Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-1

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-1

வேண்டும் நீ எந்தன் நிழலாய்

அத்தியாயம் -1

இந்தியாவில் தொழில் துவங்கப்போகும் ஜப்பானிய நடிகர் மற்றும் பாடகரான திரு.ஆராஷி ஷிமிஜு( Arashi Shimizu) மற்றும் அவரது சகோதரர் ரியோட்டோ ஷிமிஜு (Ryoto Shimizu)இந்தியா வருகை.. அவருடன் தொழில்முறையில் கை கோர்க்கும் Reni fashions அதன் founders and share holders உடன் நாளை மறுநாள் சந்திப்பு நிகழும் என தகவல்..

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தோ ஜப்பானிய தொழில் இணைவு பெரிதும் உதவும் என்று இந்தியாவின் பிரதம மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..மேலும் இந்த சந்திப்புக்கு வெளியுறவு துறை அமைச்சர் வருவார் என்றும் தகவல் பரவியுள்ளது..
ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை
என்ற செய்தி தான் முக்கிய செய்தியாக அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்ப பட்டது..

ஆராஷி ஷிமிஜு(Arashi shimizu) உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய சினிமா நடிகர் மற்றும் பாடகர்.. அவரது பாடல்கள் உலக புகழ்பெற்றவை.. அவர் நடித்த ஆரம்பகால திரைப்படங்களை தவிர இப்போது நடிக்கும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்.. முதலில் நடிகராக இருந்தவரை அவருக்கு இசையமைத்து பாட வைத்த பெருமை அவரது சகோதரர் ரியோட்டோவையே சாரும்.. அவரும் புகழ்பெற்ற ஆங்கில பாப் இசை பாடகர்..
ஆராஷிக்கு உடன்பிறவாத அண்ணன் சினிமா துறையில் ஆராஷி சாதிக்க மிக முக்கிய காரணம் அவரது அண்ணன் ரியோட்டோ.. ஆராஷியின் தந்தையால் சினி உலகில் தத்து எடுக்கப்பட்ட மகன்தான் ரியோட்டோ..
இப்போது ஆராஷி தான் இந்தியாவில் தொழில் துவங்க உள்ளார்.. பிரபல உலகளாவிய ப்ராண்டட் துணி வகையான ரெனி ஃபேஷன்ஸ்உடன் சேர்ந்து.. அவர்களுக்கு உலகளாவிய வகையில் பெரிய பிஸினஸ் இருக்கிறது அதில் இப்போது தொடங்க போவது சிறுதுளி தான்..
அவர்கள் தான் ஆரம்ப காலம் முதல் இப்போது வரை ஆராஷிக்கு ஸ்பான்ஸர்..

ஆனால் இங்கு நடப்பதோ வேறாக இருக்கிறதே..

ஊதகைமண்டலம்..
பிரபல ஶ்ரீ எஸ்டேட்டின் அரண்மனையில்..

இரவு ஏழு மணி..

“அண்ணா கண்டிப்பா இந்த பிஸினஸ் டை அப் பண்ணியே ஆகனுமா? மேதா எங்கதான் இருக்கா? நாம என்ன செய்யறது?” என்றாள் நம்ம கதையின் இரண்டாம் நாயகி தேஜாஶ்ரீ..

“என்னை என்ன பண்ண சொல்றடா? புடிக்கலனாலும் இது அப்பாவோட அவங்க சேர்ந்து எடுத்த முடிவு..இதுல ரெனி ஃபேஷன்ஸோட ஃபவுண்டர் இல்லாம மீட் நடக்காதுனு அந்த ஆராஷிக்கும் தெரியும் தெரிஞ்சே மீட் அப் க்கு மினிஸ்டர் மூலமா கேட்டு எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸ்ஸும் ஃபிக்ஸ் பண்ணிட்டான்..நான் என்ன சொல்றது? இந்த மீட் நடக்காம போனா நம்ம கம்பெனிக்கு தான் கெட்ட பேர் வந்து சேரும்..அதுவும் இல்லாம இது இந்தியாவோட ப்ரஸ்டீஜ் இஷ்யூ.. இந்த டீல் வாங்கவே அப்பா ரொம்ப மெனக்கெட்டு அலைஞ்சாரு..

ஸ்பான்ஸர் கம்பெனிய அவமான படுத்தவே இதை செய்யுறான் போல அவன்.. எனக்கு இருக்குற கடுப்புக்கு அவன கொன்னு கழிக்காம்” என்று கோவமாய் பேசினான் நிதின்.. ரெனி ஃபேஷன்ஸ்ஸின் CEO..

“லீவ் இட் அண்ணா..நானும் ஒன் ஆஃப் த ஷேர் ஹோல்டர் தானே வில் மேனேஜ் இட் அண்ணா.. ஃபவுண்டர் நாட் கெட் டேட் இன் திஸ் எமர்ஜென்சி மீட் னு சொல்லி சமாளிச்சுக்கலாம்” என்று அவனை அமைதிபடுத்தினாள் தேஜாஶ்ரீ..

அப்போது நிதினை தேடி வரிசையாக வந்தனர் அவர்களது மற்ற தொழில் பாட்னர்களான சாஹித்யன், நிலவினி, அருந்ததி மூவரும்..

“வாட் த ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்? நீங்க எப்படி இதுக்கு சம்மதம் சொன்னீங்க அண்ணா?” என்று கத்தினாள் அருந்ததி..

“அரூ காம் டவுன்.. இதுக்கும் அண்ணாக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. இதுக்கு முழு காரணம் ஃபவுண்டர் தான்..அவங்கள தான் கேட்கனும்.. அண்ட் இது அப்பாவோட ஆர்டர்.. அதைதான் அண்ணா ப்ராசஸ் பண்றாரு” என்று விளக்கம் அளித்தபடி அனைவருக்கும் கண் காட்டினாள் தேஜீ..

அவளது கண்ஜாடையை புரிந்து கொண்டவர்கள் கோவமாக இருந்த நிதினை பார்த்து
“சரி விடுங்க அண்ணா பார்த்துக்கலாம்.. நாம பார்க்காத பிஸினஸ் மீட்டா..” என்று கூறினான் சாஹித்யன்..

“பட் இது பி.எம் வரை சம்பந்தப்பட்ட மீட் ஸோ..நீட் ட்டூ ஹாண்டல் கேர்ஃபுல்லி” என்றாள் நிலவினி..

“யா..வில் டூ சம்திங்..அண்ணா அவள பத்தி டீடெயில்ஸ் கிடைச்சதா?” என்றாள் அருந்ததி..

எதுவுமில்லை என்றபடி தலையை ஆட்டினான் நிதின்..

“இவ்ளோ நாள் இவ இப்போ அவ” என்று தேஜீ வை கை காட்டி பேசினான் சாஹித்யன்..

“என் பிரச்சினை பத்தி பேசாதே சாஹி” என்று கோவமானாள் தேஜீ..

“நீ செஞ்சத தானே சொல்றோம்” என்றான் சாஹி மீண்டும்..

“இப்படிலாம் பேசுவீங்கனு தான் நான் இந்தியாக்கு வராமலே இருந்தேன்” என்று கத்த..

“கொஞ்சம் எல்லாம் நிறுத்துறீங்களா?” என்று கத்தினான் நிதின்..

“போதும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் குறை சொல்லிகிட்டது.. இத்தனை நாளா இவ வரலைனு கஷ்டப்பட்டோம் இவ வந்துட்டா அது போதும்.. இனி அவ வருவானு நம்புவோம் முடிஞ்சு போனத பத்தி பேசி மனசு கஷ்டம்தான் மிச்சமாகும் நடக்கப்போறத மட்டும் பேசுங்க.. யாரும் யாரையும் கஷ்டப்படுத்துற மாதிரி பேசாதீங்க.. என்னால முடியல..உங்க எல்லாரையும் கெஞ்சி கேட்டுக்கிறேன்.. என் தங்கச்சிங்களுக்கு கூட பக்கபலமா நில்லுங்க.. இல்லனா விடுங்க என் தங்கச்சிங்கள நானே பார்த்துக்கிறேன்.. இப்படி யாரையும் பேசாதீங்க..
இவளும் திரும்ப கோச்சுக்கிட்டு போய்ட்டா என்னால தாங்கமுடியாதுடா” என்று கிட்டத்தட்ட அழுதுவிட்டான் நிதின்..

அவனை ஓடிச்சென்று தாங்கிய சாஹித்யன்
“அண்ணா ரியலி சாரினா.. நா..நான் ஒரு மடையன் ஏதோ கோவத்துல பேசிட்டேன்..மன்னிச்சிடுங்கனா..இனி இப்படிலாம் பேசவே மாட்டேன்..மன்னிச்சிடுங்க” என்று புலம்பியவன் தேஜீவை பார்த்து
“சாரிடா..நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன்..மன்னிச்சுக்கோடா” என்றான் உடனே அவளோ..

“அய்யோ..அதெல்லாம் இல்ல விடுடா.. நானும்தான் கோவப்பட்டுட்டேன்..மன்னிச்சிடு..அண்ணா சாரினா” என்றாள் அவளும்..

“ஓகே..லீவ் திஸ் டாபிக்.. இன்னும் ட்டூ டேய்ஸ்ல நடக்கப்போற மீட் பத்தி டிஸ்கஸ்
பன்னுவோமா?” என்றாள் நிலவினி..

அனைவரும் அமைதியாக சோபாவில் அமர பேச்சை ஆரம்பித்தான் சாஹித்யன்..

“அண்ணா as a CEO இந்த கொலாபுரேஷனை உங்களால கேன்சல் பண்ணமுடியாதா?” என்றாள் அருந்ததி..

“இந்த கொலாபுரேஷன்ஸ்ல எந்த விதமான சேன்ஞ் ம் முடிவும் பன்ற உரிமை ஃபவுண்டர்க்கு மட்டும் தான் இருக்கு இது அப்பா அக்ரிமெண்ட்ல மென்ஷன் பண்ணி இருக்காரு.. as a CEO of this company ஐ ஹாவ் ஒன்லி ரைட்ஸ் ட்டூ அரேன்ஞ் மீட் அண்ட் ப்ராசஸ் தி பிஸினஸ்.. இதுல வேற எந்த அதிகாரமும் நம்ம யாருக்குமே இல்ல..ஃபவுண்டர் தவிர” என்றான் நிதின் தெளிவாக..

“ஆனா இப்போ ஃபவுண்டர் தான் வரமுடியாதே அதனால என்ன பண்ணமுடியும்னு பார்க்கலாமா? ஃபவுண்டர் அவைலபிள் இல்லனு சொல்லி மீட்டிங் கேன்சல் பண்ணலாமா? எனி ஐடியா?” என்றாள் நிலவினி..

“இது மினிஸ்டர் மூலமா அரேன்ஞ் ஆகி இருக்குற மீட் எதுவும் செய்ய முடியாது” என்றாள் தேஜீ…

“அவன் வந்துட்டானா? நீங்க யாராவது வெல்கம் பண்ண போனீங்களா?” என்றாள் அருந்ததி..

“அரூ..கிவ் ரெஸ்பெக்ட்.. என்னதான் அவரால நமக்கு ப்ராப்ளம்னாலும் அவருக்கான மரியாதைலாம் கரெக்டா செய்யணும் இது அப்பா சொன்னது.. சோ..ப்ளீஸ் ஃபாலோ திஸ் ஆல்” என்று மீண்டும் கூறினான் நிதின்..

“அண்ணா யு ஆர் ஜஸ்ட் தேர்ட்டி.. நாட் செவன்ட்டி..தாத்தா மாதிரியே பேசுறீங்க” என்றாள் அரூ..
அதை கேட்டு அனைவரும் சிரிக்க நிதினும் சிரித்துவிட்டான்..

“வாலு.. நான் அப்பா சொன்னத ஃபாலோ பன்றேன்..ஓடு..போய் நாளைக்கு ஆராஷிய வெல்கம் பண்ண ஏற்பாடு செய்..நீதான் அவர வெல்கம் பண்ணனும்..நோ மோர் எக்ஸ்கியூசஸ்” என்றான் நிதின் கட்டளையாக..

“அண்ணா..நானா?” என்றாள் அருந்ததி..

“ஆமா நீதான்.. இது நம்ம கம்பெனியோட ப்ரஸ்டீஜ் இஷ்யூ சோ எதுவும் மிஸ்டேக்ஸ் வரக்கூடாது..இட்ஸ் மை ஆர்டர்..” என்றுவிட்டு அவன் கிளம்பி விட்டான்..
“ஐயோயோயோ…” என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் அருந்ததி..
அவள் அருகில் வந்த நிலவினி

“பார்த்து உஷாரா நடந்துக்க அரூ..இது அப்பா காப்பாத்தி வெச்ச புகழ் அதை காப்பாத்தர மாதிரி நடந்துக்கனும்..நம்ம பர்சனல் ரிவென்ஜ்லாம் காட்டாத” என்று விட்டு செல்ல..

“என்னமோ செய்ங்க” என்றுவிட்டு சென்றுவிட்டாள் தேஜாஶ்ரீ..

“கேர்ஃபுல் அரூ” என்றுவிட்டு சென்றான் சாஹித்யன்..

“என்னையே எல்லாத்துக்கும் கோர்த்துவிடுங்க..அரூ உனக்கு ஆப்பு ரெடிடி” என்றுவிட்டு கிளம்ப சென்றாள் அவளும்..

சென்னை ஏர்போர்ட்..
அந்த நள்ளிரவில் கூட மிகவும் பரபரப்பாக இருந்தது ப்ளைட் வந்துவிட்டதற்கான அறிவிப்பில்..
பத்திரிக்கைகாரர்களும் நியூஸ் சேனல்களும் காத்திருந்தனர்..

டோக்கியோவின் பிரபல Narita international airportல் இருந்து மதியம் 12 மணிக்கு கிளம்பிய
Air asia flight அதிகாலை பனிரெண்டு மணிக்கு வந்தடைந்த ப்ளைட்டில் இருந்து இறங்கி வந்தனர் ஆராஷி ஷிமிஜு வும் ரியோட்டோ ஷிமிஜு வும்..

ஆராஷி அழகாய் கம்பீரமாய் நடந்து வந்தான்.. விழிகளில் தூக்கம் இருந்தாலும் அந்த நேரத்திலும் அவனது முகம் வாடவே இல்லை..அவனுடன் கூடவே ரியோட்டோவும் கம்பீரமாக நடந்து வந்தான்..
பாடிகார்ட்ஸ் சூழ இருவரும் மாஸ்க் அணிந்து வந்ததில் காத்திருந்த அருந்ததிக்கு ஆராஷியை மட்டுமே அடையாளம் காண முடிந்தது.. கூட வருபவனை பற்றி அவளுக்கு அதிகம் தெரியாததால் ஆராஷியிடம் வரவேற்பாக பூச்செண்டை நீட்டியவள்

“வெல்கம் இந்தியா சார்..”
என்று கூற அவனும் மாஸ்க்கை கழட்டி விட்டு
“தேங்கஸ் ஃபார் யுவர் வெல்கம் ஆன் திஸ் அன்டைம்..நைஸ் ட்டூ மீட் யூ..வேர் ஈஸ் நிதின்?” என்று கூறினான்..
“தட்ஸ் நாட் ஏ ஃபிக் இஸ்யூ சார்..இட்ஸ் அவர் ஃப்ளஷர்.. அவர் CEO இன் ஃபங்க்ஷன் அரேன்ஞ்மெண்ட்ஸ் சார்..ஹி வில் மீட் யு அட் டுடே ஈவ்னிங்” என்றுவிட்டு ரியோட்டோ விடம் திரும்பி இன்னொரு பூச்செண்டை நீட்டினாள்..

“வெல்கம் ட்டூ இந்தியா சார்” என்று கூற அவனும் தன் மாஸ்க்கை கழட்டிவிட்டு பூச்செண்டை வாங்கியவன்..

“தேங்கஸ் ஃபார் வெல்கம் டியர்..நைஸ் ட்டூ மீட் யூ” என்று கூற..
அவனது அழகான ஆளை மயக்கும் சிரிப்பில் அப்படியே சிலையாகி போனாள்..

‘ஷப்ப்பாபாபா.. என்னா ஃபிகர்’ என்று எண்ணியவள் அடுத்த கனவுக்குள் போவதற்குள்..
அவளை தடுத்தான் ஆரோஷி..

“Shall we move miss.arundhadhi” என்று கேட்க நினைவுக்கு வந்தவள்..

“யா..ஸ்யூர் சார்..” என்றுவிட்டு அவள் முன்னே வழிவிட மற்றவர்களும் மீடியாவும் ஃபோட்டோவாக எடுத்து தள்ளி அவனிடம் பேட்டி எடுக்க ஓடிவர
“Sorry guys we are so tired need some rest will meet you tomorrow please..Thanks to u..” என்றுவிட்டு
ஃபாடிகார்ட்ஸ் உதவியுடன் நெரிசலில் சிக்காமல் அவர்களுக்காக வரவழைக்கப்பட்ட காரில் ஏறினர்.. அவர்களுக்கு பின்னாலேயே வேறொரு காரில் ஏறிய அருந்ததி
“ஸ்ப்ப்பாபா யார்டா இவன்..இப்படி ஆள மயக்குறான்.. அய்யோ இவன பார்த்தா நான் மயங்கிடுவேன் போலயே..அரூ அவனவிட்டு தூரமாவே இரு” என்றபடி தனக்கு தானே பேசிக்கொண்டு காரை ஓட்டியவள்..
சென்னையின் நுங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ள அவர்களின் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நிறுத்திவிட்டு அவர்களை வரவேற்றாள்..
அங்கு அவர்களுக்காக காத்திருந்தாள் நிலவினி..

அவளும் பூங்கொத்து கொடுத்து இருவரையும் வரவேற்க அதை ஏற்றவர்கள் உள்ளே செல்ல.. அவர்கள் தங்குவதற்கு
அறையும் கூடவே ஃபாடிகார்ட்ஸ் தங்குவதற்கும் எல்லாவிதமான வசதியும் செய்துவிட்டு

“டேக் ரெஸ்ட் ஃபார் யுவர் ஜெட்லாக் சார்.. வில் மீட் யூ டுமாரோ..சீ யூ..” என்றுவிட்டு
வெளியே வர அவளுக்காகவே காத்திருந்த அருந்ததி..

“அக்கா.. வா வா.. அந்த ஆராஷி கூட இன்னொரு ஃபிகர் வந்து இருக்கே பார்த்தியா? செம்ம ஃபிகர்ல” என்று கூற

“ஏன்டி அவ ஒருத்தி பத்தாதா நீயும் அவ லிஸ்ட்ல சேரப்போறியா?” என்று கேட்டாள் நிலவினி..

“ம்ம்க்கும்..நான் என்ன லவ்வா பண்ணபோறேன் அதெல்லாம் எனக்கு செட்டும் ஆகாது..என்னைய வெச்சு மேய்க்கிற அளவுக்கு அவனுக்கு தமிழ் திறமை பத்தாது..நமக்கு ஆல்வேய்ஸ் சைட் சீயிங்தான்..பசங்கதான் சைட் அடிக்கனுமா என்ன? ஒரு பையன் பார்க்க நல்லா இருந்தா நாமளும் சைட் அடிக்கலாம்..வாங்க சேர்ந்து சைட் அடிக்கலாம்” என்று அவளையும் கூட்டு சேர்க்க

“அம்மா தாயே..நீ சைட் அடி இல்ல அவனையே தூக்கிபோட்டு அடி..என்னை ஏன் கூட்டு சேர்க்கிற..நானே நாளைக்கு என்ன நடக்கப்போகுதோனு கவலைல இருக்கேன் நீ வேற ஏன்டி?” என்று கூற. .

“அதெல்லாம் அண்ணா சமாளிக்குவாங்க.. என்னை இங்கே அனுப்பி அண்ணா எனக்கு ஒரு நல்ல ஃபிகர காட்டி இருக்காரு..அதுக்காக அவருக்கு தேங்க்ஸ்தான் சொல்லணும்..நாளைக்கு மீட்டிங்குக்கு அந்த ஃபிகர் வருமா? கேட்டு சொல்லுக்கா?” என்று அவள் நிலவினியை வெறுப்பு ஏற்ற..

“கடுப்ப கிளப்பாம ஓடிடுடி.. நான் போய் தூங்குறேன் போடி போய் வேலையை பாரு” என்று திட்டிவிட்டு அவளும் சென்றுவிட

“ஆமா என் தூக்கத்த கெடுத்துட்டு இவங்களுக்குலாம் தூக்கமாம்.. உங்களலாம் ஊட்டி குளிர்ல ஸ்வெட்டர் இல்லாம ஓடவிடனும்..ம்ம்…எந்த ஜப்பான் புறாக்கு கொடுத்து வெச்சு இருக்கோ இவனுங்களுக்கு வாக்கப்பட..” என்று புலம்பிவிட்டு அவளும் அங்கேயே வேறு ஒரு அறையில் தூங்க சென்றாள்..

ரூமிற்குள் வந்த உடனே குளித்து தளர்ந்த உடை அணிந்தவனுக்கு மனமும் சேர்த்து தளர்ந்து போனது.. அவளது புகைப்படத்தை தனது மொபைலில் எடுத்து பார்த்தவன் அவளது கண்களையே பார்த்தவன் சிறிது நேரம் பார்த்துவிட்டு உறங்க சென்றான்..

மற்றொரு அறையில் இருந்த ரியோட்டோ குளித்து முடித்து எதையோ யோசித்தவன் பெருமூச்சு விட்டு விட்டு படுக்க சென்றான்.. அவரவர் எண்ணங்களில் ஒவ்வொரு விதமான யோசனைகள் ஓட அந்த நள்ளிரவு பொழுது கழிந்தது..

to e continue

Jayalakshmi -S

4 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய்-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *