அத்தியாயம்-7
தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, “எந்த ரோன்னு பாரு” என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, “அப்பா.. இந்த ரோ” என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக மலர, அவளை காணாது, சலீம், வருண், அகில், நுழைந்துவிட்டு பிரசன்னா பிரதீப் என்று அமரவும், அவர்களுக்கு பின்னால் இருந்த சுஹாசினி, படம் போடும் சமயம் பேச்சை ஆரம்பித்து அறிமுகமாவதை தவிர்க்கும் விதமாக இருவரையும் கவனித்தாள்.
படம் போடவும் கவனம் ஸ்கிரினில் சென்றது. சுஹாசினியுமே அவளது தோழிகளோடு வந்ததால் பொறுமை காத்தாள்.
பிரதீப் அருகே பிரசன்னா விசிலடித்து படம் பார்த்து நண்பர்களோடு கமெண்ட் பாஸ் செய்ய, நடுநடுவே பிரசன்னா மகனை ரசனையாக பார்வையிட்டு பெருமிதம் கெண்டார்.
“இந்த ஹீரோயின் பெயர் என்னடா?” என்று மகனிடம் கேட்க, அவன் கூறியதும் “பெயரை நினைவு வச்சிக்கறது கஷ்டமா இருக்கே.” என்று அவர் அலுத்துக் கொள்ள, பிரசன்னாவோ “சிம்ரன் ஜோதிகா எல்லாம் இப்ப வரமுடியாது. அவங்களை தாண்டி பாருங்கப்பா” என்று அங்கலாய்த்தான்.
அப்பா மகன் பேச்சை கவனித்தபடி படத்தை பார்த்தாள் சுஹாசினி.
படத்தில் சாதாரண காட்சிகளை எல்லாம் தந்தை தோளில் சாய்ந்தபடி பார்வையிட்டான். கருத்து பரிமாற்றம் கிண்டல், கேலி என்று தந்தை மகன் விவாதிக்க, காதல் காட்சி, முத்தக்காட்சி, ரொமான்ஸ் என்றால் பிரதீப் மகனின் கண்களை மூட, அவனோ “ப்பா. 18+ னா நீ வீட்ல இருப்பா.” என்று சலித்தபடி வருண் பக்கம் சாய்ந்தான்.
இடைவெளி வரும் நேரம் வரை சுஹாசினி படத்தோடு தந்தை மகனின் நெருக்கமும் புரிதலும் சேட்டையுமாக கண்டாள்.
தியேட்டர் லைட் பளிச்சிட்டதும் ஆளாளுக்கு வெளியே செல்ல முனைந்தனர்
அதிலும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றவர்கள் முண்டியடித்து ஐஸ்கிரீம், பாப்கார்ன் வாங்க ஒடினார்.
“டேய் நான் போய் வாங்கறேன்” என்று எழுந்த பிரதீப்பை பிடித்த பிரசன்னா “ஒன்னும் வேண்டாம். அங்க போய் தனியா ஸ்மோக் பண்ண ஓடுவிங்க. நீங்க இங்க இருங்க. நான் என் பிரெண்ட்ஸ் கூட போயிட்டு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றோம்” என்று எழுந்தான்.
பிரசன்னா எழுந்ததும், “சுஹாசினி நீ வரலை?” என்ற பெண் குரலில், திரும்பியவன் கால்கள் தரையில் வேரூன்ற, “மச்சான் போடா.” என்று வருண் அகில் தள்ள முயன்றனர்.
அப்பொழுது தான் பார்ப்பது போல, போனிலிருந்து தலையை நிமிர்த்தி பிரசன்னாவை கண்டாள் சுஹாசினி.
தன் தோழிகளை கண்டு பப்ஸ் மட்டும் வாங்கு” என்று சொல்லிவிட்டு, பிரசன்னாவை கண்டு பிரதீப்பை காணவும், பிரதீப்பும் மகன் யாரை இப்படி காண்கின்றானென திரும்பியவர் பார்வையில், “அட சுஹா.. எப்படிம்மா இருக்க? வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று கேட்டார்.
சுஹாசினி அனிச்சையாக, “எல்லாரும் நல்லாயிருக்கோம் அங்கிள். நீங்க இங்க வருவிங்கன்னு எதிர்பார்க்கலை” என்று வார்த்தைக்கு வார்த்தை அங்கிள் என்று அழைத்தவாறு பேச்சை ஆரம்பித்தார்.
அதற்குள் பிரசன்னாவை அகில் வருண், சலீப் தள்ளிசென்று நடந்தனர்.
“யார்டா அந்த பொண்ணு?” என்று கேட்க, “பொண்ணு பார்க்க போனோமே அந்த பொண்ணு” என்றான் பிரசன்னா.
“அடப்பாவி பொண்ணு நல்லா தான்டா இருக்கா. ஒழுங்கு மரியாதையா இருந்திருந்தா இந்நேரம் பியான்சியா இருந்திருக்கும்.” என்று ஓட்டியபடி ரெஸ்ட்ரூம் சென்றனர்.
அதற்குள் ஸ்னாக்ஸ் விற்கும் பக்கம் கூட்டம் குறைந்திருக்க டோக்கன் பெற்று ஸ்னாக்ஸ் வாங்க வந்தனர். அந்த பொண்ணு பெயர் விவரம், அப்பாவிடம் பேசறா, மச்சி உனக்கு ஏதாவது பீலாகுது?’ போன்றதொரு கேள்வியோடு நண்பனை இம்சித்தனர்.
‘இங்கு வரும் முன் மெட்ரோவில், உங்களை விட்டுவிட்டு ரயிலில் ஏறியதே இந்த பெண்ணை பார்த்து பேசினேன்’ என்ற உண்மை சொன்னால் இதை விட அதிகமாக ஓட்டுவார்களென்று அமைதிக்காத்தான் பிரசன்னா.
இங்கே பிரதீப்போ, “பிரெண்ட்ஸோட வந்தியாம்மா. பையன் அவனோட நண்பர்கள் இருப்பதால் சாதாரணமா நலம் விசாரித்தேன்.
நிஜமாவே அப்பா அம்மா எப்படிடா இருக்காங்க? நீ எப்படியிருக்க? எங்க மேல கோபமா?” என்று கேட்டார்.
“சே சே இல்லை அங்கிள். அதெல்லாம் கோபமில்லை. அவர் செய்த கோளறுபடிக்கு நீங்க என்ன செய்விங்க.” என்றவள் தலைகுணிந்து, “அப்பாவிடம் பாலு அங்கிள் ஏன் அப்படி செய்தார்னு சொன்னார். உங்க மேல அவருக்கு இந்தளவு அன்பு செலுத்துவதை பார்த்தா சந்தோஷமா இருக்கு.
உங்களை மாப்பிள்ளை என்று அப்பா நினைச்சதில் அவர் தப்பும் இருக்கே. ஆனா அங்கிள்.. நீங்க பார்க்க இளமையா தான் இருக்கிங்க.” என்றாள்.
பிரதீப்பும் “தேங்க்ஸ் மா” என்றார்.
அதன்பின் “அம்மா தம்பி என்ன பேசினாங்க? நீ மனகஷ்டத்துல இருந்தியா. உன் மனசை அவன் யோசித்திருக்கணும்.
அப்பா மகள் அன்பா இந்நேரம்… ம்ம்ம் என்று ஆரம்பித்தவரால் “எல்லாம் சொதப்பிட்டான்” என்று மகனை கடிந்தபடி வருந்தினார்.
சுஹாசினி அமைதியாக தலைகவிழ, பதட்டமாய் பிரதீப் சட்டை பேண்ட் பேக்கெட்டில் கைகளை துழாவி, “அய்யோ போனை எங்கயோ மிஸ் பண்ணிட்டேனா?” என்று புலம்ப, “என்னாச்சு அங்கிள்.’ என்று வினவவும், “என் போனை காணோம். பிரசன்னா வச்சியிருக்கானானு கேட்கணும். அம்மாடி… கால் பண்ணி கேட்க முடியுமா?” என்று கேட்டதும், “சூர் அங்கிள்” என்று நம்பரை கூற கூறினாள்.
அவரும் நம்பரை கூற, பிரசன்னா போனை எடுத்தான்.
“அங்கிள் அவர் தான். கேளுங்க” என்று பிரதீப்பிடம் கொடுக்க, “பிரசன்னா… அப்பா போன் உன்கிட்ட இருக்காடா?” என்றார்.
“உங்க போனா?” என்று சட்டை பேக்கெட்டை தடவியவன், “ஆமாப்பா… பேண்ட் பேக்கெட்ல இருக்கு.’ என்று கூறவும், “சரி சரி உன்கிட்ட இருந்தா சரி” என்று அணைத்திட, “அவனிடம் தான் இருக்கு. இருட்டுல மிஸ் பண்ணிட்டேனோனு நினைச்சிட்டேன்.” என்றதும் சுஹாசினி தோழிகள் பப்ஸை கொண்டு வர, “அங்கிள் பப்ஸ் சாப்பிடறிங்களா” என்று நீட்டினாள்.
“அட பிரசன்னா வாங்கிட்டு வர போயிருக்கான்மா. நீ சாப்பிடு. ஆமா.. அப்பாவோட சொல்லிட்டு வந்தியா?” என்று கேட்க, “இல்லை அங்கிள்… இன்னிக்கு இவ பெர்த்டே அப்பாவிடம் சொல்லிட்டு வர மறந்துட்டேன். வீட்டுக்கு போய் தான் சொல்லணும்.
எப்படியும் அப்பாவிடம் ஷேர் பண்ணுவேன்.” என்றவள் தயக்கமாய், “அப்பாகிட்ட உங்களை பார்த்ததை சொல்லலாமா அங்கிள்” என்று கேட்டவளிடம் “அது உன்னிஷ்டம்டா. தியேட்டருக்கு வந்ததை நான் போட்டு தரமாட்டேன் அதே போல அப்பாவிடம் பேச எங்களுக்கு தயக்கமிருக்கு.” என்றார்.
தோழிகளுக்கு எந்தளவு பெண்பார்க்க சென்ற நிகழ்வை சொல்லி வைத்தாளோ என்று நறுக்கி தெரித்து பேச, அதற்குள் விளம்பரம் முடியப்போவதாக தோன்றியது. படம் போடும் நேரம் பிரசன்னா அவனது நண்பர்கள் வந்து சேர்ந்தபடி, தந்தையிடம் பப்ஸை நீட்டினான்.
படம் போடவும் பிரசன்னாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. தந்தை இல்லாமல் இருந்தால், இங்கேயும் சுஹாசினியிடம் பேசியிருப்பான். ஏன் அடிக்கடி கழுத்தை திருப்பி அவளை கண்டு அசடு வழிந்திருப்பான்.
அதெல்லாம் செய்ய இயலாமல், புத்தனின் மறுபிறவியாக இருந்தான்.
படம் முடியவும், சுஹாசினி பிரதீப்பிடம், “ஒகே அங்கிள் நாங்க கிளம்பறோம்” என்று நடையை கட்ட, “சரிம்மா.. பார்த்து பத்திரமா போங்க” என்றார்.
சுஹாசினியிடம் யாருடி அது? ஸ்னாக்ஸ் வாங்கவோ ரெஸ்ட்ரூமுக்கோ கூட வரலை.” என்று உலுக்க, “தெரிந்தவர்” என்று கூறிவிட்டாள்.
“அங்கிள்னு சொன்ன?” என்று கேட்க, அவர் பக்கத்துல இருந்தது அவரோட பையன்” என்று கேட்க, அச்சோ..” என்று அதிர்ந்தனர். நல்லவேளை நீ அங்கிள்னு கூப்பிட்டதும் எங்களுக்கு யாரு என்னனு நோண்டலை. அதோட சைட் அடிக்காம அமைதியா இருந்தோம்.” என்று சிரித்தனர்
சுஹாசினியோ அவள் கையில் போனை கண்டு இதற்கு முன் அழைத்த எண்ணை கவனித்தாள். அது பிரசன்னாவின் எண்ணாக இருக்க வேண்டும் என்று யூகித்திருந்தாள்.
பிரசன்னா தோழர்கள் ஏற்கனவே ரெஸ்ட்ரூமில் யார்டா அந்த பொண்ணு என்றதும் பொண்ணு பார்க்க போனோமே அவ தான் என்றதுமே பிரதீப் எதிரே எதுவும் பேசவில்லை.
பிரசன்னாவும் அமைதியாக நடமாட ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.
“ஏன்டா.. எலும்பை கடிக்காம போட்டுட்ட. இந்த பக்கம் கடிச்சி சாப்பிட்டா உள்ள இருந்து சாறு வரும்” என்று விளக்கவும் “அப்பா.. நான் ஒன்னும் குழந்தையில்லை. சாப்பிட தெரியும். நீங்க உங்களை கவனிங்கப்பா” என்றவன், தந்தை போனை அவரிடம் நீட்டினான்.
‘அவளும் அப்பாவும் நல்லா பேசிக்கிட்டாங்க. மெட்ரோவில் பார்த்து பேசியதை சொல்லியிருப்பாளா?’ என்று அவன் குழம்பினான்.
தந்தையிடம் தானாக கேட்டு, உளறக்கூடாதென யோசிக்க போனில் அவனுக்கு வந்த அழைப்பில் இருந்த எண்ணை கவனித்தான்.
நிச்சயம் இது சுஹாசினியின் எண்ணாக இருக்க வாய்ப்புண்டு என்று ட்ரூ காலரில் ஆராய, அவன் கணிப்பை பொய்யாக்காமல் அவள் பெயரில் காட்டியது.
மீண்டும் வந்தது போலவே மெட்ரோ ஏறுவதற்கு காத்திருக்க, பிரசன்னாவின் கண்கள் சுஹாசினியை தேடியது.
‘ஒழுங்கு மரியாதையா இந்நேரம் பொண்ணு பார்க்க போய் முடிவாகியிருந்தா, அப்பாவே கல்யாண தேதி முடிவு பண்ணி ஜாலியா பேசிட்டு இருந்திருப்பேன்’ என்றவனை மெட்ரோவில் தள்ளி ஏற்றிவிட்டார் பிரதீப்.
“ப்பா..” என்று சலித்து ஏறியதும், தந்தையின் “என்னடா.. டிரெயின் வந்துடுச்சு. ஏறாம இருந்த ஏத்திவிட்டேன்” என்றார்.
ஒரு நொடியில் தன் எண்ணத்தின் ஊர்வலத்தை கலைத்ததும் கோபம் வருகின்றதே, இத்தனை காலமாக தந்தைக்கு யார் மீதும் ஆசை பிறக்கவில்லையா? என்று ஆச்சரியமானான்.
நண்பர்கள் அவரவர் கழண்டுக் கொண்டப்பின், வீட்டுக்கு வந்ததும், “அப்பா… எப்படிப்பா.. இத்தனை நாள் பேட்சுலரா உன் ஆசையை எல்லாம் ஏறக்கட்டி என்னை வளர்த்த?
ஒருமுறை கூட கல்யாணம் செய்து வாழணும், இந்த பையன் வேற நம்ம லைப்ல இடைஞ்சலா வந்துட்டானேனு பீல் பண்ணலை.” என்று கேட்டான் பிரசன்னா.
“ரொம்ப ரொம்ப பீல் பண்ணினேன்டா. கல்பனா இறந்ததும், நானும் தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைச்சப்ப, என்னை சாக விடாம நீ பாலுக்கு அழுதியே பச்.. அப்ப உன்னை என் சாவுக்கு இடைஞ்சலா நினைச்சி பீல் பண்ணினேன்டா.” என்று கூறவும் பிரசன்னா “அப்பா” என்றிட, “ஆமாடா… என் இறப்பை தள்ளிப்போட்டவன் நீ. உன்னை வளர்க்கற ப்ராஸஸ்ல கல்யாணம் என்ற எண்ணம் வந்ததில்லை. உன் அம்மாவா நான் கல்பனாவை பார்த்துட்டேன்.
யாராவது கேட்டா என்மனைவி கல்பனா. பையன் பிறந்தப்ப இறந்துட்டா’ அவ்ளோ தான் பதில்” என்று தாடை தட்டிச் சென்றார்.
அங்கும் இங்கும் நடந்து சென்றவன் தந்தைக்காக அவரது பயோடெட்டாவில் பதிவேற்றியதில் உள்ள பக்கத்தை ஆராய, அதில் இரண்டு மூன்று பெண்கள் மணக்க சம்மதித்து நம்பரை பகிர்ந்திருக்க, தந்தையிடம் காட்ட ஓடினான்.
“அப்பா.. இந்த பொண்ணு நம்பர் கொடுத்திருக்கு. பொண்ணு பார்க்க நாளைக்கு போகலாமா?” என்று கேட்டதும், பிரதீப் மகனை கண்டு, “என்னடா நினைச்சிட்டு இருக்க? இந்த வயசுல எனக்கு கல்யாணம்னா எல்லாரும் சிரிப்பாங்க.” என்று மறுக்க, “நீ கல்யாணம் பண்ணலை
ன்னா, நானும் கல்யாணம் பண்ண மாட்டேன்ப்பா” என்று பிளாக்மெயில் செய்தவனாக நின்றான்.
-தொடரும்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 evanga paasatha parthu kannu verkudhupa😭 eppdiyum suha dhan evanuku pair o parpom 🧐🤔
Wow super dad son combo excellent sis. Very affectionate and friendly father. Very intresting sis
கரை தந்த கடலே…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 7)
ஐய்… இப்ப தெரிஞ்சுப் போச்சு, சுஹாசினி இனி பிரசன்னாவுக்குன்னு. ஆனா, இந்த பிரதீப்போட ஜோடித் தான் யாருன்னு தெரியலை.
இவரு வேற இன்னும் சின்னப் பையன் மாதிரி கல்யாணம் வேணாம், வேணாம்ன்னு சொன்னதையே சொல்லிட்டிருக்காரு, பேசாமல் அவரை இழுத்து வைச்சு மணையில உட்கார வைக்கணும் போலயிருக்கே.
அப்பத்தான் அவரோட ஜோடி யாருன்னு சீக்கிரமா தெரிய வரும் போல. ஹ..ஹ..ஹ..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Enga suhasini maranthatangali ninacha paravilla prasanna ku nu iruku pola appa ku ponnu enga iruko
அருமையான மகன் தந்தை செம
👌👌👌👌