Skip to content
Home » அபியும் நானும்-2

அபியும் நானும்-2

🍁2    

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


        தனது ஆடையில் ஈரம் உணர்ந்து கண் விழித்த கீர்த்தனா எப்பொழுதும் போல அபி தான் என்று, அவளை எழுப்பி அரை தூக்கத்திலே உடை மாற்றி விட்டு, நேற்று காய போட்ட மெத்தையில் படுக்க வைத்து கீர்த்தனா குளிக்க சென்றாள்.
          குளித்து உடை மாற்றி அமர்ந்ததும் பசி அதிகமாக கிச்சன் போனாள். பருப்பும் ரசமும் வைத்து அபிக்கு பிடித்த சேனை வறுவல் செய்து முடித்து பாலை காய்ச்சி காபி கலந்தாள்.


           அதை பருகியபடி ஹாலில் அமர எதிர் அறையில் இருந்து கேத்ரின் குரல் கேட்டது.
     ”ராஜேஷ்… டேய் நான் கிளம்பறேன் மாலை முடிந்தா சந்திபோம் என்றாள். “போறியா” என்று ராஜேஷ் குரல் குழறலாய் கேட்டது.


      தமது அறைக்கு செல்ல போக அதே நேரம் கதவுத்திறந்து கேத்ரின் வெளியே வர, கீர்த்தனாவை கண்டு, நெளிந்து கொண்டே “நீ…. நீ.. ரூமுக்கு போனதும் ராஜேஷ் ஒரே புலம்பல் அதான்… அவனுக்கு டிரிங்க்ஸ் கம்பனி கொடுத்தேன்… அதனால வீட்டுக்கு போக முடியல” என்றாள்.


     ”நான் எதுவும் கேட்கலை கேத்ரின், கொஞ்சம் சீக்கிரம் அவனை கல்யாணம் செய்துக்கோ…” என்றுரைத்து அறைக்குள் போனாள்.
    ராஜேஷ் அறையையும், கீர்த்தனா அறையும் பார்த்து தோளைக் குலுக்கி கொண்டாள்.


           கொஞ்ச நேரம் தான் அபியை கிளப்பி பள்ளிக்கு விட போனாள். அபி என்றும் போல மறுத்து அழுதபடி தான் போனாள். சின்ன சிறிய பிள்ளைகள் கூட சமத்தாக செல்ல அபி அழுதபடி செல்வதை கண்டவள் அவளுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும் என அறியாமல் குழம்பினாள்.
           வீட்டுக்கு வந்த பொழுது ராஜேஷ் அறையில் சத்தம் கேட்க உள்ளே போனாள். அங்கே ராஜேஷ் வாந்தி எடுத்து முடித்திருந்தான். ஷர்ட் அணியாததால் அவன் மேலே கொஞ்சம் இருக்க அரை மயக்கத்தில் இருந்தவன் வாந்தியில் தெளிந்து போனான்.
           கீர்த்தனா அவனை கைதாங்கி குளியலறைக்கு அழைத்து சென்று, ஷவர் திறந்து விட, முன்பு அபி பிறக்கும் முன், இதே போன்ற குளியல், எத்தகைய சந்தோஷத்தையும் அன்பையும் காதலையும் தந்தது என்று ராஜேஷ் மனம் வாடினான்.


    ”கீர்த்து…. நாம நம்ம மட்டும் இருந்தபொழுது எவ்ளோ சந்தோஷமா இருந்தோம். ஏன் டி என்னை இப்படி மாத்திட்ட… நேற்று முழுக்க உன்னை மறக்க நினைச்சு, கேத்ரினிடம் உன் பேரை சொல்லி தான் டி முனங்கினேன்… அப்படி எல்லாம் உன் மேல பாசம் வைத்திருக்கேன். எனக்காக நீ ஒரு விஷயத்தில் விட்டு கொடுக்க மாட்டியா?” என பரிதாபமாக கேட்டான்.


     ”இங்க பாரு ராஜேஷ்… இந்த நிமிஷம் நீ வாந்தி எடுத்து இப்படி இருக்க. ஆனா எனக்கு உன் மேல அருவருப்பு வரலை… ஏன் தெரியுமா.. நீ என்னை அபி பிறந்து வளர்ந்து 5 வயசு வரை என்னையும் அவளையும் தங்க தட்டில் தான் பார்த்துக்கிட்ட. அவ பார்க்கற பொம்மை எல்லாம் வாங்கி வந்து குவிச்ச… அவளுக்கு எங்க போனாலும் டிரஸ்ஸா எடுத்து தள்ளின… ஆனா எப்போ அவள் மற்ற குழந்தை போல இல்லை என்றதும் உன் கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமா மாறிச்சோ, அப்பவே நம்ம காதலும் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுடுச்சு… நீ அன்பா இருந்த பொழுது, காட்டின பாசம் மட்டும் தான், நீ என்னை இப்போ செய்யற கொடுமைகளை எல்லாம் சகிச்சுட்டு இருக்கேன். நீ கேத்ரின்… அப்பறம் அந்த பீர் பாட்டில்… நீ அடிக்கடி அபியை திட்டறது… என்னை அடிக்கறது இது எல்லாம் சகிச்சு போறதுக்கு ஒரே காரணம். நீ அன்பானவன் தான். ஆனா எல்லாராயும் போல ஒரு லைஃப் அமையலை என்று, நீ வெறுக்க ஆரம்பிச்சுட்ட… நீ வெறுக்கலாம்.. நான்.. அம்மா என்ற ஜீவன் எப்பவும் குழந்தையை வெறுக்காது ராஜேஷ்…” என்று அவனுக்கு முழு தெளிவு வந்துவிட்டது என நகர அவளின் பாதி உடையை நனைத்த ஈரம் இருக்க உடை மாற்றி கிளம்பினாள்.


         நேற்று போல வம்பு இழுக்க நினைத்த ராஜேஷால் முடியவில்லை.. தான் ஏன் மாறினோம்… ஒரு காலத்தில் நிம்மதியாக போன வாழ்வு என்றெண்ணி அவனும் கிளம்பினான்.


      இவள் ஒரு பக்கம் சிவப்பு நிற காரிலும், அவன் ஒரு பக்கம் வெள்ளை நிற காரிலும் செல்ல அந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி கதவை திறந்து விடுத்தார்.


          ஏனோ கேத்ரின் ராஜேஷ் இருந்த நிலையை கண்டதும் அலுவலகம் கூட செல்ல பிடிக்கவில்லை.. நேற்றே அவளின் அலுவலகதில் அவளின் மேலதிகாரி அவளின் உதட்டில் ரத்த கசிவை பற்றி கேட்க, தான் எதுவும் சொல்லாமல் போக, அவரே யூகித்து, உங்க கணவர் வேலையா ரொம்ப மிருகமா ஹேண்டில் பண்ணி இருக்காரே’ என்று பேசிபேசி கடைசியாக அருவருப்பு பேச்சில் முடிக்க, இனி அலுவலகம் செல்லவே பிடிக்காமல் போனது கீர்த்திக்கு…

பேசாமல் சின்ன வேலை கிடைத்தால் கூட மாறிடலாம் ஆனா உடனே கிடைக்கணுமே… என்று சிந்தனை சுழல மளிகை பொருட்கள் வாங்க கடைக்குள் சென்றாள்.


     கூடை எடுத்து ஒவ்வொன்றாய் போட, அவளின் இடையில் ஒரு கை இடித்து செல்ல, முதலில் யாரென்று புரியாமல் விழித்து திரும்பியவள், மீண்டும் எல்லா பொருட்கள் வாங்கி பி‌ல் போட வரும் சமயம், முதுகில் யாரோ இடிக்க கண்டு திரும்ப, அதே நேரம் அங்கே அபிமன்யு வந்து சேர்ந்தான்.


      நேற்று மேலதிகாரி பேசிய அருவருப்பு பேச்சிலும்… இங்கே இது இரண்டாவது இடி என்ற கடுப்பிலும் யாரென்றே பாராமல் கன்னத்தில் அறைய, அந்த அடியை வாங்கி குழம்பியபடி நின்றான்.


     ”ஹலோ எதுக்கு என்னை அடிசிங்க?” என்றான் அபிமன்யு.
     ‘அடிக்கமா என்ன செய்வாங்க… இப்படி கேர்ள்ஸ்கிட்ட மிஸ் பிகேவ் பண்ணா?” என்று கேட்க, தனது பெயரை கெடுக்கும் நிலை என்றதும் அபி
     ”ஹலோ நான் யாரையும் இடிக்கலை..” என்றான்.


     ”என்ன ஆதாரம் இல்லை என்றதும் பார்க்கறியா இரு…” என்று அங்கே டிபார்ட்மெண்ட் முதலாளியிடம் சொல்லி இவள் வந்ததிலிருந்து பார்க்க, இவளை முதலில் இடித்த நபர் மறுபடியும் அபி வரும் சமயம் முதுகில் உரசி செல்ல கண்டார்கள்.


        மணி பத்து முப்பது என்பதாலோ என்னவோ கடை ஆட்கள் மட்டும் சிலரே இருக்க, இதனை பார்த்து அந்த குறிப்பிட நபரை தேட, அவனோ வேகமாக கடையில் இருந்து ஓடினான்.
       டிபார்ட்மெண்ட் முதலாளி கீர்த்தனாவிடம் ”அவங்க அப்பா குடும்பம் எனக்கு தெரியும்மா நிச்சயம் அவர்களிடம் சொல்லி அவனை கண்டிக்க சொல்றேன்…. நீங்க கவலைப்படாதீங்கம்மா” என்றார்.


