Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-103

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-103

அத்தியாயம் – 103

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தனது மொபைலில் வந்த குறுஞ்செய்தி பார்த்து அதிர்ந்த மேதாவின் பார்வை நேரே மேடையில் உருகி பாடி ஆடிக்கொண்டு இருந்த ஆராஷி ரியோட்டோவின் மேலும் தன் குடும்பத்தினர் மேலும்தான் படிந்தது.
வந்த தகவல் இதுவே.

“நீதான் ஆராஷி லவ் பன்ற பொண்ணுனு எனக்கு தெரியும் முதல்ல அவனை கொல்லத்தான் ப்ளான் பண்ணேன் ஆனா அவனுக்கு நீனா அவ்ளோ உயிராமே அதான் அவனை விட்டு இப்போ உன்னை கொல்லலாம்னு ப்ளான மாத்திட்டேன்.
நீ மட்டும் இந்த இடத்தை விட்டு வெளியே வந்தா உன்ன மட்டும் கொல்லுவேன் இல்ல உள்ள வெச்சு இருக்குற பாம்ல ஒட்டுமொத்த இடமே காலி ஆகிடும் உன் ஒருத்தி உயிரா இல்ல எல்லாரோட உயிரா? நீயே முடிவு பண்ணிக்க நாங்க உன்னை வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கோம் உன்னோட லவ்வருக்கோ இல்ல வேற யாருக்கோ நீ இன்ஃபார்ம் பண்ணனும்னு நினைச்சா கூட இந்த இடம் வெடிச்சு சிதறிடும் ஜாக்கிரதை யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் by மியோ” என்று வந்திருந்தது.

அதை படித்து அதிர்ந்தவள் பார்வை தன்னவனையும் தன் குடும்பத்தையும் பார்த்தவள் ஒட்டுமொத்த அரங்கத்தையும் ஒரு முறை பார்த்தாள்.
‘இந்த மியோவால இனி ஒரு உயிர் போககூடாது நம்ம உயிரே போனாலும் சரி அவளையும் கொன்னுட்டு தான் சாகணும்’ என்று முடிவெடுத்தவள் இனி திரும்புவேனோ மாட்டேனோ தன்னவனையும் தன் குடும்பத்தையும் நண்பர்களையும் கண்கள் முழுதும் நிரப்பி கொண்டு நொடியும் தாமதிக்காமல் எழுந்து வெளியே செல்லப்போக அவளை தடுத்தனர் கார்ட்ஸ் அவர்களிடம் வாஷ்ரூம் போகவேண்டும் என்று கூறிவிட்டு அவர்களை ஓரம் தள்ளிவிட்டு வெளியே சென்றாள் அவளது அவசரமான நடை அவர்களுக்கு சந்தேகத்தை தர உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது ஹர்ஷத்க்கு.
ஏற்கனவே மியோவின் இரகசிய புன்னகை எதற்கு என்று தெரியாமல் அவர்மேலேயே கண்ணை வைத்து இருந்த ஹர்ஷத்துக்கு மேதா வெளியே அவசரமாக செல்லும் தகவல் கிடைக்கவும் அதிர்ந்து போனான்.
உடனே எல்லாருக்கும் அலர்ட் மெஸேஜ்ஜை தட்டியவன் இரகசியமாக அங்கிருந்து நழுவினான்.
இதை பார்த்துக்கொண்டு இருந்த அருந்ததியும் அவன்மேல் சந்தேகம் வர அவன் பின்னே ஒளிந்து சென்றாள்.
மியோவும் அவரைச்சுற்றி ஏழு அடியாட்களும் அவரது மகனும் கூடவே இருந்தான்.

