தீரா காதலே – 16
அலுவலகத்திற்கு செல்லும் நேரமாதலால் காலை நேர பரபரப்புடன் சாலையெங்கும் அனைவரும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்க ஆதினி வீட்டை கடந்து சாலையில் நடந்து கொண்டிருந்தாள். கடந்து சென்ற ஆட்டோ அனைத்தும் ஆட்களை நிரப்பி வந்ததால் போகும் வழியில் ஏறிக்கொள்ளலாமென்று நடந்து சென்று கொண்டிருந்தாள்.
மேனியெங்கும் பதற்றமும் பயமும் விரவி நடையை தடை செய்ய முயல அதை தடுத்து முன்னேறி கொண்டிருந்தாள். இருப்பினும் வந்த திருப்பத்தில் நிலைதடுமாறி, திரும்ப முயன்ற மகிழுந்தில் விழுவது போல வரவும் உடனடியாக மகிழுந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களை கண்டு ஆசுவாசமும் அதிர்ச்சியும் சமமாக முகத்தில் பரவியது.
“பார்த்து வர கூடாதாமா? மோதி இருந்தா என்னாகும்?” என்று கடிந்து பேசியவள் அன்பினி.
பிரியதர்ஷனையும் நிகிலையும் பார்த்து தான் அதிர்ந்து போனாள்.
“சாரி மேடம். மேடம் அது வந்து… எனக்கு ஒரு ஹெல்ப்… பண்றீங்களா? நான் உடனே… என் ஹஸ்பெண்ட்ட… பாக்கனும்” என்று பதறிய குரலில் மூச்சு வாங்க பேசினாள். அன்பினி இவர்கள் இருவரையும் பார்க்க
“இவங்க மிஸஸ் தீரா. தீபக் வீட்டுக்கு மேல்மாடியில் இவங்க குடியிருக்காங்க” என்று நிகில் சொன்னான்.
அவளை மகிழுந்தில் அமர வைத்தவள் தண்ணீர் பருக வைத்து
“இப்ப சொல்லுங்க என்ன பிராப்ளம்? என்ன நடந்தது?” அன்பினி
இன்னும் தயக்கத்தோடு பிரியதர்ஷனை ஏறெடுத்து பார்க்க
“மடியில் கனம் இல்லைனா பயம் தேவையே இல்லை. எதுக்காக என்னை பார்த்ததிலிருந்து இப்படி பிகேவ் பண்றீங்க மிஸஸ் தீரா” என்று கடுமையாக கேட்க
“அது… எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு பேமிலி இருந்தாங்க… அந்த அக்காவோட ஹஸ்பெண்ட் நல்லா குடிப்பாரு… வீட்டுக்கும் எதுவும் கொடுக்கமாட்டாரு… அடிப்பாரு. பக்கத்தில் உள்ளவங்க உங்ககிட்ட கம்ப்ளைண்ட் பண்ணதுல அந்த மனுஷன தெருவில் வைத்து அடித்து இழுத்துட்டு போய் ஸ்டேஷன்ல ரெண்டு நாள் வச்சிட்டு தான் அனுப்புனீங்க அந்த அவமானம் தாங்காம அதுக்கு அப்புறம் அவங்க இங்க இல்லை வேறு இடத்திற்கு ஷிப்ட் ஆகிட்டாங்க… அதுல இருந்து உங்களை பார்த்தால் கொஞ்சம் பயம்” என்று ஆதினி சொல்லிட புரியாத பாவனை பார்த்தார்கள் மூவரும்.
“மேடம் ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போங்க நான் விவரமாக சொல்றேன்” என்று வேண்டினாள்.
ஆதினியையும் அமர வைத்து மகிழுந்து கிளம்ப மெல்ல ஆரம்பத்திலிருந்து தற்போது பேசிய அலைபேசி அழைப்பு வரைக்கும் சொல்லியவள் தன் கணவன் முன்தினம் வீட்டிற்கும் வரவில்லை அதோடு தன் நண்பனிடம் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லியதாகவும் சொல்லியவள்
“இந்த பிராப்ளம்ஸ்ல இருந்து எங்களை எப்படியாது மீட்டு கொடுங்க மேடம். பிளீஸ்” என்றவளின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்த அன்பினி
“தைரியமா இருங்க. நல்லதே நடக்கும். அதேசமயம் எங்களுக்கு நீங்க கோஆப்ரேட் பண்ணா மட்டும் தான் இதிலிருந்து மீளமுடியும்” என்று உரைத்தாள்.
