அத்தியாயம் – 91
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
எல்லோரையும் டிரான்ஸ்லேட்டரை அணிய சொன்னவன் அவர்கள் அணிந்ததும் பேச ஆரம்பித்தான்.
“நீங்க கேட்ட கேள்விக்கு எதுக்குமே என்கிட்ட பதில் இல்லை.
ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் என்னை தவிர வேற யார்க்கும் அவளை விட்டு தர மாட்டேன் அதுக்கு எந்த காரணமா இருந்தாலும்சரி.
என்னை மட்டும் தான் அவ லவ் பன்னா பன்றா இனியும் பன்னுவா அது நான் எப்படிப்பட்ட ஆளா இருந்தாலும் அவளால என்னை வெறுக்கவும் முடியாது விலகவும் முடியாது அவளால முடியும்னு அவளா நினைச்சுட்டு இருக்கா.
என்னை பத்தின உண்மை என் அண்ணனுக்கு கூட தெரியாது மேதாக்கு அது தெரிஞ்சு இருக்கலாம் மேபி.
ஆனா அதையும் அவ காட்டிக்க மாட்டா அதை நான் உங்களுக்கு சொல்றேன்.
ஆனா இப்போ இல்ல ஸ்டேஜ்ல என்னோட அவார்ட் ஃபங்ஷன்ல.
ஆனா அவ என்னைவிட்டு மறைஞ்சு இருக்குறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு அதை அவ கடைசி வரை சொல்ல மாட்டா.
ஆனா அதை நாம தெரிஞ்சுக்கலாம்.
அதை தெரிஞ்ச ஒரு ஆளை எனக்கு நல்லா தெரியும் அவங்க சொன்னா அந்த இரகசியத்தை தெரிஞ்சுக்கலாம்” என்று அவன் பீடிகை போட
அவன் பேசியது புரியாமல் அனைவரும் யார் அது என்பது போல பார்க்க
எழுந்து தனது மொபைலை எடுத்தவன் அதையே நோண்டியபடி நடந்து ஹர்ஷத்திடம் வந்து நின்றான்.
“சொல்லுங்க ஹர்ஷத்?” என்று அவனை பார்த்து கேட்க அதிர்ந்த ஹர்ஷத்
“சர் சர் என்னை என்ன சொல்ல சொல்றீங்க? மேடமை நான்தான் பார்த்ததே இல்லையே?” என்று அவன் கூற
அனைவரும் புரியாமல் பார்த்தனர்.
ஆனால் அதிராமல் அவனை பார்த்த ஆராஷி
“பார்க்காத மேடம்காக தான் சொந்த பிஸினஸ்ஸையும் செஞ்சுட்டு இருந்த ரோபோடிக்ஸ் ப்ரஜெக்ட்டையும் விட்டுட்டு வந்து எனக்கு டிரான்ஸ்லேட்டரா வேலை பார்த்துட்டு எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சுட்டு இருக்கீங்களா மிஸ்டர். ஹர்ஷத் ஷர்மா” என்று அவனை கேள்வி கேட்டு அவனது முழுப்பெயரை கூற அவனை அதிர்ந்து பார்த்தான் அவன்.
அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் அருந்ததிக்கு பேரதிர்ச்சி.
“ஹர்ஷத் ஷர்மா ஃப்ரம் ஷர்மா குரூப்ஸ் ஃபவுண்டர் அண்ட் ஜப்பான் ரோபோடிக்ஸ் கம்பெனியோட செகெண்ட் சீனியர் ப்ரோகிராமர் ஆம் ஐ கரெக்ட் ஹர்ஷத்?” என்று ஆராஷி பேச பேச அதிர்ந்து போனான் ஹர்ஷத்.
“சர்” என்றானே தவிர அவனது வாயிலிருந்து வேறு வார்த்தை வரவில்லையே அதிர்ச்சியில் உறைந்து போயல்லவா நின்றான் ஹர்ஷத்.
அவனது பேச்சை கேட்ட நிதின்
“நீங்க என்ன சொல்றீங்க ஆராஷி? இவரு மேதா அரேஞ்ச் பண்ண டிரான்ஸ்லேட்டர் அண்ட் பி.ஏ தானே?” என்று நிதின் கேட்க
“ஆமா மேதா அரேஞ்ச் செஞ்ச டிரான்ஸ்லேட்டர் அண்ட் பி.ஏ தான் ஆனா அவங்க சம்பளத்துக்காக வந்த பி.ஏ இல்ல தன் தோழிமேல வெச்ச பாசத்துக்காகவும் அவங்களோட ரிக்குவஸ்ட்க்காகவும் பிஸினஸ்லாம் விட்டுட்டு சாதாரணமா என் பின்னாடி ஷேடோவா இருக்க வந்த பி.ஏ நான் சொன்னது சரிதானுங்களே?” என்று ஹர்ஷத்தை பார்த்து கேட்க அவன்
“இல்ல சர் நீங்க தப்பா” என்று முடிக்கவில்லை.
“ஹர்ஷத் எனக்கு மூனு நாளைக்கு முன்ன ஆக்சிடெண்ட் ஆன அன்னைக்கே எனக்கு உங்கள பத்தின எல்லா விவரமும் தெரியும்.
அன்னைக்கு காலையிலேயே தெரியும் ஆக்ஸிடென்ட் ஆகி
ஹாஸ்பிடல்ல நீங்க எனக்கு என்ன ப்ராப்ளம்னு கூட கேட்காம எனக்கு எல்லாம் செய்யும்போதே எனக்கு இன்னும் முழுசா கன்ஃபார்ம் ஆகிடுச்சு.
என்னடா உங்களுக்கும் மேதாக்கும் மட்டும் தெரிஞ்சு இரகசியம் எப்படி வெளியே வந்துச்சுனு யோசிக்கறீங்களா?
உங்க அளவுக்கு உங்க ப்ரண்டுக்கு நான் நெருக்கமானவனா இல்லாம இருக்கலாம் ஆனா என் மேதாவோட விழியசைவையும் அவளோட வே ஆஃப் திங்கிங்யையும் என்னால ஓரளவுக்கு யூகிக்க முடியும்.
அதை வெச்சு தான் நீங்கதான் ஷர்மானும் கண்டுபிடிச்சேன் மேதாவோட ரகசியம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்னும் கண்டுபிடிச்சேன்” என்று கூறியபடி அவனை பார்க்க தலையை குனிந்து நின்று கொண்டான் ஹர்ஷத் என்கிற ஹர்ஷத் ஷர்மா.
“உங்க ப்ரண்ட்ஷிப் பார்த்தா அவ்ளோ பொறாமையா இருக்கு எனக்கு.
பேசாம நான் நீங்களா இருந்து இருக்கலாம்னு நிறைய முறை தோணுது ஹர்ஷத்.
என் மேதாவோட கஷ்டமான சமயத்துலலாம் நீங்கதான் அவகூட இருந்து இருக்கீங்க எந்த அளவுக்குனா தோழிக்காக பணக்கார வாழ்க்கையை விட்டு அவ வீட்டு வேலைக்காரனா வேலை செய்யுற அளவுக்கு இதுலேயே தெரியுது உங்க ப்ரண்ட்ஷிப்போட ஆழம்.
உங்கள எவ்ளோ நம்பி இருந்தா எங்க ரெண்டு பேரோட ரகசியமும் உங்களுக்கு மட்டும் சொல்லி இருப்பா.
நான் நீங்களா இருந்து இருந்தா அவளை நிறைய கஷ்டங்கள் அண்டாத மாதிரி நானும் பார்த்து பாதுகாத்து இருப்பேனோ?
நீங்களாவது அடிச்சு சொல்லி புரியவெச்சு இருக்கலாம்ல?” என்று அவன் கேட்க
அதிர்ந்து அவனை பார்த்த ஹர்ஷத் “சர்” என்றான் அதிர்ச்சியாக.
“நான் முடிச்சுடுறேன் ஹர்ஷத்.
ஜப்பான்ல ஓரளவுக்கு பெரிய பிஸினஸ்மேன் ஷர்மா குரூப்ஸ்ஸோட பையன் ரோபோடிக்ஸ் கம்பெனியோட ஒன் ஆஃப் தி சீனியர் ப்ரோகிராமர்னு உங்கள கண்டு பிடிச்ச எனக்கு அந்த பர்ஸ்ட் சீனியர் ப்ரோகிராமரை கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சுட்டாங்களா?
அதையும் கண்டுபிடிச்சுட்டேன் உங்கள இங்க அடிச்சு துரத்திவிட்டுட்டு உங்க ப்ரோகிராமை அவங்க டிஸைன் பண்ணிட்டு இருக்குறதையும் கண்டுபிடிச்சுட்டேன்.
இத்தனை நாளா வி பி என் வெச்சு அவங்க சிக்னலை வேற வேற கன்ட்ரீஸ்ஸா மாத்தி காட்டி இங்க இருக்குறவங்களையெல்லாம் ஏமாத்திட்டு இருந்தாங்கனும் கண்டுபிடிச்சுட்டேன்.
ப்ளீஸ் ஹர்ஷத் இன்னும் நடிக்காதீங்க எனக்கு அவளுக்கு என்ன பிரச்சனைனு தெரிஞ்சே ஆகணும் எதனால என் கண்ணுலகூட படக்கூடாதுனு அவ இப்படிலாம் பன்றானு தெரியனும்?” என்று அவன் கூற அவனை நிமிர்ந்து பார்த்தான் ஹர்ஷத் ஷர்மா.
“ஒருவேளை…. ஒருவேளை என்மேல இருந்த லவ் போய்டுச்சுனாலும் பரவாயில்லை அதனால தான் என்னை வெறுத்து ஒதுக்கி அவங்க யார் கண்ணுலயும் படாம இப்படிலாம் பன்றாங்கனா அதையும் சொல்லுங்க பரவாயில்லை நா.. நான் அவங்கள விட்டு தூரமா போய்க்குறேன்.
இனிமே அவங்க முன்ன நிக்கவே மாட்டேன் ஆனா அவங்க குடும்பத்தோட வந்து இருக்க சொல்லுங்க” என்று வருத்தமாய் ஆராஷி கூற
“உங்க மேலயாவது லவ்வாவது குறையுறதாவது.
அவ செத்து சாம்பல் ஆனாகூட அந்த கடைசி சாம்பல் தூசு இந்த உலகத்தை விட்டு போற வரைக்கும் உங்கள லவ் பண்ணிக்கிட்டேதான் போகும் அவ உங்கமேல அவ்ளோ லவ் வெச்சு இருக்கா ஆனா அந்த லவ்னால தான் அவ உங்கள விட்டு பிரிஞ்சும் இருக்கா”என்று அதுவரை அமைதி காத்த ஹர்ஷத் பேச அவனை புரியாமல் பார்த்தான் ஆராஷி அனைவரும் எதுவுமே புரியாமல் இருவரையும் பார்த்தபடி இருந்தனர்.
“உங்கமேல வெச்ச ஓவர் லவ்வால தான் அவ உங்களவிட்டு விலகி போறா.
உங்களுக்கு ஒரு நல்ல லைஃப் பாட்னர் வரணும்னு தான் அவ தன்னோட லவ்வ விட்டு கொடுத்துட்டு போய்ட்டா” என்று அவன் கூற
மேலும் குழம்பிய ஆராஷி
“எனக்கு புரியல? ஒருவேளை என்னோட சித்தி அவளை ஏதாவது மிரட்டினாங்களா? அதனாலதான் அவ போய்ட்டாளா? என்னை விட்டு?” என்று கேட்க.
அவனை பார்த்து விரக்தியாய் சிரித்தவன்
“உங்க சித்தியோட தப்புக்குலாம் அவ எல்லா பக்கமும் செக் வெச்சுட்டா அவங்களாலலாம் அவளுக்கு எதையும் எதிரா யோசிக்க கூட முடியாது ஏன்னா அவளை பத்தி உங்க சித்திக்கு தெரிஞ்சதுலாம் நீங்க யாரோ ஒரு முகம் தெரியாத மலையாள பொண்ணை விரும்புறீங்கனுதான் அதுக்கு மேல அவங்க அவள பத்தி விசாரிக்க எடுத்த எல்லா வழியையும் நாங்க அடைச்சுட்டோம்.
ஆனா அதுக்காகலாம் அவ உங்கள விட்டு போகலை உங்கள காப்பாத்த போய் தான் அவ தன் வாழ்க்கையில இழக்ககூடாததை இழந்து உங்ககூட சந்தோஷமா வாழணும்னு நினைச்சதை கனவாவே போச்சுனு தனியா போய்ட்டா” என்று அவன் கோபமாய் கூற
அவனை பிடித்து தன்னை நோக்கி பார்க்க வைத்தவனை பார்க்க முடியாமல் முகத்தை திருப்ப அவனை தன்னை நோக்கி பார்க்க வைத்தான் ஆராஷி.
“என்ன சொல்றீங்க ஹர்ஷத்? தெளிவா எதையும் மறைக்காம சொல்லுங்க?அவளுக்கு என்னால என்ன ஆச்சு ப்ளீஸ் சொல்லுங்க?” என்று அவனை ஆராஷி உலுக்க.
கோவத்தில் உளறியதை அவன் உணர்ந்தான்.
“அது அதுவந்து என்னால எதையும் சொல்லமுடியாது விட்டுடுங்க நீங்க அவள தேடுறத விட்டுட்டு அவளை மறந்துட்டு” என்று அவன் முடிக்கவில்லை “ஹேய்ய்” என்று அவனது கழுத்தை பிடித்துவிட்டான் ஆராஷி.
Yenna da ithu seekiram yennanu solli sethu vaingapaaa