அத்தியாயம் – 43
மொபைல் ரிங் ஆனதும் யாரென பார்க்க ரியோட்டோதான் அழைத்திருந்தான் உடனே யோசனையை விடுத்தவன் எடுத்து பேச ஆரம்பித்தான்.
“அண்ணா எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் ஆரா.
“நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? ஷூட் லாம் ஓவரா எந்த எந்த கல்ச்சர் வெட்டிங் ஷூட் முடிஞ்சது?” என்று கேட்க நடந்தது அனைத்தையும் அவனிடம் சொன்னான் ஆரா.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ரியோட்டோ
“ஆர் யூ லவ் ஹர் ஆரா? ஏன் கேட்கிறேன்னா நீ அவமேல கோவப்படுறது அதே டைம் அவள மத்தவங்ககிட்ட இருந்து சேவ் பன்றதுலாம் கேட்டா எனக்கு அப்படித்தான் தெரியுது ஆரா” என்று கேட்க.
“நோ அண்ணா, அவளோட வொர்க் எனக்கு புடிக்கும் ஆனா எப்போ அவ நடிக்கிறதா அவ வாயாலேயே பேசினாலோ அப்பவே அவள ரொம்ப வெறுக்கிறேன் கேவலம் பணத்துக்காக எவ்ளோ கீழே இறங்கிட்டா? ஆஸ் அ வுமன் அண்ட் மை எம்ப்ளாயியா அவளை சேவ் பண்றது என்னோட கடமை. மத்தபடி அவமேல இருந்த நல்ல எண்ணம்லாம் எப்பவோ போயாச்சுனா எப்படியாவது அவளை வேலையை விட்டு துரத்தினா போதும்னு இருக்கு. இப்படிப்பட்ட ஒருத்தி முகத்தை பார்த்துட்டு இருக்க எனக்கு பிடிக்கலனா அதும் என் மனசுல இருக்குறது உங்களுக்கும் தெரியும் அதுனால நீங்க இப்படி கேட்காதீங்கனா” என்று கூற மீண்டும் யோசித்தவன்.
“எனக்கு என்னமோ நீ அவசரப்பட்டு பேசுறனு தோணுது ஆரா. யோசிச்சு முடிவு எடு ஐ திங்க் அந்த பொண்ணு உன்ன லவ் பன்றானு நினைக்கிறேன்” என்று ரியோட்டோ கூற
சட்டென அமைதியானவன்
“இல்ல அண்ணா அவ நடிக்கிறேன்னு அவளே பேசினதை நான் கேட்டேன்னா ஏற்கனவே இப்படி ஒருத்தியாள நான் ஏமாந்தது போதும்னா.. நான் தேடிட்டு இருக்குறவ கிடைச்சா போதும்னா எனக்கு ப்ளீஸ் இவள பத்தி பேசாதீங்க எனக்கு ரொம்ப கோவம் வருது” என்று ஆரா பேச அமைதியானான் ரியோட்டோ.
“சாரி அண்ணா நான் பட்ட வலி உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனு தெரியல?” என்று ஆராவே பேச.
“ஹேய் அதெல்லாம் ஒன்னும்இல்லடா நீ மைண்ட் ரிலாக்ஸ் பண்ணதான் அங்க போன ஆனா அங்கேயும் உன்னால ரிலாக்ஸ்ஸா இருக்க முடியலையேனு தான் யோசிக்கிறேன்.
நான் திரும்ப பேசுறேன்னு தப்பா நினைக்காதே ஆரா எனக்கு என்னமோ நீ தேடுற பொண்ணும் உன்னோட பி.ஏ வும் ஒண்ணுனு தான் எனக்கு தோணுது.
எனக்கு ஒருமுறை அந்த பொண்ணை காட்டினினா நான் சொல்லிடுவேன்” என்று கேட்டான் ரியோட்டோ. அப்போதே அவளை காட்டி இருந்தால் இப்போது அவளுக்காக இப்படி அலைய வேண்டியது இல்லையே?
“ப்ளீஸ் அண்ணா அந்த பொண்ணோட இவள தயவுசெய்து கம்ப்பேர் பண்ணாதீங்க எனக்கு இவள சுத்தமா பிடிக்கலை அவளை என்னை விட்டு தூரமா போக வைக்க வேணா வழி சொல்லுங்க அவளுக்கும் இவளுக்கும் ஏணி வெச்சாகூட எட்டாது ப்ளீஸ் சேஞ்ச் தி டாப்பிக்” என்று சிறிது கோவமாய் பேச
அவனை சமாதானம் செய்தவன் அவள் நடிக்கிறாள் என்பதை கண்டுபிடிக்கவும் அவளே இந்த வேலை வேண்டாம் என ஓடவும் அவனுக்கு ஐடியா கொடுக்க அதை கேட்டவன்
“வாவ் அண்ணா சூப்பர் ஐடியா இதை அப்படியே செய்யுறேன் தேங்க்ஸ் அண்ணா” என்றபடி ஃபோனை வைத்தான் உள்ளுக்குள் மகிழ்ச்சி ஒருபுறம் அதே சமயம் மற்ற நடிகைகளோடு அவனுக்கு ஒத்து வராது என்பது அதைவிட உண்மை.
கண்களாலேயே அனைவரையும் தூர நிறுத்தி விடுவான்.
அவனிடம் பேசிவிட்டு திரும்பியவன் கண்ணில் அந்த பென் ட்ரைவ் பட அதை எடுத்து தனது லேப்டாப்பை ஆன் செய்து கனெக்ட் செய்தபடி பார்க்க துவங்கினான்.
முதலில் அவனை மட்டும் எடுத்த புகைபடங்கள் அதில் எதையும் வேண்டாம் என அவனால் ஒதுக்கவே முடியவில்லை பின்னர் வீடியோவை ஓபன் செய்ய அதில் அவன் முன்னோக்கி நடக்க மேதா பின்னோக்கி நடக்க சட்டென அவள் சுதாரித்து பக்கவாட்டில் ஒதுங்கியது என இருக்க ஏதோ காதலர்கள் ரொமான்ஸ் சீன் போல இருந்தது அது பார்க்கவே. அதிலும் அவன் அவளை கவனியாமல் முன்னேறி வர அவள் பதட்டமாய் பின்னோக்கி செல்ல அந்த காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் அவனுக்கு பிடித்து போனாலும் உடனே அவளது அனைத்தும் நடிப்பு என்ற வார்த்தை அவனுள் கோவத்தை விதைக்க அந்த வீடியோவை டெலீட் செய்ய போனான் மீண்டும் ஏதோ யோசனையாய் அதை மட்டும் தனது லேப்டாப்பில் சீக்ரெட் ஃபைலில் சேவ் செய்துவிட்டு அதன்பின் பென்டிரைவ்வில் டெலீட் செய்துவிட்டான்.
அடுத்து அந்த நடிகையுடன் எடுத்திருந்த காட்சிகள் அவனுக்கு அருவருப்பையே தந்தது மேதாவை கோவமுற செய்வதாய் எண்ணி அந்த பெண்ணிடம் ஓவராக இழைவதுபோல் நடித்துவிட்டிருந்தான் அவனுக்கே அதை பார்க்க கோவமாய் வந்தது இதற்கு காரணமானவள் மேலும் கோவம் வந்தது. நல்லவேலை அதில் அந்த நடிகையின் முகம் ஒரு சில இடங்களில் மாத்திரமே பதிவாகியது மற்றவை எல்லாம் உடைகளையும் ஆபரணங்களையும் மையமாக கொண்டு எடுக்கபபட்டிருந்ததால் ஹீரோயின்முகம் அவ்வளவாக தெரியாதபடி மறைக்கப்பட்டு இருந்தது. இவன் எது வேண்டும் எது வேண்டாம் என்று கூறினால்தான் அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் எடிட்டிங் டீமிடம் செல்லும் அதனால் புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்தவன் மற்ற எல்லாத்தையும் டெலீட் செய்துவிட்டான்.
அன்றைய சினிமா செய்திகளில் அவன்தான் பேசுபொருளாகி இருந்தான் தனது பி.ஏ விற்காக கூட நடிக்க வந்த நடிகையை அவமானப்படுத்திய நடிகர் என…
ஆனால் அந்த செய்தி மேலும் பரவாமல் அது வந்த அடுத்த அரைமணி நேரத்திலேயே செய்தியை நீக்கிவிட்டான் நிதின்.
ஆனால் அது செஃப் மூலமாக ஆராவின் காதிற்கு வந்துவிட்டது.
அந்த வீடியோவை பார்த்தவன் புரியாமல் அதை என்னவென்று செஃப்பிடம் கேட்க அவருக்கு தெரிந்த மட்டும் அவர் விளக்கினார் அதில் விஷயத்தை ஓரளவுக்கு கிரகித்தவன் யோசனையோடு மாடியின் பால்கனியில் வந்து நின்றான்.
அந்நேரம் வீட்டுக்க வந்து சேர்ந்தாள் மேதா அவளைதான் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆரா யோசனையாக.
அன்றைய தினம் மேதா மயக்கம் தெளிந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வர நிதின் ஒரு பக்கமும் சாஹித்யன் இன்னொரு பக்கமும் பிடித்து கொள்ள நன்றாக இருக்கிறேன் என்று கூறியும் அவர்கள் அவளை விடவில்லை
“சேட்டா ஞான் சுகமாயிட்டு உண்டு விடுங்க நானே வரு” என்று கூறியும்
நிதின்
“சும்மா இரு மோளே டாக்டர் சொல்லி இருக்காங்க ரொம்ப ப்ளட் லாஸ் ஆகி இருக்குனு நீ ஒரு வேலையும் செய்ய வேணாம் ரெஸ்ட் எடு” என்றுவிட்டு இருவரும் விடாமல் அவளை பிடித்துக்கொண்டு சென்றனர்.
அவள் ஏதோ சொல்ல அவளை முறைத்த நிதின் மெதுவாக நடந்து சென்றாள் வயிற்றை பிடித்தபடி
அவளை இவர்கள் தாங்குவதை பார்த்த ஆராஷிக்கு ஒரு புறம் கோவம் ஒருபுறம் நமக்கு இதுபோல் பார்த்துக்கொள்ள ஆள் இல்லையே எல்லோரும் ஏமாற்றுக்காரர்களாக மட்டுமே இருக்கிறார்களே என்ற வருத்தமும் ஒரு சேர அவளையே பார்த்தவன் அவள் வயிற்றில் கைவைத்து செல்ல சந்தேகமாய் பார்த்தான்
‘இவளுக்கு கையில தானே அடிப்பட்டது அப்புறம் எதுக்கு வயித்துல கையை வெச்சுட்டு போறா?’ என்று எண்ணியவன் அவளைதான் பார்த்தபடி நின்றிருந்தான் அவள் நிதினின் காதில் ஏதோ சொல்ல அவளை முறைத்தாலும் அவளை தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமரவைத்தான்
அனைவரும் அவளை உள்ளே சென்று ரெஸ்ட் எடுக்க சொல்ல வேண்டாம் என்று அவள் மறுக்க அனைவரும் அவளுடனே அமர்ந்து விட்டனர்.
“அண்ணா மன்னிச்சிடுங்க என்னால உங்களோட ஹீரோயினும் போய்ட்டாங்க இப்போ ஹீரோயின் வேற உடனே கிடைக்கனும் அவங்க இந்த வெட்டிங் சீன்ஸ்க்கு ஒத்துக்கனும் நாளைக்கே வேற ஷூட் ஸ்டார்ட் பண்ணனும் அதும் இப்போ ஊட்டி ஹைதராபாத்னு போகணும் எல்லாத்துக்கும் அந்த ஹீரோயின் ஃபேஸ் செட் ஆகணும் எ..என்னால எவ்ளோ பெரிய பிரச்சனை” என்று அவள் நிதினிடம் மன்னிப்பு வேண்ட
“உன்னால இல்ல மோளே…
அந்த ஹீரோயின் ஆல்ரெடி ரொம்ப பண்ணிட்டு இருந்தாங்க நாம வளர்த்துவிட்ட பொண்ணுக்கு நாமளே சான்ஸ் கொடுக்கலைனா எப்படினுதான் சான்ஸ் கொடுத்தேன் ஆனா அவ இப்படி கேவலமா ஒரு வேலையை பார்ப்பானு நான் எதிர் பார்க்கலை மோளே. நீ டென்ஷன் எடுத்துக்காதே நாம வேற ஆள் அரேஞ்ச் பண்ணிக்கலாம்” என்று கூற இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அவள்மேல் அவர்கள் காட்டும் பாசத்தை பார்க்க இவள் ஏதோ அவர்களையெல்லாம் வசியம் செய்து வைத்ததை போல தோன்ற அவனது அண்ணன் ரியோட்டோ சொன்ன யோசனையை உடனே செய்ய வேண்டும் என்று எண்ணியபடி நிதினுக்கு ஃபோன் செய்தான்.
நிதின் எடுத்ததும் ஆங்கிலத்தில் முதலில் எதுவும் தெரியாதவன் போல மேதாவின் உடல்நலத்தை விசாரித்தவன்.
பின்னர் மேதாவால்தான் ஷூட்டிங் கேன்சல் ஆனது என பழியை அவள்மேலேயே போட்டான்.
அதற்கு நிதின் விளக்கம் கொடுக்கும் முன் தான் பேசி விடுவதாக சொன்னவன்.
அவள் அந்த நடிகைக்கு எடுபிடி வேலை செய்யாமல் இருந்திருந்தால் தானும் அந்த நடிகையை திட்டி இருக்கமாட்டேன் மேதாவிற்கும் உடல்நலம் பாதிக்க பட்டு இருக்காது தான் அவளுக்கு சப்போர்ட் செய்தது மீடியா வரை சென்றிருக்காது என்று கூறியவன்
இப்போது இருக்கும் சூழ்நிலையில் மற்ற நடிகைகளுக்கும் விஷயம் பரவி இருக்கும் எனக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் முன் வருவது கஷ்டம் அவனுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் கால்ஷீட் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் என சொன்னவன்,
அதனால் தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்ல
அதை என்னவென்று கேட்டான் நிதின் யோசனையோடு பின்னே அவனுக்கு எப்படி இது தெரியும் எனதான் யோசித்தான்.
தான் தான் அந்த செய்தி பரவும் முன்னமே அதை முடக்கி விட்டோமே என்று தான் யோசித்தான். ஆனால் அதை அவன் முடக்கும் முன்னமே அவன் பார்த்துவிட்டதாய் சொன்னான்.
இப்போது அவனது பேச்சு கேட்பது தவிர வேற வழியும் அவனுக்கு இருப்பதாய் தெரியவில்லை அதனால் அவன் என்ன சொல்ல போகிறான் என அமைதியாக எதிர்ப்பார்த்தபடி இருந்தான்