      ”சார் உங்களை அவங்க தவறா நினைச்சு அடிச்சதுக்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம்” என்று சொல்ல கீர்த்தனா நன்றி சொல்லி வெளியேறினாள்.
       அபிமன்யு கீர்த்தனா இருவருமே ஒரு சேர வெளியே வந்தார்கள்.


      ”சோ அடிச்சதுக்கு சாரி கேட்க மாட்ட” என்றான். ”சாரி என்று வெடுக்கென்று சொல்லி கடந்தாள் நாயகி.
      ”ஹலோ உங்க ரெட் கலர் கார் வேண்டாமா? அப்படியே விட்டுட்டு போறிங்க” என்று நடந்து சென்றவளை கேட்டான்.
      ”தேங்க்ஸ் என்று காரினை திறக்க போனவள் ”உங்களுக்கு எப்படி என் கார் இதுனு தெரியும்” என கேட்டாள்.


       ”இதுக்கு முன்ன ஒரு ரோட் கிராஸ்சிங்ல பார்த்து இருக்கேன்” என புன்னகை விரிய சொன்னவன் ”ஹாய் … ஐ.. அம்…” என அவனின் பெயரை சொல்ல வர
      ”உங்க பேர் ஊர் எனக்கு தேவையில்லை… பை” என்று கிளம்பினாள்.


              ப்ப்பா…. செம ஸ்டைலிஷ் கூடவே ரொம்ப திமிர் இருக்கும் போல… என்று குறுநகையோடு அவனின் காரினை எடுத்தான்.


        அங்கு கீர்த்தி அபியை அணைத்து செல்ல போக, அபி கண்ணில் அருகே கீறிய வடு இருக்க கண்டு
     ”ஒரு குழந்தை நோட்டை கிழிசுட்டா..அதுக்கு அந்த பொண்ணு அடிச்சிடுச்சு… நாங்க அந்த குழந்தை சின்ன பொண்ணு அதனால அந்த குழந்தை மேல ஆக்ஷன் எடுக்க முடியலை…” என்றே ஆசிரியர் சொல்ல முறுவலுடன்
      ”பரவாயில்லை மிஸ் அபிக்கு தங்கை இருந்தா அவளிடம் இப்படி அடி கீறல் வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கும் அதனால இது ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்றே சொல்லி அழைத்து சென்றார்.
      பேராசிரியருக்கு கொஞ்சம் அச்சம் இருந்தது. இவர்கள் குழந்தையை சரியாக பார்க்கவில்லை என்றே ஒரு புகார் சொல்லி இருந்தால் இவரின் பணி சறுக்க வாய்பு இருந்து இருக்கும் தற்பொழுது நிம்மதி பெற கீர்த்தனா குழந்தை அவள் தந்தையிடம் வாங்காத அடியா அந்த சிறிய கைகள் அடித்திருக்க முடியும் என்றே தான் அவளுள் தோன்றி மறைந்தது.
       இரு தினம் செல்ல அடுத்த நாளை ஆவலாக எதிர் பார்த்து இருந்தாள் கீர்த்தனா…மகள் அபி மேடையில் ஏறுவாளோ அல்லது எப்படி? என்றே… எதற்கோ ராஜேஷ் அழைத்து பார்க்க எண்ணி அவனிடம் அபி குறள் சொல்ல [போகின்றாள் ஆண்டு விழாவிற்கு வருகின்றாயா? என்றே கேட்க அவனோ எதுக்கு ஊர் கூடி அது என் குழந்தை அதுக்கு பத்து வயசு ஆனா 5 வயசு குழந்தை மாதிரி திருக்குறள் சொல்ல மற்றவங்க உச்சி கொட்டி பார்க்க நான் என்ன ஷோகேஸ்ஷா வர முடியாது என்றே உதாசீனம் படுதினான்.
       வர முடியாது என்றே மட்டும் கூட சொல்லி இருக்கலாம்… இப்படி பேசி எதுக்கு என் மனசை கொள்கின்றானோ?! என்றே கீர்த்தனா அதற்கு மேல அவனிடம் பேச வில்லை ஏனோ அவன் இந்த இரு நாட்கள் தன்னை தொல்லை படுதாமல் இருப்பதே சந்தோஷமாக இருந்தது. அதனால தான் அபிக்கு மனப்பாடம் செய்ய கற்று கொடுக்க முடிந்தது.

3 thoughts on “அபியும் நானும்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *