Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 56

மீண்டும் மலரும் உறவுகள் 56

தேவி ஹாஸ்பிடலுக்கு சென்று ரிசப்ஷனில் தியாவின்  பெயரை கேட்டு கொண்டு அவள் இருந்த அறைக்கு வர.

தியா லேசான மயக்கத்துடன் பெட்டில் படுத்து இருந்தாள்.

அவளது அருகில் சென்று தேவி அவள் கையில் அழுத்தம் கொடுக்க .

மயக்கத்தின் வீரியத்தில் இருந்த தியா லேசாக கண்ணை திறந்து பார்த்தாள்.

சுற்றி தனாவும் ,இன்னொரு ஆசிரியரும் இருக்க .

ரொம்ப தேங்க்ஸ் மேம் நான் தான் அவளோட பெரியம்மா நான் பாத்துக்குறேன்  என்றார் தேவி .

ஓகே மேம் பாத்துக்கோங்க என்று விட்டு அந்த ப்ரொபஸரும் தனா வாம்மா போலாம் என்று கூப்பிட.

தேவி தான்  நீங்க மேம்  என்று கேட்க.

நான் இவங்க கிளாஸ் டீச்சர் தான் என்றார்.

தேங்க்யூ மேம் அப்புறம் . தனா என்னோட மருமகள் தான் அவளும் இருக்கட்டும் .

நான் லீவு ரெண்டு பேத்துக்கும் இன்பார்ம் பண்ணிறேன் என்றார்.

ஓகே மேம் இன்பார்ம் பண்ணிடுங்க என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் ஸ்டாப் கிளம்பி விட.

தனா அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றாள் .

அவளுக்கு ஜுரம் என்று தெரிந்தும் வேகமாக அடித்து இருந்தார் தேவி .

அத்தை என்று தனா கத்த வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும் படியாக சொல்லிவிட்டு தியாவை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றார்.

பெரியம்மா என்றாள்.

அமைதியாக இருந்துக்கோ என்று விட்டு ஒரு மூலையில் சென்று தேவி அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து மதியம் 12.30 தொட்டிருக்க .

நந்தாவிற்கு தேவி போன் செய்தார் .

சொல்லு க்கா என்ன இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க என்று நந்தா கேட்க .

தாங்கள் இருக்கும் ஹாஸ்பிடல் நேம் சொல்லி விட்டு இன்னும் 10 நிமிடத்தில் இங்கு இருக்க வேண்டும் என்று வைத்துவிட .

அக்கா யாருக்கு என்னாச்சு என்று அக்கா அக்கா என்று நந்தா  இங்கு கத்தி கொண்டிருக்க போன் கட் ஆகி இருந்தது.

மேற்கொண்டு தேவிக்கு போன் பண்ணி விசாரிக்க  தோன்றாமல் தனக்கு ஆப் டே லீவு சொல்லிக்கொண்டு நந்தா அடுத்த கால் மணி நேரத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தான்.

அங்க வந்தவுடன் தியா பெட்டில் படுத்திருப்பதை பார்த்தவுடன் நந்தாவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது .

எதுவும் பேசாமல் அவளது அருகில் செல்ல நாகரிகம் கருதி தேவியும் , தனாவும் வெளியில் சென்று விட்டார்கள் .

“என்ன டி ஆச்சு “என்று அவளது கையை பிடிக்க .

அவனது கையில் அழுத்தம் கொடுத்தாளே தவிர, வேறு எதுவும் பேசவில்லை” .

நந்தாவும் ஒரு சில நொடி அவளையயே பார்த்துக் கொண்டிருந்தவன். எதுவும் பேசாமல் வெளியில் வர .

“என்ன டா உங்க ரெண்டு பேத்துக்குள்ள பிரச்சனை  “என்றார் .

நந்தா அமைதியாக நின்று கொண்டு இருந்தான் .

உதயாவுமே வந்து இருந்தான் .தனாதான் போன் செய்திருந்தாள்.

“என்ன மாமா ஆச்சு?” என்று தனது மாமாவின் தோளில் கையை வைக்க.

தனது மச்சானை கட்டிக்கொண்டு அழுதான் .வேறு எதுவும் பேசவில்லை.

நான்கு மணி போல் ஐந்து பேரும் வீட்டிற்கு சென்றார்கள் .

வீட்டிற்கு சென்றவுடன் ஜூஸ் போட்டு எடுத்துக் கொண்டு வந்து தனா கொடுக்க அமைதியாக வாங்கி குடித்தாள்.

உதயா தான் தியாவின் கையை பிடித்துக் கொண்டு “என்ன ஆச்சு” என்றான் .

“ஒன்னும் இல்ல அண்ணா” என்றாள்.

அவளது கண்ணை உற்று பார்த்தான்.”நீ  நினைக்கிறதை வெளிப்படையா பேசினால் மட்டும்தான் நான் எதுவும் சொல்ல முடியும்” என்றான்.

“உனக்கு விருப்பம் இருந்தா ரெண்டு நாள் உங்க வீட்டுக்கு போய்ட்டு வா “என்றவுடன் தேவியும் சரி ,நந்தாவும் சரி அதிர்ச்சியாகி உதயாவை பார்த்தார்கள் .

தியா அண்ணா வீட்டுக்கு போயிட்டு வரேன் நா அங்க இருந்து காலேஜ் போயிக்கிறேன்.

நான் அப்பாவை கூட கொண்டு வந்து விட சொல்லிக்கிறேன். என்னை அங்க  கொண்டு போய் விடு என்றாள்.

நந்தா எதுவும் பேசாமல் வேகமாக அவனுடைய ரூமுக்கு சென்று விட்டான்.

தேவியுமே என்ன பேசுவது என்று புரியாமல் சமையலறைக்கு சென்று விட்டார்.

“தனா தான் என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க “. அவதான் ஏதோ என்றவுடன்,

உதயா அவளை எதுவும் பேச வேண்டாம் என்று கை காண்பிக்க .

தனா எதுவும் பேசாமல் அவளுடைய ரூமுக்கு சென்று விட்டாள் .

அடுத்த அரை மணி நேரத்தில் தியா வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டு உதயா உடன் தன் பிறந்த வீட்டை நோக்கி சென்று இருந்தாள்.

இங்கு  நந்தாவிற்கு தான் பித்து பிடித்தது போன்று இருந்தது.

“நேற்று எதற்காகவோ அழுது கொண்டிருந்தாள். என்ன? என்று கேட்டதற்கு இந்த நிமிடம் வரை பதில் சொல்லவில்லை “.

ஹாஸ்பிடலில் இருந்தாள் ,அப்பொழுதும் தன்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை.

இப்பொழுது என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ,அவள் இஷ்டத்திற்கு கிளம்பி செல்கிறாள் .

“அப்பொழுது என்னை பார்த்தாள்  அவளுக்கு  எப்படி தெரிகிறது”.

“என் மீது இவளுக்கு எந்த உணர்வும் இல்லையா?”

” நான் தான் லூசு போல என்று எதை எதையோ யோசித்தான் “.

கடைசியில்  கையை ஓங்கி சுவற்றில் குத்தி விட்டு அமைதியாக உட்க்கார்ந்து விட்டான் .

இரவு 9 மணி போல்  கதவை தட்டிய தேவி வந்து சாப்பிடு டா என்று சொல்ல.

எதுவும் பேசாமல் வந்து சாப்பிட உட்கார .

“மாமா என்று  உதயா கூப்பிட”.

நந்தா திரும்பிப்  அமைதியாக அவனை பார்க்க .

இல்ல மாமா அது என்று ஏதோ பேச வாய் எடுத்தான்.

போதும் என்பது போல் அவனை கை காமித்து விட்டு.

அமைதியா சாப்பிடு டா வேறு எதுவும்  பேச வேண்டாம் என்று விட்டு சாப்பிட்டு விட்டு எதுவும் பேசாமல்  ரூமுக்கு சென்று விட்டான் நந்தா.

தனா உதயாவை முறைத்து விட்டு உங்களை யாரும் கொண்டு போய் அவளை வீட்டில் விட்டு வர சொன்னது .

அவள வந்து உங்க கிட்ட கேட்டு இருந்தாலும்  பரவாயில்லை.

ஆனா நீங்களா ,அவளை உங்க வீட்டில இருந்திட்டு வரியானு கேட்டு அவளை போய் விட்டுடு  வரீங்க என்றாள்.

“போகட்டும் அவ போய் அங்க இருந்துட்டு வந்தா தான் சரியா வரும்” என்றான்.

தனா அவனை முறைத்து விட்டு ரூமுக்குச் சென்றுவிட்டாள் .

தேவி எதுவும் பேசாமல் அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு படுக்க சென்றார்.

அப்படியே இரண்டு நாட்கள் சென்று இருந்தது. தியா கண்ணன் உடனே காலேஜுக்கு இரண்டு நாள் வந்து சென்றாள்.

உதயா அந்த நேரத்தில் தியாவை அழைத்துக் கொண்டு சென்றவுடன் மலர் என்ன என்று கேட்க .

அவ இரண்டு நாள் இங்கே இருக்கட்டும் சித்தி என்று மட்டும் சொல்லிவிட்டு.

“அவளாக வீட்டிற்கு வரேன் என்று சொல்லும் வரை அவளிடம் நீங்கள் எதுவும் பேச வேண்டாம் “.

“அவளுக்கு தோணும் போது வீட்டுக்கு வருவா” என்று மட்டும் மலரிடம் தனியாக அழைத்து சொல்லி விட்டு வந்தான்.

மலருமே தியாவின் வயதை கடந்து வந்ததால் ,எதுவும் பேசாமல் சரி என்று அமைதியாகிவிட்டார்.

கண்ணன் தன் மகள் இங்கு வந்து இருப்பது தனக்கு சந்தோஷத்தை அளித்தாலும் ,அவள் வந்திருக்கும் விஷயம் புரியாமல் ,அதுவும் அவருக்கு உறுத்தலாக இருக்க .அமைதியாகவே இருந்தார் .

இரண்டு நாள் காலேஜுக்கு கண்ணனுடன் சென்று வந்தாள் .

இந்த இரண்டு நாளில் தியாவும் நந்தாவிற்கு அழைக்கவில்லை .

நந்தாவும் தியாவிற்கு அழைக்கவில்லை. உதயா மட்டும் போன் செய்து பேசினான் .

தனா கூட முகம் கொடுத்து பேசவில்லை. “ஏன் டி என்கிட்ட பேச மாட்டியா? “என்று தியா கேட்க .

“நீங்க பெரிய ஆளு உங்க கிட்ட பேச.. எனக்கு என்னமா இருக்கு “.

“உங்க வாழ்க்கையில் முக்கியமான முடிவு எல்லாம் நீங்களே எடுத்துப்பீங்க”  என்றாள்.

“அண்ணன்ட்ட கோச்சுக்காத “என்று தியா சொல்ல.

“என் புருஷன் கிட்ட பேசணுமா ?இல்ல பேச வேணாமான்னு  முடிவு பண்ண வேண்டியது நான்” என்று விட்டு தனா அமைதியாகி விட்டாள் .

தனாவுமே அன்று உதயா ரூமுக்கு வந்தவுடன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் .

அவளுக்கு கொஞ்சம் டைம் வேணும் தனா .அத அவ தான் முடிவு பண்ணனும் நீங்க இல்ல .

“அவங்களோட பர்சனல் லைப்ல நீங்க தலையிடுவது எனக்கு பிடிக்கல. இது நல்லதுக்கும் இல்லை” என்று விட்டு தனா அமைதியாக விட்டாள் .

மேற்கொண்டு தனா  உதயாவிடம் இதைப் பற்றி வாதடவில்லை.

உதயாவும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை .

இரண்டு நாட்கள் அமைதியாக சென்றது. யாரும் யாருடனும் அதிகமாக பேசவில்லை .

வீடே ஒரு மாதிரியாக இருக்க .நந்தா தான் இரண்டு நாட்களுக்கு பிறகு ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

தேவிக்கு போன் செய்து சமைக்க வேண்டாம் என்றும் சொல்லியிருந்தான்.

“இது என்ன இழவு வீட  அக்கா .ஏன் ?இப்படி அமைதியா இருக்கு ” என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டவுடன் “தனது தம்பியின் வாயில் இரண்டு போட்டவர். அவன் தோளிலும் தட்டி விட்டு இப்படி பேசுவதை நிறுத்து டா “என்றார் .

அவ்வளவு தான் விடுக்கா என்று விட்டு அமைதியாகி விட்டான்.

அதன் பிறகு யாரும் அதைப்பற்றி பேசவில்லை .அனைவரும் ஒன்றாக உட்கார்ந்த சாப்பிட.

தியா வீடியோ காலில் உதயாவிடம் பேசி கொண்டு இருந்தான்.

சாப்பிட கூப்பிட்டவுடன்  வீடியோ காலில் பேசிக்கொண்டே ஹாலுக்கு வர.

தியா சாப்பிட்டையா என்று கேட்டு கொண்டே வந்து உட்கார.

நான் சாப்பிட்டாச்சு  அண்ணா .”அங்க என்ன சாப்பாடு செஞ்சு இருக்காங்க பெரியம்மா “என்றாள்.

தன்னை மீறி தேவிக்கு கண்ணீர் வர எதுவும் பேசாமல் சாப்பாட்டில் கை வைக்க வந்தவர் ரூமுக்கு  சென்று விட.

“அக்கா அக்கா என்று இங்க நந்தா கத்த”.

“தியா என்ன ஆச்சு அண்ணா” என்று கேட்க .

ஒன்றும் இல்லை என்று விட்டு கட் செய்து விட்டான்.

உதயாவை முறைத்த நந்தா தனது அக்கா ரூமுக்கு   செல்ல .

அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு அழுது கொண்டு இருந்தார்.

அவர் தோளில் கை வைத்தான். ஒன்னும் இல்லக்கா என்றான்.

“என்ன தாண்டா உங்களுக்கு பிரச்சனை”.

“அவ போற ஏன் என்று கூட கேட்காம அமைதியா இருக்க.
அது கூட உன்னால் கேட்க முடியாதா? “.

“அவ்வளவுதான் அவ கூட நீ வாழ்ந்த லட்சணமா?” என்று கத்தினார் .

வெளியே தனாவுக்கும் உதயாவுக்கும் கூட அவர் கத்தியது கேட்க செய்தது.

“தன் அக்கா கேட்ட கேள்வி, தன்னை அதிகமாக தாக்க” எதுவும் பேச முடியாமல் வெளியில் வந்து விட்டான் நந்தா.

மாமா என்று உதயா அழைக்க எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான் .

அப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது. தியா இங்கு வரவில்லை.

நந்தாவும் அவளை பார்க்க போகவில்லை.

உதயா மட்டும் சென்று அவளை பார்த்துவிட்டு வந்திருந்தான்.

“நந்தா போன் செய்வான் என்று தியா ஆவலாக தினமும் காத்துக் கொண்டிருக்க” .

அவன் அழைப்பதாக இல்லை .காலேஜில் நல்ல நாளிலே அவன் பார்க்க மாட்டான்.

இப்பொழுது எப்படி பார்க்க செய்வான் என்று எண்ணி அமைதி காத்தாள் .

ஒரு வாரம் சென்று இருக்க .

இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கண்ணன் தான் இனிமே இங்க இருக்கிறது சரிப்பட்டு வராது மலர் உன் மக கிட்ட சொல்லி வை .

“ஒரு அளவு தான் மரியாதை பிறந்த வீடா இருந்தாலும் , கல்யாணம் ஆயிட்டா  பிறந்த வீட்டுக்கு விருந்தாளி தான் “.

“விருந்தாளிக்கு பத்து நாள் தான் சோறு போடலாம் அதுக்கு மேல சோறு போட முடியாது “என்று சொல்லிவிட .

சாப்பிட்டு கொண்டு இருந்த தியா.

தனது கையை வேகமாக உதிரி விட்டு அன்று ஒரு நாள் நந்தா பேசியதை நினைவில் வைத்து.

கண்ணனை முறைத்து விட்டு எனக்கு எங்க வீட்டுக்கு போயிக்க தெரியும்.

“ஒரு வாரம் உட்கார வைத்து சோறு போட்டதால உங்க சொத்து ஒன்னும் அழிஞ்சிடாது “என்று விட்டு உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றாள்.

மலர் இரவு அவள் ரூமுக்கு வந்து அவளை தன்னுடைய மடியில் சாய்த்துக்கொள்ள.

தியா மலரின்   இடுப்பை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

உங்க அப்பா பேசியது உனக்கு தப்பா தெரியலாம் .ஆனா ,என்று சொல்லும்போதே,..

நான் அவர் சொன்னதை தப்பா எடுத்துக்கல மா .

“ஆனா எனக்குள்ளையும் ஒரு சில விஷயம் இருக்கு” .

“என்னால அதை உன்கிட்ட சொல்ல முடியல, என்னோட சூழ்நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என்று லேசான விம்மலுடன் சொல்ல.

தியா  நானும் உன்கிட்ட அத தான் சொல்ல வந்திருக்கேன் .

எல்லா விஷயத்தையும் எல்லார்கிட்டயும் உன்னால ஷேர் பண்ணிக்க முடியாது .

இந்த ஒரு வாரத்துல நந்தா உனக்கு போன் பண்ணல அது மட்டும் கிடையாது .

“உன்கிட்ட உங்க பெரியம்மாவும் பேசல அதை  மறந்திடாத “.

இந்த ஒரு வாரத்தில் உனக்கு நடந்த  ஏதோ ஒரு விஷயத்துல நீ உங்க பெரியம்மாவையே மறந்து இருக்க .

அதை மட்டும் தான் நான் சொல்லுவேன் .

அவங்களும் எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் போன் பண்ணல .

ஆனா ,நேத்து அங்க ஏதோ பெருசா ஒன்னு நடந்திருக்கு .

நானா இன்னைக்கு அங்க வீட்டுக்கு போயிருந்தேன். அக்கா என் கிட்ட பேசினாங்களே தவிர ,.

அவங்க முகத்துல கொஞ்சம் கூட சிரிப்பு இல்ல.அதும் மட்டும் இல்ல கிளம்பும் போது என்கிட்ட தனா சொன்ன விசியம்  நந்தா தம்பி  அக்காகிட்ட ஒரு வாரமா பேசலையாம் .

அதுவும் இப்போ 2 நாள சுத்தமா என்று விட்டு அமைதியாகி விட .

எழுந்து உட்கார்ந்த தியா  தனது அம்மாவின் கண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் .

பிறந்ததிலிருந்து நந்தா தம்பி தேவி அக்கா கிட்ட பேசாம இருந்ததில்லை .ஆனா, இப்ப ஒரு வாரமா பேசாம இருக்காங்க.

தேவி அக்கா அழுதுகிட்டே சொன்னாங்க என்று விட.

  தியாவிற்கு தன்னையும் மீறி அழுகை வர  .

வேகமாக எழுந்து  வெளியில் வர மலரும் பின்னாடியே தியா தியா என்று கத்தி  கொண்டு வந்தார் .

வெளியே கண்ணன் இருவரும் பேசுவதை கேட்டுக்கொண்டு உட்கார்ந்து இருக்க .

என்ன கொண்டு போய் எங்க வீட்டில் விடுங்க என்று கண்ணன் முன்பு வந்து நின்றாள்.

கண்ணன் தன் மகளை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

அதை 61வது எபிசோடோடு முடிவடைகிறது. படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் ஒரு இரு வார்த்தைககளில் ஆவது உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *