Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 55

மீண்டும் மலரும் உறவுகள் 55

தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

உன்ன நான் புரிஞ்சிக்கணும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும்
தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிருத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா

காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை

நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும்
தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
(தோழா..)
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

உன்ன நான் புரிஞ்சிக்கணும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும்
தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுது சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதல் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்தப்பின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதல்
இல்லாமல் பழகிக்கலாம்
ஆ.. இது கரெக்ட்

அதை ஆயுள் முழுக்க
கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்.

என்று பாடி முடிக்க.

அந்த அரங்கமே ஒரு நிமிடம் அமைதியாக இருந்தது.

ஒரு சில நொடி அமைதிக்கு பின் தியா தான்   முதலில் கைத்தட்ட தொடங்கி இருந்தாள் .

அனைவரும் கைத்தட்டல் ஓசை வரும் பக்கம் திரும்பி பார்க்க.

அங்கு தியா நின்று கொண்டு இருந்தாள். தனாவுமே தியாவை தான்  பார்த்து கொண்டு நின்றாள்.

அதன் பிறகு ஒவ்வொரு மாணவர்களாக கைதட்ட எழுந்து நின்ற பிரின்சிபல் .

இதுவரை நந்தா பாடிய பாட்டில்  இந்து பாட்டு  தனி ரகம்  என்று  தான்  சொல்ல வேண்டும் 

ஆனால், “ஏன் இந்த பாடலுக்கு மாணவர்களிடம் இருந்து கைதட்டல் வரவில்லை “என்று எனக்கு புரியவில்லை என்றார்.

இ”வ்வளவு நாளா டீன் ஏஜ் பசங்களுக்கு ஏத்த மாதிரி நம்ம நந்தா சார் பாடி பழகிட்டாரு “சார் .

இப்போ புதுசா நட்பை பத்தி  பாடின உடனே எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆயிடுச்சு .

“பெருசா எனக்கு வேற எதுவும்  டிஃப்ரண்ஸா தெரியல” சார்.

இங்க இருக்க எல்லா ஸ்டுடென்ட்ஸ் மே “அவருடைய குரலுக்கு  அடிமையா ?இல்ல,அவர் பாடுற பாட்டை பொறுத்து தான் அவரை பாட கூப்பிடுகிறார்களா? “அப்போ இவர்கள் “அவர் பாடும் பாட்டுக்கு தான் அடிமையா?” .

என்னை போல சிலர் அவர் என்ன பாட்டு பாடுறாரு அப்படின்னு   யோசிச்சதில்லை . “அவருடைய குரலுக்கு தான் அடிமை “என்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் அவர் பாடுன பாட்டுக்கும் இந்த பாட்டுக்கும் இருக்க டிஃபரென்ஸ் ,வித்தியாசத்தால தான் ஒரு நிமிடம் ஷாக் ஆகி விட்டார்கள் என்றாள்.

அப்படின்னு தான் நான் நினைக்கிறேன் என்று தியா கீழே இருந்து வேகமாக கூச்சலிட .

ஒரு சில மாணவர்கள் தியாவை முறைத்துக் கொண்டு இருந்தார்கள் .அப்படி எல்லாம் இல்லை என்று கத்தினார்கள்.

சைலன்ட் ப்ளீஸ் என்ற பிரின்ஸ்பல் .சந்தியா சொன்ன மாதிரி அது உண்மையும் கூட தான்.

“காதல் சாங் பாடிட்டு இப்போ நட்பை பற்றி உங்க நந்தா சார்   பாட்டு பாடின உடனே உங்களால அதை ஏத்துக்க  முடியவில்லையோ என்னவோ” என்று கேட்க.

அப்படி எல்லாம் இல்ல சார் என்று எழுந்து நின்று ஒரு சில மாணவர்கள் கூச்சல் இட்டார்கள்.

ஆனால்,”எப்பொழுதும் போல உங்களிடம் இருந்து கைதட்டல் ,கூச்சல் ,ஆரவாரம் இப்போது பெருசாக  இல்லையே” என்றார் .

ஒவ்வொரு மாணவர்களாக விசில் அடிக்கவும் ,கை தட்டவும் செய்தார்கள் .

நந்தா  சிரித்து முகத்துடன் கீழே இறங்கினான் .பிறகு அப்படியே அன்றைய நாள் ஓடியது .

தனா தான் தியாவின்  முதுகில் ஒன்று இரண்டு அடிகளை பரிசாக வழங்கிவிட்டு.

எதுக்கு டி கைதட்டுவது மட்டும் இல்லாமல் பிரின்சிபல் கொஸ்டின் பண்ணும்போது ஆன்சர் பண்ற.

அவர் என்ன உன்னையா கொஸ்டின் கேட்டாரு நீ  ஆன்சர் பண்ண என்றாள்.

இல்லா தான் இருந்தாலும்,என்ன இருந்தாலும்

சந்தியானு உன்னோட பேரை மென்ஷன் பண்ணியா கொஸ்டின் கேட்டாரு .

இல்லையே நானும் ஒரு ஸ்டுடென்ட் தான .எனக்கு ஸ்டாஃபா அவர் பாடின  பாட்டு பிடிச்சிருந்துச்சு கை தட்டினேன் என்றாள்.

“எது” என்று கேட்க.

அவள் அருகில் மற்ற மாணவர்களும் சூழ்ந்திருந்தார்கள். எனக்கு பிடிச்சு இருந்துச்சு கை தட்டினேன் .

“உங்களுக்கு புடிச்சா நீங்களும் கை தட்டுங்கள் இல்லையா ?”அமைதியா கடந்து போங்க “என்றாள்.

“வீட்டுக்கு போகலாம் வரியா ?”இல்ல எப்படி இங்கையே  இருக்க ஐடியாவா “என்றவுடன் தனா அவளை முறைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

தேவி தியாவை விட ஆவலாக இருந்தார். தனா ,தியா இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் என்ன பாட்டு டி இன்னைக்கு உன் புருஷன் பாடினான் என்றார்.

தியாவும்  சிரித்தை முகமாக அவன் பாடிய பாடலை மட்டும் சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று விட்டாள் .

தேவி தியாவை பார்த்து சிரித்துவிட்டு தனாவை பார்க்க .

தனா தனது மாமியாரை முறைத்துக் கொண்டு நின்றாள்.

உனக்கு என்னடி பிரச்சனை என்று கேட்க .

காலேஜ்ல இருக்க எல்லா ஸ்டூடண்ட்ஸ் அமைதியா இருக்காங்க அத்தை.

உங்க பொண்ணு மட்டும் முந்திக்கொண்டு கைதட்ட செய்ற .அதோட அமைதியா இல்ல பிரின்ஸ்பல் பொதுவா எல்லா ஸ்டுடென்ட்ஸ் கிட்டையும் கொஸ்டின் கேட்டார் .

இவளா ஆன்சர் பண்றா. இவள மென்ஷன் பண்ணி ஒன்னும் கொஸ்டின் கேட்கல அவரு.

“இருக்கட்டும் அதுக்கு என்ன டி இப்போ “என்றார்.

அது சரி “ஜாடி கேத்த மூடி “என்று விட்டு தனாவுமே அவளுடைய ரூமுக்கு சென்று வேறொரு உடை மாற்றிக் கொண்டு வந்தாள் .

தேவி இருவருக்கும் டீ கொடுக்க வாங்கி குடித்து விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

உதயா வந்தவன் அம்மா டீ என்று கேட்க .

ஏற்கனவே தேவி டீ போட்டு பிளாஸ்க்கில் வைத்திருக்க .

அதை கிளாசில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து  தனா கொடுக்க எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான் .

என்ன பாட்டு தியா மாமா பாடினாரு   என்று கேட்டான் உதயா.

“உங்க மாமா என்று அவள் வாய் திறக்கும் வேளையில் நந்தா விசில் அடித்துக் கொண்டே வீட்டிற்குள் வர” .

“என்ன மாமா இன்னைக்கு செம்ம குஷியா இருக்க “என்றான்.

வரும்போதே விசில் அடிச்சிட்டே வர என்றான்.

உதயாவை பார்த்த நந்தா என்ன டா இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட என்று கேட்டான்

  “தியாவை பார்த்து கண்ணடித்த உதயா என்ன மாமா வேற ஒரு நல்லா பிகரா எதும் கரெக்ட் பண்ணிட்ட போல செம குஷியா வர “என்றான்.

ஆமாண்டா மச்சான்.” உன் தங்கச்சி இருந்து என்ன பண்றது ,ஃபர்ஸ்ட் இயர்ல செம பிகர் “என்றான்.

தியா முறைத்துக் கொண்டு நந்தாவை பார்க்க .

நந்தா விசில் அடித்துக் கொண்டே அக்கா இஞ்சி தட்டி போட்டு ஸ்ட்ராங்கா ஒரு டீ என்று  சொல்லிட்டு அவனுடைய ரூமுக்கு சென்று விட்டான் .

அவன் சென்றவுடன் மற்ற மூவரும் சிரிக்க. தியாவிற்கு தான் வயிறு பற்றி எரிந்து கொண்டு இருந்தது .

“தியாவை பார்த்த உதயா ஃபையர் ஸ்டேஷனுக்கு போன் பண்ணனும் போலயே “என்றான்.

“ஆமா போன் பண்ணு ஆனா , ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு” என்று விட்டு வேகமாக ரூமுக்குள் சென்றாள்.

மற்ற மூவரும் போகும் தியாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் சட்டையை கழட்டி கொண்டு இருக்க.

வேகமாக அவனது சட்டையை பிடித்து தன் பக்கம் திருப்பி .

“உனக்கு வரவர கொழுப்பு கூடி போச்சு “என்றாள்.

“நான் நல்லா இல்ல .உனக்கு ஃபர்ஸ்ட் இயர்ல வேற ஒரு நல்ல பிகரா கிடைச்சிருக்கா ” என்றாள். மூக்கு நுனி சிவக்க.

ஒரு நிமிடம் அவளது கோபத்தை கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவன்.

ஆமாம்” அதுக்கு என்ன டி “இப்போ”  அது என்னோட பர்சனல் என்றான்.

அவன் அவ்வாறு சொன்னவுடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“தியா போன வேகத்திலையே திரும்பி வர ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ண தேவையில்லையா ? “தியா  என்று  உதயா  சிரித்துக்கொண்டே கேட்க .

அவனை முறைத்து  விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.

நந்தா வந்தவுடன் தேவி  டீ கொடுக்க .

“தனா தான் அண்ணா நீங்க ரெண்டு வருஷமா பாடின பாட்டுக்கும், இப்ப பாடின பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்றாள்.

“ஆமாம்,தனா  மெச்சூரிட்டி வந்துடுச்சு வயசாகிட்டே போயிட்டு இருக்கு இல்லையா? முடி கூட நரைச்சிடுச்சு பாரு” என்று அவன் ஒரு முடியை எடுத்துக் காட்ட.

” தியா  பக்கென்று சிரித்து விட்டாள். உதயாவும்  சிரித்து விட்டான்” .

“இருவரும் ஹை ஃபை அடித்துக் கொண்டார்கள்” .

தேவி தனது தம்பி முறைத்துக் கொண்டு நின்றார் .

அண்ணா என்று தனா சிரிப்புடனே கேட்க.

ஏதோ அந்த பாட்டு பாட தோணுச்சு அவ்வளவுதான்.

“அந்த நிமிஷம் என்ன தோணுதோ ?அதை தான் பாடுவேன்” .

இந்த பாட்டு பாடணும்னு நினைச்சுலாம் போய் ஸ்டேஜ்ல இதுவரைக்கும் நின்னது இல்ல தனா என்று  விட்டு அமைதியாகி விட்டான் .

இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் எப்படி போச்சு கிளாஸ் டீச்சர் யாரு என்று அவர்கள்  பற்றி விசாரிக்க.

தனா சொல்லிக் கொண்டிருந்தாள். அப்படியே இரவு பொழுதும் வந்தது.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அவர்கள் ரூம் நோக்கி சென்று விட்டார்கள் .

ரூமுக்கு சென்றவுடன் தியா ஒரு பக்கமா திரும்பி படுத்து இருக்க.

“அவளை  தன் பக்கம் திருப்பி என்னடி அதுக்குள்ள தூங்கிட்டியா “என்றான்.

அவளது கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

“தியா என்னடி” என்றான்.  அவள் அருகில் நெருங்கி படுத்து” .

அவள் ஒன்றும் இல்லை என்று மண்டையை மட்டும் ஆட்ட.

“நான் என்ன டி தப்பா பேசினேன் எனக்கு புரியல “.

இல்ல ,”காலேஜ்ல ஏதாவது தப்பா நடந்துக்கிட்டனா ,சாதாரணமா தான் டி உன்ன கிண்டல் பண்றேன் “என்றான்.

அவள் ஒன்னும் இல்ல என்று விட்டு எழுந்து உட்கார .

நந்தாவும் வேகமாக எழுந்து உட்கார்ந்து “சொல்லவே மாட்டியா டி.”

இப்போ என்ன டி உன் பிரச்சனை.”சொன்ன தான டி எனக்கு புரியும் “என்றான். அவன் குரல் வருத்தத்துடன் தான் இருந்தது.

ஒன்னும் இல்ல என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

“அத என்ன பாத்து சொல்லுடி” என்றான்.

” என்ன பாத்து சொல்லணும்?” என்று கேட்க .

அவளது கண்ணை ஒரு சில நொடி உற்றுப் பார்த்தவன். எதுவும் பேசாமல் அவளை விட்டு விலகி படுத்துக் கொண்டான்.

அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

” வாத்தி “என்று இரண்டு முறை அழைத்தாள் .அவனிடம் இருந்து ஒரு வார்த்தையும் இல்லை என்றவுடன் ,”மாமா என்று அவனை பின்  பக்கம் இருந்து கட்டி அணைத்தாள்”.

அவளது கையை எடுத்து விட்டவன். “நான் யாரு டி உனக்கு” என்று கேட்டான் .

தியாவிற்கு ஒரு மாதிரியாகி விட்டது . இப்பொழுது அவள் எழுந்து  உட்க்கார்ந்து மாமா என்று அவனது சட்டியை இழுத்து பிடித்தாள்.

நந்தாவுமே எழுந்து  திரும்பவும் கேட்கிறேன் “நான் யாரு உனக்கு “என்றான்.

இது என்ன டா கேள்வி “என் புருஷன் என்னோட உலகமே நீ தான் ” என்றாள்.

அப்புறம் என்ன மயிருக்கு அத்தனை முறை கேட்டுட்டு இருக்கேன்.  “வேற யார் கிட்டயோ பேசுற மாதிரி, கேட்க கேட்க ஒரு வார்த்தை கூட பதில் சொல்லமா செஞ்சு வச்ச மன்னார் சாமி மாதிரி உட்கார்ந்து இருக்க”.

” எனக்கு பதில் கூட உன்னால சொல்ல முடியாது இல்ல ,அப்ப அவ்வளவு தான் இல்லையா? “.

“உனக்கும் எனக்கும் நடுவுல எதுவுமே இல்லை அப்படித்தானே “என்றான்.

தியாவிற்கு தன்னை மீறி அழுகை வந்து விட. அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழ செய்தாள் .

அவளை தன் நெஞ்சில் இருந்து வேகமாக தள்ளி விட்டான் .

அமைதியா படுத்து தூங்கிடு இதுக்கு மேல என் வாய கிளர்னு வச்சுக்கோ உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் என்று விட்டு படுத்து விட்டான்.

தியா அவனையே பார்த்துக்  கொண்டு இருந்தாள்.

ஒரு சொட்டு தூக்கும் கூட இருவருக்குமே இல்லை .ஆனால் ,தியா வாயை திறந்து என்ன காரணம் என்று சொல்லவும் இல்லை.

நந்தாவும் அமைதியாக அவளாக சொல்லுவாள் என்று அமைதி காத்தான்.

காலை இருவரது கண்களும் சிவந்து வீங்கி போய் இருக்க .

அவர்களை பார்த்து தேவியும் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அமைதியாக விட்டுவிட்டார் .

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் காலேஜ் கிளம்பி சென்று இருக்கு .

காலை 11:00 மணி போல் தேவிக்கு போன் வந்தது.

ஒரு சில நொடி போனை உற்றுப் பார்த்தவர் “ஹலோ “என்று சொல்ல .

தியாவோட அம்மாவா என்று அந்த பக்கம் கேட்க.

ஆமாம் , சொல்லுங்க என்றார்.

உங்க பொண்ணுக்கு கொஞ்சம் ஹை ஃபீவர் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்.

கூட அவளோடு ஃப்ரெண்ட் இருக்காங்க. கொஞ்சம் வந்தீங்கன்னா நல்லா இருக்கும் என்று சொன்னவுடன் தேவி எதுவும் பேசாமல் ஹாஸ்பிடல் நோக்கி வேகமாக சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *