என் மகன்
வேலைக்கு செல்கின்றான்
பெருமைபட்டு அல்ல.
வருத்தத்துடன் பெற்றோர்.
-குழந்தை தொழிலாளி.
💔💔💔
திருமணத்திற்கு
பின்
பெற்றோருக்கு
ஒதுக்கப்பட்டது
புது
இல்லம்.
-முதியோர் இல்லம்
— பிரவீணா தங்கராஜ் .
* ஏப்ரல் 2009- இல் “மங்கையர் மலரில்” பிரசுரிக்கப்பட்டவை .
