💟-7
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இரு வார காலம் செல்ல அகமேந்தி அடிக்கடி பேச முனைய சைதன்யன் முடிந்தளவு தவிர்த்தே இருந்தான்.
அகமேந்தியோ, “கல்யாணத்துக்கு பிறகு வேலை விட போறேன் பா. இந்த சைதன்யன் என்னை முறைத்து பார்த்துக்கிட்டே இருக்கார்.” என்று அனுப்பினாள்.
தன் பெயர் இடம் பெற்றதும் ஒரு புன்னகை உதட்டில் இடம் பெற்றது.
“ஏன் என்ன ஆச்சு…? என்று அனுப்பவும்.
“சைட் அடிக்கிற மாதிரி தெரியுது. நான் திரும்பினா… முகத்தை ஸ்டோன் மாதிரி வைச்சிக்கிட்டு ரியாக்ட் பண்ணறான்.”
“ஸ்டோனா… ஹாஹா… நீ பார்த்தியா… எப்பவும் அப்படி தான் இருக்கா சைதன்யன் பேஸ்?” என்று பேசவும்.
“அப்படி சொல்ல… முடியாது. செம ஹாண்ட்சம். முதல் தடவை நாம சந்திக்க நேர்ந்ததே அந்த பப் இன்சிடெண்ட் அப்ப பார்த்தேன்.
பப்ல வந்த பெண்ணுக்கு டிரஸ் எல்லாம் கொஞ்சம் டெர்ட்டி ஆகிடுச்சு அதுது… எப்படி சொல்ல… லேடிஸ் ப்ராப்ளம்… அது தெரியாம வந்து இருப்பா போல சடனா எப்படி மெனேஜ் பண்ணறதுன்னு அவளுக்கு தெரியலை…
ஏன் எனக்கும் என்ன ஹெல்ப் பண்ணறதுன்னு சத்தியமா தெரியலை… ஆனா சைதன்யன் அவனோட ஓவர் கோட் கழட்டி கொடுத்து அந்த பொண்ணோட கார் வரை கொண்டு சென்று விட்டான்.
அதுவும் இல்லாம கோர்ட் வாங்கிக்கலை. அப்ப தோன்றிச்சு… சே… இத்தனை பேர் லேடிஸ் இருக்காங்க. எத்தனை பாய்ஸ் இருக்காங்க எவனுக்காவது தோனுச்சா… இதுவும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட சாதரண விஷயம் அதில அருவருப்பட ஒன்றுமில்லை. கேஷுவலா ட்ரிட் பண்ணலாம்னு அப்போ அவனை பார்த்து இம்ப்ரஸ் ஆனேன்.
அப்போ எல்லாம் அவனோட பேஸ் கியூட்டா இருக்கும்.” என்று முடிக்க சைதன்யன் பேச்சடைந்து நின்றான்.
“ஏய்…. லைன்ல இருக்கியா…” என்றதும்
“ஸ்வீட் ஹார்ட் கேட்டுட்டு தான் இருக்கேன்.” என்றான் சைதன்யன். நெஞ்செங்கும் பரவசம் அடைந்தான்.
“அப்போ… நீ.. முதல் முறை ஆபிஸ்ல பார்க்கறப்ப எப்படி பீல் பண்ண..?” என்றான்.
“நான் எங்க பீல் பண்ணினேன். அவர் பேசியதில் எதையும் காதுல வாங்கலை. அவரை இங்க பார்த்ததில் சந்தோஷமா… இல்லை இவரா என்ற ஆச்சரியமா என்னை பேச முடியாம பண்ணிடுச்சு. பாதி என்ன பேசினாருனு இன்னிக்கு வரை தெரியாது.” என்றாள் அகமேந்தி. அவள் தருணேஷிடம் சைதன்யனை பற்றி கூறிகொண்டிருப்பதாக எண்ணி பேசிக்கொண்டிருக்க, சைதன்யனுக்கு அவனை பற்றி இவள் வாயால் கூறி கேட்க இந்த உலகத்தில் சஞ்சரிக்காமல் பிரபஞ்சத்தின் கோளில் மிதந்தான்.
“அடுத்தடுத்த நாள் அவரை பார்த்து இரண்டு பெண்கள் லிப்ட்ல ஏறலை அப்ப என்னயிது… ஏன் வரலை என்று யோசித்தேன். அவர் வந்தார். எங்க அவரை பார்த்தா… பப் இன்சிடெண்ட் அகைன் அண்ட் அகைன் ஞாபகம் வந்தது. க்ரஷ் அதிகமாகிடுமோனு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு லிப்ட் எப்படா திறக்கும்னு வெயிட் பண்ணினேன்.” என்றாள்.
சைதன்யனின் மேல் தனக்கு க்ரஷ் இருப்பதை எண்ணி தருணேஷிடம் உளறியதை பிறகே அறிந்து, “ஏய் என்னப்பா… நான் அவர் மேல க்ரஷ்ஷா இருக்குனு சொல்றேன். உனக்கு கோபம் வரலையா…” என்று சந்தேகம் வந்து கேட்டாள் அகமேந்தி.
“சே.. சே… நீ மனசில பட்டதை பேசறதே ஆபூர்வம். அதான் நீ பேசறதை கேட்டுட்டு இருக்கேன்.” என்றான் சைதன்யன்.
அகமேந்திக்கோ தன்னை அவன் தவறாக எண்ணவில்லை என்றதிலே நிம்மதியடைந்து கொண்டாள்.
“இப்ப நடுவுல யாரோ நோட் பண்ணறாப்பள தோனுது தருணேஷ். நான் சுத்தி சுத்தி பார்க்கறப்ப எல்லாம் அவரிடம் மாட்டிக்கறேன். வேலை பார்க்காம ஓபி அடிக்கிறியானு கேட்டுட்டார். கொஞ்சம் சங்கடமா போச்சு..” என்றாள்.
சைதன்யன் “ஏன்… என்ன சங்கடம்?” என்று கலங்கி போய் கேட்டதும்,
“பின்ன அவரை மனசுல க்ரஷ்ஷா நினைச்சிருக்கேன். அவரிடம் போய் பேட் நேம் வாங்கினா… அதுவுமில்லாம நான் ஓபி எல்லாம் பண்ண மாட்டேன். இந்த ஆறு மாசத்தில… இல்லயே… ஏழு மாசத்தில் ஒருநாள் கூட லீவ் போடலை தெரியுமா. அதுவுமில்லாம போன மன்த் கொடுத்த ஓர்க்க இருபத்திஐந்து நாள் முன்னவே முடிச்சி கொடுத்தேன். இதுக்கே அந்த க்ரஷ் எனக்கு கிப்ட் தரலாம் ” என்றதும் சைதன்யன் முறுவலிட்டு அதை கணக்கிட்டுக் கொண்டான்.
“அப்பறம் என்ன அங்க போனா க்ரஷ் இருக்கறதால் உன்னை கூட மறந்துடுவேன்.”
“யூ மீன் சைதன்யன் இருக்கறதால? சரியா…?” என்றான்.
“ஆமா… தருணேஷ்…” என்றதும் சைதன்யன் சில நொடி யோசித்து, “ஏய்… ஸ்வீட் ஹார்ட்… என்னை தருணேஷ்னு கூப்பிடாதே… க்ரஷ்னு கூப்பிடறியா?” என்றான்.
அக்குரலில் மாயவித்தை கலந்து குழைந்து சொன்னானா? அல்லது அதீத எதிர்பார்ப்பை வார்த்தையில் தேய்த்து கேட்டானோ அகமேந்தி அடுத்த நிமிடத்தில் “ஓகே” என்றாள்.
நேரத்தை பார்த்து அவனே “போய் சாப்பிடு. மாமா கூட பேச மறந்துட்ட பாரு. பேசிட்டு சாப்பிட்டு தூங்கு.” என்றான்.
அகமேந்தி உள்ளத்தில் இருந்த க்ரஷ் பற்றி வெளியில் கூறியதாலோ என்னவோ மனம் இலகுவாகி தந்தைக்கு அழைத்து பேசினாள்.
அவள் பேசியதை ரெக்கார்ட் பண்ணி திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்தான்.
நான் தான் உன்னை பார்த்துட்டு இருந்தேன். அதனால தான் பிரச்சனையோனு கூட பயந்தேன். பரவாயில்லை…. நீ என் மேல க்ரஷ் இருக்குனு சொல்லியிருக்க, இந்த க்ரஷை காதலா மாற்றி காட்டுவேன்.
தருணேஷ் மேல எந்த பீல் இல்லை… ஆனா என் மேல க்ரஷ்.. எனக்கு இது போதும் ஸ்வீட் ஹார்ட்.
இன்று பேசிய தருணேஷ்(சைதன்யன்) பேச்சு… அகமேந்திக்கு பிடிக்கவே செய்தது.
தேஜு அவளின் காதலன் பெயரான கிஷோர் என்பதை கீ என்று மாற்றி இருப்பதை பார்த்தவள், தருணேஷ் பெயர் மீது வராதா ஈர்ப்பு ‘க்ரஷ்’ என்றதில் வரவும் தருணேஷ் என்ற பெயரை அழித்து ‘க்ரஷ்’ என்று சேவ் செய்தாள்.
சந்தோஷத்தோடு உறங்கியும் போனாள்.
அடுத்த நாள் அலுவலகம் வந்தப்பொழுது, அவளின் டீமில் இருந்தோர், அகமேந்திக்கு வாழ்த்து தெரிவித்து கைகுலுக்க, அகமேந்தி விழித்து முடித்தாள்.
“என்ன… எதுக்குப்பா… விஷ் பண்ணறிங்க?” என்று புரியாது நிற்க, அவள் அருகே நின்றிருந்த பெண் அவளை நோட்டிஸ் போர்ட்டு அருகே அழைத்து சென்றாள்.
“சீ… நீ லீவ் போடாம வந்ததாலும். ஓர்க் இயர்லியா சப்மிட் பண்ணியதாலும் உனக்கு சேலரி இன்கிரிஸ் அண்ட் பெஸ்ட் ஓர்க்கர் என்றும் தரப்போறாங்க.” என்றதும் அகமேந்தி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக வாயடைந்து நின்றாள்.
சின்னதாய் சலசலப்பு துவங்க, திரும்பி பார்த்தாள் அங்கே சைதன்யன் கூலர் அணிந்து வந்து கொண்டிருந்தான்.
“ஹாய்… என்ன கூட்டம்?” என்று அறியாதவன் போல கேட்டு நோட்டிஸ் போர்டு பார்த்து, “ஓ… காங்கிராட்ஸ் அகமேந்தி… ம்ம்… உங்களோட சேர்ந்து இரண்டு பேரையும் தேர்ந்து எடுத்து இருக்கோம். மதியம் உங்களுங்கு டீம் லன்ச் ஏற்பாடு பண்ணியிருக்கேன். ஜாய்ன் வித் மீ” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
‘ஒரு சின்ன ஸ்மையில் பண்ணி சொன்னா என்னவாம். ஆளை பாரு” என்று முனங்க, பாதி தூரம் சென்றவன் திரும்பி சின்னதாய் புன்னகை செய்தான்.
அகமேந்தி உதடு தானாக விரிந்தது.
மதியம் சொல்லியது போலவே டீம் லஞ்ச் ஏற்பாடு செய்து இருந்தது. எல்லோரும் வந்திருக்க, நாயகன் வருகைக்காக காத்திருந்தனர்.
தன் சிகையை ஒதுக்கி காத்திருந்தவள் வாசலை பார்த்த கணம் சைதன்யன் வருகை என்று வருகையிடவும் இமைக்க மறந்து நின்றாள்.
பேரர் கதவை திறக்க அதற்கு ஒரு நட்பு புன்னகை சிந்தியவன் அருகே வந்து ஒற்றை புருவம் ஏற்றி இறக்காமல் பார்த்து வைக்க, இவளோ ‘ஒன்றுமில்லை…’ என்று தலையசைத்து பதிலாகி சொன்னாள்.
“எதுக்கு அகி தலையசைக்கிற?” என்று அருகேயிருந்தவள் கேள்வியெழுப்பவும் தான் அவனின் செய்கைக்கு பதில் தருவது புரிந்தது.
