Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை -6

நெஞ்சை கொய்த வதுகை -6

அந்தியாயம்-6

காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சம்ருதியை கண்ணாடி வழியாக பார்த்து வசந்திடம் பேச்சு கொடுத்தான் விகர்த்தனன்.

படிப்பு, உத்தியோகம், தங்கிருக்கும் இடம் இத்யாதிகளை கேட்டிருந்தவனுக்கு கூடுதலாக ஜனனி பேசிக்கொண்டே வந்தாள்.

அண்ணா அண்ணா’ என்று பேசவும் வசந்த் பேசுவதை தவிர்க்கவில்லை.

 வசந்த் பார்வை முழுக்க காரை தழுவியிருந்தது.

கார் எவ்ளோ ரேட் சார். எப்படி மெயின்டெயின் பண்ணறிங்க. நீங்க எந்தவூர்?” என்றதும் சம்ருதி கழுத்து விசுக்கென திரும்பியது.

ஜனனியும் “ஆமா அண்ணா உங்களை பத்தி சொல்லுங்க” என்று கேட்டதும், “என்னை பத்தி சொல்ல ஒன்றுமேயில்லைம்மா. அம்மா பூர்ணிமா ஹவுஸ் ஒய்ப்பா இருந்தாங்க.

அப்பா அம்பலவாணன் ஒரு டிபார்ட்மெண்ட் கடையில் டோர் டெலிவரி மேனா வேலை செய்தார்.
பெரிய கடை மாசத்துக்கு பத்தாம் தேதி வரை மளிகைச்சாமான் பெட்டியை கொண்டு போய் மாடியேறி ஒவ்வொரு வீட்ல கொடுப்பார் பெண்டு நிமிரும்.
அந்த அசதியில் பக்கத்துல சாய அங்கிருந்த சோப்பு அடுக்கி வச்சியிருந்த ரேக் சரிந்துடுச்சு. கடைக்காரர் செம கோபமா அப்பாவை திட்டி வேலைவிட்டு எடுத்துட்டார்.

மனசொடிந்து அப்பா வீட்டுக்கு வந்தார்.‌ சோப்பு ரேக் சரிந்ததும் அப்பாவை வெளியேற்றியதும் தான் அவருக்கு அவமானமா இருந்தது. உழைக்க போராடினப்ப அந்த அவமானம் எப்படியாவது முன்னேறணும்னு வெறியை தந்தது.
அவரா சோப்பு செய்து பழகினார். முதல்ல ஹோம்மேட் சோப்பை அதுவும் பிராண்ட் பெயரு இல்லாம யாரு வாங்குவா? அவரா முன்ன டோர் டெலிவரி செய்த அத்தனை வீட்டு கதவை தட்டி சேல்ஸ் பண்ணினார். நல்ல நேம் கிடைச்சது.

கொஞ்சம் கொஞ்சமா அவங்க அவங்க சர்க்கிள் வட்டத்துல அப்பா தயாரித்த சோப்புக்கு நல்ல பெயர் உருவாச்சு.

முதல்ல அம்மா பெயர்ல தான் Poornima பெயர்ல ‘Nima’ அப்படின்னு பெயரை வச்சி சின்னதா ஆரம்பிச்சார்.

அப்பா உழைப்போட பலன் ரெஸ்பான்ஸ் இருந்தது. தொழில் விரிவாச்சு.
நான் அம்மா வயிற்றில் உருவானப்ப தொழிலும் என்னைப்போலவே அசுரத்தனமான வளர்ந்தது.

இப்ப ‘Nima’ ஆர்கானிக் பிராடெக்டா அந்த பிஸ்னஸ் பெரிசா வளர்ந்தது.

நான் செகண்ட் இயர் படிக்கறப்ப அம்மா இறந்துட்டாங்க. அப்பா நான் மட்டும் தான்.‌

எப்பவும் பிசினஸ் பார்த்து பார்த்து போரடிக்கும். அதனால எப்பவும் இந்த மாசத்து எங்கயாவது ரெஸ்ட் எடுக்க வந்துடுவேன். அப்பாவும் அப்படி தான். ஆனா அப்பாவுக்கு சாமி பக்தின்னு போயிருக்கார்.

இப்ப தமிழகத்துல ஒரு கோவிலுக்கு போயிருக்கார். சிவனை தரிசிக்க, சாமியார் எல்லாம் பிராடுங்கன்னு சொன்னாலும் கேட்காம பணத்தை கொடுத்து அந்த சிவன், பாம்பு தலைன்னு பார்க்க போயிட்டார்.” என்று தோளை குலுக்கினான். விகர்த்தனனுக்கு சாமியாவது பூதமாவது என்ற எண்ணம் உண்டு. தந்தை கடின உழைப்பால் முன்னுக்கு வந்ததாக மட்டுமே நம்புபவன்.

அம்பலவாணனோ ‘என்ன உழைப்பு இருந்தாலும் கடவுள் அனுக்கிரகமும் வேண்டும் என்பது அவரெண்ணம்.

சாமி பக்தி உண்மையானது. சாமியார்கள் வேண்டுமென்றால் வேடதாரிகளாக இருக்கலாம் என்பது அவர் கருத்து.

எப்பொழுதும் பொதுவாக உலகளவில் தந்தை மகனுக்கு கருத்து வேறுபாடு இருப்பது தெரிந்த விஷயமே.

"Nima' product உங்களோடதா? அதுல ஹனி பிளேவர் நல்லாயிருக்கும். ஸ்கின் பிரெண்ட்ல், ஒரு க்ளோ, சைனிங் பீல், அந்த பிராடெக்ட் சோப்பு மட்டும் இல்லை பொஸ் வாஷ் கூட நான் யூஸ் பண்ணிருக்கேன்.‌ நிறைய ஆர்கானிக் பிராடெக்ட் பார்த்திருக்கேன். ஷாம்பு சோம்பு மௌவுத் வாஷ், ஜெல், ஹேர் ஸ்பிரே, இப்படி நிறைய... ஆக்சுவலி ரீசண்டா  பெர்ஃப்யூம் புதுசா லாஞ்ச் பண்ணிருக்கிங்க தானே?" என்று சம்ருதி கேட்டாள். 

“ஆமா.” என்றவன் திரும்பி கொண்டான். ஜனனியோ “வாவ் அண்ணா… நீங்க பரம்பரை பணக்காரர்னு நினைச்சேன். ஆனா இந்த வளர்ச்சி நல்லாயிருக்கு” என்றாள்.

“தேங்க்ஸ் மா… ஆக்சுவலி பரம்பரை பணக்காரர்களை விட உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு தன்மானம் அதிகம் திமிரும் அதிகம்.

அந்த திமிர், பரம்பரை பணக்காரங்களோட போட்டியிட்டா கூட ஜெயிக்கும். மோஸ்டா அப்படி ஜெயிக்கறப்ப ஒரு ஃபீல் சாட்டிஸ்பேக்ஷனா இருக்கும்” என்று பேசினான்.

‘Nima’ புரோடக் போட்டியாளராக இருக்க தற்போது ஒரு பரம்பரை பரம்பரையாக பெயர் வாங்கிய ‘சன்ஷைன்’ என்ற புராடெக் மார்க்கெட் சரிந்தது. அதன் கொண்டாட்டமும் அதனால் இந்த பேச்சும் என்று சம்ருதிக்கு புரித்தது.

‘சன்ஷைன்’ பல வருட காலமாக சோப்பும் ஷாம்பிற்கும் இந்தியாவில் நிலை நாட்டியா பெயர். இன்று சரிந்தது விகர்த்தனன் தந்திரத்தால்…

அதற்கு இந்த கொண்டாட்டாம் என்றால் விகர்த்தனன் இங்கே சிங்கப்பூரில் வைத்திருந்த சொந்த கார்‌ தேவை தான்.’ என்றது மனம்.

ஆனால் பணத்தை வைத்து ஒருவன் தன்னை நிராகரித்தது நினைவு வர, பணத்தை பணக்கார தனத்தை பிடிக்காமல் போனது. 

வசந்த் கதை கேட்டவனாக, வாயை திறந்து வேடிக்கை பார்த்து வந்தான்.
அவனுக்கு இந்த உழைப்பு பிஸினஸ் எல்லாம் எட்டிக்காய் அல்லவா?!

மாமா சந்திரசேகர் நகைக்கடை வைத்திருக்கும் நபர். சம்ருதி ஜிவல்லரி ஷாப் அவருடையது. மூன்று கிளைகள் உண்டு. அதில் ஒன்றில் தற்காலிகமாக பணியை செய்கின்றான்.

உரிமையாளராக உரிமைக்கொண்டாடி, வேலை பார்ப்பதாக நாடகம் படிப்பவன் ஆயிற்றே.

 இதற்கு நடுவில் விகர்த்தனன் சம்ருதியை கவனிக்க, அவளோ பெருமூச்சுடன் வேடிக்கை பார்ப்பதை கவனித்தான்.

விகர்த்தனன் பேச்சை ஜனனி தான் ஆர்வமாய் கவனித்தாள்.

“சூப்பர் அண்ணா. நேத்து ரொம்ப பொறுப்பா ஹாண்டில் செய்து வசந்தை ரூம்ல விடறப்பவே நீங்க நல்ல அறிவாளின்னு தோணுச்சு உங்க அப்பாவுக்கு கங்கிராட்ஸ் பண்ணணும். செம பயோபிக்” என்று பாராட்டினாள்.

‘அவமானம் வலி இருந்ததை பகிர்ந்தான்.

சம்ருதி அதையெல்லாம் செவிக்கு ஏற்றியிருந்தாள்.

வசந்த் தான் ‘இந்த ஜனனி என்னை மட்டம் கட்டுது. இப்ப அதட்டினேன் அப்பா அம்மாவிடம் நான் குடிச்சிட்டு மட்டையானதை சொல்வா. அப்பா கூட சும்மாயிருப்பார். மாமாவுக்கு தெரிந்தது ‘ஆப்ட்ரால் சிங்கப்பூர்ல ஒரு நாள் என்‌மகளை பார்த்துக்க தெரியலைன்னு பேசுவார். கல்யாணம் கட்டி தர்றது எல்லாம் கனவா போயிடும். இங்கிருந்து போகறவரை ஜனனியிடம் சண்டைப்போடாம இருக்கணும்’ என்று எண்ணிக்கொண்டான்.

அதுவும் விகர்த்தனன் இருக்க பொறுப்பு குறையும் அந்த ஜனனியும் அவனை அண்ணா என்று விளிக்க, அவனே கையிடாக இருந்து தொலையட்டும் என்று உள்ளுக்குள் சிரித்தான்.

அதுவும் சோப்பு விற்கிறவன் கையிடா இருக்கட்டும்’ என்ற எள்ளல் நகைப்பு.

ஆனால் சம்ருதி கங்கு கையிடாக, வந்துவிட்டால்…. இந்த கோணத்தில் வசந்த் துளியும் யோசிக்கவில்லை. அதற்கு மூளை இருந்தால் தானே?!

 பயணத்தின் முடிவில் இறங்குமிடம் வந்து சேர்ந்தது. மீன் அக்வாரியம் வந்ததும் டிக்கெட் எடுத்திடுவதெவ்லாம் வசந்த் பார்த்து கொண்டான்.‌ விகர்த்தனுக்கு இலக்கியன் டிக்கெட் எடுத்து வந்து கொடுத்தான். 

கூடவே உதவியாளராக தண்ணீர் உடை, என்று எடுத்து கொடுக்கும் வேலையால் கூடவே வந்தான். 

விகர்த்தனன் கேமிரா கேட்க, இலக்கியன் கொடுக்க, அதன் பின் வண்ண மீன்கள், ஒவ்வொன்றையும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தான்.

போனில் செல்ஃபி எடுப்பதற்கு பதிலாக, இலக்கியனிடம் கேமிரா கொடுத்து, குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எப்படியும் ஹோட்டல் ரூமிற்கு சென்றதும் அந்த புகைப்படத்தை இவர்களிடம் அனுப்பும்படி வசந்த கூறிவிட்டான்.

சம்ருதியும் ஒரு கேமிரா எடுத்து வந்தாள். அதில் அவள் மீன்களையும் மற்ற மீன்களையும் புகைப்படத்தையும் எடுக்க ஆர்வமானாள்.

சொல்லப்போனால் அனைவருமே சுற்றுலாவாசிகள் என்பதால் ஆர்வமாய் அந்த நொடியை மகிழ்வாக ரசித்தனர்.

ராட்சத மீன்கள் முதல் குட்டி குட்டி மீன்கள் வரை சுற்றிலும் கண்ணாடி பேழைக்குள் நீந்துவதில் தானும் தண்ணீரில் பிறக்க கூடாதா என்று மனம் ஏங்கியது.

இதில் இங்கிருப்பதில் இந்த சுறா தான் சின்னது என்று அறியவும் அதற்கே ஜனனி வாய் பிளந்தாள்.

குட்டி சுறாவே இவ்ளோ பெருசா இருக்கு என்ற ஆச்சரியம்.

50 க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களான மீன்களை ஒவ்வொன்றாக கண்டு ரசித்தனர்.

எதை பார்க்க எதை ரசிக்க என்று புரியாத திகைப்பில் கண்கள் விரிந்தது.

சுரங்கப்பாதை போல நீண்டு இருந்த அந்த பாதையில் தலைக்கு மேலும் சுற்றிலும் மீன்கள் மட்டுமே.
இதில் தனி தனி தொட்டியாக சில மீன்கள்.

”ஜனனி இங்க இரண்டு மீன் சண்டை போடுது.” என்று சுட்டிகாட்டா, ஜனனியோ “இங்க பாரு கடற்குதிரை குட்டிபோடுது” என்று அவள் அழைத்தாள்.

ஜனனி வரவில்லை ஆனால் விகர்த்தனன் அருகே வந்தான்.

“அந்த மீன்கள் சண்டை போடுதா?” என்று கேட்டான். “பின்ன இல்லையா… எனக்கு சுத்திபார்க்கவே பிடிக்கலை. நீங்க இந்த மீன் மாதிரி என்னை பேசி கரெக்ட் பண்ணி இங்க இழுத்துட்டு வந்துட்டிங்க. பாருங்க ஒரு மீன் ஓடினா‌ பின்னாடியே துரத்துது” என்று சுட்டிகாட்டினாள்‌.

கண்கள் சுருங்கி லேசாக சிரித்து, “அந்த மீன் நீயும் நானுமா?” என்று கேட்டதும் “நான் அப்படி சொல்லை.” என்று இழுத்தாள்.

“அந்த மீன்கள் என்ன பண்ணுதுன்னு தெரியுமா?” என்றான் கண்ணில் அப்படியொரு குறும்பு.

அவன் பார்வை சிரிப்பு, இரண்டும் அர்த்தங்கள் எடக்கு மடக்காய் தெரிய, அவனுமே அடுத்த வார்த்தை அப்படி தான் பேசினான்.

“அந்த மீன்‌ மேட்டிங் பண்ணற ட்ரை பண்ணுது” என்று சிரிப்பை அடக்க முயன்றான்.‌

சம்ருதியோ கண்கள் உருட்டி பார்வை கண்ணாடிக்குள் இருக்கும் மீனை கள்ளத்தனமாய் காண, இதற்கு முன் சண்டையிட்டு துரத்துவதாக தோன்றியது, இப்பொழுது ஒன்றோடு ஒன்றாக கலந்திடும் காதல் வேகம்.‌

இதில் தன்னையும் அவனையும் வேறு உதாரணம் கூறிய மடந்தையாக சம்ருதியோ, “நான் கடற்குதிரை பார்க்க போறேன். ஜனனி கூப்பிட்டா” என்று நழுவ பார்த்தாள்.

“பேட்டிங் பினிஸ்டுனா நெக்ஸ்ட் பிரகனன்ஸி தான்” என்று அதற்கும் சர்ச்சைக்குரிய பேச்சை வீசினான்.

சம்ருதி இடுப்பில் கைவைத்து முறைக்க, நான் மீனையும் கடற்குதிரையும் அடுத்தடுத்து நிகழ்ச்சியை சொல்லறேன்.” என்று நமுட்டு புன்னகை வீசினான்.

இதே வார்த்தைகள் அறியாத ஆண்மகன், தெரியாத வழிப்போக்கன் பேசினால் முகம் சுழிக்க நேரிடும். ஆனால் மனதுக்கு நெருக்கமானவ ஆடவன் பேசும் போது பெண்ணானவளின் வெட்கம் வந்தது.

இதை கத்தரிக்கவும் முயலாது, தொடரவும் செய்யாது மீன்களை பார்க்க ஜனனியின் கைகளை பிடித்து கொண்டாள்.

விகர்த்தனனும் விளையாட்டை கைவிட்டு விட்டான்.

அவனுக்கு அவளிடம் இந்தளவு பேசியதே அதிர்ச்சி. அதோடு அவளுமே தவறாய் எண்ணாது கடந்தது நிம்மதியளித்தது.

சுற்றிப்பார்க்க வந்த இடத்தில் வேறு பிரச்சனை வராமல் பார்த்திட முடிவெடுத்தான்.‌

அதனால் தன் கேமிராவில் புகைப்படத்தை எடுப்பதில் மும்முரமானான்.

  • தொடரும்.
  • பிரவீணா தங்கராஜ்

13 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை -6”

  1. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 6)

    இவங்க சுத்தி பார்க்குறது நமக்கேன் செம்ம போரடிக்குது.
    மீனோட இணைச்சு வைச்சு கமெண்ட்ஸ் அடிக்கிற வயசா என்ன…? அத்தனை பெரிய பிசினஸ்மென் சைல்டிஷ்ஷா பிகேவ் பண்ற மாதிரி இருக்குதே..! என்னடா நமக்கு வந்த சோதனை…. இதனால ஒழுங்கா கமெண்ட்ஸ் போடமுடியாத வேதனை…!
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Super vikarthanan life la kastapatu munneri vanthu iruka so unaku panam mela aasai illa ipo samru mela konjam virupam iruku samru Kum apadi than papom aduthu rendu perum manasa veli paduthuvinglanu

  3. Avatar

    சூப்பர் விகர்தனன் சொன்னது சூப்பர். … இந்த வசந்த் வேஸ்ட் பையனை ஏன் கூட்டு வந்லாலோ

  4. Avatar

    Super sis nice epi 👌👍😍 vikarthanan life la evlo kashta pattu vandhanu sonnadhu super sis 👏😊 renduperum nalla develop pandrainga pa🤣 seekirama love start agattum😘😘😘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *