Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-25

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-25

ஆலி-25

    வருணிகா வந்து கதவை தட்ட, தருணேஷ் பல் விளக்கியபடி வந்து நின்றான்.

     “நீ… நீ… எங்க இங்க…?” என்றதும், வருணிகா “என்ன நான் வரமாட்டேன்னு நினைச்சியா. இவளோ நேரமா பல் விளக்க, ஊசி போடணும். டேபிளட் கொடுக்கணும். சீக்கிரம்” என்று ஊசியினை எடுத்து மேஜை மீது வைத்தாள்.

     “உங்கண்ணா வேலைக்கு எப்படி அனுப்பினார். என்னை பார்த்துக்க எந்த தைரியத்தில் அனுப்பினார். நேற்று நடந்ததில் நான் அனுப்பமாட்டாருனு ஜாலியா தூங்கிட்டேன்.” என்று பேசவும் அவள் முறைக்க மடமடவென முகம் அலம்பி அமர்ந்தான்.

     “தருணேஷ் பார்த்துக்க என்று  சைதன்யன் சார் நர்ஸை கேட்கலை. தெரிந்த ஒருத்தரை ட்ரீட்மெண்ட்க்கு ஒர் நர்ஸ் வேண்டும்னு சொன்னதால் அண்ணா அனுப்பினார். நேற்று தான் அண்ணாவுக்கு தெரியும் உன்னை பார்த்துக்க அனுப்பியதா.

   அதே போல சைதன்யன் சாருக்கு நான் வசந்தோட தங்கையென்றும் தெரியாது. அவரும் நேற்று தான் தெரிஞ்சியிருப்பார்.” என்று கூறி மாத்திரை நீட்டினாள்.

     “என்னை பற்றி தெரியாம மாட்டிக்கிட்ட” என்று தருணேஷ் பேசவும்,

     “உன்னை பார்த்ததில்லை ஆனா கேள்விப்பட்டுயிருக்கேன். தினசரி அண்ணா சாப்பிடும் பொழுது ஏதாவது சொல்லும். நிறைய தெரியும் அதனால தான் நீ என்றதும் அண்ணாவிடம் காட்டிலை.”

       “நான் இனி மது டிரக்ஸ் எடுக்க மாட்டேன். நீ வீட்டுக்கு போ. உங்கண்ணா திக்திக்குனு இருப்பான். சைதன்யனும் நிம்மதியில்லாம இருப்பான்.” என்று அனுப்ப முயன்றான்.

     “நீ எடுக்க மாட்ட… நம்பணும்.. அடப்போடா… நேற்று இரண்டு தடவை தேடியிருக்க. இதுல எனக்கு அடிப்பட்டதில அமைதியா இருந்த. இல்லை நீ கண்டிப்பா எடுத்துயிருப்ப”

      தருணேஷ் அதற்கு என்ன பதில் சொல்ல உண்மை தானே. மதியம் சாப்பிடும் வரை எதுவும் பேசவில்லை. வருணிகாவும் புத்தகம் படித்துக் கொண்டு அவனை கண்காணித்தாள்.

    தருணேஷ் மியூசிக் கேட்டான் பிறகு படம் பார்த்தான். படம் பார்த்தவன் அப்படியே உறங்கி விட்டான். சோபாவில் உறங்கவும் டிவி ஒலியை குறைத்து விட்டு தன் தலையை விரித்து காயப்போட்டாள்.

      ப்ரியங்கா தருணேஷை காண வந்தார். எப்பவும் இவன் எப்படி இருப்பானோ என்று ருத்ரேஷை விட்டுவிட்டு வரவும், தன் வீட்டில் வருணிகா இருக்கவும், அவளிடம் இரண்டு நாள் எப்படி நடந்துக் கொள்கின்றான் என்று அக்கறையில் கேட்டார்.

    “பரவாயில்லை ஆன்ட்டி தவறை விடணும்னு எண்ணமிருக்கு.” என்று கூறவும் ப்ரியங்கா மனதில் நிம்மதி படர்ந்தது.

    “காபி டீ..?” என்று கேட்கவும் அவன் இரண்டும் வச்சியிருக்க மாட்டான். ஜூஸ் இருக்கும் அது போதும்” என்று பருக துவங்கினார்கள்.

     தருணேஷ் கண் விழித்தவன் தன் எதிரே அம்மா இருக்க கோபமா எழுந்து, “உன்னை யாரு இங்க வரச்சொன்னா வெளியே போ” என்று பேசவும், வருணிகா தருணேஷிடம், “தருணேஷ் என்னயிது சேஞ்சு ஆகற… காலையில் தானே மாறுகின்றேனு சொன்ன.” என்று வருணிகா அமைதிப்படுத்த முயன்றாள்.

