Skip to content
Home » அரிதாரம் – 19

அரிதாரம் – 19

திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று ஆராதனா சொன்னது ரகுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவளின் பணத்தை வைத்து நன்றாக இருக்கலாம் என்று, தான் நினைத்துக் கொண்டிருப்பதை அவள் கண்டுபிடித்ததை கண்டு அதிர்ந்து விட்டான். அவனுடைய பிளானும் அதுதானே. அதை எப்படி இவள் கண்டுகொண்டால் என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் முதலில் கல்யாணத்தை முடிச்சுக்குவோம், அதன் பிறகு அவள் நம் சொல்வதை கேட்டுதானே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். 

அன்று அவன் காபியில் ஏதோ கலக்கியதை பார்த்ததிலிருந்து வெளியே எதுவும் சாப்பிடக்கூடாது என்று முடிவெடுத்த ஆராதனா, சூட்டிங் சமயத்தில் வெறும் பழங்கள் மட்டுமே உணவாக எடுக்கத் தொடங்கினாள். சூட்டிங் முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது ஏதாவது ஒரு கடையில் அவளுக்கு தேவையான அவற்றை வாங்கிக் கொண்டு சென்று, வீட்டில் அவளுக்கு தெரிந்த படி சமைத்து உண்ண ஆரம்பித்தாள். ஒரு மாதத்திலேயே அவளது உடல் மெலிய ஆரம்பித்தது.  

குண்டு கன்னம் காணாமல் போக பார்ப்பவர்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்று கேட்கத் தொடங்கினர். “டயட்” என்று சொல்லி தப்பித்தாள்.

வெளியே செல்லும் வேலைகளை வெகுவாக குறைத்துக் கொண்டு எப்பொழுதும் வீட்டில் தனிமையாக இருக்க ஆரம்பித்தாள். ஜிம் போவதை முற்றிலும் நிறுத்தி விட்டாள். ஷூட்டிங் இருந்தாலும் இல்லையென்றாலும் காலையில் எழுந்து வீட்டிலேயே யோகா செய்ய தொடங்கி விட்டாள். 

மூன்று படங்களும் முடியும் தருவாயில் இருக்கும் பொழுது அவளுக்கு ரகுவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே என்ற பயம் வர தொடங்கியது.

“நல்ல வேளையாக அதிலிருந்து நீங்கள் தான் என்னை காப்பாற்றினீர்கள்” என்று பிரணவ்வை பார்த்தாள் ஆராதனா. 

அவள் கூறிய அனைத்தையும் அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த பிரணவ் “நானா” என்றான். 

“ஆமாம், நிகேதன் சார் என்னிடம் படம் நடிக்கச் சொல்லிக் கேட்கும் பொழுது, முதலில் நான் மறுத்து விட்டேன். பின்னர் நீங்கள் கூறிய பிறகுதான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். எப்படியோ இன்னும் கொஞ்சம் நாட்கள் அவனிடம் இருந்து தப்பித்து விடலாம் அல்லவா” என்று விரக்தி சிரிப்பு சிரித்தாள். 

முன்னாள் காதலியான ஆராதனாவின் கதையை கேட்டதிலிருந்து பிரணவ்விற்கு கோபம் தலைக்கேற, “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? என்னை உன் ஒரு நண்பனாக கூட உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைல? அன்றே வந்து சொல்லியிருந்தால் நான் இதை வேறு விதமாக கையாண்டிருப்பேனே? இப்படி உன்னை நீ வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காதே! அவனுக்கு பயந்து நீ ஏன் உன் வாழ்க்கையையும் கனவையும் தொலைக்க வேண்டும்” என்று ஆதங்கமாக கேட்டான். 

விரக்தியாக சிரித்த ஆராதனா “நடந்து முடிந்ததை பற்றி யோசித்து எந்த வித பயனும் இல்லை சார். ப்ளீஸ் விட்டுடுங்க. என் வாழ்க்கை அவ்வளவுதான் இனிமேல் எதையும் மாற்ற முடியாது” என்றாள் சோகமாக.

“ஏன் மாற்ற முடியாது? நாங்க மாற்றி காண்பிக்கிறோம்” என்றான் நிகேதனையும் நினைத்துக் கொண்டு. 

அவன் நாங்க என்று சொன்னதை அவள் கவனித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் “அப்படி நினைத்து நீ கவலைப்படாதே ஆராதனா. நிச்சயம் ஏதாவது நடக்கும். உன் வாழ்க்கை உன் விருப்பப்படியே மாறும். கவலைப்படாதே!” என்று ஆறுதல் கூறினான் பிரணவ்.

அதன் பிறகு பிரணவ் அவளது கடந்த காலத்தை மறக்கும் விதமாக சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான். நேரம் கடந்ததும் “ரொம்ப நேரம் ஆயிடுச்சு ஆராதனா. நீ சென்று ஓய்வெடு. காலையில் அவசரமாக எழுந்து வரவேண்டாம். நீ எப்பொழுது எழுந்திருக்கிறாயோ அப்பொழுது சொல். அதன்பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது சென்று எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக உறங்கு” என்று சொல்லி  சூடாக பால் கொடுத்து குடிக்க வைத்து அனுப்பினான்.

ஆராதனா சென்ற பிறகு நிகேதன் இருந்த அறைக்கு வந்த பிரணவ், அவன் இருந்த நிலையை கண்டு அதிர்ந்தான். அவன் தோள்களில் கை வைத்து “என்ன ஆயிற்று நிக்?” என்று கேட்க, 

“அவனை நான் சும்மா விட மாட்டேன்” என்றான் ஆவேசமாக. 

அவனை அமைதி படுத்திய பிரணவ் “பொறுமையா இரு நிக். யோசித்து ஏதாவது செய்யலாம். ஆனால் ஆராதனாவிற்கு எந்த பாதகமும் வந்து விடக்கூடாது” என்றான். 

நிகேதனால் ஆராதனாவுக்கு நடந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்ன மாதிரியான ஆண்கள் இவர்கள். பெண் என்றால் இவர்களுக்கு வேறு எண்ணமே தோன்றாதா? இவனை பெற்றவளும் பெண்தானே. கூட பிறந்தவளும் இருக்கிறாள். அப்படி இருந்தும் எப்படி அவனால் இப்படி நடந்துகொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட விசயங்களை எல்லாம் கேட்கும் போது,  ஒரு ஆணாக எனக்கும் வெட்கமாக இருக்கிறது” என்று ஆதங்கமாக பேசிக்கொண்டே சென்றான். 

ஆண் என்ற திமிர் தானே இவர்களை இப்படி எல்லாம் செய்யத் தூண்டுகிறது. இப்படிப்பட்டவர்களின் ஆண்மையே வெட்டி தூர எறிந்து விட வேண்டும். அப்பொழுதுதான் அதேபோல் செய்யத் தூண்டும் இன்னொரு ஆணுக்கும் பயம் வரும் என்று கோபமாக. 

அவனை தோளுடன் அணைத்து கொண்ட பிரணவ், “ரிலாக்ஸ் நிக். கொஞ்சம் பொறுமையா இரு. இந்த விஷயத்தை இன்றைக்கு அப்படியே விட்டுவிடு. நிம்மதியாக படுத்து தூங்கு. நாளை காலையில் தெளிவாக முடிவெடுக்கலாம். கொஞ்ச நேரம் ரிலாக்ஸா தூங்கி எழுந்திடு” என்று சொல்லி அவனை உறங்க அனுப்பினான். 

தன் அறைக்கு வந்த நிகேதனுக்கு நிம்மதியாக தூங்க முடியும் என்று தோன்றவில்லை. இதற்கு ஒரு முடிவு உடனே கட்ட வேண்டும் என்ற யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக, உடனே நேரத்தை கூட கவனிக்காமல் தீபனுக்கு அழைத்தான்.

அவன் அழைத்ததும் அடுத்த நொடியே ஃபோனை எடுத்து விட்டான் தீபன். 

“சொல்லுங்க அண்ணா” என்று அவன் சொல்லிய வார்த்தையில் ஜீவனே இல்லாமல் இருக்க, 

“என்ன ஆயிற்று? இன்னும் நீ தூங்கலையா? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கிறது?” என்றான் ஆராய்ச்சியாக.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா, சொல்லுங்க. என்ன விஷயம்? இவ்வளவு நேரம் கழித்து நீங்க ஃபோன் செய்ய மாட்டீங்களே?” என்றான். 

தான் நினைத்ததை பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்த நிகேதன் “இவ்வளவு நேரமாக நீ ஏன் உறங்காமல் இருக்கிறாய்? உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கிறது? அதற்கு முதலில் பதிலைச் சொல்லு” என்றான் சற்று அதிகாரமாக. தம்பியின் குரலில் அவன் ஏதோ கவலையில் இருப்பது தெரிய அவனது கவலையை போக்க வேண்டிய கட்டாயத்தினால் கோபமாக பேசுவது போல் பேசினால்  நிகேதன். 

“அண்ணா அது” என்று தயங்க, 

“விசயத்தை சற்று என்று சொல்லுடா” என்றான். 

இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று நினைத்த தீபன், “அது, என்று தயங்கிய அப்படியே நிலாவை பற்றி கூறி, இன்று அவள் பேசியது வரை கூறி முடித்தான். 

தம்பி பேசியதை கேட்டதும் நிகேதனுக்கு ஆச்சரியமாக இருந்தது, தன் தம்பி காதலித்து இருக்கிறானா என்று. “உன்னை நான் இன்னும் சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று புன்னகைத்தபடி கூறினான். 

அண்ணனின் புன்னகையை கண்டு கொண்டதும் தீபனுக்கு நிம்மதியாக இருந்தது. நல்ல வேளையாக அண்ணன் கோபித்துக் கொள்ளவில்லை என்று. 

அவனும் மகிழ்ந்து “அண்ணா இது ஒன்றும் தவறு இல்லையே!” என்று தயக்கமாக கேட்டான். 

“காதலிப்பது என்றைக்கும் தவறோ குற்றமோ கிடையாது, காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொண்டால்” என்று கூறிய நிகேதன், “நீ கவலைப்படாதே. நான் அப்பா அம்மாவிடம் பேசுகிறேன்” என்று சொல்லி ஒரு நிமிடம் நிறுத்திய நிகேதன், “சரி, நான் சொல்வதை இப்பொழுது உடனே செய்” என்று சில கட்டளைகளை அவனுக்கு இட்டான். 

அவனும் முதலில் “ஏன்?” என்று தயங்க, 

“சொல்வதை மட்டும் செய்  தீபன்” என்றான் கோவமாக.

“சரி அண்ணா” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான். 

அண்ணனிடம் தன் காதலை சொல்லியதில் நிம்மதி அடைந்த தீபனுக்கு, அவனது மனதிற்குள் இருந்த கவலைகளை எல்லாம் பறந்தது போல் தோன்ற, நிம்மதியாக ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டான். பின்னர் அண்ணன் கூறியபடியே செய்ய தொடங்கினான். அனைத்தையும் முடித்தும் அவன்  நிம்மதியாக உறக்கத்தை தழுவினான்.

அன்றைய இரவு ஆராதனாவிற்கும் தீபனுக்கும் நிம்மதியான உறக்கத்தை தர, பிரணவ் ஆராதனா பட்ட கஷ்டத்தை நினைத்து வருந்திய படியே உறங்கினான். 

ஆராதனாவின் வாழ்வில் இனிமேல் எந்த கவலையோ குழப்பமோ கஷ்டமோ வந்து விடக்கூடாது என்று நினைத்து, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மும்மரமாக  யோசித்த படி அவ்இரவை கழித்தான் நிகேதன்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

3 thoughts on “அரிதாரம் – 19”

  1. Kalidevi

    Pranav nikethen rendu perum nalla yosichi oru mudivu Edunga avana ena pannanum bu crt aana punishment kedaikanum atha neenga tha pannanum aaradhana ku apo tha athula irunthu veliya varuva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *