Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 45

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 45

அத்தியாயம் – 45

அவள் சம்மதம் கிடைத்ததும் வேலைகள் மடமடவென துவங்கியது.
எல்லோரும் கிளம்பிவிட அங்கேயே அமர்ந்து இருந்தவளை தான் வெற்றி புன்னகையோடு பார்த்திருந்தான் ஆராஷி.

எல்லோரும் சென்றதும் அவளுக்கு மேலும் கண்ணீர் தான் வந்தது.
அதற்குள் அவளுக்கு ஃபோன் வந்தது எடுத்தவள் கண்ணீரை துடைத்து விட்டு முகத்தையும் துடைத்து விட்டு உடனே சிரித்தமுகமாக அட்டென் செய்தாள். அதை பார்த்தவனுக்கு கோவம் வந்தது ‘ஒரே செகெண்ட்ல முகபாவனையை மாத்துறா பாரு ஆக்டிங் குயின் இவ’ என்று எண்ணியவன் உள்ளே சென்றுவிட்டான்.
ஷர்மாதான் ஃபோன் செய்திருந்தான்.
அட்டென் செய்து ஹலோ கூட அவள் சொல்லவில்லை உடனே கத்த ஆரம்பித்துவிட்டான்

“உன்னை நம்பி நான் அங்க அனுப்பிவெச்சேன் பாரு அதுதான் நான் பண்ண முதல் தப்பு அதைவிட பெரிய தப்பு உன்ன பத்தி அங்க யாருக்கும் சொல்லாம விட்டு இருக்கேன் பாரு அதுதான் இன்னும் இன்னும் பெரிய தப்பு.
காதலுக்காக உயிரையே கொடுக்கலாம் ஆனால் அதே அளவு லவ் ஆப்போசிட் சைடும் கிடைச்சா பரவாயில்லை ஆனா உனக்கு அப்படியா நடக்குது.
ஏன்டி உன்ன நீயே இப்படி கஷ்டப்படுத்திக்கிற?
எனக்கு உன் லவ் பயத்தை தான் கொடுக்குது மேதா.
நீ தொடர்ந்து உடம்பாலயும் மனசாலயும் ஹர்ட் ஆகிட்டே இருக்குறது எனக்கு இன்னும் இன்னும் பயம்தான் கொடுக்குது.
சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியாடி?” என்று முதலில் கத்தியவன் அவளை பார்த்ததும் இளக்கமாகி பேச
அமைதியாக அவன் திட்டுவதை வாங்கியவள்

“முடிச்சுட்டியா? இன்னும் இருக்கா?” என்றவள் அவன் பேசும் முன் மொபைலின் முன் கையை காட்டி பேசாதே என நிறுத்தியவள்
அவன் பேச துவங்கும்முன் அவளே பேசினாள்.

“ஷர்மா உனக்கே தெரியும் என்னைப்பத்தி நான் அவ்ளோ சீக்கிரமே எந்த பொருள் மேல ஆசை பட மாட்டேன் ஆனா ஒருமுறை ஆசைபட்டுட்டா அதை கடைசிவரை மறக்கவும் மாட்டேன்.
எனக்கு ஒன்னும் அவர்கூட நூறு வருஷம் வாழணும் செக்ஸ் ரொமான்ஸ்னுலாம் இருக்கனும்னு ஆசை இல்லடா என்னோட லவ் உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணாலும் புரியாதுடா.

தூரத்துல வானத்துல இருக்குற நிலா மேல இருக்குற லவ்தான் என்னோட லவ் நிலா பிரகாசமா இருக்கும்போதும் இருக்கும் வானமே இருட்டா இருக்கும்போதும் இருக்கும் அது குறையவும் குறையாது.

அவரோட சாங்ஸ் எனக்கு அவ்ளோ ரிலாக்ஸ்ஸேஷன் கொடுக்கும் தெரியுமா?
நான் தனியா அன்னைக்கு தவிச்சப்போ எனக்காக அடிவாங்கி என்னைகாப்பாத்தினாரு அவரு அதை மறந்து இருக்கலாம் ஆனா என்னால சாகுற வரைக்கும் மறக்க முடியாது. ஹி ஈஸ் மை சேவியர்டா.
உங்களுக்குலாம் என் லவ் ஸ்டுப்பிடிட்டியா தெரியலாம் ஆனா எனக்கு அது லைஃப்டா.

என்னோட லவ் அவருக்கு மட்டும் தான் அதுல எந்த மாற்றமும் இல்ல” என்று அவள் கூற அதை கேட்டவன்.
மேலும் பேசினான். இவர்களது இந்த உரையாடலின்போது தான் அங்கே நிதின் வந்தான் ஆனால் அவள் அதை கவனிக்கவில்லை.

“ஐ ரெஸ்பெக்ட் யுவர் லவ் பேபி ஆனா அதுக்கு அவர் ஓகே சொல்லுவாரா? நீ உன்னோட சைல்ட்வுட்ல இருந்து அவர லவ் பன்ற ஓகே ஆனா அவரு இப்போ வரை உன்னை வெறுத்துட்டு தானே இருக்காரு.
சப்போஸ் அவரு வேற யாரையாவது லவ் பண்ணா அப்போ என்ன செய்வ? நீ பன்றதெல்லாம் வேஸ்ட் தானே அப்போ.. இப்போவே நீ எவ்ளோ வீக் ஆகிட்டனு தெரியுதா இல்லையா உனக்கு எல்லாத்தையும் தைரியமா ஹாண்டல் மேதஷ்வினி ஶ்ரீ மயக்கம் போட்டு விழுறா அழுறா அவளை அவளே ப்ளேம் பண்ணிக்கிறா… இன்னும் அவளோட லவ் அவளுக்கு இல்லைனு ஆனா அவ மொத்தமா உடைஞ்சுடுவா போல எனக்கு பயமா இருக்கு பேபிமா”
அதை கேட்டு மெல்ல சிரித்தவள்

“பேபி… இது என்ன அக்ரிமெண்ட் லவ்வா நான் உன்ன லவ் பன்றேன் உனக்காக நான் என்ன என்னவோ செய்யுறேன் நீயும் என்னை லவ் பண்ணியே ஆகணும்னு சொல்ல? அவருக்காக நான் செய்யுறதுலாம் அவர்மேல எனக்கு இருக்குற லவ்னால தான் ஆனா அதுக்காக அவரு என்னை லவ் பண்ணனும்னு அவசியம் இல்லடா.

எனக்கு நான் அவர் பக்கத்தில இருக்குறது அவரை நான் பாதுகாக்கனும் அவரோட வேலைக்கு நான் உதவியா இருக்கனும் அவ்ளோதான் மத்தபடி வேற இல்ல அவரு என்னை லவ் பண்ணலைனாலும் இதெல்லாம் நான் கண்டிப்பா செய்வேன் அது அவரு வேற யாரையாவது லவ் பண்ணாலும் சரி கல்யாணம் பண்ணாலும் சரி physically மேதா கொஞ்சம் வீக் ஆகிட்டா இனிமே ஆகமாட்டா” என்று அவள் கூற

“சரி அப்போ நீ யாருனு அவருக்கு சொல்லிட்டே இதெல்லாம் செய்யலாம்ல எதுக்கு நீ உன்னோட அடையாளத்தை மறைச்சு இதெல்லாம் செய்யனும். உனக்கு தான் அவரோட லவ் தேவை இல்லையே அப்போ நீ தி கிரேட் ஶ்ரீ குரூப்ஸ் ஓனராவே இதெல்லாம் செய்யலாமே?”
என்று அவன் கேட்க
“நான் யாருனு தெரிஞ்சா என்னை இப்படி அவருக்கு வேலை செய்ய விடுவாரா? அப்புறம் அங்க பயம்தான் இருக்கும் ரியாலிட்டி இருக்காது அண்ட் என்னோட ப்ராமிஸ்ஸ நான் காப்பாத்தனும் அதுக்கு தான் இந்த வேஷம்.
உண்மையான லவ் எதையும் திரும்ப எதிர்பார்க்காதுடா அவங்க நிம்மதியா சந்தோஷமா இருந்தாலே போதும்னு தான் யோசிக்கும்”
என்று அவள் முடிக்க.
“என்னமோ போ இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் உன்ன நீயே ஏமாதிட்டு இருக்க போறியோ?” என்று கூற
“வாழ்நாள் முழுக்க” என்றவளின் கண்களில் கண்ணீர் வர பார்க்க இமையை சிமிட்டி அதை தடுத்தவள் சிரித்தபடி அவனிடம் பேசிவிட்டு வைத்தாள் இதெல்லாம் அவளுக்கு பின்னாடி நின்று கேட்ட நிதினுக்கு தோன்றியது ஒன்று தான்.
‘என்ன மாதிரியான லவ் இது?’ என்றுதான். ஏதோ பேச வந்தவன் அப்படியே திரும்பிவிட்டான்.

ஃபோனை வைத்தவளுக்கு அவளது பள்ளிக்காலம் நினைவு வந்தது. அவனையும் சேர்த்து…

சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவளுக்கு தாயாய் தன்னை தாங்கிய நண்பர்களும் தந்தையும் தான் உறவுகள் வேறு யாருடனும் அவள் அவ்வளவு பழகமாட்டாள்.
தேஜுவிற்கு அப்போதிலிருந்தே வெளியே தங்கி தங்கி படித்ததால் அவளுக்கு தந்தையோடு அவ்வளவு பிணைப்பு இல்லை அவளுக்கு கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வந்த ஆயம்மாவும் அவளை தன் மகள் போல பார்த்துகொள்வதால் அவளை பற்றிய எண்ணங்கள் அவருக்கு வந்தது இல்லை எனலாம் ஏனெனில் அவளுக்கு கற்று தர ஆயம்மா இருந்தார்.
ஆனால் மேதாவிற்கு தந்தையோடான பிணைப்பு அதிகம் அதிலும் அவளுக்கு ஆயம்மாவுடனும் பிணைப்பு வரவில்லை எல்லாவற்றையும் அவள் அவளது தந்தையிடம் மட்டுமே ஷேர் செய்வாள் அதனால் அவளுக்கு வேறு யாரோடும் அந்த நெருக்கம் ஏற்படவில்லை… நண்பர்களிடம் கூட சிரித்து பேசுவாளே தவிர தனது மற்ற எண்ணங்களை பகிர மாட்டாள்.
அதனால் சரத்ஶ்ரீ சாரோடே இருப்பாள் பெரும்பாலும் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்துக்கு சொந்தகாரரா இருந்தாலும் தனது மகள்களுக்கான வேலையில் அவர் வேறு யாரையும் விட்டது இல்லை அவர்கள் கேட்பதை அவரே பக்கத்தில் இருந்து பார்த்து கொள்வார் அதில் தேஜு அவரிடம் கொஞ்சம் ஒதுங்கி போவாள் ஆனால் மேதா அப்படி இல்லை.
அவளது பனிரெண்டாவது வயதில் அவள் பூப்பெய்தினாள் அதையும் தந்தையிடம்தான் வந்து சொன்னாள் அதன்பின் அவர்தான் அவளுக்கு எல்லா பணிவிடையும் செய்தார்.
அப்போது அவளுக்கு கோடை விடுமுறை வேறு அதனால் அவள் தந்தையுடன் ஜப்பானுக்கு கிளம்பிவிட்டாள் அவர்கள் அங்கு அப்போது தான் அவர்களது பிரான்ச் துவங்க போகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *