தனக்குப் பின்னால் சத்தம் கேட்டு திரும்பிய ஆராதனா, அங்கு நிகேதன் புன்னகையுடன் இருப்பதைக் கண்டு, “சார் என்ன சொன்னீங்க?” என்றாள் குழப்பமாக.
“சாட் ரெடி என்று டைரக்டர் சொல்லிட்டார். அதுதான் எதையும் யோசிக்காமல் வேலையை பாருங்கள் என்றேன்” என்று புன்னகையாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகன்று விட்டான்.
அவளும் நேரம் ஆவதை உணர்ந்து வேலையை தொடர்ந்தாள். அன்று எடுக்க வேண்டிய படப்பிடிப்பு அனைத்தும் முடிந்ததும் தங்கள் இருப்பிடம் செல்ல கிளம்பும் பொழுது, தீபன் ஆராதனாவை அழைத்துச் செல்ல வந்தான். காலையில் அவனுடன் வந்ததால் ஒரு புன்னகையுடன் தலை அசைத்து கிளம்பினாள்.
சிறிது நேர பயணத்திற்குப் பிறகு கார் வேறு பாதையில் பயணிப்பதை கண்ட பயந்த ஆராதனா, டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த தீபனிடம், “இப்பொழுது எங்கே போகிறாய்?” என்று சற்று கோபமாக கேட்டாள்.
“மேடம் பயப்படாதீங்க. உங்களுக்கு ரூம் ஷிப்ட் பண்ணிட்டாங்க. அங்கு தான் அழைத்து வர சொல்லி இருக்கிறார்” என்று பொறுமையாக கூறினான்.
“ஏன்? நான் இருந்த அறையே நன்றாக தானே இருந்தது. அதை ஏன் மாற்ற வேண்டும்?” என்று படபடப்பாக கேட்ட ஆராதனா, உடனே பிரணவ்விற்கு அழைத்து விட்டாள். அவன் எடுத்ததும் “ஏதோ வேறு இடத்திற்கு என்னை அழைத்துச் செல்கிறார் இந்த தீபன்” என்றாள் வேகமாக.
“பயப்படாதே ஆராதனா. என்னிடம் ப்ரொடியூசர் ஏற்கனவே சொல்லிட்டார். நான் உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன். உன் பாதுகாப்புக்காக தான் அவர் அப்படி செய்ததாக கூறினார். நீ கவலைப்படாதே. அங்கு எந்த பிரச்சனையும் உனக்கு இருக்காது. அங்கு சென்றதும் அது உனக்கே புரியும்” என்றான் பிரணவ்.
“ஏன் சார்? எனக்கு அந்த இடமே வசதியா தானே இருந்தது” என்று ஸ்வரம் குறைந்த குரலில் பேச,
“நீ இங்கு இருப்பது தெரிந்து மக்கள் உன்னை தொல்லை பண்ணுவதை மறந்து விட்டாயா?” என்றான் அவனும்.
ஆமாம் முதல் நாள் எந்த பிரச்சனையும் இல்லை படப்பிடிப்பு ஊட்டியில் நடப்பதை தெரிந்து கொண்ட உள்ளூர் வாசிகளும் விடுமுறையை கழிக்க வந்தவர்களும் நடிகை தங்கியிருக்கும் அறை என்று அவள் போகும்போதும் வரும் பொழுதும் கூட்டம் போட ஆரம்பித்தனர்.
ஆமாம் என்று மௌனமாக தலையாட்டியம் ஆராதனாவிற்கு எப்பொழுதும் நம் மக்களை நினைத்து ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் ஒருபுறம் கவலையாகவும் இருக்கும். சினிமா நடிகர் நடிகைகள் என்றால் பைத்தியக்காரத்தனமாக எல்லாம் செய்து தங்களது பாசத்தையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்துவதை நினைத்து. அவர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லையே, அவர்களும் தங்களைப் போல் சாதாரண மனிதர்கள்தான் என்று புரிந்து கொள்வார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வாள்.
இப்படியே யோசனையுடன் அவள் அமர்ந்திருக்க, கார் ஊரைத் தாண்டி தனித்து நின்ற ஒரு பங்களாவிற்குள் நுழைய, சற்று பயந்துபடியே தான் இருந்தாள் ஆராதனா.
மதி ரெசார்ட் என்ற போர்டை பார்த்ததும் “இதுதான் தங்கும் இடமாக?” என்று தீபனை பார்த்து கேட்டவள், அந்த இடத்தை ரசிக்காமல் இல்லை. பசுமையான தேயிலை மலைகளுக்கு நடுவே தனித்து நின்ற பங்களா.
கார் உள்ளே சென்று என்றதும் இளவயது அழகிய பெண் ஒருவள் இவர்களுக்காக அங்கு காத்திருந்தாள். வேகமாக வந்து கதவை திறந்த அந்தப் பெண் “வாங்க அக்கா ” என்று மகிழ்வுடன் வரவேற்றாள். அவனின் புன்னகையை கண்டு ஆராதனாவிற்குள்ளும் புன்னகை மலர, புன்னகைத்துக் கொண்டே காரில் இருந்து இறங்கினாள்.
பார்த்ததும் தன்னை அக்கா என்று அழைத்ததில் எதிரில் நின்ற பெண்ணில் ஒருவித பாசம் தோன்றியது. “எப்படி பார்த்ததும் அக்கான்னு கூறப்படுகிறாய்?” என்று அவளிடம் கேட்டுவிட்டு, “உன் பெயர் என்ன?” என்றாள் ஆராதனா.
“நான்,” என்று சொல்ல வருவதற்குள்”அவள் பெயர் நிலா” என்று வேகமாக சொன்னான் தீபன்.
இவளிடம் கேள்வி கேட்டால் , இவனிடம் இருந்து பதில் வருகிறதே என்று அவனை கூர்மையாக பார்த்தாள்.
அது என்று தலையை சொறிந்த தீபன், “நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு” என்றான் வெட்கப்பட்டுக் கொண்டே.
ஆராதனா “அப்படியா! ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்” என்று இருவருக்கும் பொதுவாக வாழ்த்து கூறினாள்.
அதற்குள் மற்றொருவன் வந்து அவர்களை வரவேற்க, “இவர் பெயர் கந்தன். இந்த ரெசார்டை பார்த்துக் கொள்பவர்” என்று அறிமுகப்படுத்தினான் தீபன்.
அவனது வணக்கத்திற்கு சிறு தலை அசைப்பை பதிலளித்தாள் ஆராதனா. பின்னர் உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கான அறையை காண்பித்தாள் நிலா.
“அக்கா, உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் என்கிட்ட கேளுங்க. உங்களுக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்வது நான்தான். ஆகவே உடனே ரெடி பண்ணி தந்துடுவேன்” என்றாள் புன்னகையாக.
“ஓஹோ.. அப்படியா! அப்படின்னா” என்று நாடியில் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்து, “எனக்கு பிரியாணி வேணும். செஞ்சு தருவியா?” என்று அவள் விளையாட்டு கேட்க,
“கண்டிப்பா செஞ்சு தருவேன் அக்கா” என்று அவளும் ஆராதனா கூறியது போலவே கூறினாள். பின்னர் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, வெளியில் இருந்து நிலாவை அழைத்தான் தீபன்.
“சரிக்கா. நீங்க கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க. நான் பிறகு வருகிறேன்” என்று சொல்லிச் சென்றாள்.
ஏனோ ஆராதனாவிற்கு நிலாவை பார்த்தது மிகவும் பிடித்து விட்டது. அவள் சென்ற பிறகுகூட ஆராதனாவின் முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருந்தது.
வெளியில் வந்த நிலாவிடம் “அவர்களை ரொம்ப தொந்தரவு பண்ணாத. எனக்கு ஒரு முக்கியமான வேலை அண்ணன் சொல்லி இருக்காங்க. நான் வெளியே போகிறேன். இரவு வருவதற்கு நேரம் ஆகிவிடும்” என்றான்.
“சரி, சொல்லுங்க. எதுக்காக என்னை இங்க உடனே கிளம்பி வர சொன்னீங்க? சொல்லிட்டு போங்க” என்று அவனிடம் மீண்டும் கேள்வி கேட்டாள்.
“எனக்கு ஒன்றும் தெரியாது. அண்ணன் தான் உன்ன இங்க வர சொன்னாங்க. எது என்றாலும் அண்ணன் வந்ததும் அவங்க கிட்டயே கேட்டுக்கோ” என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பி வெளியே சென்று விட்டான்.
நேற்று இரவே தீபன் நிலாவிற்கு ஃபோன் செய்து உடனே கிளம்பி இங்கு வரும்படி சொல்லி அவள் வருவதற்கு காரும் ஏற்பாடு செய்து விட்டான். ஏனென்று கேட்டதற்கு அண்ணனிடம் கேட்டுக் கொள் என்று அப்பொழுது இருந்தே சொல்லிக் கொண்டிருக்கின்றானே தவிர ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
‘நிகேதன் சார் வந்ததும் கண்டிப்பா கேட்கணும்’ என்று நினைத்துக் கொண்டு தன் வேலையை செய்ய சென்றாள்.
இரவு உணவு தயாரானதும் ஆராதனாவை அழைக்கச் சென்றாள் நிலா.
ஆராதனாவோ தனக்கு உணவு வேண்டாம் என்றும், பழங்கள் உண்டு கொள்வதாகவும் கூற,
“நீங்க கேட்டீங்கன்னு நான் பிரியாணி செஞ்சு வெச்சிருக்கேன்” என்று அவளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தாள்.
“ஏன் நிலா? நான் சும்மாதான சொன்னேன்!” என்று ஆராதனாவும் தயங்க,
“பரவாயில்ல வாங்க” என்று டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்தாள். அங்கு டைனிங் டேபிளில் சுற்றி அமர்ந்திருந்த அனைவரையும் கண்டு ஆச்சரியமாக விழி விரித்தால் ஆராதனா.
ஆம் பிரணவ் நிகேதன் தீபன் என்று எல்லோருமே அங்கு அமர்ந்திருந்தனர்.
பிரணவ் அருகே சென்று அமர்ந்த ஆராதனா, “நீங்க எப்படி?” என்று கேட்டு “நீங்களும் இங்குதான் தங்க போறீங்களா?” என்றாள் மகிழ்ச்சியாக.
“இல்லை, டின்னர்காக வந்தேன். முடித்துவிட்டு கிளம்பிடுவேன்” என்று சொல்லிவிட்டு, “இங்கு நீ தைரியமாக இருக்கலாம். இது நிகேதன் பிரண்ட் ஆதிரன் சார் ரிசார்ட் தான்” என்றான்.
“இங்கு வெளி ஆட்கள் யாரும் வர முடியாது”என்று சொல்லி விட்டு நிலாவை காண்பித்து “அவர்கள் உனக்கு தேவையான உணவை தயாரித்து தருவார்கள். இந்த படம் முடியும் வரை நீ எந்த தொந்தரவும் இல்லாமல் இங்கு இருக்கலாம்” என்ற பிரணவ் நிகேதனை பார்த்தான்.
அவன் மறுப்பாக தலை அசைக்க, உதட்டுக்குள் புன்னகையை மறைத்துக் கொண்டு, “வேறு எது வேண்டுமென்றாலும் நீ நிகேதனை தைரியமாக கேட்கலாம்” என்றான். மறைமுகமாக அவளுக்கு விசயத்தை சொல்ல முயன்று.
இரவு உணவு முடிந்ததும் பிரணவ் கிளம்பி விட, அங்கு தனித்திருந்தார் ஆராதனா அனைவருடனும் பேச தயங்கியபடி, அமைதியாக டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
நிலாவிற்கும் நிகேதனிடம் பேச வேண்டும் என்று இருக்க, தீபனோ நிலாவை அழைத்துச் சென்று விட்டான், நிகேதனும் ஆராதனாவும் பேசட்டும் என்று.
டிவியில் சாவித்திரி நடித்த பழைய படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க, ஆராதனாவுக்கு தன் தாத்தாவின் நினைப்பு வந்தது. அவர் ஒவ்வொரு முறையும் நடிகை சாவித்திரியை மேற்கோள் காட்டி தான் ஆராதனாவை நடித்து காண்பிக்க சொல்லுவார்.
அதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் நினைவும் வர, அவள் முகம் வாடியது.
அவளது முகவாட்டத்தை கண்டதும், தொண்டையை செருமிய நிகேதன், ஆராதனாவை பார்த்து, “நான் உன்னிடம் பேச வேண்டும்” என்றான்.
அவனின் குரலில் அவனை ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள் ஆராதனா.
அவள் கண்களை நேராக பார்த்தபடி, “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் நிகேதன்.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
சூப்பர்.
நன்றி மா 😊😊
Nikethan ippadi taknu ketutinga aaru ena solla pora ipo
Interesting😍