும் இந்த பையன் கண்ணுல தண்ணி வரலைன்னு நினைக்காதிங்க அங்கிள். என்னால நாடகத்தனமா நடிக்க முடியாது. ஒரு வேளை அம்மாவிடம் தினமும் பேசி சிரிச்சு பழக்கத்தை தொடர்ந்திருந்தா, மேபீ இரண்டு சொட்டு கண்ணீராவது வந்துயிருக்கும்.
எனக்கு வீரா அப்பா ஷோபனா அம்மா என்பது மனசுல பதிவாகிடுச்சு. இலக்கியா தான் பெத்த அம்மான்னு பதிவாகலை.” என்றான்.
“சாப்பிட்டு ஓய்வெடுங்க தம்பி. இலக்கியாவுக்கு உங்க அன்பு தெரியும். அதே போல அவ உங்களே மறுத்து வீராவோட அனுப்பியதுக்கும் காரணம் இருக்கும். நம்புங்க… இங்க நீங்க வந்து அழணும்னு நான் எதிர்பார்க்கலை. நீங்க வந்து கொள்ளி வச்சதே பெரிய விஷயம்.” என்று மகிழ்ந்து பெருந்தன்மையாக கூறினார்.
அதன்பின் இரவு நிம்மதியாகவும் சொகுசாகவும் உறங்கினான்.
அடுத்த நாள் காலையில் ஃபில்டர் காபி நறுமணம் வீச, தானாக வாசம் பிடித்து எழுந்தான்.
தன் சோம்பலை முறித்து, ஜன்னலை நன்றாக திறந்து வைத்து காபியின் நறுமணத்தை நுகர்ந்தான்.
மடமடவென காலை கடனை முடித்து வெளிவந்தப் போது நிசப்தமாய் வீடுயிருக்க, ”அங்கிள்… ராஜப்பன் அங்கிள்” என்று குரல் கொடுத்து தேட, மூக்குறிந்தபடி, “மாமா உங்களுக்கு நியூஸ் பேப்பர் வாங்க டீக்கடை வரை போயிருக்கார். இப்ப வந்துடுவாங்க” என்று தட்டை முகத்துக்கு நேராக நீட்டினாள் நைனிகா.
“எனக்கா காபி?” என்று கேட்டான்.
”ம்ம்” என்றவளின் சொல் கேட்டு “தேங்க்யூ” என்று வாங்கி பருகினான்.
ஆனந்தஜோதியோ “என்னடி இது. நான் டீ கேட்டு அரை மணி நேரமாகுது.” என்று இடையில் கைவைத்து வந்து நின்றார்.
“அத்தை… பால் கொதிச்சதும் காபி கலந்துட்டேன். உங்களுக்கு டீத்தூள் போட்டு கொதிக்க வச்சியிருக்கேன். கொதி வந்ததும் எடுத்துட்டு வர்றேன்” என்று தாமதத்திற்கு காரணம் கூறினாள்.
“காரணத்தை இடுப்புலயே சொறுக்கிட்டு சுத்து” என்றவர் நைனிகா திரும்ப, “ஏய் நில்லுடி இதென்ன புதுசா ஆம்பளைங்க நடமாடுற இடத்துல இடுப்பு தெரிய தாவணி கட்டிட்டு திரியற? கொஞ்சம் அடக்கமொடுக்கமா இருக்க வேண்டாம்” என்று கூறியது போதாதென்று நைனிகா தாவணியை இடைதெரியாது முடிச்சிட்டார்.
வேலை பார்த்த போது லேசாக கீழேயிறங்கியது குற்றமாகி விட்டது.
ஆனால் நிரஞ்சன் எதிரே கூறாமல் இருந்திருக்கலாம். அவனை கண்டு சங்கடமாய் அடுப்பங்கரைக்கு ஓடினாள்.
நிரஞ்சனோ “சித்தி… உங்க சேலை கூட சரியா கவர் பண்ணலை. இடுப்பு தெரியுது பாருங்க. ஆம்பளைங்க நடமாடற இடம். நீங்களும் இழுத்து போர்த்திக்குங்க. முடிஞ்சா கோணிப்பை மாதிரி ஒரு டிரஸ் ஸ்பெஷலா தயாரிச்சு போட்டுக்குங்க” என்று கூறியவன் காபியை பருகி, அவர்களை அசட்டையாக கடந்து வீட்டை அளவெடுத்தான்.
