அத்தியாயம் – 51
கேரவன் உள்ளே சென்றவன் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அவள்மேல் கோவமாகவே இருப்பதை போல எண்ணிக்கொண்டு இது வெறும் நடிப்புத்தான் நடித்து கொடுத்துவிட்டு போகவேண்டும் அவ்வளவுதான் அவளது நடிப்பு வலையில் தான் சிக்கிவிட கூடாது என்று அவளை மீண்டும் தவறாகவே கணித்தான்.
அதன்பின் மாலை நேரம் வர எழுந்து மேக்கப் கலைத்து ரெடியாக துவங்கினான்.
லைட் பிஸ்தா கலர் ஃபாரமல் ஷர்ட் அதன்மேல் அடிக்காத லேசான மஞ்சள் நிற கோட் அதற்கு தோதாக வெள்ளைநிற பேண்ட் என்று இருந்த காஸ்ட்யூம் அவனுக்கு அழகாக பொருந்தி போனது.
மேதாவிற்கு மஞ்சள் நிற பாவாடை ப்ளவுஸ் தாவணி மட்டும் முழுவதும் லைட் பிஸ்தா கலர் வெறும் லேஸ் மட்டும் வைத்து இருந்தது அதற்குமேல் ஆபரணங்கள் என அழகாக காட்டப்பட்டு இருந்தது.
தனது வெட்கப்பட்ட முகத்தை மறைத்தவள் கன்னங்கள் சிவந்து போய் அமர்ந்திருக்க அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்த அருந்ததி
“மேதா இன்னைக்கு செம்ம அழகா இருந்த நான் மட்டும் பையனா இருந்தேன் உன்ன எங்கனா கடத்திட்டு ஓடி இருப்பேன் அவ்வளவு அழகா இருந்த” என்று கூறியபடி நகைகளை கழற்ற அவளுக்கு உதவினாள்.
அவளுக்கு இப்போது இவளிடம் பேசியே ஆகவேண்டும் என்று எண்ணியபடி
“அரூ நீ சொல்றதெல்லாம் ஓகே ஆனா எனக்காக அந்த லாஸ்ட்டா எடுத்த சீன் மட்டும் ரிமூவ் பண்ணிடேன் ப்ளீஸ் அது கொஞ்சம்” என்று பேச அவளது பேச்சை தடை செய்யும் விதமாக பேசினாள் அருந்ததி.
“ஸ்டாப் மேதா. என்னோட இத்தனை வருஷ ஷூட் எக்ஸ்பீரியன்ஸ்ல நான் யார்க்காகவும் எதுக்காகவும் சீன்ஸ்ல சேஞ்சஸ் பன்னதே இல்ல ஆனா உனக்காகதான் கிஸ்ஸிங் சீன் மாத்தினேன் இப்போ இதை டெலீட் செய்ய சொல்லி பேசுற.
அதும் அந்த சீன் பேக் சைட் ஜூவல்ஸ் ஒரே ஒரு ஷாட் தான் எடுத்து இருக்கேன் அதனால அதை ரிமூவ் பண்ணவே முடியாது.
என்னோட வேலையில இப்படி தலையிடுறது என்னால பேசாம இருக்க முடியாது மேதா. அண்டர்ஸ்டாண்ட்
ப்ளீஸ்” என்றுவிட்டு அவளுக்கு நகைகளை கழட்ட உதவிவிட்டு சென்றுவிட்டாள்.
இவள் பேசியது புரிந்தாலும் அவளுக்கு அந்த சீன் கூச்சத்தையே கொடுத்தது.
இருந்தும் என்ன செய்ய என்று யோசித்தபடி பெருமூச்சு ஒன்றை விட்டவள் அடுத்த சீனுக்காக ரெடியாக ஆரம்பித்தவளுக்கு அப்போது தான் தன் கழுத்தில் இருந்த தாலி கண்ணில் பட்டது.
அதை இறுக பற்றியவளுக்கு அவனோடான தனது பந்தம் இதுவரை புரியாத புதிராகவே தோன்றியது கண்கள் ஏனோ கலங்கியது அவனுக்குத்தான் அவளை பிடிக்கவே மாட்டேன் என்கிறதே அப்புறம் எப்படி காதல் கல்யாணம் எல்லாம்?
ஆனால் அவள் மனம் முழுவதும் அவன் மட்டுமே நிறைந்து இருக்கிறான். கல்யாணம் என்ற பந்தத்தில் இணைந்தால்தான் அவனுடன் சேர்ந்ததாக அர்த்தமா? அவனை எண்ணி அவனுக்காக வாழ்ந்தாலே போதும் என்று எண்ணியவள் கலங்கிய கண்களை துடைத்து முகம் கழுவி ரெடியானாள். அப்படி அவன் அவளுக்கு என்னதான் செய்துவிட்டான் இவள் அவ்வளவு நேசிக்க?
மேதா உடைமாற்றி ரெடியாக மற்ற நகைகளை கழட்டியவள் தாலியை மட்டும் கழட்டவில்லை நகைகளை செக் செய்து பேக் பண்ணிய நிலவினிக்கு யோசனையாய் இருந்தது. முதலில் மோதிரத்தை கொடுக்கவில்லை இப்போது தாலியை கொடுக்கவில்லை.
நிலவினிக்கு இந்த மேதா புதியதாகவே தெரிந்தாள் ஆனால் எதையும் கேட்டு கொள்ளவில்லை.
தாலியை ப்ளவுஸுக்குள் மறைத்தபடி ரெடியானாள்.
நிலவினி நகைகளை கொண்டு வந்து கொடுக்க அதையெல்லாம் மார்க் செய்து அணிவித்தார் மேக்கப் ஆர்டிஸ்ட்.
லைட்டான மேக்கப்பில் கற்கள் பதித்த ஆபரணங்களோடு சேர்ந்து அந்த சிம்பிளான உடையில் அவ்வளவு ஜொலித்தாள் மேதா.
ஆராஷியும் ரெடியாகி வர டைம் ஆகுது என்று வேகமாக ஷூட் துவங்கியது.
இருவருக்கும் ஒருவரையொருவர் பார்த்து சற்று ஏதோ தயக்கம் இருந்தாலும் இது அத்தனை பேரின் உழைப்பு என்பதை உணர்ந்தவர்கள் எதையும் வெளிகாட்டி கொள்ளாமல் அருந்ததி சொன்னபடியெல்லாம் போஸ் கொடுத்து நின்றனர்.
அழகான மாலை இருவருக்கும் அணிவிக்க பட்டு இருக்க அது கொஞ்சம் அவனுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது அவனுக்கு இதுவரை மாலை அணிந்து நடித்தது இல்லாத காரணத்தால் அவனுக்கு அது புதியதாக இருந்தது காலையும் போட்டு இருந்தால் எதுவும் சொல்லாமல் இப்போதும் போட்டு இருந்தான்.
காலையில் இருவரும் தொட்டு நடித்து இருந்ததால் இப்போது தோள்மேல் கைபோட்டு, தலையை சாய்த்தபடி என அருந்ததி சொன்ன எல்லாவற்றையும் முகம் கோணாமல் செய்தனர் இருவரும்
அவ்வப்போது அவனது கண்கள் மேதாவையே தான் பார்த்து வந்தது எல்லா உடையிலும் அவள் அவ்வளவு பாந்தமாக பொருந்தி இருந்தாள்.
அவளோ அவன் பக்கம் திரும்பினால்தானே பதட்டம் பயம் எல்லாம் திரும்பவே கூடாது என்று முடிவு செய்துவிட்டாள் ஆனால் அவளது நேரம் அவளை திரும்பாமல் விடவில்லை.
அவன் கிரீன்டீ வேண்டும் என்று மேக்கப் ஆர்டிஸ்ட்டிடம் கேட்க அவரோ திருதிருவென முழிக்க மேதாவை அவரே அழைத்தார்.
தன்னையே நொந்தபடி சென்ற மேதா அவனை பார்க்கதவாறு ஒரு பக்கமாய் திரும்பி நின்று மேக்கப் ஆர்டிஸ்டிடம் பேச அவளது இடுப்பு லேசாக தெரிந்தது ஆனால் மச்சம் தெரியவில்லை அவனுக்கு அவன் கூலிங்கிளாஸ் போட்டபடி அமர்ந்து இருந்ததால் அவள் மட்டுமல்ல வேறு யாருக்குமே அவனது பார்வை போன இடம் தெரியவில்லை ஆனால் மேதாவிற்கு உள்ளுணர்வு உணர்த்திவிட டக்கென்று அவனுக்கு முதுகு காட்டி நின்றவள்
தன் இடுப்பு துணியை சரி செய்தாள் மேக்கப் ஆர்டிஸ்டிடம் அவன் கேட்டதை டிரான்ஸ்லேட் செய்து சொல்லிவிட்டு சென்றாள் அவள் வெறும் டச்அப் மட்டும் செய்து கொண்டாள் அதன்பின் வேலை வேகமாக நடந்து அன்றைய தினம் ஷூட் நன்றாகவே முடிந்தது.
அதை இரவே அவனும் பார்த்து ஓகே சொல்லிவிட்டதால் வேலைகள் வேகமாக முடிந்தது.
ஆனால் அந்த புகைப்படங்களையும் வீடியோவையும் அவன் ஏனென்றே தெரியாமல் இரகசியமாக சேமித்து வைத்தது அவன் மட்டுமே அறிவான்.
மறுநாள் ஊட்டியில் ஷூட் என்று அங்கு கிளம்பினர்.
அங்கு முதலிலேயே போக வேண்டியது ஆனால் போகமுடியாமல் அந்த நடிகை செய்த கோலத்தால் ஆனது அது இப்போது தான் சென்றனர்.
அங்கு சென்றதும் அவன் மிகவும் குளுமையாக உணர்ந்தான் அவர்கள் தங்கி இருந்த அரண்மனை போன்ற வீடு மிக அழகாக இருந்தது.
அவனது அறை வடிவமைப்பு அவ்வளவு அழகாக இருந்தது. இங்கு சுத்தி பார்க்க ஆசைப்பட்டான் ஆனால் யாரிடம் கேட்பது நல்ல மூடில் இருக்கும் போது அந்த நாடககாரியின் உதவி வேண்டுமா? என்றுதான் யோசித்தபடி அந்த ரூமில் இருந்த கண்ணாடி சுவர் அருகில் போடப்பட்டு இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.
அங்கிருந்து வெளியே வேடிக்கை பார்க்க நன்றாக இருந்தது ஆனால் அவனுக்கு வெளியே சென்று அந்த பனி மூட்டமான இடத்தை சுற்றி பார்க்கவேண்டும் என்று தோன்றியது.
வெளியே பார்த்தபடி இருந்தவனுக்கு மேதா எங்கோ ஃபோன் பேசியபடி செல்வது தெரிந்தது.
இவளை ஃபாலோ பண்ணி போனா நாமளும் வாக்கிங் போன மாதிரி இருக்கும் இவளோட திருட்டுத்தனம் ஏதாவது கண்டுபிடிச்ச மாதிரியும் இருக்கும் என எண்ணியபடி ஹூடி அணிந்து இருந்தவன் அப்படியே அங்கிருந்த கதவை திறந்து அவள் பின்னேயே சென்றான்.
அதேநேரம் மேதாவோ தன் நண்பன் ஷர்மாவிடம் பேசியபடியே அங்கு சென்றாலே மேதா வழக்கமாக வாக்கிங் செல்லும் பழக்கம் இருப்பதால் அதேபோல நடந்து அவளுக்கு ரொம்ப பிடித்தமான அவளே வடிவமைத்த பார்க்கில் அமர்ந்து பேசினாள். டிரான்ஸ்லேட்டரை அணிந்தபடி ஆராஷி அவளை தொடர்ந்து வந்ததால் அவனுக்கும் அவள் பேசுவது புரிந்தது.
ஆனால் எதிர்முனையில் பேசியது அவனுக்கு தெரியாது அதனால் ஒருதலையாக மட்டும் புரிந்து கொண்டு அவள்மேல் இன்னும் இன்னும் கோவத்தை வளர்த்தான்.
“இன்னும் எவ்ளோ நாளைக்குதான் இப்படியே இருக்க போற பேபிமா. அண்ணா எவ்ளோ ஃபீல் பன்றாருனு தெரியுமா?” என்று அவன் கேட்க.
“திரும்ப திரும்ப இதையே பேசாதே வேற ஏதாவது பேசு?” என்று அவள் கூற
“நீயும் இதையே சொல்லு வேற பேசாதே அப்படி என்ன லவ்வோ?” என்று அவன் கோவப்பட
“பேபி. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீ நான் இப்படி நடிக்க என்ன ரீசன்னு மத்தவங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா உனக்கு தெரியும்ல? நீயும் அவங்கள மாதிரியே என்னை நடிக்க வேணாம்னு சொல்லாதே ஐ லவ் திஸ் ஜாப்.
நீயாவது என்னோட லவ் புரிஞ்சுக்கடா” என்று கூற
“எனக்கு புரிஞ்சு என்ன யூஸ் பேபி? உன்னோட அந்த லவ்வர்பாய் ஆராஷிக்கு புரியனும் அவனையே நீ சுத்திட்டு இருக்குறது அவனை பாதுகாக்கனு அவனுக்கு புரியனும் உன்னோட லவ் அவனுக்கு புரியனும் நீ அவனுக்கு ஓடி ஓடி பணிவிடை செய்யுறது எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்குது தெரியுமா? ஆனால் அவன் உன்ன பார்த்தாலே எரிஞ்சு விழுறானாம் திட்டிக்கிட்டே முறைச்சுக்கிட்டே இருக்கானாம் இதெல்லாம் உன்னை சுத்தி இருக்குற எங்களுக்கு எவ்வளவு கஷ்டம்னு உனக்கு புரியுதா?” என்று அவன் கேட்க.
“கஷ்டம் தான்டா ஆனால் என்ன செய்ய நான் அவரோட இருந்தே ஆகணுமே? கஷ்டமா இருந்தாலும் இதை நான் செஞ்சுத்தானே ஆகணும் அவரோட ஸ்டெப் மதர்க்காக” என்று கூறியதை கேட்டவன் முழுவதும் கேட்கும் முன் கோவத்தில் டிரான்ஸ்லேட்டரை
கழட்டிவிட்டு அங்கிருந்து கோவமாக சென்றுவிட்டான். ஆனால் அதை கவனிக்காத மேதா பேசியபடியே இருந்தாள்.
“இதை நீ அவர்கிட்ட சொல்லி அவரை உஷாரா இருக்க சொல்லலாம்லடா? அவரும் வெளியே போகும்போது வரும்போது பாதுகாப்பா இருப்பாருல?”என்று ஷர்மா கேட்க
“இல்லடா எங்கே போனாலும் சுதந்திரமே இல்லாம கூட்டுக்குள்ள அடைப்பட்ட மாதிரி அவரு இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல அவரு கொஞ்சமாச்சும் சந்தோஷமா இருக்கனும் அதுக்கு அவர் அவரோட பாதுகாப்பை பத்தி கவலைபடாம இருக்கனும் அதுக்கு நான் இங்க இருந்து தான் ஆகணும் நான் இருக்குறவரை அவருக்கு ஏதும் ஆகவிடமாட்டேன்” என்று மேதா கூற
“போதும் மேதா பேபி ஆல்ரெடி உன்னை இழக்குற அளவுக்கு நான் போய்ட்டேன் இதை அண்ணாகிட்ட மறைக்கவே நான் எவ்ளோ கஷ்டப்படுறேன்னு எனக்குதான் தெரியும் ஆனால் நீ அவரோட சந்தோஷம் அவரோட பாதுகாப்புனு உன்ன பத்தி யோசிக்கவே மாட்டேங்குற அவரோட இருக்குற வரை உன்னோட உயிருக்கும்தான் ஆபத்து அதை யோசிக்கவே மாட்டியா? உனக்கு ஏதாவது ஒன்னுனா எங்களால தாங்க முடியுமா? உனக்கு பாடிகார்ட் வேணாம்னு வேற சொல்லி வெச்சுட்ட ஒவ்வொரு முறையும் நீ வெளியே போய்ட்டு வீட்டுக்கு வர்றதுக்குள்ள நாங்க எவ ளோ பயந்து இருக்கோம் தெரியுமா?” என்று அவன் சற்று கோபமாய் பேச சிரித்தவள் மேலும் பேச தொடங்க கோபமாய் போனவன் அவளிடம் எதுக்கு இந்த நாடகம் எங்கம்மா கிட்ட எவ்ளோ காசு வாங்கினனு கேட்க திரும்ப வந்தவன் அவளது பேச்சில் அப்படியே நின்றான்.
“எனக்கு ஒன்னும் ஆகாதுடா? அதான் என்னை சுத்தி என்னை பத்தி யோசிக்க நீங்க எல்லாம் இருக்கீங்கலே அது போதாதா எனக்கு? ஆனா அவரை பத்தி யோசிக்க நான் மட்டும் தான் இருக்கேன் ஷர்மா அதை புரிஞ்சுக்கடா? எனக்கு எதுக்கு செக்யூரிட்டி நான் யாருனு யாருக்குமே தெரியாது தெரிஞ்ச அப்புறம் நானே செக்யூரிட்டி கேட்டு வாங்கிக்கிறேன் போதுமா? இப்போதைக்கு நான் சாதாரண பி.ஏ அவ்ளோதான் புரியுதா? சரி நான் போய் நாளைக்கு ஷூட்க்கு அவருக்கு தேவையானதை ரெடி பண்ணனும் வைக்கவா” என்று அவள் கூறி வைத்துவிட்டு பெருமூச்சு விட அவள் கடைசியாக நான் யாருனு தெரிஞ்ச அப்புறம் நானே செக்யூரிட்டி வாங்கிக்கிறேன்னு சொல்லும்போது தான் அவனது டிரான்ஸ்லேட்டரை ஆன் செய்தான் அதனால் அவள் முன்னர் பேசியது எதுவும் புரியாமல் நின்றான்.
ஃபோனை வைத்தவள் நேற்றைய தினம் நடந்த நிகழ்வுகளை மனதில் அசைப்போட்டபடி எழுந்து வேறு வழியாக அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.
‘அப்படினா யாரு இவ? இவளுக்கு எதுக்கு செக்யூரிட்டி? அப்போ என்னை கொல்லத்தான் இவள எனக்கு பி.ஏவா நடிக்க அனுப்பி இருக்காங்களா? இல்லை ஏமாத்தி என்னை மயக்கி என் சொத்தையெல்லாம் பிடுங்க அனுப்பினாங்களா?’ என்று அவளை பற்றிய யோசனையில் ஆழ்ந்தான்.
இதைபத்தி அவகிட்டயே கேட்டுடலாம் என்று யோசனையை விடுத்து அவளை தேட அவள் அங்கே இல்லை வேகமாக திரும்ப சென்று அவளிடம் உடனே கேட்டு அவளை துரத்தவேண்டும் என எண்ணியபடி நடந்தவன் சட்டென நின்றான்.
‘ஹாஆஆ நோ நோ நோ இப்போ போய் அவகிட்ட கேட்டா அவ ப்ளான்லாம் என்னானு நமக்கு தெரியாமலே போய்டும் இப்போதைக்கு நம்மகிட்ட அவளை பத்தி ப்ரூவ் பண்ண எந்த ஆதாரமும் இல்ல அதனால ஈஸியா எஸ்கேப் ஆகிடுவா. சோ அவளை கையும் களவுமா புடிக்கனும் அவளோட ப்ளான தெரிஞ்சு அவள அனுப்பின ஆளுக்கும் பதிலடி கொடுக்கனும் அதுக்கு நாம அவசரப்படாம இருக்கனும் எல்லார் முன்னாடியும் அவளை கையும் களவுமா புடிச்சா தான் அவளை துரத்த முடியும்’ என்று எண்ணியவன்
‘நம்பிக்கை துரோகி உனக்கு இருக்கு ஒருநாள்’ என்றபடி யோசித்து ரூமிற்குள் சென்றான்.