“உங்களோட உழைப்பும் அன்பும், இந்த டீம் ஒர்க்… எல்லாமே நம்ம அலுவலகத்தோட வளர்ச்சி தான். அதுக்கான பலன் தான் இது. இது இந்த விருந்தோட முடியாது. தொடர்வோம்…. உங்களோட சப்போர்ட் என்றும் வேண்டும். விருப்பப்பட்டதை கேட்டு சாப்பிடுங்க. சியர்ஸ்….” என்று பருக, அவன் எதிரே அமர்ந்திருந்த அகமேந்தி அந்த பானத்தை கையில் எடுத்தாள்.
சைதன்யன் அவள் கையில் இருப்பதை பார்த்ததும், மற்றவர் அறியாத வகையில், “அது ஒயின்… ஸ்வீ.” என்று ‘ஸ்வீட் ஹார்ட்’ முழுமையாடையாது நிறுத்த, அவனருகே குனிந்தவள் மெல்லிய குரலில், “எனக்கு டேஸ்ட் பண்ண ஆசையா இருக்கு. நீங்க தானே விருப்பப்பட்டதை சாப்பிட சொன்னிங்க.” என்று கூறி மெல்ல சிப் செய்ய துவங்கினாள்.
சைதன்யன் தன்னிருப்பிடத்தை சுற்றி ஒரு பார்வையிட்டவன் அவளின் செய்கையை கடினப்பட்டு ஏற்றான்.
மீண்டும் பருக துவங்க, ‘ஸ்வீட் ஹார்ட் என்னடி பண்ணற’ என்றவன் தனது பானத்தை தொடவும் பிடிக்காமல் தள்ளி வைத்தான்.
அனைவரும் சாப்பிடும் ஆர்வத்திலும், உணவுகள் வித்தியாசமான முறையில் அலங்கரித்து வைத்திருப்பதிலும் கவனம் சென்றது.
நண்டு லாலி பாப் எடுத்து சுவைத்தவள் சாஸ், மயோனஸை பாதிக்கு மேலாக காலி செய்ய உள்ளுக்குள் அவளை எண்ணி சிரித்து கொண்டே அவள் புறம் மயோனஸ் கப்பை தள்ளி வைத்து இருந்தான்.
சாப்பிட்டு முடித்து கை அலம்ப கப்பில் வெந்நீரோடு லெமன் இருக்க, “அப்படியே உப்பு சர்க்கரை வைச்சிட்டா… இதையே ஜூஸ் போட்டு குடிச்சிடலாம்.” என்று அகமேந்தி கூறவும் சைதன்யன் தன்னையறியாது சிரித்தபடி அவளை பார்த்து வைக்க, “ஹீ.. ஹீ… ஹீ… எங்கவூர்ல இதை ஜூஸா ஆகிடலாம்.” என்று அசட்டு தனமாக சிரித்தாள்.
சைதன்யன் இதற்கு மேல் இருந்தால் தன்னிலை வெளிப்பட்டு விடும் என்பதாலே விரைவாக நன்றி கூறி விடைப் பெற்றுக் கொண்டான்.
சைதன்யன் காரில் ஏறி அவளுக்கு வாட்ஸப்பில் பேசலாமா என்று எண்ணி வேண்டாம் அப்பறமா பார்த்துக்கலாம் என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அவனை வரவேற்றது என்னவோ ப்ரியங்கா தான்.
இவங்க எதற்கு இங்க வந்தாங்க என்று உள்ளே வந்தான்.
“நீங்க எதுக்கு இங்க வந்திங்க. ஏதாவது என்றால் வசந்திடம் சொல்லி விட்டு இருக்கலாமே. என்ன விஷயம்.” என்றான் அமர்ந்து.
“இந்த வீட்டுக்கு எதுக்கு வந்திங்கனு கேட்கலாமா? எனக்கு இங்க வர உரிமை இருப்பதா நினைவு.” என்று ப்ரியங்கா கோபத்தை அடக்கி பேசினாள்.
“உரிமையோட வருவதா இருந்தா நான் சொன்ன கண்டிஸன் நினைவு இருக்கணும்.” என்றான் போனை பார்த்தபடியே…
“அந்த பொண்ணு அகமேந்தியை நம்ம ஆபிஸ்ல ஒர்க் பண்ணற தருணேஷ் விரும்பறானா?” என்று கேட்டு பதிலோ இல்லையென வர மனதிலே வேண்டினாள்.
“ஆமா… இப்ப என்ன?” என்றான் எரிச்சலோடு.
“இது தப்பு தானே… ஏன் இப்படி பண்ணற. அவனுக்கோ… அகமேந்திக்கோ… நீ பண்ணறது தெரிந்தா நெருடலா இருக்கும்.” என்று ப்ரியங்கா தன்னை கட்டுப்படுத்தி வைத்து பேசினாள்.
“நெருடல்…. இது இருப்பதா எனக்கு தெரியலை. சில பேர் இருபது இருபத்தினெந்து வயது வரையும் நெருடல் இல்லாம இருக்காங்க. நான் பார்த்து இருக்கேன். அதனால இது தப்பில்லை.” என்றவன் அவன் பாட்டிற்கு அறைக்கு சென்றான்.
ப்ரியங்காவிற்கு தான் ஏன் கேட்டோம் என்ற ரீதியில் அசௌவுகரியமாக அவ்வீட்டை விட்டு வெளியேறினாள்.
யார் மூலமாகவோ தருணேஷிற்கு இன்று சைதன்யன் அலுவலகத்தில் லன்ச்சிற்கு ஏற்பாடு செய்ததாகவும் அதில் அகமேந்தி கலந்து கொண்டதும், அவளுக்கு பெஸ்ட் ஒர்க்கர் என்ற நற்சான்றிதழும் அளித்ததை அறிந்து வாட்ஸப்பிற்கு கால் செய்தான்.
வசந்தோ அதனை எடுக்காமல் கட் செய்து வாட்ஸப்பில் என்னவென கேட்டான்.
“இன்னிக்கு ஆபிஸ்ல லஞ்ச்சா…? ட்ரிங் பண்ணினியா…? ஆமா இதுநாள் வரை இப்படி புதுசா டீம் ஒர்க் பாராட்டி எதுவும் ஆபிஸ்ல நடக்காதே. என்ன புதுசா….?” என்ற கேள்வியை பக்கம் பக்கமாக கேட்டு வைத்தான்.
அனைத்தையும் சைதன்யாவிற்கு பார்வேர்ட் செய்து முடித்து சைதன்யன் என்ன பதில் அனுப்புகின்றானோ அதை அனுப்ப காத்திருந்தான் வசந்த். அதனால் போனில் என்ன பதில் என்று காதில் வைத்து கேட்டான்.
“‘சோ வாட் இது ஐடி பீல்டு நீ தண்ணி அடிக்க தானே செய்வ. நீ செய்தா தப்பில்லை. நான் செய்தா தப்பா. என்னிடம் பேசாதே. ஆபிஸ்ல ஸ்பையா வைத்திருக்க… இனி பேசாதே..’ இதை அப்படியே அனுப்பு கொஞ்ச நாள் அவனிடம் பேசாதே… கோபத்துல இருப்பதா இருக்கட்டும்.” என்று சொன்னான்.
சரியென்று வசந்த் அதே பதில் தந்து அனுப்பினான்.
அதன் பிறகு, சாரி சாரி அகி என்று பலமுறை அனுப்பி முடித்தான் தருணேஷ். அதையும் கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துடவா? என்று யோசனையில் கேட்டான் வசந்த்.
“வசந்த் காரியத்தை கெடுக்காதீங்க. போன் சுவிட்ச் ஆப் ஆனா அவன் ஜிமெயில் வர்ற வாய்ப்பு இருக்கு. நல்லவேளை அகமேந்தி FBல எல்லாம் இல்லை. இருந்தாலும் போனை சுவிட்ச் ஆப் பண்ணிடாதீங்க. எப்பவும் அதுல காண்டக்ட் பண்ணினா பதில் பண்ணுங்க. இல்லைனா அடுத்த சோஷியல் மீடியா மூலமா பேச முயற்சிப்பான்.” என்று தெளிவுப்படுத்தினான்.
-சுவடுபதியும்.
-பிரவீணா தங்கராஜ்.

Agi really u love sainthu. But u didnt realise it. Very intresting sis. Sema twist.
Dei konjam ushara erunthiruntha ava epaya unn recharge vachu kandu pudichirukkanumchanges..
theliva move panra chaithu but ithu enga kondu poi mudiya pogutho