ஆனந்தஜோதியோ இலக்கியா மகன் பேசியதும் இடையை கண்டு ‘என்ன நம்மளையே பேசறான். நாம இவனையும் அவளையும் திட்டினா. நம்ம டிரஸே சரியில்லைன்னு சொல்லிட்டு போறான். இந்த பைய போறவரை கொஞ்சம் விட்டு பிடிக்கணும்’ என்று அகன்றார்.
அடுப்படியில் ‘நல்லா வேண்டும். இலக்கியா அத்தையோட பையன்னா சும்மாவா’ என்று நைனிகா ஆனந்தப்பட்டாள். அவளுக்கு தனக்காக தான் வாதாடியதாக சந்தோஷப்பட்டாள்.
ராஜப்பன் வந்ததும் நிரஞ்சனிடம் பேப்பரை தந்தார்.
“அங்கிள்… நான் காரை எடுத்துட்டு கிளம்பறேன். பக்கத்துல…” என்று கூறும் முன் “என்ன தம்பி இப்பவே போகணுமா? கோவா போறதா வீட்ல சொல்லிட்டு வந்திருக்கிங்க. அப்படியிருக்க வீட்ல தேட மாட்டாங்க. நீங்க இங்க பதினாறு முடிச்சி போகலாமே. இலக்கியாவுக்கு கொள்ளி போடற கடமை மட்டும் தானா?” என்றதும் “அய்யோ அங்கிள், பாதிலயே தப்பா புரிஞ்சிக்கறிங்க. இங்கயே இருந்து எனக்கு போரடிக்கு. சுத்தியிருக்கற பூமர்ஸ்களோட நான் பேசப்போறதும் இல்லை. அப்படியிருக்க தனியா ரூம்ல வீட்ல இருந்து என்ன பண்ண போறேன். நான் கார்ல வந்தேன். அதனால வெளியே சுத்தி பார்த்ததுட்டு, நைட் தூங்க இங்க வந்துடுவேன்.” என்றான்.
ராஜப்பனோ யோசிப்பதாக நிற்க, “மார்னிங் டிபன், நைட் டின்னர் இங்க வந்துடுவேன் அங்கிள். லஞ்ச் மட்டும் வெளியே பார்த்துக்கறேன். என்னால பதினாறு நாள் சுவரையே பார்த்ததுட்டு இருக்க முடியாது.” என்று தெளிவாக அழுத்தமாய் கூறினான்.
அதற்கு மேல் செல்ல வேண்டாமென்று கூற முடியுமா? தான் ஒரு இடைத்தரகர் போல. இலக்கியா வீரராகவனின் நலம் விரும்பி, தோழன்.
வீரராகவன் இலக்கியாவை விவாகரத்து அளித்து சென்றதும், ஷோபனாவை மணந்ததும், ராஜப்பனுக்கு பிடிக்கவில்லை. அதனால் வீரராகவனின் நட்பை துண்டித்து கொண்டார்.
“ஓகே அங்கிள் நான் கிளம்பறேன்.” என்று விரைந்தான்.
அவன் சென்றதும் ராஜப்பன் அவர் வீட்டை கவனிக்க சென்றார்.
வீட்டிலிருந்த ஆனந்தஜோதி தன் கணவரர் பாண்டியனிடம் ‘இந்த பையன் போயிட்டானா? நீங்க கொஞ்சம் ராஜப்பனிடம் நைனிகாவை நம்ம பையன் மாதவனுக்கு கட்டி வைக்க கேளுங்க. சூட்டோட சூட்டா பதினாறு முடிச்சி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். கல்யாணம்னு சின்னதா மஞ்ச கயிற்றை அவ அத்தை இலக்கியா போட்டோ முன்ன மாதவனை கட்ட வச்சிடலாம்.
மாதவன் பொண்டாட்டிக்கு அடுத்து விவாகரத்து கொடுத்துட சொல்லிடலாம். திருமணத்துக்குன்னு செலவு இல்லை” என்று நச்சரித்தார்.
பாண்டியன் ‘அந்த பையன் போயிட்டானா? இல்லையா? ராஜப்பன் இலக்கியா பையனுக்கு நைனிகாவை கட்டி வைக்கறதா சொல்லிட்டா அடுத்து என்ன பேச? அதையும் நீயே சொல்லிடு” என்று கோபமாய் இருந்தார்.
அவருக்கு மனைவியால் மகன் வாழ்வு பாழாகுவது அறிந்தும் மாதவனை திட்ட முடியாத குறை. மனைவியும் இப்படி பேசினால் எரிச்சலானது. ஆனாலும் நைனிகா நல்லப்பெண் அவளால் குடும்பம் செழிக்குமென்ற எண்ணம்.
“முதல்ல எங்க அக்கா பையன் எங்க போனான்னு கேளுங்க. ஊருக்கே போயிட்டான்னா நிம்மதி” என்று அனுப்ப, “ராஜப்பன் வீட்ல இல்லை. நீ வேண்டுமின்னா நைனிகாவிடம் கேளு” என்று ஆனந்த்ஜோதியிடமே வேலையை தள்ளி விட்டார் பாண்டியன்.
ஆனந்தஜோதியும் நைனிகா முன் வந்து “அவன் எங்க?” என்று கேட்டார்.
”யாரு அத்தை?” என்று கேட்டாள் நைனிகா.
“ஆஹ்… ராஜப்பன் உனக்கு பார்த்த சம்பந்தம். என் அக்கா பையன் நிரஞ்சனை கேட்டேன்” என்று பேச்சை நீட்டிக்காமல் ஆரம்பித்து தனக்கான கேள்வியை கேட்டார்.
“தெரியாது அத்தை” என்று கூறினாள் நைனிகா.
“ஏன்டி அவன் எங்கன்னு உனக்கு தெரியாத” என்று மீண்டும் கேட்க, தம்பி இளவரசன் வந்தான்.
“என்னக்கா எம்பொண்ணை மிரட்டுற?” என்று உரிமையாய் நைனிகா பக்கம் வந்து நின்றார்.
“என்னது உன் பொண்ணா?” என்று நகைக்க, “நிரஞ்சன் மட்டும் கல்யாணம் கட்டாம, நைனிகாவும் உன் பையனை கட்டிக்கலைன்னா என் வீட்ல தான் அவளுக்கான இடம். சித்தப்பா வீட்ல உரிமையா வருவா” என்று மெதுவாய் கூறினார்.
“முதல்ல அவன் இருக்கானா போயாச்சான்னு தெரியலை. இவயென்னடான்னா கிச்சனுல சோறு பொங்க வந்துட்டா” என்று உரைக்க, “எப்படியும் எல்லாரும் இங்க சாப்பாடு சாப்பிட நீயா சமைக்க போற? என் பொண்ணு நைனிகா சமைக்க வேண்டாம்.” என்று துண்டை உதறி சென்றார்.
எப்படியும் மதியம் சாப்பிட நிரஞ்சன் வந்தால் தெரிந்திட போகின்றதென ஆனந்தஜோதியும் மிதப்பாய் சென்றார்.
-தொடரும்
Interesting😍😍
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍
Super. Super. Intresting
Evan mudivu yeduka yenna maatram vara pogutho
அருமை
💛💛💛💛
மனமெனும் ஊஞ்சல்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 3)
ஒட்டு மொத்த குடும்பமே… ஒரு மாதிரியாத்தான் சுத்தி வருது.
ஆர்ய கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிறாங்க. என்ன மனுசங்களோ…? விட்டா இவர்கள் வித்தியாசமானவர்கள்ன்னு டைட்டிலே கொடுத்துடலாம் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
இவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கபோன்ற பாவம்
Ovovurathur um ovvoru ragam ah irukanga ivanga naduvula nainika than pavam
Whole family um oru maarrkkama thaan suthuthunga🙄🙄🙄🙄🙄
Interesting
Interesting…………………….waiting for the next………..