💟-6
தருணேஷிடம் பேசியதாக எண்ணி தேஜூவிடம் எல்லாம் பகிர்ந்தாள்.
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“பரவாயில்லையே… எங்க லவ்வை விட இப்ப தான் ஆரம்பிச்சிங்க… ஆறு மாதம் இருக்குமா…. அதுக்குள்ள கல்யாணம் வரைக்கு போயிட்டார். குட் பா…” என்று தேஜூ பாராட்டினாள்.
“ஆறுமாதம் இல்லை… ஏழு மாதம் ஆச்சு… நான் இங்க வேலைக்கு சேர்ந்து….. ஆனா தேஜூ தருணேஷ் இப்பவும் இதெல்லாம் செய்தானா என்றால் என்னால நம்ப முடியலை. ம்ம்… நான் ஓகே சொல்லி இரண்டு மாதம் கூட ஆகலை. என்னவோ என்னை பார்த்ததிலருந்து விரும்பியவன் அப்பவே பிளான் போட்டு இதை செய்த மாதிரி இருக்கு…” என்று அவளின் எண்ணங்களை வெளியிட்டாள்.
“உனக்கு இப்பவும் டவுட் தனபாலுனு நினைப்பு… ஆமா அவங்க அம்மா இருக்கறதா சொன்ன… தருணேஷ் ஏன் அப்போ ரிச் அனாதை என்று சொல்லணும்?” என்று தேஜூ கேட்டதும், இதே யோசனையில் தான் நான் இருக்கேன். அவனிடம் கேள்வி கேட்க தான் இருந்தேன். ஆனா குரல் சரியில்லை. ஒரு வேளை ஊருக்கு எடுத்து வைக்க செய்துட்டு இருப்பானு விட்டுட்டேன்.” என்று அகமேந்தி கூறவும் தேஜூ பாதி உறக்கத்தில் செல்லவும் அகமேந்தி தருணேஷை முதலில் பார்த்ததிலிருந்து இப்பொழுது வரை நினைவுப்படுத்தி பார்த்தும் அவன் மீது எவ்வுணர்வு வரவில்லை. எப்படியும் திருமணம் ஆனதும் காதல் வருமோ என்று உறங்கினாள்.
இங்கு சைதன்யனுக்கு உறக்கம் பறிப்போனது. பொய்யை மூட்டையாக சொன்னவனுக்கு உறக்கம் இம்மியளவு வருமா…? தருணேஷ் இவ்வூர் விட்டு அகலும் வரை பொட்டு உறக்கமின்றி அவன் மனம் கொல்லுமே.
வசந்திற்கு அதிகாலை குட்மார்னிங் அகி.
சாப்பிட்டியா அகி மா.
இன்னிக்கு லீவ் என்ன சமையல் அகி?
இந்தியா பாகிஸ்தான் ட்வென்டி ட்வென்டி போகுது அகி.
அகி உனக்கு யாரை பிடிக்கும்?
என்று பத்து நிமிடத்திற்கு ஒன்று, தருணேஷ் கேள்வியாக வாட்ஸப் குறுஞ்செய்தி வரவே போன் செய்து சைதன்யனிடம், “சார் அவன் லவ்வர்ஸ் கூட கடலை போடற மாதிரி வரிசையா அகி அகினு வழியறான் சார். சார்… என் பொண்டாட்டிக்கிட்ட கூட நான் இப்படி இத்தனை மெஸேஜ் பண்ணலை… எப்படி சார் தொடர்ச்சியா கேட்கறான்.” என்று அழாத குறையாக கேட்டு வைக்க,
“லிசன் வசந்த் பத்து மெஸேஜ் வந்த பிறகு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே பதிலா இதை அனுப்புங்க. என்று ‘கிரிக்கேட் பிடிக்காது. உப்புமா சாப்பிட்டேன்.’ அவ்ளோ தான். ஏற்கனவே சாட் ஹிஸ்ட்ரி கொடுத்தேனே பார்த்திங்க தானே… அதுல இவன் வழிந்து பேசினாலும் அவ ஒரு வரி பதில் தருவா. அதனால அதையே அனுப்புங்க. அவன் ஒன்றும் கண்டுபிடிக்க மாட்டான். அத்தோட அவன் அமெரிக்க போகற போதையில் இருப்பான். அதனால சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலைனா கூட நோ பிராப்ளம்.” என்றதும்
“ஓகே சார்.. அங்க எப்படி சார்? போட்டோ பார்த்து மேரேஜ் என்ற ரீதியில் அகமேந்தி எப்படி பேசறாங்க” என்று வசந்த் கேட்டதும் சைதன்யனிடம் பெரும் அமைதி.
“சார்..சார்…” என்றதும்
“நோ பிராப்ளம் வசந்த். எனக்கு தான் சங்கடமா பேசற மாதிரி இருக்கு. மற்றபடி ஓகே.” என்றான் சைதன்யன்.
இருவரும் வைத்திட, அகமேந்தியிடம் இருந்து மாலை வரை எந்தவொரு மெஸேஜூம் வராமல் போனது. அதற்கு சைதன்யன் சந்தோஷம் தான் பட்டான்.
அவளாக தருணேஷ் மீது காதல் கொள்ளவில்லையே…
அன்று தருணேஷ் கிளம்பும் நேரம் அகமேந்தியை ஏர்போர்டில் வந்து வழியனுப்ப கேட்க வசந்த்தோ அகமேந்தி எண்ணில் இருந்து அனுப்பும் திட்டமாக “வேலை அதிகமாக இருக்கு” என்று முடித்திட தருணேஷ் வீடியோ கால் செய்தான்.
வசந்திற்கு கை உதறி சைதன்யனிடம் வந்து நின்றான்.
அவனோ அட்டன் செய்யாமல் யோசித்தவன், “நீ இந்த இரண்டு மாதம் வீடியோ கால் செய்யாம உன்னை பார்க்காம என்னால இருக்க முடியுதானு பார்க்க போறேன் . அதனால நான் எடுக்கலைனா அகைன் பண்ணாதே. ஒரு நாளைக்கு நானா கூப்பிடும் வரை வெயிட் பண்ணு. உன்னை நான் மிஸ் செய்யுறேனானு பார்க்கணும்.” என்று பதில் தந்து முடித்தான்.
தருணேஷுக்கு அடப்போடி என்ற எண்ணம் துவங்கினாலும், அவனுக்கு சில நிகழ்வு மறக்காமல் துரத்தியது. அதற்காகவே பொருத்து அகமேந்தியின் செயலை சம்மதமாக எடுத்து கொண்டான்.
இங்கு ஒரு பக்கம் ப்ரியங்கா வேகமாக சைதன்யன் கொடுத்த பணியை முடித்து வெற்றிகரமாக பத்திரிக்கை அடித்து பேசும் அளவிற்கு மாறினார்.
ப்ரியங்கா ஒரு முறை அகமேந்தியிடம் சைதன்யன் கண் பார்வையில் பேசி வைத்தாள். அவனும் ப்ரியங்காவை முன்பு போல எடுத்தெரிந்திடவில்லை. இதை செய்யவும் கூட ஒரு மனம் வேண்டும் அது இவர்களிடம் இருக்குயென்றே எண்ணினான்.
அன்று சைதன்யன் வழ்க்கம் போல தன்னிருப்பிடமிருந்து அகமேந்தியை பார்வையால் பருகினான்.
அகமேந்தி இம்முறை இந்த உணர்வை அலட்சியப்படுத்த இயலவில்லை. இங்கு தருணேஷ் இல்லை என்பதை நன்கு அறிவாள். அப்படியிருக்க இந்த முதுகை துளைக்கும் விழிகள் யாருடையதாக இருக்கும்? என்று மெல்ல மெல்ல யாரும் சட்டென சுதாரிப்பதற்குள், அறியா வகையில் கவனமாக கையாண்டு ஒவ்வொருபுறமாக கவனிக்க யாரும் அப்படி பார்க்கவில்லை.
இம்முறை சட்டென அந்த நினைவு வர சைதன்யன் கதவு பக்கம் திரும்ப அவனின் ஜன்னல் கதவு பளீச்சிட அவன் முகம் தான். அவன் பார்வை அவளை தான் துளையிட்டது. இவள் பார்க்கின்றால் என்று தெரிந்தும் அவன் பார்வை மாற்றி கொள்ளவில்லை.
அகமேந்தி சுற்றி ஒருமுறை பார்த்து அவனை பார்க்க அப்பவும் அதே போல பார்த்து தொலைக்க அகமேந்தி முதலாளி என்று எல்லாம் பார்க்காமல் முனங்க ஆரம்பித்தாள்.
”இடியட் என்ன திமிர்… ஆளை பாரு… கண்ணு எடுக்காம பார்க்கறதை” என்று பேச சைதன்யனோ ராஜ தோரணையில் கால் மேல் கால் போட்டு, ஒரு கையில் தாடைக்கு முட்டுக்கொடுத்து இருந்தவன் அவளை சொடக்கிட்டு வா என்பதாய் சைகையில் சொல்ல, பதறி எழுந்து அவன் அறைக்கு வந்தாள்.
அவள் மனமோ ‘ஏதாவது கேட்கட்டும் நீ இனி பார்த்த கண்ணை நோண்டிடுவேன்னு சொல்லணும் என்றவாறு நிற்க, “உட்கார்…” என்றான்.
“என்ன பார்க்கும் பொழுது எல்லாம் ரூமை ரவுண்ட் அடிக்கிறாப்பள வேடிக்கை பார்த்துட்டு இருக்க. என்னாச்சு உனக்கு..?” என்றதும்
“இல்லை சார் நீங்க தான்…” என்றவள் பேச்சை முழுங்கி., “யாரோ அடிக்கடி பார்க்கிற மாதிரி பீல் சார். அதான்… யாருனு…” என்று சொல்லிவிட்டாள்.
“லுக் அகமேந்தி… இது உட்கார்ந்த இடத்துல வேலை… ரிலாக்ஸ் பண்ண அடிக்கடி யாராவது கழுத்தை திருப்பி வேடிக்கை பார்ப்பாங்க. அதனால எல்லாம் நம்மை தான் பார்க்காங்க என்று வேலையை ஓபி அடிக்க கூடாது. நானும் உன்னை வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். நீ இது மாதிரி நிறைய முறை பண்ணிட்டு இருக்க. திஸ் இஸ் லாஸ்ட். கோ” என்றதும் அகமேந்தி “சாரி சார்” என்றுரைத்து குழப்பவாதியாக தன் இடம் வந்து சேர்ந்தாள்.
அழுகை வந்து அடைத்தது.. என்னை போய் ஓபி அடிக்கிறேன்னு சொல்லிட்டானே… நான் எல்லாம் இருபத்தி நான்கு மணி நேரம் வேலைக் கொடுத்த கூட செய்து விட்டு போவேன். என்னை போய்…” என்றவளின் மனம் அதே போல முதுகில் ஊர்வதை உணர்ந்தாலும் திரும்பி பார்க்கவில்லை.
இங்கு தருணேஷ் வந்த வேலையில் தினமும் நேரம் போனது. அதுவும் வேலை நேரம் போக மற்ற நேரத்தில் ஊரை சுற்றி காட்ட அங்கே ஓர்க் செய்யும் பெண்ணின் நட்பும் மற்றவர்களுக்கு கிடைத்தது. அதனால் வந்ததும் அகமேந்திக்கு ஒர் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பி இருந்தான். அதன் பின் அமெரிக்க மோகமும், அவ்வூரில் இருந்த பெண்ணின் பழக்கமும் ஆர்வத்தோடு ஊர் சுற்றுவதில் இருந்தது.
வசந்திற்கு அப்பாடா என்றிருந்தது. ஒரு பெண்ணா… ஒரு நம்பரில் இருந்து மெஸேஜை மெயின்டெண்ட் பண்ண முடியலையே… அதெப்படி பெண்கள் பேர்ல பேசறவன் எல்லாம் ஐடியை மெயின்டன்ட் பண்ணுவாங்க. அடச்சாமிகளா… இதெல்லாம் ஒரு பொழப்பா என்பது போல இருக்கு. இதையே மெயின் வேலையா சுத்தறவன் எம்புட்டு கேவலமான ஜென்மமா இருப்பான். ஸ்சப்பா… இந்த சைதன்யன் சாருக்கு கல்யாணம் முடிவாகறதுக்குள்ள’ என்று சலிப்படைந்தான்
சைதன்யன் அதிகம் பேசவில்லை… அளவோடு நின்று கொண்டான். என்ன பேசினாலும் அது தருணேஷை எண்ணி பேசுவது என்பதால் அவனுமே தவிர்த்து முடித்தான்.
அன்று வித்யாதரன் மாப்பிள்ளை பெண் பார்த்து முடிக்காமல் அடுத்தகட்டம் செல்ல தயங்கினார். அது ப்ரியங்கா மூலமாக சைதன்யனுக்கு தெரிய வர, இரவே வித்யாதரன் ஊருக்கு புறப்பட்டான்.
அதிகாலை சென்றவன் வாசலில் கல்பனாபாட்டி தான் தண்ணீர் தெளித்து கொண்டிருக்க, சைதன்யன் காரில் இறங்கவும் மாப்பிள்ளை என்ற ரீதியில் பதட்டத்துடன் வரவேற்றார்.
வித்யாதரனுமே சந்தோஷத்தோடு வரவேற்றார்.
முதலில் ரெப்பிரெஷ் ஆவதற்கும் காலையுணவு பரிமாறியபடியும் நிறைய பேசினார்கள்.
வித்யாதரனுக்கு சைதன்யனின் பழக்க வழக்கத்திலும் பேச்சிலும் அந்த நேரங்களிலே பிடித்திருந்தது.
அப்படியே வயல் வரப்பில் நடந்து இடங்களை சுற்றிபார்த்தபடி அகமேந்தியை பற்றியும் அவள் பணிப்புரியும் இடத்தை பற்றியும் பேசியவர். திருமணத்துக்கு பிறகு உங்கயிஷ்டம் வேலைக்கு போவதும் வேண்டாமென்பதும் என்று கூறி முடித்தார். அகமேந்திக்கு போன் போட்டு நீங்க இங்க வந்ததை ஒரு வார்த்தை சொல்லறேன்” என்றவரின் போனை தடுத்து நிறுத்தினான்.
“மாமா…. நான் சில விஷயம் உங்களிடம் பேசிடறேன். அதுக்கு பிறகு அகமேந்தியிடம் பேசுங்க. என்னை தப்பா எடுத்துக்காதீங்க…” என்று சில விஷயத்தை தயங்கினாலும் மொத்தமாய் கூறி முடித்து நின்றான்.
வித்யாதரனுக்கு தலைவலி ஆரம்பித்தது. “என்னய்யா… சொல்லறிங்க… என் மகள் போட்டோ பார்த்தது உங்களை இல்லையா? அவளுக்கு நீங்கள் பேசுறதுனு தெரியாதா? அந்த பையன் பேர்ல நீங்கனா… நாளைப் பின்ன கல்யாணத்தப்ப பிரச்சனை தானே வரும். அய்யோ…. ஏற்கனவே அவளை பொண்ணு பார்க்க வந்தவன் விபத்துல இறந்ததுக்கே இந்த ஊர் இன்னமும் பேசிட்டு தான் இருக்கு. இதுல இப்படி கல்யாணதன்று என்ன நடக்கும்னு புரியலையே….” என்று வரப்பிலே அமர்ந்து புலம்ப ஆரம்பித்தார்.
அவருக்கு அகமேந்தி விஷயத்தில் சற்று கலக்கம் உண்டாக பதினொன்று மணி வெயிலில் கண் சொறுகியது.
அவரை கைத்தாங்கலாக அருகே இருக்கும் ஆலமரத்தடியில் அமர வைத்தவன் அவர் சுவாதீனமாக நேரம் கொடுத்தான்.
“மாமா… உங்களுக்கு நான் அகமேந்தியை திருமணம் செய்லதில், ஏதாவது அப்ஜக்ஷன் இருக்கா…” என்று வினவினான்.
சைதன்யனை பார்த்து சற்று நேரம் கழிய, “நீங்க என் மகளுக்கு பொருத்தம்னு சந்தோஷப்படுவதா என்று இப்ப சொல்ல முடியலை. நீங்க சொன்னதை வைத்து பார்த்தா அந்த பையன் பற்றி எனக்கு எதுவும் பதிலளிக்க முடியலை. இதுல என் மக மனசு… அவ உண்மை தெரிந்தாலோ இல்லை… நீங்க மாப்பிள்ளை என்று அறிந்தாலோ அவ எப்படி எடுத்துப்பா நினைத்தாலே கலக்கமா இருக்கு.” என்றார்.
“உங்களுக்கு இதுல பிரச்சனை வராது. அந்த தருணேஷ் பிரச்சனை பண்ண மாட்டான். நான் அதுக்குள்ள அவனை சரி கட்டிடுவேன். அகமேந்திக்கு நான் தாலி கட்டுவதற்கு முன்னவே புரியவேப்பேன். அவ கல்யாணம் தடைப்படாது. அப்படியும் அகமேந்தி நான் சொல்வதை கேட்கலனா தருணேஷே கட்டி வைச்சிட்டு நான் ஒதுங்கிடறேன். நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றான் திடமாக.
“இப்ப கல்யாணம் நாள் நெருங்க என்ன நடக்குமோனு பயமா தான் இருக்கு. அந்த ப்ரியங்கா… அவங்க…?”
“அவங்க நடிக்க தான் கூப்பிட்டேன். அம்மா மாதிரி என்றாலும் நான் தனி மனிதன் மட்டும் தான். என்னால யாரையும் உறவாக ஏற்க முடியாது.” என்று பதிலை கூறியதும் கல்பனா பாட்டி வீட்டிலிருந்து அழைப்பது கேட்டதும் இருவரும் நடந்தனர்.
சந்தோஷமாக தன்னை வரவேற்றவரை குழப்ப மனநிலைக்கு தள்ளிவிட்டு கூடவே வந்தான் சைதன்யன்.
“மாப்பிள்ளை எங்க அம்மாவிடம் எதையும் சொல்ல வேண்டாம். இல்லைனா…. ஏதாவது புலம்ப ஆரம்பிக்கும். அகமேந்தி போன் செய்தா உளறிடும்.” என்று கூறவும் மாதவன் போல உதடு பிரித்து சிரித்து நின்றான் சைதன்யன்.
அதன் பின் இரவு கிளம்பும் வரை சைதன்யனை முன்னுக்கும் அதிகமாக கவனிக்க செய்தார். அவனின் நடை உடை பாவனை எல்லாம் கண்டு பிடித்தம் கூடி கொண்டு போனது. பிடிக்க வேண்டி மகளுக்கு மறுக்க காரணம் இருக்கின்றதே.
அவள் காதலிப்பதாக நினைப்பது தருணேஷை அல்லவா?!
-சுவடு பதியும்.
-பிரவீணா தங்கராஜ்.

Very intresting sis
But why this drama?
Apdi yenna sonnan avarkitts
athuvarai ena unmai nu avar kitta solli thapichita , papom mrg apoena nadakuthunu aki ethukanume