Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 46

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 46

அத்தியாயம் – 46

அங்கேயே ஒன்றரை மாத காலம் தங்கவேண்டி இருப்பதால் புதிதாக டான்ஸ் கிளாஸ் சேர்ந்த தேஜு வரவில்லை என்று கூறிவிட மேதாவோ வந்தே தீருவேன் என அடம்பிடித்து அவருடன் சென்றாள்.
அங்கே சென்று அவள் சும்மா இருக்க வேண்டாம் என நினைத்த சரத்ஶ்ரீ அவளை அங்கு உள்ள ஒரு சென்டரிலும் லைப்ரரியிலும் அவருடைய பதவியை உபயோகித்து சேர்த்து விட்டார்.
எங்கும் சாதாரணபெண் போலவே செல்லும் மேதா அங்கும் அப்படியே தான் செல்ல ஆசைப்பட்டதால் அவளுக்கு பாடிகார்ட்ஸ் ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டார்.
ஜப்பானின் பாதுகாப்பான சூழ்நிலையும் அதற்கு காரணம் அதனால் தினமும் காலையில் கிளம்புபவள் சென்டர் லைப்ரரி இரண்டும் அருகிலேயே இருப்பதால் பதினைந்து நிமிட நடையிலேயே சென்று வந்துவிடலாம் அதனால் அவள் நடந்தே சென்று வந்தாள்.

தினமும் அங்கு அருகில் இருக்கும் ஒரு பார்க்குக்கு சென்று சிறிது நேரம் செலவிட்டு வருவாள்.
அவள் தினமும் சென்று வருவதை பார்த்துக்கொண்டு இருந்த நான்கு இளைஞர்கூட்டம் அவளது அழகை பார்த்து அவளிடம் பேச வேண்டும் என்று நினைப்பர் ஆனால் அவள் வரும்போது யாரேனும் ஒருவர் வருவதால் அவளிடம் பேசாமல் விட்டுவிடுவர் இன்னைக்கு இல்லனா இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று.

இப்படியே ஒரு மாதகாலம் சென்றுவிட்டது. மேதாவும் நன்றாக படிக்க ஆரம்பித்து விட்டாள் அப்போதே கொஞ்சம்
கொஞ்சமாக ஜாப்பனீஸும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள்.

அன்றைய தினம் முகத்தில் ஒரு பெரிய பரு வந்திருந்ததை பார்த்தவள் உடல் வேறு சற்று அசதியாக இருக்க லீவ் போடலாம் என எண்ணினாள் ஆனால் லைப்ரரியில் எடுத்த புக்கை இன்றுதான் ரிட்டன் செய்ய கடைசி தினம் என்று கிளம்பினாள் மேதா
கிளாஸ் முடியும்போதே அவளுக்கு வயிறு வலி ஆரம்பம் ஆனது அதனால் மிக மெதுவாகவே நடந்து சென்றாள் அதனால் லேட்டாக லைப்ரரி சென்று புக்கை சமர்பித்துவிட்டு பார்க்கை அடையும் முன் வயிற்றுவலி அதிகமாகி அவளது உடையில் இரத்தக்கறை பட்டு விட அவளது காலிலும் இரத்தம் வழிய முட்டிவரை மட்டுமே ப்ராக் அணிந்து இருந்தவள் என்னவோ என்று குனிந்து பார்க்க பயந்துவிட்டாள் உடனே கையிலிருந்த
அவளது கர்ச்சீப்பை எடுத்து கால்களை துடைத்தாள் அவளுக்கு அழுகை வேறு வந்துவிட்டது அழுதபடியே தனது உடையை பார்த்தவள் அப்படியே பார்க்கில் அமர்ந்துவிட்டாள் அவளுக்கு பயமும் அழுகையும் சேர்ந்து வந்தது இதையெல்லாம் அங்கிருந்த ஒரு இளைஞன் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளது அழுத முகமும் அவளது காலில் வழியும் இரத்தத்தையும் பார்த்து
முதலில் அவளுக்கு ஏதோ அடிப்பட்டு இரத்தம் வருவதாக எண்ணியவன் அவளது உடையில் பார்த்து அவள் அழுவதை பார்த்தவன் இது அடிப்பட்ட இரத்தம் அல்ல என்பதை உணர்ந்தவன் அவளுக்கு உதவ வேண்டும் என யாராவது பெண்கள் இருக்கிறார்களா என்று பார்க்க வெளியே செல்ல அந்நேரம் பார்த்து அவளை வந்து சூழ்ந்தனர் அவளை ஒரு மாதமாக ஃபாலோ செய்யும் அந்த இளைஞர் குழு அவர்களை பார்த்ததும் அவளுக்கு மேலும் அழுகை வந்தது அங்கிருந்து தப்பிக்கவும் முடியாமல் அவர்களை தவிர்க்கவும் முடியாமல் அவளுக்கு அவளது நிலையை எண்ணி அழுகையே வந்தது அவளது அழுகையும் அவளது காலில் வந்திருந்த இரத்தத்தையும் பார்த்தவர்கள் அவளிடம் ‘அது மாதவிடாய் கால இரத்தம் என்றும் அப்படினா நீ பெரிய பொண்ணா அப்போ எங்களுக்கு கம்பெனி கொடுக்குறியா? காசு வேண்டுமானால் கொடுக்கிறோம் என்று அசிங்கமாக பேச அவளுக்கு இன்னும் அழுகையும் பயமும் அதிகம் ஆகியது அதை தூரத்திலிருந்து பார்த்தவன் உதவிக்கு வர நடக்க யாரேனும் உதவிக்கு வருவார்களா என அவளும் பார்க்க தூரத்தில் அவன் ஓடி வந்து கொண்டு இருந்தான் எல்லாம் ஆண்களாக இருக்க அவளுக்கு பயம் அதிகம் ஆகியது ஜாப்பனீஸ் புரிந்த அளவுக்கு பேச வராது என்பதால் மேலும் அழுதாள் அவளை கிண்டல் செய்து கொண்டு இருந்த இளைஞரில் ஒருவன் பேசியபடி அவள்மேல் கைவைக்க வர ஓடிவந்து அவனது கையை பிடித்து தடுத்தவன் அந்த இளைஞர்களை திட்ட அவனை தாக்க ஆரம்பித்தனர் அதில் அவனும் திருப்பி தாக்க
அதில் ஒருவன் அங்கிருந்த சிறிய கல்லை எடுத்து அவனை தலையில் இடிக்க அவனுக்கு அடிப்பட்டு கீழே விழுந்தான் அதுவரை தனக்கு பாதுகாப்பு தேடி அழுதவள் இப்போது தனக்காக ஒருவன் அடி வாங்குவதை பார்த்து அவனை காப்பாற்ற கூட முடியாத தன் நிலையை எண்ணி மேலும் அழுதாள்.
அதற்குள் அந்த இளைஞர்கள் அவனை மேலும் தாக்கவர அவர்களையெல்லாம் அடித்து தள்ளியவன் அங்கிருந்த கொம்பை எடுத்து அவர்களை அடிக்க வலி தாங்காது அவனையும் தாக்க அவனுக்கும் அடிப்பட்டது மேலும் ஆனாலும் ஆக்ரோஷமாக அவன் தாக்க மேலும் அடி வாங்க முடியாததாலும் வேறு யாரோ வரும் சத்தம் கேட்கவும் அவர்கள் ஓடிவிட்டனர்.
அவர்கள் ஓடிவிட அவளது அழுகை இன்னும் அதிகமானது மற்றவர்கள் வந்து அவளது நிலையை பார்த்தால் அவளது மனநலம் ரொம்ப பாதிக்கும் என எண்ணியவன் தனது காயத்தையும் பெரியதாய் காட்டிக்கொள்ளாமல் அவளிடம் சென்று அவளை தூக்கிக்கொண்டு அங்கே அருகில் இருந்த புதரில் அவளை மறைத்தபடி அமரவைத்தான் அவனும் அருகில் அமர அவனை பார்த்து மேலும் அழுதாள்.
சிறிய பெண் அதனால் மிகவும் பயந்து இருக்கிறாள் என்பதை புரிந்த அவளைவிட இரண்டு வயது பெரிய ஆளான ஆராஷி அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவளது பெயர் கேட்டான் அவள் அதையும் சொல்லும் நிலையில் இல்லாமல் இருக்கிறாள் என்று உணர்ந்தவன்
“சரி என்கூட வா” என்று ஜாப்பனீஸில் கூறியபடி அவளை பார்த்து கையை கொடுத்தான் ஆனால் அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து மாட்டேன் என்றுதான்தலையை ஆட்டியபடி அழுதாள்.
“ஏன்” என்றான் அவன் அவளை புரியாமல் பார்த்து
அவனிடம் அதையும் சொல்லமுடியாமல் அவள் தனது உடையை பார்க்க அப்போது தான் அவனுக்கு புரிந்தது.

“நா..நான் ஷாப் போயிட்டு உனக்கு தேவையானது வாங்கிட்டு வர்றேன்” என்றபடி எழப்போக சட்டென அவனது ஜாக்கெட்டை பிடித்து அமர்த்தியவள் பயந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவர்கள் மீண்டும் வந்து விடுவார்களோ என பயப்படுகிறாள் போலும் என நினைத்தவன் அவளை தனியே விட்டு போக மனசில்லாமல் யோசனை செய்ய அவளோ அவனது உடையை பிடித்தபடி இருந்ததால் அவனுக்கு யோசனை வந்தது சட்டென தனது ஜாக்கெட்டை கழட்டி அவளை நெருங்கி அவளது பின்புறமாக வளைத்து இடுப்பை சுற்றி அவனது ஜாக்கெட்டை கட்டினான் அதில் இமைக்க மறந்து அவனைதான் பார்த்தாள்.

ஒரு பெண் தனது சந்தோஷமான தருணத்தில் உதவியவர்களை கூட மறந்து போவாள் அவளை துன்பப்படுத்தியவர்களையும் எளிதில் மறந்துவிடுவாள் ஆனால் அவளது இக்கட்டான சூழ்நிலையில் ஒருவர் உதவி செய்தாள் அந்த இக்கட்டிலிருந்து அவளை வெளியே வர உதவினால் அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டாள்.
அப்போதைய அந்த பதினேழு வயது சிறுவனின் முகம் அவளது மனதில் அப்படியே பதிந்து போனது அவளுக்காக அடிவாங்கி அவளை அந்த துன்பத்திலிருந்து காத்தவனை அவள் எப்படி மறப்பாள்.

ஜாக்கெட்டை கட்டிவிட்டு அவளை பார்த்து புன்னகைத்தவன் “நவ் ஓகே” என்று கேட்க அவளும் தலையை ஆட்ட
“குட் கேர்ள் கம்” என்றுவிட்டு அவளை மெதுவாக அழைத்துக்கொண்டு வெளியே சென்றான் அவள் அழுகை நிற்க ஆரம்பித்து இருந்தது. சற்று தயங்கி நடக்கவும் சிரமம் பட எதையும் யோசிக்காமல் அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவளோ முதலில் அதிர்ந்து பின் இறங்க முற்பட அவளை பார்த்து புன்னகைத்தவன்
“டோண்ட் மூவ் பேபி. ஐ க்நோ யுவர் நாட் ஏபிள் ட்டூ வாக்… மை ஸ்மால் அட்வைஸ் ப்ளீஸ் ரிடியூஸ் யுவர் வெயிட் பேபி” (நகராதே பேபி.. எனக்கு தெரியும் உன்னால நடக்கமுடியலனு. அப்புறம் என்னோட சின்ன கருத்து கொஞ்சம் உடல்எடையை குறைச்சுக்க)என்று கூற அவளுக்கு அவளை அறியாமலே வெட்கம் வந்து விட்டது அதில் அவள் தலையை குனிந்து கொள்ள
அங்கு அருகிலேயே இருந்த ஷாப்பில் அவளை தூக்கி சென்று வாஷ்ரூமில் விட்டவன்

“வெயிட் ஹியர் ஐவில் கம் பேக்” என்றுவிட்டு சென்றான் அவளுக்கு தர்மசங்கடமான நிலை யாரென்று தெரியாதவன் முன் தன் கோலத்தை எண்ணி அவளுக்கு அசிங்கமாகிவிட்டது முன்பின் இதெல்லாம் பழக்கமும் இல்லை எடுத்து சொல்லவும் யாருமில்லை ஊரிலேயே இருந்து இருந்தால் ஆயம்மா சொல்லி கொடுத்து இருப்பார் அவரும் இப்போது கூட இல்லையே யாரிடம் உதவி கேட்பது அதும் எல்லோரும் பார்க்க அவன் அவளை தூக்கிக்கொண்டு வந்தது இன்னமும் அவளுக்கு தர்மசங்கடமான நிலையை கொடுத்தது.
வெளியே சென்றவன் தனது மொபைலை எடுத்து அவளுக்கு என்ன தேவைபடும் என கூகிள் செய்து பார்த்து அதே ஷாப்பில் அவளுக்கு தேவையான பொருளையும் வயிற்றுவலிக்கு மருந்தும் வாங்கியவன் அதை கையில் வைத்துக்கொண்டு யோசித்தவன் அவளது உடையில் கறை இருந்ததால் அவளுக்கு ஒரு ஸ்கர்ட்டும் வாங்கினான் ஆனால் அவளது அளவு தெரியாததால் லூசான சைசில் வாங்கிவிட்டான் அவன் அதை வாங்கியபடி அங்கிருந்த பணிப்பெண்ணிடம் உதவி கேட்டு அவளுக்கு அதை கொடுக்க சொல்லியபடி அவன் அங்கேயே நிற்க அவரும் அவனை மெச்சியபடி எடுத்து சென்றார் அவளிடம் அதையெல்லாம் கொடுத்தவர் ஆங்கிலத்தில் அவளுக்கு நாப்கினை உபயோகிக்கும் முறையும் சொன்னவர் வீட்டுக்கு போனதும் ஹாட்பேக் ஒத்தடமும் கொடுக்க சொல்லி வெளியே சென்றார்.
கூடவே அவள் மிகவும் கொடுத்து வைத்தவள் இப்படி ஒரு உறவினன் கிடைக்க என்று கூறவிட்டு செல்ல அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவர் சொல்லிகொடுத்தது போல நாப்கினை மாற்றியவள் தனது ப்ராக் மற்றும் அவனது ஜாக்கெட்டை கழட்டி வைத்துவிட்டு அவன் அவளுக்காக வாங்கிய உடையை அணிய அது லூசாக இருந்தது ஆனாலும் சமாளித்து அணிந்தவள் தனது கால்களை கழுவ அதிலிருந்து இரத்தம் அந்த உடையில் பட்டதால் அதுவும் கறையாகி விட்டது சரியென வாஷ் செய்யும் போது மேலும் நீரும் பட்டு நனைந்துவிட்டது அந்த ப்ராக் ஈரம் நிறைய ஆகிவிட்டதால் அவள் அதனை கழட்டிவிட்டு மீண்டும் தன் பழைய ப்ராக்கையே அணிந்தவள் டிஸ்ஸியூ கொண்டு கால்களை சுத்தமாக துடைத்துவிட்டு பழையபடி அவனது ஜாக்கெட்டை அணிந்து கொண்டு அந்த துணியை அங்கிருந்த பேக்கிங் கவரில் பேக் செய்து எடுத்து வந்தாள்.
வெளியே வந்தவள் அவனை தேட அதற்குள் அவனுக்கும் பேண்ட்எய்ட் போடப்பட்டு இருந்தது அவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருந்தான் கையில் ஒரு பார்சலோடு.

அவள் அருகே வர அவளை பார்த்தவன் அவள் மீண்டும் அதே உடையை அணிந்து வர எழுந்து அவள் அருகில் வந்தவன்
ஏன் அந்த உடையை மாற்றவில்லை என்று ஆங்கிலத்தில் கேட்க தயங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க என்னவோ ஆகி இருக்கிறது என்று அவளது தர்மசங்கடமான முகத்தை வைத்தே உணர்நதவன்
சரி வா என்றபடி அவளது கையை பிடித்து வெளியே அழைத்து சென்றான்.
வெளியே வந்ததும் அங்கிருந்த பென்ச்சில் அமரவைத்து அவன் கையில் வைத்திருந்த ஜுஸையும் சாக்லேட்டையும் அவளிடம் கொடுத்தான்
அதை பார்த்தவள் கண்கள் கலங்க
“எ..என்னை மன்னிச்சிடுங்க என்னால நீங்க அடி வாங்கி இருக்கீங்க ஆனா நான் உங்கள கூட கேர் பண்ணாம பதட்டத்துல அழுதுட்டேன்.. ஐயம் சாரி அண்ட் தேங்க்யூ சோ மச்” என்று அவள் தமிழில் கூறி மீண்டும் அழ ஆரம்பிக்க.
“ஓஓ.. கிட் டோண்ட் க்ரை.. ஐ டோண்ட் அண்டர்ஸ்டான்ட் வாட் யு செட் அண்ட் யுவர் லேங்குவேஜ் சோ டெல் மீ வேர் ஈஸ் யுவர் ஹோம் ஐவில் ட்ராப் யூ” என்றபடி பேச அப்போது தான் அவனிடம் தமிழில் பேசி இருக்கிறோம் என்பதை உணர்ந்தவள் அதை ஆங்கிலத்தில் கூற அவள் வருத்தப்படுகிறாள் என்று உணர்ந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *