அத்தியாயம் – 90
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
எழுந்து நின்றபடியே இருந்தவன் அவளை பார்த்தபடி இருந்தான் அவனது முகத்தில் ஏதோ ஒருவிதமான வெட்கம் கலந்த வலியை மறைக்கும் சிரிப்பு இருந்தது.
எங்கே எங்கே என்று தேடியவள் அவனது கண்முன் திரையில் இருக்க அவளை நேரில் எப்போது காண்போம் என்பது தான் அவனது ஆசையாக இருந்தது.
ஆனால் அதை வெளிப்படுத்தினால் எங்கு இருக்கும் இடம்விட்டு வேறு எங்காவது சென்று விடுவாளோ என்ற எண்ணமே அவனது உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடியாது கட்டிப்போட்டது.
ஆனால் அவனை கவர்ந்த அவளது மச்சம் அவள் உடுத்தி இருந்த புடவை அது அவனுக்கு பழைய வலிகளை நினைவு படுத்தினாலும்
அவனது வாழ்வில் அவன் முதல்முறையாக இதழ் முத்தம் கொடுத்தது அவளுக்கு மட்டுமே அதும் அந்த புடவையிலேயே.
நொடியில் அவனது முகத்தில் வந்து போன அந்த வலிகலந்த புன்னகையின் அர்த்தம் புரியாது நின்றவளுக்கு புடவையை சரி செய்யும்போது தான் அர்த்தம் விளங்கியது.
உடனே அவள் நிமிர்ந்து ஆராஷியை பார்த்தவள்
“ப்ளீஸ் டேக் யுவர் சீட் மிஸ்டர் ஆராஷி” என்று அவள் கூற தலையை ஆட்டியவன் அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும்
“சாரி கைய்ஸ் ஒரு பர்சனல் டாக் நான் இன்னைக்கு மீட்டிங்குக்கு வர முக்கியமான முதல் ரீசன் நம்ம நியூ ப்ராஜெக்ட் பிஸினஸ் பார்ட்னர் அந்த ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் செஞ்சு ஆகணும் சொன்னதுக்காகவும் அண்ட் இன்னொரு ரீசன் நாளைய ப்ரோகிராம் பத்தி அப்படியே டிஸ்கஸ் செய்யத்தான்” என்று சொன்னவள் ஆராஷியை பார்க்காமல் ஜாப்பனீஸில் பேச அவனுக்கு நாளை ஏதோ ஒன்று என்று புரிந்தது மற்றவர்கள் டிரான்ஸ்லேட்டரை அணிந்து இருந்ததால் அவளது பேச்சு அவர்களுக்கும் புரிய அனைவரும் தலையை ஆட்டினர்.
“நீ அப்பா உனக்கு கடைசியா வாங்கி கொடுத்த புடவையை கட்டி இருக்கும்போதே புரிஞ்சது ஆல் அரேஞ்ஜ்மெண்ட்ஸ் பக்கா” என்று தேஜுவும் ஜாப்பனீஸில் பேச
“ம்ம்… நாளைக்கு அப்பாவோட நினைவுநாள் ஐ மிஸ் ஹிம் சோ மச் அவரோட நினைவா என்கிட்ட வந்த கடைசி கிப்ட் இந்த சேரி இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அதான் மீட்டிங் முடிஞ்சதும் கோயிலுக்கு போக இதை கட்டினேன் வேற ஏதும் இல்ல” என்று கூற அப்போது தான் அவனுக்கு அவள் புடவை எந்த காரணத்துக்காக அணிந்துள்ளாள் என்பதும் தன் ஒற்றை பார்வையில் அவள் தன் மனவருத்தம் புரிந்து அதை போக்கும் வகையில் அதற்கான விளக்கமும் கொடுத்ததும் புரிய தலையை கீழே குனிந்து லேசாக சிரித்துக்கொண்டான்.
‘அப்போ என்மேல கோபம் இல்ல ஆனா அவளுக்கு ஸ்பெஷல் அந்த புடவை’ என்றாளே என்று யோசித்தவனை கலைத்தது அவளது அழைப்பு.
“உங்கள காத்திருக்க வெச்சதுக்கு மன்னிச்சிடுங்க மிஸ்டர் ஆராஷி நீங்க பேசணும்னு சொன்ன விஷயங்களை பேசலாம்” என்று அவள் கூறியபடி அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
அவளையே பார்த்தபடி அமர்ந்தவன் அவளிடம் முதலில் தங்களது பாட்னர்ஷிப்பில் உருவான மேத்ராஷ்ஷின் பெயரை சொல்லவும் அவளோ அதிர்ந்து அவனை பார்த்தாள்
அவள் பார்ப்பதற்காகவே தவம் இருந்தவன் அவள் பார்த்ததும் அவளை பார்த்து ஒற்றை கண் அடித்து புருவத்தை உயர்த்தி எப்படி என்பது போலவே பார்த்தான் சிரித்தபடி .
அதில் திகைத்தவள் உடனே தலையை குனிந்து கொண்டாள்.
‘இதுக்குத்தான் பெயருக்கு தன்னிடம் இன்னும் செலெக்ட் செய்யவில்லை என்று எந்த பெயராக இருந்தாலும் சரி என அப்ரூவல் வாங்கியதா?’ என தனது அண்ணன் நிதினை பார்க்க அவனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஆராஷியை பார்த்தபடி அமர்ந்துவிட்டான்.
‘எந்த காரணத்தை கொண்டும் கண்ண அவ பக்கம் திருப்பிடகூடாதுடா நிதினா கண்ணுலேயே எரிச்சுடுவா’ என்று மனதுக்குள் பேசியவனை பார்த்து சிரித்த அருந்ததி
“அண்ணாத்த இங்க வரைக்கும் கேட்குது” என்று அவனை வார அதிர்ந்த நிதின்
“அவ்ளோ சத்தமாவா பேசிட்டேன்?”
என்று கேட்க
“ஆமா ஆமா நீங்கலாம் இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தோட ஆண் வாரிசுனு வெளியே சொல்லிடாதீங்க சிரிச்சுடுவாங்க” என்றாள் அருந்ததி
அதை கேட்டு அனைவரும் சிரிக்க அவ்வளவு நேரம் கோபமாய் பார்த்தவளுக்கு கூட சிரிப்பு வந்துவிட்டது.
“போதும் போதும் மீட்டிங்குல பேசுங்க என்னைய வெச்சு பேசாதீங்க ஹேய் வாத்து நீ மீட்டிங் முடிச்சுட்டு வா உனக்கு இருக்கு” என்று அருந்ததியை மிரட்டியபடி அவன் பார்வையை வைத்து இருக்க
“ம்க்கும் இவரு திட்டிட்டாலும்” என்று நொடித்துக்கொண்டாள் தேஜு.
அவளது பேச்சை கேட்டு ஹைஃபை அடித்தாள் அருந்ததி அவளது பேச்சை கேட்டு மேலும் அதிர்ந்தவன்
“யூ ட்டூ ப்ரூட்டஸ்?” என்று கேட்க
“எஸ்ஸ்ஸு” என்றாள் அவளும் இதையெல்லாம் புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்தவனை பார்த்த மேதா மீட்டிங்கை மறந்து அவனையே பார்த்தபடி இருந்தாள்.
ஏதோ உந்த பார்வையை அவள்புறம் திருப்பி அவன் பார்க்க இருவரின் விழிகளும் நேருக்குநேர் சந்தித்து கொண்டது ஒரு நொடி அவனது பார்வை வீச்சை தாங்காது முகத்தை வேறு புறம் திருப்பியவள்
“ஐ ஹாவ் சம் இம்பார்டண்ட் வொர்க் மீட்டிங்க கன்டினியூ பன்றீங்களா? இல்ல நான் போகட்டுமா?” என்று அவளது குரல் அதிகாரமாக கேட்க அனைவரும் கப்சிப் ஆகினர்.
அதன்பின் எழுந்த ஆராஷி அவளிடம் பேச வேண்டிய விஷயங்களை பேசியவன் அவளையும் ஆஸ் ஏ பாட்னர் அண்ட் ஸ்பான்சரா அவனுடைய அவார்ட் ஃபங்ஷனுக்கு இன்வைட் செய்தான்.
அந்த ஃபங்ஷனில் தான் தனது இந்த புதிய தொழில் பற்றியும் அறிவிக்க இருப்பதாகவும் அதில் தனது பாட்னர்ஷிப்பை அறிமுகபடுத்த இருப்பதாகவும் அவன் தனது ஆசை இதுவே என்றும் கூறிவிட அவளுக்கு வந்த தகவல்படி அவனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்தவள்
இது இப்போதைய சூழலில் கண்டிப்பாக தேவையா எனவும் இந்த அறிமுகத்தை மீடியாவில் ஒளிபரப்பு செய்தால் போதாதா என அவனிடம் கேட்க.
கண்டிப்பாக தனது மேடையில் தான் இதை அறிமுகபடுத்த வேண்டும் மற்றும் தனது அண்ணன் குடும்பத்தையும் அறிமுகம் செய்ய இருப்தாகவும் அதுவே தனது விருப்பம் என்றும் அவன் அவனது பேச்சில் உறுதியாக இருக்க சிறிது நேரம் யோசித்த மேதா
“Instead of me mr nithin will appear on the stage as a ceo of sri groups(எனக்கு பதிலாக திரு நிதின் உங்களுடன் மேடையில் இருப்பார் ஶ்ரீ குரூப்பின் சி இ ஓ வாக) என்று அவள் கூற
“ஃபவுண்டரையும் அறிமுகம் செய்யனும்னு இருக்கேன்” என்று அவன் கேட்க
தான் இன்னும் முறையாக ஃபவுண்டராக பொறுப்பை ஏற்கவில்லை இன்னும் பிஸினஸ் உலகிற்கு முகத்தையும் காட்டவில்லை அதனால் அவர் வருவது தான் சரி என்று தனது முடிவை எடுத்து வைத்தாள்.
அவள் சொல்வதில் இருந்த நியாயத்தை உணர்ந்தவன்
அட்லீஸ்ட் ஃபேமிலி உறவாக வந்தாலாவது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் இது மேதாராஷ் துவங்கி முதல் சந்திப்பு என்று அவன் கூற
முற்றிலுமாய் மறுத்துவிட்டாள் மேதா.
அவளால் வரமுடியாது அவளுக்கு அன்றைய தினம் வேறு ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும் கட் அண்ட் ரைட்டாக கூறிவிட முகம் வாடிப்போனது அவனுக்கு.
அவனது முகத்தை பார்த்தவள் அவனைவிட்டு அவள் தூரமாக இருப்பதே அவனுக்கு நல்லது என்று எண்ணியவள் வேறு சில விஷயங்களை பேசிவிட்டு அவர்களிடம் விடைப்பெற்றாள்.
மீட்டிங் முடியும்வரை அவனது பார்வை மேதாவை விட்டு நகராது இருந்ததை பார்த்த அனைவரும் ஏதோ சினிமாவில் காதல் சீனை பார்ப்பது போல பார்த்தபடி இருந்தனர்.
அவனது பார்வையை சந்திக்க முடியாமல் மேதா தடுமாறுவதும் அதை கண்டு அவன் உதடு பிரியாமல் சிரிப்பதும்.
கடைசியாக அவள் விடைபெறும் முன் அனைவரையும் டிரான்ஸ்லேட்டரை கழட்ட சொன்னவன் எல்லோரும் கழட்டியதை உறுதிபடுத்திவிட்டு அவளிடம் ஜாப்பனீஸில் சொன்னான்
“அஷ்ஷு உன் மச்சம் நான் செகெண்ட் டைம் இன்னைக்குத்தான் பார்த்தேன் ரொம்ப அழகு” என்றுவிட்டு அவளை பார்த்து ஒரு மர்ம புன்னகை புரிய அதிர்ந்தவள் இணைப்பை துண்டித்துவிட்டாள். பின்னாடி ஜாப்பனீஸ் தெரிந்தவன் ஒருவனும் இரண்டு காதல் ஜோடிகளும் இருப்பதை மறந்து சொல்லிவிட்டவன் அவளது பார்வை வேறு பக்கம் போய் கட் ஆனதை அப்போது தான் உணர்ந்து திரும்ப தேஜுவும் ரியோட்டோவும் ஏதோ பேசுவது போல பாவனை செய்யவும் ஒரே வெட்கம் வந்து விட்டது அவனுக்கு ‘ஐயோ’ என்று முகத்தை வெட்கத்தில் ஒரு கையை கொண்டு மூடியவன் திரும்ப அங்கு சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்த ஹர்ஷத்தை பார்த்தவனுக்கு இன்னும் வெட்கம் வந்துவிட
“ஓஓஓஓ மை காஷ்” என்றபடி வெளியே வேகமாக வெளியேறிவிட்டான்.
இதையெல்லாம் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த நம் கும்பல் தேஜுவை பிடித்து உலுக்கி என்ன என்று கேட்க அவள் சொன்னதில் அனைவருக்கும் புன்னகை வந்துவிட்டது.
இருவரின் பார்வை பறிமாற்றமும் அவனது முகம் வாடுவதை சகியாமல் அவள் பேசுவதும் அவன் சிறு குழந்தை போல அவள் சொன்னதற்கு தலையை ஆட்டுவதும் அவர்களுக்கு ஓவியம்போல இருந்தது.
ஆனால் நிதினுக்கு மட்டும் ஆராஷியிடம் பேசவேண்டியது இருந்தது அதனால் அவன் ஆராஷியை அழைக்கும்படி ஹர்ஷத்திடம் கூற அவனும் சென்று ஆராஷியை அழைக்க அதுவரை இருந்த சிறுபிள்ளைதனத்தை விட்டு கம்பீரமாக வந்தான் ஆராஷி.
உள்ளே வந்தவன் நிதினின் முகம் பார்க்க அனைவரும் குழப்பமாய் இருவரையும் பார்க்க
பேச்சை ஆரம்பித்தான் நிதின்.
“எனக்கு உங்ககிட்ட சில கேள்விகள் இருக்கு அதை இப்பவே தெளிவு படுத்திக்கலாம்னு தான் பேச நினைத்தேன்” என்றபடி அவன் ஆரம்பிக்க ஆராஷி ஹர்ஷத்தை பார்க்க அதை மொழிப்பெயர்த்தான் ஹர்ஷத்.
“கேளுங்கே” என்று ஆராஷி தன் ஓட்டை தமிழில் சொல்ல
நீங்க மேதாதான் வேணும்னு தேடினதுக்கும் அவளை மட்டுமே விரும்புறதுக்கும் ஏதோ ஒரு பலமான காரணம் இருக்குனு எனக்கு தெரியுது அது மேதாக்கும் தெரியுமோனு தோணுது சொல்லக்கூடிய விஷயமா இருந்திருந்தா இந்நேரம் அவளே சொல்லி இருப்பா ஆனா அவ மறைக்கிறானா அது ஏதோ ஒரு இரகசியமான விஷயமா இருக்கும். அதனால அதை நான் கேட்க விரும்பல ஆனா அவ இப்போ எல்லாரையும் விட்டு தூரமா ஒளிஞ்சு இருக்குறதுக்கு ஏதோ ஒரு ஸ்ட்ராங் ரீசன் இருக்குனு தோணுது அது என்னானு உங்களுக்கு தெரியுமா? அதனாலதான் அவ எல்லாரையும் விட்டு விலகி தன் அடையாளத்தை மறைச்சு முகத்தை கூட எங்களுக்கும் உங்களுக்கும் காட்டாம இருக்குறா? அவளோட குணம் தெரிஞ்சு தான் நான் அவளை தேடல ஏன்னா அவ நாங்க கூட வேணாம்னு இருக்கானா அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு ஆனா அப்படி உருகி உருகி லவ் பண்ண உங்கள விட்டு அவ போனது எனக்கு ஏதோ நெருடலாவே இருக்கு.
ஏன் இதை சொல்றேன்னா? உங்களுக்காக மட்டுமே அவ தன் அடையாளத்தை மறைச்சு உங்களோட பி.ஏ வா வேலை செஞ்சா நீங்க அவமேல எவ்ளோ கோவத்தை காட்டினாலும் அதுக்கு நான் சண்டை போட்டாலும் அவ உங்கள விட்டு கொடுத்ததே இல்ல அவருக்கு நான் யாருனு தெரியாதுல அதனால அவர் அப்படி நடந்துக்கிறாரு அதுக்காகலாம் அவரை விட்டு நான் விலகிட மாட்டேன் அவரோட குழந்தை மனசு எனக்கு மட்டும் தான் தெரியும்னு சொன்னவ நீங்க கோவத்தில சொன்ன ஒரு வார்த்தைக்காக அவ உங்கள விட்டு போவானு எனக்கு தோணல? அதுக்கு வேற காரணம் இருக்கு அது உங்களுக்கு தெரியுமா?
அவ உங்கள அந்த காரணத்தை வெச்சு கடைசிவரை ஏத்துக்கலைனா என்ன செய்வீங்க?” என்று அவன் கேட்க அதை அப்படியே டிரான்ஸ்லேட் செய்தான் ஹர்ஷத்.
அவனது பேச்சை கேட்ட ஆராஷி ஒரு பெருமூச்சை விட்டு நிதினை பார்த்து விட்டு மற்றவர்களையும் டிரான்ஸ்லேட்டரை அணிய சொன்னான் அனைவரும் அணிய அவன் பேச துவங்கினான்.
Interesting