அத்தியாயம் – 86
Thank you for reading this post, don't forget to subscribe!ஆராஷியுடன் பேசியதை இப்போதும் யோசித்தவன் அவன் அவளது காதலை உணர்ந்து வந்து இருப்பதை அவன் வாயாலேயே சொல்ல கேட்டவனுக்கு தோன்றியது ஒன்றுதான்.
‘ஆண்டவா சீக்கிரமே இவங்களோட வாழ்க்கையில சந்தோஷத்தை கொடுப்பா’ இதுதான் அவனுக்கு தோன்றியது.
ஆராஷி அனைத்தும் கூறி முடிக்க அனைவருக்கும் ஏதோ ஒன்று மனதில் பாரமாக இருந்ததை போன்று உணர்ந்தனர்.
ஹர்ஷத்க்கு கூட ஆராஷியின் காதலை பார்த்து ஆச்சர்யம்தான்.
“உங்க ரெண்டு பேரோட லவ்வும் கேட்க பொறாமையாவும் இருக்கு அதே நேரம் இப்படியெல்லாம் ஒரு லவ் பண்ண முடியுமானு ஆச்சர்யமாவும் இருக்கு.
ஆனா நீங்க சினிமாக்காரங்க நாங்க பிஸினஸ் வேர்ல்ட்ல இருக்குறவங்க எங்க அப்பா எங்கே பிஸினஸ்ல எங்க எல்லாருக்கும் ஆபத்து வந்துடுமோனு மேதாவை மட்டும் இல்ல வேற யாரையுமே அவரோட வாரிசா ரிவீல் செய்யல ஏன்னா எங்களுக்குலாம் ஏதாவது ஆகிடுமோனு அவருக்கும் எங்க அண்ணனுக்கும் அவ்ளோ பயம். அதனால எங்க அண்ணா எங்களையெல்லாம் அஸிஸ்டெண்ட்னும் அவரை மட்டுமே CEO னும் ரிவீல் பண்ணிக்கிட்டாரு. உங்களுக்கு ஆல்ரெடி உங்க சித்தியால ஆபத்து இருக்குனு உங்களுக்கு பயங்கரமா பாதுகாப்பு போட்டு வெச்சு இருக்காங்க எங்க மேதாவும் அண்ணனும்.
ஆனா உங்க லவ் டிராமாடிக்கா இருக்குமோனு எங்களுக்கு ஒரு பக்கம் யோசனையாவே இருக்கு?” என்று சாஹித்யன் கேட்க
“கரெக்டுடா அண்ணா பாரேன் உனக்கு கூட அறிவுவேலை செய்யுது” என்று அருந்ததி பேச
“வாய முடுடி குரங்கு” என்றான் சாஹித்யன் கோவமாக
“நீ போடா எரும” என்று அவள் கூட பேச அவனும் அவளை பேச இருவருக்கும் சண்டை ஆரம்பம் ஆனது எல்லோரும்
“ஸ்ஸ்ஸ்ப்ப்பா” என்று தலையில் கையை வைத்துக்கொள்ள இரண்டு பேரும் பேச்சு வார்த்தை சரிவராததால் அடுத்து கையால் பேச ஆயத்தம் ஆக
இருவருக்கு இடையிலும் சமாதானம் செய்ய வந்த ரியோட்டோவை இருவரும் இந்த பக்கம் அந்த பக்கம் என பந்தாட அவனை தன் பக்கம் இழுத்த தேஜு
“இவங்க சண்டையில நீங்க போனா உங்களுக்கு தான் அடி பலமா விழும் அவங்களே அமைதி ஆகிப்பாங்க வாங்க போலாம்” என்று கூறி அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்
“இல்லமா அடிச்சுக்க போறாங்கமா ரெண்டு பேரும் என் ஏஞ்சல் பாவம்ல?” என்று அவன் சொல்ல
“அவ ஏஞ்சலா இருக்குறதுலேயே அவதான் குட்டிச்சாத்தான் ஜப்பான் போகும் முன்ன மேதாவும் இவளும் ரொம்ப சண்டை போடுவாங்க இப்போ இவனோட மல்லு கட்டுறா அவளுக்கு யார் கூடவாவது சண்டை போடணும் இல்லனா தூக்கமே வராது ஆனா பாசம் ஜாஸ்தி” என்றபடி அவனிடம் பேசிக்கொண்டே சென்றாள்.
“வாயும் ஜாஸ்தி” என்றான் ஆரா.
அவனை திரும்பி பார்த்த தேஜு இவன் எப்படி நம்மளோட என யோசிக்க அவள் ரியோட்டோ கையை பிடித்து இழுத்து வர அவனோ ஆராஷி கையை பிடித்து இழுத்து வந்து இருந்தான். அவன் பின்னே ஓடிவந்து இருந்தான் ஹர்ஷத்.
“ஃப்பூ” என்று ஊதிவிட்டு ரியோட்டோவை முறைத்த படி பார்க்க அவன் ஈஈஈஈஈ என்று பல்லைகாட்ட பெருமூச்சு விட்டவள்
“மிஸ்டர் ஆரா அவங்க கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல அதனால உங்களுக்கு வேப்பிலை அடிக்காம விடமாட்டாங்க அதனால நாளைக்கு முதல் வேலையா அந்த கேள்விக்கு பதில் சொல்லிடுங்க” என்று தேஜு கூற
“கண்டிப்பா அண்ணி இப்போ நான் வேற ப்ளேஸ் போகணும் பாய்” என்று விட்டு அவர்களை தாண்டி சென்றான்.
அவன் பின்னேயே ஓடினான் ஹர்ஷத்.
நேரே கிளம்பியவன் அவள் கூட்டி சென்ற அந்த டீக்கடை அருகில் தான் இறங்கினான் அங்கிருந்த சிறு ஏரியை பார்த்தபடி அங்கு இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தான்.
கார்ட்ஸ் தொலைவில் இருக்க ஹர்ஷத்தோ அவனுக்கு டீயும் பிஸ்கட்டும் அவர்களையும் டீ குடிக்கும்படி கூறிவிட்டு இருவருக்கும் வாங்கி வந்தான்.
அமர்ந்து கண்களை மூடி அவளுடன் இருந்த நிமிடங்களை நினைவுகூர்ந்தவன் முன் டீயை நீட்டினான் ஹர்ஷத்.
அவனை பார்த்து புன்னகைத்தவன்.
“என்ன ஹர்ஷா நானு சொல்லாமலே டீ வாங்கி வர்றே?” என்று தமிழில் கேட்க அவனது தமிழில் லேசாக சிரித்த ஹர்ஷத்
“இல்ல சர் நீங்க லாஸ்ட் டைம் இந்த ப்ளேஸ்க்கு வந்தப்போ வாங்கி வர சொன்னீங்கல்ல அதான் நானே இப்ப வாங்கிட்டு வந்துட்டேன்.
ஐ தாட் இந்த ப்ளேஸ்ல உங்களுக்கு மேடமோட மெமரீஸ் இருக்கும்னு அதான்” என்று சொல்ல
“நன்தி ஹர்ஷா” என்றவன்
“ஓஓ என் தமில் இன்னும் இம்ப்ரூவ் ஆகலே போல ஐயம் சாரி தேங்க்யூ அண்ட் யூ ஆர் கரெக்ட்” என்றபடி அந்த டீயை கண்மூடி சுவைத்தவன் பிஸ்கட்டை தொட்டு சுவைத்து சாப்பிட்டபடி பேசினான்.
“நான் தமில்லேயே பேச ட்ரை பன்றேன் ஏதாவது தப்பு இருந்தா கரெக்ட் இட் ப்ளீஸ்
உனக்கு புரியுதா?” என்று கேட்க
“சரி சர்” என்றான் ஹர்ஷத் தனது சிரிப்பை அடக்கியபடி
“எனிக்கு தெரியும் மேன் நானு தப்பு தப்பா பேசுதுனு பட் நானு கத்துக்கோனுலே சோ தமில்லே பேசினா தானே கத்துக்கோ முடியோ” என்று அவன் கூற
“அதுவும் சரிதான் சர் பேச பேசத்தான் பழக்கம் வரும்” என்று கூறினான்.
“உனிக்கு தெரியுமோ ஹர்ஷா எனிக்கு ஒன்லி க்ரீன் டீ தான் குடிப்பே
எங்கே அம்மா இருந்தவரே தான் நான் டீ குடிச்சுட்டு இருந்தே அப்புறோ நா அதே ஸ்டாப் பன்னிட்டே பட் மேதா கூடோ இங்கே வந்தப்போ அவ வாங்கி குடிக்கோ வெச்சா ஏன்னு தெர்லே ஆனா அன்னிக்கு எனிக்கு குடிக்கனு போல இருந்துச்சு அதான் குடிச்சே கூடவே இந்த பிஸ்கட் சாப்பிட வெச்சா
இந்த டீ டேஸ்ட்டா இல்ல அவோ சாப்டவெச்ச ஃபீலோ தெரியல என்னமோ எனிக்கு அம்மாகூட சேர்த்து டீ குடிச்ச ஃபீல் அதா மேதாவே மிஸ் பண்ணும்போதே இங்க வர்றே” என்றான் டீயை பருகியபடி.
அவனது உடைந்த தமிழில் கூட அவன் உணர்வு புரிய
யாருக்காக வருந்துவது என்றே எண்ணினான் ஹர்ஷத்.
“ஆனா சர் மேடம்க்கு உங்க மேல கோவம் போய் இருக்கும்னு நினைக்கறீங்களா?” என்று அவன் கேட்க.
அவனை பார்த்து புன்னகைத்தபடி கடைசி பிஸ்கட் துண்டை மென்றவன்
“அவளிக்கு என்மேலே கோவமே இல்ல ஹர்ஷா” என்று அவன் கூற அவனை புரியாதவன்போல பார்த்து வைத்தான் ஹர்ஷத்
“எஸ் ஹர்ஷத் அவளிக்கு என்மேலே கோவமே இல்லே ஃபுல்லா லவ்தா இருக்கு.
பட் சம்திங் ஃபிஷ்ஷி ஷி ஹாவ் வேறே ரீசன் அதா என் கண்ணுலே படக்கூடாதுனு ஒளிச்சு ஓடுறா” என்றான்
“அது அது நான் வேற கேட்கலாமா சர்?” என்று தயங்கியபடி அவன் கேட்க
தலையை அசைத்தான் ஆராஷி
“ஒருவேளை அவங்க வேற ரீசன்க்கு உங்கள விட்டு பிரிஞ்சு போனதா சொல்றீங்களே சப்போஸ் அவங்க வேலிட் ரீசனா இருந்து உங்ககிட்ட வரவே இல்லைனா இல்ல உங்கள மேரேஜ் பண்ணிக்க மாட்டேனு சொன்னா என்ன செய்வீங்க சர்?” என்று அவன் தயங்கியபடி கேட்க
அவனது கேள்வியை நிறுத்தி நிதானமாய் உள்வாங்கியவன்
“இதிக்கு ஆன்சர் எனக்கு தமில்லே எக்ஸ்ப்ளைன் பண்ண தெர்லே சோ ஜாப்பனீஸில்லே பேசுறே” என்றுவிட்டு ஜாப்பனீஸில் பேசத்துவங்கினான்.
“அவ சொல்ற ரீசன் எவ்ளோ வேலிட்டா இருந்தாலும் எனக்கு அதைப்பத்தி கவலை இல்ல. என்னை பார்த்து என் கண்ணை பார்த்து அவ என்னை லவ் பன்னல என்மேல அவளுக்கு இஷ்டம் இல்லனு சொன்னா தவிர வேற எந்த ரீசன்க்காகவும் அவளை நான் விட்டுத்தர தயாரா இல்ல ஹர்ஷத்.
என்மேல வெச்ச லவ்க்காக அவளோட பொஷிஸன்ல இருந்து இறங்கி வந்து என்கிட்ட வேலை செஞ்சவ எனக்காக பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சவ அவ ஏதோ ஒரு சில்லி ரீசன்காக அவளை நான் இழக்க தயாரா இல்ல ஹர்ஷத்” என்று அவன் கூற
“அப்படி அவங்கள கட்டாயப்படுத்தி நீங்க மேரேஜ் பன்னா அவங்க உங்களோட அதே லவ்வோட இல்லனா என்ன செய்வீங்க சர்? ஐ மீன் அவங்க அதே லவ்வோட உங்களோட சேர்ந்து தான் வாழ்வாங்கனு நிச்சயமா சொல்ல முடியாதுல? ” என்றான்
அவனது கேள்வியை பார்த்து ஏதோ புரிந்தது போல உணர்ந்தவன் லேசாக மண்டையை ஆட்டி புன்னகைத்து திரும்பியவன்
“ஹர்ஷத் அவ லவ்வ எனக்கு போதும் போதும்ங்கிற அளவுக்கு கொடுத்து இருக்கா ஆனா அதை புரியாம தெரிஞ்சுக்காம நான்தான் உதாசீனம் செஞ்சு அவளை கஷ்டப்படுத்தி இருக்கேன்.
இதுக்கு அப்புறம் அவளுக்கு லவ் கம்மியானா என்ன அவளுக்கும் சேர்த்து நான் லவ் பண்ணுவேன் அவ என்மேல கோவத்தை காட்டினா கூட நான் தாங்கிப்பேன்.
ஆனா அவ அவளையே கஷ்டப்படுத்திக்குவாளே தவிர என்னை கஷ்டப்படுத்த விரும்ப மாட்டா ஆனா அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்.
போதும் அவ தனியாவே கஷ்டத்தை வலியை அனுபவிச்சதுலாம் நான் ஒவ்வொரு முறையும் அவளை காயப்படுத்தி இருக்கும்போது அவ எவ்ளோ வேதனை பட்டு இருப்பா இனியும் அவளை வேதனைப்பட விடமாட்டேன் அவளுக்கு கூடவே இருந்து அவளோட காயத்துக்கு நான் மருந்தா இருப்பேனே தவிர அவளை இன்னும் காயப்படுத்திட மாட்டேன்.
அதனால நான் காயப்பட்டா கூட பரவாயில்லை ஆனா இனி அவளை காயப்படுத்த மாட்டேன்.
ஒருவேளை அவ.. அவளுக்கு என்கூட வாழ பிடிக்கலைனா தான் அவளை என்னைவிட்டு போக நான் அனுமதிப்பேன் தவிர வேற எந்த காரணத்துக்காகவும் அவளை என்னை விட்டு போக விடமாட்டேன்” என்று அவன் பதில் சொல்லி அவனை பார்க்க அப்போது தான் ஹர்ஷத் முகத்தில் ஒரு தெளிவு வந்தது அதை பார்த்து புன்னகைத்தவன் அவள்மேல் அவனது அக்கறையை உணர்ந்தவன் அவனது தோளில் கை போட்டு
“உன்னை மாதிரி ஒரு ப்ரண்ட் கிடைக்க கொடுத்து வெச்சு இருக்கனும் ஹர்ஷத்” என்றான் ஆராஷி.
அதில் அவன் அதிர்ந்து பார்க்க
அவனை பார்த்து கண்களை சிமிட்டி புன்னகைத்தவன்
“என்னோட லைஃப்ப பத்தி இவ்ளோ கேர் எடுக்கிறியே நீ என்னை உன் ப்ரண்ட்டா நினைக்கிறதால தானே? அப்போ நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா?” என்று அவன் மர்ம புன்னகையோடு கேட்க
“சர் சர் அப்படிலாம் இல்ல சர் நானும் உங்கள என் ப்ரண்ட்டா தான் நினைக்கிறேன் சர்” என்றான் பயந்தபடி.
அவனை தோளோடு அணைத்தவன்
“ஐயம் ஜஸ்ட் கிட்டிங் மேன். ஐயம் சோ லக்கி ட்டூ ஹாவ் யுவர் ப்ரண்ட்ஷிப்.
உனக்கு தெரியாது ஹர்ஷத் நீ என்கூட இருக்கிறது எனக்கு எவ்ளோ ஆறுதலா இருக்கு தெரியுமா? என் அம்மா மேதா அண்ணாக்கு அப்புறம் என்மேல உண்மையா பாசம் வெச்சு எனக்காக யோசிக்கிற நீ ஐயம் சோ லக்கி.
என் மேதா இல்லனா இந்த ப்ரண்ட்ஷிப் இந்த ரிலேஷன்ஷிப் எல்லாம் நான் மிஸ் பண்ணி இருப்பேன் இத்தனை பெரிய உறவெல்லாம் எனக்கு கொடுத்தவ என்னை பார்க்கமாட்டேன்னு எங்கேயோ ஒளிஞ்சு இருக்கா சீக்கிரமே அவளை தேடி பிடிச்சு இந்த சந்தோஷத்தையெல்லாம் அவளோட சேர்ந்து முழுசா அனுபவிக்கனும் அவ இல்லாம என் லைஃப் ஃபுல்பில் ஆகாது ஹர்ஷத்” என்றுவிட்டு
“நண்பேன்டா” என்று அவனை பார்த்து கூறி சிரிக்க அவனும் புன்னகைத்து வைத்தான்.
“சீக்கிரமே எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு வேண்டிக்கிறேன் சர்” என்று அவனை பார்த்து ஹர்ஷத் சொல்ல
“ம்ம் தேங்க்யூ மை ப்ரண்ட்” என்று அவனை அணைத்தவன் விலகி நின்று திரும்பி அந்த ஏரியை நோட்டம்விட்டான்.
திரும்பி இருந்த ஆராவை பார்த்து வருத்தமாய் ஒரு பெருமூச்சு விட்டவன்
“சீக்கிரமே எல்லாம் சரியாகனும்” என்று வேண்டியபடி நின்றான்.
அங்கேயே தனது மொபைலை எடுத்து அதில் வால்பேப்பராக அவன் வைத்து இருந்த புகைப்படத்தை பார்த்து மெல்லியதாய் சிரித்தபடி அதையே பார்த்தபடி இருந்தவன்
‘அப்படி என்னதான்டி மறைச்சு வெச்சு இருக்க உன் மனசுல? எதுவா இருந்தாலும் என்கிட்ட வந்துடு அஷ்ஷுமா தனியா மனசை கஷ்டப்படுத்திக்காதேடி’ என்று எண்ணியபடி பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு அந்த புகைப்படத்தின் அன்றைய நாள் நினைவில் வந்தது.
அவளது இடுப்பு மச்சத்தை அவன் பார்த்ததால் அவள் புடவையை இழுத்து மறைக்க சீனில் அவளது இடுப்பையே அவன் பிடித்தபடி நிற்க அவனது நெஞ்சில் முகம் புதைத்தவள் நிமிர்ந்து பார்க்க அதை அழகாக படம் பிடித்து இருந்தாள் அருந்ததி அந்த புகைப்படம்தான் அது.
Semma photo thaan pola… 🥰waiting for their reunit….
Interesting😍😍