அத்தியாயம்-16
“அவர் எல்லாவற்றையும் நன்மைக்கே நடத்துகிறார்.” -ரோமர்
“தேவனுடைய கிருபை போதுமானது.” -2 கொரிந்தியர்
நேற்றைய இரவில் சாராவின் உடலும் மனமும் சோர்ந்தாலும் முடிவில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளி வழங்கி மகிழ்ச்சி கடலில் முழ்கடித்தான் சார்லஸ்.
அந்த அழகான தருணங்கள் தந்த இதத்தில் நிம்மதியாக சார்லஸின் அருகில் சாய்ந்து கிடந்தாள் சாரா.
ஆனால் அந்த நிம்மதி முழுமையான நிம்மதியாக இல்லை.
ஒரு பக்கம்… அவள் இதயம் இன்பத்தால் நிரம்பி இருந்தது.
மற்றொரு பக்கம்… நிர்மலாவின் வார்த்தைகள்… மெதுவாக மனதுக்குள் மீண்டும் எழ ஆரம்பித்தது.
“அவன் உன்னை பாவம் பார்த்து தான் நேசிப்பான்…” என்றது நினைவு வர, அவள் கண்கள் மெதுவாக திறந்தது.
சார்லஸ் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனது கை இன்னும் அவளது இடுப்பின் மேல் சேர்த்து சாய்ந்தபடி இருந்தது. அந்த தொடுதல்… அவளுக்கு பாதுகாப்பு கொடுத்தது. அதே நேரம்… ‘இது காலம் முழுமையும் தனக்கு கிடைக்குமா?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அந்த எண்ணம் பிறக்கவும், குழந்தை தனக்கான பொம்மையை அணைத்துக் கொள்வது போல அவள் சார்லஸ் கையை பிடித்தாள்.
அதை தன் கன்னத்துக்கு சேர்த்தாள்.
‘நிங்கள் மாறிட்டா என்ன செய்வேன் டாக்டர் சாரே’ என்ற கேள்வி… சொல்லாமல் உள்ளுக்குள் விழுந்தது.
அடுத்த நாள் காலை மலர்ந்திட,
சாரா சீக்கிரம் குளித்து முடித்து நின்றாள். சார்லஸ் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.
நேற்று இரவு நடந்ததை நினைத்ததும்… அவள் முகத்தில் ஒரு சிறிய சிவப்பு.
சாரா கிச்சனுக்கு போக நினைத்தாள். எழுந்ததும் குளித்து முடித்ததால் பசி வயிற்றை கிள்ள, சாயா தயாரிக்க கதவை திறந்தாள். வாசல் வரை சென்றதும் சிலை போல நின்று விட்டாள்.
அத்தை நிர்மலா.. அவரை நினைத்ததும், அவளுக்கு இன்னும் ஒரு தடையாக இருந்தது.
சில நொடிகள் தயங்கினாள்.
பின் சார்லஸ் இருக்கும் தைரியத்தால் ஒரு அடியை எடுத்தாள்.
கிச்சனுக்குள் நிர்மலா ஏற்கனவே டீயை தாயாரித்து இருந்தார்.
சாராவை பார்த்ததும் முகத்தை உற்றென்று வைத்தார்.
“நேத்து முழுக்க இந்த பக்கம் வரலை. இன்னிக்கு தான் வர தைரியம் வந்துச்சா?” என்றார் கசப்புடன்.
சாராவின் உள்ளத்தை மீண்டும் கிழித்தது. சிறிது நடுங்கிய குரலில்,
“சாரி ஆன்ட்டி.. நான் சாயா போட்டு தரட்டுமா?” என்றாள்.
நிர்மலா அதிர்ச்சியடைந்தார்.
அவள் எதிர்பார்த்தது இது இல்லை.
கண்ணீருடன் வாயை மூடி மீண்டும் ஓட்டுக்குள் செல்லும் சாராவை தான். ஆனால் சாரா சாரி என்று இயல்பாக கதைக்கவும் கடுமையானார்.
சாரா மெதுவாக சிரிக்க முயன்றாள்.
“நான் இவ்வீட்டோட இன்-லா அல்லே. தைரியம் வந்தில்லோ... ஆன்ட்டி இன்னும் கற்றுக்கொடுக்கில்.. நான் கற்றுக்கும். ஆன்ட்டி எனிக்கு ஒவ்வொன்னாய் சொல்லி தாரும்.” என்றாள்.
வாசலின் அருகில் நின்று கொண்டிருந்தான் சார்லஸ்.
அவன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் மெதுவான ஒரு நிம்மதி.
‘இந்த சாரா அவளோட வால்தனத்தை எடுத்துட்டா. அவளா தனியா நிக்க ஆரம்பிச்சுட்டா’ என்று மென்னகைத்தான்.
அத்துடன் நேற்றெல்லாம் சாராவை தன் இஷ்டத்திற்கு மன்மத லீலையில் முத்தங்கள் தொடுத்து முன்னேறியதில், அவளது முகத்தை புதிதாக பார்த்து ரசித்தான்.
சாரா அடுப்பை ஏற்றினாள்.
கைகளில் இன்னும் லேசான நடுக்கம் இருந்தது. ஆனாலும் நிர்மலா அத்தையை பார்த்து பேசியதே அசாதாரண காரியம் இல்லையே.
அதை செய்துவிட்டாள். இதுவே அவளது முதல் வெற்றி.
நிர்மலா அமைதியாக மகனிருப்பதால் அவளை பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரது உள்ளுக்குள் இன்னும் கோபம் இருந்தாலும்…
இன்று முதல் முறையாக… மகன்
சாராவை ரசித்து பார்ப்பதை கவனித்தார். கூடுதலாக சாராவின் கழுத்தில் சிற்சில ரத்த சிவப்பை கண்டதும், சாராவின் பூரிப்பான வதனமும், மகன் இவளிடம் சரணடைந்ததை கூறிவிட்டது. இதே சாராவை பற்றி தெரியாத போது இந்த விஷயத்தை கண்டால் மகிழ்ந்திருப்பார். இன்றோ ஏதோவொரு காந்தல். அதிலும் சாரா பயப்படும் பெண் இல்லை என்று புரிய ‘இவளுக்கு மகன் தந்த தைரியம் அதான் பேசறா.’ என்று எண்ணினார்.
சார்லஸ் கிச்சன் உள்ளே வந்தான்.
“எனக்கும் சாயா கிடைக்குமா?” என்று எதார்த்தமாக கேட்டான்.
சாரா அப்பொழுது தான் அவனை பார்த்தாள். அவள் கண்களில் இப்போது பயம் இல்லை. வெட்கமும் நாணமும் போட்டிப்போட்டிருந்தது.
அதிலும் சார்லஸின் பேச்சால் ஏற்பட்ட சிறு நம்பிக்கை மட்டும் இருந்தது.
“டாக்டர் சாருக்கு இல்லாமலா?” என்றாள்.
நிர்மலா பாத்திரத்தை டொம்மென்று போட்டுவிட்டு அறைக்கு செல்ல, போர் இன்னும் முடியவில்லை என்று சொல்லாமல் சொன்னார்.
அன்னை சென்றதும், சார்லஸ், “என் மனைவி சாரா எனிக்கு சாயா போட்டு தர, நான் ஆசையா குடிக்க வந்தேன். சாரா மேடம் அங்க என்ன பார்க்கறிங்க? அவங்க ரூமுக்கு போயாச்சு” என்று அணைத்தான்.
“அய்யோ.. டாக்டர் சாரே… இது கிச்சன். நம்மட ரூம் இல்லா. ஆன்ட்டி அங்கிள் சடனே வந்திட்டால், மானம் போயி. முதலில் சாயாவை பிடிங்கள்” என்று தர, “ஓய்.. அவங்க இருக்கற கோபத்துல அப்பா காதை கடிச்சி புண்ணாக்கி நம்மளை பத்தி புலம்பி தள்ளுவாங்க. அவங்களை விடு… நேத்து ஏதாவது காயப்படுத்திட்டேனா?” என்று தோளில் முகம் புதைத்தான்.
“அதே..” என்று கூறிய சாரா “டாக்டர் சாரே.. நிங்கள் மென்மையான ஆளுன்னு ஞான் நினைக்கில், இப்படி மேனி எங்கும் சிவப்பாக்கி வச்சு. நிங்கள் மோசமாயி” என்றதும், சாயாவை பருகினானா சாராவை பருகினானா? இரண்டும் தித்திப்பாய் இறங்கியது போல கள்ளுண்ட போதையில் திளைத்தான்.
“நான் பேட் பாய்னு இப்படி வெட்கப்பட்டு சொன்னா என்ன அர்த்தம். கோபமா சொன்னா.. மேபீ நெக்ஸ்ட் கன்சல்ட் பண்ணுவேன்.” என்று சிரிப்புடன் கூற, “எனிக்கு வெட்கமாயி. சாயா குடிச்சிட்டு போயிக்கோ” என்று அதட்டினாள்.
“பார்டா… அதட்டறிங்க எங்க போகணும் ஹனிமூனுக்காக? இப்ப போனா நல்லா தான் இருக்கும்.” என்று அவளது சுருட்டை முடியை ஒதுக்கி வைத்து, “ஆர் யூ ஹாப்பி?” என்றான் விளையாட்டை ஏறக்கட்டி வைத்து மென்மையாக.
“இந்த நிமிஷம் சாரா ஹாப்பியாயி. அதன்ட காரணம் டாக்டர் சாரே மட்டும். அதுக்கென்னு ஹனிமூன் போகணும்னு அவசியமில்லா. பட்சே.. வேறெங்கும் போனால் நான் ஆனந்தப்படும்.” என்றாள்.
சார்லஸ் அவளது மனதை புரிந்தவனாக அடுத்தடுத்து வேலையை கவனித்தான்.
அவனது பேஷண்டை ஜோசப்பை கவனிக்க ஓடினான்.
ஜோசப் அவ்வளவு எளிதில மனதை மாற்றிட இயலாதவனாக டாக்டருக்கு இடைஞ்சல் தந்தான்.
மெடிஸன் சிரஞ்சை பிய்த்து எறிந்தான். அதனால் ரத்தம் தெளித்தது. வேறொரு டாக்டர் மற்ற உடல்நிலை கோளாறுக்கு வைத்தியம் பார்க்க அவரை அடிக்க சென்றான். சார்லஸை மட்டுமே நெருங்க விட்டான். அதனால் மற்ற டாக்டரும் சார்லஸை கூடவே நிறத்தி சிகிச்சை பார்த்தனர்.
ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து புரிய வைத்தான்.
அங்கிருந்த டாக்டர் கூட, “என்ன சார்லஸ் உங்களை தவிர எந்த டாக்டரையும் நெருங்க விடமாட்டறான். பைத்தியம் மாதிரி ஒரு நிமிஷத்தில் இடத்தையே ரணகளம் பண்ணிட்டான்.
என் சர்வீஸ்ல இந்த மாதிரி கேஸை நான் பார்த்ததில்லை” என்று களைப்படைந்தார்.
“நேரம் கடத்திட்டாங்க சார். அந்த பொண்ணு இறந்தப்ப மனசால அதிகம் உடைந்திருக்கான். தண்ணி தம்முனு சீரழியவும், அதெல்லாம் எல்லா பசங்களும் பழகிக்கறதுனு விட்டுட்டாங்க. இவன் டிரக்ஸ் எடுத்துக்க ஆரம்பிச்சதும் தான் அவங்க பதறி என்னிடம் அழைச்சிட்டு வந்தாங்க.
இப்ப டிரக்ஸ் எடுத்துக்கறது குறைவு. முன்ன தினமும் எடுத்துப்பான். போதையிலேயே இருந்திருக்கான். வெளியே கூட்டிட்டா போய் சிகிச்சை பார்க்கவே பயந்திருக்காங்க. இரண்டு முறை சூசைட் பண்ணி வந்தப்ப அந்த டாக்டர் கால்ல விழுந்து தான் வந்தாங்க.
நான் கவுன்சிலிங் தந்துட்டு இருக்கவும் டிரக்ஸ் எடுத்துக்கலைனு சொன்னாங்க.
என்னோட மேரேஜ் பிசில இரண்டு சிட்டிங் வரசொல்ல முடியலை. அதுல அகைன் டிரக்ஸ் எடுத்துட்டான். இப்ப திரும்ப பேரண்ட்ஸை பயமுறுத்தி இந்த நிலை.
என் கணிப்பு சரியா இருந்தா இவனை ரெகுலரா ஹாஸ்பிடல்ல வச்சி பார்க்கணும் சார். அதையும் சொல்லிட்டேன். பேரண்ட்ஸ் மறுத்து நிற்கறாங்க. ஒரே பையன் பைத்தியம்னு சொல்வாங்க. ஹாஸ்பிடல்ல கரண்ட் ஷாக் தருவாங்க அதுயிதுனு காரணம் சொல்லி டிலே பண்ணறாங்க அவங்க அம்மா.” என்றான் சார்லஸ்
டாக்டர் ஐயப்பன் என்பவரோ ஜோசப்பை பார்த்தபடி, “அட அவங்க அம்மா உயிரை காப்பாற்ற சொல்லி கெஞ்சறாங்க சார்லஸ். ஆனா அவங்க அப்பா… இதுக்கு மேல இதே மாதிரி போனா பையனுக்கு ட்ரீட்மென்ட் பார்த்தா பயப்படறார்.
அவனை இழக்க நேரும்னு தெளிவா புரிந்து அழறார்.
பேஷண்டோட கிரிட்டிகல் சிட்டுவேஷனை அவருக்கு புரியுது. மகன் மாற மாட்டான்னு. காதல் தோல்விக்கு சாக ட்ரை பண்ணறான். தண்ணி கஞ்சா அடிக்கறான். பேசாம மனசுல அவன் அந்த பொண்ணோட இறப்புக்கு இவன் சாக ஆசைப்படறான். மருந்து மாத்திரை எல்லாம் இனி சேராது. இவனை அந்த பொண்ணு ஆவியா துரத்தறான்னு பேசறார்.
அதெல்லாம் இல்லிங்க கூடவே இருந்து பார்த்துக்கணும்னு சொன்னா காதுல வாங்க மாட்டேங்கறார். யாரோ அவரிடம் பாதரிடம் ஜெபிக்க மட்டுமே சொல்லியிருக்கார். நான் பாதரிடம் காட்டணும்னு இப்பவே அனுமதி கேட்கறார்.” என்றார் அவர்.
சார்லஸும் அவன் பங்கிற்கு, “உண்மையிலேயே நான் அவங்க அம்மாவுக்காக தான் சார் போராடுறேன். அவங்க அப்பா ஒவ்வொரு முறையும் கிரிடிகெல் ஆகறப்ப தான் கால் பண்ணறார். ரெகுலர் சிட்டிங் வரமாட்டேங்கறாங்க. கொஞ்சம் நல்லாயிருந்தா விட்டுடறாங்க. இவங்களுக்கு புரிய வச்சி நான் படற அவஸ்தை.. எங்க இந்த பேஷண்ட் நிலை என்னாகும்னு நான் பயப்படறேன்.” என்று இருவரும் ஜோசப்பை கண்டு பேசிக்கொண்டனர்.
“சார்லஸ்… ஏதோ அந்த பையனை இன்னும் பத்து நாளைக்கு தினமும் சந்தித்து பேசுங்க. அவங்க அப்பா அம்மாவிடமும் தான். ஏன்னா நீங்கன்னா தான் சொல்வதை கேட்கறாங்க. நான் ஐய்யப்பனா போயிட்டேன்.
அதுவுமில்லாம உயிரை காப்பாத்தறது கவுன்சீலிங் தர்றது நான் தான் என்றாலும், ஜோசப்புக்கு மனோதத்துவ டாக்ராக மனசோட நிறைய பேச வேண்டிஉள்ளது. ஹாஸ்பிடல்லயே இருந்து அதை ரெக்கவர் பண்ணிட்டு போக சொல்லுங்க” என்று கோரிக்கை வைத்தார்.
வில்லியம்ஸ் இந்து மக்களை நம்பாததாக ஐய்யப்பன் வருத்தத்துடன் கூறியதை சுட்டிக்காட்டினார்.
ஒரு சிலர் இன்னமும் இருக்க தான் செய்கின்றார்கள். ஆள் பார்த்து மதம் பார்த்து, பொய் சொல்லிவிடுவதாக. உயிரை விடும் தருணம் ஜோசப் நிலையிலிருக்க, விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.
“சரிங்க சார். அவருக்கு புரிய மாதிரி எடுத்து சொல்லறேன்” என்று சார்லஸ் கூறினார்.
அடுத்து டாக்டர் சென்றதும் வில்லியம்ஸ் அவரது மனைவி தபித்தாள் வந்து நிற்க “சார் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாமா?” என்று கேட்டார் வில்லியம்ஸ்.
சார்லஸோ “கர்த்தரே..” என்று கத்தியவன், ஏன் சார்… உங்க பையன் எந்த நிலையில் இருக்கான்னு தெரிந்து தான் பேசறிங்களா? பையன் கண் திறந்து கண் முன்ன உயிரோட நடமாடினா மட்டும் போதும்னு நினைக்கறிங்களே… அவன் அடிக்கடி சாகணும்னு பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டு இருக்கான். அதுக்கு ட்ரீட்மென்ட் பார்க்க வேண்டாம். அவன் மனசுல சாகணும் என்ற எண்ணத்தை களைய வேண்டாம்.
எப்ப பாரு லேட் நைட் என்றாலும் போன் போட்டு கூப்பிடறிங்க. ஒரே சர்ச்ல பார்க்கறவர் என்றதால நானும் நேரம் காலம் எல்லாம் பார்க்காம வர்றேன். ஆனா ஓரளவு சரியானதும் என்கிட்ட கவுன்சீலிங் அழைச்சிட்டு வரமாட்டேங்கறிங்க.
ஒன்னு ட்ரீட்மென்ட் முழுமையா கன்டினியூ பண்ணுங்க. இல்லை.. உங்க பையனை சாகட்டும்னு விடபோறிங்களா? தெளிவா சொல்லுங்க.” என்று எரிந்து விழுந்தான்.
வில்லியம்ஸ் வாய் மூடி அழுதார். தபித்தாளோ, “டாக்டர் சாரே மன்னிச்சு. இவ்விட மினிமம் மூனு மாசம் அல்லா மேக்ஸிமம் ஆறுமாசம் ஹாஸ்பிடலில் இருக்க சொல்லி டாக்டர் ஐய்யப்பன் போயி. எங்கள் மகன் அப்படி இ-ஹாஸ்பிடலில் இருந்தால் பார்க்கும் மனுஷாள் அவனை ஒரு பிராந்தாக கேலி செய்யும். அதுக்கு பயந்தே வில்லியம்ஸ் ஜோசப்பை அழைச்சிட்டு வீட்டுக்கு ஓடுது.” என்று தெளிவுப்படுத்த சார்லஸ் வில்லியம்ஸை பார்வையிட்டான்.
“ஆமா சாரே… இப்பவே எங்க பக்கத்தில் சிலருக்கு ஜோசப் என்றாலே லேசா பைத்தியம்னு பறைஞ்சிட்டு இருக்காங்க. இதுல ஹாஸ்பிடலில் வாசமிருந்தால் எண்ட மகன் முழு பைத்தியம் என்று கேலி செய்யும். ஏற்கனவே ஜோசப் பீடி சிகரேட் கஞ்சா மதுனு இருக்கான். இதுல பைத்தியம்னு பட்டம் கிடைச்சிட்டா அடுத்து அவனை மத்தவங்க மதிக்கமாட்டாங்க. அதுக்குன்னு தான் நான் உடனே உடனே வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுறது. யாராவது கேட்டால் அந்த பெண்குட்டி நினைப்பில் தற்கொலை செய்வதாக சொல்லி பூசி மொழுகிடுவேன். உண்மையும் அது தான். ஆனால் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் ரெகுலரானால் என்ட மகன் பைத்தியம் என்ற இன்னொரு பட்டத்தை சுமக்கணும்.
என் மகன் ஜோசப் வாழ்வில் சில கஷ்டத்தையாவது தவிர்க்க நினைக்கறேன்.” என்றார்.
சார்லஸிற்கு ஏனோ தேவையற்று சாரா நினைவு வந்தது. இங்கே சாராவின் கவுன்சீலிங் கூட கடைசியில் படித்த, சீனியர் டாக்டர் ரிச்சர்ட்டின் மனைவி ஸ்டெல்லா அவரே பைத்தியம் என்று பட்டத்தை வழங்கிவிட்டாரே. மற்றவர்கள் எம்மாத்திரம்.’ என்று வில்லியமை கண்டான்.
சார்லஸோ “அடுத்தவங்க என்ன பட்டம் தர்றாங்கனு யோசிக்காதிங்க வில்லியம். உங்க பையன் உயிர் முக்கியம் ஆச்சே. நீங்க கண் கொத்தி பாம்பா பார்த்தே இது மூன்றாவது சூசைட் அட்டம்ட். நீங்க கொஞ்சம் கவனம் சிதறி இருந்து ஜோசப் இறந்துட்டா?” என்று கூற அதற்கே வில்லியம் பதறினார்.
“நெருப்புன்னா வாய் பொத்துடாது சார். ஆனா ஜோசப்புக்கு கம்பள்சரி ஹாஸ்பிடல்ல வச்சி ட்ரீட்மென்ட் அவசியம். புரிந்துக்கோங்க.. இதுக்கு மேல நிலைமை புரியாம நடந்துக்காதிங்க.
அப்பறம் மதம் சாதி பார்த்து இங்க எந்த மருத்துவரும் ட்ரீட்மென்ட் பார்க்க மாட்டாங்க. டாக்டர்ஸுக்கு எல்லாருமே ஒன்னு தான். உங்களுக்கு கேள்விப்பட்ட ஒரு நியூஸ் சொல்லட்டுமா? பாகிஸ்தான்ல இருந்து நம்ம நாட்டுக்கு ட்ரீட்மென்ட் வந்தாலும், இங்கயிருக்கற டாக்டர் அந்த பேஷண்ட் குழந்தையா பெரியவரா பெண்களா யாருனு பார்க்க மாட்டாங்க. நல்லவிதமா ட்ரீட்மென்ட் பார்த்து தான் வழியனுப்புவாங்க.
டாக்டர்ஸை நம்புங்க. அதுவும் ஐயப்பன் சார் ரொம்ப பீல் பண்ணறார். அவரோட சிகிச்சையை நீங்க கன்சிடர் பண்ண மாட்டேங்கறிங்கனு. என்னை விட ஜோசபை இரண்டு முறை பிழைக்க வச்சவர் அவர் தான். நாளைக்கே ஜோசப்பை ஸ்பெஷல் வார்டுல போட்டு பார்த்துக்க எல்லா முறையும் பாருங்க” என்று கட்டளையிட, வில்லியம்ஸ் தயக்கமாய் தலையாட்டினார்.
மகன் உயிரை இந்த முறை கஷ்டப்பட்டு அல்லவா மீட்டு எடுத்தது.
சார்லஸ் அவரை தட்டிக் கொ
டுத்து வீட்டுக்கு சென்றான்.
திரும்பும் வழியெல்லாம் ஜோசப், சாரா இருவரது நினைவுகள் தான் சூழ்ந்திருந்தது.
-தொடரும்.

பிரியமானவரே என் தேதூதனே…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 16)
பாவம் தான் ஜோசப்போட நிலைமை, இந்த பெத்தவங்களுக்கு பசங்களோட நிலைமையே புரிய மாட்டேங்குது. அவங்களை சொல்லியும் குத்தமில்லை, இந்த சொசைட்டி ஒருத்தடவை முத்திரை குத்திச்சின்னா அது காலத்தாலயும் அழியுறதில்லையே…
அதுக்குத்தானே எல்லாரும் பயப்படறது.
இனியாவது இந்த நிர்மலா அடங்குவாங்களா, இல்லையா ?
😌😌😌
CRVS (or) CRVS 2797
Charles told the truth.very intresting sis.
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 waiting for nxt epi 😍
Ípjoesph nilamai romba kastam than pethavanga mathavanga pechiiku alaganum nu tha yosikuranga paiyan nalla padiya sari agi thirumba um ninaikama antha time sari aana pothuma. Ipo tha joseph side la yosikura mari sara vaium yosikuran athuku sariyana mudiu eduthu sara inum konjam sari pannanum , panuvan charles
Super sis nice epi 👌😍❤️ sara eppdi than bayapadama mamiyar munnadi varanum super 😘
Nice
மன அழுத்தம் வந்தால் இன்னும் பைத்தியம் நினைக்கறங்கா