Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 38

மீண்டும் மலரும் உறவுகள் 38

ஐந்து நாட்கள் நலங்கும் நல்ல முறையில் நடந்து முடிந்து இருந்தது.

திருமண நாளும் வந்தது  . கோவிலில் சிம்பிளாகவே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார்கள்

அனைவரும் கோவிலில் கூடியிருக்க .திருமணத்திற்கு தேவையான ஒவ்வொன்றும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருந்தது.

புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க நந்தாவும் மணவரையில் உட்கார்ந்து தானும் ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல சொல்லி கொண்டு இருந்தான்

சொந்த பந்தங்களும் அக்கம் பக்கத்தினரும் தியாவை அழைத்துக் கொண்டு வர .

நந்தா தியாவின் பக்கம் பார்வையை பதிக்க . “என்ன மாமா அவளை புடிக்கல புடிக்கலைன்னு சொல்லிட்டு அவ வர திசையை பார்த்துட்டு இருக்க” என்று கேட்க .

தன் மச்சானை முறைத்துவிட்டு அவள் வரும் திசையையே  பார்க்க பச்சை நிற பிளவுஸில் சிகப்பும் அல்லாமல் மெருன் கலரும் அல்லாமல் புடவை அணிந்து கொண்டு வர .

நந்தா வைத்த கண் வாங்காமல் தியாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“உன்னோட வாட்டர் பால்ஸ்ல மொத்த கோவிலும் மிதக்கும் போல மாமா “என்று உதயா சிரிப்புடனே சொல்ல .

தனது மச்சானை பார்த்து முறைத்தவன் .இவனை வச்சே சமாளிக்க முடியல .

“இதுல இவளும் வந்து சேர்ந்தா எப்படித்தான்  இருவரையும் வச்சு சாமளிகிறதுனு தெரியலையே ஈஸ்வரா “என்று கோயில் கருவறையில் இருக்கும் ஈஸ்வரனை பார்த்து வேண்டினான்.

 ” இதுல என்ன மாமா உனக்கு கஷ்டம் காலேஜ்ல அத்தனை ஸ்டூடண்ட் வச்சி மேய்க்கிற வீட்டுல  எங்க ரெண்டு பேர்த்த உன்னால சமாளிக்க முடியாதா ?”என்று சிரிக்க .

நந்தாவுக்குமே  சிரிப்புதான் .தியா நந்தாவின் அருகில் வந்து உட்கார.

“என்ன சார் ஒரே சிரிப்பா இருக்கு ?”என்று கேட்க .

அவளை பார்த்தவன் அமைதியாகவே இருக்க. “ஓவரா தான் போறீங்க என்று அவனை பார்த்து கண்ணடிக்க” .

“இதே பொழப்பாவே திரி “என்று அவளை பார்த்து விட்டு அமைதியாகி விட .

நந்தாவின் கண்கள் இப்போது தேவியை  தேடியது. தேவி ஒவ்வொரு வேலையாக இழுத்து போட்டுக் கொண்டு செய்து கொண்டிருக்க.

ஐயர் கேட்க ஒவ்வொரு பொருளாக எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தேவியின் அருகில் சென்ற சரோஜா. “என்ன தேவி ரொம்ப சந்தோஷமா இருக்க போல” என்று கேட்க.

” ஏன், இல்லாம என்னோட ஒரே தம்பி ஆசை தம்பியோட கல்யாணம் ஆச்சே” என்று தேவி சிரிப்புடன் சொல்ல.

அந்த ஒரே தம்பி என்று விட்டு “என் தம்பி ஒரு நாள் உன்னை நடுத்தெருவில் நிற்கதியா நிக்க வச்ச மாதிரி என் தம்பியோட மக மூலமா நாளைக்கு உன் தம்பியும் உன்னை நடு தெருவில் நிக்க வைப்பான்”.

அப்ப தெரியும் இந்த சந்தோஷம் என்று வன்மத்துடன் சொல்ல.

தேவி அப்பொழுதும் சிரித்த முகத்துடனே பார்க்க .

இங்கு நந்தாவிற்கு தான் கை முஸ்டிகள் முறுக்கேரியது இருந்தாலும் ,அமைதியாகவே இருந்தான்.

ஏற்கனவே தேவி கோவிலில் எது நடந்தாலும் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி இருந்ததால், தன் அக்காவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்க .

தியா தான் மணமேடையில் உட்கார்ந்திருக்கிறோம் என்று கூட நினைவில் இல்லாமல் வேகமாக எழுந்து கொள்ள முயற்சி செய்ய.

நந்தா அவளது கையை இறுக்கி பிடித்தான்.

தியா  நந்தாவை முறைக்க .”கொஞ்ச நேரம் அமைதியா இரு டி “மண வரையில் உட்கார்ந்துட்டு எழுந்திருக்க கூடாது “என்று சொல்ல.

முதல் முறையாக நந்தா* டி “என்று போட்டு அழைக்க உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு தோன்றினாலும் ,அதையும் தாண்டிய நிறைய கோபம் ஏற்பட .

நந்தாவை முறைத்துவிட்டு உட்கார்ந்த இடத்தில் இருந்தே அத்த என்று அடி தொண்டையில் இருந்து கத்த .

திரும்பி பார்த்த சரோஜா தனது தம்பி மகளை ஏளனமாக பார்த்துவிட்டு,

” ஏன் ,இருவது வருஷத்துக்கு முன்னாடி உன் அப்பா இவளை எங்க நிக்க வச்சான் என்று உனக்கு தெரியாதா ?”

“தெரியாம தான் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கியா ? “

“20 வருஷத்துக்கு முன்னாடி உன் அப்பன் நிக்க வச்ச இடத்தில் தானே இன்னும் இருவது நாளில் நீ நிக்க வைக்க போற “என்று சொல்ல.

” தியா சிரித்த முகமாகவே நீங்க அப்படி கனவு கண்டால் அதற்கு நானா ?பொறுப்பு “.

நான் பொறுப்பாக முடியுமா?

“நீங்க இன்னும் அப்டேட் ஆகல “என்று நினைக்கிறேன் அத்தை.

இப்போ “தாய் தகப்பன் சொத்தில் பெண்களுக்கும் பங்கு இருக்கு “தெரியுமா? அது உங்களுக்கு.

அவங்க கிட்ட இருக்க பாதிக்கு மேல இருக்க சொத்து அவங்க அப்பா அம்மா சம்பாதித்தது .

வீடாகட்டும் நிலம் ஆகட்டும் இல்ல இன்னும் இருக்க பிற சொத்துக்கள் ஆகட்டும் .

“அதுல பாதிக்கு பாதி என் புருஷனுக்கு எந்த அளவுக்கு  உரிமை இருக்கோ ,அதே அளவுக்கு தேவி பெரியம்மா விற்கும் உரிமை இருக்கு “.

“என்னோட புருஷனுக்கே தேவி பெரியம்மாவை வீட்டை விட்டு போனு சொல்ற உரிமை கிடையாது”.

“இதுல அவர் கூட தொத்திக்கிட்டு போற எனக்கு மட்டும் அந்த உரிமை எங்க இருந்து வரும் “.

“”நீங்க கனவு காண்றீங்கன்றதுக்காக இதெல்லாம் நடந்திடும் என்று நினைக்கிறீர்களா?”

  அப்படியெல்லாம் கனவு கண்டுட்டு திரியாதீங்க .

“எந்த ஒரு சூழ்நிலையும் தேவி பெரியம்மாவை  நானும் சரி ,என்னோட புருஷனும் சரி வெளியே போனு சொல்ல மாட்டோம் “.

ஆனால்,அப்படி ஒரு சூழ்நிலை வராது .”அவங்களுக்கும் அந்த சொத்தில் முழு உரிமை இருக்கு .சரியா ?”

இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க சொந்த கால்ல தான் நின்னுட்டு இருக்காங்க .

அடுத்தவங்க உழைப்பை எதிர்பார்த்து இல்லை  .

ஆனா ஒன்னு ,உனக்கு ஒரு ரொம்ப பெரிய தேங்க்ஸ் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நேத்து இந்த விஷயத்தை நானே இங்க இருக்க எல்லாருக்கும் சொல்லணும்னு நினைச்சேன் .

ஆனா நான் ஒரு விஷயம் சொல்ல போய் இங்க இருக்கவங்க தப்பா எடுத்துப்பாங்களோன்னு யோசிச்சேன் .

அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம் .இப்போ நான் அத்தைக்கு சொன்னதுதான் .

“எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு காலத்திலும் தேவி பெரியம்மாவை வெளியே போனு சொல்ற உரிமை எனக்கும் இல்ல ,என்னோட புருஷனுக்கும் இல்லை என்று நந்தாவை பார்த்து சொன்னாள் “.

அந்த பயம் இங்க இருக்க யாருக்கும் தேவையும் இல்லை .அது பயம்  என்று கூட நான் சொல்ல விரும்பல .

அப்படி ஒரு எண்ணம் என் மனசுல இப்பயும் இல்ல ,பின்னாடியும் வராது என்று விட்டு நாந்தாவை பார்த்து.

அவன் கையில் அழுத்தம் கொடுக்க .நந்தாவின் கண்கள் தன்னையும் மீறி கலங்கி இருந்தது .

“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா ?”என்று நந்தவை பார்த்து கேட்க .

அவள் தலையில் லேசாக தன் மற்றொரு கையால் தட்டியவன். நம்பிக்கை இல்லாம இல்ல.

ஆனால் ஒரு பயம் என்று சொல்லிவிட்டு சிரித்த முகத்துடனே கையை விடுடி என்று சொல்ல அவளும் அவனது கையில் இருந்து கையை இழுத்து விட.

“சிரித்த முகத்துடனே அவளது கழுத்தில் தாலி கட்ட ,தியாவும் அந்த தாலியை கீழே குனிந்து ஏற்றுக்கொண்டாள்” .

அனைவரும் ஆசீர்வாதம் செய்ய .தியா நந்தா திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது.

இருவரும்  எழுந்து நின்றவுடன் பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க என்று சொல்ல .

தியா ஒரு சில நொடி நந்தாவின் கையை பார்த்தவள் .நீங்க தப்பா எடுத்துக்கொள்ள வில்லை என்றால் என்று  விட்டு தனது அத்தை மாமா அருகில் வந்து நின்றாள்.

சரோஜாவும் அவளை முறைத்த படி பார்த்துக் கொண்டிருக்க .

என்ன இருந்தாலும், எனக்கு நீங்க கடைசி நிமிஷத்துல ஒரு உதவி பண்ணிருக்கீங்க.

அது மட்டும் இல்லாமல் பெரியவங்கனு சொன்னாங்க இங்க இருக்கறதிலேயே பெரியவங்கன்னா நீங்க ரெண்டு பேரும் தான் .

மனசு வந்து ஆசீர்வாதம் பண்ண முடிஞ்சா பண்ணுங்க என்று விட்டு நந்தாவை பார்க்க .

அவனுமே இருவரது காலிலும் விழ.
தியாவின்  தாய் மாமா தியாவின் தலையில் கை வைத்து ஒரு சொட்டு கண்ணீர் விட .

“அவள் நிமிர்ந்து பார்க்க “.

“ஒன்றும் இல்ல தாயி இத்தனை நாளா இவளோட வசப்பாட்டுல உங்க அம்மா மாட்டிட்டு இருந்தா” இப்போ நீங்க என்று ஏதோ சொல்ல வந்து அப்படியே மென்று முழுங்கியவர்.

கொஞ்சம் பயம்  தான் தாயி. இப்பதான் நிம்மதியா இருக்கு என்று சொல்ல .

ஆனால், ஏதோ ஒரு விஷயம் இருக்கு இப்போ புரிஞ்சுக்கிறேன்.