அரைமணி நேரம் கடந்த நிலையில் தீராவின் அலுவலகம் வர ஆதினி இறங்கி முடிந்தளவு வேகமாக நடந்து தீரா இருக்கும் இடத்திற்கு செல்ல பின்னோடு அன்பினி மட்டும் வந்தாள். ஆதினியை கண்டதும் அதிர்ந்தவன்
“ஹேய் இங்க என்ன பண்ற? உன்னை யார் இங்கு வர சொன்னது?”என்று அருகில் வந்து வினவினான் தீரா.
“எனக்கு பிராமிஸ் பண்ணுங்க தீரா எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவு எடுக்க மாட்டீங்கனு சத்தியம் பண்ணுங்க” என்று உரைத்தவளின் கண்களில் விடாமல் வழிந்தது விழிநீர்.
அவளின் அருகில் அன்பினியும் நிற்க தயங்கினாலும் “உன்னை விட்டு எப்போதும் எங்கேயும் போகமாட்டேன். போதுமா? வீட்டுக்கு போ ஈவ்னிங் வரேன்” என்று உரைத்தான்.
“நோ மிஸ்டர் தீரா. உங்கள் கிட்ட கொஞ்சம் என்கொயரி பண்ண வேண்டியிருக்கு நீங்களும் கிளம்புங்க”
“மேடம்?” கேள்வியாக நோக்க
“மிஸஸ் தீபக்க என்கொயரி பண்ண வந்த சமயத்தில் தான் உங்கள் மனைவி சில விஷயங்களை எங்களிடம் பகிர்ந்துகிட்டாங்க. உங்கள் மொபைலை கொடுங்க பஸ்ட்” என்று அவனது அலைபேசியை வாங்கி கொண்டவள் அவனை வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு ஆதினியை அழைத்து கொண்டு சென்றாள்.
அரைமணி நேரம் பயணத்திற்கு பின் மெர்ஸியின் வீட்டில் அனைவரும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி அனைத்தையும் பதிவு செய்து முடித்துவிட்டு அவர்களின் அலைபேசிகளை வாங்கி கொண்டு நம்பிக்கை அளித்து சென்றனர். இதைப்போன்று மோகன்ராஜ் வீட்டிற்கும் சென்று அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டனர்.
சிறப்பு தனிப்படை குழுவினரின் தீவிர முயற்சிக்கு பலனாக ஏழு நாட்கள் கழித்து போலி ஆப் செயலிகள் மூலம் மோசடி செய்த முக்கிய கும்பல்களை அவர்களின் இடத்தை கண்டறிந்து கைது செய்து கூட்டி வந்து விசாரணை நடத்த அனுமதி வாங்கி விசாரணை அறையில் வைத்திருந்தனர்.
பிரியதர்ஷனும் நிகிலும் விசாரணை அறையில் ஏழு பேரிடம் விசாரித்து கொண்டிருந்தனர். அவர்கள் பதிலுரைக்காமல் ஏனோதானோ என்று அமர்ந்து கொண்டு அமைதியாக இருந்தனர். அதில் ஒரு இளம்பெண்ணும் இருந்நாள். அங்கு வந்த ஆன்பினி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் நெற்றியில் வைத்து
“கேட்கிற கேள்விகளுக்கு ஒழுங்கா உண்மையா பதில் சொன்னீங்கன்னா நல்லது இல்லைனா கோஆப்ரேட் பண்ணாம தப்பிக்க முயற்சி செய்தீங்கனு..” என்று துப்பாக்கியை வைத்து அழுத்தம் கொடுக்க அருகில் அமர்ந்தவன்
“நான் எல்லாவற்றையும் சொல்றேன் மேடம் பிளிஸ் துப்பாக்கியை எடுங்க” என்று கெஞ்சினான். பிரியதர்ஷனும் அன்பினியும் மாறி மாறி கேள்வி கேட்டார்கள். நிகில் அவர்களின் விசாரணையை வீடியோ பதிவாக பதிவு செய்தான்.
“எப்படி மக்களை உங்கள் வலையில் விழ வைக்றீங்க?”
“முதலில் அவங்களோட ஆசையை தூண்டுவோம். பொதுவா பேங்க் அல்லது ஒரு ஆளுகிட்ட போய் பணம் கேட்டோம்னா அவங்க நம்மகிட்ட அடமானம் வைக்க ஏதாவது பொருள் நகை அல்லது சொத்துனு ஏதாவது டாக்குமெண்ட்ஸ் கேப்பாங்க ஆனால் நாங்க அப்படி எதுவுமே கேட்க மாட்டோம்“
“அப்புறம் நீங்க மட்டும் எப்படி லோன் கொடுக்கிறீங்க?
“அவங்க அக்செப்ட் பண்ண அடுத்த நிமிடம் அந்த போனில் உள்ள போன் நம்பர்ஸ், போட்டோஸ், ஈ-மெயில் ஐடி, பேஸ்புக் ஐடி, பேங்க் டீடெய்ல்ஸ், சேலரி டீடெய்ல்ஸ், கிரெடிட் கார்டு நம்பர், டெபிட் கார்டு நம்பர், பான் கார்டு நம்பர், ஆதார் நம்பர்னு இப்படி எல்லாமே எங்கள் கண்ட்ரோலுக்கு அவங்களுக்கே தெரியாம அடமானம் வைக்றாங்க. அதனால் நாங்க தாராளமா லோன் கொடுக்கிறோம்”
“ஓ அப்படியா? இந்த ஆப்களுக்குனு ரூல்ஸ் இருக்குமே அதை பார்த்துமா அக்செப்ட் பண்றாங்க?”
“நேரில் தான் கடன் வாங்கும் போது இந்த இந்த ரூல்ஸ் இந்த டேட்ல கட்டனும் இவ்வளவு கட்டனும்னு சொல்வாங்க அந்த ரூல்ஸ் நமக்கு ஓகேனா மட்டும்தான் நாம கடனே வாங்குவோம். ஆனால் லோன் ஆப்-இல் நீங்கள் ‘I Agree’ னு கொடுத்தால் தான் ஆக்சஸ் ஆகும் சோ எங்களோட எல்லா ரூல்ஸையுமே அவங்க அக்செப்ட் பண்றதா சொல்லி தான் உள் நுழையுறாங்க“
“இது தவறுனு உங்களுக்கு தோணலையா?”
“இல்லை இந்த உலகத்தில் பணத்துக்கு தான் வேல்யூ அதிகம். எல்லாருக்குமே ஏதோவொரு தேவைக்கு பணம் தேவைபடுது. அதனால் தான் எங்கள தேடி வராங்க அப்படி இருக்கும் போது எங்க மேல என்ன தவறு இருக்க முடியும்?“
“யார் உங்களை தேடிவராங்க?அப்போ நீங்களா எந்த முயற்சியும் செய்றது இல்லைனு சொல்றீங்களா?”
“அது… அது வந்து..”
“சொல்லுங்க எந்த விளம்பரமும் நீங்க பண்றது இல்லையா? மெஸஜெஸ் அனுப்புறது இல்லையா? எப்படி உங்களுக்கு இவங்களோட மொபைல் நம்பர் கிடைக்கிது?” என்று அன்பினி சினத்துடன் எழுந்து நின்று சத்தமாக வினவினாள்.
“சொல்றேன் மேடம். இவங்க யாரும் எங்களுக்கு நேரடி பரிச்சயம் கிடையாது. ஏதொவொரு வகையில் இவங்க ப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேட்டீவ்ஸ் லோன் பத்தி பேசினாலோ சர்ச் பண்ணாலோ எங்களுக்கு நோட்டிபிகேஷன் ஆகும் அந்த நேரத்தில் அவங்க பேஸ்புக் இன்ஸ்டா ட்விட்டர்ல எங்களோட விளம்பரத்தை தெரியும்படியா போடுவோம்“
“சோ இது டிஜிட்டல் பிளானிங் தான். ரைட்?”
“ஒரு வகையில் உண்மை தான். இண்டர்நெட்னாலே மக்களை கண்காணிக்கிறதும் அதிலிருந்து கிடைக்கும் டீடெய்ல்ஸ் வைத்து லாபம் ஈட்ரதும் தான் மேடம்“
“ம்ம்ம் நம்ம போன்ல இண்டர்நெட்ல இருக்குனா நாம மட்டும் உலகத்தை பார்க்கிறதா அர்த்தம் கிடையாதே அதே உலகமும் நம்மை பார்த்து கொண்டு தானே இருக்கு. வெல். இந்த மெஸஜெஸ் விளம்பரம் எல்லாம் யாரையெல்லாம் குறி வைத்து அனுப்புறீங்க?” அன்பினி
“யார்னு எல்லாம் நாங்க பாக்கிறது கிடையாது மேடம். படிக்காதவங்க படிச்சவங்க பணக்காரங்க ஏழைங்க சினிமாகாரங்க டாக்டர் வக்கீலு காலேஜ் படிக்கிற பசங்க பொண்ணுங்கனு எல்லாருமே வந்து விழுராங்க. இவங்க எல்லாருக்குமே ஏதொவொரு சூழ்நிலைல ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை நடத்தியே ஆகனும்னு அவசரம். அந்த அவசர அவசியத்தை நாங்க ஆசை வார்த்தை சொல்லி கொஞ்சம் திரி ஏத்தி விட்டா போதும் ஏமாந்துடுவாங்க“
“ஓ ஓகே. ஒரு கஸ்டமர்க்கு எவ்வளவு லோன் கொடுப்பீங்க?”
“ஸ்டார்ட்டிங்ல ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்போம் அதுல முதல் வட்டி பிடித்தம் போக மூவாயிரத்து ஐநூறு தான் கஸ்டமர்க்கு அக்கௌன்ட்ல போட்டுவிடுவோம்.”
“பேமெண்ட் எப்படி வாங்குவீங்க?”
“அதை ஒரு வாரத்தில் வட்டியோடு சேர்த்து ஆறாயிரம் அவங்க ரிட்டர்ன் பண்ணியாகனும் மேடம் அதுதான் ரூல்ஸ் இல்லைனா பிரச்சினை தான்“
“என்ன பிரச்சனை பண்வீங்க?”
“அது..”
“சொல்லுங்க அப்படி என்ன எல்லாம் பிரச்சினை பண்வீங்க?”
“அது வந்து மேடம்… கஸ்டமர் ஆப் ஓபன் பண்ணதும் ஆதார் டீடெய்ல் கேலரி மொபைல் நம்பர் எல்லாம் எங்க ஆக்ஸஸ் கண்ட்ரோல்க்கு வந்திடும். சோ அதுல யார் நம்பர்ஸ்க்கு அதிகம் கால் பண்ணி இருகாங்களோ அவங்கள காண்டெக்ட் பண்ணி இந்த கஸ்டமர் பத்தி தப்பா…பேசுவோம். கடன் வாங்கிட்டு கட்டாம ஏமாத்திட்டு ஓடிட்டான் பிராடு இது போல பேசுவோம்“
“நீங்க ஏழு பேர் மட்டுமா?”
“இல்லை மேடம் இதுக்குனு பிரைவேட் ஏஜென்சி இருக்கு அவங்களை காண்டெக்ட் பண்வோம். அவங்க கால்செண்டர் போல சில ஒர்க்கர்ஸ வைத்து எங்களுக்கு பண்ணி தருவாங்க”
“பிரைவேட் ஏஜென்சியா ?”
“ஆமா ஆனால் முறையான அரசாங்க அனுமதி பெற்ற நிறுவனம் கிடையாது இதுவும் போலிதான்”
“ம்ம்ம் ஓகே. கால் பண்ணி பேசுறதோட விட்ருவீங்களா?”
“அதுக்கு அப்புறமும் கஸ்டமர் பணம் பேமண்ட் பண்ணலைனா அவங்க போட்டோஸ் எடுத்து மார்பிங் பண்ணி அனுப்புவோம். லேடீஸா இருந்தா வேறு ஆணோட நெருக்கமாக இருக்க போலவும் ஆம்பளயா இருந்தா வேறு பொண்ணோட இருக்க போலவும் மார்பிங் பண்ணி அவங்க காண்டெக்ட் லிஸ்ட்டில் யாருக்காது அனுப்புவோம்“
சொல்லி முடித்ததும் அந்த குற்றவாளியின் கன்னங்களிரண்டும் அன்பினியின் கைகளின் உபயத்தால் கன்றி சிவந்தன.
“இதோ உன் கூட்டாளியும் ஒரு பெண்தானே அவளை இப்படி செய்ய அனுமதிப்பியாடா?” என்று மீண்டும் ஒரு அடி கன்னத்தில் விழுந்தது.
“மேடம் அவள் என் தங்கை அப்படி பேசாதீங்க”
“உன் தங்கைனா ஒரு நியாயம் அடுத்த வீட்டு பெண் என்றால் ஒரு நியாயமா?”
“……….”
“ம்ம் மேலே சொல்லு இன்னும் வேறு என்ன டார்ச்சர் பண்வீங்க?”
“அதுக்கு அப்புறமும் பேமெண்ட் பண்ணலைனா கஸ்டமர் போட்டோவை மார்பிங் செய்த வீடியோவா அனுப்புவோம். இண்டர்நெட்ல நிர்வாண போட்டோ போடுவோம்னு மிரட்டுவோம்“
“ராஸ்கல்ஸ். இந்த ஆப் எல்லாம் எப்படிடா கிரியேட் பண்றீங்க?”
“இந்த ஆப் டிசைன் பண்றதுக்காகவே ஒரு சாப்ட்வேர் குழுவை நியமிச்சி வைத்திருக்கோம். அவங்க எங்களுக்கு கிரியேட் பண்ணி தருவாங்க”
“ஆனால் எப்படி இல்லீகல் ஆப்னு தெரியாத மாதிரி பண்றீங்க?”
“போலியா ரிசர்வ் பேங்க் லோகோ அல்லது அதர் பேங்க் லோகோவை லீகல் ஆப்ல இருக்கிற மாதிரி டிசைன் பண்ணிப்போம் மேடம்“
“ஒரு தடவை ஒரு ஆப் மட்டும் தான் கிரியேட் பண்வீங்களா?”
“இல்லை சில நேரங்களில் எங்க ஆப் போலியானதுனு கூகுள் நிறுவனம் கண்டுபிடிச்சிட்டாங்கனா பிளாக் பண்ணிடுவாங்க. சோ எங்களுக்கு எப்பல்லாம் தேவைப்படுதோ எத்தனை ஆப் வேண்டும் என்று கேட்டாலும் கிரியேட் பண்ணி தருவாங்க.”
“ஓகே. ஒரு கஸ்டமர் ஒரு ஆப் டவுன்லோட் பண்றாங்க லோன் கொடுக்கிறீங்க. சரியா பேமண்ட் பண்றது இல்லைனு தெரிஞ்சிம் அவங்களே மறுபடியும் வேறு ஆப்ல லோன் கேட்டா எப்படி கொடுக்கிறீங்க?”
“அந்த மாதிரி அடுத்தடுத்த லோன் ஆப் டவுன்லோட் பண்ணி லோன் வாங்கி பழைய ஆப் கடனை அடைக்க வழி சொல்றதே நாங்க தான். கஸ்டமரை யோசிக்க விடாமல் நெருக்கடி கொடுத்தாதான் எங்களால் பணம் சம்பாதிக்க முடியும். சோ இந்த ஆப்ல பேமண்ட் பண்ண முடியவில்லையா அடுத்த ஆப்ல எடுத்து பேமண்ட் பண்ணுங்கனு ரெகமண்ட் பண்வோம். வேறு வழியில்லாமல் பண்வாங்க“
“ஒரு நாளைக்கு எத்தனை பேர் லோன் கேப்பாங்க? ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் உங்களுக்கு டிரான்ஸர் ஆகும்?”
“எத்தனை பேர்னுல்லாம் கணக்கு கிடையாது மேடம். அவங்க அவங்க தேவையை பொறுத்து ஆசைகளை பொறுத்து எங்களை தேடிவருவாங்க. ஒரு நாளைக்கு இதுவரை ஒரு கோடி வரைக்கும் எக்ஸ்சேன்ஞ் ஆகியிருக்கு மேடம்”
“எவ்வளவு நூதனமான டிஜிட்டல் ராபரி பண்றீங்க” என்ற அன்பினி
“ஓகே பட் அவன் மட்டும் ஏன் சைனீஸ் மாதிரி இருக்கான்?” என்று வினவினாள்.
ஒருவரையொருவர் திரும்பி பார்த்து கொண்டவர்கள்
“அவர் சைனீஸ் தான்”
“அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?”
“அது… அவர் தான் எங்களுக்கு பாஸ்”
“அவன் உங்களுக்கு பாஸா? எப்படி ? எதுக்காக இப்படி நம்ம நாட்டில் இந்த மாதிரி ஒரு வேலையை செய்ய நினைக்கிறான்?”
“அது எங்களுக்கு தெரியாது மேடம். இந்த மாதிரி வேலை இருக்குனு கூப்பிட்டாங்க நாங்கள் சேந்துகிட்டோம்”
சீன மொழி தெரிந்த ஆபிஸர் ஒருவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவங்க சீன மொழியில் பேச நாம தமிழில் பார்ப்போம்.
“எதுக்காக எங்க நாட்டில் இப்படியொரு மோசடி வேலையை நடந்துறீங்க?”
“கடந்த சில வருடங்களுக்கு முன் எங்க நாட்டு செயலிகள் எல்லாவற்றையும் நீங்க உங்க நாட்டில் தடை செய்தீங்க. அதனால் எங்க நாடு(சீனா) நிறைய பொருளாதார அடி வாங்கிச்சி. அதுக்காக தான் நாங்கள் அனுபவித்த பொருளாதார சீரழிவை உங்க நாடும் அனுபவிக்கனும்னு இப்படி ஒரு சைபர் வார் எங்களை மாதிரி ஆட்களால் நடத்த அனுப்பப்படுறாங்க“
“தடைசெய்யப்பட்ட காரணமே மொபைல் போன் யூஸர்கிட்ட இருந்து அவங்களுக்கே தெரியாம அவங்க தகவல்களை உங்கள் சர்வரில் நீங்க சேவ் பண்ணி வைத்தது தான். இது எங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லைனு தான் நாங்க தடை செய்தோம்“
“இப்பவும் உங்கள் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை தான். அவங்களா தான் பணத்துக்காக எங்களை தேடி வந்து அவங்க தகவல்களை எங்களிடம் அடகு வைக்றாங்க. நாங்க கேட்கும் பணம் தரவில்லை என்றால் அவர்களின் கதி என்ன ஆகும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு“
“எவ்வளவு திமிர்? எம்மக்களுக்கு போதிய விழிப்புணர்வு கொடுத்து நாங்கள் உங்களை தேடி வராமல் செய்கிறோம்”
“முடிந்தால் செய்து பார்”
அத்துடன் விசாரணை நிறைவும் பெற்றது. மூவரும் வெளியே வந்து அலவலக அறையில் அமர்ந்து பேசினார்கள்.
“பாத்தீங்களா மேடம் எவ்வளவு திமிரா பேசுரான் ” நிகில்
“எஸ் இனி நாம செய்ய வேண்டியது அவர்னெஸ். எல்லாருக்கும் தெரிய வைக்க வேண்டியது” அன்பினி
“ஆமா மேடம். ரிசர்வ் பேங்க்ல பேச போனீங்களே நிகில் என்ன சொன்னாங்க” பிரியதர்ஷன்
“அவங்க நாளைக்கு டீவி சேனல்ல டீடெய்ல் சொல்றதா சோன்னாங்க சார்”
“என்ன டீடெய்ல்ஸ்னு நீங்க கலெக்ட் பண்ணலயா நிகில்?”
“அவங்க பேசினதை ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன் சார்” நிகில்
“குட்”
மறுநாள் காலையில்
ரிசர்வ் வங்கியிலிருந்து வந்திருந்த தகவல்கள் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகின.
*குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்.
*ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி , மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல்.
*கடனை வசூலிக்க ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளை பின்பற்றுகிறது.
*எங்கள் வங்கியின் லோகோவை போன்று போலியான லோகோவை உபயோகிக்கிறார்கள்.
*பொதுமக்கள் லோன் ஆப் மூலம் கடன் பெறும் போது சட்டத்திற்கு உட்பட்டதா என்று ஆராய்ந்து கடன் பெற வேண்டும்.
தீரா தேடலுடன்…
Eppadi lam emathuranga makkala ena lam panranga mobile niraya use irunthum ippadi theve illathathu iruku nama pathu crt ah use pannanum
அய்யோடா..! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா…?
அய்யோ இதுல இவ்வளவு பிரச்சனை இரேக்கா
இவ்வளவு பிரச்சனை இருக்கா
Nice epi