ஆலி-18
ப்ரியங்கா மனம் கேளாமல் சைதன்யனுக்கு அழைக்க, அவனோ அவர்களின் அழைப்பை எல்லாம் தவிர்த்தான்.
மீண்டும் மீண்டும் அழைக்கவும் எரிச்சலில் போனை எடுத்து, “இப்ப என்ன சொத்து மொத்தமும் உஙகளிடம் தானே இருக்கு. பணத்தோட தேவைக்கு என்னை எதிர்பார்க்க வேண்டியதில்லையே. திரும்ப எதுக்குக் கால் பண்ணறீங்க.” என்று எரிந்து விழுந்தான்.
“நான் அதுக்குக் கால் பண்ணலை பா. தருண் வீட்டுக்கு போய் பார்த்தேன். மதுவுக்கு அதிகமா…”
“ப்ளிஸ் உங்க குடும்ப விஷயம் எனக்குத் தேவையில்லாதது. அதைக் கேட்க நான் தயாரா இல்லை. அம்மாவா நடிச்சதுக்குப் பேசிய தொகையை விட அதிகமாகவே கொடுத்துட்டேன். அதுல குறையென்றால் சொல்லுங்க.”
“அதுல குறையில்லைபா. வைக்கிறேன்.” என்று ப்ரியங்கா வைத்திட செய்யவும் சைதன்யன் அதே எரிச்சலோடு தலையில் கை வைத்து அமர்ந்தான்.
‘சும்மா சும்மா தம்பிக்குப் பணம் தம்பி மது அருந்தறான். தம்பி பேசலை… தம்பி மெடிக்கல் பார்க்க நல்ல டாக்டர் வேண்டும் சை… யாருக்கு தம்பி? அதான் வளர்ந்து எப்பவும் எதிலும் போட்டிக்குனு வந்து நிற்கறானே. இவனா தம்பி…
இந்தப் பக்கம் என்னை எரிச்சல் கிளம்பிட்டு அவங்களிடம் பணம் பிடுங்கறான். சீப் காய்…’ என்று அவன் வழிநடத்த புதுக் கம்பெனி விலைக்குக் கிடைக்கின்றதாயென ஆராய்ந்தான்.
இங்கு அகமேந்தி தனது பணியில் சத்தமில்லாமல் செய்யவும் நேரம் கடந்தது. தேஜு கொடுத்த மிளகு சாதம் சாப்பிட்டவள் மாலையிலும் ஆபிஸில் இருந்த வெந்நீரில் சம்மஹன் பவுடரை கலந்து குடித்தாள்.
தேஜு வந்து அழைத்துச் செல்லவும் தருணேஷ் அதனைக் கவனிக்கவே செய்தான்.
தேஜு அகமேந்தி வீட்டில் விட்டுவிட்டு செல்லவும் தனது அறைக்குச் செல்ல, அங்கே தனது கட்டில் காணாமல் போயிருந்தது.
வெளியே எட்டி பார்க்க, சைதன்யன் பெட்டோடு சேர்த்து வைத்திருக்கக் கண்டாள்.
அவனோ அறையில் தனி டிவியைப் பொருத்திக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டதும் திரும்பியவன்,
“ஹேய் குரல் கொஞ்சம் சத்தமா வருது. என்ன அதுக்குள்ள சண்டைக்கு வராதே. நீ தனியா நான் தனியா எனக்குப் பிடிக்கலை. சின்னபிள்ளை தனமா இருக்கு.
நான் உன்னை ஏமாற்றியது தவறுனாலும், உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. தண்டனையா வேற என்ன வேண்டுமென்றாலும் கொடு.
ஐ மீன் என்னைக் கிள்ளறதோ, கடிக்கிறதோ, அடிக்கிறதோ, ஆனா தனியா ரூம்ல இருக்காதே.
எனக்குக் கவனம் எல்லாம் அங்க தான் இருக்கு.” என்றவனின் பேச்சுக் காதில் வாங்காமல், “என் கட்டில் அங்க தான் இருக்கணும்.” என்று குழந்தை போல அடம் பிடித்தாள்.
“என்னடி பண்ண… உனக்கு என்னைப் பிடிக்காம இல்லை. உன் முத்தம் சொல்லுது எனக்காக நீ யோசிக்கிறதை. என்ன நான் விளையாடி ஆள்மாறாட்டம் செய்ததில் என் மேல சின்னதா கோபம். ஆமா சின்னதா தான். அது போக என்ன செய்ய? என்னோட பழகி பார்த்தா தானே என்னோட சுபாவம் தெரியும்.
நான் என்ன அர்த்தத்தில் பதறி முடிவெடுத்து இருப்பேனு புரியும்.
எங்கயாவது கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு சொல்லிட்டு முகத்தைத் திருப்பினா என்ன அர்த்தம்.
இங்க பாரு ஸ்வீட் ஹார்ட்…
உனக்குப் பயமா இருந்தா தூக்கமாத்திரை கலந்துக்கோ. இல்லை மன்னிக்க முடியாத அளவுக்குத் தப்பா… பாய்ஸன் கூடக் கொடு டி. நான் மறுக்காம…” என்றவனின் வாயை பொத்தி நிறுத்தினாள்.
“எதுக்கு இப்படிப் பேசற இங்க தங்கணுமா தங்கிடலாம். எனக்கு உன் மேல பயம் இல்லை.” என்றவள் மனமோ என் மேல தான் பயம் என்பதைக் கூறவும், அதனை மறைத்து “வெளியே போகணும்னு சொன்னியே போகலாம். எங்க போகணும்.” என்று புரியாமல் கேட்டாள்.
“பப்?” என்றதும் அகமேந்தி முறைக்க, “இல்லை அங்க தான் முதல்ல சந்திச்சோம். அதனால சென்டிமெண்டா” என்று தயங்கினான்.
“பச்… அங்க கூட்டிட்டு போற இடமா… ஏதோ வந்ததும் தேஜுவை அப்சட் ஆகக் கூடாதெனப் போனது. ஹோட்டலில் டேஸ்ட் பண்ணியது சும்மா ட்ரை பண்ணி பார்க்க… அதை வைச்சி முடிவு பண்ணாத. எங்க அப்பாவுக்குத் தெரிந்தது அவ்ளோ தான்.” என்று பேசவும்.
“ஷாப்பிங்… ஷாப்பிங் போகலாமா? அப்படியே டின்னர்…?” சைதன்யன் கேட்கவும்”ம்ம்” என்றதும் இருவரும் கிளம்பினார்கள் .
சைதன்யன் அவள் கையைப் பற்றி நடக்க, மறுக்காமல் அவனோடு நடையிட்டாள்.
கண்ணில்படும் அழகான ஆடையை எடுத்தனர்.
பின்னர்ப் பானிப்பூரி சாப்பிடவும், சைதன்யன் “இத்தனை பானிப்பூரி சாப்பிட்டா டின்னர் ஒழுங்கா சாப்பிடுவியா.” என்றான்.
“இப்ப தானே என்னோட வெளியே சுத்திட்டு இருக்க. எல்லாம் சாப்பிடுவேன்.” என்றவளை இரசித்து அவள் வாங்கின பொருட்களைக் காரில் வைத்து மூட, அகமேந்தி யாரையோ பார்ப்பதை எண்ணி எட்டி பார்க்க அங்கே அகமேந்தியை போலவே ப்ரியங்காவும் அகமேந்தி சைதன்யனை கண்டு நின்றார்.
சைதன்யன் உடனடியாக அகமேந்தி கையைப் பிடித்துக் காரில் ஏற்றும் நேரம், “மாம்… என்ன ரீசன்னு தெரியலை கார் எதுவும் புக் ஆகலை.” என்ற குரலில் சைதன்யன் திரும்பினான்.
ப்ரியங்கா பார்ப்பதை கண்டு அந்தக் குரலுக்குரியவனோ, “யார் மாம் அவங்க உங்களையே பார்க்கறார்?” என்று கேட்கவும் அகமேந்தி காரில் இருந்து இறங்கி இவன் யாரு என்பதாய் குழம்பி அவளும் நின்றாள்.
அதற்குள் ப்ரியங்காவை கேள்வியாய் குடைந்தவனிடம், “அண்ணா… உனக்கு அண்ணா வேண்டும்” என்று கூறி முடிக்க,
“வாவ் அண்ணாவா… ஹாய் அண்ணா… நான் ருத்ரேஷ். உங்களை இதுவரை பார்த்ததேயில்லை.” என்று பேசவும் சைதன்யன் ப்ரியங்காவை எரிமலையாக எரித்து நின்றான்.
