அத்தியாயம்-14
விகர்த்தனன் ஜனனி வருவாளென்று குத்து மதிப்பாய் கணித்து வைத்திருந்தான். இந்த வசந்த் குரங்கை எதிர்பார்க்கவில்லை. அப்படியே வந்ததாலும் பெரிதாக விகர்த்தனன் திணற மாட்டான்.
அவன் இயல்பே யாராயிருந்தாலும் சமாளிக்கும் வல்லமை பெற்றவன்.
ஜனனியிடம் நலம் விசாரித்தான், வசந்திடம் நட்பு பாராட்டி மகிழ, வசந்த் ‘பரவாயில்லை சம்ருதியை விட நம்ம தங்கச்சியிடம் பேசறான்’ என்று இலகுவானான்.
ஜனனி எண்ணிற்கு கூட அழைக்காமல் சம்ருதியிடம் போன் செய்து அழைத்தால். சம்ருதி எந்தளவு பழக்கம் என்ற கணக்கை கோட்டை விட்டிருந்தான் வசந்த்.
“நீங்க எங்களை பார்க்க ஆசைப்பட்டதா சம்ரு சொன்னா. எனக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா.” என்றாள் ஜனனி.
விகர்த்தனனோ ‘ஏதே… நானா? அதுசரி ‘Sam’க்கு பொய் சொல்ல ஒரு ரீஸன். இருக்கட்டும்… எனக்கும் சம்ருதியை பார்க்கணும்னு ஆசையிருந்தது’ என்று சம்ருதியை ரசிக்க, ‘அச்சோ இவரு எங்க பார்க்க ஆசைப்பட்டதா சென்னார். நானா இல்லை அவரிடம் ஜனனி பார்க்க கேட்டதாகவும், ஜனனியிடம் விகர் பார்க்க ஆசைப்பட்டதாகவும் மாத்தி சொல்லி அழைச்சுட்டு வந்தேன். விகர் கண்டுபிடிச்சியிருப்பாரா? அவர் பார்வையே சொல்லுது என் திருட்டுதனத்தை என்று நாணினாள்.
“அப்பறம் ஒன் வீக் எப்படி போச்சு” என்று வசந்திடம் கேட்க “ரொம்ப சூப்பர் சார். மாமாவுக்கும் அத்தைக்கும் தான் பயங்கர சந்தோஷம். சம்ரு மாறியதை அவங்க கண்ணாற பார்த்ததுட்டாங்க. நான் கூட மாமாவை கன்வின்ஸ் பண்ணறது கஷ்டமோனு பார்த்தேன்.” என்று உலறினான்.
விகர்த்தனன் நெற்றி சுருக்கிட, சம்ருதி சந்தோஷமா இருந்தா மாமா எல்லாத்துக்கும் தலையாட்டுவார்.” என்றான்.
வசந்திற்கு ஒரு நட்பு துணை கிடைத்த எண்ணமோ, அல்லது யாரிடமாவது பகிரும் ஆசையோ விகர்த்தனனிடம் வார்த்தையை விட்டான்.
அதாவது மறைமுகமாக… கோடு போட்டால் ரோட்டையே உருவாக்கி பார்த்திடும் விகர்ந்தனனுக்கு புரியாததா?
‘அடப்பாவி… நான் கட்டிக்க போறவளிடம் பிரப்போஸ் பண்ணினா, நீ பெத்தவன் கிட்ட கோல் போட்டுட்டு இருக்கியா. இருடி.. ‘Sam’ வாயை திறக்கட்டும் அப்பறம் இருக்கு’ என்று எண்ணினான் விகர்த்தனன்.
இங்கு வந்ததும் மோஜிட்டோ ஆர்டர் செய்துவிட்டு பேச, பக்கத்தில் pin bowling உருட்டி விளையாடினார்கள்.
அதில் சரியாக விளையாட தெரியாமல் முதல் முறை பழகுவோருக்கு பெண் ட்ரைனர் சொல்லிக் கொடுத்தனர்.
அங்கே பெரும்பாலும் குழந்தைகள் கற்றுக்க, சில வாலிபர்களும் முதல் அனுபவமாக கற்றுக்க முயன்றனர்.
வசந்த் அதை பார்த்து முடிக்க, வசந்த் நீங்க ட்ரை பண்ணலாமே?” என்று விகர்த்தனன் உசுப்பேத்த, வசந்தும் “ட்ரை பண்ணிட்டு வர்றேன் பாஸ்” என்று ஓடினான்.
விகர்த்தனன் பார்வை ஒரு விக்கெட் நான் கிளப்பிட்டேன்.’ என்பதாய் விழியசைவில் கூற, ‘இது என் டர்ன் இப்ப பாருங்க’ என்று மறுபுறம் மெஹந்தி ஸ்டாலில் பணம் தந்தால் ஆன் ஸ்பாட் மெஹந்தி டிசைன் கையில் போட்டுவிடுவதாக போர்ட் இருக்க, “ஜனனி அங்க பாரு மெஹந்தி போடறாங்க. அய்யோ… முஸ்லீம் கேர்ள் வேற போட்டு விடுறாங்க. அவங்க எப்பவும் அழகழகான டிசைன் இப்படின்னு சொடக்கு போடும் முன் போட்டு விடுவாங்க. நீ போடப்போறியா” என்று ஆசைக்காட்டினாள்.
இப்பவும் அலங்காரம் ஆடைக்கு பெண்கள் விழவும், ஜனனி கை அலங்காரத்திற்கு மெஹந்தி போட சென்றாள்.
விகர்த்தனன் சம்ருதி எதிர்பார்த்த தனிமை கிடைக்கவும், கிஃப்ட் எடுத்து நீட்டினாள்.
“என்னது?” என்று கேட்டான். “எபாக்ஸில செய்த ஒரு ஆர்ட். உதிரும் பூக்களை சேகரிச்சு அதை எபாக்ஸியில் வச்சி ஃப்ரேம் போட்டிருக்கேன்.
எப்பவும் நீங்க கொடுத்த பூ டஸ்பீனுக்கு போகாது. அலங்காரமா வீட்டில் ரூம்ல நிறைந்து இருக்கும்.” என்று உதிர்த்தாள்.
விகர்த்தனன் சட்டென்று கவரை பிரித்து பார்த்தான்.
அவன் கொடுத்த பூ வதங்கி நலுங்காமல், காய்ந்த நேரம் சரியான விதத்தில் உலர்ந்தப் பின் எபாக்ஸியில் போட்டு புகைப்பட சட்டமாக மாற்றியிருந்தாள். இனி அந்த பூ காய்ந்திருந்தாலும் குப்பைக்கு போகாது. மறுசுழற்சி முறையில் அலங்கார பூ புகைப்படமாக அவனது அறையில் அலங்கரிக்கும்.
விகர்த்தனன் கூட அந்த பூங்கொத்து காய்ந்து உதிரும் முன் அவள் காதலை தெரிவிக்க கெடு கொடுத்திருந்தான்.
இப்பொழுது காதலை பறைச்சாற்றும் விதமாக ‘நெஞ்சை கொய்துவிட்டாய்’ என்றதை ஆங்கிலத்தில் காதலிக்கும் விதமாக எழுதிய ‘கொயெட்ஸ்’ quotes’ மூலமாக காதலிப்பதை உரைந்தாள்.
அதை பார்த்து வெற்றி சிரிப்பு உதிர்த்து மீண்டும் பையில் வைத்து அவன் பக்கம் நகர்த்தி வைத்து கொண்டான்.
‘நெக்ஸ்ட் நான் என்ன செய்ய? உங்கப்பாவிடம் வந்து பேசவா?” என்று கேட்டான் விகர்த்தனன். கல்யாணத்தை பத்தி பேசலாம் என்றோ நம்ம காதலிக்கறதை சொல்வோமா என்றோ கேட்காமல் மொட்டையாக கேட்டான். அது புரிய வேண்டியவளுக்கு புரிந்திட, சம்ருதி வெட்கம் கொண்டு, ‘ம்ம்” என்று பதில் தந்தாள்.
“வாயை திறந்து சொல்லு.” என்று விகர்த்தனன் கேட்டதும், “அப்பாவிடம் வந்து பேசுங்க. அப்பா தடுத்தா… நான் பேசறேன். அப்பாவுக்கு நான் என்றால் உயிர். நிச்சயம் உங்களை மறுக்க மாட்டார்.” என்று நம்பிக்கையாக பேசினாள்.
”மறுத்தாலும் தூக்கிட்டு போக நான் ரெடி.” என்றான் ஜம்பமாய்.
லேசாக கைகள் பிசகி வசந்த் வரவும், “அச்சோ என்ன பாஸ் இது கை வலிக்கு. எசகுபிசகா கைவிட்டு உருட்டிட்டேன்” என்று வந்தான்.
“ஜனனி எங்க?” என்று தேட, “மெஹந்தி போடறா” என்று சுட்டிகாட்டினாள்.
“ஓகே… வசந்த்… நான் கிளம்பறேன். இங்க பக்கத்துல ஒருத்தரை பார்க்க வந்தேன். உங்களையும் பார்த்தாச்சு.” என்று எழவும், சம்ருதி வரும் போது கொண்டு வந்த பை விகர்த்தனன் எடுத்து செல்ல வசந்த் கண்கள் அந்த பையில் நிலை குத்தியது.
சம்ருதி விகர்த்தனனையே ஆசையாக பார்க்க, வசந்த் இருவரையும் மாறி மாறி பார்த்து, ‘ஷிட் இந்த கிருஷ்ணா போனதும் எப்படி தான் இன்னொருத்தனை பார்க்கறா. முதல்ல மாமா எனக்கு கட்டி வைக்கட்டும். வீட்டுக்குள்ளயே வச்சி பூட்டிடறேன். இந்த விகர்த்தனனை பார்த்தா நமக்கே கொஞ்சம் மனசு அலைப்பாயுது. இவனை மாதிரி கார், ஸ்டெயிலிஷ் நடை சிரிப்பு சை’ என்று கொந்தளித்தான்.
ஜனனி போல கேட்பாளென்ற மடத்தனத்தில் நடந்தான் வசந்த்.
தந்தை சொல்லிற்கே அடங்காமல் காதலன் திருமணத்திற்கு செல்ல ஒற்றை காலில் நின்றவளென்றதை மறந்துப் போனான்.
விகர்த்தனன் ஜனனியிடம் சொல்லிவிட்டு செல்ல, என்னவோ வசந்த் கடுகடுப்பாக திரும்பினான்.
"ஏதோ கிஃப்ட் கொடுத்தியா சம்ரு. விகர்த்தனனுக்கு?" என்று கேட்டதும் ஆமென்றாள் தலையாட்டி.
“என்ன ஸ்பெஷல்? போன்ல அவனோட பேசுறியா?” என்று அடுத்த கேள்வி, ” இல்லை.. அங்கிருந்து வந்தப்பிறகு இன்னிக்கு பார்க்க கூப்பிட்டேன்” என்றாள்.
விகர்த்தனன் நினைவில் உண்மை வெளியேறியது. அதோடு காதலை சொன்னப்பின் இனி வசந்திடம் மறைக்க அவசியமில்லை என்ற அசட்டை.
“அப்ப அவனா ஜனனியை பார்க்க விரும்பலை. நீ அவனை பார்க்க ஆசைப்பட்டிரருக்க?” என்று கேட்டதும், “என்ன கேள்வி இது. எனக்கு தலைவலி எடுக்கு. ஜனனியை அவர் விசாரிச்சார். ஏன் உன்கூட பேசலை” என்று முகம் தூக்கி வைத்தாள்.
வசந்த் பொறுமையாக மனதில் இவளை திட்டிக்கொண்டு வந்தான்.
ஜனனிக்கு இதென்ன புதுக்குழப்பம். இவ எதுக்கு அந்த அண்ணாவை பார்க்க கேட்டா? என்றவளுக்கும் சம்ருதி காதலித்து இருப்பாளோ என்ற எண்ணம் உருவானது.
இந்த நேரத்தில் கேட்கவும் தவிர்த்து அமைதியானாள்.
வசந்த் ஜனனி வீட்டுக்கு அவர்களை விட்டுவிட்டு தன் வீட்டிற்கு காரை விடும்படி சொல்ல அவ்வாறே சென்றது.
வசந்த் ஜனனி இறங்கியதும் டாட்டா காட்டி சம்ருதி செல்ல, வசந்த் கோபமாய் தந்தையை நாடி ஓடினான்.
"அப்பா அப்பா.." என்று கத்தி கூப்பிட, "அவர் மாடில இருக்கார் டா." என்று சியாமளா உரைக்க, வேகமாய் படியில் வேகயெட்டு எடுத்துவைத்து தாண்டினான்.
“அவன் ஏன் இப்படி கத்தறான்” என்று சியாமளா கேட்க, “தெரியலைம்மா சம்ருதி கூப்பிட்டிருந்தா போனோம். அங்க விகர்த்தனன் அண்ணா இருந்தார். அவரை பார்க்க தான் சம்ருதி கூட்டிட்டு போனா” என்றதும் சியாமளாவும் மகனுக்கு இணையாக படியில் நடந்தார்.
சத்யமூர்த்தி யாரிடமோ பேசி சிரித்து, “அட நகைக்கடை ஓனரா மாறிட்டா அவனுக்கு ஏன் அடுத்தவர்களிடம் வேலைக்கு போக போறான்” என்று பேச, “அப்பா… கனவு கண்டுட்டு இருங்க. சம்ருதி காதலிக்கறா” என்று போனை பிடுங்கி அணைத்து கத்தினான்.
“என்னடா அதான் கிருஷ்ணாவை மிரட்டி, அவனுக்கும் கல்யாணமாகிடுச்சே” என்று கூறினார்.
“அது வேற… இது வேற. இப்ப சம்ருதி வேற ஒருத்தனை விரும்பறா” என்றதும் சத்யமூர்த்தி முகம் கறுத்தது.
“என்னடா சொல்லற” என்று சியாமளா வரவும், “உங்க தம்பி பொண்ணு ஒருத்தனை விரும்பறா. ஒருத்தனை இல்லை.. இது இரண்டாவது. எனக்கு தெரிஞ்சு இரண்டாவது. எனக்கு தெரியாம எத்தனையோ?” என்று புலம்பினான்.
எப்பொழுதும் ஒருத்தர் பார்வை போல ஒருத்தர் பார்வை இருக்காது.
வலியை கடப்பவருக்கு அடுத்த வாழ்க்கை உடனே வந்தாலும், அதை சம்பந்தப்பட்டவர் ஏற்றால் இப்படி தான் பிரச்சனை வெடிக்கும். ஒழுக்கம் கெட்டதாக சித்தரிக்கும்.
இங்கே அவரவர் பக்கம் என்னயென்ன உணர்வுகள் தோன்றி மறைந்து, மனதிற்குள் புரட்டுவது என்பதை யாரும் அறியமாட்டார்கள்.
சொல்லப்போனால் தன் மாமன் மகளின் காதலை அழித்தது, சொத்துக்காக அவளுக்கு புட்பாய்ஸன் செய்து, காதலை பிரித்தவன் நல்லவனாகவும், சம்ருதி கெட்டவளாகவும் பேசபட வைக்க நினைத்தான்.
“யாரை டா? எப்படி? அவ தான் சிங்கப்பூர்ல” என்று முடிக்கும் முன், “ஆஹ்… சிங்கப்பூர்ல தான் அந்த மினுக்கி விகர்த்தனனோடு பழகினாள்.
“சிங்கப்பூர்ல அவ காதலிக்கிற வரை நீ என்னடா பண்ணிட்டு இருந்த.” என்று சத்யமூர்த்தி கேட்டதும், ஜனனியோ “அண்ணா சிங்கப்பூர்ல குடிச்சிட்டு விழுந்து கிடந்தான், விகர்த்தனன் அண்ணா தான் எங்களை சேப்பா ஹோட்டல்ல விட்டார். கடல்ல குதிச்சு நான் செத்திருந்தா கூட வசந்த் அண்ணா காலாட்டி வேடிக்கை பார்த்திருப்பார். அங்க எல்லாமே விகர்த்தனன் அண்ணா தான் அப்பா கூட்டிட்டு போய் சுத்தி காட்டியது. ‘Nima product’ கம்பெனியோட ஒரே பையன். அவருக்கு தலையெழுத்தா. ஆனா செய்தார்.
வசந்த் அண்ணா நல்லா பணத்தை மிச்சப்படுத்த அவரிடம் மத்ததை ஒப்படைச்சிட்டு ஹாயா மஸாஜ் பண்ண போனார்.
இல்லையானு கேளுங்க. ஒரு இடத்துக்கு போனா எப்படி பெண்களை பாதுகாக்கணும்னு கூட தெரியலை.
நடுவுல வந்து விகர்ததனன் அண்ணா ஸ்கோர் பண்ணிட்டார்” என்று பேசினாள்.
“ஏய் உனக்கு நான் தான் அண்ணா. கண்டவனை அண்ணா அண்ணான்னு சொல்லற” என்று கத்தினான்.
“நான் உன் தங்கச்சினு நீ எப்ப உணர்ந்த?” என்று அவளும் கத்தினாள்.
“உன் பிரச்சனையை விடு. டேய் அவன் யாரு என்னனு தெரியுமா. ஏன்டா குறுக்க வர்றாங்க. உனக்கு ஒருத்தியை வளைச்சி போட தெரியலை.
உன் தம்பி பொண்ணுக்கு என்ன திமிரு எடுத்து அலையுதா?” என்று சியாமளாவுக்கும் திட்டு விழுந்தது.
“அய்யோ அப்பா. அவன் கிருஷ்ணா மாதிரி அன்னக்காவடி இல்லை. பிசினஸ் மேன். சிங்கப்பூருக்கு வந்ததே சந்தோஷமா பொழுதை கழிக்க, ஆடி கார் வச்சியிருக்கான். அடிக்கடி உலகத்துல எங்கயாவது சுத்திட்டு வர்றான். பார்க்கவும் நல்லாயிருக்கான்” என்று அடுக்கினான்.
“டேய்… எவனாயிருந்தா உயிர் பயம் காட்டினா ஓடிடுவாங்க. அந்த கிருஷ்ணா ஓடலை. அதே டெக்னிக் இவனிடம் காட்டு.” என்று ஏற்றி விட்டார்.
“அது கஷ்டம்ப்பா. அவன் வேற இவன் வேற. அவனை மிரட்டினப்ப நான் கெத்தா இருந்தது போல இருந்தது. இந்த விகர்த்தனன் முன்ன முடியுமான்னு தெரியலை. நீங்க அவனை மிரட்டறதுக்கு பதிலாக மாமாவிடம் சம்பந்தம் பேசுங்க.” என்று அறிவாக பேசினான்.
சத்யமூர்த்தி அந்த பையனை ஒருக்கா பார்க்கறேன். நாம சாயந்திரம் சம்ருதியை பொண்ணு கேட்டு போவோம்” என்றார் சத்யமூர்த்தி.
ஜனனியோ ஏன் இந்த வீட்டில் என் கருத்தை புறக்கணிக்கின்றனர். பையன் மட்டும் ராஜ் வாழ்க்கை வாழ எப்படி திட்டமிடுகின்றனர். என் உணர்வின் வலிகள் செவிமடுக்க கூட மறுத்தால் எப்படி? என்று கவலையாக மாறினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
அடபாவிகளா உங்கள் உண்மை வெளியே வரனும்
Interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Intresting spr going👌👌👌
ivanga tha panii irukanga krishna va oda vaikurathuku avanum samru nalla irukanumnu vitu ponan krishnavum. aana athellam vikar kitta palikathu eppadi oda vida poran parunga
Family yae plan panni samu krish love ah pirichi irukaga suppose samu veetula vikarthanan ah virumburathu na easy ah othupaga than aana indha family silent ah Krishna vum Vikarthanan um.friends nu find out panni potu kuduthudavagalo nu doubt ah iruku
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 14)
ஆமா, இவரு போய் கேட்டவுடனே சம்மு அப்பா அப்படியே சம்மதிச்சிடுவாரு
பாருங்க. அப்படியே சம்மு அப்பா சம்மதிச்சாலும் சம்மு சம்மதிச்சிடுவாளா என்ன..?
எக்ஸ் லவ்வர் கல்யாணத்துக்கே அத்தனைத் தூரம் வேணாம்ன்னு சொல்லியும்,
கெத்தாப் போய் இறங்கி, டபுள் கிஃப்ட்டா கன்னத்துல இலவசமா அறையும் கொடுத்துட்டு வந்தவ. இப்ப இந்த சத்தியமூர்த்தி வந்து வசந்த்க்கு பொண்ணை கேட்டவுடனே, போடுங்க மாமா, மாலையை போடுங்கன்னு சொல்லப் போறாளா…? இல்லை, கண்ணை கசக்கிட்டு மூலையில உட்கார்ந்து அழத்தான் போறாளா…? சிங்கம்டா, பெண் சிங்கம் டா..!
அட போங்கடா, போங்கடா… போக்கத்தவங்களா…!
😆😆😆
CRVS (or) CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 evanga attam ellam vikarthanan kita sellum ah parpom 🤔
Nice episode .Waiting 4 next…❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜💜💜
Interesting ❤❤❤🧡💛💚