Skip to content
Home » காதலை கண்ட நொடி -11

காதலை கண்ட நொடி -11

அத்தியாயம் 11

வீட்டுக்கு வந்ததும் அவளை அப்படியே நிற்கவைத்து பேசினார் மதுமிதா அவர் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார் இனியன்..

“இங்க வா கயல் உன்கிட்ட பேசனும்” என்று மதுமிதா அழைக்க ‘நேத்து அப்பா பேசியதை வைத்து தன் காதலை பற்றி பேச அழைக்கிறார்..இருக்காது அம்மா சமையலுக்கு ஏதாவது ஆர்டர் புடிச்சு இருப்பாங்க அதுவா இருக்கும்’ என்று தனக்குள்ளேயே எண்ணியவள்..

“சொல்லுமா..யார் ஆத்துல விசேஷம்? எப்போ?” என்று கேட்டாள் கயல்..

(அவர்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் போது மட்டும் ஐயர் பாஷைதான் பேசுவார்கள்..)

“நம்மாத்துலதான்டி” என்று கூறினார் அவர்..

“நம்மாத்துலயா? என்னம்மா சொல்ற? யாருக்கு என்ன விசேஷம்?” என்று கேட்க..

“உனக்கு தான் கயல்..நாளைக்கு உன்ன நிச்சயம் பன்ன வர்றா..நல்ல இடமா தகைஞ்சு வந்தது அதான் ஏன் தள்ளி போடனும்னு வர சொல்லிட்டோம் அவா வந்து பொண்ணு எதுக்கு பார்த்துண்டு ஃபோட்டோல பார்த்து இருக்கோமே நேரா நிச்சயமே வெச்சுக்கலாம்னு சொல்லிட்டா நாங்களும் விசாரிச்சவரை நல்ல மனுஷாளா தான் அதான் சரி சொல்லிட்டேன்டி..நீ என்ன பன்ற நாளைக்கு லீவ் எடுத்துக்கோ நாங்க கெளதம் ஆத்துல போய் சொல்லிட்டு வந்துடறோம்” என்று பெரிதாக பேசி முடிக்க..

“யார கேட்டு முடிவு பண்ணினேள்?” என்று கோவமாய் அவள் கத்த

“யாரைடி கேட்கனும்?” என்று மதுமிதா கேட்க..

“மது பொருமையா பேசு” என்று இனியன் கூறிக்கொண்டு இருக்கையில்..

“என்னான்ட கேட்கணும்..நீங்களா உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணிட்டா நீங்களா வாழ போறேள் நான்தானே எனக்கு சம்மதம் இருக்கா இல்லையானு கேட்டேளா? நேத்து நீங்க கேட்டதுக்கு என்ன சொன்னேன் என்ன இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்கோனு சொன்னேனோ இல்லையோ? உங்க இஷ்டத்துக்கு வந்து நிச்சயம் பண்ண வர்றானு சொன்னா நான் ஜடம் மாதிரி நிக்கனுமா?” என்று பேச அவள் கன்னத்தில் பளாரென ஓர் அறை விழுந்தது..

“நல்லது பேசறச்சே என்னாடி இது அபச்சாராமா பேசுற..நீ நேத்து சொன்ன தான் அதுக்காக உன் இஷ்டத்துக்கு விட முடியாது ஏற்கனவே எங்களோட கல்யாணம் பத்தி தெரிஞ்சவாளாம் நம்ம ஆத்துல சம்பந்தம் பன்னவே வரமாட்டேங்கிறா..இவா நம்மள பத்தி எல்லாம் தெரிஞ்சுண்டு சம்பந்தம் பேசுறா அதுவும் வேணாம்னு சொன்னா எப்படி? என்ன பேச்சு பேசுற நீ? வாய ஒடைச்சுடுவேன் ஒழுங்கா நல்ல பிள்ளையாட்டம் நாளைக்கு நிச்சயத்துக்கு ரெடியாகு..பெத்தவாளுக்கு தெரியாதா பிள்ளைக்கு எது நல்லது கெட்டதுனு?” என்று விட்டு இனியனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அறைக்குள் சென்ற மதுவிடம் இனியன் “என்னம்மா நீ ஏன் இவ்ளோ கோவம் அவகிட்ட உனக்கு பொறுமையா சொன்னா புரிஞ்சுப்பாளே?” என்று கேட்க..

“நீங்களே யோசிங்கோ நமக்கு கல்யாணம் ஆனதுல இருந்து எவ்வளவு அவமானம் எவ்ளோ கஷ்டம் பட்டுட்டோம். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தானா அமையும்போது அதை கெடுக்க பார்க்கிறாளே அவகிட்ட கொஞ்சிகிட்டா இருக்க முடியும் இனி.. இதுக்கு மேலயும் அவமான பட எனக்கு தெம்பு இல்ல இனி, நம்ம பொண்ணை கவுரமான இடத்துல கல்யாணம் செஞ்சு கொடுத்து நமக்கும் ஒரு நல்ல பேரு கிடைச்சா சந்தோஷம்தானே..அது ஏன் அவளுக்கு புரியல நம்மள பத்தி எல்லாம் தெரிஞ்சு கல்யாணத்துக்கு அவா பொண்ணு கேட்டு இருக்கா இனியாவது நாம நாலுபேர் முன்னாடி கவுரமா இருப்போம்னு பார்த்தா இவ இப்படி பேசுறாளே கோவம் வராம என்ன செய்யும்?” என்று அவர் அழ..

“விடுமா நான் பேசுறேன் அவ சம்மதிப்பா” என்று இனியன் கூற 

“சம்மதிச்சுதான் ஆகணும் இது நம்ம கெளரவ பிரச்சனை இனி..போங்கோ போய் பேசுங்கோ அவளாண்ட” என்று அவர் திட்டவட்டமாக கூற இனியன் வெளியே வந்தார்.. அதுவரை அங்கேயே சிலை போல நின்றவள் மனதில் உறுதியுடன் அவரை பார்த்தவள் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள்..

“இவங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணா இல்ல என்னானே தெரியல? ரெண்டு பேருக்கும் நடுவுல என் தலை உருளுது” என்று புலம்பியபடி அவர் அங்கேயே அமர்ந்துகொண்டார்..

மறுநாள் அவள் விடுமுறை என்று கூறிவிட அவளது ப்ரோகிராமில் மாற்றம் செய்யப்பட்டது தன் தாய் செய்யும் அனைத்தையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.. மாலை மாப்பிள்ளையோடு வந்தனர் சந்தோஷ் குடும்பத்தினர்..வந்தவர்களை வரவேற்று அமரவைத்து உபசரிப்பு முடிந்ததும் இவளை அழைத்து சென்றார் கெளதமின் தாய்..அவளும் அமைதியாகவே வந்து அனைவருக்கும் நமஸ்காரம் செய்து நிற்க அவளது முகத்திலிருந்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்த சந்தோஷ் அவளிடம் தனியாக பேசவேண்டும் என்று கூற தன் தாயை அவள் பார்க்க அவரோ 

கையை பிசைந்தபடி நின்றார்..

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கவனித்த சந்தோஷ் “இப்போ இதெல்லாம் சகஜம்தானே மாமி..நேக்கு அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அலோவ் பண்ணுங்க ப்ளீஸ்” என்று கூற சரியென எல்லா பக்கமும் தலையாட்ட அவனை தனது அறைக்கு அழைத்து சென்று அமரவைத்தாள்..உட்கார்ந்தவன்

“நீங்களும் உட்காருங்கோ கயல்” என்று கூற 

“பரவாயில்லை நான் நிக்கிறேன்..என்ன பேசணும் சொல்லுங்கோ?” என்று கட் அண்ட் ரைட்டாக கேட்க..

“எதனால இந்த கல்யாணத்துக்கு உங்களுக்கு சம்மதம் இல்லனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று நேரிடையாக வந்தான் விஷயத்திற்கு..அதில் அவனை அதிர்ந்து அவள் பார்க்க..

“பொண்ணு பார்க்க வர்றான்னாலே கேர்ள்ஸ் க்கு ஒரு எக்ஸைட்மெண்ட் இருக்கும் அதும் இங்க நிச்சயம்னு வந்தோம் ஆனா நீங்க அமைதியா நின்னேளா அதான் நேக்கு தோணித்து ஏதோ சரியில்லனு?..என்னை மாப்பிள்ளையா பார்க்காம உங்க ப்ரண்ட்டா நினைச்சு சொல்ல தோணுச்சுனா சொல்லுங்கோ இல்லனா வேண்டாம்.. ஆனா கல்யாணம் செஞ்சுக்க இஷ்டமா இல்லையானு மட்டும் சொல்லிடுங்க..வீணா நானும் எங்க ஆத்து மனுஷாளும் கற்பனை வளர்த்துக்க வேண்டாமோ இல்லையோ?” என்று கூற அவனிடம் தன் நிலையை கூறினாள் அவள்..

அவனோ அதிர்ந்து “நீங்க என்ன செய்யறேள்னு யோசிச்சுதான் செய்யறேளா? இதுல உங்க வாழ்க்கையே வீணா போகுமே? அதை யோசிக்கலையா?” என்று கேட்க..

அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“என் அம்மா அப்பாவுக்கு நியாயம் செய்யனும்னு நினைக்கிறேன்.. அதுல என்னை பத்தி யோசிக்கலாம் ஒன்னுமில்ல.. நான் எப்பவும் அவங்களோடயே இருந்துப்பேன்..” என்று கூற..

“ஓகே..மே ஐ ஹெல்ப் யூ?” என்று அவன் கேட்க..

புரியாமல் அவனை பார்த்தவள் 

“இல்ல வேணாம் நானே பார்த்துப்பேன்.. நீங்க உங்க வாழ்க்கையை பாருங்கோ” என்று திடமாய் கூற..

“ஜஸ்ட் சின்ன ஹெல்ப் பண்றேன் இப்போதைக்கு நிச்சயம் மட்டும் கேன்சல் பண்றேன்.. ஏன்னா உங்க லட்சியம் சீக்கிரமே நிறைவேறுமே..இதை நீங்க அங்க சொன்னா?” என்று கூற இதுவும் நல்ல யோசனையாக தோன்ற..

“ஆனா எங்க அம்மா நான் ஏதோ சொல்லித்தான் நீங்க நிச்சயத்தை ஸ்டாப் பன்னதா நினைச்சுண்டா?” என்று கேட்க

“அது நான் பார்த்துக்கறேன்..ப்ரண்ட்ஸ்..” என்று கை நீட்ட அவளும் புன்னகையோடு கை கொடுத்தாள் “வாங்கோ போகலாம்” என்று அழைத்து சென்றான்..

இருவரும் மகிழ்ச்சியாக வருவதை பார்த்த மதுமிதாவிற்கும் மனது லேசானது..அவரது கையை ஒரு முறை அழுத்தி விட்டு ஆறுதல் படுத்தினார் இனியன்..

“என்னப்பா பேசிட்டியா? நிச்சயம் செஞ்சுடலாமா?” என்று சந்தோஷின் அம்மா கேட்க..அவரது காதில் ஏதோ அவன் கூற..

“அட படவா..நேக்கே கோவமா வர்றதேடா இதை எப்படி அவாள்ட்ட் பேச” என்று அவர் கேட்க 

“ம்மா ப்ளீஸ்” என்று அவன் கேட்க சரியென மதுமிதா மற்றும் இனியனை பார்த்து

“அது ஒன்னுமில்ல அவன் உங்க பொண்ணை புரிஞ்சு அதான் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுறான்..அவன் ஃபாரின்ல படிச்சு வளர்ந்தவன் அதான் உங்க பொண்ணோட பேசி பழகி அப்புறம் ஓகேனா நிச்சயம் வெச்சுக்கலாம்னு சொல்றான்..நீங்க என்ன சொல்றேள்?” என்று கேட்க அவர்களது இந்த பேச்சு மதுமிதாவிற்கு பிடிக்கவே இல்லை..

“நாங்க கொஞ்சம் யோசிச்சு சொல்றோமே” என்று கேட்க..

