அத்தியாயம் – 76
அழுதபடியே அவளது ஜிம்மியை தூக்கி அவளை ஆராய்ந்தவள் அடுத்து ஆராஷியை நெருங்க அவளது உடை அவளது பாஷை அவளது நடவடிக்கை அனைத்தும் வேற்று கிரகவாசி போல தோன்ற தன்னிச்சையாக விலகினான் ஆராஷி.
ரியோட்டோவை பார்த்து “Who’s is she? What language you’re talking bro” (யார் இந்த பொண்ணு? என்ன பாஷை பேசுறீங்க நீங்க அண்ணா?) என்று அவன் கேட்க.
“ஐயம் சாரி ரொம்ப அடிப்பட்டுச்சா?” என்று அப்போதும் தமிழிலேயே அவள் பேச ஏனோ அவளது அழுத முகமும் அந்த கண்களும் அவளது தவிப்பும் தனக்கே வேண்டும் என்று யோசித்தவனுக்கு தன் போக்கு தப்பாக பட அவள்மீதே தன் கோவத்தை காட்டினான். (இவனுக்கு இதே வேலையா போச்சு)

“ஆர் யூ மேட் கெட் அவுட் இடியட்” (நீ என்ன பையித்தியமா? வெளியே போ)என்று அவன் கத்த அவனது கோவத்தை பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.
கண்ணீரும் நின்றுவிட்டது.
அவனது கோவத்தில் அவளை தன்புறம் இழுத்த ரியோட்டோ
“ஆரா…ஆரா…நீ டென்ஷன் ஆகாதே இந்த பொண்ணோட டாக்தான் அது. அதுக்கு அடிப்பட்டுடுச்சுனு அந்த பொண்ணு பயந்துட்டா அதை காப்பாத்த போய்தான் உனக்கு அடிப்பட்டுச்சுனு பதறிபோய் பதட்டத்துல பேசிட்டா நீ கோவப்படாதேடா நா… நான் அந்த பொண்ணை கூட்டிட்டு போய்டுறேன்” என்றபடி அவனை சமாதானம் படுத்தும் நோக்கில் பேசியவன் அவளிடம் திரும்பி
“நீ வா கிட்… அதான் உன் டாக் நல்லா இருக்கே வா போலாம்” என்று அவளை அழைத்துசெல்ல எத்தனிக்க அவனது கையை பார்த்தவள் கண்களில் நின்றிருந்த கண்ணீர் திரும்ப வர
“அவர்கிட்ட நான் சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க என்னோட டாக்னால தானே அவருக்கு அடிப்பட்டுச்சு” என்று அவள் கூற
“நான் சொல்லிக்கிறேன் நீ வா கிட்” என்றபடி அவளை அழைத்துச்செல்ல நாயை தூக்கியதால் தனது இரத்தம் நாயிலிருந்து அவளது அழகான வெள்ளை உடையில் பட்டு அழுக்காயும் அவளது உடல்வாகும் தெரிய அவளை அப்படியே அனுப்ப அவனுக்கு மனம் வரவில்லை.
“அண்ணா ஒருநிமிஷம்” என்றபடி தனது ஒரு ஷர்ட்டை எடுத்து அவள்மேல் போர்த்திவிட்டு
“எனக்கு சின்ன அடிதான் சொல்லிடுங்க அந்த பொண்ணுகிட்ட ஏதாவது குடிக்க கொடுத்து அனுப்புங்க ரொம்ப அழறா” என்றபடி போக சொல்ல ரியோட்டோவிற்கு ஷாக் இதுவரை எல்லாரையும் தூர நிறுத்தியவனா இவளுக்காக யோசிக்கிறான் என்று ஆவென பார்த்தவன் சரியென அவளை அழைத்து சென்று அங்கிருந்த தோட்டத்தில் அமரவைத்தவன் அவளுக்கு ஜுஸ் கொண்டு வரும்படி கூறியவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“நீங்க யாரு? உங்க பேரு என்ன? என்ன படிக்கறீங்க?” என்று சிறு பிள்ளையிடம் கேட்பதுபோல கேட்க அவள் எப்படி உண்மையை சொல்வது என தயக்கமாய் நாயை இறுக்கியபடி அமர்ந்து இருந்தாள். கண்ணீரும் நின்றிருந்தது.
அவள் மிகவும் பயந்து போய் இருப்பதாக எண்ணிய ரியோட்டோ ஜுஸ் வந்ததும் அவளுக்கு குடிக்க கொடுத்தான்.
அதை வாங்கி பருகியவள்
“தேங்க்ஸ் எல்லாத்துக்கும்” என்று அவள் கூற
“எத்தனை முறை தேங்க்ஸ் சொல்லப்போற விடு பேபி.
என் பேர் ரியோட்டோ உன் பேர் என்ன? நாம ப்ரண்ட்ஸ்ஸா இருக்கலாமா?” என்று அவளிடம் நட்புகரம் நீட்ட அவனது உடைந்த தமிழும் அவனது சிநேகிதன் போன்ற முகமும் அதில் உறைந்திருக்கும் புன்னகையும் அவளுக்கு நல்லவிதமாக தோன்ற என்னதான் தந்தையின் பிஸினஸ் கவனிக்கும் அளவுக்கு பக்குவம் இருந்தாலும் அவளும் சிறுபெண் என்பதால் உண்மையான பெயரை மறைத்து
“என் பேர் மீரா நான் இங்கே ரோபோட்டிக்ஸ் கோர்ஸ் சேர்ந்து இருக்கேன் ஜாப்பனீஸில் கிளாஸும். அதோ அந்த அப்பார்ட்மெண்ட்ல தான் இருக்கேன் இவ ஜிம்மி என்னோட பெஸ்ட் ப்ரண்ட்” என்று ஓயாமல் ஒப்பித்தவள் சட்டென வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டு
“எங்க பக்கத்து ஃபோர்ஷன்ல ஒரு மென்டலி சேலன்ஜ்ட் கிட் இருக்கான் அவன் ஜிம்மியை கொஞ்ச வர அவ பயந்து ஓடினதாலதான் வழுக்கி விழுந்துட்டா.
சாரி” என்று கூற அவளது பொம்மை போன்ற பேச்சு அவனுக்கு குழந்தையையே நியாபகம் படுத்த உருகி போய்விட்டான்.
“ஓஓஓ பேபி அது உன் மிஸ்டேக் இல்லையே கோஇன்சிடெண்ட் தானே விடு அதுக்குலாம் சாரி சொல்லுவியா?” என்று கேட்க.
“இல்ல எனக்கு மனசே ஆறல. என் ஜிம்மியை காப்பாத்த போய் அவருக்கு அடிப்பட்டுச்சு பாவம் வலிக்கும்ல?”என்று அவளே பதிலையும் கேள்வியுமாய் பேச.
“ரொம்ப இல்ல சின்ன காயம்தான் சரியாகிடுவான்”
என்று கூற எப்படியாவது இவன்மூலம்தான் ஆராஷியை நெருங்க முடியும் என எண்ணியவள்
“எனக்கு ஜாப்பனீஸ் சொல்லி கொடுக்கறீங்களா?” என்று கேட்டாள்.
அவள் அப்படி கேட்கவும் அவளை பார்த்தவனுக்கு அவளது கள்ளமில்லா முகம் குழந்தையை போல இருக்க அவனுக்கு அவளை மிகவும் பிடித்துபோனது.
“என்னை பார்த்து கொஞ்ச டைம் கூட ஆகலே அதுக்குள்ள ஜாப்பனீஸ் கத்து தர சொல்றே?” என்று அவன் கேட்க அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அவளும் இதுபோல யாரிடமும் கேட்டது இல்லையே? ஏனோ ஆராஷியை நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனிடம் உடனே கேட்டுவிட்டாள்.
“ச…சாரி நா நான் நீ நீங்க அது உங்கள பார்த்ததும் ஏதோ ஒரு குளோஸ் ஃபீல் இருந்துச்சு அதான் கேட்டுட்டேன் சாரி” என்று அவள் கூற
“ஹேய் கிட் ஐயம் ஜஸ்ட் கிட்டிங். எனக்கும் உன்னை பார்த்தா ஏதோ என் கிட் மாதிரியே ஃபீல் ஆகுது. ஓகே இனிமேல் நாம ப்ரண்ட்ஸ்.
நான் மார்னிங் அண்ட் ஈவ்னிங் இந்த பார்க்ல ஜாக்கிங் போவேன் நீயும் வா அப்போ உனக்கு நான் ஜாப்பனீஸ் சொல்லி தர்றேன் எனக்கு நீ தமிழ் சொல்லி கொடுக்கனும் ஓகே” என்று அவன் டீல் பேச சந்தோஷமாய் தலையை ஆட்டினாள்.
“ம்ம் இப்படி ஹாப்பியா இரு பார்க்க எவ்ளோ கியூட்டா இருக்கு. அதை விட்டுட்டு அழுது அழுது மூஞ்சிய பார்க்கவே நல்லா இல்ல.
ஆமா கேட்க நினைச்சேன் இது என்ன காஸ்ட்யூம்?” என்று அவன் கேட்க.
தனது குடும்பத்திடம் மட்டுமே வாயாடும் மேதா அவனிடமும் வாயாடினாள்.
“இது எங்க ஓணம் பெஸ்டிவல் டிரடிஷனல் டிரஸ் இன்னைக்கு ஓணம் அதான் இந்த டிரஸ் போட்டு சாமி கும்பிடும்போது தான் என் ஜிம்மி வெளியே இருந்ததால விழுந்துட்டா” என்று மீண்டும் சோக மூடுக்கு போக அவளை அதிலிருந்து வெளியே வர வைக்க
“ஓஓ…உங்க பெஸ்டிவல்க்கு என்னலாம் செய்வீங்க? நான் உன் ப்ரண்ட் தானே என்னை இன்வைட் பண்ண மாட்டியா?” என்று அவன் கேட்க.
“அச்சோ சாரி மறந்துட்டேன் வாங்க போலாம் உங்களுக்கு நான் செஞ்ச எங்க டிரடிஷனல் ஃபுட் கொடுக்கிறேன்” என்று கூறியபடி எழுந்து அவனது கையை இழுத்தாள்.
“இரு இரு நான் போய் மாஸ்க் போட்டுட்டு வர்றேன்” என்றபடி சிறு குழந்தையின் இழுப்பில் செல்வது போல அவளது இழுப்பில் அவளோட எழுந்து சந்தோஷமாய் சென்றான். இதை மெடிக்கல் கேம்ப்பில் இருந்து வெளியே வந்த ஆராஷி பார்க்க அவனுக்கும் ஏனோ அவர்களோடு கலந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.
ஆனால் அவன்தான் முகமூடி போட்டு தன் மனதை மறைத்துள்ளானே.
அவளை வேறு எங்கோ பார்த்து பழகிய முகம் போல தோன்றுகிறது ஆனால் முழுதாக முகத்தையும் காட்டாமல் அவளது கண்ணை காட்டியே அவனை கட்டி இழுக்கிறாளே? அவளை பற்றி யோசிக்க கூடாது என்று தலையை குலுக்கி கொண்டு அவனது அறையை நோக்கி சென்றான்.
அவளுடன் சென்ற ரியோட்டோவிற்கோ அவளது வீட்டை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. விதவிதமான ஆராஷியின் புகைப்படம் மட்டுமே அங்கு இருந்தது.
அதை பார்த்தவன் அவளை கேள்வியாய் பார்க்க
“அது அதுவந்து நான் அவரோட பிக் ஃபேன் ஆனா அவர்கிட்ட பேசுற அளவுக்கு தைரியம் இல்ல அதான் இங்க இருந்து பார்க்கும் போது அவரை ஃபோட்டோ எடுப்பேன்” என்று கூற
“டெபியூட் பன்றதுக்கு முன்னமே அவனுக்கு இப்படி ஒரு ஃபேனா? ம்ம் சூப்பர்” என்று பாராட்டியவன் அந்த புகைப்படங்களை பார்த்தவனுக்கு அவளது ஃபேன் பக்கம் மட்டுமல்ல இதில் வேறு ஏதோ இருப்பதாக பட்டது அவனை அவ்வளவு ரசனையோடு எடுத்து இருந்தாள்.
வீட்டிற்குள் சென்று மாஸ்க்கை கழட்டியவள் தனது ஜிம்மியை அங்கிருந்த பேபி கேஜில் விட்டவள்
அவனுக்கு முதலில் அருந்த நீர் கொண்டு வந்து கொடுத்தாள்
அவளது முகம் அழகாக இருந்தது
“கிட் நீ ரொம்ப கியூட்டா இருக்க” என்றவன் நீர் எதற்கு என அவன் கேட்டதற்கு அவர்களது கல்ச்சர் என்று கூற அதே கலாச்சார வகைகளை ஒருவளை நியாபகப்படுத்த தன் வருத்தத்தை காட்டாமல் அமைதியாக அவள் செய்வதை உள்வாங்கினான்.
உடைமாற்றி வந்தவள் அவனுக்கு அவர்களது டிரடிஷனல் உணவு வகைகளை கொண்டு வந்து கொடுக்க அவன் அதை விநோதமாய் பார்த்தான் அதை பற்றி அவள் விளக்கம் கூற அவனுக்கு அது பிடித்து இருந்தது.
ஆனால் அவளோ கவலையாக
“இது இது நீங்க சாப்பிடலாமா? தெரியலையே? உங்க டயட்டிஷியன் திட்டுவாங்களா?” என்று கேட்க
அவளது கேள்வியில் சிறிது யோசித்தவன் “நீ ஒன்னு செய் கிட் நீ எனக்கு இதெல்லாம் பேக் பண்ணி கொடு நான் டயட்டிஷியன் கிட்ட கேட்டுட்டு சாப்பிடுறேன்” என்று கூற அவனுக்கும் ஆராஷிக்கும் சேர்த்தே பேக் செய்தவள்
அவன் அவளை பார்க்க
“இல்ல என் ஜிம்மியை காப்பாத்த போய் தானே அவருக்கு அடிப்பட்டுச்சு அதான் ஒரு சின்ன காம்ப்ளிமெண்ட் ஆனா அவரு சாப்பிடுவாரா தெரியலையே” என்று அவள் கேட்க
“கொடு அவன் சாப்பிடலைனா என்ன நானே மொத்தம் சாப்பிடுறேன் ஒருநாள் டயட் ஸ்கிப் பண்ணா ஒன்னும் ஆகாது” என்றபடி அவளிடமிருந்து பார்சலை வாங்கி கொண்டு விடை பெற்றான்
வீட்டுக்கு வந்தவன் அந்த உணவை எடுத்து ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பிக்க அவனை வித்தியாசமான பார்வை பார்த்தவனை பார்த்த ரியோட்டோ மர்மமான புன்னகையோடு ஜாப்பனீஸில்
“இன்னைக்கு அவங்க பெஸ்டிவலாம் இது அவங்க டிரிடிஷனல் ஃபுட்டாம் அதான் அவளோட டாகை காப்பாத்தினதுக்கு எனக்கு கொடுத்தா உனக்கும் சேர்த்து கொடுத்தா ஆனா நான்தான் உனக்கு அதுலாம் புடிக்காது நீ டையட்ல இருக்க இதெல்லாம் சாப்பிட மாட்டனு சொல்லிட்டு வந்துட்டேன்…ப்பா என்ன டேஸ்ட் சின்ன பொண்ணா இருந்தாலும் சூப்பரா சமையல் செய்யுறா? யாரோ அந்த லக்கி பர்சன்?” என்றபடி உணவை சுவைக்க அவனிடமிருந்து அதை பிடுங்கியவன் அருகில் வைத்துவிட்டு
“நான் டையட்னா நீங்களும் டையட்தான் அண்ணாத்த அதனால நீங்களும் சாப்பிட கூடாது. இது என்ன ஃபுட் எவ்ளோ கலோரீஸ்னு தெரியாம இஷ்டத்துக்கு சாப்பிட்டு ஒரே நாள்ல எல்லா வெயிட்டும் ஏத்தி வெச்சுக்காதீங்க அப்புறம் டெபியூட் பண்ண இன்னும் நாள் ஆகும். அதும் இல்லாம டாகை காப்பாத்தினது நானு உங்களுக்கு உபசரிப்பா? போங்க ஒழுங்கா” என்று அவன் கோவமாய் பேச.
சாப்பாட்டை உண்ணவிடாமல் புடுங்கிய கோவத்தில் அவனை முறைத்த ரியோட்டோ
“நல்ல சாப்பாடு சாப்பிடுறதே தம்மாத்தூண்டு இதுல உனக்கு கூட கம்பெனிக்கு என்னையும் சிங்கிங்ல சேர்த்து விட்டுட்டாரு அப்பா அதனால நல்லா சாப்பிட்டு இருந்த என்னையும் சாப்பிட விடாம உயிர வாங்குற இப்போதான் ஒரு ஜீவன் நன்றிகடன்னு எனக்கு கொஞ்சம் நல்ல சோறு போட்டா அது உனக்கு பொறுக்கலையாடா? என் பாவத்தை கொட்டிக்காதேடா அப்புறம் பேயா அலைவ சாப்பாட்டுக்கு கொடுடா அதை ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகிடமாட்டேன் அதும் இன்டியன் ஃபுட் நான் டேஸ்ட் பண்ணியே ஆகனும்”
Interesting😍