Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 53

மீண்டும் மலரும் உறவுகள் 53

தனா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு கைகளை பிசைந்து கொண்டிருக்க .

உள்ளே வந்த உதயா கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு சிறிது இடைவெளி விட்டு தனாவின் அருகில் உட்கார்ந்தான் .

அவனது நெஞ்சில் ஒரு சில அடிகளை கொடுத்துவிட்டு அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழ செய்தாள் .

நான் உங்களுக்கு ரெண்டு மூணு டைம் போன் பண்ணி இருந்தேன் தானே.

” ஏன் ?போன் எடுக்கல “என்று கேட்டாள் .

“என்ன பேசணும்னு நினைக்கிற” என்றான். என்ன  பேசணும்னா எனக்கு புரியல என்றாள்.

“புரியலையா ?புரியாத மாதிரி நடிக்கிறியா தானா” என்றான்.

அவனை முறைத்து விட்டு அவனை விட்டு விலகியவள் அவனை நேருக்கு நேராக பார்த்து உண்மையா புரியாம தான் கேட்கிறேன் .

சரி என்று அவளைப் பார்த்து உட்கார்ந்த உதயா கல்யாணத்துக்கு முன்னாடி என் மனசுல இருக்குறத உன்னிடம் வந்து சொன்னேன் .

சரியா ?

தனா அமைதியாக அவன் பேச வருவதை காது கொடுத்து கேட்டாள்.

“இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு பதில் சொல்லி இருக்கியா” என்றான்.

“அதுக்கான நேரத்தை நீங்க எனக்கு கொடுத்தீங்களா ?”.

“உனக்கு அதுக்கான நேரத்தை கொடுக்கவே இல்ல இல்லையா ?”.

சரி விடு என்று விட்டு அமைதியாக அவளைப் பார்த்தான்.

அவனது கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டவள். உண்மையாவே அதுக்கான நேரம் எனக்கு எங்க இருந்துச்சுன்னு சொல்லுங்க.

நீங்க உங்களோட விருப்பத்தை என்கிட்ட சொன்னீங்க .அதுக்கு அப்புறம் எங்க வீட்ல பிரச்சனை நடந்துச்சு .

அதுக்கப்புறம் தான் அண்ணனுக்கு நீங்க என்கிட்ட உங்க விருப்பத்தை சொன்னது தெரியும் என்று
எனக்கு தெரிய வந்துச்சு.

எங்க வீட்ல பிரச்சனை நடந்தது அண்ணன் கிட்ட சொன்னேன்.

அத்தை வந்து எங்க வீட்டுல பேசிட்டு போனாங்க. உடனே ஒரு வாரத்தில் நிச்சயம் மூணு மாசத்துல கல்யாணம் .

இந்த மூணு மாசம் கேப் நமக்காக கொடுத்த நேரம் .

“அந்த நேரத்துல நீங்க ஒரு நாளாச்சு எனக்கு கால் பண்ணீங்களா?”.

நான் கால் பண்ணி இருந்தேன் .அதுவும் என்னோட நம்பரை என்று விட்டு அமைதியாகி விட .

இங்கு உதயாவிற்கு சிரிப்புதான் வந்தது சிரித்து விட்டான்.

அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

உண்மையாகவே தனா பஸ்ட் பஸ்ட் தியா ஓட ஃப்ரெண்ட் டா தான் உனக்கு என்னோட நம்பர் கொடுத்திருந்தா .

அவள உன்னால காண்டாக்ட் பண்ண முடியலனா . என்னோட நம்பருக்கு கூப்பிட சொல்லி கொடுத்திருந்தா .

அப்போ “தியாவோட ஃப்ரெண்ட் தனா” அப்படின்னு தான் சேவ் பண்ணி வச்சிருந்தேன் .

இப்போ வரைக்கும் உன்னோட நேம் அப்படி தான் டி சேவ்ல இருக்கு என்று விட்டு நாக்கை  கடித்துக் கொண்டான் .

அவனை முறைத்துக் கொண்டே நிற்க .

“இப்ப கூட என்னோட பேர மாத்தி சேவ் பண்ண தோணலையா?” என்று கேட்டாள் .

நான் அப்படி எல்லாம் சொல்லல தானா என்று இப்பொழுது அவளது கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு உதயா அப்ப சேவ் பண்ணுது இப்ப வரைக்கும் அப்படியே இருக்கு .

அன்னைக்கு மாமாவே பாத்துட்டு சிரிச்சிட்டாரு .அம்மா கூட சிரிச்சிட்டாங்க .

நீ ஒரு நாள் கால் பண்ண அப்ப .நான் பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்தேன் .

மாமா போன் வருதுடான்னு சொன்னாரு .யாருன்னு எடுத்து பேசு மாமானு சொன்னேன்.

பாத்துட்டு சிரிச்சிட்டாரு. அம்மாகிட்டயும் காமிச்சி இருக்காரு.

அதுக்கு அப்புறம் தான் நான் உன்கிட்ட பேசினேன்.

நீ என்னை நேரில் வர சொன்ன .நேர்ல வந்து நான் உன்கிட்ட என்ன பேசணும்ன்னு நினைச்சேனோ அதை முழுசா பேசி முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன் .

இந்த நிமிஷம் வரைக்கும் .அது உனக்கு உறுத்தலா இருக்கா இல்ல என்னன்னு எனக்கு தெரியல.

தனா அவன்  கையிலே ஒன்றை போட்டாள் .நான் “எதும் தப்பா நினைக்கிறதுக்கு இல்ல சரியா ?”

எனக்கும் என் வீட்ல நிறைய விஷயம் இருக்கு .”அதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரிஞ்சிதா ?.”.

ஆனா ,*அது வேற இது வேற இல்லையா ?”தனா.

நான் ஒத்துக்கறேன் .அது வேற இது வேற தான் .ஆனா ,இதுல அத்தையோட தப்பு எங்கையும் இல்ல.

உங்களோட தப்பு எதுவும் இல்ல .இதுல நான் தப்பா நினைக்கிறதுக்கோ ,இல்ல கருத்து சொல்றதுக்கோ எதுவுமே கிடையாது .

இது அத்தையோட வாழ்க்கை. இந்த நிமிஷம் வரைக்கும் இதில் எந்த முடிவு எடுக்கணும்னாலும் அத்தையோட விருப்பம் .

அதே தான் உங்களோட விருப்பம் உங்களுக்கும் நான் சொல்றேன் .

அதுக்காக உங்கள என்று விட்டு அமைதியாக விட்டாள்.

“இப்போ உனக்கு என்ன புடிச்சிருக்கா ?இல்லையா ?விருப்பப்பட்டு தானே கல்யாணம் பண்ணி இருக்க” என்று  உதயா கேட்டிருந்தான்.

“விருப்பமில்லாம தான் இந்த தாலியை உன் கையில வாங்கிட்டு வந்து உன் முன்னாடி உட்கார்ந்து இருக்கேனா ?”.

அப்புறம் இப்ப என்னதாமா உனக்கு பிரச்சனை.

“உண்மையாவே உங்களுக்கு இந்த மூணு மாசத்துல என்கிட்ட பேசணும் என்று கொஞ்சம் கூட தோணவே  இல்லையா ?”என்றாள் .

அவளது கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு உன்கிட்ட பொய் சொல்ல எனக்கு தோணல தனா.

என்ன மாமாவும் சரி, அம்மாவும் சரி அப்படி வளர்க்கவும்  செய்யல .

“உண்மையாவே இந்த மூணு மாசத்துல உன்கிட்ட பேசணும்னு எனக்கு தோணலை”.

“இந்த மூணு மாசம் எங்க நான் உன்கிட்ட பேசினா இந்த கல்யாணம் வேணாம்னு நீயோ இல்ல , நானோ சொல்லிடுவோமோ என்று ஒரு பயம் உள்ளுக்குள்ள இருந்துச்சு “என்ற உடன் அதிர்ச்சியாகி அவனை பார்த்தாள் .

எனக்கு தெரியும். அந்த நேரம் அந்த சூழ்நிலையில உங்க அப்பா அதாவது மாமா சொன்னாரு என்ற காரணத்துக்காக தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன.

ஆனா அதை தாண்டி நீ எனக்கு போன் பண்ண ரீசன் இந்த கல்யாணத்தை எப்படி ஆச்சு நிறுத்திருங்க என்றதுக்காக தான் பண்ணனு என் உள் மனசு இப்போ வரைக்கும் சொல்லிட்டு இருக்கு .

வேகமாக அவனது நெஞ்சில் அடைக்கலம்  ஆனாள்.

உதயாவுமே அவளது முதுகை வருடி விட்டான். ப்ளீஸ் தனா அழுவாத என்றான்.

உண்மைதான் எனக்கு அப்புறம் தம்பியும் தங்கச்சியும் இருக்காங்க .

அப்பா அந்த மாதிரி இருக்காங்க .நான் படிச்சிட்டு ஒரு வேலைக்கு போயிட்டு அவங்கள பாக்கணும்னு நினைச்சேன் அதான் என்றாள்.

” நானும் உன் கூட சேர்ந்து அவங்களை பார்த்துப்பேன் என்ற  நம்பிக்கை உனக்கு கொஞ்சம் கூட வரலையா ?”

இல்ல ,”அந்த நம்பிக்கையை நான் உனக்கு கொடுக்கலையா ?”.

நான் அப்படி சொல்லல, நீங்களும் நானும் அப்படி பேசல .

உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டதெல்லாம் தியாவோட அண்ணனா அதுவுமே..

  தியாவோட ஹஸ்பண்ட்  நந்தா சார் தான் எப்போ தெரிச்சதோ, அப்பதான் நீங்க நந்தா சாருக்கு அக்கா பையன் அவரோட மச்சானு எனக்கு தெரியும் .

அப்போ தான் தெரிய வந்துச்சு. அப்படித்தான் உங்களுக்கு தியாவுக்கும் உறவுனு நினைச்சேன் .

கொஞ்ச நாள் கழிச்சு தியாவோட அப்பா என்று விட்டு அமைதியாகி விட்டாள் .

அவர் தான் என்னோட …அவரோட ஜீன் ரத்தம்  தான் என்னோட உடம்புல ஓடிட்டு இருக்கு.

அதுக்காக அவருக்கும் எனக்கும் வேற எந்த விதமான உறவும் கிடையாது .

கொஞ்சம் அதை பத்தி பேச வேணாம்  தனா.

ஆனா ,நான் உங்களை,அதை பத்தி பேச  கூப்பிடல.

அதே மாதிரி தான்.

நான் இந்த கல்யாணத்தை வேணாம்னு சொல்றதுக்கான ரீசன் தியாவும் மாமாவும் அவங்க லைஃப்ல அடுத்த கட்டத்தை நோக்கி போகணும் .

அது என்னோட சுயநலம் தான் .நான் இப்பவே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கல.

எனக்கு இன்னும் வயசு இருக்கு தனா . உனக்கும் எனக்கும் பெருசா என்ன வயசு டிஃபரன்ஸ் இருக்குன்னு நினைக்கிற.

அது மட்டும் காரணம் என்று சொல்லிட மாட்டேன் .இன்னும் நிறைய விஷயம் இருந்துச்சு .

மாமாவுக்காக நிறைய செய்யணும் .அம்மாவுக்காக செய்யணும் .

அந்த மாதிரி நிறைய விஷயம் என்றவுடன் சிரித்துக் கொண்டே அண்ணனும் ,தியாவும் இருக்காங்க .

அதுவும் தியாவே  போதும் அத்தையை பார்த்துக்க .

அவ அவ்வளவு சொன்னா இந்த மூணு மாசத்துல அவ நம்ம ரெண்டு பேரும் பேசிக்கனும் என்று டைம் கொடுத்தா .

ஆனா எனக்கு என்னவோ அவதான் இந்த குடும்பத்தை பத்தி ஒவ்வொரு டீடெயிலும் சரி , உங்கள பத்தியும் சரி ஒவ்வொன்னா சொன்னா .

அவ கொடுத்த டைம் நானும் அவளும் பேசுறதுக்கா இல்ல .

“நான் உங்களையும் ,நீங்க என்னையும் புரிந்து கொள்வதற்கும் கொடுத்த டைமானு  எனக்கே டவுட் வந்துருச்சு” என்றவுடன் சிரித்து விட்டான் .

“நேரமாகுது தூங்கலாமா ?”என்றான்.

“நான் தியாவை பத்தி பேசினது உங்களுக்கு புடிக்கலையா? “என்றவுடன் .”அவ என்னுடைய தங்கச்சி”.

ஆரம்பத்துல அவளை நான் தான்  மாமாவுக்காக தான் அவ வேணும்னு நினைச்சேன் .

ஆனா” இப்போ என் இரத்தத்திலும்  தங்கச்சியாவே ஊரி இருக்கா” .

ஆனா அதுக்காக ரெண்டு பேத்துக்கும் ஒரே ரத்தம் என்ற காரணத்துக்காக சொல்லல தனா உனக்கு புரியும் .

எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு .எங்க லாஸ்ட் நிமிஷம் வரைக்கும் இந்த கல்யாணம் வேணாம்னு நீ சொல்லிடுவியோ என்ற ஒரு படபடப்பு பயம் இருந்துச்சு என்றான்.

வேறு எதுவும் பேசாமல் சரி தூங்கலாம் என்று சொல்லிவிட்டு ஒரு சில நொடி தயங்கி நான் எங்க படுக்க என்றாள்.

ஏன்,இங்க ஒரு பெட் தான் இருக்கு .ரெண்டு பேரும் ஒரே பெட்டை  ஷேர் பண்ணிக்கலாம் .

“லைப்பே ஷேர் பண்ணனும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் பெட்டை ஷேர் பண்ண மனசு  வரலையோ.?.”

  வெளியே அம்மா கிட்ட சொன்னது தான் உனக்கு லைஃப்ல எப்ப வாழணும்னு தோணுதோ அதுக்கப்புறம் நம்ம இதை பத்தி மேற்கொண்டு பேசலாம்.

நீ படிச்சிட்டு இருக்க ,நானும் இப்பதான் வேலையில் சேர்ந்து இருக்கேன் .

நமக்கான டைம் இன்னும் ரொம்ப நாள் இருக்கு.

அப்புறம் இன்னொரு விஷயம் இந்த நிமிஷம் வரைக்கும் நீ கேட்கல .

நான் உன்னை  ஏன் தனியா தூங்க சொன்னேன் .அம்மா கூட நான் தூங்குறேன் என்று சொன்னதுக்கு காரணம்..

அவனது வாயில் கையை வைத்தவள் .நீங்க என்ன தனியா விடனும்னு யோசிக்கல .

தியா சொன்ன மாதிரி வேற எந்த அர்த்தமும் அதில் இல்லை என்று எனக்கு தெரியும் .

தூங்கலாம் என்று விட்டு படுத்துக் கொண்டாள்.

உதயாவுமே லைட் ஆப் பண்ணிட்டு படுத்து விட்டான்.

மறுநாள் நன்றாக விடிந்தது .

மலர் காலையிலேயே மறு வீட்டிற்கு இருவரையும் அழைத்து செல்கிறேன் என்று வந்து நின்றார்.

எங்கள் வீட்டிற்கு இருவரையும் மறு வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றார்.

இல்லை வேண்டாம் மலரு .தனா வீட்டில் இருந்து வருவாங்கனு தியா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தனாவின் அப்பா, தம்பி ,தங்கை மூவரும் வந்திருக்க .

சித்தி பின்னாடியே முனகி கொண்டே வந்தார்.

அவர்களை பார்த்து  சிரித்து தியா உதயாவையும் ,தனாவையும் கிளம்ப சொல்ல .

தனா அமைதியாக தனது சித்தியை பார்த்துக் கொண்டு நின்றாள்.

“அப்புறம் என்னடி மகாராணிக்கு அதான் உன்னோட அண்ணன் பொண்டாட்டியே சொல்லிட்டா இல்ல கிளம்பி வா டி “.

உங்களை மறு வீட்டுக்கு அழைச்சிட்டு போக தான் வந்திருக்கேன் என்று வாயைக் கோணித்துக் காண்பித்து பிடித்தம் இல்லாமல் சொல்ல .

தனா தனது சித்தியை முறைத்துக் கொண்டு நின்றவள்.

“அப்படி விருப்பமே இல்லாமல் நீங்க எங்களை அழைத்துக்கொண்டு போக வேண்டாம்”.

எனக்கு  இதுவரைக்கும் மரியாதை தரணும் என்று நான் நினைக்கல. எதிர்பார்க்கல.

ஆனால், அது கூட பரவால்ல .”இந்த குடும்பத்துக்கும் சரி ,என்னோட புருஷனுக்கும் சரி மரியாதை தரலைன்னா” .

உங்க வீட்டு வாசப்படியை இனி நான்  மிதிக்க கூட மாட்டேன் என்று சொல்லிவிட்டு தனா வேகமாக அவளுடைய ரூமுக்கு சென்று விட்டாள் .

அனைவரும் அதிர்ச்சியாக போகும் தனாவையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *