Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 46

மீண்டும் மலரும் உறவுகள் 46

தியாவுமே  உதயாவை பார்த்து சிரித்து விட்டு அப்படி இல்ல அண்ணா என்றாள்.

உதயாவுமே  சிரித்து விட்டு சும்மா டா ஆனா “ஒரே நாள்ல உன் புருஷன் பக்கம் சாய்ச்சிட்ட பாத்தியா” என்றான்.

உன் புருஷன் கூட்டிட்டு போன உடனே போன் பண்ணல என்றவுடன் “கொஞ்சம் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் “அண்ணா என்றாள்.

“உனக்குத் தானே” என்றான்.

இப்பொழுது தியா முறைக்க செய்தாள்.

தேவி  உதயாவின் தலையில்  கொட்டி விட்டு உதயாவின் அருகில் வந்து உட்கார .

*சாரி பெரியம்மா “என்றாள்.

“ரொம்ப தாண்டி ஓவரா போற “.

“உன் புருஷன் கூட  நீ சண்டை போடு போடாட்டி போ பேசு பேசாட்டி போ “அதுக்கு  எங்க கிட்ட பேச மாட்டியா ?

வந்ததுல இருந்து பேசுவனு பார்த்தேன்.நீயா போன் பண்ணல.

  இந்த செகண்ட் வரைக்கும் போன் போடல .நானும் ரெண்டு மூனு டைம் கால் பண்ணிட்டேன்.

உதயாவும் கால் பண்ணிட்டான். ஒருத்தவங்க போன் கூட எடுக்கல அவ்வளவு திமிரு.

எங்கள எல்லாம் மறந்துட்ட இல்ல என்றார்.

“உங்களை போய் மறப்பேனா பெரியம்மா” என்று சிரித்தாள்.

சிறிது நேரம் மூவரும் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்க மூவருக்கும் பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்திருந்தான் நந்தா.

  மூவரும் குடித்துவிட்டு வீடியோ காலில் பேசிவிட்டு சிறிது நேரம் .

சரி தியா நேரம் ஆகுது நாங்க போயிட்டு தூங்குறோம் என்று விட்டு தேவியும் ,உதயாவும் சொல்லிவிட்டு செல்ல .

வீடியோ காலில் இருந்த நந்தா அனைத்து கதவும் சாத்திருக்கிறதா ?என்று ஒரு முறை செக் பண்ணி விட்டு .

அனைத்தையும் சாற்றி விட்டு அவளுடன் பேசிக்கொண்டே ரூமிற்கு வந்தான்.

  “மேடம் படிக்கலையோ?”  என்றான்.

அது என்று விட்டு  அமைதியாகி விட்டாள் .

“சரி டி நேரமாகுது தூங்கு “என்றான்.

காலைல சீக்கிரமா எழுந்து படிச்சிக்கிறேன்.

இப்போ கொஞ்ச நேரம் பேசுங்க என்றாள்.

அவளைப் பார்த்து சிரித்துவிட்டு சிறிது நேரம் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்துவிட்டு 11 மணி ஆகியவுடன் நேரம் ஆயிடுச்சு தூங்கு டி என்று விட்டு அவனாகவே போனை வைத்து விட்டான்.

தியாவிற்கு இப்பொழுது தான் சந்தோஷமாக இருந்தது  .

நிம்மதியாக படுத்தவுடன் ஒரு சில நொடி எதை எதையோ யோசித்து விட்டு தூங்கி விட்டாள் .

நந்தா தான் நேற்று இரவு தூங்காததால்,  இன்று ஆழ்ந்த நித்திரைக்கு சென்று இருந்தான் .

அவள் பேசிய சந்தோஷத்தில் அப்படியே.

இரண்டு நாட்கள் சென்று இருந்து.

ஆடி 18 அன்று முதல் தேவைக்கு வந்தவன் தான் தியாவின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு வெளியில் சென்றான் .

“நந்தா இதழ் பதித்த இடம் குறுகுறுக்க “அவன் சென்று பத்து நிமிடங்களாகியும் அப்படியே சிலை போல் நின்றாள் .

“தியா டிரஸ் மாத்திட்டியா ?இல்லையா “?என்று தேவி ஹாலில் இருந்து குரல் கொடுக்க .

அதன் பின்பு கண்ணாடி முன்பு நின்று தன்னை ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்தவள் .

அவன் முத்தம் கொடுத்த நெற்றியை தொட்டு தொட்டு பார்த்துவிட்டு “இந்த வாத்தி  நம்மள பித்து பிடிக்க வைக்காமல் விட மாட்டாரு”.

