அத்தியாயம் – 104
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மியோ உண்மையை சொல்லவும் அவரது மறுபக்கத்தை பார்த்துக்கொண்டு இருந்த மேதாவிற்கு பேரதிர்ச்சி.
இத்தனை நாட்களாக தனது தந்தையின் மரணம் வெறும் ஆக்சிடெண்ட் என்று நினைத்தது எல்லாம் பொய் என்று தெரிய உருக்குலைந்து போனாள் மேதா.
அவரை பிடித்து உலுக்கியவளின் சிவந்து கலங்கிய கண்களை பார்த்து சிரித்த மியோ
“ஆமா நான்தான் எந்த விதத்திலும் இது மர்டர்னு வெளியே தெரியவே கூடாதுனு ஆக்ஸிடென்ட்டா மாத்தினேன் யாருக்கும் தெரியாம உங்க அப்பனோட மரணம் தற்செயலா நடந்தபோல பண்ணேன்
நான் சொன்னேன் கடைசியா கூட உங்க அப்பாகிட்ட அவனைவிட்டு தூரம் போக சொல்லி ஆனா அவரு அவனை உயிரே போனாலும் காப்பாத்துவேன்னு பேசினாரு அதான் கொன்னேன் இப்போ நீயும் அதையே பேசிட்டு இருக்க அப்போ உன்னையும் அதே காரணத்துக்காவும் கூடவே அந்த ஆராஷி அவனோட லவ்வை இழந்து பையித்தியகாரனாகனும்னு தான் உன்னை கொல்லப்போறேன்” என்று கூற அவளுக்கு ஒன்றும் புரியாத நிலை எப்போதும் ‘எதையும் ஒன்றுக்கு இரண்டுமுறை ஆராய்ந்து பார்த்து பார்த்து செய்யும் மேதாவிற்கு தந்தையின் இறப்பு கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் லேசாக இருந்தது ஆனால் அப்போது அவரது மரணத்தை கேள்விப்பட்ட அவரது தொழில் போட்டியாளர்கள் கூட அதிர்ந்ததனரே ஏன் மியோ மேல் கூட சந்தேகம் வந்ததே ஆனால் அவரது செயல்கள் சாதாரணமாக இருந்ததால் அதும் அவருக்கு அவ்வளவு தூரத்தில் ஆட்களை ஏவி கொல்ல செலவுகள் அதிகரிக்கும் அதனால் அவர் இல்லை என நினைத்தாளே எல்லாம் இப்போது பொய்யாய் போனதே ஆராஷியின் தாயை கொன்று அவனது வாழ்க்கையை அழிக்க பார்த்து அவனுக்கு பெண்களையும் ஆண்களையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளி அவனது சொத்துக்களை முடக்க செய்து அவனை வளரவிடாமல் செய்தும் இன்னும் இன்னும் அவரை அழிக்க பார்க்கும் இவரிடம் தாய்பாசம் கொஞ்சமாவது இருக்காதா என எண்ணிய தன் மடத்தனத்தை எண்ணியவள் தன் தந்தையின் மரணத்திற்கும் இவளே காரணம் என்று தெரிந்தும் இவரை விட்டு வைத்தால் தன்னைவிட ஒரு முட்டாள் இவ்வுலகில் இல்லவே இல்லை இப்படி ஒருவர் இருப்பது யாருக்குமே நல்லது அல்ல’ என்று யோசித்தவள் மீண்டும் தனது திமிரான தோரணைக்கு மாறி யோசிக்காமல் தன் புடவையில் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து மியோவை குறி வைத்தாள்.
அவளது திமிரான தோரணையை கண்டு சற்று திகைத்த மியோ
அவளை திசைதிருப்ப சட்டென சிரித்தார்.
தன்னை திசைதிருப்பவே அவர் இப்படி செய்கிறார் என உணர்ந்த மேதா தனது இலக்கை இம்மியும் மாற்றவில்லை.
“இதுக்கு மேலயும் உங்கள விட்டு வெச்சு ராஷிக்கு எந்த ஆபத்தும் வர்றதை நான் வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன் உங்ககிட்ட இருந்து அவரை காப்பாத்தி உங்களையும் மனசு மாற வைக்கணும்னு தான் இத்தனை வருஷமா பொறுமையா இருந்தேன் இனிமேல் அப்படி இருக்க மாட்டேன்
என் அப்பாவை கொன்னு ராஷியோட அம்மாவை கொன்னு நீங்க மட்டும் நிம்மதியா வாழலாம்னு நினைக்கறீங்களா விடமாட்டேன் இண்டியால அவரை ரெண்டு முறை கொல்ல ட்ரை பண்ணீங்க அதை முறியடிச்ச அப்பவே உங்கள நான் கொன்னு இருந்தா இப்போ இப்படி என் முன்ன பேசிட்டு இருக்க மாட்டீங்க?” என்றவளை பார்த்து ஏளனமாய் சிரித்த மியோ
“நீதான் இப்போ சாகப்போற பொண்ணு நான் இல்ல உன்ன கொன்னு அவனை ஏதும் இல்லாத அநாதையா மாத்தாம நான் சாக மாட்டேன்” என்றவர் தன்கையை உயர்த்த பார்க்க அவரையே கவனித்தவளின் கையில் கத்தியால் கிழித்தான் மியோவின் மகன் “ஆஆ” என்றபடி உடனே அவளது கையில் இருந்த கன்னை அவள் கீழே நழுவவிட அதை பிடித்த மியோ இப்போது அவளை குறி வைத்தார். அதற்குள் அவளை பின்னிருந்து வளைத்து அவளது கழுத்தில் கத்தியை வைத்து இருந்தான் அவன்.
‘எப்படியாவது இவர்களிடமிருந்து ஆராஷியை காப்பாற்றியே ஆகவேண்டும்’
என்று எண்ணிய மேதா
தன் மொபைலை எடுக்க அவளது கழுத்தில் இருந்த கத்தியை அழுத்தியவன்
“யாருக்காவது ஃபோன் பண்ண நினைச்ச இப்படியே கத்தியை உள்ளே இறக்கிடுவேன் ஃபோனை கீழே போடு” என்றான் அவன் அழுத்தியதில் லேசாக அவளது கழுத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது.
அதனால் அவளது கையில் இருந்த ஃபோனை லாக் செய்கிறேன் என நன்றாக அழுத்தியவள் அதை கீழே போட குனிந்தாள் அந்த நேரம் எங்கிருந்தோ வந்த ஸைலன்சர் தோட்டா அவனது நெற்றியை பதம் பார்த்தது.
அதில் அப்படியே அவன் மடிந்து சரிந்தான் அதில் அவளை குறி வைத்து இருந்த மியோ தன் மகனை இழந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிய மேதா அவரது கையில் இருந்த துப்பாக்கியை பறித்து அவரது கையில் சுட்டாள். அதில் சுயம் அடைந்து வலியில் கீழே விழுந்தார் மியோ.
அந்நேரம்
போலீஸ் மற்றும் இதர அதிகாரிகளுடனும் பாடிகார்ட்ஸ்ஸுடனும் வந்தான் ஹர்ஷத்.
வந்தவன் உடனே மேதாவை கார்ட்ஸ் கொண்டு பாதுகாத்தவன் மியோவை கைது செய்யும்படி சொன்னான்.
மேதாவை சற்று தள்ளி நிற்க வைத்திருந்தான் ஹர்ஷத்.
போலீஸ் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பார்த்து கொண்டு இருந்தனர் மியோ அருகில் ஒரே ஒரு போலீஸ் ஆபிசர் மட்டும் இருந்தார்.
தனது இத்தனை தகிடுதத்தமும் தனது மகனை பணக்காரனாக்கத்தானே அத்தகைய மகன் சாக காரணமானவளை அழித்தே ஆகவேண்டும் என்று எங்கோ ஒளித்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மேதாவை குத்த போக சட்டென சுதாரித்த ஹர்ஷத் அவளை தன் புறம் இழுக்க அவன்மேல் விழப்போன கத்திகுத்தை தன் கையில் வாங்கினாள் எங்கிருந்தோ வந்த அருந்ததி கத்தி அவளது தோள்பட்டையின் கைப்பகுதியை பதம் பார்த்தது
இதனிடையே போலீஸின் சரமாரியான குண்டுகள் மியோவை துளைத்தது.
அப்படியே சரிந்துவிழுந்து இறந்து போனார் அவர்.
மேதாவை காப்பதிலேயே குறியாய் இருந்த ஹர்ஷத் தன்னை ஃபாலோ பண்ணி வந்த அருந்ததியை கவனியாது போனான்.
“அரூ” என பதறியபடி தோழியை விடுத்து அவளை தாங்கினான் ஹர்ஷத்.
மேதாவும் அதிர்ந்து “அரூ” என்று பதறி அவளது அருகில் செல்ல
இரத்தம் வர அதை பார்த்த அருந்ததிக்கு அதிர்ச்சியாக இருக்க அப்படியே மயங்கி போனாள்
“நீ எதுக்குடி இங்க வந்த?” என்றபடி
தனது கையிலிருந்த கர்ச்சீப் எடுத்து அவளது கையில் கட்டை போட்டவன்
“ஆம்புலன்ஸ்” என்று குரல் கொடுக்க உடனே அங்கே கொண்டு வரப்பட்டது ஆம்புலன்ஸ்.
அவளை அதில் ஏந்தியபடி அவன் ஏற கூடவே வந்தாள் மேதா.
அவளை தடுத்தவன்
“நீ இங்கேயே இரு மேதா நான் இவள பார்த்துக்கிறேன் நீ மத்த ஃபார்மாலிட்டீஸ்லாம் முடி” என்று அவளை விடுத்து சென்றான். ஆனால் அவளது கழுத்தில் ஏற்பட்ட காயத்தை கவனியாது போனான்.
அவன் சொன்னதும் மேதாவும்
சரியென நின்றுவிட்டாள்.
அருந்ததிக்கு ஆம்புலன்ஸ்ஸிலேயே முதலுதவி வழங்கபட அவளுக்கு எதுவும் இல்லை என்றதும் தான் ஹர்ஷத்துக்கு உயிரே வந்தது.
இத்தனை காலம் அவளது காதலை மேதாவின் காதலை பார்த்து காதல் மேல் நம்பிக்கை இல்லை என இருந்தவன் ஆராஷிக்கு பிஏ வாக வந்த பின் அவனது மேதா மீதான காதலை உணர்ந்த பின் அவனை காணாமலே காதல் சொன்ன அருந்ததியை நேரில் சந்தித்த பின் அவளது காதலும் அவனுக்கு புரியவந்தது ஆனாலும் அவளிடம் தன்னையும் தன் காதலையும் வெளிப்படுத்தாமலே இருந்தான் ஆனால் ஆராஷி தான்தான் ஷர்மா என்று சொன்னபோது அவள் அவனை பார்த்த பார்வையை இன்றும் அவனால் மறக்கமுடியாதே.
அப்போதும் அவன் முன் வந்து ஒரு வார்த்தை பேசவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை.
அவன்மேல் உள்ள கோவத்தை காட்ட அவள் கண்டுகொள்ளாமல் தானே இருந்தாள் அவளது புறக்கணிப்பே அவனது அவள்மீதான காதலை அவனுக்கு உணர்த்திவிட்டதே தன் தந்தையின் சம்மதம் வாங்கிவிட்டு மேதாவையும் ஆராஷியையும் சேர்த்துவிட்டு அவளிடம் தன் காதலை உரைக்கவேண்டும் என்று காத்திருந்தவனுக்கு அவளோ அவனுக்காக உயிரை தரத்துணிந்துவிட்டாளே அவளது காதலை எண்ணி ஒருவகையில் சந்தோஷமே ஆனால் இப்படி உயிருக்கு ஆபத்து என தெரிந்தும் வந்தவளின் மடத்தனத்தை எண்ணி கோவமும் கொண்டான்.
தனது குடும்பத்திற்கு அழைத்து விவரத்தை சொன்னவன் அவர்கள் உடனடியாக வர அவளை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவர்கள் பொறுப்பில் அவளை விட்டு மேதாவை கவனிக்க சென்றான்.
அங்கோ மேதா போலீஸிடம் எல்லா தகவலையும் கூற இருக்க “அதற்கு அவசியம் இல்லை உங்க ஜூவல்ஸல இருக்கும் கேமிராலேயே எல்லாம் ரெக்கார்ட் ஆகிடுச்சு அதை மட்டும் கழட்டி கொடுங்க” என்று அவர்கள் கேட்க அவள் கழட்ட போக அப்போது அவனது அழைப்பு கேட்டது அவளுக்கு.
அதில் அதிர்ந்து உறைந்து நின்றாள்.
“அஷ்ஷூ” என்ற அவளது உயிரானவனின் அழைப்பு ஸ்டேஜ்ஜிலிருந்து வர அங்கிருந்து ஸ்டேஜ்ஜை நோக்கி திரும்பினாள்.
“இதுவரை மறைத்து வைத்து இருந்த என் காதலை இன்னைக்கு உலகறிய ஏன் என் காதலியே அறிய சொல்லப்போறேன்.
இத்தனை வருஷமா என்மேலே காதல் வெச்சுட்டு எனக்காக எனக்காகனு அவ வாழ்க்கையையே இழக்க தயாரான என் காதலிக்கிட்ட என் காதலை சொல்லணும் அதை என் ரசிகர்களாகிய உங்க முன்ன சொல்லணும்னு தான் ஆசைப்பட்டேன் அதனால் தான் எனக்கு டெத் த்ரட் வந்தும் இந்த கான்செர்ட் அண்ட் ஃபங்ஷனுக்கு நான் இவ்ளோ கஷ்டப்பட்டேன்
அவதான் எனக்கு வாழ்க்கை கொடுத்தவ அவதான் எனக்கு உயிரை கொடுத்தவ என்னோட உயிரே அவதான என் நிழலாய் என்கூட இருந்து எனக்கு உயிரை கொடுத்துட்டு இருக்குற என் மேதஷ்வினி ஆனா நான் அவளையும் புரிஞ்சுக்காம அவ காதலையும் புரிஞ்சுக்காம அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் அதனால என்னை விட்டு விலகி ஓடிட்டே இருக்கா அவளுக்காகதான் என் லவ் இருக்கு எப்பவும் அவளுக்காக மட்டும் தான் இருக்கும் என் காதலும் என் உயிரும் அவளுக்காக இந்த பாடலை நான் பாடணும்னு ஆசைப்படுறேன்” என்று கூற ஹோஓஓஓஹேய்ய்ய்ய்ய் என்று கோஷம் காதை பிளந்தது
“இந்த பாடலை கேட்டு அவ என்கிட்ட வரணும்னா நீங்கலாம் அமைதியா இருக்கணும் ப்ளீஸ்” அவன் பாட ஆரம்பிக்க கண்கள் கலங்க அதை கேட்டு அதிர்ந்தபடி நின்றிருந்தாள் மேதா.
