Skip to content
Home » காதலை கண்ட நொடி -12

காதலை கண்ட நொடி -12

அத்தியாயம் – 12

கன்னத்தில் வழியும்

கண்ணீரை துடைக்க உன்

கரம் நீளுமென 

நம்பிக்கையில்..

என் கண்கள் காவிரியை ஊற்றெடுக்கும்..

  • டைரியில்.

எதிர்பாராத தாக்குதலால் அவனும் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிய அவனை நோக்கி ஓடிவந்தனர் ஜோனஸ்ஸும் கயலும்..

தனது கோவத்தின் விளைவு ஒரு உயிரை ரத்தவெள்ளத்தில் தள்ளும் என்று சற்றும் எதிர்பார்க்காத மதுமிதா அப்படியே மயங்கி சரிய அவரை ஓடிவந்து தாங்கினார் இனியன்..

“இஷா” என்று கத்திக்கொண்டே கயல் ஓடியதை பார்த்த இனியனுக்கு புரிந்து போயிற்று தன் மகளின் நேசம் அவனிடம் என்பது.. தன்னவனை ரத்தம் தோய்ந்து கண்டவளுக்கு உலகமே வேறாய் தோன்றியது..எதுவும் யாருமே அவளது கண்ணுக்கு தெரியவில்லை அந்நேரம் கண்கள் கண்ணீரை வார்க்க அவனை வேகமாக நெருங்கியவள் சட்டென தனது ஷாலை எடுத்து அவனது தலையில் கட்டு போட்டாள் அடுத்த நொடி அவளது ஷால் முழுவதும் இரத்தம் பரவியது..அவளது வாயிலிருந்து வார்த்தை வரவே இல்லை கண்கள் மட்டும் கண்ணீர் சிந்தியது..

தன் நண்பனை தூக்கிய ஜோனஸ்

“டேய் என்னை பாருடா” என்று கத்திக்கொண்டே அவனை தூக்கிக்கொண்டு தனது காருக்கு ஓடினான்..அவன் பின்னாலேயே ஓடியவள் முக்கியம் முக்கியம் என்று கூறிய தாயையையும் தந்தையையும் திரும்பிகூட பார்க்காமல் சென்றாள் அவன் பின்னோடு..

பின்சீட்டில் அவனை கிடத்தி ஜோனஸ் அவனை உலுக்க..நினைவு வருவதும் போவதுமாய் இருந்தவன் அவனை பார்த்து “விழி” என்று கூற அவனது தலையை உடனே ஜோனஸிடம் இருந்து அவளது கையில் தாங்கி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்..

அதிர்ச்சியில் அவளது பழிவாங்கும் எண்ணமும் அவளது பேச்சும் நின்றே போனது.

தன்னவன் தனக்கு முழுதாய் கிடைத்தால் போதும் என்பது ஒன்றே அவளது நோக்கமாக இருக்க..தன் பொருளை பாதுகாக்கும் குழந்தையாய் அவனை இறுக நெஞ்சில் அணைத்துக்கொண்டாள்.. தாய்மடி சேர்ந்த கன்றை போல அப்போதே மூர்ச்சையாகி போனான் அவளது இஷான்..அவளின் நிலை புரிந்தவனாய் அவளை அப்படியே காரில் அமர சொன்னவனின் வாகனம் வேகமெடுத்தது..அசுரவேகத்தில் தனது காரை செலுத்தியவன்.. அடுத்து அடுத்து செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடித்தான்.. தன் நண்பனுக்கு ஃபோன் செய்து அவனது ஹாஸ்பிடலில் உடனடியாக அவசரசிகிச்சை பிரிவை ரெடி செய்ய சொன்னவன்..அடுத்த பத்தாவது நிமிடம் ஹாஸ்பிடல் வளாகத்தில் காரை நிறுத்த ஸ்டக்ச்சர் கொண்டு வரப்பட்டது.. அவனை அதில் கிடத்தி உள்ளே கொண்டு செல்ல அவனது கைகள் அவளது கையை கெட்டியாக பிடித்து இருந்ததை பார்த்தவர்கள் அதை பிரிக்க முயல முடியாமல் அவளும் சேர்ந்தே நடந்தாள்..