“சரி உங்க இஷ்டம்..அப்போ நாங்க கிளம்புறோம்” என்றுவிட்டு அவர்கள் கிளம்பிய அடுத்த நொடி கோவத்தில் பொரிய ஆரம்பித்து விட்டார் மதுமிதா..

“என்னடி பேசின அந்த மாப்பிள்ளை பையனாண்ட? நிச்சயம் செய்ய வந்தவா இப்போ வேற ஏதேதோ பேசறா?” என்று கேட்க..

“ம்மா..நான் எதுவும் பேசல அவர்தான் பேசினார்.. கேள்வி கேட்டார் பதில் சொன்னேன் அவ்ளோதான்”என்று நம் அம்மணி அடிச்சு விட..

“என்ன மது இது? நீ சொன்னேனு ஒரு வார்த்தைக்காக அவ அமைதியா இருந்தா அந்த பையன் ஏதோ கேட்டா அதுக்கு அவ என்ன செய்வா? அவோ வேற ஆத்துக்கு போய் வாழப்போறவ எப்போ பாரு அவள வைஞ்சுட்டே இருக்க..எதுக்கானும் அவளையே காரணம் சொல்லிண்டு இருக்க இது நல்லா இல்ல மது..அந்த பையன் சொன்னதுக்கு அவனை தான் கேட்கணும் இவளை திட்டிணா எல்லாம் சரியாகிடுமா?” என்று இனியன் கத்த அவரது கோவத்தில் அமைதியானவர்..

“அதுக்கு இல்ல இனி..அவதான் ஏதோ” என்று கூற

“ஸ்டாப் இட் மது..இட்ஸ் எனாஃப்..எல்லாத்துக்கும் அவளையே கார்னர் பன்றது நேக்கு சுத்தமா புடிக்கலை” என்றுவிட்டு அவர் அறைக்குள் சென்றுவிட அவளும் கண்ணீரோடு ரூமிற்குள் சென்று விட்டாள்.. மதுவும் தலையை பிடித்துக்கொள்ள அவள் அருகில் வந்த கெளதமின் தாய்

“உங்க ஆத்துக்காரர் சொல்றதும் நியாயம்தானே மதுமா..அந்த பிள்ளை பேசிட்டு போனதுக்கு நம்ம ஆத்து பொண்ண குறை சொல்லலாமா? அவங்க வெளிநாட்டுல படிச்சவங்க அதான் அந்த கலாச்சாரப்படி யோசிக்கிறா எனக்கு என்னமோ இது சரிவரும்னு தோணல..நாளைக்கு நம்ம பொண்ணு மனசுல ஆசை ஏதாவது வந்த அப்புறம் அந்த பையன் இவள வேண்டாம்னு சொன்னா என்னா செய்யறது மதுமா யோசி..இதுல நம்ம பொண்ண குறை சொல்ல எதுவுமே இல்ல” என்று கூறிவிட்டு அவரும் கிளம்பி விட அவரும் யோசனையில் ஆழ்ந்தார்..

‘ஒருவேளை அவங்க சொல்றமாதிரி நடந்துட்டா..நானே என் பொண்ணுக்கு சங்கடத்த சேர்த்தா மாதிரி ஆகிடுமே கடவுளே’ என்று எண்ணியவர் அன்றைய வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்..

மறுநாள்..

கல்லூரிக்கு அவசரமாக கிளம்புவதற்கு சமைத்துக்கொண்டு இருந்தாள் கயல்விழி.. அவள் தாய் மெஸ் நடத்துவதால் அங்கே அவருக்கு வேலை அதிகம் என வீட்டில் அவரை சமைக்கவிட மாட்டாள், அதனால் அனைவருக்கும் எல்லாம் சமைத்துவைத்து விட்டே கல்லூரி கிளம்புவாள். 

அவசரமாக அவள் சமைத்துக்கொண்டு இருக்க அவர்கள் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டது.

“இன்னேரத்துல யாரு?” என்று கேட்டுக்கொண்டே ஸ்டவ்வை ஆஃப் செய்தவள் தன் தாயை பார்க்க அவர் எழப்போக 

“நீங்க இருங்கம்மா நானே பார்க்கிறேன்” என்றுவிட்டு கதவை திறக்க கோவமாய் அவளை பார்த்துக்கொண்டு நின்றான் இஷான்..

அவனை பார்த்தவள் பயத்தில் உடல் நடுங்க நின்றாள்..

“யாரு கயல் ஏன் அப்படி நிக்கிற?” என்றபடி வந்து பார்த்தார் மதுமிதா. அவரை கண்டபின்பும் அவன் பார்வையை மாற்றாமல் நிற்க இருவரையும் மாறி மாறி பார்த்தவர்..

“யாரு நீங்க?” என்று கேட்க.

“நான் உங்க பொண்ணுக்கு புருஷன்” என்றான் இஷான் மதுமிதா அதிர்ந்து

“என்ன? ஹேய் கயல் என்னடி இது? யாருடி இவா?” என்று கோவமாய் கேட்க..அவளோ நடுக்கத்துடன் நின்றிருந்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை..அவரது கத்தலில் உள்ளே இருந்த இனியன் வெளியே வர இவனை பார்க்க எங்கேயோ ப

“அவகிட்ட ஏன் கேட்கறீங்க? என்கிட்ட கேளுங்கோ அத்தை..ஆனா அதுக்கு முன்ன உள்ளே வரலாமா? வெளியே நின்னு பேச எனக்கு ஒன்னும் இல்ல எல்லாருக்கும் நீங்கதான் பதில் சொல்லணும் பரவாயில்லையா?” என்று கேட்க..சுற்றும் முற்றும் பார்க்க எல்லோரும் அவர்களைதான் பார்ப்பது போல இருக்க 

“வாங்கோ” என்று அவனை உள்ளே அழைத்தார்.. அவர்களது வீடு ஒரு பரப்பரப்பாக இருக்கும் சாலையில் உள்ள வீடு, வீட்டின் வாசலை தாண்டி வெளியே சிறிய கேட் இருக்கும் அதை திறந்தாலே மெயின் ரோடுதான் எப்போதும் வண்டிகள் பெரிய பெரிய லாரிகள் கூட வரும்..அப்படிப்பட்ட வீட்டின் வாசலில் நிற்பவனை பார்க்க எல்லாருக்கும் ஆவல் இருக்கத்தானே செய்யும்..

அவன் உள்ளே வர அவனுடன் வந்த ஜோனஸ்ஸை வெளியவே நிற்க வைத்து விட்டு வந்தான்..உள்ளே வந்தவனையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தார் இனியன்..அவரை பார்த்தவன் தன்னவளிடம் தனக்கு தோன்றிய ஈர்ப்பு எதனால் என்பதை உணர்ந்தான்..அவன் உள்ளே வந்ததில் இருந்து கடகடவென கைகால் எல்லாம் நடுங்க கையை பிசைந்து கொண்டே நின்றாள் அவனின் விழி..

“ஐயம் இஷான் டைசன் ஸ்டீவ்..ஃப்ரம் லண்டன்” என்று கூற அவனை அதிர்ந்து பார்த்தனர் இருவரும்..

“என் அப்பா பேரு ஜேம்ஸ் டைசன் ஸ்டீவ்..அம்மா பேரு மீரா ஸ்டீவ்..” என்று கூற இருவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.. இனியன் கண்கள் மகிழ, மதுமிதாவின் கண்கள் கோபக்கனலில் தகித்தது..

“ஏய்..எங்க வந்து யார்கிட்ட பேசுற வெளியே போடா” என்று கத்தினார் மதுமிதா.

“நீங்க என் அத்தைதானே நான் சொல்றத கேளுங்க..நான் வந்தது உங்களுக்கு நடந்த உண்மையை சொல்லி என் விழியை கல்யாணம் செஞ்சுக்கத்தான். ப்ளீஸ் எனக்கு விழியை கல்யாணம் செஞ்சு கொடுங்க ஆன்ட்டி” என்றான் இதமாகவே..

“என்னடா சொல்ல போற? இன்னும் சொல்ல என்ன இருக்கு..என் இனி பட்ட அசிங்கம் அவமானம் எல்லாம் சரிபண்ண முடியுமா உங்களால? உங்க தாத்தா பண்ண வேலையில தான் நாங்க இவ்வளவு கஷ்டப்படுறோம் அது பத்தாதுனு இப்போ நீ வந்து இருக்கியா? ஏன் நாங்க உயிரோட இருக்குறது பொறுக்கலையோ உங்க குடும்பத்துக்கு இன்னும் என்ன வெச்சு இருக்கீங்க? நாங்க கொஞ்சம் கூட நிம்மதியா இருக்ககூடாதுனு அலையுறீங்களா? போடா வெளியே” என்று கத்தினார் மதுமிதா..

“மது இரும்மா கத்தாதே பேசலாம் என்னானு” என்று இனியன் சமாதானம் படுத்த..

“என்ன பேசனும் இனி.. என்ன பேசனும் இதுல ரொம்ப அவமானம் பட்டவரே நீங்கதானே..எல்லாம் மறந்துட்டீங்களா? போதும் இனி” என்றுவிட்டு அவனை கோவமாய் பார்த்து..

“இன்னும் ஏன்டா இங்க நிக்கற..வெளியே போ..அடிச்சு துரத்துறதுக்குள்ள போய்டு..என் பொண்ணு பக்கம் உன் மூச்சு கூட படக்கூடாது” என்று கத்த..

“நான் சொல்லவர்றத ஒரு நிமிஷம் கேளுங்க அத்தை” என்று முடிக்கவில்லை அவன் கன்னத்தில் இடியென இறங்கியது மதுமிதாவின் கை.. அதுவரை அமைதியாக இருந்த கயலும் அதிர 

“அம்மா” என்று கத்த.. அவளுக்கும் ஒர் அறை விழுந்தது..இனியனும்

“மது” என்று கத்த..

“வாய மூடுங்க ரெண்டு பேரும்..யாராவது பேசினீங்க என்னை ஜடமாதான் பார்ப்பேள்” என்று கத்த இருவரும் அமைதியாகினர்.. அவளோ கண்களாலேயே அவனிடம் கெஞ்சினாள் ‘இங்கிருந்து போய்டு இஷான்’ என்று ஆனால் அவனோ அவளது கண்களை பார்த்து தன் கோவத்தை கைகளை இறுக மூடி அமைதி படுத்தியவன்..

“நான் சொன்ன அப்புறம் இதெல்லாம் பேசலாமே ப்ளீஸ்..நான் வந்ததே என் அம்மாவுக்காகதான்” என்று கூற..

அவன் பேச வருவதை புரிந்துகொள்ளாமல் அவனது சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்றார்..”அம்மா வேண்டாம்மா அவரே போய்டுவார்..விடுங்கோ” என்று அவள் கதற..அவளை வேறுபுறம் தள்ளிவிட்டுவிட..

 அவள் மீண்டும் எழுந்து வருவதற்குள்..

“மது விடும்மா அவனை..” என்று இனியன் கூறுவதை கேட்காமல் ஆவேசமாக  “போடா வெளியே இனி இங்க உன்னை நான் பார்த்தேன் என் கையாலேயே அடிச்சு கொன்னுடுவேன்” என்று அவனை பிடித்து தள்ள அதுவரை கொஞ்சம் அந்த பக்கமாக நடந்து வரலாம் என்று சென்ற ஜோனஸ்ஸும் அவனை இழுத்து வருவதை பார்த்து ஓடிவர..அந்நேரம் வேகமாய் வந்த லாரியில் அவன் விழ அவனது தலை லாரியில் இடித்து இடித்த வேகத்தில் அவன் சுழன்று கீழே பின்னே வந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் தடுமாறி அவனது கால் மீது ஏற..சடுதியில் இரத்த வெள்ளத்தில் சரிந்தான் இஷான்..

8 thoughts on “காதலை கண்ட நொடி -11”

  1. Kalidevi

    Unga avasarathula oru uyir poche ipo ena panuvinga unga ponnu nijama love panra ishan ah ena pesa varanu kuda kekama thalli viduringa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *