disclaimer: கடி ஜோக்ஸ் ஒவ்வொன்றும் forward message மூலமாக தொகுத்து வழங்குவது மட்டுமே. copyright கேட்டு யாரும் உள்ளே குதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது.
*நகைச்சுவை நகைச்சுவைக்கு மட்டுமே.*
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நோயாளியின் உறவினர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
—–
மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா?
கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்?
மனைவி : ????
—–
கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது?
மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!
—–
கணவன் : நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.
மனைவி : ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க?
கணவன் : பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடுன்னு திருடன் கரெக்ட கேட்டானே.
—–
வழுக்கைத் தலை ஆள்: கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?
அப்புறம் என்ன ஆச்சு?
வழுக்கி விழுந்துட்டாங்க!
—–
பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா : விமலா டா…
பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய “டார்லிங்”னு கூப்புடுறார்.
—–
தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி…
அதனால…?
அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே “டாண்”னு எழுந்து, அதைப் பண்ணிடுவேன்!
—–
ஜீவா : பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்.
அன்பு: “காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்.
—–
நோயாளி : டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல.
டாக்டர் : வயிறு வலிக்கும் போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
—–
நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?
நோயாளி 2: டாக்டர் தான் “அரை(றை) மூடி ” டானிக் குடிக்க சொன்னார்.
—–
கமல் : என்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி?
டைரக்டர் : அப்படியா அப்ப படம் ஹிட்!
கமல் : மண்ணாங்கட்டி! முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா!
—–
ஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
மாணவன் : அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
—–
ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்-ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்-ல கட்டுவாங்க?
மாணவன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
ஆசிரியர்:???
—–
மாணவன்: Sir எந்த மாதத்தில் 28 நாட்கள் வருகின்றது?
ஆசிரியர்: என்னிடமே கேள்வி கேட்கிறாயா? பிப்ரவரி மாதத்தில் தான்.
மாணவன்: இது கூட உங்களுக்கு தெரியல Sir எல்லா மாதத்திலும் 28 நாட்கள் வரும்.
—–
மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?
மாணவன்: நான் HOMEWORK செய்யலை சார்!
—–
ஆசிரியர்: டேய் ஜீவா, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?
ஜீவா : அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்-னு வேண்டிக்குவேன் சார்.
ஆசிரியர்:???
—–
மனைவி : நேத்து மூக்குப்பிடிக்க சாப்பிட்டிங்களே, அதே சாம்பார்தான் இன்னிக்கும்.
கணவன் : சரி, இன்னிக்கு மூக்கைப் பிடிச்சுட்டு சாப்பிடறேன்.
———-
கணவன்: ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?
மனைவி: நீங்க தானே சொன்னீங்க! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
———-
கணவன் : சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே ?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
———-
கணவன் : லதா… எதுக்கு நீ வெள்ளிக்கிழமை மட்டும் ரொம்ப ருசியா சமைக்கிற?
மனைவி : அன்னைக்கு தானே உங்கம்மா சாப்பிடாம விரதம் இருக்காங்க!
——-
ஆசிரியர் : கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். அது என்ன காலம்?
மாணவன்: அது கொசுவே இல்லாத காலம்.
—–
மாணவன் 1: வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?
மாணவன் 2: எப்படிடா சொல்ற?
மாணவன் 1: திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு?-ன்னு கேட்கறாங்க.
—–
ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைபடுர.
மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்.
—–
ஆசிரியர் : ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?
மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்!
—–
வாத்தியார் : என்னடா ஆறு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற, உனக்கு வெட்கமா இல்ல?
மாணவன் : நான் ஒன்னுமே எழுதல, அதுக்கு போய் ஆறு மார்க் போட்டு இருக்கீங்களே, உங்களுக்கு வெட்கமா இல்ல!
—–
இண்டர்வியூவில் அதிகாரி: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
மாணவன் : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!
—–
காதலன் : உன் காதலுக்காக என் உயிரையே கொடுப்பேன் டியர்!
காதலி : அதற்கு அவசியமில்ல!… நம்ம லவ், என் அப்பாக்கு தெரிஞ்சா, அவரே எடுத்துடுவாரு!
காதலன் : ???????
—–
இன்டர்வியூ அதிகாரி: உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?
மாணவன்: சுவிட்சர்லாந்து
இன்டர்வியூ அதிகாரி: எங்கே Spelling சொல்லுங்க.
மாணவன்: ஐயையோ. அப்படின்னா கோவா.
—–
நோயாளி: பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்.
டாக்டர்: அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க.
———
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே.. என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.
—–
வேலைக்காரன் 1 : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.
வேலைக்காரன் 2 : அதுக்கு நீ ஏன் பதர்ற?
வேலைக்காரன் 1 : இல்லாத விஷயத்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க!
———
மனைவி: ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்-னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.
கணவர்: அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.
மனைவி: ????????
——–