அத்தியாயம்-10
ஆரத்ரேயன் கல்லூரி வந்ததும் தனக்கான வருகைப் பதிவில் கையெழுத்து போட்டு முடித்தான்.
வகுப்பறைக்குள் வரும் பொழுது தலைமை பண்பில் இருக்கும் மாணவன் ஒருவன் டான்ஸ் ஆடி முடித்தான். மறுபக்கம் இருந்த குழுவோ “ஏ…” என்று கத்தினார்கள்.
ஆத்ரேயன் காதை தேய்த்து வந்தவன், சைலண்ட் என்று அதட்டினான்.
வகுப்பு தலைவன் இப்படி கல்லூரியில் ஆடலாமா? என்று கடியும் விதத்தில் “என்ன ரஞ்சித் நீயே கிளாஸை கவனிக்காம ஆடிட்டு இருக்க?” என்று கேட்டான் ஆத்ரேயன்.
வகுப்பு தலைவனோ, “இல்லை சார் எப்பவும் காலேஜிக்கு புரப்பஸர் லேட்டா வந்தாலும், இல்லை எக்ஸ்ட்ரா ப்ரி பீரியட் கிடைச்சாலும் இந்த கேம் விளையாடுவோம். நேத்து விளையாட்டு பீரியட்ல ட்ரூத் ஆர் தேர் விளையாடினோம் சார்.
நேத்து நான் டேர் பண்ணறேன்னு சொன்னேன். பசங்க எல்லாம் கிளாஸ்ல டான்ஸ் பண்ண சொன்னாங்க. அந்த நேரம் ப்ரின்சிபால் வந்துட்டார். அதான் இப்ப ஆடினேன்.” என்றதும் ஆத்ரேயன் உட்காரு” என்றவன் அட்டனன்ஸ் எடுத்து பேசியதால் பத்து நிமிடம் கழிந்தப் பின் மிச்ச மீதி பாடத்தை நடத்தினான்.
அந்த பாடம் சேப்டர் இருபது நிமிடத்தில் முடிவுற்றது.
இனி அடுத்த பாடம் நாளை தான் துவங்க வேண்டும். கடிகாரத்தை பார்க்க இன்னும் கால் மணி நேரம் கூடுதலாக இருக்கவும் மாணவ மாணவியரிடம் பேச ஆரம்பித்தான்.
இது எப்பொழுதும் வழக்கம். யாருக்காவது சந்தேகம் இருந்தால் மீண்டும் ஏதேனும் நடத்த கூறினால் நடந்தி தெளிவாக்குவான்.
இங்கு மாணவரிடம் கேட்க, “நீங்க நடத்தறது க்ளியரா புரியுது சார்” என்று சந்தேகமில்லை என்றனர்.
ஆத்ரேயனோ “என் வகுப்பு முடிய கால் மணி நேரம் இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று விளையாட்டாய் கேட்டான்.
”சார் ட்ருத் ஆர் டேர் விளையாடலாம் சார்” என்றதும் ஆத்ரேயன் புன்னகை முகமாக, “ஓகே விளையாடுங்க” என்று கூறவும் மாணவர்களிடம் சலசலப்பு.
“சாரை விளையாட கூப்பிடலாமா?” என்றும், “சார் புதுசு எப்படி பழகுவாருன்னு தெரியலை வேண்டாம்.” என்றனர்.
அவர்கள் பேசியதை கேட்ட மாணவிகளோ, ‘சார் பிரெண்ட்லியா தெரியறார். கேட்போம். அப்பறம் டைம் இருக்காது” என்று கூற மற்றவர்களோ “யார் கேட்கிறது?” என்று கேள்வியை திரும்ப, “அய்யோ நான் மாட்டேன்.’ ‘நான் சான்ஸேயில்லை” என்று கூற, “அட நான் கேட்கறேன்” என்று துடுக்குத்தனமான மாணவன் எழுந்தான்.
“சார் நாங்க சம்டைம் விளையாடுவோம் நீங்க விளையாடுவிங்களா?” என்று கேட்டான்.
“டான்ஸு பாட்டுன்னு என் தலையில் கட்டினா நான் ஆடமாட்டேன். இங்க நான் புரப்பஸர். இதே பெஞ்சில உட்கார்ந்து ஏதாவது செய்யணுமா சொல்லணுமா செய்வேன். அதை விட்டு ஆளை விடுங்க” என்றான் ஆத்ரேயன்.
“சார்… ‘டேர்’ நீங்க சொல்லாட்டி எதுவும் செய்யணும்னு அவசியமில்லை சார். அதுக்கு பதிலா ‘ட்ருத்’ சொல்லுங்க.” என்றனர் மாணவிகள்.
“ம்ம்.. ஓகே. நான் எப்பவுமே ட்ருத் தான் பேசறது. என்ன உண்மை சொல்லணும்?” என்று ஆர்வமானான்.
இதெல்லாம் பள்ளி கல்லூரி காலத்தில் விளையாடியது. மீண்டும் இப்படி ஆஃபர் வந்தால் பழைய நினைவை அசைப்போட ஆசை பிறக்காதா?
“சார் சார் நான் கேட்கறேன் சார்” என்று மாணவி எழுந்து நிற்க, “சார் என்ன வேண்டுமின்னாலும் கேட்பேன் பதில் உண்மையா சொல்லணும்.” என்று புதிர் போட, “ஏய் ஒழுங்கா கேளு” என்று பக்கத்தில் இருந்தவள் உரைத்தாள்.
“சார் நீங்க ரொம்ப அழகாயிருக்கிங்க.” என்று ஆரம்பிக்க வகுப்பில் பலத்த சப்தம் ‘சைலண்ட்ஸ்’ என்றவன் “தேங்க்ஸ் மா.” என்றான்.
“உஷ்… அடுத்து கேள்விக் கேட்க வேண்டாமா?” என்று அந்த மாணவி சக மாணவ மாணவிகளை அதட்டி விட்டு, “சார் சின்ன கேள்வி தான். உங்களை எத்தனை பேர் லவ் பண்ணினாங்க? நீங்க யாரையாவது லவ் பண்ணினிங்களா?” என்று கேட்டதும் “சூப்பர் சூப்பர் சூப்பர்” என்ற கத்தல்.
“ஏ அமைதியா இருங்க சார் ஆன்சர் பண்ணட்டும்” என்று வகுப்பு தலைவன் கட்டளையிட்டான்.
பிரணவிக்கு தனக்கு முன்னிருந்த மாணவி எழுந்து பேசவும் ஆத்ரேயன் பார்வை இந்த பக்கம் திரும்ப தலை குனிந்து சற்று திணறி முனனேயிருந்த மாணவியை தான் பார்த்தாள்.
தற்போது அவள் கேட்ட கேள்வியால் ஆத்ரேயன் என்ன பதில் தருவாரென்ற ஆர்வம் உருவாக, மற்ற மாணவிகளை போல அவளும் அவனை நோக்கினாள்.
“இப்படியொரு கேள்வி கேட்பிங்கன்னு நினைக்கலையே. காலேஜ் படிச்சி கட் அடிஞ்சிங்களா? அடி வாங்கினிங்களா? கேட்பிங்கன்னு நினைச்சேன்” என்றவன் கண்ணாடியை துடைத்து போட்டான்.
“சார் சார் சொல்லுங்க சார்” என்று குரல்கள் சுற்றி கேட்க, லேசான புன்னகை உதிர்த்து, “ஸ்கூல் படிக்கிறப்ப ஆறு பேர் காதலிச்சாங்க. இப்ப மாதிரி இல்லை சுவற்றுல பேரை கிறுக்கி ஹார்ட்டின் விட்டு, ஹோம்வொர்க் நோட்ல எழுதி, பிளேம்ஸ் போட்டு, ரெக்கார்ட் நோட்ல கவிதை எழுதி, போர்டுல பையன் பெண்ணு போட்டோ வரைந்து, இப்படி நிறைய ஆனா நான் விரும்பியது இல்லை. நான் ஜஸ்ட் பார்க்கறதோட சரி.
காலேஜ்ல…” என்று இழுத்தவன் ”12 ஆர் 13 பேர் என்னை விரும்பினாங்க. நானா விரும்பியது ஒரு முஸ்லீம் பொண்ணை. ஆனா மதம் மாறி என்னை காதலிக்க அந்த பொண்ணுக்கு பயம். அதனால அப்படியே ஸ்வீட் மெமரியா போயிடுச்சு.” என்று கூறினான்.
“அதுக்கு பிறகு யாரும் காதலிக்கலையா சார்.” என்று ஆர்வமாய் கேட்டது ஒரு குரல்.
“அதுக்கு பிறகும்…. இருந்தது வேலை செய்யற இடத்துல” என்றான்.
“காலேஜ்லயா சார்?” என்றதும் முகம் லேசாக மாறியது. உடனே சரிசெய்து கொண்டவன், “ஆமா” என்றவன் எழ முற்பட்டான்.
“சார் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு சொல்லுங்க” என்று தூண்டிவிட, “இல்லை டைம் ஆகிடுச்சு” என்று நழுவ முற்பட்டான்.
“சார்… புதுசா வந்த புரப்பஸர் நீங்க. இங்க ஜாலியா பாடம் நடத்தறவங்க ரொம்ப கம்மி. நீங்க பிரெண்ட்லி புரப்பஸரா இருங்க சார். சொல்லுங்க ப்ளீஸ். எல்லாம் ஜ்ஸ்ட் ஃபன் சார்.” என்று கேட்டதும் மாணவ மாணவிகளை பார்த்தான்.
தனது கல்லூரி காலத்தில் இது போல பேராசிரியரிடம் பேசி அவர்கள் பதில் கூறினால் நிச்சயம் மகிழ்ந்து உறவாடி நல்ல பிணைப்போடு அந்த ஆசிரியர் வகுப்பை கவனிப்போம். அது போல இன்று நான் பேசுவதால் நாளை என் வகுப்பு யாரும் போரடிக்கு என்று கூறமாட்டார்கள். மாணவ மாணவிகள் ஆர்வமாய் என்னிடம் பாடம் பயில்வார்கள். அதோடு ஆசிரியர் மாணவர் நட்புறவு நட்பாகவே அமையும் என்ற முடிவோடு, செருமிக்கொண்டான்.
“காலேஜ்ல வேலை பார்த்த இடத்துலயும் காதலிச்சிருக்காங்க.
ஸ்டெல்லா மிஸ்.. அவங்க பிசிக்ஸ் புரப்பஸர் கல்யாணமாகாதவங்க ஒரு நாள் வந்து பிரப்போஸ் பண்ணினாங்க.
எனக்கு ஒவர் மேக்கப் பண்ணறவங்க என்றாலே அலர்ஜி. ஸ்டெல்லா ரொம்ப மேக்கப். அதனால் மறுத்துட்டேன்.” என்றான். பிரணவிக்கு ‘அடப்பாவமே அவங்களா?’ என்று வாய் பிளந்தாள்.
அப்பறம்… ஸ்டூடண்ட்ல இரண்டு பேர்… ஒரு பொண்ணு சந்தியா. இன்னொருத்தி மிதுனா. இரண்டு பேரிடமும் வார்ன் பண்ணி திட்டி அனுப்பிட்டேன்.
எப்பவும் ஆசிரியர் மாணவர்(வி) உறவு கலங்கம் வரக்கூடாது.
அதோட இனி யாரும் என்னை விரும்பறேன்னு நெருங்க கூடாதுன்னு எங்கம்மா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க” என்று கூற மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
பிரணவியோ ‘ஆமா ஆமா கல்யாணம் பண்ணி வச்சதும் ரொம்ப அழகா திருமண வாழ்க்கை வாழறிங்க’ என்று அங்கலாய்த்து கொண்டாள்.
“சார் நீங்க கல்யாணம் ஆனவர்னு நீங்களா சொல்லறப்ப தான் தெரியுது. இல்லைனா பேட்சுலர் மாதிரி தெரியறிங்க. பார்த்து சார் இங்க யாராவது புதுசா ஸ்டெல்லா மிஸ் வந்துட போறாங்க” என்று கிண்டலாய் மாணவன் பேசினான்.
ஆறுமாதமாய் பழகும் நெருக்கம் மாணவர்கள் விளையாட்டாய் பேசினார்கள். “ஏன் சந்தியா மிதுனா யாராவது வரக்கூடாதா?” என்று ஒரு மாணவி பேசவும் பிரணவிக்கு கோபம் உண்டானது.
ஆத்ரேயன் அவளை போல முகத்தில் உணர்வை காட்ட முடியுமா? அதனால் சிரிப்பி மழுப்ப பார்க்க, கல்லூரி மணியோசை ஒலித்தது.
தன்னை காப்பாற்ற வந்த ஒலியாக “ஓகே ஸ்டூடண்ட் விளையாட்டு ஓரளவு தான். படிப்புல கவனமா இருங்க. குட்பை” என்றான் ஆத்ரேயன்.
“தேங்க்யூ சார்” என்ற மாணவ மாணவிகள் குரல் ஒன்றாக ஒலித்தது.
‘இந்த காலத்து பிள்ளைங்க நம்ம வாயை பிடுங்கிடறாங்க. ஆத்ரேயா உஷார் டா.’ என்று மதிய உணவை கொறிக்க ஸ்டாப் ரூமிற்கு நடையிட்டான்.
பிரணவி சமையல் ஓரளவு நன்றாக இருந்தது. அதனை சுவைத்து கொண்டே, ‘பிரணவி கோபமா இருந்தாளா? எதுக்கா இருக்கும்? யார்மேல கோபம்? பாவம்… வீட்ல போய் என்னனு கேட்போம்’ என்று எண்ணினான்.
பிரணவிக்கு வகுப்பில் இருக்க முடியவில்லை. பள்ளி காலத்தில் ஆறு பேர், கல்லூரி படிக்கும் போது 13 பேர், வேலை செய்த கல்லூரியில் ஸ்டெல்ல மேம், சந்தியா மிதுனா எனக்கு தெரிந்து என் கிளாஸ்ல மூன்று பேர். அப்பப்ப்பா..
25 கேர்ள்ஸ் பின்னாடி சுத்தியிருக்காங்க’ என்று நினைத்தவளுக்கு கால் சதமா என்ற பயம் கோபம். பயத்தை விட கோபம் அதிகமானது. மனமோ என்ன உரிமைப் போராட்டமா? என்று கேலி செய்தது.
பிரணவிக்கு தங்கள் கல்யாணம் எந்த அடிப்படையில் முடிவாகி எதனை அடியெடுத்து செல்கின்றதென்ற கலக்கம் முதலா முறை தோன்றியது.
இத்தனை நாள் இப்படி அவள் நினைக்கவில்லை. ஆத்ரேயன் சாரை காப்பாற்ற, என் படிப்பு போனது என்று தன்னை தானே தேற்றியவளுக்கு, மிதுனா இருவரை அழைத்து வந்து அச்சுறுத்த தந்தை திருமண பேச்சை எடுத்துவிட்டார்.
சரி மணந்தால் மட்டுமே தந்தை மகிழ்வாரென முடிவு கட்டி சம்மதிக்க, ஆத்ரேயனே பொண்ணு பார்க்க வந்து நின்றதும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் உண்டானது.
ஆத்ரேயன் மறுத்து செல்ல, தந்தை ஒரு வாரம் முடிவெடுக்க அவகாசம் தர, ஆத்ரேயன் பிரணவியின் தந்தை முடிவாக பேசியதும், வேறுவழியின்றி என்ன நினைத்தாரோ மணந்துவிட்டார்.
இன்று வரை படிக்க எந்த தடையும் விதிக்கவில்லை. அதே போல் மனைவி என்று உரிமையும் காட்டியதாகயில்லை.
இப்படியே விட்டால் நாளைக்கு இந்த கல்லூரியிலும் ஒரு மிதுனா முளைக்க மாட்டாளா?
ஆளாளுக்கு ஆத்ரேயன் நடந்து வரும்போது, மற்ற பேராசிரியரோடு சிரித்து பேசும் போது, வகுப்பில் பாடம் நடத்தும் போது, ஏன் அட்டனன்ஸ் எடுக்கும் போது கூட அவனை பெண்கள் விழுங்குவதை அவள் அறிவாளே?!
ஆத்ரேயனை பற்றி நினைக்க நினைக்க கல்லூரி மணி ஒலித்தது.
எப்பவும் ஆடி அசைந்து பேருந்து ஏறி வருபவள். இன்று கடைசி வகுப்பு முடியும் முன் தலைவலி என்று கூறிவிட்டு வகுப்பு ஆசிரியர் அனுமதியோடு வீட்டுக்கு வந்தாள்.
விசிலடித்து வாசல் கதவை திறந்து பைக்கை நிறுத்திவிட்டு வீட்டு வாசலை வந்தடைந்தான்.
தன்னிடம் இருக்கும் சாவியால் கதவை திறக்க முயல, கதவு திறக்கவில்வலை.
யாரோ உள்பக்கம் தாழிட்டதை தாமதமாக கவனித்தான்.
செருப்பு வைக்கும் இடத்தில் பார்வை சென்றது. அங்கே பிரணவி செருப்பு மேலே ஒன்றுமாக கீழே ஒன்றுமாக கிடந்தது.
கடிகாரத்தை பார்த்து, ‘அதுக்குள்ள வந்துட்டா’ என்று ஆச்சரியப்பட்டவன், காலிங் பெல்லை அழுத்தினான்.
பிரணவி கதவை திறக்க, ஆத்ரேயனை நுழைய விடாது நின்றவளை கண்டு, “மூவ் பண்ணு” என்றான்.
“எங்க வாழ்க்கையில இருந்தேவா சார்?” என்று மார்க்கமாய் கேட்டாள்.
-தொடரும்.
Super
Super super super super super super super super 👌
Sutham ivanuku itha na proposal ah Pranavi pavam than iva itha vachi ethachum ketu Athreiyan kobapattu ethavathu solliduvano
Interesting
Yemma pavi ne konjam suma tan iren… Avan edhavadhu sollida poran….
start panita kelvi keka aduthu possessiveness varum super epi
Super sis nice epi 👍👌😍 aha possesive start ayiduchu eni athreya maatina da😂
Interesting👍 super super😍😍😍😍😍
🫰🏼🫰🏼🫰🏼🫰🏼🫰🏼💚💛💛💛💛💛🫰🏼
இப்பதான் மேடம்க்கு பொசசிவே ஸ்டார்ட் ஆகிறதா, இனிமே நம்ம ப்ரொபசர் சார் என்ன ஆகிறார் பார்ப்போம். Moving smoothly
💜💜💜💜💜
அருமையான பதிவு
மௌனமே வேதமா…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 10)
அடப்பாவி..! வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்லியே.. இத்தனை பேர் லவ் இவனை லவ் பண்ணியிருக்காங்க. இதுல இவனா லவ் பண்ணது வேற இருக்கு. இதுல பொண்ணுங்களை சைலண்ட்டா பார்த்து ரசிக்க வேற செஞ்சிருக்கான். நான் கூட இந்த ஆத்ரேயன் என்ன விஸ்வாமித்ரனோ…? பெண் வாசமே ஆகாதோன்னுல்ல நினைச்சிட்டேன். இப்ப பார்த்தா இவன் வண்டவாளம் எல்லாம் வரிசையா தண்டவாளம் ஏறி வருதே….?
போ ராசா போ…! சும்மா இல்லாம சிங்கத்தை சீண்டி வேற விட்டுட்ட. வீட்டுக்குப் போ, உனக்கு ஆரத்தி எடுக்கிறாங்களா…? இல்லை
ஆவ்சம் க்ளாஸ் எடுக்கிறாங்களான்னு பொறுத்திருந்து தானே பார்க்கணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super ahhhh… Professor ku ini thala valithaa… Student ah wife ah nu😂😂😜
செம்ம interesting sagi
Very interesting