அத்தியாயம்-14
“மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்
“கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்
சார்லஸ் இடுப்பில் கை வைத்து நின்றான். இத்தனை பேசியும் தெளிவுப்படுத்தியும் இப்படி பேசி மனதை கொய்கின்றாளே என்றதும் அவன் முகம் முழுக்க கோபமா பொங்கி, அடுத்த தொடியே இயல்பாக்கி தன்னை சமன் கொண்டு வந்து மீண்டும் அடங்கியது.
“சாரா…” அவன் குரல் இப்போ கொஞ்சம் கடினமானது.
“நீ இன்னொரு தடவை உன்னை பேஷண்ட்னு சொல்லி குறை சொல்லிக்கிட்டே இருந்தா… நான் டாக்டரா இல்ல… புருஷனா ரியாக்ட் பண்ணுவேன். எப்படி வசதி?.” என்றான்.
சாரா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.
“என்னோட கிளினிக்குல வர்றவங்க எல்லாரும் பேஷண்ட் தான். ஆனா…” ஒரு நொடி அவன் ஆழ்ந்த சுவாசத்தை இழுத்தான்.
“நீ.. என் மனைவி” அவன் வார்த்தையை மெதுவா முடித்தான்.
அந்த ஒரு வார்த்தை…
சாராவின் உள்ளுக்குள் ஏதோ உடைந்த கண்ணாடியை ஒட்டியது போலிருந்தது.
“ஜோசப் கிட்ட நான் சிட்டிங் எடுக்குறேன். உன்கிட்ட… நான் நம்மளட வாழ்க்கை வாழ்றேன் சாரா இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு.” என்றான்.
அவள் கண்களில் நீர் தேங்கியது.
“உனக்கு... நிறைய குழப்பம் இருக்கலாம். நான் ஒருத்தியை நேசித்திருக்கேன். அது ஃபெயிலியர். அப்பா அம்மாவுக்காக கல்யாணத்துக்கும் வேண்டாவெறுப்பாக சம்மதிச்சு இருக்கேன். இப்பவரை நாம உடலால் இணையலை. அதுக்கூட உன்னை விட்டு விலகி நிற்பதா உன் பார்வைக்கு தோணலாம்.
அதெல்லாம் இல்லை.
காதல் என்பது ஒவ்வொருத்தரும் கடந்து வந்திருக்கலாம். சிலருக்கு காதலே வாழ்க்கையில இல்லாம போகலாம். அது பாஸ்ட். பிரசண்ட் உன்னோட வாழறதை நான் கர்த்தரோட விசுவாசி மாதிரி உனக்கும் உண்மையா இருப்பேன். அதுல மாற்றமில்லை.
மேரேஜ் ஒரு ஆக்சிடெண்டா தான் எனக்கு என் லைப்ல நிகழ்ந்தது. அதுக்காக நீ இப்பவும் வேற்று மனுஷி இல்லை. என்னோட சரிபாதி. நமக்குள்ள பிஸிக்கலா பாண்டிங் கிரியேட் ஆகாம இருக்கலாம். மனசளவில் நான் உன்னை கர்த்தருக்கு நிகரா நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்.” என்றான்.
“துகிரா சேச்சியை நேசித்ததுக்கு நிகரா? நிங்கள் என்னையும் பிரேமிஸ்துன்னா?” என்று சாரா கேட்டு விழிமலர, சார்லஸ் முத்து பற்கள் தெரிய சிரித்து, ‘உனக்கு துகிராவை வச்சி ஈகுவல் பண்ணினா ஓகேன்னா… எஸ்… துகிராவை விட உன்னை அளவுக்கு அதிகமா நேசிக்கறேன். துகிராவையாவது அமுல்யாவுக்காக, இஷானுக்காக விட்டுக்கொடுக்க மனசு வந்துச்சுல்ல.. உன்னை யாருக்காவும் விட்டுக்கொடுக்க என்னால முடியாது. இப்ப புரிதா.” என்றவன் அவளது கண்ணை உற்று கவனித்து அவளுக்குள் புதைந்திடும் வேகத்தில் இருந்தான்.
சாரா ஆச்சரியத்துடன் தலைகவிழ, சார்லஸோ வேகமாய் ஹனிமூனுக்கு எடுத்த டிக்கெட்டை எடுத்து அவளிடம் காட்டினான்.
“ஆக்சுவலி ஹனிமூனுக்கு போக சர்பிரைஸ் செய்ய நினைச்சு டிக்கெட் எல்லாம் வாங்கிட்டேன். பட்… இப்ப… ஜோசப் நிலையை பார்த்தும் நமக்குள்ள நிகழற சிட்டுவேஷனும் இரண்டும் என்னை அபெக்ட் பண்ணுச்சு. இப்ப ஜோசப் ஒரு வாரத்துல கண்ணு முழிச்சா. அவனுக்கான ட்ரீட்மென்டுக்கு நான் இருக்கணும். அந்த ஒருவிஷயத்துக்கு தான் போறது தடைப்படுமோனு இருக்கு” என்றான்.
சாராவோ “ஹனிமூன் பின்ன போலாம். எனிக்கு பிரச்சனை இல்லா. முதலில் ஓரு உயிரை காப்பாத்துங்க. கண் எதிர்ல உயிர் போறது நம்ம பிராணம் போறதுக்கு ஸமம் என்று நான் அறியேன்” என்றாள்.
சாராவின் கையை பிடித்து, சார்லஸ் மேத்யூ உங்கம்மா அவங்க உன்னோட மனநிலையை, நடந்ததை சொன்னாங்க. நீ எதுவும் சொல்ல விரும்பலையா?” என்றான்.
சாரா தலை கவிழ்ந்து, “அன்னிக்கு எங்களுக்கு பத்து வயசாயிருக்குன்னு, கிரேஸும் நானும் ஒரு வஸ்திரம் அணிந்து. நாங்கள் இரட்டை சகோதரியாயினும், கிரேஸும் எனிக்கும் கேரக்டர் வித்தியாசமாயி.
அவளுக்கு ராட்டினம் என்டில் பயம். எனிக்கு அதெல்லாம் பயமில்லா, தைரியசாலியாக்கும்.. ஆனந்தமாய் கொட்டமடிக்கும். அன்னிக்கு வளையல் பிந்தி எல்லாம் இரண்டு இரண்டு வாங்கி ஆனந்தமாய் கைப்பிடிச்சி வந்தில்லே.. ராட்டினத்திலும் போக நின் அடம் பிடிச்சி. கிரேஸ் மறுத்து அழுது. நான் தான் கைப்பிடிச்சு வல்லிய ஆனந்தமாய் இருக்குமின்னு இழுத்து போயி. மேலே ஆகாஷத்தில் ராட்டினம் சுழலும் போது, ஏதோ பழுது வந்து.
அந்த சமயம் ஆ ராட்டினத்தில் இருந்தவள் மொத்தமாய் கத்தி கூச்சலிட்டு. நான் அதை வேடிக்கையா நினைச்சு, கிரேஸை பயமுறுத்தியது. கிரீஸ் அலறி அடிச்சி பதறி ராட்டினத்தில் நகர, ஸ்லிப்பாகி கீழே விழுந்து. அந்த நேரம் நான்… நான்… கிரேஸோட மரண ஓலத்தை செவியில் கேட்டு.
என்ட வாழ்வில் அந்த விபத்து அழியா பதிந்து. நான் அந்தஷனமே மயங்கி விழுந்து. கண் திறந்து பின்னே ஹாஸ்பிடலில் இருந்தேன். பட்சே… கிரேஸ் மரிச்சதா என்ட அம்மை, அச்சன், மேத்யூ அழுதபடி பறைஞ்சது.
எனிக்கு அதில் பயம் வந்து. ஆ விபத்தில் நிறைய பெண்குட்டி சிறுமி பாதிப்படைந்து என்று டாக்டர் ரிச்சர்ட் மழுப்பி.
என்னால் அதை ஏற்க இயலா. நான் கட்டாயப்படுத்தி அழைக்காவிடில் கிரேஸ் ராட்டினத்தில் வந்திருக்கவே மாட்டா. நான் தான் என்ட சகோதரி மரிச்சிட காரணமாயி. நான் தான். அச்சன் அம்மே இருக்கற என்னை மட்டுமாவது மீட்டெடுக்க ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாய் கூட்டி போயி. பட்சே… நான் செய்த பாவம் என் மனசு அறியும். கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார். நான்.. நான்.. பாவி.” என்று முகத்தை மூடி அழுதாள்.
சாராவை சற்று நேரம் அழவிட்டு வேடிக்கை பார்த்தான்.
“ஏ… சாரா.. யார் இறப்புக்கும் யாரும் காரணமில்லை. கர்த்தர் இதற்கெல்லாம் உன்னை தண்டிக்கவே மாட்டார்.” என்றான்.
சாரா கண்ணீரை துடைத்துக் கொண்டு விரக்தியாக, “இல்லா.. டாக்டர் சாரே ஜோசப் பற்றி என்னிடம் விவாதிச்சப்ப, பறைஞ்சது மறந்து போயி? டேரக்டா ஜோசப்பின் காதலி மரிச்சதுக்கு காரணம் இல்லைனு பறைந்தாலும், அடுத்து இன்டேரக்டா காரணம் என்று நிங்கள் தான் கூழு கழிச்சி போது அன்னிக்கு பறைஞ்சது.” என்றாள்.
சார்லஸ் தலையில் கைவைத்து, “சாரா… தீதும் நன்றும் பிறர்தர வாரா. தமிழ்ல சொல்வாங்க.
நல்லதும் கெட்டதும் மத்தவங்களால கிடையாது. நாம செய்வது தான். அப்படி பார்த்தா ஜோசப்போட காதலி அவசரப்படாம இருந்தா அவளை இந்தளவு காதலிக்கறவனோட மனசு கிடைச்சிருக்கும்.
அவ அவசரப்பட்டு இறந்துட்டா. இந்த உலகத்துல காதல் மட்டும் தான் இருக்கா சாரா? இப்ப பாரு… அவனோட அப்பா அம்மா ஜோசப்பே கதினு இருக்காங்க.
அதுக்காக கிரேஸ் விஷயத்துல நான் அவங்களை சொல்ல மாட்டேன். பிகாஸ் அவ சின்ன பொண்ணு. நீயும் சின்ன பொண்ணு. பத்து வயசுல என்ன மெச்சூரிட்டி இருக்கும்.
நீ ஆசையா ராட்டினம் ஏற கூப்பிட்ட. அவ ஒருவிதமான பயத்தோட தான் வந்தா. ராட்டினம் பழுதாகி அவ பயத்தை எக்ஸ்ட்ரா ஆனதுல, அவளை அறியாம தள்ளாடி கீழே விழுந்திருப்பா. நம்ம உடம்புல எப்ப எந்தந்த ஹார்மோன் சுரக்கணுமோ அந்தளவு தான் சுரக்கணும். பயத்தோட ஹார்மோன் அதிகமாக அவ கண்ட்ரோல் இல்லாம நடுங்கி மனசாலயும் பயந்து ராட்டினம் ஷேக் ஆகவும் அவ ஸ்கிட் ஆகியிருக்கலாம்.
இது விபத்து மட்டும் தான் சாரா. இதுல நீ எந்த பங்கும் வகிக்கலை. இதுக்கு பேரு விதி. கிரேஸ் அன்னிக்கு இறக்கணும் என்றது விதி.
சப்போஸ் கிரேஸ் ராட்டினம் ஏறாம ராட்டினம் அப்படியே கிரேஸ் மேல விழுந்து இறந்திருந்தா உனக்கு இந்த தாட்ஸ் வந்திருக்காது.” என்றா கூற, சாரா அவ்விடம் சற்று குழம்பினாள்.
அவள் எதிர்த்து வாதாடாமல் இருக்கவே, அவளது கையை பிடித்து, “இங்க பாரு… அப்படியே நீ தப்பு பண்ணியதா நினைச்சா கர்த்தரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேளு. கர்த்தர் மன்னிப்பார். அறியாத வயசுல செய்த விஷயத்தினால் இதெல்வாம் நடந்ததுனு சொல்லு.
நம்ம ஆண்டவர் எப்பேர்பட்ட பாவங்களை கூட மன்னிச்சி இருக்கார். நீ தப்பு செய்ததா நினைப்பதற்கு மன்னிக்க மாட்டாரா?” என்று கேட்டான்.
சாரா மூக்குறிந்து, “நான் சில சமயம் அப்படி யோசித்து மட்டுமே மனதை மாத்த முயற்சி செய்வேன் கேட்டல்லா. பட்சே… காலேஜ் படிக்கறச்ச அப்படி தான் புத்தியில் கூட்டியது. ஆனில் ஏதாவது ஒரு சம்பவம் கிரேஸை நினைவுப்படுத்திவிடும்.
நம்மட விவாகம் நடக்கறச்ச, மேத்யூ மெர்ஸி விவாகம் நடந்ததே. அப்ப என்ட மனதில் அங்கே மெர்ஸியை என் சகோதரி கிரேஸை நான் கண்டேன். மனசில் கிரேஸுக்கும் எனக்கும் ஒரே நாளில் விவாகம் நடந்தேறியது போல என் கற்பனைக்கு தோனில்லா.” என்றதும், சார்லஸ் கண்கள் சுருங்கியது.
“ஒரிரு வினாடியில் அங்கே மெர்ஸி ஆனி இருப்பது புத்திக்கு தெளிவாயி. கிரேஸ் தான் ஆண்டவருக்கு நெருக்கமாயி.” என்றதும் சார்லஸ் இதயம் நிம்மதியானது. நல்லவேளை கற்பனை உலகத்தில் வாழவில்லை.
கிரேஸுக்கு இஷ்டமானதெல்லாம் எனிக்கு நினைவில் உண்டு. அம்மே அச்சனல்லாம் கூட மறந்து போயி. பட்சே என்னால் மறக்கில்லா. மறக்க முடில்லா.
ஏதாவது அவள் ஞாபகங்கள் என் மூளையில் வந்து வந்து நின்னு. பட்ஷனம் சாப்பிடில்லா, வஸ்திரம் கண்டில்லா, இஷ்டமான நிறம், அவளென்ட ஷேர் செய்தது எதுவும் என் நினைவில்லிருந்து வெளியேறில்லா” என்று கையை விரித்தாள்.
சார்லஸ் தொண்டையை செருமி, “கூடப்பிறந்த பொண்ணோட பிடிச்ச விஷயம் மறக்காது சாரா. இது நேச்சுரல்” என்றான்.
“ம்ம்.” என்றாள்.
சார்லஸ் எல்லாம் கேட்டுவிட்டு “வேறெதும் மறைக்கலையே.” என்றதும், “இல்ல… நான் ஒவ்வொரு டாக்டரிடமும் இதையே பறைஞ்சேன். ஒன்னு மட்டும் மாத்தி மறைச்சது. நான் கட்டாயப்படுத்தி கிரேஸை அழைச்சதை மறைச்சேன். இவ்வட நிங்களிடம் மட்டுமே நான் மெய் பறைஞ்சது. வேறெதுமில்லா.” என்றாள்.
சார்லஸோ “அப்ப மத்த டாக்டர்ஸிடம் நீ கிரேஸை வலுக்கட்டாயமா அழைச்சிட்டு போனதை சொல்லாம விபத்துல சிஸ்டர் இறந்ததா ட்ரீட்மென்ட் தந்திருப்பாங்க. அதாவது ட்வின் சிஸ்டர் இறப்புக்கான கவுன்சிலிங் பிளஸ் மெடிஸன்.
ஆனா உனக்கு உள்ளுக்குள்ள கிரேஸை நீ தானே அழைச்சிட்டு போனதால, குற்றவுணர்வும் இருந்திருக்கு. அதனால தான் மனசுல இப்பவரை கிரேஸ் நீங்காம இருக்கா.” என்றதும் சாரா “மேபீ” என்றாள்.
“ம்ம்ம்” என்று பிரெட் ஆம்லேட்டை சாப்பிட்டு வாய் துடைக்காமல் இருக்க, அவள் உதட்டை கைகளை துடைத்து விட்டான்.
அனைத்தும் நல்விதமாக கேட்டு பேசியவனிடம், “டாக்டர் சாரே… நிர்மலா ஆன்ட்டியிடம் நிங்கள் என்னை நேசிப்பதா பறைஞ்சதை கேட்டேன். அது பொய்யோ? கர்த்தர் முன்னே கைப்பிடிச்ச காரியத்தால் உங்கள் கடமைனு நிங்கள் எடுத்துக்க வேண்டா. நிங்களுக்கு என் மீது இஷ்டமில்லாயின் நான் என்ட வீட்டுக்கு போயி. நான் உங்களை கஷ்டப்படுத்தில்லா.” என்றாள்.
சார்லஸ் சாரா பேசி முடித்ததும் அவளை நெருங்கி வந்தவன், அவளை தாடையை நிமிர்த்திட, கலக்கத்துடன் ஏறிட்டாள்.
சார்லஸ் சாராவின் இருவிழிகளில் கலந்தவன், அவளிதழில் தன் இதழை பதித்து, அழுத்தமான ஆழ்ந்த முத்தங்களை விதைத்தான்.
சாராவின் மூளைக்குள் இருந்த பல்
வேறு கேள்விகளும் குழப்பங்களும் நொடியில் மாயமாய் மறைந்து, கண்களை இறுக மூடினாள்.
-தொடரும்.

Sara chilly girl. She depressed herself for an accidental incident. Charles did correct counsellings and medicine. Very intresting sis
👌👌👌👌👌💕💕💕💕💕💕
பிரியமானவரே என் தேதூதனே…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 14)
அப்பாடா..! ஒருவழியா மனசுல இருந்த அழுத்தத்தையெல்லாம் சாரா, சார்லஸ் கிட்ட சொல்லி முடிச்சிட்டாள். ஆனால், ரிலீஃப் ஆவாள்ன்னு பார்த்தால் அதான் இல்லை, திரும்ப, திரும்ப கில்டியாவே ஃபீல் பண்றா பாவம். சாரா சொன்ன மாதிரி சில விஷயத்தையெல்லாம் அத்தனை சீக்கிரமா மறக்க முடியறதில்லை. அதுவும் அவளோட கூடப் பிறந்த டுவீன்ஸ் என்கிறபோது எப்படி அத்தனை சீக்கிரமா ஃபீலிங் ஆஃப் சாரொவிலயிருந்து வெளி வர முடியும்…? ஒருவேளை, சார்லஸ் கணவனா இப்படி ஏதாவது ட்ரை பண்ணா கண்டிப்பா அவ அந்த மனவுளைச்சல்ல இருந்து வெளியே வந்துடுவான்னு தோணுது.
😌😌😌
CRVS (or) CRVS 2797
Ipo nee sonnatha ketathuku apram than engaluke nimmathi ah iruku charles sonna mari matha doctors unaku twin loss ku treat pani irukanga ipo full unamium charles kitta sollita la athuve unake periya relief ah irukum eni konjam yosipa unaku ethanmari porumaiya pesi puriya vachiten charles
சூப்பர்