அத்தியாயம் – 81
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தேஜுவிற்கு குழந்தையை காரணம் காட்டி அவளை கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் ஈடுபடுத்த துவங்கினாள்.
அவள் மீண்டும் ஜப்பானுக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் அவளது வேலையில் அதற்கு முன் தன் தமக்கையை தைரியமாய் எல்லாவற்றையும் ஃபேஸ் செய்யும்படி மாற்றினாள்.
அது அவளுக்கு அவளது தந்தை இறந்த பின்பே உபயோகப்படும் என்று அறியாமல் போனாள்.
அதனாலேயே அவளை மாற்ற முயற்சித்தவள் அவள் ஓரளவு தேறிவிட்டதாகவும் ஆனால் இன்டியா செல்ல இப்போதைக்கு விரும்பவில்லை என்று அவளே கூற அவளையும் தன் செல்ல அக்கா மகளையும் விட்டு அவள் மீண்டும் ஜப்பான் வந்தாள்.
ஆனால் தன் பழைய இடத்திற்கும் செல்லாமல் அவளது ஜிம்மியையும் பார்க்காமல் அவளது ஆராஷியை மட்டும் தொலைவில் இருந்து பார்த்து செல்வாள்.
ஆனால் இன்று வரை அவன் தொடர்பான அனைத்து வேலைகளையும் அவள் மட்டுமே செய்து வந்தாள் இவளது காதலை பார்த்து ஒரு விதத்தில் கோவம் வந்தாலும் ஒரு பெண் ஆணை இவ்வளவு காதலிப்பதை பார்த்து அவனுக்கு பொறாமையாகவும் இருந்தது அவளது நண்பன் ஷர்மாவிற்கு.
அவளது பணத்துக்காக இல்லாமல் அவளது காதலுக்காக அவளை ஆராஷி காதலிக்க வேண்டும் என்றே எண்ணினான்.
ஆனால் இவளை ஆராஷி ஏற்காமல் போனால் இவள் உடைந்து போவாளே என்ற பயத்திலேயே அவளை விட்டு பிரியாமல் நின்றான் துணையாய்.
எத்தனை முறை அவனும் அவளது தந்தையும் கூறிவிட்டனர்
அவன் வெறும் ஆக்டர்தானே அவர்கள் எல்லாம் மாறி விடுவர் மறந்துவிடு என்று.
ஆனால் அவள் சொல்லும் ஒரு வார்த்தை
“இட்ஸ் ஏ கேர்ள் திங்க் உங்களுக்கு புரியாது.
அவர் மாறமாட்டார்” என்பது தான்.
முதலில் கஷ்டமாக இருந்தாலும் ஆராஷியை தூரமாக இருந்து பார்த்து செல்வதையும் அவனது கான்செர்ட்க்கு முகத்தை மறைத்தபடி கூடவே ஷர்மாவையும் இழுத்து செல்வதையும் கண்டாள்.
ஆனால் அவளே எதிர்பாராதது அவன் ஜிம்மியையும் கூடவே கூட்டிக்கொண்டு சுற்றுவது.
அவனுக்கு அவளே ஏனோ கூடவே இருப்பது போல தோன்றுவதால் அவனுடனேயே வைத்திருந்தாள் அவளை.
ரியோட்டோவோ அவனை வெறுப்பு ஏற்றிக்கொண்டே சுற்றினான்.
“இவளை நான் கவனிச்சுக்கிறேன்னு எடுத்து வந்தா நீ இவள கூட்டிட்டு ஊர் சுத்துற? இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல?” என்று அவன் கேட்க
“தெரியல” என்றுவிட்டு சென்றுவிடுவான்.
“போடா போடா” என்றுவிட்டு சென்றுவிடுவான் ரியோட்டோ.
அடிக்கடி அவனை வந்து பார்த்து செல்வார் ஆராஷியின் தந்தை.
ஆனாலும் அவருடன் பேசவிழைய மாட்டான் ஆராஷி.
எது எப்படி என்றாலும் ஆராஷியை சுற்றி ஒரு மாயவலை இருப்பது போலவே உணர்ந்தான்.
ஆம் மியோ அவனை கொல்ல விதவிதமான ப்ளான்கள் செய்தாலும் அதையெல்லாம் சரத்ஶ்ரீ முறியடித்துக்கொண்டே இருந்தார்.
ஆனால் அவர் செய்த ஒரே தவறு இதையெல்லாம் மேதாவிடம் சொல்லாமல் மறைத்தது தான்.
அதன் விளைவு அவரது உயிரையே பறித்துவிட்டது.
ஆம் அவர் இருக்கும்வரை மியோவால் ஆராஷியை எதுவும் செய்ய முடியாது அவன் வேறு வளர்ந்து கொண்டே போகிறான் அவனை அடமானமாக காட்டி நம்பவைத்து அவர் பணம் வாங்கிய ஆட்கள் வேறு அவரை பணம் கேட்டு வற்புறுத்த தீவிரமாக யோசித்த மியோ திட்டமிட்டு ஆட்களை ஏவி அவரது காரை அடித்து தூக்கிவிட்டார்.
நார்மலான கார் வெடித்தது போல செட் செய்துவிட்டு அவர் அமைதியாக இருந்து கொண்டார்.
இங்கே செய்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று அவர் தன் மகளை பார்க்க லண்டன் செல்வதை மோப்பம் பிடித்தவர் அங்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் போல செய்துவிட்டார்.
தீவிரவாத தாக்குதல் போல் கொலை நடந்ததால் அவரது உடல் நாடுவிட்டு எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று அந்நாட்டு அரசாங்கம் கூறிவிட மேதா மிகவும் உடைந்துவிட்டாள்.
தேஜூவும் ரொம்ப உடைந்து போனாள்.
நிதின் மட்டும் உடனடியாக அங்கு வந்தான்.
அதன்பின் நிதினும் மேதாவும் போராடி அவளது தந்தையின் உடலை இன்டியா கொண்டு செல்ல அனுமதி வாங்கினர்.
இன்டியா வரமுடியாததால் ஆராஷியும் ரியோட்டோவும் தங்களது வருத்தத்தை செய்தியாக அனுப்பினர்.
இன்டியாவில் ஹாட் நியூஸ் சரத்ஶ்ரீ அவரின் இறப்பு தான்.
நிதின்தான் இருவரையும் சரிசெய்து இன்டியா அழைத்துச்செல்ல யோசிக்க அப்போதும் தேஜுவின் எதிர்காலம் கேள்வியாகிவிடும் என்று யோசித்த மேதா
“இறந்தவர் வரப்போவதில்லை இப்போது நீ அங்கு வந்தால் எல்லோருக்கும் நீ பேசுப்பொருளாகிடுவகா அதனால நான் பார்த்துக்கிறேன் நீ வரவேணாம்” என்று கூற அவளை ஓங்கி அறைந்தாள் தேஜு.
“என்னடி சொல்ற நீ? அப்பாவ விட எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல. நானும் இன்டியா வருவேன்” என்று கூற
“அவ சொல்றது சரிதான் தேஜு அப்பா இருந்தாலும் இதைதான் செய்வார். ஒருமுறை மீடியா கண்ணுல மாட்டிட்டா தினம் தினம் உன்னை மத்தவங்க பேசுறேன்னு சாகடிப்பாங்க.
வேணா நாங்க பார்த்துக்கிறோம்மா.
குழந்தையை வேற தூக்கிட்டு வந்து அவ ஃப்யூட்ச்சரும் ஸ்பாயில் ஆகிடும். எல்லாம் எக்ஸ்போஸ் பண்ணிடுவாங்க. அப்பா இதையா ஆசைப்பட்டார் யோசி முறையா உங்கள அறிமுகம் செய்யுறேன் புரிஞ்சுக்கோடா” என்று கூற குழந்தையை காரணம் சொல்ல அமைதியான தேஜு அழுதபடி தன் தந்தையின் பூதவுடலுக்கு விடைகொடுத்தாள்.
மேதாவையும் அவன் மீடியாவின் கழுகு கண்களுக்கு விருந்தாக்கவில்லை.
மேதாவையும் மீடியாக்கள் கண்களில் இருந்து மறைத்தவன் அவரது உயிலின்படி அவனே அவரது இறுதி சடங்குகளை செய்தான்.
தூரமாய் நின்று மாஸ்க் தொப்பி என அணிந்து நின்று கண்ணீர் மல்க தந்தையை பார்த்தவளை அரவணைத்து நின்றது ஷர்மாதான்.
அவன் அவளுடன் இருந்ததால் தான் நிதினும் தந்தையின் இறுதி சடங்குகளை அவர்கள் இராஜ வம்சப்படி செய்தான்.
இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் பல சமூக சேவைகளும் செய்துள்ளார் என்பதால் அவருக்கு அரசாங்கமும் மரியாதை செலுத்தியது.
அவ்வளவு தான் தந்தை தன்னைவிட்டு சென்றுவிட்டார் இனி தனக்கு யாரும் இல்லை என்ற எண்ணமே மேதாவை அழவும் விடாமல் மிகவும் அமைதியானவளாக மாற்றிவிட்டது. எல்லோரிடமும் விலகியே இருந்தாள் தனது வேலைகளை எல்லாம் நிதினிடமும் லண்டனின் வேலைகளை தேஜுவிடமும் ஒப்படைத்தவள் அவளது மனமாற்றத்திற்காக தன் வேலையை காரணம் காட்டி ஒதுங்கி நின்று கொண்டாள் அவள் எடுத்துக்கொண்ட ஒரே வேலை ஆராஷியின் வேலை மட்டுமே. அப்போது வரை அமைதியாகி யாரிடமும் நெருங்காமல் இருந்தவள் அதன்பின் ஆராஷி இந்தியா வரும்போது தான் பழைய மாதிரி பேசினாள் பழகினாள்.
அதுதான் அவளுக்காக நிதினை அவ்வளவு செய்ய உந்தியது.
அது மட்டும் இல்லாமல் தந்தையும் மேதாவின் காதலை பற்றி மேலோட்டமாக சொல்லி இருந்தார். அதனாலேயே அவன் அவளது விஷயத்தில் அவளது முடிவுக்கே விட்டான்.
தந்தை இறந்ததும் நிதினுக்கு கூடுதல் பொறுப்பை வழங்கிய மேதா சாஹித்யன் நிலவினி அருந்ததிக்கும் கூடுதலான பொறுப்புகளை கொடுத்தாள்.
நிதினுக்கு பிஸினஸில் குழப்பம் வரும் சமயம் சரியான வழியை சொல்லி அவனை ஆச்சர்யப்பட வைத்தாள்.
அவளது திறமையை பார்த்த நிதினுக்கு அவளது ஆளுமையான பேச்சும் செயலும் சீக்கிரமே அவளை பொறுப்பை ஏற்று கொள்ள வைக்க வேண்டும் என்று தோன்ற வைத்தது.
வேலையில் கவனத்தை அதிகரித்தவள் தன் மனதை திசை திருப்ப தன்னை முற்றிலுமாக வேலையில் மூழ்கடித்துக்கொண்டாள்.
இதோ அவள் அவனுக்கு பி ஏ ஆகி வேலையை செய்து அவளது உணர்வுகளை மொத்தமாய் சாய்த்து சாகடித்து அவளை மேலும் வதைக்குள்ளாக்கி யாருக்கும் தெரியாமல் கண்காணாமல் ஓடும் அளவுக்கு செய்து விட்டானே.
இப்போதும் அவன்மேல் அவள் காட்டும் அக்கறை நிதினையும் ஷர்மாவையும் ஆச்சர்யமும் கோவமும் பட வைத்தது.
ஷர்மாவிற்கோ எல்லா உண்மையும் தெரிந்ததால் கோவம் வேறு ஒருபுறம் அவள்மேல் வருத்தமும் ஒருபுறம்.
ஷர்மா கூட அடிக்கடி கேட்பான் “எல்லாரை பத்தியும் நீ யோசித்து பார்த்து பார்த்து செய்யுறியே உன்னை யார் பார்த்துப்பா?” என்று கேட்க.
“எனக்கு அவர் இருக்கார் என்னை பார்த்துப்பார்” என்று கூறினாள்.
அதைகேட்டு கடுப்பானவன்
“கிழிப்பாரு. அவருக்கு நீ யாருனு தெரியாது எங்க இருக்கனு தெரியாது உன் லவ்வும் தெரியாது அப்புறம் எப்படி உன்ன பார்த்துப்பாராம்?” என்று கத்த
அவனை பார்த்து லேசாக புன்னகைத்தவள்
“அவருனா அவர் என் பக்கத்தில இருந்துதான் பார்த்துக்கனும்னு அர்த்தம் இல்லடா நீ அவரோட படங்களும் அவரோட சாங்ஸ்ஸும் கேட்டு இருக்கியா? அதுல வர்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அதுக்கு அவரோட ரியாக்ஷனும் எனக்காவே எழுதினா மாதிரி நடிச்சு இருப்பாரு.
அதுல எவ்ளோ மோட்டிவேஷன்ஸ் அண்ட் எமோஷன்ஸ் இருக்கும் தெரியுமா? அதை கேட்டாலோ பார்த்தாலோ போதும் எனக்கு தானாவே என் மனசுக்கு புது தெம்பு வரும் இதைவிட ஒருத்தர் என்னை எப்படி பார்த்துக்கனும்?” என்று கூற அதை கேட்டவனுத்கோ அதிர்ச்சி
“இப்படிலாம் ஒருத்தரை காதலிக்காதேடி அப்புறம் அவங்க இல்லனு ஆனா நீ ரொம்ப உடைஞ்சுடுவியோனு எனக்கு பயமா இருக்கு பேபி சொல்லப்போனா இதெல்லாம் ஒரு லவ்வானு எனக்கு தோணுதுடி” என்று அவன் கூற
“வேற எது லவ் ஷர்மா? மார்னிங் சேட்டிங், ஈவ்னிங் டேட்டிங், கிஸ், ஹக், செக்ஸ் இதெல்லாமா லவ்? உனக்கு லவ்வோட உண்மையான அர்த்தம் தெரியுமா? லவ்னா உணர்வு ஒருத்தர் மேல நமக்கு வர்ற உணர்வு.
அது சிங்கிளோ இல்ல டபுள் சைடோ அதுல உண்மை இருக்கும் ஒருத்தருக்காக இன்னொருத்தர மாத்திக்கிறது.
கண்கள் முதல்ல பேசும்.
அவங்க லவ்லயே அந்த கண்ணுல என்ன நினைக்குறாங்கனு தெரிஞ்சுடும்.
இதுக்கு ஒரு ஹக் கூட தேவை இல்ல உணர்வுகள் பேசும் அதுலதான் நம்ம காதல் எவ்ளோ ஆழமானதுனு நமக்கு உணர வைக்கும்.
தடவி கொடுத்துட்டே இருந்தா நாய்க்குட்டி கூட கோழையாகிடும் அதே விழுந்தா அதுவே எழுந்துக்கனும்னு நாம கண்டுக்காத மாதிரி ஒரு உணர்வை வெளிப்படுத்தினா போதும் தன்னம்பிக்கையோட அதுவே எழுந்து நடக்கும்.
அந்த தன்னம்பிக்கை உண்மையா லவ் பண்ணி பாரு அது கிட்ட இருந்தாலும் இல்லனாலும் உனக்கு நம்பிக்கையை வளர்த்துட்டே இருக்கும்.
எத்தனை வருஷம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த லவ் மாறாது.
சேர்ற காதல்லாம் உண்மையும் இல்ல பிரிஞ்சு போற காதல்லாம் பொய்யானதும் இல்ல.
சூழ்நிலை கைதியா இருக்குறவங்களால தான் சேரமுடியாம போகும் ஒன்சைடா இருந்தாலும் சொல்லாமலே பிரிஞ்சு போகும்.
இது பொய்னு ஆகாது தன்னோட காதல் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்னு யோசிக்கிற உணர்வு அதுதான் நிதர்சனமான உண்மை அது புரிஞ்சா என் காதலும் உனக்கு புரியும்.
எங்க அப்பாக்கு என் காதலை புரிஞ்சது அதனால தான் அவர் என் காதலுக்கு ஆதரவு கொடுத்தார்.
எனக்கு வசதி இருந்தது அவரை முன்னேற நான் ஸ்பான்சர் செஞ்சேன். எனக்கு வசதி இல்லாம அவரை லவ் செஞ்சு இருந்தாலும் அவருக்கான வாய்ப்பை தேடி அலைஞ்சு கொடுத்து இருப்பேன் ஒருவேளை அவர் வேற யாரையாவது விரும்பினா கூட அவங்கள சேர்த்து வெச்சு இருப்பேன். அவரோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்து இருப்பேன்.
லாங் டிஸ்டன்ஸ் லவ் என்னைக்குமே லவ் பன்றதை ஸ்டாப் பன்னாதுடா” என்று அவள் நீளமாக பேசி முடித்ததை நினைத்தவன். இப்போது சோகமே வடிவாக அமர்ந்து இருக்கும்
அவளையே ஆழமாக பார்த்தவன்.
“அப்போ என்னமோ காவிய காதல் போல பேசினியே இப்போ உன்னோட உணர்வு? அதுக்கு என்ன மதிப்பு? உன்னோட உணர்வை அவர் ஏன் புரிஞ்சுக்கல? மொத்தமா உன் உணர்வை மதிக்காம தானே உன்னை இப்படி காயப்படுத்தி அனுப்பினாரு இப்படி ஒரு நாடோடி வாழ்க்கை வாழத்தான் அவரை அப்படி லவ் பண்ணியா? அவருக்காக இழக்ககூடாததை இழந்துட்டு வாழ்க்கையே தொலைச்சுட்டு நிக்கிறியா?” என்று அவன் கேட்க அமைதியாய் இருந்தவள் கண்களில் கண்ணீர் லேசாக எட்டிப்பார்க்க அதை வெளியே வராமல் தடுத்தவள் அவனை ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்து
“முதல்ல எங்க விஷயம்ல அவருக்கு நான் யாருனு தெரியாது அண்ட் அவரோட லேங்குவேஜ் ப்ராப்ளம்னால அவர் நான் உன்கிட்ட பேசினதை தப்பா புரிஞ்சு நான் அவங்க சித்தி நடிக்க அனுப்பின ஆளுனு நினைச்சுட்டாரு. ஆனா உண்மை தெரிஞ்சா அவர் ரொம்ப வருத்தப்படுவார் குற்ற உணர்ச்சில தவிப்பார் அதை அவருக்கு கொடுக்க வேணாம்னு தான் நான் தூரம் வந்துட்டேன்.
நான் எனக்கு நடந்தது அவரு ஒன்னும் தெரிஞ்சு நடக்கலையே இது யாருக்குமே தெரியாதே ஏன் உனக்கும் எனக்கும் டாக்டர் சொன்னதால தானே தெரியும் எனக்கு என்ன நீ இருக்க அண்ணா மத்த ப்ரண்ட்ஸ் இருக்காங்க. அக்கா இருக்கா அக்காவோட பேபி இருக்கா நாளைக்கே உனக்கு கல்யாணம் ஆனா உன் பேபி வரும் அப்படியே என் லைஃப்ப ஓட்டிடுவேன்” என்று கூறி தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ள
“உன்னைலாம் திருத்தவே முடியாது பேபி” என்று கூட கூறி இருந்தான்.
“சரத்ஶ்ரீ சர் இறந்ததும் எங்களாலல இங்கே வர முடியாம போய்டுச்சு அதனாலேயே நான் அவரோட ஒத்துக்கிட்ட இந்த ஆட் ஷூட்ட செய்யனும்னு இங்கே வந்தேன். ஆனா அவர் அப்பாயிண்ட் பண்ணதா அஷூ வந்து நிற்கவும் எனக்கு பொண்ணே வேணாம்னு தோணினததால தான் நான் அவளை அவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன். ஆனா அவதான் என் பொண்ணுனு சரத்ஶ்ரீ சர் என்கிட்ட ஒருமுறையாவது அவங்க ஃபோட்டோ காட்டி இருந்தா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கமாட்டேன்.
ஆனால் லவ்ல கஷ்டப்பட்டு கிடைக்கிற லவ்தான் நிலைக்கும் கஷ்டப்படாம வர்ற லவ் நிலைக்காதுனு சொல்வாங்க அதான் இப்படி கஷ்டப்படுறோம் போல” என்று கூற அவனை பார்த்த சாஹித்யன்
“அப்போ” என்று பேச ஆரம்பிக்க அவனை தடுத்த அருந்ததி
“அண்ணாத்த ஐ வில் ப்ரொசீட்” என்றபடி ஆராஷியை பார்த்தவள்
“அப்போ மேதா பணக்காரினு தானே அவளை தேடி வந்து இருக்கீங்க திரும்பவும் இதே அவ ஒரு ஏழைவீட்டு பொண்ணா இருந்திருந்தா தேடி இருக்கமாட்டீங்கல்ல?” என்று கேட்க
“அரூ என்ன பேசுற நீ” என்றான் கோவமாய் நிதின்.
“அவ கேட்டதுல என்ன அண்ணா தப்பு இருக்கு? நமக்கும் இந்த சந்தேகம் இருக்கு இல்லையா?”என்றாள் தேஜூ.
எல்லோரையும் பார்த்தவன்
“எனக்கு இப்போ ஒரு ஆறு மாசமாதான் அவ பணக்கார பெண்ணுனு தெரியும் ஆனா அவள நான் தேட ஆரம்பித்து ரெண்டு மூனு வருஷம் ஆகுது. அப்போ அவ பணக்காரியா? ஏழையா? என்ன படிச்சு இருக்கா? எந்த ஊர் எதுவுமே தெரியாது மலையாள பொண்ணாதான் நான் தேடினேனே தவிர தமிழ் பொண்ணா அவள தேடாம விட்டுட்டேன்.
அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு” என்று அவன் கூற
அவனது தோளை ஆறுதலாய் தட்டினான் ரியோட்டோ அவனை பார்த்து லேசாக புன்னகைத்த ஆராஷி.
“அவளை அந்த பாடு படுத்திட்டு போன அப்புறம்தான் எனக்கு அவ மேதானே தெரியும். அப்போகூட எப்படியும் அவ என்னை ஏத்துக்க மாட்டா அதனால எப்படியாவது அவளை கண்டுபிடிச்சு அவகிட்ட மன்னிப்பு கேட்கனும்னு மட்டும் தான் நினைச்சேன். ஆனா அன்னைக்கு பார்ட்டில எடுத்த ஃபோட்டோ மேனேஜர் காட்டவும் நான் அதை பார்க்கும் போது தான் அண்ணா வந்தார்.
அவர் அப்போ எங்கேயே போய் யாரையோ அடிக்கடி தேடிட்டு வர்றார்னு விவரம் தெரியவும் அவர்கிட்ட விசாரிச்சேன் ஆனா அவர் லவ் பண்ணது தமிழ்பொண்ணுனு சொன்னார்.
அவங்க பேர் கேட்டப்போதான் அண்ணி பேர் சொன்னார்.
அப்போதான் நான் அந்த ஃபோட்டோவை காட்டி கேட்டேன்” என்றபடி அன்றைய நாளை நினைவு கூர்ந்தான்.
“என்ன ஆரா இன்னும் எந்த ப்ரோக்ராமையும் தள்ளி வைக்க முடியாது ஆரா. மேக்ஸிமம் நீ ஆறு மாசத்துல எல்லா வேலையும் முடிச்சு கொடுக்கிற மாதிரி இருக்குடா. அவளை எப்படியாவது தேடி கண்டு பிடிக்கலாம் ஆரா” என்று தரையில் படுத்து தன் நாயை அணைத்தபடி இருந்த ஆராஷியிடம் பேசிக்கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்தான் ரியோட்டோ.
🧡🧡🧡🧡🥰
Mikka nandri sago❤️💜
Interesting😍
Mikka nandri sago💜❤️