“ருத்ரேஷ்… சந்திக்க நேரம் அமையலை டா.” என்றாள். அதில் ருத்ரேஷிற்கான பதிலா அல்லது சைதன்யனுக்கா என்று அவர்களே அறிவார்கள்.
“ஹாய்.. நீங்க.?” என்று அகமேந்தியை கேட்க, அவளும் முதலில் புரியாமல் விழித்தாலும் இந்த ருத்ரேஷ்… தருணேஷ் தம்பி என்றவரை அறிந்துக் கொண்டாள்.
தருணேஷுக்கு மட்டும் தம்பியா? சைதன்யனுக்கு என்ன உறவென்று புரியாதவளா?
“அண்ணா என்ன பேசாம இருக்கீங்க. வீடு பக்கத்தில் தான் வாங்க வீட்டுக்குப் போய்ப் பேசலாம்.” என்று கூப்பிடவும் ப்ரியங்கா ஒரு வித எதிர்பார்ப்போடு பார்க்க, சைதன்யன் வாய் திறக்க கடினப்பட்டான்.
“இல்லை… டின்னர் முடிச்சிட்டு வீட்டுக்கு போக லேட்டாகும். நாங்க இன்னொரு நாள் வர்றோம்” என்று அகமேந்தி தான் பதிலளித்தாள்.
“ப்ளிஸ் ப்ளிஸ்… அண்ணா என்றாலே வீட்டுக்கு வரமாட்டாங்களா… அம்மா நீ ஒரு முறை கூப்பிடு. டின்னர் தானே… அம்மா போனதும் ரெடி பண்ணிடுவாங்க. வீட்டுக்கு வாங்களேன் ப்ளிஸ்” என்று ருத்ரேஷ் கெஞ்சவும் அகமேந்திக்கு இங்கு என்ன நடக்கு என்பதாகப் புரியாமல் குழம்பினாள்.
“ருத்ரேஷ்… அவங்க கமிட்மெண்ட் ஏதாவது இருக்கும். விடு தொல்லை பண்ணாதே…” என்றதும் ருத்ரேஷ் முகம் சோகமாக மாறியது.
“நாங்க இன்னொரு நாள் வர்றோம். பை…” என்று கூறவும் காரில் ஏற சென்றவள் “நீங்க எங்க போகணும் பக்கத்திலென்று டிராப் பண்ணிட்டு போகலாமே.” என்றதும் சைதன்யன் கோபமாக அகமேந்தியை பார்த்தான்.
“உங்களுக்கு ஓகேவா… ஆல்ரெடி கேப் புக் பண்ணினேன். எதுவும் புக் ஆகலை.” என்றவனின் பேச்சில் ப்ரியங்கா தொட, அதற்குள் அகமேந்தி, “ஏறு ருத்ரேஷ்… நீங்களும்” என்று கூறி முடித்திருக்க, ருத்தேஷ் காரில் ஏற முயலவும் ப்ரியங்காவோ சைதன்யனை கண்டாள்.
“பபிள் கம்?” என்று ருத்ரேஷ் நீட்டவும் அதனைப் பெற்று கொண்டு அகமேந்தி தேங்க்ஸ் என்றாள்.
ருத்ரேஷ் வழிச் சொல்ல சைதன்யன் கோபத்தோடு கட்டுப்படுத்தி அமைதியாக வண்டியோட்டினான்.
“இந்தச் சர்ச் நியர் இரண்டாவது வீடு.” என்றதும் காரை நிறுத்தினான். ப்ரியங்கா இறக்கி விட்டு ருத்ரேஷ் இறங்கினான்.
இறங்கியவன் ஓடி வந்து சைதன்யன் பக்கம் நின்று, “அண்ணா இதுவரை வந்துட்டிங்க வீட்டுக்கு வாங்க ப்ளிஸ்…”என்று கையைப் பிடித்து இழுக்கவும் சைதன்யன் மனம் என்னவோ பாரம் ஏறிய சூழலாக இறங்கினான்.
“ஏ… அண்ணா வீட்டுக்கு வர்றாங்க. அம்மா டின்னர் ரெடி பண்ணு” என்றதும் அகமேந்தி இறங்கினாள்.
“இல்லை இன்னொருநாள்…” என்ற சைதன்யன் பேச்சில்
“அண்ணா வாங்கண்ணா” என்று இழுக்கவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
ப்ரியங்கா உள்ளே வந்ததும் ருத்ரேஷ் அகமேந்தியிடம் கதை அளந்தான்.
“நீ என்ன படிக்கிற… எந்த ஸ்கூல்?” என்று அகமேந்தி கேட்டதும்
“டென்த் படிச்சேன் அண்ணி. அவர் அண்ணா என்றால் அண்ணா ஒய்ப் அண்ணி தானே” என்று ப்ரியங்கா விழியுருட்ட பதில் தந்தான்.
“நான் கொடைக்கானல் ஸ்கூல்ல படிச்சேன். இப்ப படிக்கலை… எனக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை அதனால அம்மா கூடவே இருக்கணும்னு என்னை வீட்ல கைதியாக்கிட்டாங்க.
எப்பவும் வீட்ல இருத்தா போர் அடிக்கும் அண்ணி… ஹாஸ்பிடல் வீடு இப்படியே என்னை அடைச்சி வைக்கிறாங்க. நீங்களே சொல்லுங்க எனக்குப் போர் அடிக்குமா அடிக்காதா.” என்றதும் சைதன்யன் என்ன சொல்லறான் இவன் என்பதாக ப்ரியங்காவை பார்த்தான்.
அதே நேரம் போன் வரவும் ருத்ரேஷ் எடுத்து பேச, “அம்மா என் பிரெண்ட் நவீன் பேசிட்டு வர்றேன். அண்ணா அண்ணிக்கு டின்னர் செய்யுங்க. அண்ணி அண்ணா ஐந்து நிமிஷம் பேசிட்டு வந்திடறேன்” என்று ஒர்அறைக்குள் ஓடினான்.
“உங்கப்பா இறந்தப்ப நானும் தருணேஷ் மட்டும் தான் சென்னையில் இருந்து வந்தோம். ருத்ரேஷ் அப்போ கொடைக்கானல்ல படிச்சான். டென்த் என்பதால எக்ஸாம் முடிஞ்சதும் யாரையாவது கூட்டிட்டு வர சொல்ல இருந்தோம்.
ஆனா அப்ப இருந்த சூழ்நிலையில் தருணேஷிற்கே அவன் அப்பாவோட இரண்டாம் மனைவி பையன் என்ற உண்மையைத் தெரிஞ்சதும் துடிச்சிட்டான்.
தருணேஷ் உண்மை ஏற்க முடியாம துடிச்சி குழம்பி என்னை உங்க அப்பாவை வெறுத்தது, இதுல வந்தவங்க வாரிசு நீ தான்னு முன்னிருத்தி என்னைத் தருணேஷை ஒருமாதிரி பேசவும் தருணேஷ் தான் ருத்ரேஷை வரவேண்டாம்னு சொல்லிட்டான்.
எனக்கும் அது சரியென்று தோன்றியது. தருணேஷ் வளர்ந்தவன் அவனே உண்மை ஏற்க மனதால் போராட்டம் அடைந்தான். ருத்ரேஷ் புரியாத வயசு. தன்னோட அப்பாவுக்கு இரண்டாம் மனைவியின் மகன் அவனென்று தெரியப்படுத்த விரும்பலை.
அப்பா இறந்துட்டார் என்று ருத்ரேஷிடம் பக்குவமா சொல்லி கொஞ்ச நாள் அவனைப் பார்க்க போனா… அங்க இன்னொர் அதிர்ச்சியா அவன் மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் இருந்தான்.
என்னனு விசாரிச்சப்ப இதயம் பலகீனமா இருப்பது தெரிந்தது. அடிக்கடி மயங்கறான்னு என்னோடவே அழைச்சிட்டு வந்துட்டேன்.
சொத்தும் உன் பேர்ல இருப்பது தருணேஷுக்கு பிடிக்கலை. தாலி கட்டினாலும் இரண்டாதரத்தோட பையன் என்ற அடைமொழியும் அவனுக்குப் பிடிக்கலை. எனக்கு அதையெல்லாம் யோசிக்க நேரமில்லை. ருத்ரேஷ் பிழைக்க என்ன செய்யென்று தான் யோசனை ஓடிச்சு.
இங்க படிப்பு விட ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா தான் அவனுக்கு அலையறேன். உன்னிடம் அதிகமா போன் போட்டு பேசியது பணம் கேட்டதா தான் இருக்கும். அதெல்லாம் இவனோட மருந்துவத்துக்குத் தான்.
தருணேஷுக்கு வேண்டுமென்றால் பணத்தில் மோகம் பிறந்திருக்கலாம். எனக்கு இல்லை… நான் பணம் கேட்டது எல்லாம் ருத்ரேஷ்காக மட்டும் தான்.
உனக்கு ஒவ்வொரு முறையும் ருத்ரேஷ் பற்றிப் பேசி அதுக்குப் பிறகு பணம் கேட்க தான் நினைப்பேன். நீ என்னிடம் பேசவே பிடிக்காம ஓதுங்கி, என்ன வேண்டுமோ அதை மட்டும் சொல்ல சொல்லுவ. நானும் பணத்தை மட்டும் கேட்டு வாங்கிப்பேன்.” என்று பேசியபடி குக்கரில் குருமா தயாரித்துத் தோசை வார்த்து நீட்டினார்.
அகமேந்தி தட்டை கையில் வாங்கி, சைதன்யனுக்கு நீட்ட இம்முறை வாங்கி டேபிளில் வைத்தான்.
ருத்ரேஷ் ஓடிவந்தவன் “சாரி அண்ணா… ரொம்ப நாள் கழிச்சுப் பிரெண்ட் பேசினான். அதான்.. சாப்பிடுங்க அண்ணா. என்ன வைச்சிங்க அம்மா.. வாவ் குருமாவா… அம்மா இதைத் தான் பெட்டரா செய்வாங்க. சாப்பிடுங்க அண்ணா, அண்ணி நீங்களும் சாப்பிடுங்க.” என்றான்.
“நீ செஸ் சேம்பியனா… நிறைய மெடல் இருக்கு.” என்று கேட்க ருத்ரேஷ் அண்ணியிடம் தன் புகழை கூற ஆரம்பித்து ஒருபக்கம் நீண்ட பேச்சுக்குச் சென்றிருந்தான்.
சைதன்யன் ருத்ரேஷை பார்வை அகற்றாமல் கண்டிருக்க, ப்ரியங்காவோ “அவன் தனியா இருந்திருந்து பேச ஆள் கிடைக்காதானு ஏங்கறான். வேறொன்றுமில்லை.” என்றாள்.
“ஏன் அவன் தினமும் வரமாட்டானா… இல்லை போன்ல பேசமாட்டானா..?” என்று தருணேஷ் வராததைப் பற்றிக் கேட்டதும்
“உங்கப்பா இறந்ததிலருந்து என்னிடம் பேசறதை தவிர்க்கறான். நானா தினமும் பேசுவேன். மது போதையில் என்னைத் திட்ட மட்டும் போனை அட்டன் செய்வான்.” என்று முடித்தாள்.
“இவனோட ஹெல்த் கண்டிஷன் தெரியுமா?” என்றான் சைதன்யன்.
“தெரியும்… பணத்தைக் கேட்டு உன்னிடம் பேச அவனால முடியாது. அதுக்கு ருத்ரேஷ் சாகட்டும் என்னால முடிஞ்ச பணத்தைத் தரமுடியும்னு சொல்வான். சென்னையில் இருக்கற வீடு கார் விற்று இந்த ஒன்றை வருடம் தள்ளிட்டோம். இதயம் மாற்றுச்சிகிச்சை கண்டிப்பா செய்யணும். டாக்டரிடம் சொல்லி வைச்சிருக்கேன். இங்க எனக்கு வேறயாரையும் தெரியாது.” என்று முடிக்கவும் சைதன்யன் எழுந்துவிட்டான். கை அலம்பி அகமேந்தியும் புறப்பட்டாள்.
“பை அண்ணி… நேரம் கிடைக்கிறப்ப சாட் பண்ணுங்க. நான் எப்பவும் வெட்டி, ரிப்ளை பண்ணுவேன். அண்ணா தான் என்னிடம் எதுவும் பேசலை. அம்மா அண்ணா என்றாலே அப்படித் தானா.” என்று ப்ரியங்கா தோளணைத்து கேட்க, சைதன்யன் பேசாமல் அகன்றான். அகமேந்தி பின்னாடியே பின் தொடர்ந்தாள்.
-சுவடுபதியும்.
-பிரவீணா தங்கராஜ்.

Ipo ithu oru puthu twist vachitangla chaithanyanuku tharunesh eh ethuka mudila ithula ipo ivan pthusa vanthutan udambu mudiyama vera irukan aduthu ena panuvan thambi nu ethathu help panuvana
Wow super super. Sainthu think for ruthresh. Name is very unique sis.
Evan ruthreshku help pannuvana erukku.