” புருஷன் பொண்டாட்டி என்ற பீலிங் மட்டும்தான் இருக்காம் வேற எந்த பீலிங் கும்  இல்லையாம் ” என்று எண்ணி விட்டு சுடிதார் ஒன்றை போட்டுக் கொண்டு வெளியில் வந்தாள்.

நந்தா அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு  “வச்சு கொடுத்த சேலையை எதுக்கு டி மாத்துன “என்றான்.

“கொஞ்ச நேரம் கட்டி இருந்தேன் இல்ல அப்புறம் என்ன ?”என்றாள்.

அவளை முறைத்து விட்டு வீட்டுக்கு போகும்போது புடவை கட்டிட்டு வர என்றான்.

வேறு எதுவும் பேசாமல் பின் கட்டிற்கு சென்றான் .

அவன் பின்னாடியே வந்தவள் உங்களுக்கு இங்க இருக்கா எதாவது கஷ்டமா இருக்கா என்று கேட்டாள்.

அவளை முறைத்து விட்டு எத்தனை டைம் சொன்னாலும் ஒரே விஷயம் தான் டி.

எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நீ எப்பயும் போல ஃப்ரீயா இரு .

“இது நீ பிறந்து வளர்ந்த வீடு தியா அதை மட்டும் மனசுல வச்சுக்கோ வேற எதையும் நினைவில் வைத்து கொள்ளாதே “

அவ்வளவு தான் சொல்லுவேன் என்று அவளது  கையில் அழுத்தம் கொடுத்தான் .

கண்ணனுக்கு தான் குற்ற உணர்ச்சி மேலோங்கியது .

தியா சொன்ன தண்டனை .

“தன் மகளை அவர்கள் கொடுமைப்படுத்தி இருந்தாலும் ,சித்திரவதை செய்திருந்தாலும் அவளை அடிமைப்படுத்திருந்தாலோ கூட அந்த அளவுக்கு குற்ற உணர்ச்சி இருக்குமா ?இல்லையா ?”என்று தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் நந்தாவும் சரி ,தேவி ,உதயா மூவருமே தியாவை கையில் வைத்து தாங்க.

அவளுக்கு எது பிடிக்கும் .பிடிக்காது என்று அவள் சென்ற சில மாதங்களில் தெரிந்து வைத்திருக்க .

அவளுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள .

இதுதான் தனக்கான தண்டனை என்பதை கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக உணர செய்தார்.

இங்கு வந்திருந்த 18 நாளிலும் தன் மகள் வாயில் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் அவர்கள் மூவரை பற்றியே சுற்றி சுற்றி வந்தது .

பெரியம்மா அத செஞ்சு கொடுத்தாங்க. இப்படி பண்ணாங்க உதயா அண்ணா ,நந்தா என்று சொல்ல கண்ணனுக்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக குற்ற உணர்ச்சி அதிகம் ஆகியது.

தான் இதை இனிமேல் சரி செய்யவும் முடியாது .சரி செய்யவும் முயற்சி செய்யவில்லை என்று எண்ணினார்.

இவர் அதில் இருந்து கொஞ்சமாக மீண்டும் வர வழி செய்ய வேண்டும் .

எத்தனை வருடமாக ஆசையாக வளர்த்த தன்னுடைய மகளுக்காக  என்று  மனதிற்குள்  எண்ணி விட்டு அமைதியாகிவிட்டார் .

இனி அடிக்கடி இவர்களை பார்க்க நேரிடும்.

அவர்கள் வீட்டிற்கு நான் செல்லவோ இல்லை அவர்கள் தங்கள் வீட்டிற்கு இனி வருவதையோ தடுக்க இயலாது .

ஆகையால் ,அனைத்தையும் கடந்து வர வேண்டும் என்று மட்டும் யோசித்தார்.

மாலை தியாவை கையோடு அழைத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு செல்ல .

வீட்டிற்கு செல்லும் வழியில் “நந்தா தான் அக்கா வீட்டுக்கு வரணுமா ?இல்ல “என்று விட்டு அமைதியாக ஆகி விட்டான்.

அவனைப் பார்த்து சிரித்த தேவி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா .

இதுக்கெல்லாம் எந்த கணக்கும் இல்ல.

நீங்க வெளிய போயிட்டு வர மாதிரி இருந்தா  போயிட்டு வாங்க என்றார்.

அவர்கள் கையில் இருக்கும் பையை உதயா வாங்கி கொண்டு தேவியுடன் உட்கார்ந்து கொள்ள .

தேவி உதயாவை அழைத்து கொன்று  வீட்டிற்கு சென்று விட்டார்.

நந்தாவின் வண்டியில் ஏறிய தியா எங்கே போறோம் என்று கேட்டாள் .

எங்கேயோ போறோம்.

” ஏன் ?என்கூட வர கசக்குதா மேடத்துக்கு “என்றான்.

அவனைப் பார்த்து சிரித்து விட்டு நன்றாக பின்னாடி உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக அவனைப் பார்த்துக் கொண்டே வர .

“என்னடி” என்றான்.

ஒன்றுமில்லை என்றாள்.

“மேடம் சைட் அடிச்ச வரைக்கும் போதும் “என்றவுடன் ..சிரித்துக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“நான் சைட் அடிக்கிற அளவுக்கு தெரியுதா?” சார்க்கு என்று கேட்டாள்.

ஒரு சில நொடி வண்டியை நிறுத்தி அவளை திரும்பிப் பார்த்தவன் .

“மேடம் என்னை லவ் பண்றீங்க என்று தெரிந்து கொள்ளும்  அறிவு இருக்கும் போது, சைட் அடிக்கிறியா இல்லையா ? என்று கூட தெரியாத அளவுக்கு இருக்கேனா டி”.

உன் வயச தாண்டி  தான் டி நானும் வந்து இருக்கேன் . “உன்னை போல  நிறைய பொண்ணா கடந்து தான் வந்து இருக்கேன் ” என்றான்.

அவன் இடுப்பில் கிள்ளியவள். “ஓ நிறைய பொண்ண பாத்திருக்கீங்களோ? “என்றாள்.

“அடியே உன்ன வச்சுட்டு “என்று அவளை திரும்பி பார்க்க .

அவள் சிரித்த முகத்துடன்  வந்தவுடன் நந்தாவும் சிரித்து விட்டான்.

  அவளைப் பார்த்து முறைத்துவிட்டு அவளது தலையில் கொட்டினான்.

வண்டியை எடுத்துக் கொண்டு அவள் கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டு பல கதைகள் பேசிக்கொண்டே பீச்சில் கொண்டு வந்து நிறுத்தினான் .

“இங்கு எதுக்கு “என்றாள் .

“இங்கு எதுக்குனா இது என்னடி கேள்வி பீச்சுக்கு எதுக்கு வருவாங்க “என்றான்.

வேற எங்கயாச்சும் போய் இருக்கலாம் இல்ல என்றாள்.

வேற எங்க மேடம் போகணும் வயிறு முட்ட சாப்டாச்சு இப்ப வேற கிளம்பும்போது டீ குடிச்சிட்டு வந்த.

மேடமுக்கு இன்னும் வேற என்ன வேணும் இந்த நேரத்துல என்றான்.

இல்ல வேற எங்க போகணும்னு ஆசை என்றான்.

ஒன்றுமில்லை என்று விட்டு “அவன் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டு அவனுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்து ஓர் இடத்தில் உட்கார்ந்தார்கள் “.

17 நாட்களும் தன் வீட்டில் நடந்ததை சுருக்கமாக நந்தாவுடன் சொல்லிக் கொண்டிருக்க.

அப்பொழுது பே என்று தியாவின் தோழிகள் இருவர் வந்து நிற்க .

தியாவை பயமுறுத்தலாம் என்று வந்தவர்கள் தான் அதிர்ச்சியாகி நின்றார்கள் .

தியா உடன் இருக்கும் நந்தாவை பார்த்து .

முதலில் இருவரையும் பார்த்து சிரித்தாள் .பிறகு நந்தா அருகில் இருப்பதை பார்த்துவிட்டு அவர்களின் முகத்தையும் பார்த்துவிட்டு  வெளிறிய முகத்துடன் நின்று இருந்தாள்.

தியா  கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு காலேஜ் லீவு போட்ட.

இப்ப  இங்க என்று விட்டு தியாவின் கையை பார்த்த அவளுடைய தோழி தனா கேட்க.

வேகமாக தியாவின் தோளில் கையை போட்ட நந்தா நீங்க எங்க ரெண்டு பேத்தையும் என்ன நினைச்சுட்டு இருக்கன்னு தெரியல தனலட்சுமி .

“நாங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் “.

“தியா என்னோட பொண்டாட்டி “என்றான்.

அப்பொழுதும் தனா என்கிற தனலட்சுமி நம்பாத பார்வையுடன் தியாவை  பார்த்துக் கொண்டு இருக்க .

“முதல்முறையாக தியாவின் ஆடையில் கையை விட்டு அவன் கட்டிய தாலியை வெளியே எடுத்துப் போட்டான் “.

இப்போ உனக்கு எங்க மேல நம்பிக்கை இருக்கும் என்று நினைக்கிறேன் .

“எங்களுக்கு கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆகுது” .

உன் பிரண்டு உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லாம  இல்லை.

மறைக்கணுன்றதுக்காகவோ சொல்லாமல் இல்ல.

நான்தான் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் .

நான் ப்ரொபசர் என்ற ஒரே ரீசனுக்காக மட்டும் தான்.

மத்த ஸ்டுடென்ட்ஸ்க்கு இந்த மேரேஜ் பேட் ஒப்பினேனா இருந்திரக்கூடாது என்பதற்காக மட்டும் தான்.

அடுத்தவங்களுக்கு முன்னாடி தப்பான உதாரணமா நானும் சரி ,அவளும் சரி நிக்க கூடாது .

அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் வேற எந்த ரீசனும் கிடையாது.

நான் சொன்னதால தான் அவ உன் கிட்ட சொல்லல .

நீ நான் அவளோட பெஸ்ட் பிரண்டு தானே என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லன்னு கூட யோசிக்கலாம் .

எந்த ஒரு சூழ்நிலையில் இந்த விஷயம் வெளியே வந்தாலும் தப்பா தான் போயிடும் .

ஆனா இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க உங்க பிரண்ட்ஸ் சர்க்கிள் ல கூட சொல்லிக்கலாம் .

காலேஜ்ல சொன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று தியா கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு பேசிட்டு இருங்க  வந்துடறேன் என்று விட்டு சென்றான்.

மூன்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்தான். நந்தா வந்து கொண்டிருக்கும் போது தியா  எப்படி கல்யாணம் ஆச்சு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல .

“காலேஜ் வரும்போதே உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?”அதனாலதான் அவர் மனசுல ஏதோ ஒரு பொண்ணு இருக்கு .

அதுக்காக தான் பாட்டு பாடுறாரான்னு  கேட்டியா என்றவுடன் அவ்வளவு நேரம் தன் தோழியிடம் மறைத்து விட்டோமே என்று குற்ற உணர்வில் இருந்த  தியா சிரித்துவிட்டு.

இப்போ தான சொன்னாரு நாலு மாசத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆச்சுன்னு .

“அப்போ காலேஜ் வந்து தான் சாரை கரெக்ட் பண்ணிட்டியா டி “.

“அவரும்  லவ் பண்றாரா “என்று கேட்க நினைக்கும் வேளையில் நந்தா மூன்று ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு வந்து நின்றான்.

தனா உடன் வந்த தோழி அதிர்ச்சியில் இருக்க .

நந்தா அந்த பொண்ணு முன்னாடி கையை சுடக்கிட்டவன் “நீ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரலையாமா ? “என்றான்.

“சார் அது “என்று திக்கித் திணற .

ஒன்னும் இல்ல மா என்று விட்டு ஐஸ்கிரீம் ஒன்று அந்த பெண்ணின் கையிலும் கொடுக்க.

அவள் அமைதியாக வாங்கிக் கொண்டாள் .

சிறிது நேரம் இருவரிடமும் பேசிக்கொண்டு இருந்தவன் .

சரி நேரம்  ஆகுது  “உங்க வீட்ல தேடுவாங்க இல்லையா ? வீட்டுக்கு கிளம்புங்க” என்றான்.

அவனும் தியாவை பார்த்தான் .

இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப .

“உதயாவுக்கு என்ன பதில் சொல்லலாம்னு இருக்க தனா “என்று கேட்டான்.

இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிய தனலட்சுமி அதிர்ச்சியாகி நந்தாவை திரும்பி பார்க்க .

தியாவுமே அதிர்ச்சியாக தான் நாந்தாவை  பார்த்தாள் .

ஒரு சில நொடி நிதானித்த தனா” அவர் கிட்ட பதில் சொல்ற அளவுக்கு என்கிட்ட எந்த ஒரு விஷயமும் இல்லை” .

“யாராவது எதையாவது   நினைத்து கொண்டாள் .அதற்கு நான் பொறுப்பாக முடியாது சார்” என்று விட்டு கிளம்பி விட்டாள் தனா என்கிற தனலட்சுமி.

சைலன்ட் லீடர்ஸ் படிச்சுட்டு கமெண்ட் அண்ட் ரேட்டிங் குடுங்க நண்பர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *