தனா அனுப்பிய லொகேஷனுக்கு நந்தா போக.
அங்கு தனாவை முறைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள் தனாவின் சித்தி அப்பாவின் இரண்டாவது மனைவி.
தனாவை பெற்றெடுத்த தாயின் கூட பிறந்த தங்கை.
தனாவின் அம்மா தனா பிறந்த மூன்று மாதத்தில் இறந்திருக்க.
துணைக்கு பார்த்துக் கொள்வதற்காக வந்தவர் . தனாவின் அப்பாவை இரண்டாவது திருமணம் செய்திருக்க .
அதில் இப்போது இரண்டு குழந்தைகள் இருக்க .
தனாவை அவளுடைய சித்தி தனது சொந்த தம்பி குடிகார நாய்க்கு கட்டி வைப்பதற்காக ரொம்ப நாட்களாக கேட்டுக் கொண்டிருக்க .
தனா முடியாது என்று சொன்ன காரணத்தினால் , இப்போது ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கியவுடன், “உனக்கும் என்னுடைய தம்பிக்கும் கல்யாணம்” .
இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று சொல்ல.
தனா நான் படிக்க வேண்டும் .திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்ததால், அவளை போட்டு அடி வெளுத்து இருந்தாள்.
அவளது தலைகள் கலைந்திருந்தது .ஒரு சில இடங்களில் காயங்களும் இருந்தது .
தனாவை அந்த கோலத்தில் பார்த்த நந்தா தனாவின் அருகில் வந்து நிற்க .
“வாங்க சார் “என்றாள்.
யாரு டி இவன் . “இவன் கூட சுத்த தான் என் தம்பியை கட்டிக்க மாட்டேன்னு சொல்றியா” என்றவுடன் வேகமாக தனது சித்தியின் அருகில் வந்து சித்தியின் கையை வேகமாக பிடித்தாள்.
“உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை”.
எங்க அப்பாவ கல்யாணம் பண்ணி இருக்கீங்க என்ற ஒரே காரணத்துக்காக அமைதியா போயிட்டு இருக்கேன் என்றாள் .
என்ன தனா பிரச்சனை என்று உரிமையாகவே நந்தா கேட்க .
அதற்கு முன்பாகவே வீல் சேரில் அங்கு வந்து நின்றிருந்த தனாவின் அப்பா நான் சொல்றேன் தம்பி .
நான் தனா ஓட அப்பா .ரெண்டு வருஷமா பக்கவாதம் வந்து வீல் சேரில் தான் இருக்கேன் .
அதுக்கு முன்னாடி அவளோட சித்தி அவள கொடுமை படுத்துவதை பார்த்திருந்தாலும் ,என் பொண்ண தனியா விடக்கூடாது .
அதுவும் பொட்ட புள்ளையனு என் பொண்ண என்னால முடிஞ்ச வரை தாங்கினேன் .
ஆனா, இப்ப ரெண்டு வருஷமா நான் வீல் சேரில் இருப்பதால், இவ ஆட்டம் ரொம்ப கூடி போச்சு .
அங்கு ஹாலில் மாட்டி இருந்த தனாவின் அம்மா போட்டோவை காண்பித்தவர்.
இவள பெத்த மகாலட்சுமி போய் சேர்ந்துட்டா .
என் மகளை பெத்து போட்டுடு .அவளை பார்த்துக்கொள்வதற்கு என்று வந்தாள்.
“கைப்புள்ள இருக்குனு எங்க வீட்ல இருக்குறவங்க கட்டி வச்சாங்க” .
ஒத்துக்கிறேன் தம்பி நானும் சுகத்துக்கு ஆசைப்பட்டு இந்த நாயை கட்டிக்கிட்டேன்.
இவ வயிற்றில் பிறந்த இரண்டு பிள்ளையும் மட்டும் நல்லா பார்த்துட்டு தனாவை வேலைக்காரி மாதிரி நடத்துறா.
இருந்தாலும் ,தட்டி கேட்டேன்.நான் நடையும் உடையுமா இருந்த வரை என்னால முடிஞ்ச வரைக்கும் தனாவிற்கு ஆதரவாக இருந்து பாத்துக்கிட்டேன்.
ஆனா ரெண்டு வருஷமா என்னால முடியல .
அதுவும் இவங்க கூட பொறந்த குடிகார நாயிக்கு தனாவை கட்டி வச்சா .
“அவனுடைய சொத்துல பாதி எழுதி வைக்கிறேன்னு சொன்னானு கட்டி கொடுக்க பாத்துட்டு இருக்கா”.
“அவன் ஒரு குடிக்கார பொறுக்கி நாயி”.
ஏற்கனவே ரெண்டு மூணு பொண்ணுங்க கூட சகவாசம் வச்சிருக்கான்.
நான் தான் தம்பி என் மகளை போன் பண்ண சொன்னேன் இப்ப கூட .
“நான் சொல்லலானா என் மக போன் செஞ்சி இருக்காது “என்றவுடன் தனாவை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தான் .
அவன் பார்த்தவுடன் தனா கண்ணை மூடித் திறக்க .
தனாவின் அப்பா கணேசன் பேச ஆரம்பித்தார் .
எனக்கு உங்க மச்சான் என் பொண்ண விரும்புவது தெரியும் தம்பி .
இன்னைக்கு தான் அது உங்க அக்கா பையன்னு தெரியும் .
இவ்ளோ நாளா தியாவோட அண்ணனா தான் தெரியும் என்றார்.
அதன் பிறகு தனா தான் இல்ல சார் இன்னைக்கு தான் தியா சொன்னா.
நான் இவ்வளவு நாளா தியாவுடைய அண்ணா தான் உதயானு நினைச்சேன் .
ஆனா ,அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாதால தான் உதயாவை அண்ணானு கூப்பிடுறானு இன்னைக்கு எனக்கு தெரியும் என்றாள்.
அவளை பார்த்து சிரித்து விட்டு கணேசனை பார்த்தான்.
ஒரு நிமிஷம் சார் என்று விட்டு தியாவிற்கு போன் செய்தான் .
“எடுத்து எடுப்பிலே எங்க இருக்கீங்க என்ன பிரச்சனை” என்று கேட்டாள் தியா.
ஒரு நிமிஷம் நான் சொல்றத அமைதியா கேளு என்றான்.
சரி என்று அவள் அமைதி ஆனவுடன், உனக்கு உன்னுடைய பிரண்டு தனா ஓட வீட்டு அட்ரஸ் தெரியும் தானே என்றான்.
தெரியும் என்று அவள் படபடப்பாக சொல்ல .
ஒன்னும் இல்ல டி .உதயாவையும் ,அக்காவையும் அழைச்சிட்டு இங்க வா என்று வைத்து விட்டான்.
ஒரு சில நொடி கண்ணை மூடி திறந்தவள் .தனது பெரியம்மாவை பார்த்துவிட்டு .
பெரியம்மா ஒரு இடத்துக்கு போகணும் .நான் அண்ணா கூட போறேன் . “நீங்க பின்னாடியே வரிங்களா “என்று கேட்டாள்
தியாவை பார்த்து சிரித்த தேவி சரி டி நீ அவன் கூட போ நான் வரேன் என்றார்.
முன்னால் உதயா செல்ல பின்னாடியே தேவி வந்தார் .
மூவரும் தனா வீட்டிற்கு சென்று இறங்க .
யார் வீடு தியா .ஏன் இங்க வந்து இருக்கோம் என்றான்.
“நமக்கு தெரிஞ்சவங்க வீடு தான் வா “அண்ணா என்றாள்.
சரி என்று உள்ளே செல்ல அங்கு தனா வீங்கிய முகத்துடன் சோர்வாக இருக்க.
அவளை அப்படி பார்த்த உதயாவிற்கு நெஞ்சம் அடைத்திருக்க .
வேகமாக அவளது அருகில் சென்ற தியா. “என்ன டி ஆச்சு “என்று கேட்க .
“உன்ன இப்படி அடிச்சது யாரு? தனா என்று உதயா வேகமாகவே கத்த “செய்தான்.
தேவியும் சரி , நந்தாவும் சரி அமைதியாகவே இருந்தார்கள் .
தானாவின் சித்தி தான் வேகமாக சண்டைக்கு வந்தாள் .
“யாரு டா நீ பொறுக்கி நாயே.என் வீட்டுக்கு வந்து இவ்ளோ சத்தம் போடுற “என்றாள்.
“என்னுடைய அண்ணனா பொறுக்கி” .
“உங்க தம்பியை தனாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சுட்டு இருக்கீங்களா உங்க தம்பி தான் தெரு பொறுக்கி”.
“காசு பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க சொந்த பொண்ணா இருந்தா, உன் வயித்துல பிறந்த பொண்ணா இருந்தா கட்டிக் கொடுக்க நினைபீங்களா ?”.
“உங்க அக்கா பொண்ணு தானே.”
கூட பிறந்த அக்கா பொண்ணு தானே .கொஞ்சம் கூட மனசு உறுத்தல உங்களுக்கு.
என்ன தான் சொத்துக்கு ஆசைப்பட்டு இருந்தாலும், “இப்படி தான் ஒரு தெரு பொறுக்கிக்கு தனாவை கட்டி வைக்க நினைப்பீங்களா?”
“நீ யாரு டி புதுசா ” என்று கேட்க .
புதுசு தான் என்று விட்டு தனது பெரியம்மாவை பார்க்க .
வண்டி சாவியை அவளது கையில் கொடுக்க .
வேகமாக சென்று அவர் வண்டியில் இருந்த தாம்பூல தட்டு கவரில் இருந்த பழம் பூ அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
தேவி தனாவை பார்க்க அவள் அதிர்ச்சி ஆகி அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
தேவி தனாவின் அருகில் சென்று “உனக்கு என் வீட்டு மருமகளா வருவதற்கு விருப்பமா மா”.
“என்ன தான் நீ மருமகளா அந்த வீட்டுக்கு வந்தாலும், உன்னை பார்த்து மூத்த மருமகள்னு சொல்ல மாட்டேன்”.
“அந்த வீட்டோட மூத்த மருமகள் ,மகள் எல்லாமே தியா தான்” என்றார் .
தேவி அவ்வாறு சொல்ல சிரிப்புடனே தேவியை பார்த்து சிரித்துவிட்டு தன் அப்பாவை தனா பார்க்க .
தேவியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட கணேசன் .
“கையோட கூட என் பொண்ணை உங்க விட்டு மருமகளா கூப்பிட்டு போயிரு தாயி”.
“உனக்கு கோடி புண்ணியமா போகும் “என்று சொல்ல .
அவர் கையை பிடித்து கீழே இறக்கி விட்ட தேவி .அண்ணா உங்கள விட வயசுல சின்ன பொண்ணு .
இப்படி எல்லாம் பேசாதீங்க என்று விட்டு ,உங்க பொண்ண நீங்க எந்த அளவுக்கு சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களோ .அந்த அளவுக்கு சந்தோஷமா என் பையன் பார்த்துப்பான் .
அந்த நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால் ,நம்பி உங்க பொண்ண கொடுங்க என்று தட்டோடு கணேசன் முன்பு நிற்க.
கணேசன் தன் மகளை ஒரு சில நொடி பார்த்தார்.தனா கண்ணை மூடி திறந்தவுடன் தட்டை வாங்கிக் கொள்ள .
இன்னும் ஒரு வாரத்துல நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்றார் தேவி .
அப்போது ஆனால் ,கல்யாணம் தேதி உடனே வச்சுக்கலாம் என்றார் கணேசன்.
அடுத்த நிமிடம் தியா பேசினாள் .
குறுக்க பேசுறேன்னு மன்னிச்சிடுங்க என்று அனைவரையும் பார்த்து சொல்லி விட்டு.
பெரியம்மா சொன்ன மாதிரி ஒரு வாரத்தில் நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம் .
இப்போ பேசி முடிச்சிடலாம் . அப்போ கல்யாணத்துக்கு தேதி கூட முடிவு பண்ணிடலாம் .
ஆனா ,”கல்யாணம் ஒரு மூணு மாசம் கழிச்சு வச்சுக்கலாமா?” .
அண்ணனை தனா புரிஞ்சுக்கறதுக்கோ ,இல்ல தனாவை அண்ணன் புரிந்து கொள்வதற்கு டைம் வேணும் இல்ல.
அதுக்கு மட்டும் கிடையாது. என்னோட கல்யாணமே ஒரு சூழ்நிலைல சீக்கிரமே சிம்பிளா நடந்துடுச்சு.
அந்த காரணத்துக்காக தான் சொல்றேன். வேற எந்த ரீசன் இல்ல .
எங்க அண்ணனோட கல்யாணத்தை கொஞ்சம் கிராண்டா செய்யணும்னு ஆசை எனக்கு.
எங்க வீட்டுக்காரருக்கும் அந்த ஆசை இருக்கு என்று விட்டு நந்தாவை பார்க்க.
நந்தா கண்ணை மூடி திறந்தவுடன் மேற்கொண்டு பேச செய்தாள்.
ஆனால், “அது வரைக்கும் இங்க தனாவிற்கு எந்த பிரச்சினையும் வராது”.
“அதுக்கு நான் பொறுப்பு “என்றாள்.
“யாரு டி உங்களுக்கு பஸ்ட் பொண்ணு கொடுக்கிறேனு சொன்னது “என்று தனாவின் சித்தி வரிஞ்சு கட்டிட்டு வர.
மலருக்கு ஏற்கனவே தியா போன் செய்திருக்க.
மலர், கண்ணன் இருவரும் அப்போது தான் வந்து நின்றார்கள்
” கணேசன் இடம் சென்ற மலர் நான் இங்கையே தனாவுக்கு துணையா கல்யாணம் நல்லபடியா முடிகிற வரை தங்க கொள்ளட்டுமா ?அண்ணா” என்று கேட்க.
இந்த வீட்டுக்கு சொந்தக்காரி தனா தான் நீங்கள் இல்ல .
இந்த நிமிஷம் வரைக்கும் இந்த வீடு தனா பேர்ல தான இருக்கு என்று தியா சொன்னாள்.
ஒரு சில நொடி தனாவின் சித்தி பார்வதிக்கு கை கால்கள் நடுங்க செய்தது .
சொன்னாலும் சொல்ல விட்டாலும் இந்த வீடு அவள் பேரில் தானே இருக்கிறது என்று உணர்ந்தவர் அமைதியாக இருக்க .
அப்பொழுது தனாவே எனக்கு துணைக்கெல்லாம் யாரும் வேணாம் மா .
நீங்க வேணாம் மா தப்பா எடுத்துக்காதீங்க என்னோட நல்லதுக்கு தான் நீங்க வந்து இருக்கீங்க எனக்கு தெரியும்.
ஆன” இத்தனை வருஷம் இந்த வீட்ல தானே வாழ்ந்தேன். இன்னும் மூணு மாசம் வாழ மாட்டேனா”.
“இன்னும் ஒரு மூணு மாசம் இவங்களை என்னால சமாளிக்க முடியாதா?” .
நான் இங்களை சகிச்சிட்டு வாழனும் என்ற அவசியம் இல்லை .
“எங்க அப்பா கூட வாழனும் “.என்னால இந்த வீட்ல வாழ்ந்திட முடியும் .
“இனி யார் என் மீது கை வைத்து விடுவார்கள் என்று நான் பார்க்கிறேன்” .
“கை வச்சா எப்படி நடந்துக்கணும் என்று எனக்கு தெரியும்” இந்த நிமிஷம் வரைக்கும் நான் அமைதியாக இருக்க காரணம் எங்க அப்பா மட்டும் தான் .
அவரு என்ன நான் சமாளிச்சுக்கிறேன். நீ கெளம்புனு உறுதியா சொன்னதுக்கு அப்புறம் தான் நான் நந்தா சார்க்கு போன் பண்ணேன் என்றாள்.
இவங்கள பத்தின கவலை எனக்கு தேவையில்லை .என் அப்பாவை இவங்க பாத்துக்கணும்னு அவசியம் கூட கிடையாது என்றாள் .
அப்போது உதயா தான் “அவங்க பொண்ணு வாழுற வீட்ல என்னோட மாமாவும் இனி வாழுவாரு”.
நான் அவரை எங்க வீட்டுக்கு கையோட கூட்டிட்டு போயிடுவேன் என்று சொல்ல .
அதற்கு முன்பாகவே தனாவின் சித்தி மகன் முன்னாடி வந்து நின்று நான் இருக்கேன் மாமா எங்க அப்பாவ பாத்துக்க.
எங்க அம்மாவை எதிர்த்து பேச கூடாதுன்னு அப்பாவும், அக்காவும் கேட்டுக்கொண்டதால மட்டும்தான் நான் அமைதியா இருக்க காரணமே தவிர .
இங்க வேற எந்த விஷயமும் கிடையாது. நாங்க ரெண்டு பேருமே எங்க அக்காவுக்கு எப்பவும் துணையா சப்போர்ட் தான் .
எங்க அம்மா மட்டும்தான் பணதாசை புடிச்சு இப்படி இருக்காங்க.
“எங்க ரெண்டு பேத்தையும் தப்பா எடை போட்டுறாதீங்க “.
எங்களை முழுக்க முழுக்க வளர்த்தது எங்க அப்பாவும் ,அக்காவும் தான்.
எங்களுக்கு எங்க அப்பா வேணும். எங்களை உள்ளங்கையில் வைத்து தாங்கிய அப்பாவை இனி தான் தாங்கனும் .
நாங்க ரெண்டு பேரும் அவரை பார்த்துக்குவோம். எங்கள நம்புங்கள் என்று கையெடுத்து கும்பிட்டான்.
அதன் பிறகு அனைவரும் வேறு எதுவும் பேசாமல் ஒரு வாரம் கழிச்சு நிச்சயம் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப.
மலர் ஒரு சில நொடி நின்று ஒன்றுமில்லை அக்கா. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தாள் .
அப்போது நீ உன் அண்ணன் கூட வா தியா என்று நந்தா சொல்ல .
ஒரு சில நொடி நின்ற உதயா இல்ல மாமா நீ அவளை கூட்டிட்டு போ .
நான் அம்மா கூட வரேன் என்று தியா கையில் தன்னுடைய வண்டி சாவியை வைக்க .
“ஒரு சில நொடி சாவியைப் பார்த்துத் தியா “அந்த வண்டி சாவிவை வெளியில் வந்து நின்ற “தனாவின் கையில் வைத்து , நாளையிலிருந்து இந்த வண்டியில் நீ காலேஜ் வந்துவிடு “என்றாள்.
தனாவும் எதுவும் பேசாமல் அமைதியாக அந்த வண்டி சாவி வாங்கிக் கொண்டாள்.
அதன் பிறகு தேவி வண்டியில் உதயா உட்கார, நந்தா வண்டியில் தியா உட்கார அவர்கள் வீடு நோக்கி கிளம்பினார்கள்.
உதயா வைத்திருந்தது ஸ்கூட்டி என்பதால் தனாவிடம் கொடுத்துவிட்டு அவள் இனி எந்த ஒரு தேவைக்கும் தனது சித்தியை நாடி இருக்க வேண்டாம் என்று எண்ணியே அவ்வாறு செய்தான் .
தங்களது வளர்ப்பை எண்ணி நந்தாவும் சரி ,தேவியும் சரி சந்தோஷம் அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.