    “இப்வும் சொல்லறேன் மாறறேன். ஆனா என்னை யாரும் தொல்லை பண்ணாதிங்க… போங்க” என்றதும் ப்ரியங்கா பாதி பருகிய ஜூஸோடு கண்ணீர் பாதியும் சொல்லயியலாத வேதனை பாதியுமாக சென்றார்.

    அவர்கள் போனதும் சாந்தமான தருணேஷை கண்டு, கோபமாக நின்றாள் வருணிகா.

     “நானும் கிளம்பறேன் தருணேஷ். அம்மாவுக்கே மதிப்பில்லாத வீட்டில் நான் என்ன மாற்றி என்ன பிரோஜனம். நீ டிரக்ஸ் எடு. ரம் குடி பீர் அடி பை.” என்று செல்லவும் அவள் கையை பற்றி நிறுத்தினான்.

      “என்ன மற்றவர் சொல்லி புரிஞ்சிக்காம என்னோட இருந்து புரிஞ்சிக்கிற நீயே போகலாமா வருணி.” என்றான்.

    அவனின் வேதனை உயிர் வரை தீண்ட, “அவர்களை எதுக்கு திட்டற. ஹாஸ்பிடலில் உனக்காக எப்படி துடிச்சாங்க தெரியுமா. இப்படி பண்ணினா என்னமோ நீ தப்பானவன் தோன்றுது. சாரி தாய்மை என்ற உணர்வை காக்கா குருவி கூட புரிஞ்சி நடந்துக்கும். உனக்கு ஏன் புரியலை.” என்றதும்.

     “எனக்கும் அதான் புரியலை வருணி. அப்பாவோட வாரிசா அறிவிக்க அவர்களுக்கு என்ன தடை. அவன் கொள்ளி வைக்கணும். ஓகே… முதல்ல பிறந்தவன் போட்டான். ஆனா ஒர் கடமைக்கு செய்ய வேண்டிய மற்றவை கூட செய்ய முடியலை. அவன் தடுத்தான்னு இவங்களும் கைகட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தாங்க அதான் அவங்களை அடியோட வெறுக்கறேன்.” என்று கூறி அவள் கையை இறுக்கமாக பற்றி கண்ணில் ஒற்ற, அவனின் கண்ணீர்துளிகள் அவள் கைகளை நனைத்தது.

     வருணிகாவுக்குள் புரியத் துவங்கியது.

      இதற்கான பதில் கலைந்தால் கூடுதலாக தருணேஷ் மாற்றம் பெறுவான் என்று எண்ணம் உதித்தது.

      மாலை ருத்ரேஷை பார்க்க சைதன்யன் வந்து பொழுது ஒருவாறு ப்ரியங்காவிடம் கேட்டான்.

     “நீங்க ஏன் அவனை விட்டு தள்ளியிருக்கிங்க? அவன் ஏன் உங்களை வெறுக்கறான்.” என்றதும்

    அங்கே வருணிகாவிடம் தருணேஷ் கூறிய அதே காரணத்தை  கூறி அதனால் தான் தருணேஷ் பேச மறுக்கின்றான் என்று சொல்லவும் சைதன்யன் அசைவற்று நின்றான்.

     ருத்ரேஷ் மெல்ல வந்து, “ஏன் அண்ணா நீங்க செய்யவிடலை. அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா…  இல்லை தருணேஷ் அண்ணா மேல கோபமா?

    என்னை மட்டும் ஏற்றுக்கிட்டிங்க. பாவம் பார்த்தா? இந்த சாகற நிலையில் இருக்கறவங்களின் ஆசையை நிவர்த்தி செய்ய ஆசைப்பட்ட நடிகர் நடிகைகள் பார்க்க விடுவாங்களே. போலிஸ் டிரஸ் போட்டுக்க, இப்படி ஆசை நிவர்த்தி செய்யதான் என்னிடம் அன்பா இருக்கிங்களா? அவன் மேல அதே கோபம். அம்மாவை கூட நீங்க அம்மானு கூப்பிடறது இல்லை. ப்ரியங்கானு பெயர் சொல்லி தான் கூப்பிடறிங்க. ஏன் அண்ணா.?” என்று கேட்டுவிட்டு பதிலுக்காக தலைக்குனிந்து நின்றான்.

      சைதன்யன் பதில் சொல்லும் நிலையில் இல்லை. ப்ரியங்கா தான், “ருத்ரேஷ் சும்மா இருக்க மாட்டியா… பெரியவங்க பேசும் பொழுது முன்னாடி வருவதே தப்பு. நீ என்னடானா கேள்விக் கேட்கற. போ” என்று அதட்டி அனுப்பவும்,
   
     “நான் கிளம்பறேன்.” என்று விடைப்பெற்றான். கூடவே அகமேந்தி இதுவரை நடந்தவையை மௌனமாக பார்வையாளராக இருந்தாள். காரில் தொண்டையை செருமி சைதன்யனிடம் கேட்க வாயை திற்க்கவும், சைதன்யனே “ஸ்வீட்ஹார்ட் ருத்ரேஷ் கேட்டதை திரும்ப நீ கேட்காதே. வேற எதாவது பேசலாம் அந்த டாபிக் வேண்டாம்.” என்று காரை ஓட்டியபடி கூறிமுடிக்கவும் அகமேந்தி வேற என்ன பேச போடா என்பதாய் ஜன்னலை வெறித்தாள்.

      சைதன்யனுக்கு தலைவலி வரவும் அகமேந்தியை உறங்க சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான். கூடவே போனை எடுத்து கொண்டு டாக்டர் சுந்தர் அங்கிளுக்கு கால் செய்ய போனான்.

    ஆனால் வருணிகாவிடமிருந்து கால் வரவும் என்ன புது பிரச்சனையென்று எடுத்து பேசினான்.

     “என்னம்மா புது பிரச்சனையா?” என்றதும்.

     “சார்… பழைய பிரச்சனை தான்” என்று தயங்கவும்

     “என்ன மா டிரக்ஸ் வேண்டும்னு பிரச்சனை பண்ணறானா? அந்த சேகரிடம் துருவி டிரக்ஸ் கும்பலை போலிஸ் ரீச் பண்ணிட்டு இருக்காங்க. நாளைக்குள் பிடிச்சிடுவாங்க.” என்று கூறினான்.

     “அதில்லை சார். இன்னிக்கு இவரோட அம்மா வந்து பார்த்தாங்க. அவர்களிடம் பேசாம அவமதிச்சார். அவங்க போனதும் காரணம் கேட்டதுக்கு. உங்கப்பா இறந்த அன்று உங்களுக்கு ஆதரவா அவங்க இருந்ததாகவும், இவரை எதுவும் செய்யவிடலை என்ற கோபமும் அதிகமா இருக்கு.

    ஒர் மகனா நியாயமா இருக்கற கோபம், அதனால உங்க மேலயும் ஆன்டி மேலையும் அதிகமா இருக்கு. என்னை கேட்டா மனசு விட்டு காரணம் சொல்லி பேசினா சரியாகிடுவார். உறவா மாறலையென்றாலும் ஒரு தெரிந்தவருக்கு என்ற விதத்தில் மாற்றம் பெறலாம்.” என்று போதித்தாள்.

       “லுக் வருணிகா… நீங்க சொல்வது சரி தான். ஆனா சொல்லப்படுகிற விஷயம் அதை விட சீரியஸா இருந்தா. அவன் மாறமாட்டான். அதை விட தீவிரமா போதைக்கு அடிமையாகலாம்.

     எதை சொல்லனுமோ அதை சொல்லிட்டேன். எதை சொல்லக்கூடாதோ அதை தவிர்க்கிறேன். அவ்ளோ தான்.

     ஒர் பெண்ணிடம் கண்ணியமா நடந்துக்கறவன் தனிமனித ஒழுக்கத்திலும் மாறுவான். என்ன கூட ஒர் ஆள் சப்போர்ட்டா ஆதரவா இருந்தா அவனுக்கு நல்லது. அவன் தான் அவங்க அம்மாவை அருகே விடமாட்டறான்.

    அதனால தான் ஒர் நர்ஸா உங்களை உடலையும் மனதையும் மாற்ற அனுப்பியது. நீங்க மனத்தத்துவத்தில் படிச்சிட்டு இருந்து பாதியில் நர்ஸ் முடிச்சி வந்திங்கனு வசந்த் சொன்னான். பரவாயில்லை… சரியா தான் யோசிக்கறிங்க. ஆனா எதிர் தரப்பிலும் காரணம் இருக்கு மா.” என்று பேசி வைத்தான்.

     டாக்டரிடம் பேச வந்தவன் வருணிகாவின் பதிலிலே ஒரளவு தருணேஷ் நிலையறிந்து கொண்டான்.

      இமயனிடம் போன் போட்டு ருத்ரேஷ் பற்றி கூறி அவனின் சிகிச்சை அறிய போன் செய்தான்.

       போன் நாட்ரீச்சபிள் என்று வரவும் சலிப்படைந்து திரும்பினான். அங்கே அகமேந்தி கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
   
       இந்நேரம் வரை பேசியவை கேட்டிருப்பாள். பிறகு அமைதியாக நிற்கவும் தன் மனையாளிடமும் மறைக்க வேண்டுமாயென்று தன்னையே வெறுத்தான்.

     அவனின் முக மாறுதல்கள் கண்டு அகமேந்தி தானாக கீழே சென்றுவிட்டாள்.

     சைதன்யன் மனமோ எப்படி சொல்வேன் அகமேந்தியிடம். யாருக்கும் தெரியாமல் உண்மை புதைந்திடவே அவன் விருப்பம். ஆனால் இப்படி தன்னை உறவிடமிருந்து  எட்டிநிறுத்திடுமா என்ற அச்சம் சூழ்ந்தது.

      ருத்ரேஷ் பார்த்த பார்வை, அகமேந்தி பார்த்த பார்வை இரண்டிலும் உண்மை கூறமாட்டாயா? தருணேஷை ஏற்கமாட்டாயா என்கின்றான் ருத்ரேஷ். அப்படியென்றால் உடல்நலக்குறைவு என்பதால் பாவம் பார்க்கின்றாயா? அம்மா என்று அழைக்க மாட்டாய். நாங்கள் மட்டும் உன் அன்பை செல்வத்தை கூறுப்போட்டு பகிர விருப்பம் கொண்டவரா? நீ அன்பை பகிர மாட்டாயா, என்று ருத்ரேஷ் கேட்பதாக தன் கண்ணில் அவன் பார்வை இப்பொழுதும் தாக்கியது.

    அகமேந்தியோ என்னிடமிருந்தே தனிமை வேண்டுமா? தனியாக பேச வந்தாயே? என்னிடம் பகிரவும் உனக்கு தோன்றவில்லையெனில் நான் நல்ல இல்லாளாக மாறவில்லையா அல்லது நீ என்னை காதலிக்கவில்லையா? என்ற பார்வை வீசி சென்றாளே என்று மனம் அழுத்தியது.

      அறைக்கு வந்து உறங்க முயல அங்கே அகமேந்தியின் அறையிலிருந்து எடுத்து வந்து சேர்த்திருந்த கட்டில் காணாமலிருந்தது.

     அவள் வந்த பொழுது இருந்த அறையில் எட்டிப்பார்க்க அங்கே அந்த கட்டில் இருந்தது, கூடவே அகமேந்தி போர்வை போர்த்தி உறங்குவதாக படுத்திருந்தாள்.

     மனம் வலிக்க மௌனமாக திரும்பி வந்து தன் மெத்தையில் படுத்திருந்தான்.

     உறக்கம் வராமல் கண்ணாமூச்சி ஆடியது.

    இங்கு ருத்ரேஷோ ப்ரியங்கா சாப்பிட்டப்பின் கொடுத்த மருந்தை தட்டிவிட்டு கோபமாக படுத்துக் கொண்டான். ப்ரியாங்கா ஏற்கனவே தருணேஷ் படுத்திய விதமும், சைதன்யனிடம் ருத்ரேஷ் கேட்ட கேள்வியும் கோபத்தை ஏற்படுத்த ருத்ரேஷ் சாப்பிடவில்லை என்றிருந்தாலும் ருத்ரேஷை நாடி கெஞ்சவில்லை. தற்போது இருக்கும் மனநிலையில் தானே பேச்சு கட்டுப்பாடின்றி உண்மை வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
     இங்கு தருணேஷோ கால் மேல் கால் போட்டு மெத்தையில் வருணிகா தனக்காக வசந்திடம் பேசி இங்க வந்திருக்கா. அவளிடம் ஏதோயிருக்கு. என்னை கட்டுப்படுத்த. அது என்னவா இருக்கும்?(கன்னம் எரிய அடிச்சாளே டா அதுவா இருக்கும்.😏) என்று சிந்தனையில் சுழன்றான்.

    வருணிகாவோ சே நான் இந்தளவு மெனக்கெடுப்பது சரியா? இல்லை நான் சரியா சிகிச்சைக்கு தகுந்த மாதிரி பேசினேன். மற்றபடி தப்பா இல்லை. அவன் தான் வருணி இளகிட வைக்கறது போல பேசறான். கையை பிடிச்சு கண்ணுல ஒற்றிக்கிட்டான்.

   இது நார்மல் மாதிரி தெரியலை. அங்க இனியும் போனா சரிவாராது. ஏதாவது முத்திடுச்சு. பிறகு எனக்கு தான் கஷ்டம் நாளைக்கு போக வேண்டாம் நின்றிடலாம் என முடிவோடு அன்றைய இரவு கழிந்தது. 

-சுவடுபதியும்.

-பிரவீணா தங்கராஜ்.
 

1 thought on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!