அத்தியாயம் – 111
அவன் பேசிய தொணியும் அவனது குரலும் அவளுக்கு அவன் இதழ் முத்தம்தான் கேட்கிறான் என்றே தோன்ற அவனோ அவளது முன் நெற்றியில் முத்தமிட மூடிய கண்கள் பட்டென்று திறந்து கொண்டது அவளுக்கு.
இதயமோ படபடத்தது அவன் இதழ் முத்தம் தந்திருந்தால் கூட இவ்வளவு கூச்சம் வந்திருக்காது போல அவளுக்கு ஏனோ அவ்வளவு கூச்சமாய் இருந்தது.
திறந்து பார்த்த அந்த விழிகளின் மேலும் இரு முத்தம் வைத்தவன் அந்த இமைகளை மூடிக்கொள்ள செய்தான் முத்தமிட்டு.
அவளது எண்ணமும் படபடப்பும் புரிந்தவன் லேசாக சிரித்து “ஏன் அஷ்ஷூ பேபி லவ்பன்றவங்க வெறும் லிப் கிஸ்தான் அடிப்பாங்கனு யாராச்சும் சொன்னாங்களா என்ன?” என்று கேட்க விழியை திறந்தவள் அவனது கேள்வியில் திருதிருவென முழிக்க
பட்டென்று சிரித்தவன்.
“அப்படி முழிக்காதடி கல்யாணத்துக்கு அப்புறம்தான் உனக்கு லிப் கிஸ் பண்ணனும்னு இருக்கேன் அதை மீற வெச்சுடாதே இப்படி முழிச்சு” என்று அவளை அணைத்துக்கொண்டவன் பிள்ளையை தோளில் தூங்க வைக்கும் தகப்பன் போல அவளை தன் தோளில் சாய்த்து லேசாக தட்டி கொடுத்தவன்
“எனக்கு அதெல்லாம் ஆசையே இல்லடி எனக்கு என்கூட நீ எப்பவும் இப்படியே இருக்கனும் அதுதான் ஆசை.
என்னோட மொத்தமும் நீதான் உன்னோட மொத்தமும் நான்தான்னு இருக்கனும்.
முழுக்க முழுக்க உன்ன லவ் பண்ணனும் காமம் கலந்த காதல் எப்பவும் அழகுதான் ஆனால் கண்ணியமான காதல் அதைவிட அழகு.
அதுலதான் உன் உணர்வு எனக்கு புரியும் என் உணர்வு உனக்கு புரியும்.
அப்போதான் அந்த காதல் முழுமை அடையும்.
கன்னத்து முத்தமும் இதழ் முத்தமும் காதலை உணர்த்தாது ஒரே ஒரு அணைப்பு ஒரே ஒரு கைகோர்ப்பு உனக்காக நான் இருக்கேன்னு அதுதான் அந்த காதலுக்கு அழகு சேர்க்கும் மேதா.
என்கூட நீ இருக்கங்கிற தைரியமே என்னை மேலே மேலே முன்னேற்றும் அந்த காதல் போதும் மேதா எனக்கு.
எனக்காக எல்லா உணர்ச்சியும் மறைக்காம காட்டுற அந்த கண்ணு அதை பார்த்தா போதும் எனக்கு இதோ குழந்தைபோல என் கைக்குள்ள இருக்கியே இப்படி இருந்தா போதும் நான்
தூங்கி எழும்போது என் கண்ணுல நீ பட்டா போதும் எனக்காக வேற எதையும் நீ மெனக்கெட்டு செய்யவேணாம் உனக்காக நான் செய்வேன்” என்று அவன் பேச அவனது காதலை பற்றிய அழகான விளக்கம் அவளுக்கு ஆச்சர்யத்தையே கொடுத்தது.
இந்த ஊரில் இருக்கும் இன்றைய கலாச்சாரத்தில் அவன் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் தனக்காக அவனளுக்காக அவன் ஒரு கட்டுப்பாட்டோடு வாழ்வது அவளுக்கு ஆச்சர்யமே.
அமைதியாக அவன் பேசுவதை கேட்டாளே தவிர எவ்வித தடுப்பும் போடவில்லை அழுது அழுது கலைத்து போய் இருந்தவள் அவனது பேச்சிலும் அவன் தட்டி கொடுத்ததிலும் அசதியிலும் மாத்திரையின் வீரியத்திலும் அப்படியே அவன்மீது சாய்ந்து உறங்கி போனாள் அவனது மேதஷ்வினி.
அவளிடம் அசைவில்லை என்று உணர்ந்தவன் அவளை பார்க்க அவளோ குழந்தைபோல உறங்கிவிட்டிருந்தாள்
தூங்குபவளை பார்த்தவன்
“அடிப்பாவி அப்போ இவ்ளோ நேரம் நான் ரவுண்டு கட்டி பேசினதுலாம் வேஸ்ட்டா.
குழந்தைக்கு அம்மா தாலாட்டு பாடினா தூங்குற போல நான் பேசினதை கேட்டு தூங்கிட்டாளே” என்று சத்தம் வராமல் பேசியவன் அவளை வசைபாடியபடியே அவளை தன்மேல் வாகாக படுக்க வைத்தான் அவனது இதய ஓசையின் தாளமும் அந்த ஏகாந்த சூழ்நிலையில் அவனது அணைப்பும் அலைச்சலும் அவனிடம் அவள் எப்போதும் உணரும் பாதுகாப்பும் என உறக்கம் தழுவிக்கொள்ள அவன் எப்படி படுக்க வைத்தானோ அப்படியே படுத்து உறங்கிவிட்டாள் மேதஷ்வினி.
அவளையே பார்த்தவன் மீண்டும் அவளது நெற்றியில் முத்தமிட லேசாக அவள் நெளிய
“இட்ஸ் ஓகே பேபி” என்று லேசாக வருட மீண்டும் தூங்கி விட்டாள்.
அவளையே பார்த்தவன் மீண்டும் பேசினான்.
“இவளலாம் ஒரு பெரிய பிஸினஸ் வுமன் பெரிய கம்பெனியோட ஃபவுண்டர்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? ஆளுதான் பார்க்க இப்படி ஆனா பாசக்காரி உன் பாசம் எனக்கு ஆச்சரியம் தான் கொடுக்குது மேதா.
பணக்கார வீட்டு பொண்ணுனு எந்த ஈகோவும் இல்லாம சாதாரண வாழ்க்கை வாழுற உன் நண்பர்களையெல்லாம் உறவா மாத்தி அவங்களுக்கும் சம உரிமை கொடுத்து இருக்க அவங்களுக்கு ஒன்னுனா துடிச்சு போற உனக்கு ஒன்னுனா அவங்க எல்லாரும் துடிச்சு போறாங்க.
எனக்கு பொறாமையா இருக்குடி உன்மேல.
இப்படி ஒரு பாசமான கூட்டுல இருக்க எனக்கும் அதுல வாழணும்னு ஆசையாவும் இருக்கு அந்த கூட்டுல எனக்கும் இடம் வாங்கி கொடு அஷ்ஷூ” என்று அவன் கூற ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு என்ன புரிந்ததோ
“க்யூட்” என்று உறக்கத்திலேயே வாய்க்குள்ளேயே பேசியபடி அவனது இதயத்தில் புதைந்து கொண்டாள்.
பரந்த அவனது மார்பில் சட்டை பட்டன் அவிழ்ந்த போஸில் அவன் இருக்க அதில் மயங்கிய மலராய் அவளது உறக்கம்.
அந்நேரம் அவனது மொபைல் அடிக்க அவளது உறக்கம் கலையாமல் அவசரமாய் எடுத்தவன் உடனே சைலண்ட்க்கு மாற்றி பிறகு அட்டென்ட் செய்தான்.
மறுமுனையில் ரியோட்டோவும் நிதினும் பேசினர்.
“ஆரா எங்கடா இருக்க ரொம்ப நேரமா மேதாக்கு ட்ரை பன்றோம் ரீச்சே ஆகலை உனக்கும் ஆகலை இப்போதான் ரீச் ஆச்சு மேதா கிடைச்சாளா? அவ நல்லா தானே இருக்கா? இல்ல போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடலாமா?” என்று இருவரும் மாறி மாறி கேள்வி கேட்க அவர்களிடம் சொல்லாத தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே திட்டியவன்.
“அண்ணா சாரி அண்ணா மேதா கிடைச்சுட்டா என்கூட தான் இருக்கா நம்ம பழைய ட்ரைனிங் ட்ரோம் ரூம் இருக்கும்ல அங்க அவ வீட்லதான் இருக்கோம் அவ தூங்கிட்டு இருக்கா ரொம்ப அழுதுட்டா அதான் டையர்ட்ல தூங்கிட்டா சாரி உங்ககிட்ட சொல்லாததுக்கு” என்று கூறி முடிக்கையிலேயே அவர்களது இணைப்பு கட்டாகி விட அவனும் மொபைலை சைலண்ட்க்கு மாற்றிவிட்டு ரிமோட்டை எடுத்து டோர்லாக்கை திறந்துவிட்டு அவளுக்கு கொஞ்சம் காற்று வரும்படி செய்தவன்
அவளை அணைத்தவாறே அமர்ந்திருந்தான்.
அவளையே பார்த்தவாறு அமர்ந்து இருந்தவன் அப்படியே அவனையும் உறக்கம் தழுவ லேசாக கண்ணயர்ந்தான்.
அடுத்த இருபது நிமிடத்தில் மொத்த குடும்பமும் அங்குதான் வந்து நின்றது.
கால் கட் ஆனதும் எப்படியும் அண்ணனும் நிதினும் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தான் அதனாலேயே கதவின் லாக்கை ரிமோட் மூலம் ஓபன் செய்துவிட்டு அமர்ந்தான் ஆனால் ஒட்டுமொத்த குடும்பமும் வரும் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு உடனே முழித்தவன் பார்த்தது மொத்த குடும்பத்தையும்தான் கூடவே கையில் போடப்பட்ட சலைனோடு அருந்ததியும் அதை பிடித்தபடி நின்றிருந்த ஹர்ஷத்தையும்.
இவர்களை பார்த்த ஆராஷிக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை.
“ஏன்டா” என்று பேச ஆரம்பித்த ரியோட்டோவை பார்த்து ஷ்ஷ் என்று சைகை செய்யும்நேரம் அவனது மார்பினில் துயில் கொண்டவள் லேசாக நெளிந்தாள் அவளை வாகாக அணைத்தவன் கழுத்து வலிக்காதபடி அவளை தன்பக்கம் சாய்க்க
“பார்த்து” என்று மெதுவாக கூறியபடி ஓடிவந்தான் நிதின்.
“நான் பார்த்துக்கிறேன் நிதின் சர்” என்றபடி அவளை வாகாக தன்மேல் சாய்த்தவன்
“எதுக்கு இப்படி எல்லாரும் ஓடி வந்து இருக்கீங்க?”என்று கேட்க
“ஏன்டா நாயா பேயா மேதாவை தேடி ஜப்பானையே ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க அண்ணனும் ப்ரண்டும் இதுல அவளை பார்த்ததும் சொல்லாம விட்டு இப்போ வந்து நின்னா ஏன்னு கேட்கிற?” என்று ரியோட்டோ மெதுவாக கேட்க அதை கேட்டு லேசாக சிரித்தவன்
“நீங்களும் அண்ணாவும்தான் வருவீங்கனு நினைச்சா இப்படியா மொத்த கும்பலும் கிளம்பி வருவீங்க? அவ பார்த்தா பயந்துட மாட்டாளா?
அவளை பார்த்ததும்தான் எனக்கே என் உயிர் திரும்ப வந்துச்சு அப்பவும் மேடம் என்னை விட்டு ஓடுறதுலேயே இருந்தா அதான் அவளை பேசி பேசி சரி செய்யவே எனக்கு சரியா இருந்தது இதுல உங்களுக்கு சொல்ல எப்படி தோணும் எனக்கு? உங்கள ஷ்ரத்தா திட்டினதுல தப்பே இல்ல கொஞ்சம்கூட எங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் பேசிக்க ப்ரைவசியே கொடுக்கல அப்புறம் எப்படி அவளை நான் என்பக்கம் இழுத்து புடிக்கிறதாம்? இதுல உடம்பு சரியில்லாத பொண்ணையும் சேர்த்து இழுத்துட்டு வந்து இருக்கீங்க? அவங்கள உட்கார வை ஹர்ஷத்” என்று எல்லோரையும் பார்த்து கேட்டவன் கடைசியாக ஹர்ஷத்திடம் கூற அங்கிருந்த சோஃபாவில் அருந்ததியை அமரவைத்தவன் அவளிடமே அந்த சலைன் பாட்டிலை கொடுத்துவிட்டு ஆராஷி அருகில் வந்தான்.
எல்லோரும் அறையின் முழுவதும் இருந்த அவனது விதவிதமான புகைப்படங்களையே பார்த்தபடி இருந்தனர்.
ஆராஷி அருகில் வந்த ஹர்ஷத் தூங்கும் அவளையே பார்த்தவன்
“அவ இப்படி இவ்ளோ டிஸ்டர்பன்ஸ்ல கூட எழாம நிம்மதியா தூங்குறத இப்பத்தான் பார்க்குறேன் அப்பா இறந்ததுக்கு அப்புறம்” என்று அவன் மெதுவாக கூற அனைவரின் கவனமும் மேதாவின் மேல் திரும்பியது.
“என்ன சொல்ற ஹர்ஷத்?” என்று ஆராஷி கேட்க.
“ம்ம் அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவ சரியா தூங்காம நிம்மதியா இல்லாம ரொம்ப டிப்ரஷன்க்கு போய்ட்டா அப்பவும அவளுக்கு ஒரே ஆறுதல் நீங்கதான் அவளுக்கு டெய்லி உங்க சாங் கேட்டாதான் தூங்குவா அதும் மேக்ஸிமம் ஒன் ஆர் ட்டூ ஹவர்ஸ் அவ்ளோதான் அதோட அவ சின்ன சவுண்ட் கேட்டாகூட எழுந்துடுவா இதுதான் பர்ஸ்ட் டைம் அப்போல இருந்து இப்போ வரை அவ நிம்மதியா தூங்கி நான் பார்க்குறேன்” என்று அவன் கூற அனைவருக்கும் அது வருத்தத்தை தர அமைதியாகினர்.
அவனது பேச்சை கேட்ட ஆராஷியின் அவளை அணைத்திருந்த பிடியோ சற்று இறுகியது.
உடனே அவளுக்கு வலிக்குமே என உணர்ந்தவன் தனது பிடியை தளர்த்தினான். ஆனால் அதை கூட உணராது நிம்மதியாய் உறங்கி கொண்டு இருந்தாள் அவனது மேதஷ்வினி.