ஐ.சி.யூவின் உள்ளே செல்ல தடை என்பதால் பல போராட்டம் நடத்தி அவளது கையில் இருந்த அவனது கரத்தை விலக்கி அவனை உள்ளே அழைத்து சென்றனர்.. அங்கிருந்த கண்ணாடி வழியே அவள் பார்க்க..அவனுக்கு மூர்ச்சையானதால் முதலில் ஷாக் கொடுக்க உடல் தூக்கி போட அவளது உடலெல்லாம் நடுங்கியது..

‘ப்ராமிஸ் பண்ணி இருக்கடா விட்டு போக மாட்டேன்னு வந்துடுடா’ என்று எண்ணிய படி கண்ணீரை துடைத்துக்கொண்டே காண நான்காவது முறையாக ஷாக் கொடுக்க..உடல் தூக்கிப்போட மூச்சுவிட உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது..

அவனது தலையில் இருந்த கட்டை அவிழ்த்து அவனது ரத்தத்தை சுத்தம் செய்ய..உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் ஸ்கேன் எடுக்கவேண்டும் என்று சுத்தம் செய்த உடனே அழைத்து செல்லப்பட்டான்..ஜோனஸ்ஸின் தோழன் வெளியே வர இருவரும் அவனை நோக்கியே நின்றனர்..

“மச்சி தலையில் ரொம்ப அடிப்பட்டு இருக்கு ஸ்கல் டேமேஜ் ஆகி இருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யனும்..உள்ளே ஏதாவது டேமேஜ் இருக்கானு செக் பண்ணனும் கால்ல லேசான ப்ராக்ச்சர் தான்..இரத்தம் நிறைய லாஸ் ஆகி இருக்கு சோ ரத்தம் தேவைபடும் அவரோட ப்ளட்க்ரூப் செக் பண்ணதும் சொல்லுவாங்க எப்படியும் டென் பாட்டில் மேல தேவைப்படும் கால்ல கட்டு போட்டு இருக்கு ஸ்கல் டேமேஜ் செக் பன்ன அப்புறம்தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும் வெரி டேன்ஜர் கன்டிஷன்தான்” என்று கூறிக்கொண்டு இருக்கையில் நர்ஸ் வந்து அவனது உடைமைகளை கயலிடம் நீட்ட அதை வாங்கியவள் கைகள் நடுங்கியது..

அப்போது தான் அவளை கவனித்தான் ஜோனஸ்ஸின் தோழன்..

“இவங்க?” என்று கேள்வியாய் பார்க்க..

“இ..இஷானோட..” என்று அவன் இழுக்க அவளோ டாக்டர் சொன்ன செய்தியில் நிலைகுலைந்து நின்றாள்..

“ஓஓ..ஓகேடா..டேக் கேர் ஆஃப் ஹர்..ஐ திங்க் ஷீ ஹாவ் சம் ப்ராப்ளம்..வாட்ச் ஹர் க்ளோஸ்லி” என்று அவன் கூறிய எதையும் அவள் கவனிக்கவே இல்லை அவளோ அவள் கைகளில் இருந்த இஷானின் துணி மற்றும் அவனது கழுத்தில் இருந்த செயினையுமே வெறித்தபடி அங்கிருந்த ஃசேரில் அமர்ந்தாள்..ஆனால் ஜோனஸ் அவளை உற்று நோக்கியபடி இருந்தான்..

“அவரோடது ஓ பாசிடிவ் ப்ளட் க்ரூப்..ஆல்ரெடி இங்க ரெண்டு யூனிட் இருக்கு அது ஏத்த ஆரம்பிச்சுட்டோம் நீங்க ஆபரேஷன் க்கு முன்னவே ரெடி பண்ணனும் சார் டைமில்ல” என்று கூறிவிட்டு சென்றாள் நர்ஸ்..

“ப்ரே காட் மச்சி” என்றுவிட்டு அவனும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து கொண்டான்..

இஷானின் தந்தைக்கு தகவல் கொடுத்தவன்..ஆபீஸ்க்கு ஃபோன் செய்து இஷானது நிலைமையை கூறி தனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தவன்..கெளதமுக்கு ஃபோன் செய்து அவனை ஹாஸ்பிடல் வரும்படி பணித்தான்..அடித்துபிடித்து அவன் வந்து சேர..அவனிடம் கயல்விழியின் பொறுப்பை ஒப்படைத்தவன்..தனது நண்பனுக்கு இரத்தம் ஏற்பாடு செய்ய ஆயத்தமானான்..

கெளதமும் அவளை என்ன என்னவோ சொல்லி தேற்ற அவளோ அசைந்தபாடாய் இல்லை.. 

அதற்குள் அங்கே மயங்கி விழுந்த மதுமிதாவை அருகில் இருந்த க்ளினிக்க்கு தூக்கி சென்ற இனியன் இஷானுக்கு என்ன ஆனதோ என அறிய கயலுக்கு ஃபோன் செய்து செய்து நொந்து போனார்..அவள்தான் ஃபோனை வீட்டிலேயே விட்டு சென்று விட்டாளே..

மதுமிதாவை செக் செய்த டாக்டர் அதீத அதிர்ச்சியில் வந்த மயக்கம்தான் வீக்காக இருப்பதால் ட்ரிப்ஸ் போடணும்னு சொல்லி ட்ரிப்ஸ் போட்டனர்..இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த மதுமிதா முதலில் கேட்டது..

“அ..அந்த பையன பார்க்கனும்” என்று தான்..

அழுதபடியே பேசியவரை ஒரு வழியாக சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றார் இனியன்.. வீட்டுக்கு வந்தவருக்கு இஷான் வீட்டு வாசலில் அடிப்பட்ட நிகழ்வு நினைவு வர..

“இனி..ப்ளீஸ் அந்த பையனை பார்க்கனும் என்னை கூட்டிட்டு போங்க.. சத்தியமா அவனுக்கு இப்படி ஆகும்னு நா..நான் எதிர்பார்க்கவே இல்ல இனி..நான் பெரிய பாவம் பண்ணிட்டேன் இனி.. வாங்க போலாம் இனி.. அவன் நல்லா இருக்கான்னு கேட்டாதான் எனக்கு சமாதானம் ஆகும்” என்று கூற.. 

“இருமா உள்ளே வா எல்லாரும் நம்மளதான் பார்க்கிறாங்க..கயலுக்கு ஃபோன் பண்ணேன் அவ எடுக்கலமா இரு நான் திரும்ப ட்ரை பண்றேன்..நீ வா..உள்ள அவ இடம் சொல்லட்டும் போகலாம்” என்று அவரை உள்ளே அழைத்து வந்தவர் மீண்டும் கயலுக்கு அழைக்க ஃபோன் சத்தம் உள்ளே இருந்து வர..’அய்யோ’ என்று ஆனது இனியனுக்கு.. 

“அவ ஃபோன் இங்கேயே விட்டு போய் இருக்காமா.. இரு நான் கெளதம்க்கு ஏதாவது தெரியுமானு கேட்கிறேன்” என்றபடி அவனுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட எதிர்முனையில் கேட்ட செய்தியில் அவருக்கு கையெல்லாம் நடுங்கியது.. மதுமிதா மீண்டும் அழ ஆரம்பித்து விட்டார்..உடனே அங்கே போலாம் என..

ஹாஸ்பிடல் விவரம் கேட்டவர் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.. 

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு தனி விமானத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ஸ்டீவ்.. 

இனியனும் மதுமிதாவும் மருத்துவமனையை அடைந்து விசாரித்து ஐசியூ முன்னே வர அங்கே உடைந்த சிலையாய் இரத்தக்கரை முழுவதும் இருக்க கையில் இன்னும் தன்னவனின் உடைமையை கையில் வைத்து வெறித்துக்கொண்டு இருந்தாள்.. அவளை பார்த்ததும் பதறியபடி ஓடிவந்த மதுமிதாவை ஓர் அந்நியப்பார்வையில் தள்ளி நிறுத்தினாள்..

அவளிடம் எதுவோ சரியில்லை என உணர்ந்த கெளதம் 

“கயல்.. என்னடி ஆச்சு உனக்கு” என்று கேட்க அப்போது தான் ஜோனஸ்ஸும் அவளை திரும்பி பார்த்தான்.. அவள் வந்ததில் இருந்து பேசவே இல்லை என்பது அப்போது தான் அவன் கருத்தில் பதிய தன் வேறு ஒரு டாக்டரை அழைத்தான்.. அவர் வந்து செக் செய்தவர் 

“அதிர்ச்சியில அவங்களுக்கு பேச்சு நின்னுடுச்சு சார்” என்று கூறி அனைவரின் தலையிலும் இடியை இறக்கினார்..

“அவங்க அந்த அதிர்ச்சியில இருந்து வெளியே வந்தா தான் பேசுவாங்க..” என்று கூறிச்செல்ல..

அவளை மதுமிதா அழுதபடி நெருங்க அவளது ஒரு முகச்சுளிப்பில் அப்படியே அதிர்ந்து நின்றார் அவர்..

“கயல்..அம்மா தப்பான எண்ணத்துலலாம் எதுவும் செய்யலமா என்னை நம்புடா..இனி சொல்லுங்க இனி” என்று அழ அவரும் அவளை நெருங்க முயல கைநீட்டி தடுத்தவள் திரும்பி அமர்ந்துகொண்டு தன்னவன் உடைமைகளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்..

இருவரும் கலங்கி நிற்க அவர்கள் அருகில் வந்த கெளதம்..

“அவருமேல உயிரா இருக்கா மா.. அதான் அந்த அதிர்ச்சியில இருக்கா அவரு சரியாகட்டும்மா இவ சரி ஆகிடுவா.. அவரு சரி பண்ணிடுவார்..அவரு ரொம்ப நல்லவர்மா” என்று கூறிக்கொண்டு இருக்க ஜோனஸ்ஸின் தோழன் வந்தான் அவசரமாக..

“என்ன ஜோ five யூனிட் தான் அரேஞ்ச் ஆகி இருக்கு அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு யூனிட் ப்ளட் வேணும்டா” என்று கூற..

அவர்களின் அருகில் சென்ற கெளதம்

“என்ன க்ரூப் சார் நான் எங்க காலேஜ் டோனர்ஸ்ஸ அரேஞ்ச் பன்றேன்” என்று கேட்க..அவனிடம் திரும்பியவன்..

“ஓ பாசிட்டிவ்” என்று கூற உடனே மகிழ்ந்த இனியன் அவர்களிடம் சென்று “எனக்கும் அதே ப்ளட் க்ரூப் தான் எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க டாக்டர் அவனை காப்பாத்தி கொடுங்க அய்யா” என்று கூற 

“நீங்க” என்று யோசித்தவனிடம்..

“அவனோட தாய்மாமா டாக்டர்.. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை..எடுத்துக்கோங்க என் மருமகனை எனக்கு காப்பாத்தி கொடுங்க” என்று கூற மதுமிதாவையும் ஜோனஸ்ஸையும் தவிர அனைவரும் அதிர்ந்தனர்.. கயலோ அவரை அதிர்ச்சியாய் பார்க்க அவரும் அவளைதான் பார்த்தார் அதற்குள் நர்ஸ்ஸை வரவைத்து அவருக்கு ப்ளட் எடுக்க ஏற்பாடு செய்தனர்.. அதிர்ச்சியில் இருந்து மீண்ட கெளதமும் தன் கல்லூரி நண்பர்களுக்கு ஃபோன் செய்து ரத்தத்திற்கு ஏற்பாடு செய்து கொடுக்க இரத்தம் கொடுத்துவிட்டு வெளியே சோர்வாக வெளியே வந்தவருக்கு ரெடியாக வாங்கி வைத்திருந்த ஜுஸை நீட்டினான் கெளதம் வேணாம் என மறுத்தவரை வற்புறுத்தி குடிக்க வைத்தான்.. அவர் குடித்து முடிக்க இஷானுக்கு ஆபரேஷன் துவங்கி இருந்தது.. அந்நேரம் அடித்து பிடித்து அவசரமாக வந்து சேர்ந்தார் ஸ்டீவ்..

இவர்களை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார்..

7 thoughts on “காதலை கண்ட நொடி -12”

  1. Kalidevi

    Thai mama va ishan ku onum aga kudathu kapathidunga vizhi onum agathu pesu ma ithula unake theriyama etho onu iruku nee unga sonnatha ketu palai vanga iruntha but avan un athai paiyan atha unaoum meeri love pani iruka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *