அதலக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் ஒரு சிறு பவுல் அளவிற்கு
கடுகு ஒரு ஸ்பூன்
உளுந்து ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் வற்றல்: 2
கறிவேப்பிலை கொஞ்சம்
அதலக்காய் கால்கிலோ
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் சின்ன ஸ்பூன் அளவு
சீரகம் ஒரு ஸ்பூன்
செய்முறை:
எண்ணெய் கடாயில் கடுகு உளுந்து கருவேப்பில்லை மற்றும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் நன்றாக வதக்கி விட்டு காய்ந்த மிளகாய் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து, அதலக்காயையும் வதக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து நன்றாக வதங்கி சாப்பிடும் பக்குவம் வந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து மூடி விடவும்.
தேவையிருப்பின் சிலர் வேக வைத்த துவரம்பருப்பை ஒரு குழம்பு கரண்டி அளவில் சேர்த்து கசப்பு சுவையை மட்டுப்படுத்த பார்ப்பார். சிலர் தேங்காய் துருவி சேர்த்து கொள்வார்கள்.
பகாற்காய் விரும்புவோர் இதை விரும்பி உண்பார்கள். சுகருக்கு நல்லது😉 எங்க ஐய்யமைக்கு ரொம்ப பிடிக்கும். இப்பவும் இதை வாங்குறப்ப அவங்களை நினைச்சிப்பேன். சீசன் டைம்ல இந்த காய்கறி வாங்கிடுவேன். நான் சமைத்து சுவைக்கும் போது ஐய்யமையின் அறிமுகம் இந்த காய்கறி என்று கூறிப்பேன்.
விலை அதிகம் ஆனால் உடலுக்கு நல்லது. கடுக்கு கடுக்குனு இருக்கும் துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும் ஆட்களுக்கு பிடிக்கும். பாவக்காய் விரும்புவோரும் பிடிக்கும்.
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அதலக்காய் பார்வைக்கு…. செய்வதற்கு முன்
பொரியல் செய்தப்பின்….