என்ன ரஞ்சனி இது அத்தை மாமாவை எடுத்து எறிஞ்சு பேசிட்டு வீட்டை விட்டு கிளம்பி வந்து இருக்க என்ற மோகன் இடம் வேற என்னப்பா பண்ண சொல்றீங்க ஒரு குடிகாரனோட என்னால வாழ முடியாது என்ற ரஞ்சனியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மோகன்.
அப்பா என்று அதிர்ந்தவளிடம் என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல முதல்ல இப்படித்தான் ஒருத்தனை காதலிக்கிறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தே. சரி என்று நான் அவன் கூட கல்யாணம் பேசி நிச்சயதார்த்தம் வரைக்கும் போனதுக்கப்புறம் அவன் எனக்கு வேண்டாம் என்று சொன்ன. சரி ஓகே என் மகளோட விருப்பம் முக்கியம்னு சொல்லி நானும் அந்த கல்யாணத்தை நிப்பாட்டிட்டு உன்னுடைய சமமதம் வாங்கி தானே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். இப்போ அவன் குடிக்கிறான்னு சொல்லிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டு வந்திருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல சித்தார்த் யாராவோ இருந்தால் கூட பரவாயில்ல என் அக்காவோட பையன் அவனை எப்படி நீ தூக்கி போட்டுட்டு வரலாம் என்றார் மோகன் .
என்னப்பா பேசுறீங்க அதுக்காக ஒரு குடிகாரன் கூட என்னை வாழ சொல்றீங்களா என்றாள் ரஞ்சனி. என்ன குடிகாரன் அவனுக்கு காதல் தோல்வி அதனால குடிச்சிட்டு இருக்கான் அவனோட மனசு புரிஞ்சுகிட்ட நீதான் அனுசரிச்சு போய் அவன் கூட குடும்பம் நடத்தணும். அதை செய்யாமல் அவனை வேண்டாம் என்று சொல்லி தூக்கி போட்டுட்டு வர அவன் வேண்டாம் என்று கல்யாணத்துக்கு முன்னாடியே நீ சொல்லி இருந்தால் இந்த கல்யாணமே நான் நடத்தி வச்சிருக்க மாட்டேனே என்றார் மோகன்.
நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை நல்லவன்னு நினைச்சு தான் பா கழுத்தை நீட்டினேன். தப்பான ஒருத்தன் கூட என்னால வாழ முடியாது என்றாள் ரஞ்சனி.
புருஷனோட வாழாமல் வாழா வெட்டியா இந்த வீட்டுக்கு வந்த உன்ன சேர்த்துக்கறதுக்கு எனக்கு மனசு இல்லை தயவு செஞ்சு என் வீட்டை விட்டு வெளியில போயிரு என்றார் மோகன். அப்பா என்ற ரஞ்சனியிடம் உன் அப்பா அம்மா அது எல்லாம் உன் கழுத்துல சித்தார்த் கட்டுன தாலி ஏறுவதுக்கு முன்னாடி இப்போ உனக்கு நான் அப்பா கிடையாது .அதனால நீ தாராளமா கிளம்பலாம் ஒன்று உன் புருஷன் வீட்டுக்கு போய் வாழணும் அப்படின்னு நினைச்சால் சொல்லு என் கூடவா நானே போய் அக்கா மாமா கிட்ட பேசி சமாதானப்படுத்தி உன்ன அங்கே விட்டுட்டு வரேன் அப்படி இல்லையா நீ இந்த வீட்ல இருக்க வேண்டாம் என்றார் மோகன்.
என்ன அப்பா நீங்க நான் உங்கள் பொண்ணு என்னை ஒரு குடிகாரன் கூட போய் வாழ சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்ற ரஞ்சனியிடம் இதோ பாரு ரஞ்சனி வாழ்க்கை, கல்யாணம்ங்கறது என்ன விளையாட்டா முதல்ல ஒருத்தனை புடிச்சிருக்குன்னு சொன்ன அப்பறம் அவனை வேண்டாம்ன்னு சொன்ன இப்ப ஒருத்தனை கல்யாணம் பண்ணி வச்சா அவன் கூட வாழ மாட்டேன்னு சொன்னா அப்ப நீ யார் கூட தான் வாழ்வ என்னதான் உன் கணக்கு என்றார் மோகன்.
அப்பா தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க என்ற ரஞ்சனியிடம் நீதான்மா என்னை புரிஞ்சுக்கணும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க அப்பா நிறைய செலவு பண்ணி இருக்கேன் . என்கிட்ட இருந்த மொத்தத்தையும் கொட்டி செலவு பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு என் அக்கா வீட்டுக்கு அனுப்பி வச்சா நீ வாழாமல் இப்படி வந்து வீட்டில் இருக்கிறது எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற எப்பவுமே உன்னோட சுயநலத்தை மட்டும் தான் நீ யோசிப்பியா பெத்தவங்கள பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா என்றார் மோகன்.
அப்பா என்று அவள் மேலும் ஏதோ சொல்ல வர இதோ பாரு ரஞ்சனி உனக்கு ரெண்டே ஆப்சன் தான் ஒன்னு சித்தார்த் கூட போய் வாழு அப்படி இல்லையா இந்த வீட்டை விட்டு வெளியில போ என்றார் மோகன் . அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை தன்னை பெற்ற தந்தையே இப்படி சொல்கிறார் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சிறுவயதில் இருந்து அவள் என்ன செய்தாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்காத அவரது தந்தை முதன் முதலில் தன்னை அடித்திருக்கிறார். வீட்டை விட்டு விரட்ட பார்க்கிறார் என்ன நடக்குது இங்க என்று குழம்பிப் போனால் ரஞ்சனி அவள் மனம் வேதனையில் துடித்தது.
இப்பவாச்சும் உனக்கு சம்மதமா சந்தியா என்ற சந்திரனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக நின்று இருந்தார் சந்தியா.
அன்னைக்கு செக்யூரிட்டி என்று அவனை வேண்டாம் என்று ஒதுக்கிய சந்தியா இன்று கவர்மெண்ட் வேலை பார்க்கிறான் என்றதும் மகளை கல்யாணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்தால் கணவர் தன்னை கேவலமாக நினைத்து விடுவாரோ என்று தயங்கினார். ஆனாலும் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையப் போகிறது என்ற நிம்மதியுடன் சம்மதம் தாங்க என்றார் சந்தியா.
லட்சுமி நீ என்னம்மா சொல்லுற என்ற சந்திரனிடம் உங்க விருப்பம் எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம் தான் அப்பா என்றாள் மகாலட்சுமி. அப்பா ஆனால் அவர்கிட்ட நான் கொஞ்சம் பேசணுமே என்ற மகாலட்சுமி இடம் கார்த்திகேயனின் மொபைல் எண்ணை கொடுத்த சந்திரன் போய் பேசும்மா என்றார். சரிங்கப்பா என்றவள் அவனது மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு தன்னறைக்கு சென்று விட்டாள். இவள் என்னங்க பேச போகிறாள் இவள் முன்னாடி ஒரு பையனை காதலிச்சதை பத்தி சொல்லி இந்த கல்யாணத்தை எதுவும் கெடுத்து விட்டுவிடுவாளா என்று பயந்தார் சந்தியா. நம்ம லட்சுமிக்கு ஏற்கனவே ஒரு காதல் தோல்வி இருக்கிறது மாப்பிள்ளை வீட்டில் எல்லாருக்குமே தெரியும் அது மட்டும் இல்ல மாப்பிளைக்கு கூட நிச்சயதார்த்தம் வரைக்கும் போய் கல்யாணம் நின்று போச்சே என்ற சந்திரன் வாழப்போறது அவங்க தானே சந்தியா அவங்க ரெண்டு பேரும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும் என்றார் சந்திரன் .
என்னப்பா சொல்றீங்க வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு இருக்கீங்க என்ற கார்த்திகேயனிடம் கார்த்தி ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு உனக்கு நிச்சயதார்த்தம் நடந்து நின்னு போன விஷயம் தெரிஞ்சு எல்லாருமே நம்ம குடும்பத்தை பத்தி தப்பா பேசிட்டு இருக்காங்க. உனக்கு இனிமேல் கல்யாணமே நடக்காதுன்னு என் காது படவே எத்தனையோ பேர் பேசி இருக்காங்க . அது மட்டும் இல்லை உன் தம்பி பண்ணின அசிங்கம் வெளியில தெரிஞ்சு அது வேற நாறிப் போய் கிடக்குஅதனால தான் சொல்கிறேன் நம்மளை தேடி வந்த இந்த வரனை விட்டு விட வேண்டாம் ம் என்றார் சங்கரன்.
அப்பா சொல்லுறதை கேளு கார்த்தி என்று உமையாளும் வற்புறுத்திட சரிங்கம்மா உங்க விருப்பம் என்றான் கார்த்திகேயன்.
யோசனையுடன் அமர்ந்திருந்தவனது மொபைல் போன் ஒலித்திட புது நம்பரா இருக்கே என்று நினைத்தபடி அதை அட்டென்ட் செய்தான் கார்த்திகேயன்.
ஹலோ என்ற பெண் குரலில் யாருங்க என்றான் கார்த்திகேயன். நான் மகாலட்சுமி உங்க அப்பா சொல்லி இருப்பாங்களே என்ற மகாவிடம் சொல்லுங்க என்றான் கார்த்திகேயன்.
உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமே பேசலாமா என்றவளிடம் சரிங்க பேசலாம் என்றான் கார்த்திகேயன். நேர்ல மீட் பண்ணி பேசணும் அதனால நாளைக்கு காலைல வடபழனி கோயிலுக்கு வந்துடுறீங்களா என்றாள் மகாலட்சுமி. சரிங்க என்றவனும் போனை வைத்தான்.
அந்த பொண்ணு என்கிட்ட என்ன பேச போகுது என்ற யோசனை உடனே படுத்து உறங்க ஆரம்பித்தான் கார்த்திகேயன்.
…. தொடரும்….
nice maha ella unmaium solli mrg pannika ninaikirala illa mrg venamnu solla porala therilaye
Spr going sis
Nice maha karthi jodi sema
Interesting epi😍😍