Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 33

மீண்டும் மலரும் உறவுகள் 33

அக்கா என்று நந்தா கத்தியவுடன்..என்னடா வேற எப்படி பேசணும்னு நினைக்கிற.

அதுக்காக இப்படியா  .

அக்கா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே .

ஆனா ,இப்போ..

இப்போ இப்போனு வருஷகணக்கா இழுத்துட்டு இருக்க இதுக்கு மேல உனக்கு டைம் தர முடியாது.

சரி ஒரு ஒரு மாசம் டைம் கொடு.

“நான் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்னு சொல்றேன். நீ ஒரு மாசம் டைம் கேக்குற” .

அக்கா என்னோட நிலைமையில் இருந்தும் கொஞ்சம் யோசி.

என்ன டா உன்னோட  நிலைமை .யாராச்சும் விரும்புறியான்னு கேட்டேன் இந்த செகண்ட் வரைக்கும் அதுக்கு பதில் இல்லை .

“யாரும் மனசுல இல்லன்றப்ப உனக்கு எதுக்கு  இந்த டைம் எனக்கு பதில் சொல்லு” .

ஏதோ ஒரு பொண்ணு மனசுல இருக்கு இல்ல .

அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது .அதனால அந்த பொண்ண மறக்கணும் .

இந்த மாதிரி ஏதாவது ஒரு ரீசன் இருந்தா சரி நான் ஒத்துப்பேன் .

எதுவுமே இல்லாம வருஷ கணக்கா எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்க .

இனி எனக்கு  எந்த காரணமும் வேண்டாம் அவ்வளவுதான் என்று சொல்ல .

சரி நீ பார்த்து வச்சிருக்க பொண்ணு யாரு என்று விட்டு அமைதியாக நிறுத்தினான்.

தேவி தனது மகனைப் பார்க்க .

உதயா சிரித்த முகமாக தியா
உன்னுடைய ஸ்டூடண்ட் சந்தியா என்று சொல்ல.

அதிர்ச்சியாக தனது அக்கா மற்றும் தனது மச்சான் இருவரையும் பார்த்தவன் .

“பிளான் பண்ணி இந்த வேலை பண்ணி இருக்கீங்களா”.

உன்னோட வேலை தானடா. “அவளை பார்த்து பேசினது யாரு ?நீயா உங்க அம்மாவா?”

நான் தான் பேசினேன் மாமா .அவளுக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பம் .

“நிலைமை தெரிஞ்சு ஏன்டா இப்படி விளையாடுறிங்க”.

நிலைமை தெரிஞ்சதால்தான் மாமா விளையாடுறேன்.

அவளை நீ விட்டு விலக வேறு ஏதாவது காரணம் இருந்தால் கூட விலகி இருப்பையோ இல்லையோ .

ஆன ,*அவங்க அப்பா செஞ்ச தப்புக்கு தியா என்ன மாமா பண்ணுவா ?அவளுக்கு தண்டனை தருகிறாயா? “

டேய் லூசு மாதிரி பேசாத.

கொஞ்ச நாள் ஆனா ,அவளே மாறிடுவா .

உன்னாலேயே மாற முடியலை மாமா.நீ அவள லவ் பன்றனு நான் சொல்ல மாட்டேன்.

ஆனா ,”இந்த செகண்ட் வரைக்கும் நீ ஏதோ  ஒரு  மூலையில அவளை பத்தி யோசிச்ச தான”.

“உனக்கு இப்போ அவளை விட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க கூட உன் மனசு ஏத்துக்கல “.

ஆனா, அவ உன்ன உண்மையா விரும்புற மாமா. சும்மா இன்பெக்க்ஷன் வயசுக்கோளாறு அப்படின்னு சொல்லிட்டு போயிடாத .

இன்ஃபக்ஷன் க்கும் உண்மையான காதலுக்கும் வித்தியாசம் உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும் .

அவ உன்னை விரும்புறது உண்மை .அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் .

இனி ஒத்துக்கொள்வதும்  இல்லை ,அவங்க அப்பா செஞ்ச தப்புக்கு தண்டனை அப்படின்னு சொல்லி நீ அவளை விட்டு விலகி அவளுக்கு வலி தருகிறாயா? அப்படின்றது உன் கைல தான் இருக்கு என்று விட்டு செல்ல .

நான் எப்ப டா சொன்னேன். அவங்க அப்பா செஞ்ச தப்புக்கு அவளுக்கு தண்டனை தரணும்னு.

நீ இனிமே கொடுக்க போறது அப்படித்தான் இருக்கும் மாமா .

“கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட அது அப்படி தான் இருக்கும் டா”.

எப்படி இருக்கும். என் மாமா எதையும் சொல்லிக் காட்ட மாட்டார் எனக்கு தெரியும்.

எனக்கும் ,எங்க அம்மாவுக்கும் நம்பிக்கை இருக்கு .

உன் கையில தான் இனி இருக்கு மாமா.

“உண்மையாவே நீ ஒத்துக்கிட்டா நானும் அம்மாவும் இங்க இருப்போம் .இல்லன்னா உண்மையாவே .பொய் சொல்லல நாங்க கிளம்பிடுவோம்*.

நான் வளர்ந்துட்டேன் .நீ நினைச்சாலும் சரி எப்படி நினைத்தாலும் சரி .

உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியும் என்று சொல்லு .

இல்லையா நீ உன் வாழ்க்கை பார்த்துக்கோ .இன்னும் ஒரு வருஷம் எங்க அம்மா எனக்காக கஷ்டப்பட்டா .

அதுக்கப்புறம் நான் எங்க அம்மாவை பாத்துக்குறேன். என்றவுடன் அவனை ஓங்கி அறைந்தே இருந்தான் நந்தா.

“இத்தனை வருஷமா நீ தான் எங்க அக்காவ பாத்துக்கிட்டையா டா “.

ஏன்?” எங்க அக்காவ பாத்துக்க எனக்கு தெரியாதா? ரொம்ப தாண்டா வளர்ந்துட்ட” .

ரொம்ப தான் பேசுறீங்க அம்மாவும் ,பிள்ளையும்.

ஆனா” என்ன  உசுரோட கொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க அம்மாவும் ,பிள்ளையும் கல்யாணம் பண்ணிக்கிறேன்” .

பண்ணி தொலைகிறேன் உங்களுக்காக தான் .

என் முழு சம்மதத்தோடு இல்லை .மனசு வந்து சொல்றேன் எனக்கு இதுல விருப்பமில்லை .

உங்க விருப்பத்துக்காக மட்டும் தான்.

“இப்ப மட்டும் உங்களுக்கு சந்தோஷமா ?என்னோட முழு சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணி வைக்கிறதில “என்று விட்டு தன் அக்காவை அடிபட்டு பார்வை பார்த்துவிட்டு .

நந்தா வேகமாக அவனது அறைக்குச் சென்று கதவை சாத்த சென்றவன் .

தனது கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்து விட்டு வேகமாக கதவை சாற்றிக் கொண்டு கட்டிலில்  வந்து தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

நந்தா அவனது அறைக்கு சென்ற பிறகு உதயா தேவியிடம்  மா என்னம்மா பண்ணி வச்சிருக்க.

மாமா கிட்ட பேச தான் சொன்னேன் .அதுக்காக இப்பயே வா .

இன்னைக்கேவா .இவ்வளவு அவசரமா வா அதுவும்  இந்த அளவுக்கு பேசி இருக்க.

தனது மகனை முறைத்த தேவி .வேற என்ன டா எப்படி டா  பேசணும்னு நினைச்சுட்டு இருக்க .

அவனுக்கு சொன்னது தான் உனக்கும் .வயசு ஏறிக்கிட்டே இருக்கு அவ்வளவுதான் .

ஆனா, என்று  விட்டு நிறுத்த.

எனக்கு தியாவை புடிக்காம நான் உன்கிட்ட இது ஒத்து வராது சரியா வராதுன்னு சொல்லல சரியா?

சரி மா விடு .பசிக்குது சாப்பாடு போய் ஏதாவது செய்றியா.

ஏன்? ஒரு நாள் நீ செஞ்ச குறைஞ்சா போயிடுவீங்க போய் செய் எனக்கும் பசிக்குது உங்ககிட்ட தொண்ட தண்ணி வத்த கத்தி கத்தி என்று முனக.

தேவி டைனிங் டேபிள் அருகில் உட்கார்ந்து விட.

உதயா தனது அம்மா ,மாமா இருவரையும் பார்த்தவன்.

வேறு அதுவும் பேசாமல் சமையலறை நோக்கி செல்ல .

ஃப்ரிட்ஜை திறந்தால் மாவு இல்லை என்று தெரிந்தவுடன் தன் தாயைப் பார்த்து முறைத்துவிட்டு .

கோதுமை மாவை தேடி எடுத்து சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு .

வெங்காயம் எடுத்துக் கொண்டு வந்து உரித்து குருமாவிற்கு தேவையான அனைத்தும் செய்துவிட்டு குருமா வைத்துக் கொண்டிருந்தான் .

இங்கு அறைக்குள் வந்த நந்தாவிற்கு தான் மனம் தாங்கவில்லை .

தனது அக்காவும், தனது மச்சானும் என்ன வார்த்தை சொல்லிவிட்டார்கள் என்று எண்ணி புழுங்கினான் .

தன் நல்லதுக்கு என்று எண்ணினாலும் ,அவளுக்கும் தனக்கும் எத்தனை வயது வித்தியாசம் இருக்கிறது .

“அதுவும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இது தேவையா ?”என்று யோசித்தான் .

அதுவும் நான் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ,என்னை விட்டு சென்று விடுவார்களா ?

“அவ்வளவு தான் அவர்களுக்கு என் மீது பாசமா ?”என்று விட்டு அந்த பாசத்தால் தானே இந்த அளவிற்கு வந்து நிற்கிறார்கள் என்பதையும் உணர்ந்தான்.

நேரம் கழித்து வீட்டிற்கு வந்தது வேறு ,இவர்கள் பேச்சின் விளைவால் தலைவலி ஏற்பட்டிருந்தது .

அதிகப்படியான தலைவலியாலும் கோவத்தாலும் தலை மீது வைத்திருந்த கையை உதற.

அப்பொழுது அவனது ரூம் கதவு தட்டப்பட்டது.

கோபத்துடனே வந்து கதவைத் திறக்க .வெளியே தனது மச்சான் டீ டம்ளருடன் நிற்க .

எதுவும் பேசாமல் அவனை முறைத்துக்கொண்டு பார்க்க .

உனக்கு தலைவலிக்கும் எனக்கு தெரியும் மாமா .

இந்த டீயை குடி நான் வேற எதுவும் பேச மாட்டேன் என்று நந்தாவின் கையில் தினித்துவிட்டு உதயா சென்றுவிட .

நந்தா போகும் தனது மச்சானை பார்த்து சிரித்துவிட்டு அந்த டீயை குடித்துவிட்டு சிறிது ஆசுவாசமானவன் .

தன் முகத்தை அழுத்த தேய்த்து கழுவிக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்தவன் .

வெளியில் வர சாப்பாடு ரெடியாகி இருந்தது .உதயா அனைத்தையும் டைனிங் டேபிள் மீது எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.

அக்கா என்று நந்தா தேவியின் தோளில் கை வைக்க எதுவும் பேச வேண்டாம் நந்தா வா சாப்பிடலாம் .

இப்பொழுது இருக்கும் சூழ்நிலை எதுவும் பேசிவிட வேண்டாம் என்று தோன்றியதால் நந்தாவும் அமைதியாக சாப்பிட உட்கார்ந்தான்.

மூவரும் ஒன்றாக உட்க்கார்ந்து சாப்பிட.

நந்தா சாப்பிட்ட உடன் அவனது ரூமுக்கு சென்றுவிட.

மா என்னம்மா முடிவு பண்ணி இருக்க என்றான் உதயா.

நான் உன் மாமா கிட்ட  சொன்னது  தான் இன்னும் ஒரு மாசத்துல அவனுக்கு கல்யாணத்தை முடிச்சிடனும் அவ்வளவு தான் விடு என்று விட்டு தேவி அவருடைய அறைக்கு சென்று விட.

“தேவியை பார்த்து சிரித்துக் கொண்ட உதயா ஒன்னு தம்பி கிட்ட கெஞ்ச வேண்டியது ,இல்லை மிஞ்ச வேண்டியது” என்று லேசாக சிரித்துக் கொண்டான் .

உதயா, நந்தா இருக்கும் ரூமுக்கு வர .இருவரும் ஒரே அறையில் படுத்துக்கொள்வதால் உள்ளே வர.

நந்தா அமைதியாக படுத்திருக்க .உதயா ஒரு சில நொடி தனது மாமாவை நின்று பார்த்தவன் .

நடந்து கொண்டே இருக்க . டேய் தூங்குற நேரத்துல தூங்காம எதுக்குடா இப்ப நடந்துட்டு இருக்கு படுத்து தூங்குற வேலையை பாரு என்று சொல்ல.

தூங்கணும் மாமா என்று விட்டு நிறுத்தினான்.

அப்படி என்ன சாருக்கு பலத்த யோசனை .அதுதான் நினைச்சதை சாதிச்சிட்ட இல்ல .

“நானும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேன் இல்ல அப்புறம் என்ன யோசனை? “என்று கேட்டுக்கொண்டே நந்தா எழுந்து உட்கார.

உதயா வேகமாக தன் மாமாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

என்னடா என்று நந்தா கேட்க. இல்ல நான்தான் தியா கிட்ட பேசினேன்.

“அதுக்கு என்ன அதான் தெரியுதே “என்று முறைப்புடனே கேட்க.

அம்மா  கிட்ட பேசிட்டு உன்கிட்டயும் பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன் .

தியா அவங்க வீட்ல பேசுறதா சொன்ன?அதான்  அவங்க வீட்ல பேசினால இல்லையானு தெரியல .

ஏன் அவ கிட்ட கேட்க வேண்டியதுதானே. நேர்ல போய் பார்த்து பேச தெரிஞ்ச உனக்கு .

“போன் நம்பர் வாங்க தெரியவில்லையோ ?”என்று கேட்க .

போன் நம்பர் எல்லாம் கொடுத்துட்டு, வாங்கிட்டு வந்து இருக்கேன் .

ஆனா மணி என்று விட்டு நிறுத்தி மணியை பார்க்க .

அது ஒன்பதை தொட்டு இருக்க.

9 மணி ஆகுது இந்த நேரத்தில் ஒரு பொண்ணுக்கு போன் பண்ணலாமா ?என்று தான் ஒரு எண்ணம்  என்றவுடன் நந்தாவிற்கு தன்னை மீறி சிரிப்பு வந்து விட்டது .

“தனியா மீட் பண்ணி பேசும்போது ஒரு அந்த யோசனை இல்ல.இப்ப வருதோ சாருக்கு “என்று கேட்க .

மாமா என்று சிணுங்கி கொண்டே பாவமாக உதயா நந்தாவை பார்க்க.

மெசேஜ் போடு டா.

எப்படியும் போன் நோண்டிட்டு தான் இருப்பா என்று சொல்ல.

போன் போடுவதை விட இது பெட்டர் என்று எண்ணிய உதயா .

ஹாய் ஐ அம் உதயா. என்ன பண்ற என்று இவன் மெசேஜ் செய்திருக்க .

அந்த பக்கம் இருந்து சும்மாதான் அண்ணா இருக்கேன்.

சொல்லுங்க   என்று பதில் வர.

  உதயா :உங்க வீட்ல பேசினியா என்று கேள்வி எழுப்ப .

தியாவிடமிருந்து அடுத்த நொடி ஃபோன் வந்தது .

இங்கு உதயவிற்கு தான் ஒரு நிமிடம் பக் என்று  ஆகியது.

“இந்த நேரத்தில் நான் மெசேஜ் செய்திருக்க அவளே போன் போடுகிறாளே என்று எண்ணி பாவமாக தன் மாமாவை பார்க்க “.

நந்தா சிரித்துக் கொண்டே கேடி நீ மெசேஜ் தான் போட்ட . 

அவளே போன் பண்ணிட்டா பாரு எடுத்து பேசு ராசா என்று சொல்லிவிட்டு தனது மச்சானை பார்த்து சிரித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *