disclaimer: கடி ஜோக்ஸ் ஒவ்வொன்றும் forward message மூலமாக தொகுத்து வழங்குவது மட்டுமே. copyright கேட்டு யாரும் உள்ளே குதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது.
*நகைச்சுவை நகைச்சுவைக்கு மட்டுமே.*
நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லு
பனியன்
***
குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா?
***
ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு?
அது ராமனோட கஷ்டகாலம் சார்
***
நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க?
எண்ணெய்” சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு!
***
ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா?
எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான்
***
50 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க!
அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!
***
டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும்.
நான் பனியில நிக்கல டா! காலில் தான் நிற்கிறேன்.
***
மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி?
ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல, அதான் கீழ வந்துடுது சார்.
***
ஏன் அவன் பளுவை தூக்கி வைத்துக் கொண்டே படிக்கிறான்?
ஏன்னா! அவங்க டீச்சர் “கஷ்டப்பட்டு” படித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லியிருக்கிறார்களாம்.
***
எங்கே ஈ காட்டு பாக்கலாம்?
நீங்க ‘ஈ” பார்த்ததில்லையா டாக்டர்!
***
ஏன்டா பரிட்சை எழுத வந்துட்டு தூங்குற?
கேள்விக்கு பதில் தெரியலனா சும்மா “முழிச்சு”க்கிட்டு இருக்க கூடாதுன்னு எங்க அப்பா தான் சொன்னாங்க சார்.
***
ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும் ?
சாகமா இருக்கணும்.
***
பசுமாடு ஏன் பால் தருகிறது
அதனால் காப்பி டீ தர முடியாது
***
கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க.?
சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று
***
ரெண்டு பேர் ஓட்டலுக்கு போறாங்க நாலு நாள் இட்லி ஆர்டர் செய்து சாப்பிடறாங்க அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு புட் பாய்சன் ஆயிடுச்சு ஏன்?
ஏன்னா அது நாலு நாள் இட்லி..
***
எந்த பூச்சியை தொட்டால் சாக் அடிக்கும்
மின் மினி பூச்சியை.
***
இரும்பு மனிதர் என்று யாரை அழைக்கலாம்?
மனைவியின் அடியே தாங்கிக் கொண்டு ஆழமாய் இருப்பவரே
***
முட்டையே போடாத பறவை அது என்ன பறவை?
அது ஆண் பறவை.
***
வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
மைசூர் பாக்கு
***
டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானா ஏன்?
ஏன்னா அது தடுப்பூசியாம்.
***
பத்து யானையில் 9 யானை பேருந்தில் ஏறிவிட்டனர் ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற முடியவில்லை ஏன்?
அது ஆண் யானை வந்ததோ லேடீஸ் பஸ்.
***
கல்யாண வீட்டுல ஒரு ஆல மட்டும் இலுத்து சாம்பார்ல போட்டாங்களா ஏன்?
ஏன்னா அவருதான் அந்த ஊர்லயே பெரிய பருப்பாம்.
***
அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்?
வயசு வித்தியாசம்.
***
எறும்பு பெருசா யானை பெருசா?
அப்படியெல்லாம் சொல்ல முடியாது மேடம் பிறந்த தேதி வேணும்.
***
டாக்டர் என்ன நாய் கடித்து விட்டது எந்த இடத்தில?
பெருமாள் கோவில் சந்துல.
***
வீட்டு சாவி தொலஞ்சி போனா யார்கிட்ட கேக்கணும்?
“கீதா” கிட்ட தா கேக்கணும்.
***
ஏன்டா நாய் படம் வரைந்து விட்டு வாய் மட்டும வரையாமல் வச்சி இருக்க?
அது வாயில்லா பிராணி சார்.
***
பன்னுல தண்ணீர் போனா என்னாகும்?
“பன்னீர்” ஆகும்.
***
ஓரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்துச்சாம் ஏன்?
ஏன்னா அது எடுத்த படம் FLOP ஆயிடுச்சாம்.
***
கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?
கொசுவே இல்லாத காலம்.
***
எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு Word சொல்லுங்க?
Post Box.
***
ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது?
வெள்ளிக்கிழமை.
***