மேதா வெளியே வர அவளை பார்த்த மியோவிற்கு ‘இவனுக்கு இப்படி ஒரு அழகான பெண் காதலியா? என்றுதான் தோன்றியது.
அதுசரி அவன்தான் உலக அழகனாச்சே அவனோட அம்மா அவனைதான் அழகனா பெத்து வெச்சுட்டு போய்ட்டாளே?’என்று எண்ணியபடி
பக்கத்தில் இருந்த தன் மகனை பார்க்க கோவம்தான் வந்தது அவருக்கு ‘இவனும் புடிச்சு இருக்கானே வத்தல் மாதிரி அவனை பாரு ஆளும் அழகு அவனோட காதலியும் அழகு பெரிய பணக்கார பொண்ணு வேற ஆனா இவன் கூட நடிக்கிற ஒரு ஓணானை புடிச்சுட்டு வந்து அவளதான் கட்டிப்பேன் அவ கர்ப்பமாகிட்டானு நிக்கிறான்.
நடிச்சது ஒரே ஒரு ஆட் ஷூட் அதுலயே அப்பாவும் ஆகி வந்து நிக்கிறான் இவனை பெரிய ஆள் ஆக்க நான் இவ்வளவும் செஞ்சுட்டு இருக்கேன்.
கொஞ்சமாச்சும் இருக்குற அழகை வெச்சு பெரிய இடத்தை வளைச்சு போடணும்னு தெரியுதா பாரு வீணாப்போனவன்’ என்று மனதில் பொருமியபடி அவளை அருகில் வர சொன்னார் மியோ

ஒரு முடிவோடு அவரது அருகில் சென்ற மேதா
“எதுக்கு உங்களுக்கு அவர்மேல இவ்ளோ கொலைவெறி? ஏன் அவரை கொல்ல இப்படி அலையுறீங்க? அவர் உங்களுக்கு பிள்ளைபோல தானே?” என்று அவள் கோவமாய் கேட்க பயங்கரமாக சிரித்த மியோ

“அவனா எனக்கு மகனா? ஹாஹா குட் கொஸ்டின்.
அவனோட அம்மா என்னை எவ்ளோ வெறுத்தா தெரியுமா? என் லவ்வர அவ கல்யாணம் செஞ்சுக்கிட்டு என்னையே அவனைவிட்டு ஓட வெச்சா எதனால எல்லாம் அவளோட பணபலத்தால அந்த பணம் அது இல்லாம தானே நான் எவனோ ஒரு குடிகார ஏழையை கல்யாணம் செஞ்சு அவனோட கொடுமையை அனுபவிச்சு அவனும் செத்து ஆதரவு இல்லாம நின்னப்போ பார்த்தா இவளோட அவரு சந்தோஷமா இருக்காரு எனக்கு எப்படி இருக்கும் அப்போதான் முடிவு பண்ணேன் அவளை பிரிக்கனும் அவ இடத்துல நான் இருக்கனும்னு அதனாலதான் என் பையனுக்கு இருந்த பணத்தையெல்லாம் செலவு பண்ணி ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சேன் அவரை தேடி வந்தேன் ஆனா அவ என்னை நம்பல அப்பவும் என்னை ஏத்துக்காம ஏதோ காசு கொடுத்து அனுப்ப சொன்னா குழந்தையை மட்டும் கொடுத்துட்டு எப்படி இருக்கும் எனக்கு? கொஞ்ச நாள்ள அவர் என்கூட அட்டாச் ஆகுற அளவுக்கு கொண்டு வந்தா சொத்து எதுவும் அந்தாளு பேருல இல்ல பையன் பேருல இருக்குனு தெரிஞ்சது அதுக்கு கார்டியன் இவர்தான்னு தெரிஞ்சது அவ பையன் வளர்ந்து நிக்கிறான் இன்னும் ஒருவருஷம்ல அவனுக்கு சொத்தெல்லாம் போய்டும்னு தெரிஞ்சப்போ எனக்கு எப்படி இருக்கும்? அதும் இல்லாம என் பிள்ளைய காட்டிதான் அவரை என் பக்கம் இழுத்தேன் ஆனா அவ அதையும் பொய்னு கண்டுபிடிச்சுட்டா உண்மை தெரிஞ்சு என்னை அவ காட்டி கொடுக்க நினைச்சா அதனாலதான் பையன கடத்தி அவனை கொல்லப்பார்த்தேன் ஆனா உயிலை வேற உஷாரா எழுதி வெச்சு இருந்தா அவனோட வைஃப் வந்து சேர்ந்தாதான் சொத்து அவனுக்கு வரும் இடையில பத்தொன்பது வயசுக்குள்ள அவன் செத்துட்டா அவனோட சொத்து எல்லாம் வேற ஆர்பனேஜ்க்கு போய்டும் ஆனா அவனுக்கு பையித்தியம் புடிச்சா அந்த சொத்து இவருக்கு வரும் அப்படி அவன் இருபது வயசுக்கு மேல இறந்தா தான் அந்த சொத்து இவருக்கு வரும்
அப்போதான் அதை என்ன வேணா பண்ணுற உரிமை அவருக்கு வரும் அந்த கோவத்தில தான் அவளை கொன்னேன் அதனாலதான் அவனை கடத்தி அவனை பையித்தியமா மாத்த அவனை அடைச்சு வெச்சு கொடுமை பண்ணேன் ஆனா திடீர்னு யோசனை வந்தது அவனை வெறும் பையித்தியமா மாத்தினா அவனை யாராவது ஒரு பொண்ணு கல்யாணம் செஞ்சுப்பா சொத்துக்காக அதே அவனை பொண்ணுங்கள வெறுக்குற மாதிரி பண்ணா அதான் அவனை கேய்யா மாத்த கொடுமை பண்ணேன்.
அது வேலையும் செஞ்சது இது எல்லாம் அவருக்கு தெரியாம பார்த்துக்கிட்டேன்.
இவ்வளவும் எதுக்கு செஞ்சேன் என் பையனுக்கு அந்த சொத்து வரணும் என் வாழ்க்கையை கெடுத்த அவனோட அம்மா வாழ்க்கையை நான் பறிக்கணும்னு
ஆனா அவனோட அம்மா அதுக்குள்ள உன் அப்பா கிட்ட சாகுற நேரத்தில எல்லாத்தையும் சொல்லிட்டு போய்ட்டா உங்க அப்பன் அவனை காப்பாத்தி அவனை சுத்தி செம்ம செக்யூரிட்டி போட்டான்” என்று குரூரமான குரலில் பேச
“அதுக்குத்தான் அவங்களை கொன்னுட்டீங்களே அவரையும் எந்த பொண்ணுகிட்டயும் நெருங்க விடாம பண்ணிட்டீங்க இன்னும் இன்னும் ஏன் அவரை கொல்ல இவ்ளோ வெறியோட இருக்கீங்க அப்படி அதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்?” என்று மேதா கேட்க.

“அதான் உன்னை உயிரா லவ் பன்றானே அது போதாதா?” என்று கேட்டு அவர் அவளை பார்க்க
அவரது பார்வையில் அருவருப்பை உணர்ந்தவள்
“நானே அவரை விட்டு பிரிஞ்சு தானே போறேன் அப்பவும் அவர் என்னை லவ் பண்ணமாட்டாரே அவரை ஏன் கொல்லப்பார்க்கறீங்க” என்று அவள் வருத்தமாய் பேச
“கண்ணு அவனை நான் கொல்லணும்னு நினைக்க காரணமே உங்க அப்பன போல நீயும் அவனை இவ்ளோ காப்பாத்த ட்ரை பண்றதுதான் அவன் அம்மா சாகுறதுக்கு முன்ன என்கிட்ட சவால் விட்டா என் மகனை போல உன் பிள்ள எப்பவும் வரமாட்டான் வரவும் விடமாட்டேன்னு சபதம் விட்டா அதுக்காகவே அவனை உரு தெரியாம அழிச்சே ஆகணும்னு முடிவு பண்ணேன்.
உன்னை ஏன் கொல்லனும்னு பார்த்தேன் தெரியுமா?
உங்க அப்பா அவர்கிட்ட என்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லி எங்களை பிரிச்சுட்டார் எனக்கு அவர்கிட்ட இருந்து எந்தவிதமான காசும் கிடைக்காம பண்ணதால தான் அவரோட பேர்ல இருந்த சொத்தையெல்லாம் என் பையன காரணம் காட்டி ஏற்கனவே எழுதி வாங்கிட்டேன் அதனால நான் தப்பிச்சேன்.
ஆனா உங்க அப்பன் அந்த ஆராஷிய காப்பாத்தி அவனை புரொடக்ட் பண்றதும் இல்லாம அவனை ஸ்பான்சர் பண்ணி பெரிய ஆளா மாத்திவிட்டான்.
அப்போ அவன் ஒரு இண்டியன் கேர்ள்ள தேடுறான்னு தகவல் வந்தது அதுக்கும் ப்ளான் போட்டு ஒரு பொண்ணை நடிக்க அனுப்பினேன் ஆனா அவன் கண்டுபிடிச்சுட்டான்.
உங்க அப்பனும் அவனை எல்லா பக்கமும் பாதுகாக்க ஆரம்பிச்சுட்டான் அதான் அந்த கோவத்துல தான் உன் அப்பன கொன்னேன்” என்று அவர் கூற அதிர்ந்து போனாள் மேதஷ்வினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!