காலையில போய்க்கலாம் . உன் மகளை போய் அமைதியா படுத்து தூங்க சொல்லு மணி இப்போ பத்து என்றார் .
“எத்தனை மணியா இருந்தாலும் ,பரவால்ல உங்களால கூட்டிட்டு போக முடியுமா ?முடியாதா ? “என்றாள்.
சரி இரு வரேன் என்று விட்டு சட்டை போட்டுக் கொண்டு தியாவை வா என்றார்.
அப்போது மலர் தான் கண்ணம்மா உன்னோட புக் இங்க இருக்கு. பேக் என்றார் .
தியா சிரித்த முகத்துடன் இருக்கட்டும் மா. நான் வந்து அப்புறமா எடுத்துக்கிறேன் என்று விட்டு தனது அப்பாவுடன் தன் வீட்டிற்கு சென்று இருந்தாள்.
தேவி அவருடைய ரூமில் உட்கார்ந்து “தன் தம்பி தன்னிடம் பேசவில்லை என்ற சோகத்திலும் ,இத்தனை நாள் மகளாக தாங்கியவள் தன்னிடம் ஒரு வார்த்தை கூட இந்த ஒரு வாரத்தில் பேசவில்லையே என்ற வருத்தத்திலும் “அப்படியே உட்கார்ந்து இருந்தார்.
தூங்காமல் மணி 10.30 தொட்டிருக்க அவர்கள் வீட்டில் காலிங் பெல் அடித்தது.
நந்தா தான் அவனுடைய ரூமில் இருந்து வந்து இந்த நேரத்தில் யாருக இருக்கும் என்று எண்ணி கொண்டே கதவை திறந்தான் .
அங்கு இந்த நேரத்தில் தியாவையும் ,கண்ணனையும் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இருவரையும் பார்த்துவிட்டு கண்ணனை மட்டும் வாங்க என்று அழைத்துவிட்டு அவன் அமைதியாக ஹாலுக்கு வந்து விட .
ஒரு சில நொடி தயங்கி நின்ற நந்தா தேவியின் ரூம் கதவைத் தட்டினான் .
வெளியில் வந்த தேவி நந்தாவை பார்த்துவிட்டு என்னடா என்று கேட்க .
வெளியில் வா அக்கா என்றான்.
ஒரு வாரத்திற்கு பிறகு தனது தம்பி பேசிய சந்தோஷத்தில் எதுவும் பேசாதது வெளியில் வர.
தியா அங்கு இருப்பதை பார்த்துவிட்டு தியாவை ஓங்கி அறைந்திருந்தார் .
அவர் அறைந்த வேகத்தில் தியா ஒரு சில அடி தள்ளி விழுந்திருந்தாள் .
உதயா தான் வேகமாக வந்தவன் .தியாவை தாங்கி பிடித்து விட்டு அம்மா என்ன மா பண்ணிட்டு இருக்க என்றான்.
“என் மக நான் அடிக்கிறான். அவளை அடிக்கிற உரிமை எனக்கு இருக்கு .அதை கேட்க நீ யாருடா “என்றார் .
“தியா வேகமாக ஓடி சென்று கட்டிக்கொண்டு சாரி பெரியம்மா நான் வேணும்னு செய்யல” .
அது என்று விட்டு அமைதியாகி விட.
உனக்கும் ,உன் புருஷனுக்கு தாண்டி சண்டை .இதுல நான் எங்க இருந்து டி வந்தேன் .
நான் என்ன டி உன்ன பண்ணேன்.
“நீயாவே வந்த நீயாகவே போற. என்னடி நினைச்சுட்டு இருக்க என்று அவளை தள்ளி நிறுத்தி கீழே உட்கார்ந்து கொண்டு அழ” .
“கண்ணன் தான் நான் இவளை தவறாக நினைத்து இவளை விட்டு சென்ற போது கூட அவள் இப்படி அழுதாளா ?இல்லையா” என்று தெரியவில்லை .
ஆனால் ,”தன் மகளை அவளுடைய சொந்த மகள் போல் தங்குகிறாளே” .என்று எண்ணினார் .
ஒரு சில நொடி நகர்ந்து சென்று விட்டார். தியா அவரை கட்டிக்கொண்டு அழ செய்தாள் .அப்படியே அவரது மடியில் படுத்துக்கொண்டாள் .
நந்தா தான் எதுவும் பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது நந்தா தான் சரி நேரம் ஆகுது .மலர் அக்கா அங்க தனியா இருக்கும்.
நீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்ல.மலர் தனியாக இருப்பது உணர்ந்த கண்ணனும் சரி என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் சென்று விட்டார் .
அதன் பிறகு கதவை அடைத்து விட்டு வந்த நந்தா உதயாவை பார்த்து டேய் போய் தூங்கு டா என்றான்.
உதயா தேவி,தியா இருவரிடமும் சொல்லிவிட்டு அவனது ரூமுக்கு சென்று விட்டான்.
தியா ஒரு சில நொடி தயங்கி விட்டு அவளது ரூம் வாசலில் நிற்க.
தேவி தான் உன்னோடு ரூம் தாண்டி இப்படி யோசிச்சிட்டு நிக்கிற.
யோசிச்சு யோசிச்சு வாழ்ந்த என்ன அர்த்தம்.
உன் வாழ்க்கையும் போது அவன் வாழ்க்கையும் போது, சந்தோஷமா வாழ தாண்டி இந்த வீட்டுக்கு வந்த .
“உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு அவனையும் கஷ்டப்படுத்த இல்ல புரிஞ்சி நடந்துக்க பழகு “.
இன்னமும் சின்ன பிள்ளைன்னு நினைச்சுட்டு இருக்கியா என்று கேட்க .
எதுவும் பேசாமல் தியா அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
ஒரு சில நொடிக்கு பிறகு கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல.
நந்தா கட்டில் படுத்து அழுது கொண்டு இருந்தான் .
ஆண் மகனும் அழ செய்வான் என்பதை அன்று தான் தியா முதன் முதலில் பார்க்க செய்தாள் .
வேகமாக அவனை பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு மாமா என்றாள்.
அவளது கையை மெதுவாக எடுத்து விட்டவன் .எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான் .
மாமா அது என்று பேச போக.
எதுவும் பேச வேண்டாம் என்பது போல் கையை காண்பித்து விட்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டிருக்க .
இப்படியே அரை மணி நேரம் மௌனமாகவே சென்றது.
அரை மணி நேரத்திற்கு பிறகு “இப்போ உனக்கு என்னடி வேணும்” .
“என்கூட வாழ உனக்கு விருப்பம் இல்லையா ?என்னை பிடிக்கலையா ?”என்று நந்தா கேட்க .
வேகமாக அவனை அடித்து இருந்தாள் .
அடித்துவிட்டு “அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு உன்னால இப்படி எல்லாம் கூட பேச முடியுமா மாமா “.
“இவ்ளோ தான் நீ என்னை புரிஞ்சுகிட்டதா “
நீ அடிக்கடி சொல்லுவியே என்று விட்டு கண்ணீருடனே விம்மிக்கொண்டே திக்கித் திணற…
“உனக்கு எனக்கும் இருக்க வயசு வித்தியாசத்தை நான் நினைச்சுட்டு இருக்கேன்னு நினைக்கிறியா? “
“என்னை கடைசி வரைக்கும் புரிஞ்சுக்கவே மாட்டியா ?”
“உனக்கு அவ்வளவு தான் என் மேல லவ்வா மாமா “.
இல்ல “உனக்கு என் மேல லவ்வே இல்லையா மாமா “.
“ஒருவேளை இந்த நிமிஷம் வரைக்கும் நீ என்ன கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லையா? “
“இந்த ஒன்ற வருஷத்துல நான் உன் கூட வாழ்ந்து வாழ்க்கை இவ்வளவுதானா “என்று விம்மி கொண்டே கேட்டாள் .
அப்பொழுதும் நந்தா அமைதியாகவே இருக்க .
“எனக்கும் என் வயசுக்கு ஏத்த எல்லா உணர்வு இருக்கு மாமா “என்று அவனது தாடையை நிமிர்த்தி அவனை நேருக்கு நேராக பார்த்து சொல்ல.
“எனக்கு நீ வேணும்னு தோணுது”.
” நான் நெருங்கி வர தப்பா எல்லாம் நினைக்கல”.
ஆனா ,”நான் நெருங்கி வந்து நீ எதையாச்சும் சொல்லிடுவியோனு பயம் என்னையும் மீறி என்கிட்ட இருக்கு “.
“அதை உதயா அண்ணனால புரிஞ்சுக்க முடிஞ்சிது,உன்னால புரிஞ்சுக்க முடியல “.
அவ்வளவுதான் ,”என்னோட லவ் இல்லையா? உனக்கு கொஞ்சம் கூட என் மேல லவ்வே இல்லைல “என்று அவனை விட்டு நகர்ந்து வெளியில் செல்ல கதவில் கையை வைக்க .
“அவளை வேகமாக இழுத்து அணைத்து இருந்தான்” .
“அப்போ நான் இந்த நிமிஷம் வரைக்கும் உன்கிட்ட என்னோட காதலையும் காமிக்கல , என்னோட பீலிங் சிம் (உணர்வையும்) காமிக்கல அப்படி தானடி” என்று அவளை காற்று புகாத அளவிற்கு இறுக்கி கட்டி கொண்டான்.
அவள் அவனை தள்ளி விட. அவளை முறைத்துக் கொண்டு நின்றான் .
“என்னை என்ன தாண்டி நீ நினைச்சிட்டு இருக்க”.
” உடம்புக்கு அலையிறவன்னு நினைச்சியா ?”
“புருஷன் பொண்டாட்டி கிட்டயும் ,பொண்டாட்டி புருஷன் கிட்டயும், உடல் ரீதியா எதிர்பார்க்கிறது தப்பு இல்லையே மாமா “என்றாள்.
அது தப்புனு நான் இப்பையும் சொல்லலையே, எப்பவும் சொல்லவும் மாட்டேன் .
“அப்புறம் என்ன தான்டா உனக்கு பிரச்சனை என்று அவனது சட்டையை வேகமாக பிடித்திருந்தாள் “.
“எனக்கு நீ வேணும் டி” ஆனா ,..
இன்னும் என்னதான் உனக்கு பிரச்சனை .
“என்னை சின்ன புள்ள ,சின்ன புள்ளனு நீ சொல்லிட்டு இருக்க போறியா ?”.
இல்ல உனக்கு என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
நீ படித்து முடி என்றான்.
“உன்மேல கவனம் வந்துச்சுன்னா படிப்புல என்னோட கவனம் போயிடும்னு நினைகிறியா ?”.
நான் அப்படி சொல்லலடி.
அப்புறம் என்ன தான் சொல்ல வர அதையாச்சும் சொல்லித் தொலை.
“என்னதான் உனக்கு வேணும் கிட்ட நெருங்கி வந்த விலகி போற”.
அதே தாண் டி நீயும் செஞ்ச அதை மறந்துடாத” என்று விட்டு அவளை விட்டு நகர்ந்து திரும்பி நின்றான் .
“நான் எப்ப டா அப்படி செஞ்சேன் என்று அவனது தாடையை பற்றி கேட்டாள்” .
“எப்போ செஞ்சேன்னு நீயே யோசி “
“உன்கிட்ட நான் நெருங்கி வரும்போது எல்லாம் நீயா தான் ஒதுங்கி போன” .
“உனக்கு விருப்பம் இல்லையோ “.
“இன்னும் உனக்கு என் மேல இருக்க ஏதோ ஒரு மூலையில பயம் விட்டுப் போகவில்லையோ”
மனசு அளவுல மட்டும்தான் என்னை எதிர்பார்க்கிற போல.
” உடம்பு அளவுல உனக்கு என் மேல எதும் தோணல போலனு நினைப்பு”.
ஆனா ,” இந்த பத்து நாள்ல உனக்கு கொஞ்சம் கூட என்னை தேடல இல்லையா ?”.
“காலேஜ்ல ஸ்டுடென்ட் ப்ரொபஷர நான் தான் இருக்க சொன்னேன்” .
இல்லைன்னு சொல்ல மாட்டேன் .”ஆனா ஒரு நிமிஷம் கூட உன் பார்வை என் பக்கம் வரலையா டி”.
” நீ என்னை தேடி வந்து பார்த்திருக்க வேண்டாம் என்ன கிராஸ் பண்ணும் போது இன்னும் எத்தனை முறை பார்த்திருப்பேன்”.
“இந்த பத்து நாள்ல ஒரு நிமிஷம் கூட உனக்கு என்ன பாக்கணும்னு தோணலையா?” .
“எனக்கு ஒரு போன் பண்ணனும் கூட உனக்கு தோனல டி அவ்வளவு ஆயிடுச்சு இல்ல”.
“நான் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியும் என்று நிருப்பிச்சுட்ட “என்று படுத்து விட்டான்.
தியாவிற்கு தான் இங்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது .
வேகமாக கத்தி அழ வேண்டும் போல் இருந்தது.
அவர் சொல்வதும் உண்மைதானே அவர் நெருங்கி வந்த வேலையில் நாம் தானே ஒதுங்கி சென்றோம்.
ஆனால், “அது வேண்டும் என்று இல்லை .தானாகவே பெண்களுக்குள் ஏற்படும் இயல்பு தானே “.
“அதை கூட இவரால் புரிந்து கொள்ள முடியாதா ?”.
“அதுக்காக இவர்கிட்ட எனக்கு ஆசையே இல்லன்னு ஆயிடுமா ?”என்று பல வாறு யோசித்தாள் .
அவன் இறுதியாக சொன்னதை யோசித்து விட்டு அப்போ நீ மட்டும் எனக்கு போன் பண்ணிய என்றாள்.
அவளைப் பார்த்து கசந்த முறுவல் ஒன்றை கொடுத்தவன் . இல்லடி நான் பண்ணேனு எப்ப சொன்னேன் என்றான்.
அப்போ “நான் இல்லாம உங்களாலையும் வாழ்ந்திட முடியும் என்று தானே யோசிச்சிருக்கீங்க ” என்றாள்.
“ஆமாண்டி நீ இல்லாம வேற ஒருத்தி கூட வாழலாம்னு ” முடிவு பண்ணி இருக்கேன் என்று விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.
இதற்கு மேல் இங்கு இருந்தால் ,வார்த்தையை அதிகமாக விட்டு விடுவோம் என்று பயத்தில் வெளியில் சென்று விட .
“யோவ் வாத்தி பேசிட்டு இருக்கும் போதே வெளியே போற “என்று கத்தி கொண்டே வெளியில் வந்தாள் .
அவள் கத்திய கத்தில் அவள் குரல் கேட்ட உடன் தேவி தன்னுடைய ரூமில் இருந்து சிரித்துக் கொண்டார் .
இங்கு உதயாவுமே சிரித்துக் கொண்டான் .
தனா தான் ஒரு சில நொடி ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் இருந்து விட்டு பின்பு உன் தங்கச்சியை வச்சிட்டு முடியல சாமி என்றாள் .
“என் தங்கச்சி ரிட்டன் டி “என்று விட்டு படுத்து விட்டான் .
ஆமா ஆமா என்று தனா சிரித்துக் கொண்டாள்.
“இப்ப நீ என்கிட்ட பழைய படி பேசுவியா மாட்டியா “என்றாள்.
“மணி என்னடி ஹால்ல வந்து இந்த நேரத்தில கத்திட்டு இருக்க போய் படுத்து தூங்கு டி “.
நாளைக்கு காலைல காலேஜ் போற வேலை இல்ல.
யோவ் வாத்தி பல முறை சொல்லி இருக்கேன்.
“காலேஜ்ல மட்டும் வாத்தியார இரு. வீட்லையும் வந்து வாத்தியார் மாதிரி பாடம் எடுக்காத” என்றாள்.
“வேற பாடம் எடுக்க எங்கடி விட்ட என்று அவளது கழுத்தை லேசாக நெருக்கி கொண்டே அவள் அருகில் சுவற்றை ஒட்டி நிற்க”.
“நீ கிளாஸ் எடுக்க வந்த .நான் உன்னை வேணான்னு தடுத்து விட்டேனா ” என்றாள்.
அப்பொழுது வெளியில் வந்த உதயா “மாமா வயசு பசங்க இருக்க வீடு, நீயும் உன் பொண்டாட்டியும் உங்க கச்சேரியை உங்க ரூமுக்குள்ள போய் வச்சுக்கிட்டா நல்லா இருக்கும் “.
“நீ எந்த பாடத்தை வேணாலும் உன் பொண்டாட்டிக்கு நடத்து”.
“அவ எந்த பாடத்தை வேணாலும் உன் கிட்ட கத்துக்கட்டும் “.
“ஆனா, இப்படி ஹால்ல உட்கார்ந்து என் மானத்தை வாங்காத மாமா”.
உங்க அக்கா இருக்காங்க .உன் தங்கச்சி இருக்கா என்று சிரிப்புடனே சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்றுவிட.
நந்தா தான் தன் தலையில் அடித்துக் கொண்டு தியாவை பார்த்து சிரித்துவிட்டு அவளை கையோடு அழைத்துக் கொண்டு ரூமுக்குள் சென்றான்.