என் லைஃப்ல நடந்த நிறைய விஷயங்களில் முக்காவாசி பங்கு உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன் . என்று தன் அத்தையை பார்த்து சொன்னவள்.

ஆனா இந்த செகண்ட், வரைக்கும் யாரும் எனக்கு எந்த உண்மையை சொல்லல தெரியாம தான் பாத்துக்குறாங்க.

எனக்கு உண்மை தெரியிற அன்னைக்கு இருக்கு உங்களுக்கு என்று மெதுவாக சரோஜா காதில் மட்டும் கேட்குமாறு சொன்னாள் .

மனசு வந்து என்னை வாழ்த்தின வரைக்கும் போதும் மாமா என்று விட்டு அப்படியே நிற்க .

நீ சொன்ன  மாறி தான் தியா பெரியவங்க கால்ல தான் ஃபர்ஸ்ட் ஆசிர்வாதம் வாங்கனும்.

வா அடுத்து பெரியவங்கன்னு பார்த்தா உங்க அப்பா அம்மா தான் என்று  விட்டு கண்ணன், மலர் அருகில் அழைத்து செல்ல .

இருவரின் கண்களும் கலங்கி இருக்க. கண்ணன் ,மலர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க .

இருவருக்கும் அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது .கண்ணனின் முகத்தில் பாசத்தை தாண்டி வலியும் இருக்க .

*என்னால உங்களை ஆய்சுக்கும் மன்னிக்க முடியாது”..

என்னதான் ஏதோ ஒரு சூழ்நிலையா இருந்தாலும் ,உங்களை நம்பி வந்தவங்களை கைவிட்டது அவ்வளவு பெரிய பாவம் .

“அந்த பாவம் உங்கள ஏழு ஏழு ஜென்மத்துக்கும் துரத்தும் “.

“அதுக்காக அப்பா என்ற உறவு இல்லன்னு இப்பல்ல எப்பயும் சொல்லல “என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாகி விட .

அதன் பிறகு தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

“என்ன மாமா என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க மாட்டியா ?*என்று உதயா சிரிப்புடன் கேட்க .

நந்தா அவனது தோளில் கையை போட்டு இருக்க  அவர் தான அண்ணா வாங்க கூடாது.

நான் உங்கள விட சின்ன பொண்ணு தானே என்று தியா உதயா காலில் விழ வர.

நான் சும்மா விளையாட்டுக்கு தான் மாமாவை கேட்டேன் என்று தியாவின் தோளில் கை போட.

இருவரும் அவள் தலையோடு தலை முட்டினார்கள். பிறகு நல்ல நேரத்தில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அனைத்து சடங்குகளும் நல்ல முறையில் நடந்து முடிய .

இருவரையும் நந்தா வீட்டிற்கு அழைத்து சென்றார்கள் .வீட்டிற்கு செல்லும் வரை ஒன்றும் தெரியாத கண்ணனுக்கு வாசற்படியில் இறங்கியவுடன் பழைய நினைவுகள் வந்து ஆட்டி படைத்தது .

அவரது கால்கள் அடித்த அடி எடுத்து வைக்க முடியாமல் இருக்க .

மலர் வேகமாக கண்ணனின் கையை பிடித்து ஒன்னும் இல்ல மாமா என்றார்.

“மலரு என்னால இயல்பாக கூட இருக்க முடியல”.இது என் பொண்ணோட கல்யாணம் ஆனா என்று கண்கள் கலங்க.

ஒன்னும் இல்ல மாமா இதெல்லாம் இனி சமாளிச்சு தான் ஆகணும் என்று மனச தேத்திக்கிட்டு தானே இந்த இடத்தில் வந்து நிற்கிறோம்.

நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்கு மலர் என்று சொல்ல .

“தியாவின் கையைப் பிடித்துக் கொண்டு இறங்கி வந்த நந்தா 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி வீடு அப்படியே வா இருக்கும்” .

“வருஷம் ஓட ஓட வசதி மாற மாற நிறைய விஷயங்களில் மாற்றம்  ஏற்பட்டு தான் இருக்கு “என்று மட்டும் போகிற போக்கில் சொல்லி செல்ல

தியாவை அழைத்து கொண்டு வீட்டுக்குள் நுழையப் போக.

டேய் எங்கடா நீ மாட்டும் பேசாம போற .நில்லுடா இங்க என்று சொல்லி தேவி வேகமாக வீட்டிற்குள் சென்று ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வர.

“நீ தான் ஆரத்தி எடுத்து என் தம்பி மகளை வீட்டுக்குள்ள அழைக்க போறியா?”

“நீ ஆரத்தி எடுத்து என் தம்பி மகள் வாழ்க்கை விளங்குமா ? “என்று அப்போதும் சரோஜா அமைதியாக இல்லாமல் சொல்ல.

தனது அத்தையை திரும்பிப் பார்த்து முறைத்தவள் எதுவும் பேசாமல் இருக்க .

என்ன விட என் தம்பியோட வாழ்க்கை நல்லா இருக்கணும் நினைக்கிறவங்க யாரும் கிடையாது.

“நீ சொல்றதுக்காக ஓடி ஒளிஞ்சிப்பன்னு நினைச்சியா ?”என்று வாய்விட்டு சரோஜாவை பார்த்து கூறிய தேவி.

சிரித்த முகத்துடன் தனது தம்பிக்கும் தியாவிற்கும் ஆரத்தி எடுக்க.

தியா நந்தாவின் கையை  இறுக்கமாக பிடித்துக் கொள்ள .

நந்தாவுமே தியாவை பார்த்துவிட்டு அவளது கையை பிடித்துக் கொண்டு இருவரும் வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் சென்றார்கள்.

தேவி இருவரையும் பூஜை அறைக்க அழைத்துச் செல்ல.

பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டார்கள். பிறகு ஏதாவது முதல் நாள் வீட்டிற்கு வந்தவுடன் ஸ்வீட் செய்ய வேண்டும் என்று சொல்ல.

ஒரு சில நொடி திருத்திருவென முழித்த தியா லேசாக கீழே குனிந்து கொள்ள

“நந்தா  சமைக்க தெரியாத எப்படி முட்ட கண்ணை உருட்டி விட்டு பார்க்கிற “என்று சொல்ல.

அவனைப் பார்த்து முறைத்தவள் .உங்க கிட்ட வந்து சொன்னேனா எனக்கு மலர் சமைக்கலாம் கத்துக் கொடுத்திருக்கு .

ஆனா பெருசா சமையல் கட்டு பக்கம்  போக விட மாட்டாங்க என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் சமையலறைக்குச் செல்ல .

என்ன பெரியம்மா  செய்யனும் என்று கேட்டாள்.

அதற்கு முன்பாகவே உதயா அங்க இருக்க எல்லா பொருட்களிலும் பேர் எழுதி  இருக்கும் தியா அதனால உனக்கு என்ன செய்ய விருப்பமோ செய் என்றான்.

நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று தேவி உள்ளே வர நானே செய்கிறேன் .

எனக்கும் சமைக்க தெரியும் பெரியம்மா என்று விட்டு அவளாகவே தனியாக பாயாசம் செய்து இருக்க .

அவல் பாயசம் செய்து எடுத்துக் கொண்டு வந்தாள் .

பரவாயில்லை சமைக்க தெரியும் போல என்று சொல்ல.

” டீல மிளகாய்த்தூளும் உப்பும் போட்டு கொடுத்தா தெரியும் “என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக தியா சிரிப்புடனே சொல்ல.

அதைக் கேட்ட உதயா” மாமா மிளகாய் தூள் காஃபியா சூப்பரா இருக்கும் போல”.

“உன் லைஃப் செம்ம என்டர்டைன்மென்ட்  தான் போல” என்று சிரிக்க .

எல்லாம் உன்னால வந்தது டா என்று தனது மச்சானை பார்த்து முறைத்துவிட்டு பிறகு நந்தாவுமே தியாவை பார்த்து சிரித்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *